'வசந்த மாளிகை' ஈஸ்வரின் கைவண்ணத்தில் உருவான நடிகர் திலகத்தின் வண்ணப் போஸ்டர் டிசைன்
http://www.idlebrain.com/news/functi...aposter252.jpg
'வசந்த மாளிகை' ஈஸ்வரின் கைவண்ணத்தில் உருவான நடிகர் திலகத்தின் வண்ணப் போஸ்டர் டிசைன்
http://www.idlebrain.com/news/functi...aposter252.jpg
hi Pammalar.vasudevan Raghavendra, my genius KCK Murali Sir
i just opened this today all the best to u all
regards
kumareshanprabhu
அன்புள்ள வாசுதேவன் சார், மற்றும் ராகவேந்தர் சார்,
விளம்பர டிஸைன் ஓவியர் ஈஸ்வர் அவர்கள் பற்றிய பதிவுகளைத்தந்து அந்தக்காலத்துக்கு கொண்டு சென்று விட்டீர்கள். ராகவேந்தர் சார் சொன்னது 10க்கு 100 உணமையே அன்றி வேறில்லை. அன்றைய தினத்தந்தி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் வந்த கருப்புவெள்ளை விளம்பரங்களில் இருந்த ஜீவன் இப்போது வரும் வண்ண விளம்பரங்களில் கண்டிப்பாக இல்லை.
வெள்ளை பின்னணியில் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் அல்லது கையால் வரையப்பெற்ற ஓவியங்களுடன் (பாத்திரத்தின் தன்மைக்கேற்ப பெரியதில் ஆரம்பித்து சிறியது வரை), மேலே அல்லது பக்கவாட்டில் தியேட்டர்கள் பெயர்களைத்தாங்கி, கீழே படத்தின் பெயருடன், சற்று சிறிய எழுத்துக்களில் பிரதான டெக்னிஷியன்களின் பெயர்களுடன் வந்த அன்றைய விளம்பரங்களோடு ஒப்பிடுகையில், அள்ளித்தெளித்த கோலமாக வண்ணங்களை அள்ளிப்பூசிக்கொண்டு வரும் இன்றைய வண்ண விளம்பரங்களில் கண்டிப்பாக ஒரு ஜீவனோ, ஈர்க்கும் சக்தியோ, அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வமோ கண்டிப்பாக இல்லை.
சென்ற ஆண்டு சாந்தியில் மறு வெளியீடு செய்யப்பட்ட 'புதிய பறவை' விளம்பர போஸ்ட்டரையும் சேர்த்தே சொல்கிறேன். தவிரவும் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும்போது போஸ்ட்டர்களிலும், பத்திரிகை விளம்பரங்களிலும் அவற்றின் ஒரிஜினல் டைட்டில் டிசைனையும் இப்போது மாற்றி விடுகின்றனர். (உதாரணம் நடிகர்திலகத்தின் 'புதிய பறவை' மற்றும் மக்கள் திலகத்தின் 'ஆயிரத்தில் ஒருவன்'). அவை பழைய ஒரிஜினல் வடிவத்திலேயே (படத்தின் டைட்டிலில் வருவதுபோலவே) நம் மனதில் பதிந்துள்ளதால், இவ்வாறு மாற்றம் செய்யும்போது நம் மனதில் ஒட்டவில்லை.
1960 முதல் 1980 வரையான காலகட்டம், செய்தித்தாள் விளம்பரங்களின் பொற்காலம் என்று சொல்லலாம். அதிலும், இவற்றில் மற்ற ஓவியர்களின் டிசன்களைவிட ஈஸ்வரின் டிசைன் மிக அருமை. அதற்குக்காரணம், அவர் பெரும்பாலும் நட்சத்திரங்களின், குறிப்பாக நடிகர்திலகத்தின் முகபாவங்களையும் உணர்ச்சிப்பெருக்கையும் வரைகோட்டு ஓவியங்களாகவே வரைந்து விடுவார்.
நீங்கள் ஈஸ்வரைப்பற்றிய பதிவை இடுமுன்பே நண்பர் வினோத் அவர்கள் 821-வது பதிவாகத்தந்துள்ள 'சத்யம்' படத்தின் விளம்பரத்தில் நடிகர்திலகத்தின் முகபாவத்தை அப்படியே வரைகோட்டு ஓவியமாக ஈஸ்வர் தீட்டியுள்ள அழகைப்பாருங்கள்.
கே.ஆர்.வி.பக்தா, பரணி போன்றவரகளின் விளம்பர டிசைன்களும் அருமையானவை என்ற போதிலும் அவை பெரும்பாலும், படத்தில் வரும் புகைப்படங்களை வெட்டி ஒட்டி, மேற்கொண்டு நகாசு வேலைகள் செய்த விளம்பரங்களாயிருக்குமே தவிர, ஈஸ்வரின் விளம்பரம் போல வரைகோட்டுச்சித்திரங்களை அவர்களின் விளம்பரங்களில் காண்பது அபூர்வமே.
ஈஸ்வரின் கைவண்ணத்துக்கு இன்னுமொரு சான்று வேண்டுமென்றால், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடிகர்திலகம் திரியில் நமது 'பாசமுள்ள பம்மலார்' அவர்கள் தந்திருக்கும், 1972-ல் வெளிவந்த 'Hero 72' விளம்பரத்தையும், 1975-ல் வெளிவந்த வைரநெஞ்சம் விளம்பரத்தையும் பார்த்தோமானால், புகைப்படத்தை விட தத்ரூபமாக நடிகர்திலகம் மற்றும் முத்துராமன் ஆகியோரின் முகங்கள் வரைகோட்டுச் சித்திரங்களால் ஈஸ்வர் அவர்கள் தீட்டியிருப்பதைக்காணலாம்.
ஒரு அருமையான கலைஞரான நம் உள்ளம் கவர்ந்த ஓவியர் ஈஸ்வர் அவர்களை நினைவு கூர்ந்ததற்கு தங்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :18
நடிகர் திலகத்தின் 235வது காவியம்
சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]
வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
வெள்ளிவிழா விளம்பரம் : தினத்தந்தி : 1.12.1983
http://i1110.photobucket.com/albums/...andhippu-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 8
நடிகர் திலகத்தின் 74வது காவியம்
கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]
பொக்கிஷாதி பொக்கிஷம்
மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 7.1.1977
http://i1110.photobucket.com/albums/...GEDC6490-1.jpg
சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
சுதந்திரத் திருநாள் சிறப்புப் பதிவுகளைப் பாராட்டி தாங்கள் அளித்த அருமையான பதிவுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
சுதந்திரப் போராட்டத்தில் நமது தேசிய திலகத்தின் தந்தையார் ஒரு Unknown Soldier. அவரைப் போன்றவர்கள் நாடெங்கும் பலர் இருந்தார்கள், இன்றும் சிலர் இருக்கிறார்கள். எனது பாட்டனார் [அமரர் D.R. நாகராஜன், அம்மாவின் அப்பா]வும், இதுபோன்று ஒரு Unknown Soldier. 1940களில் குடந்தை-தஞ்சாவூர்-திருவாரூர் பகுதிகளில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். சுதந்திரத்துக்குப்பின் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் ஒரு அதிதீவிரதொண்டராக செயலாற்றினார். 'சுதேசமித்ரன்' நாளிதழில் நிருபராகவும் பணிபுரிந்தார். குடவாசலுக்கு மிக அருகே இருக்கும் எங்கள் ஒகை அக்ரஹாரத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கு ஒரு முறை மூதறிஞர் ராஜாஜியும், ஒரு முறை பெருந்தலைவர் காமராஜரும் வருகை புரிந்து சில மணித்துளிகள் தங்கி உணவருந்திச் சென்றிருக்கிறார்கள். இதை எனது பாட்டியும், எனது தாயாரும் அடிக்கடி பெருமை பொங்கக் கூறுவார்கள். அந்த ஓகை அக்ரஹார வீட்டிற்கு, 1978-ம் ஆண்டு, [எனக்கு ஐந்து நிரம்பி ஆறு வயது நடைபெறும்போது], சென்னையிலிருந்து கோடை விடுமுறைக்காகக் சென்றிருந்தபோதுதான், ஒருநாள் குடவாசல் 'ஃபிலிப்ஸ்' டூரிங்கில் "திருவிளையாடல்" திரைக்காவியத்திற்கு வீட்டில் அழைத்துச் சென்றார்கள். எனக்கு அன்று "திருவிளையாடல்" பார்த்ததை நினைவுகூர்ந்தால் இன்றும் மெய்சிலிர்க்கும். நான் பார்த்த முதல் திரைப்படமும், முதல் நடிகர் திலகத்தின் திரைப்படமும் என் வாழ்க்கையில் அதுதான். அன்று படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த பின்னர், படத்தில் நடித்த நாகேஷ்(தருமி), பாலையா(பாகவதர்), மகாலிங்கம்(பாணபத்திரர்) ஆகியோரைப் பற்றியெல்லாம் என்னிடம் சொல்லி எனக்கு அவர்களை பிடித்திருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள். நானோ அவர்களுக்கு சற்றும் பிடிகொடாமல், அவர்களிடம் 'எனக்கு இப்படத்தில் நடித்த வேறு யாரையும் பிடிக்கவில்லை. சிவபெருமானாக வந்து நிற்கிறாரே-நடக்கிறாரே-பாடுகிறாரே-டான்ஸ் ஆடுகிறாரே, அவரை மட்டும்தான் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது' என்று கூறியிருக்கிறேன். என் அம்மாவழி உறவுகள் இன்றும் என்னிடம் இதனை நினைவுகூர்வதுண்டு. அன்று தொடங்கிய நமது இதயதெய்வத்துடனான பயணம்..இன்று வரை..என்றென்றும்..! சரி, விடுதலைப் போராட்டத்தின் Unknown Soldiersக்கு வருகிறேன். நமது தேசிய திலகம் "கப்பலோட்டிய தமிழன்" காவியத்தில் முழங்குவது போல், 'அவர்களை இந்த சரித்திர ஆசிரியர்கள் வேண்டுமானால் மறந்துவிடலாம்..ஆனால் சத்தியம் மறக்காது..'. அன்றிருந்த தியாகத்தலைவர்கள்-தியாகிகள் தங்கள் வீட்டிலிருந்தவற்றை தாய்நாட்டிற்காகத் தந்தார்கள். 'தியாகம், தொண்டு என்றால் என்ன' எனக் கேட்கும் இன்றிருக்கும் அரசியல்வியாதிகளோ ஸாரி அரசியல்வாதிகளோ நாட்டிலிருப்பவற்றை தங்கள் வீட்டிற்கும்-குடும்பத்துக்கும் எடுத்துக் கொள்கிறார்கள்.
தேசிய திலகத்தின் பாதயாத்திரை பற்றி மேலும் சில ஆவணங்கள் உள்ளன. அதனையும் சமயம்வரும்போது அவசியம் பதிவிடுகிறேன்..!
["பாசமுள்ள பம்மலார்" எனத் தாங்கள் எழுதியிருந்தது என்னை மெய்சிலிர்க்கச் செய்தது].
பாசத்துடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 3
ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்
'செவாலியே' விருது விழா
22.4.1995 [சனிக்கிழமை]
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை
தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் தொடர்கின்றன:
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995
http://i1110.photobucket.com/albums/...GEDC6448-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6450-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC6451-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் குமரேசன் சார்,
தங்களுக்கு மனமார்ந்த என் நல்வரவு. நீண்ட நாட்களாய் தங்கள் பதிவுகளைக் காண வில்லை. இப்போது பார்க்கையில் மிக சந்தோஷம். 'கும்கி' பிசியோ?.
டியர் கல்நாயக் சார்,
சுதந்திரத் திருநாள் பதிவுகளைப் பாராட்டி மகிழ்ந்த தங்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.