எங்க வீட்டுபிள்ளை படத்திற்கு நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
http://i47.tinypic.com/345mpp1.jpg
Printable View
எங்க வீட்டுபிள்ளை படத்திற்கு நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
http://i47.tinypic.com/345mpp1.jpg
கலியபெருமாள் சார்
புதுவை நகரில் எங்கவீட்டு பிள்ளை - படங்கள் தொகுப்புகள் அனைத்தும் மிகவும் அருமை .
நன்றி சார்
Pls address this...its MGR fans duty
http://www.mayyam.com/talk/showthread.php?10254-Thamizh-Cinemavin-Viswaroopam-Part-3&p=1027546&viewfull=1#post1027546
"regionalism,lobbying,political pressure are quite common when selecting the winners. This has been happening since the day awards were constituted. Talent getting ignored is nothing new here.Forget VR not making a big mark in the awards, if MGR can get best actor award for rickshawkaran, think about the quality of the jury. "
if you dont know then please do not talk about movies. MGR got the best actor award for the movies released in that year.
and your hero so called used all the best techncians in the world and its looklike a dubbing movie (english), and also he does not care about anyone feelings . MGR is the great man and always he thinks about all the people regardless of cast language etc
posted the same in the above thread.please write your views in the above link and copy here too
ரிக்ஷாக்காரன் படத்திற்கு சிறந்த நடிகர் விருது வழங்கிய விழா நடுவர்கள் மற்றும் படத்தின் தரத்தை பற்றியும் மீண்டும் சர்ச்சை கிளப்பி விவாதத்தை பெரிதாக்க நண்பர் ஒருவர் வேறு திரியில் வந்துள்ளார் .
1972ல் விருது வழங்கிய அந்த நேரத்திலேயே பல முனை தாக்குதல்கள் - கேலி விமர்சனங்கள்
என்றெல்லாம் தாண்டி விருது வழங்கும் விழா சிறப்ப்பாக நடந்து முடிந்துவிட்ட ஒன்று .
ரிக்ஷாக்காரன் படம் ஏற்படுத்திய தாக்கம் - கதை - நடிப்பு மற்றும் எல்லா அம்சங்களை கூர்ந்து கவனித்தால் நண்பருக்கு படத்தின் தரம் புரியும் . அரசியல் - மொழி - மதம் - நெருக்கடி என்ற எல்லைகளை தாண்டி விருது பெற்ற படம் .
நண்பரின் மனதில் வேறு வகையான ஆதங்கம் இருக்கும் பட்சத்தில் வீணாக ரிக்ஷாக்காரன் படத்தை சீண்டி பார்த்து வருவது அவருடைய அறியாமையை காட்டுகிறது .
இத்துடன் பெருந்தன்மையாக அவரின் கருத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுவோம் .
வீண் பதில் அல்லது விவாதம் தேவையில்லாத ஒன்று .
நன்றி பாலாஜி சார் .
மக்கள் திலகம் திரியில் புதியதாக வந்திருக்கும் திரு எம்ஜியார் பாஸ்கரன் அவர்களை அன்புடன் திரியின் சார்பாக வரவேற்கிறோம் .
MAKKAL THILAGAM MGR IN ARASAKATTALAI -1967
MEGA HIT SONG '' AADI VAA ...AADI VAA ''- SIMPLE REPLY FOR EVER THOSE WHO RAISES QUESTION ABOUT OUR MAKKAL THILAGAM POPULARITY.
http://youtu.be/p1Bf7d2EFwE
Welcome MGR Baskaran Sir to Mayyam.
ரிக்க்ஷாகாரனுக்கு பாரத் விருது பெற்றபோது எம்ஜிஆர் சொன்னது..இது இந்த வருடத்திற்கு மட்டுமே கிடைத்த விருது என்று பெருந்தன்மையோடு குறிப்பிட்டார்....நடிப்பு என்பது..காதல்..பாசம்..ஆடல்..பாடல்..சண்டை ..அனைத்தும் அடங்கியது..இதில் ஒன்று குறைந்தாலும் அந்த நடிப்பு முழுமை பெறாது..தலைவர் அவர்கள் எதிலும் குறை வைத்ததில்லை.அந்த கால கட்டத்தில் நடிகர்கள் நடனம் ஆட அஞ்சியபோது..அதையும் நான் விட்டு வைக்கமாட்டேன் என்று ஆட்டத்திலும் அசத்தியவர் நம் தெய்வம்....சில நடிகர்கள் நடனத்தில் குறை வைத்தார்கள் சிலர் சண்டைக்காட்சியில் சிறக்கவில்லை..மேலும் நல்ல பெயர் பெற்ற நடிகர்கள் சிலர் இரண்டிலுமே குறை வைத்தார்கள்..அதே போல தாய்.தங்கையிடம் பாசம் கட்டும் நடிப்பிலும் ஒரு யதார்த்தம் இருக்கும்..அதிகப்படியான நடிப்பு அதில் தெரியவே தெரியாது .அதனால்தான் அவரை இயற்கை நடிகர் என்றனர்..இன்று கூட ஆஸ்கார் விருது மற்றும் கிராமி விருதுகள் எல்லாமே இயற்கையான எதார்த்தமான திரைப்படத்திற்குத்தான் கிடைக்கிறது..நமது தமிழ் திரைப்படங்களை ஆஸ்கார் விருது தேர்ந்தெடுக்கும் குழுவிற்கு சேர்க்கும் சக்தி நமக்கு இருந்திருந்தால்.."பெற்றால்தான் பிள்ளையா படம் அன்றே ஆஸ்கார் விருது பெற்றிருக்கும்.இன்று கூட மேற்கத்திய நாடுகள்தான் அந்த சக்தியை பெற்றிருக்கின்றன. அதனால்தான் வெளிநாட்டு படங்களே அதிகம் ஆஸ்கார் விருது பெறுகின்றன...அத்தகைய சிறந்த நடிகர் அவர். ஒரு நடிகன் நடிக்கும்போது அந்த நடிப்பு எத்தனை பேரால் ஈர்க்கப்படுகிறது என்பதை வைத்துதான் அவரை சிறந்த நடிகர் என்று எடை போட முடியும்..அன்று மட்டுமல்ல இன்றைய தலைமுறையை கூட ஈர்க்கும் நடிப்பு யாரிடம் இருந்தது..இருக்கிறது என்பதை பார்த்தாலே யாருடைய நடிப்பு சிறந்தது..அதற்கு பட்டங்கள் பொருந்துமா என்று பார்க்க முடியும்..ஏன்..தலைவருக்கு பிறகு வந்த நடிகர்கள் கூட எம்.ஜி.ஆர்..மேனரிசத்தை வைத்துதான் திரைப்படத்துறையில் வெற்றி பெற்றனர் என்பது நிதர்சனமான உண்மை..நமது திரியில் உள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இன்றளவும் கூட திரைப்படத்திலும் சரி..அரசியலிலும் சரி..நமது தலைவரின் புகழை எட்டி பிடிக்க முடியாததால் சிலர் வயிற்றெரிச்சலில் பேசுகின்றனர்.அவர்களை மறப்போம் மன்னிப்போம்..இந்த நாகரிகத்தைதான் நம் தலைவர் நமக்கு கற்றுகொடுத்தார்..அவர்களுக்கு பதில் நம் தலைவரின் புகழை எழுத்து மூலம் நாகரிகமாக சொல்லலாம்...மேலும் தலைவர், பாரத் பட்டம் பெற்றபோது பேசிய பேச்சினை இந்த திரியில் வெளியிட வேண்டுகிறேன்..
மக்கள் திலகத்தின் திரிக்கு வந்திருக்கும் திரு..எம்.ஜி.ஆர் பாஸ்கரன் அவர்களை வருகவருகவென வரவேற்கிறேன்.
புதுச்சேரி நியூடோனில் (மிகவும் சுமாரான தியேட்டர்-ரொம்ப மோசமான பிரிண்ட்) எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் திரையிடப்பட்டது..5 நாட்களில் திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ.65,000/-. படத்தை எடுத்து போட்டவருக்கு ஆனந்த அதிர்ச்சி..மூன்று மடங்கு லாபம்.அவர்கள் கூறிய வார்த்தை..'நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை இந்த வசூலை..அதுவும் இந்த தியேட்டரில்..இந்த தியேட்டரின் அதிக பட்ச டிக்கெட் ரூ.30 தான்..இந்த டிக்கெட் விலையிலே மேற்கண்ட வசூல்...எப்போதும் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் எங்கள் தங்கம்..
மக்கள் திலகத்தின் திரிக்கு மீண்டும் வந்து தனது பதிவினை தொடரும் மூத்த அன்பர் எம். ஜி. ஆர். பாஸ்கரன் அவர்களுக்கு,
நல் வாழ்த்துக்களுடன் கூடிய எனது பணிவான வணக்கங்கள் ! திரு. எம். ஜி. ஆர். பாஸ்கரன் அவர்களை அன்புடன் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
http://i47.tinypic.com/20hndi0.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம் ஜி ஆர்
எங்கள் இறைவன்
"இதயா" என்கின்ற இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் பத்திரிகையில் நம் இதய தெய்வத்தினைப் பற்றிய கட்டுரைகளும், கவிதையும் - அவரது பக்தர்களாகிய நமது பார்வைக்கு :
http://i48.tinypic.com/2ecp6hz.jpg
http://i49.tinypic.com/8ww3eq.jpg
http://i45.tinypic.com/1626tck.jpg
http://i45.tinypic.com/35nbgoz.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம் ஜி ஆர்
எங்கள் இறைவன்
welcome mr.bhaskaran
நான் இங்கு புதிதாக சேர்ந்து இருந்தாலும்
உங்கள் எலாரையும் நான் அறிவேன்
தலைவன் திருவிழா படங்கள் எல்லாம் என்னுடையா கணினியில் சேகரித்து வைத்திருகின்றேன்.
உங்களுடை மக்கள் திலகம் பார்ட் 1 2 3 4 எல்லாவற்றையும் படித்து மகிழ்ந்திருகின்றேன்
எனது கவி ஒன்றையும் மக்கள் தலைவனின் தொண்டர் .மக்கள் திலகம் திரியில் பிரசுரித்தது கண்டு மகிழ்வு கொண்டவன் நான்
ellar peyarum ninaivukku varavillai MGR roop, ravichandran eisvee marrum anavarin kaivannakal superb
நீயில்லாத த்மிழகம்
நிலவில்லாத வானம்
தலைவனில்லா உன்
தொண்டர்கள்
தாயில்லா
குழந்தைகள்
நீ கண்டதோ
மக்கள் ஆட்சி
இன்று
தம் மக்கள் ஆட்சி
மாதம் மும் மாரி
பொழிந்தது
மன்னவன் உன் ஆட்சியில்
மறைந்தாய் நீயும்
சுனாமி முதல் சூறாவளி
தமிழகமே அல்லலில்
படிக்காத நீ
படிக்கும் குழந்தைக்காக
திட்டங்கள் தீட்டினாய்
செய்யும் தொழிலே தெய்வம்
நீ சொன்ன பாடம்
திருடனும் திருந்தணும்
நீ சொன்ன வேதம்
உன் முகம் திரையில்
உள்ளம் மகிழ்ந்தோம்
பெரியவரை மதிக்கும்
பெண்மையைப் போற்றும்
பண்புகள் உந்தன்
படங்களில்
ஏழையை மிதிக்கும்
அதிகாரம் கண்டால்
எதிர்த்து நிற்க
பாடங்கள் சொன்னாய்
முறைகெட்ட வாழ்வு முறை
மாற்றச் சொன்னாய்
எதிரியை மன்னித்து
மறக்கச் சொன்னாய்
சண்டைகள் செய்தாய்
தமிழன் வீரம் சொல்ல
பாடல் மூலம்
வாழ்வியல் சொன்னாய்
நன் காதல் மூலம்
தமிழன் பண்பு கொண்டாய்
முத்தமிழ் போற்றும்
மதுரையில்
கோட்டை
கொண்டாய்
இயல் இசை நாடகம்
ஏற்றம் கண்டாய்
கொடுத்துச் சிவந்த
பொன்மன செம்மலே
எடுத்து சொன்ன
எங்கள் தங்கமே
மக்கள் மனதில் வாழும்
மக்கள் திலகமே
நீ
இருந்திருந்தால்
தமிழீழம்
இன்று
மலர்ந்திருக்கும்
தேசியத் தலைவனே
காவிரியில் நீர்
பாய்ந்திருக்கும்
நெல்லு வயல்
சாய்ந்திருக்கும்
இல்லாமை இல்லாமல்
தமிழ் மக்கள்
வாழ்ந்திருப்பார்
உன் கனவு
நனவாயிருக்கும்
by MGR baskaran
nanri - penmai photo from this thread
என்னை உங்களில் ஒருவராக வரவேற்கும்
என் தலைவன் போல் பண்பு கொண்ட
எனது உடன் பிறவா நண்பர்களுக்கு என் வணக்கம்
மூன்று வயதில் இருந்தே நான் தலைவன் ரசிகன்
திரையில் தலைவன் வந்தாலே சந்தோசம் கொள்பவன்
இதயக்கனி படம் தொடர்ந்து 8 முறை ஒவொரு நாளும் திரையில் பார்த்தவன்
உங்கள் திரி அற்புதம் ஏனெனில் என்னால் பார்க்க முடியாத தலைவன் ஆளுயர posters
உங்கள் திரியில் தான் பார்த்து மகிழ்கின்றேன்
நான் அங்கு இல்லை உன் முகம் காண
ஏன் இங்கு சொல்ல மறந்தாய் நீயும்
வான் இன்று இருளாய் கிடக்கின்றதே
உன் ஒளி முகம் காண தவிக்கின்றதே
நீ சொன்னால் வேதம் தமிழ்நாட்டில் அன்று
உன் பெயரை சொல்லி ஆள்கின்றார் இன்று
என் மனதில் தாகம் ஏழைகளின் வாழ்வு
நீ மீண்டும் வந்தால் தீராதோ ஏக்கம்
நீ தானே எங்கள் விடி வெள்ளி என்றே
நாளும் தொழுதோம் உன் முகம் காண
நீயும் மறைந்தாய் சொல்லாமல் தானே
பாரில் எமக்கு துணையில்லை என்று
கண்டாய் எம்தன் நிலை தான் இன்று
வண்டாய் எம்மை உறிஞ்சும் நிலை மாற
மீண்டும் வருவாய் எங்கள் தலைவனாய்
என்றும் நாம் வாழ உழைத்திடவே
BY MGR BASKARAN
(NANRI PENMAI )
mgr photo poda try panninen paste panna mudiyavillai
இனிய நண்பர் திரு பாஸ்கரன்
உங்கள் கவிதை மழையில் மக்கள் திலகம் -எங்கள்
மனம் குளிர்ந்தது.
நம்மையெல்லாம் இணைத்தவரின் திருமுகம்
கோடிக் கணக்கான ரசிகர்களின் ஆசைமுகம்
மக்கள் திலகத்தை நினைக்காத நாளில்லை
புகழுக்கு இவரை விட்டால் வேறு யாருமில்லை
வாரி வாரி வழங்கியதில் அவர் ஒரு அமுத சுரபி
அகிலம் போற்றும் அவர் ஒரு தனிப்பிறவி
Wednesday March 6, 2013
Boost for MGR fan club
http://i49.tinypic.com/1562rz9.jpg
Timely aid: Dr Zambry posing for a group photo with the representatives of NGOs that received aid in Pangkor, recently.
INSPIRED by famous Tamil actor, M.G. Ramachandran, who was known for helping the poor, members of the Pangkor MGR Fan Club Association are emulating the good works of the late actor.
Last Friday, the group, which has been actively helping poor and needy Indians from all over Pangkor Island, received a much-needed boost in their efforts when Mentri Besar Datuk Seri Dr Zambry Abdul Kadir presented them with a RM10,000 allocation.
Association chairman, P. Nagapan, 65, said many poor pupils of SRJK (T) Tamil and also fishermen had benefitted from the aid handed out by the association in the last two years since its formation.
“The association gives books and stationery items to needy pupils while providing fishermen with drag nets,” said Nagapan, who is also Pangkor MIC division chief.
“We are thankful for the allocation, which will allow us to help even more people after this,” he added.
On how the association had come about, Nagapan said the actor popularly known as MGR, had not only made a mark in helping the downtrodden but also became Tamil Nadu chief minister because of his popularity among the masses.
“After watching so many of his movies, I was inspired to help the poor and needy, and therefore, decided to set up an association named after him,” added Nagapan.
The association was among 57 non-governmental organisations and places of worship that received similar allocation amounts from Dr Zambry, who is also Pangkor assemblyman, that day.
Hiew Tiew Siong Temple committee chairman Lam Ee Thong, 46, said it would use the allocation to renovate the temple.
“Our temple needs some minor repair works.
“We are very grateful to Dr Zambry for providing us with the timely aid,” Lam said, adding that the island had developed considerably since Dr Zambry became Mentri Besar.
“He has helped so many people,” Lam added.
Dr Zambry later visited the Sungai Pinang Kechil jetty to inspect up-grading works being carried out there for the benefit of fishermen in the area.
courtesy- sanga ilakkiyam
I plan to cover MGR’s first movie in the next part. Before that, I wish to emphasize one point. Between 1936 (his first movie Sathi Leelawathi) and 1978 (Maduraiyai Meeta Sundarapandian), MGR completed 133 movies, which were released. Quite a number of movies were either announced or begun, but not completed. It took 11 years, for MGR to raise his status as the hero in 1947 (Rajakumari). Then, it took another three more years to firmly cement his status as a hero in 1950, with two movies Maruthanattu Ilavarasi and Mandiri Kumari. By then, MGR had completed most of his 22 movies as an extra and in supporting roles.
For the remaining 111 movies, MGR was the major voice in decision making for his movies; beginning from the movie title, to the selection of heroines, supporting cast, director, lyricist, script writer, playback singers and release date – all depended on his whims and fancies. By any yard stick, ‘mother’ is a wholesome word promoting goodness and worthy traits, which instill self-sacrifice and boundless love. And for MGR, having it in his movie title was like a talisman which may counterbalance the mishandling or distributional pitfalls faced by competitive market.
Among these 111 movies, one can count nine movies with the Tamil word Thai (mother) as a prefix or suffix as titles. These are,
Thaikupin Tharam (Wife after Mother, 1956)
Thai Magalukku kattiya Thali (The holy thread tied by Mother to daughter, 1959)
Thai Sollai Thattathe (Don’t reject mother’s words, 1961)
Thayai Kaatha Thanayan (The son who saved the Mother, 1962)
Theiva Thai (Goddess Mother, 1964)
Thayin Madiyil (In the lap of Mother, 1964)
Kanni Thai (Virgin Mother, 1965)
Thaiku Thalaimagan (Eldest son of Mother, 1967)
Oru Thai Makkal (One Mother’s children, 1971)
Thus, 9 among the 111 MGR movie titles offers wholesome imagery on mothers’ deeds. Is there anything significant on this? By choice, MGR promoted love for mothers. Not only in movie titles, in numerous songs which he chose to lip synch, he instructed lyricists to praise the worth of mothers. For comparison, let me compare the movie titles of MGR’s rival for the same artistic and political niche audience, V.C. Ganesan (aka Sivaji Ganesan, 1928-2001). Sivaji Ganesan, in his movie illustrious career between 1952 and 1999, starred in a total of 283 Tamil movies. Among these, 7 were in honorary (guest) roles without any payment. Only 5 Sivaji Ganesan movies had ‘mother’ in their title, including two in which he played honorary roles. These five were as follows:
Annaiyin Aanai (The command of Mother, 1958)
Annai Illam (House of Mother, 1963)
Thaaiku oru Thaalaatu (A lullaby for Mother, 1986)
Thaayai pola pillai noolai pola selai (A child like its Mother, a saree like its thread, 1959)
Thayee Unakkaha (All for you Mother, 1966).
தங்கத் தலைவனின் புகழ் தரணியெங்கும் பரவிட - பொங்கு
தமிழில் புதுக்கவிதைகள் படைக்க
புரட்சித்தலைவரின் மணி மகுடத்தில் மற்றுமோர் மாணிக்க கல்லாய் - அவரது
புகழ் பாடும் இத்திரியில் புதிதாய் இணைந்திருக்கும் - இனியவராம்
எங்கள் இறைவன் வழி நடக்கும் எம். ஜி. ஆர். பாஸ்கரன் அவர்களே !
கன்னித் தமிழில், கற்கண்டு சுவையுடன் காலமெல்லாம்
காவிய நாயகனின் பெருமைகளை - பெருங் கவிதைகள் மூலம்
அற்புதமாய் அள்ளி வழங்கி, ஆனந்தமாய் எங்கள் மனம் துள்ளிட
அன்புடன் வேண்டும்
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
உங்கள் பாராடுக்களுக்கு நன்றி
என் தவம் தலைவன் பணி செய்து கிடப்பதே
இது என் அனுபவம்
Kanavan film
கணவன் படம் kotehena colombo திரை அரங்கில் மிண்டும் திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடியபோதில் ஒரு நாள் கல்லூரியை cut அடைத்து விட்டு கையில் புத்தகத்துடன் காலைக் காட்சிக்கு நான் போனேன். இடைவேளையின் போது எனது பக்கத்து இருக்கையில் உள்ள தலைவர் ரசிகர் , கடை ஒன்றில் வேலை செய்பவர், எனக்கு கூல் டிரிங்கும் சுடச் சுட வடையும் வாங்கித் தந்தார். மறுத்த போதும் என்னை force பண்ணி வாங்க வைத்தார். நான் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவர, அதன் பின் எனக்கு சொன்னவை .
படிக்கும் காலத்தில் படிக்க வேண்டும், காலத்தே பயிர் செய்ய வேண்டும் , இனிமேல் கல்லூரியைக் cut பண்ண கூடாது.
எனக்குத் தெரியாத் ஓர் அன்பர், நான் MGR ரசிகர் என்பதால் மட்டுமே தன பணம் செலவு செய்து என் வயிறு நிரம்பிய பின் தலைவர் போலவே எனக்கு அறிவுரையும் தந்தார் நான் நலம் வாழ.
MGR போல் அவர் ரசிகர்களும் மனித நேயம் கொண்டவர்கள் அன்றி வேறில்லை.
கலியபெருமாள் சார்
சமீபத்தில் இனைய தளத்தில் youtube -வீடியோ பதிவுகள் காணும் போது மக்கள் திலகத்தின் பெயரால் நடத்த பட்ட விழா தெரிந்தது . உடனே பதிவு செய்தேன் .
தமிழ் சினிமாவில்
தெய்வீக படங்கள்
புராண படங்கள்
மாயாஜால படங்கள்
சரித்திர படங்கள்
சமூக படங்கள் என்றெல்லாம் பல்வேறு வந்து அந்தந்த கால கட்டங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது .
1950 ஆண்டின் துவக்கத்தில் பல சமூக படங்களில் அண்ணன் -தங்கை உறவு பற்றிய பல படங்கள் வந்தாலும்
முதன் முதலில் 1952ல் வந்த மக்கள் திலகத்தின் என்தங்கை படம் மிக பெரிய வெற்றி படமாகவும் அண்ணன் -தங்கை உறவு பற்றிய அருமையான ,படமாகவும் , சிறந்த நடிப்புடன் மக்களின் ஆதரவை பெற்ற படமாகவும் வந்தது .
இன்று படம் பார்த்தாலும் மக்கள் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பும் - கதையும் காண்போரின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவு இருப்பது தெரியும் .
1947- 1952 இந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் பெரும்பாலான படங்கள் ராஜ -ராணி கதை ஒட்டியே வந்தது .
எம்ஜியாரால் குடும்ப கதைகளில் நடிக்க இயலாது என்று பல பத்திரிகைகளும் , விமர்சகர்களும் கிண்டல் செய்தார்கள் .
1952ல் என் தங்கை யில் மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பாற்றலை பார்த்த பின்னர் அனைவரும்
வியப்பில் பாராட்டியது உண்மையான சம்பவம் .
பின்னர்
அந்தமான் கைதி
பணக்காரி
குமாரி
கூண்டுக்கிளி
மலைக்கள்ளன்
தாய்க்கு பின் தாரம்
தாய் மகளுக்கு கட்டிய தாலி
நல்லவன் வாழ்வான்
போன்ற சமூக படங்களில் வெற்றிகரமாக நடித்து மக்கள் மனங்களில் மக்கள் திலகமாக உயர்ந்தார் .
1952_ல், எம்.ஜி.ஆர். நடித்த "குமாரி", "என் தங்கை" ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் "என் தங்கை" அருமையான படம். பிற்காலத்தில் சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த "பாசமலர்" எப்படி அண்ணன் _ தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டும் காவியமாக அமைந்ததோ, அது போன்ற உன்னதமான படம் "என் தங்கை."
இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி கிடையாது. பார்வை இழந்த தன் தங்கையின் (ஈ.வி.சரோஜா) எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகியாக எம்.ஜி. ஆர். நடித்தார். பல சோதனைகளுக்குப் பின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்வார், எம்.ஜி.ஆர். கடைசி நேரம். எதிர்பாராதவிதமாக தங்கை இறந்து விடுவாள்.
தங்கையின் உடலை தோள் மீது போட்டுக்கொண்டு கடற்கரையில் நடப்பார், எம்.ஜி.ஆர். அவரைக் காப்பாற்றுவதற்காக பி.எஸ்.கோவிந்தன் தன் காதலியுடன் ஓடுவார். ஆனால், கடற்கரை சாலையில் நடக்கும் எம்.ஜி.ஆர், கடல் மணலில் வேகமாக நடப்பார். பி.எஸ்.கோவிந்தன் காப்பாற்றுவதற்குள், கடலில் இறங்கி விடுவார், தங்கையின் உடலுடன்!
இந்தக் காட்சியைப் பார்த்த பெண்கள் கதறினார்கள்; ஆண்கள் கண்கலங்கினார்கள
என்தங்கை பட்டி தொட்டி எங்கும் நன்கு ஓடி வசூலில் சாதனை படைத்தது .
ஒரு நடிகன், பல்வேறு குண விசேஷங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால் தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும்; இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு, அறிமுகமாகாத நிலையில் முன், "என் தங்கை' என்ற படத்தில் நடித்தேன்; அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை; ஆனால், அது வெற்றி கண்டது.
மக்கள் திலகம் எம்ஜியார் .
ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரு நாள்!
பரங்கிமலையிலிருந்து பூவிருந்தவல்லி போகும் சாலையிலிருக்கும் தமது தோட்டத்தில், எங்களை இன்முகத்தோடு கை கூப்பி வரவேற்றார் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன். படப்பிடிப்பு முடிந்த களைப்பு தீரக் குளித்துவிட்டு 'ஜில்'லென்று காட்சி தந்த அவரைப் பார்த்ததுமே மனத்திற்குக் குளிர்ச்சியாக இருந்தது. 'எம்.ஜி.ஆர். தோட்டம்' என்று புகழ்பெற்ற அந்த இடத்தைக் காண வேண்டும் என்ற ஆவலில் 'தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாமா?' என்று கேட்டோம்.
''தோட்டத்திலே என்ன இருக்கு? ரொம்ப சாதாரணமா ஏதோ...'' என்று அடக்கத்துடன் கூறினார் அவர்.
''ஒரு கரடி இருக்கிறதாமே...''
''இருந்தது. பாவம், அது பத்து நாட்களுக்கு முன்னே இறந்துவிட்டது. அது ரொம்பப் பொல்லாத குட்டி! அடங்கவே இல்லை. மூக்கு குத்தி வளையம் மாட்டி, கயிறு கட்டினால்தான் வழிக்கு வரும்னு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சேன். அங்கே துளை போட்டதும், ரத்தம் கொட்டி செத்துடுத்து. அதை மிருகக் காட்சி சாலைக்குக் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்... என்ன செய்யறது? இதோ பார்த்தீங்களா, மான் குட்டிங்க. அறந்தாங்கி தோழர்கள் அன்புடன் கொடுத்தாங்க'' என்று அருகிலிருந்த மான்களைச் சுட்டிக் காட்டினார். அந்தக் குட்டிகளும் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து, கண்களை உருட்டிப் பார்த்தன!
ஏழரை ஏகரா பரப்புள்ள அந்தத் தோட்டத்தில் வாழை மரங்களையும் மாமரங்களையும் தவிர, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. நெல் விளைச்சலும் உண்டு. மத்தியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. படம் போட்டுப் பார்க்க ஒரு சிறு தியேட்டரும் இருக்கிறது. தேகப் பயிற்சி செய்வதற்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
''அண்ணாச்சிக்கு எடை அதிகமாயிடுச்சுன்னா இங்கேதான் எக்ஸர்ஸைஸ் செய்வார்'' என்று, உடன் வந்த பழைய நடிகர் திருப்பதிசாமி விளக்கம் கொடுத்தார்.
அந்தத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக 'அன்னை நிலையம்' என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்குக் கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது.
''அது என்ன மண்டபம்?'' என்று கேட்டேன் நான்.
''அதுதான் கோயில்?''
''என்ன கோயில்?''
''என் தாயாருடைய கோயில். அங்கே என் அன்னையின் படம் தான் இருக்கிறது. அவர்தான் நான் வணங்கும் கடவுள்.''
''அவங்களைக் கும்பிடாம அண்ணாச்சி வெளியே கிளம்பமாட்டார். வாரத்திற்கு இருமுறை படத்திற்குப் பூ மாலை போடுவோம். தினமும் விளக்கேற்றி வைப்போம்'' என்று கூறினார் திருப்பதிசாமி.
''சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டிருக்கிறீர்களே, ஏன்?'' என்று, பெற்ற தாய்க்குக் கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.
''அப்படியரு கொள்கையே எனக்குக் கிடையாதே! எதனால் இப்படிக் கேட்கிறீர்கள்?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
'' 'காஞ்சித் தலைவ'னில், நீங்கள் கோயிலுக்குள் நுழைவது போலவும், உடனே வெளியே வருவது போலவும் ஒரு காட்சி வருகிறதே..?''
''அந்தக் காட்சியை முதலில் நினைத்தபடி எடுக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது. நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக்கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூட நம்பிக்கைகள் பெருகுவதையும், சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து வந்திருக்கிறோம். 'ஜெனோவா' படத்தில் நான் நடிக்கவில்லையா! இப்போது 'பரம பிதா'வில் நடிக்கிறேனே, அதுவும் மத சம்பந்தமான கதைதானே? 'பெரிய இடத்துப் பெண்'ணில் எல்லோரையும் நான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வது போல் ஒரு காட்சி வருகிறதே! சினிமா இருக்கட்டும். சமீபத்தில் மருத மலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்தேனே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?''
நான் ஒன்றும் சொல்லவில்லை.
பேசிக்கொண்டே மேற்குப்புறமிருந்த ஒரு சிறு வீட்டினுள் நுழைந்தோம். அது ஒரு 'அவுட் ஹவுஸ்' மாதிரி இருந்தது. அறை முழுதும் சாம்பிராணி புகைப்படலம் சூழ்ந்திருந்தது.
''இந்த இடத்தை ஒரு கலைக்கூடமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இன்னும் படங்களெல்லாம் வரவில்லை'' என்று எம்.ஜி.ஆர். சொன் னதும், அந்த அறையில் ஒரு வெளவால் பறந்து வந்து எங்களை வட்ட மிட்டது!
நாங்கள் அமர்ந்தோம். சிற்றுண்டி வந்தது. ஐஸ்கிரீமும் காபியும் வந்தன. அவற்றைக் கொண்டு வந்த தோழரைப் பார்த்து எம்.ஜி.ஆர், ''இவங்க வந்த டாக்ஸி வெளியே நிக்குதே, அந்த டிரைவருக்குப் பலகாரம் கொடுத்தீங்களா?'' என்று குரலைச் சற்று தாழ்த்திக் கேட்டார்.
''ஓ! கொடுத்துவிட்டேனே!'' என்றார் அனுபவமிக்க அந்தத் தோழர்.
சிற்றுண்டிக்குப் பிறகு ''வருகிறீர்களா, என் பாதாள அறையைக் காட்டுகிறேன்'' என்று அழைத்தார் எம்.ஜி.ஆர்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
'' 'ரகசிய அறையைக் காட்டுகிறேன், வாருங்கள்' என்று அழைக்கும் துணிச்சல் உங்களுக்குத்தான் வரும்'' என்று நான் சொன்னதும், ''வந்து பாருங்கள், மறைப்பதற்கு ஒன்றுமில்லை'' என்றார் அவர் புன்முறுவலுடன்.
அவரைப் பின் தொடர்ந்தோம். அடுத்த அறைக்குள் சென்று தரையில் இருந்த ஒரு கதவைத் திறந்தார் அவர். ''பின்னாலேயே வாருங்கள்'' என்று சொல்லியபடியே கீழே இறங்கினார். சினிமாவில் 'க்ளைமாக்ஸ் சீன்' சண்டை நடப்பதற்காக ஒரு படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கிப் போவார்களே, அது மாதிரி சென்றோம்.
கீழே இருந்த அறையில் எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த 'செல்வங்க'ளைக் கண்டு மலைத்துப்போனோம். அழகான அந்த அறையின் சுவரை மகான்களின் படங்கள் அலங்கரித்திருந்தன. காந்திஜி, நேருஜி, தாகூர், விவேகானந்தர், ஏசுநாதர், புத்தர், ராமலிங்க சுவாமிகள், சாரதாமணி அம்மையார், பாரதி, திருவள்ளுவர் என்று வரிசையாக அங்கு கொலுவீற்றிருந்த காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, எங்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தியது.
''கீழே கட்டி வைத்திருக்கும் புத்தகங்கள் எல்லாம் என்ன?'' என்று கேட்டேன்.
''அத்தனை நூல்களும் இம்மகான்களைப் பற்றிய கருத்தோவியங்கள். அவர்கள் சிந்தனையில் பிறந்த அறி வுரைகளும் இருக்கின்றன'' என்று சொன்னார் அருகிலிருந்த வித்வான் வே.லட்சுமணன்.
''இந்த இடத்தை ஒரு சிறந்த நூல் நிலையமாக்க வேண்டும் என்பது என் அவா. இங்கு சற்று உரக்கப் பேசி னாலும் எதிரொலி எழும்பும். ஆகவே இங்கு வருபவர்கள் பேசாமல் அமைதி யாக அறிவுச் செல்வங்களில் மனத் தைப் பறிகொடுக்கவேண்டும் என்றே இப்படியரு அறையைக் கட்டச் சொன்னேன். புற வாழ்க்கையிலிருந்து நிம்மதி பெறுவதற்காக எனக்கு மட்டு மின்றி, என் அருமைத் தோழர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நூல் நிலையத்தை அமைத்திருக்கிறேன். என் காலத்திற்குப் பிறகு இதுவும், மேலேயுள்ள கலைக் கோயிலும் பொதுச்சொத்தாக ஆவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறேன்'' என்று புன்முறுவலுக்கிடையே தன்னடக்கத்துடன் கூறினார் அவர்.
அறிவும் ஆன்மிகமும் இணைந்து புனிதமாக்கப்பட்ட அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் மேலே ஏறி வந்தோம்.
எம்.ஜி.ஆர். காபி அருந்துவதில்லை; வெற்றிலை போடுவதில்லை; புகை பிடிப்பதில்லை. ஆகவே, அவருடைய நண்பர்களில் சிலர் தம் எதிரில் புகை பிடிக்கத் தயங்குவதாகக் கூறினார் அவர். இவரிடம் பெருமதிப்புக் கொண்ட ஒரு மதுரை நண்பர், எம்.ஜி.ஆரின் உருவத்தைப் போஸ்டரில் கண்டால் கூட சிகரெட்டை மறைத்துக் கொண்டு விடுவாராம்!
''நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''
''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், முக்கியமாக 'என் தங்கை' நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சி வசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக் கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்' போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதே போல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்து போய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்துகொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்' போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.''
''கல்கியின் நாவலான 'பொன்னியின் செல்வனை'ப் படமாக்கப் போவதாக அறிவித்திருந்தீர்களே, அது எந்த நிலையில் இருக்கிறது?''
''படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதை கலரில் எடுக்கப்போகி றேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதித் தரும்படி கேட்கப் போகிறேன்!''
''வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இல்லையா உங்களுக்கு?''
''நிறைய இருக்கிறது. நாடகக் கம்பெனியுடன் ஒரு முறை பர்மா சென்றிருக்கிறேன். வேறு எங்கும் போனது கிடையாது. இலங்கையிலிருந்து ஒரு முறை அழைப்பு வந்தது. 'விசா'வும் கிடைத்தது. ஆனால், நமது சர்க்கார் என்ன காரணத்தாலோ 'பாஸ்போர்ட்' கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த வருஷம் செப்டம்பர் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்திருக் கிறது. மறுபடியும் சர்க்காரை அனுமதி கேட்கப் போகிறேன். பாஸ்போர்ட் கிடைத்தால் போய் வருவேன்!'' என்றார் புன்னகையோடு.
அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். சினிமாவில் குத்துச் சண்டையும் கத்திச் சண்டையும் போடும் புரட்சி நடிகர், நேரில் பார்க்க இத்தனை சாதுவாக இருக்கிறாரே என்று வியந்து கொண்டே வீடு திரும்பினோம்.
அன்பு நண்பர் திரு வினோத் அவர்கள் அறிவது -
திரைப்படங்கள் அல்லாமால் இது போன்ற video clipping ஐ, பலரும் அறியும் வண்ணம் பதிவேற்றம் செய்வது மிக்க மகிழ்ச்சிக்குரியது. பாராட்டத் தக்கது
"என் தங்கை" ஒரு வெள்ளி விழாப் படமும் கூட. அண்ணன்-தங்கை பாசத்தினை மையமாக கொண்டு இதுவரை வெளியான மற்ற எல்லா படங்களுக்கும் இது தான் முன்னோடி.
நமது இதய தெய்வம் ஈடுபட்ட எல்லாத் துறையிலும் ஒரு தனித்துவம் பெற்று, மகத்தான சாதனை படைத்தவர். அப்படிப்பட்ட ஒரு கலியுக கடவுளுக்கு நாம் எல்லாம் பக்தர்களாய் விளங்கி வருவது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.
ஓங்குக எங்கள் குல தெய்வம் எம்.ஜி.ஆர். புகழ்
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள். இறைவன்