ck sir
kindly see private message please
Printable View
ck sir
kindly see private message please
http://tamil.thehindu.com/multimedia...1_2048523g.jpg
இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் வெளி வந்த ஒரு செய்தி
வாதூலன் என்ற ஒருவர் (ஒருவர் தான் பின்ன கோஷ்டியா) வீட்டு மனை வாங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இறுதியில் அந்த மனையின் சிறப்பை இவ்வாறு கூறுகிறார்
கடைசியாக ஒரு செய்தி, எங்கள் வீட்டு மனைக்கு ஒரு சினிமாவிலும் நடித்த பெருமை உண்டு. ‘வீட்டுக்கு வீடு’ (பெயரும் பொருத்தமாக இருக்கிறது) படத்தின் ஆரம்பக் காட்சியில் ஜெய்சங்கரும் லட்சுமியும் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார்கள். அந்தப் பின்னணியில் உள்ள இடம் எங்கள் மனைதான்.
வாசு சார்,
ஜெயபாரதி நடித்த ரஹஸ்ய ராத்திரி,காமம் குரோதம் மோகம்,நட்சத்திரங்களே காவல் ஆகிய படங்கள் தொடர்பான பதிவுகள்
உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன?சீமா நடித்த அவளுடெ ராவுகள்
பாடல்களின் காணொளியினைப் பதிவு செய்யுங்கள்
கோபு
நேற்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் வெளி வந்த குலதெய்வம் ராஜகோபால் பற்றிய கட்டுரை
http://tamil.thehindu.com/multimedia...a_2046967g.jpg
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகைச்சுவையில் கடைசிவரை ஆபாசத்திற்கு இடம் கொடுக்காமல் தூய்மையைக் கடைபிடித்தார் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். அவரது வழியை அப்படியே பின்பற்றியதால்தான் குலதெய்வம் ராஜகோபாலை ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டம் தேடி வந்தது. 1961-ல் மதுரை ரசிகர்கள் அவருக்கு இந்தப்பட்டத்தை வழங்கினார்கள்.
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்டராமாணிக்கம் என்ற சிற்றூரில் பிறந்து,சிறு வயது முதலே தெருக்கூத்துக்களில் நடிக்க ஆரம்பித்தார். லோகிதாசனாகவும் பாலமுருகனாகவும் நடித்துப் புகழ்பெற்ற ராஜகோபால் பிறகு 12 வயதில் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.
பிறகு 16 வயதில் ஸ்த்ரீ பார்ட்டுகளை ஏற்று நடிப்பதிலும் தேர்ச்சி பெற்று மதுரையில் பிரபலமான நாடகக் குழுவாக இருந்த கலைமணி நாடகக்குழுவில் சேர்ந்தார். மதுரையிலிருந்து ஒருமுறை சேலத்தில் நாடகம் நடிக்கச் சென்றிருந்தபோது முதல்முறையாகக் கலைவாணரைச் சந்திக்கிறார்.
ராஜகோபாலின் நடிப்புத் திறனும் நகைச்சுவை உணர்வும் கலைவாணருக்குப் பிடித்துப்போக “எனது கம்பெனியில் நடிக்க விரும்பினால் வாங்க மைனர்!” என்று கலைவானார் அழைப்பு விடுகிறார். இதைவிடச் சிறந்த வாய்ப்பு அமையுமா என்ன? கலைவாணரின் நாடகக் குழுவில் சிறப்பு மற்றும் சிரிப்பு நடிகராக மாறினார் ராஜகோபால். பிறகு கலைவாணர் திரைப்படங்களுக்கு இடம்பெயர்ந்தபோது, ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அப்போதெல்லாம் கலைவாணர் தான் நடித்த படங்களிலேயே அவருக்குப் பரிந்துரை செய்தார்.
கலைவாணரும் எம்.கே.டியும் நண்பர்களாக இருந்ததால் எம்.கே.டி. நடித்த ‘புதுவாழ்வு’ என்ற படத்தில் ராஜகோபாலுக்கு முதல் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அந்தப்படத்தை முந்திக்கொண்டு, ராஜகோபால் இரண்டாவதாக நடித்த ‘நல்ல காலம்’(1954) முதலில் வெளியாகிவிடுகிறது. அதன் பிறகு வரிசையாகப் படங்கள் கிடைக்க ராஜகோபால் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரது ‘டைமிங்சென்ஸை’ ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர் கிசு கிசு குரலில் பேசுவதை வெகுவாக ரசித்தனர். இதனால் இரண்டே ஆண்டுகளில் விறுவிறுவென்று வளர்ந்த ராஜகோபாலின் பெயருக்கு முன்னால் ‘குலதெய்வம்’ என்ற படத்தின் பெயர் சேர்ந்து கொண்டது 1956-ம் வருடம்.
ஏ.வி.எம். கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘குலதெய்வம்’ படத்தில் மொத்தம் நான்கு கதாநாயகர்கள். அதில் கடைக்குட்டி இவர்தான். அந்தப் படத்தில் நகைச்சுவை குணச்சித்திரம் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து நடித்த ராஜகோபால் அதன் பிறகு நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார். பல படங்களில் மனைவியிடம் இவர் மாட்டிக்கொண்டு விழிப்பது அன்றைய 60களின் சம்சாரிகள் வாழ்வில் இருந்த தினப்பாட்டின் ஆதங்கமாக இருந்ததால் ராஜகோபால் வரும் காட்சிகளுக்கு அப்ளாஸ் விழுந்தது.
திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தனது சொந்த நாடகக் குழுவையும் தொடங்கி, பட்டி தொட்டியெங்கும் பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தி வந்தார்.நல்ல பக்திமானாக விளங்கிய இவர், கலைவாணரைப் போலச் சிறந்த ‘வில்லுப்பாட்டு’ கலைஞராகவும் பெயர்பெற்றார். ‘ஐயப்பன் சரித்திரம்’, ‘முருகன் பெருமை’, ‘ஐயனார் கதை’, ‘நல்லத்தங்காள்’, ‘ஆறு அண்ணன்மார் அருக்காணி தங்கை’, ஆகிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளைத் தனது குழுவினருடன் தமிழகமெங்கும் இசைத்தார். தனது ஆசானுக்கு நன்றி பாராட்டும் விதமாக ‘கலைவாணர் வாழ்க்கை வரலாற்றையும்’ வில்லுப்பாட்டாக இசைத்தார்.
யார் கண் பட்டதோ, ஊர் ஊராகச் சென்று கலை வளர்த்து ஈட்டிய செல்வத்தை சொந்தப் படம் தயாரிக்க முதலீடு செய்துசெய்து பெரும் இழைப்பை சந்தித்தார். சுமார் 15 ஆண்டுகாலம் திரைப்படத் துறையிலிருந்து விலகியிருந்தவரை கே. பாக்கியராஜ் தனது படங்களில் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தார்.
பாக்கியராஜின் இயக்கத்தில் அவரது அப்பாவாகவும் இன்னும் பல குணச்சித்திரங்களிலும் நடித்த குலதெய்வம் ராஜகோபால் தன்னை கலைவாணரின் கடைசி சீடன் எனத் துணிச்சலாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அது மறுக்க முடியாத உண்மை.
கட்டுரை இறுதியில் கட்டுரையாளர் 'குலதெய்வம்' ராஜகோபால் சொந்த படம் எடுத்து அனைத்தையும் இழந்தார் என்று எழுதி உள்ளார் .அவர் எடுத்த சொந்த படம் எது ? வெளியானதா ?
அன்புள்ள திரு கிருஷ்ணா அவர்களே
உங்களை எல்லாம் விட வயதில் அனுபவத்தில் சிறியவன்தான், முகம் எப்படி இருந்தாலும் பார்த்து தானே ஆகவேண்டும்...
நானும் நெல்லை சீமை தான்.
இந்த மாதம் ntfans நிகழ்ச்சியில் என்னை அறிமுகம் செய்கிறேன்...
வாணி அவர்களின் பாடல்கள் தமிழில் சுமார் 1500 வைத்துள்ளேன், மற்றொரு இணையத்தில் அதை பதிவு செய்துள்ளேன்...
வேற்று மொழி பாடல்களும் உள்ளன... என்னிடம் இருப்பதாய் மற்றவர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியே..
அன்புமிக்க வீயார் என்னை இப்போது கண்டு பிடித்திருப்பார்.
நன்றி
Mr Vasu JI
Expecting a jem of a post from you about Acting God.
I am waiting.
Regards
அடக் கடவுளே !
கடைசியில் திருஷ்டி பட்டே விட்டதா ?
ஊரு கண்ணு உறவு கண்ணுன்னு சொல்லி மடக் மடக்னு திருஷ்டி கழிக்கிறேன்.. சஷ்மே பத் தூர்...
ஜெயபாரதி ஒரு நல்ல நடிகை. ஆனால் அந்தக் காலத்து மலையாள முண்டு உடுத்தி வந்ததால் நம்ம ஊர் லேடீஸ் முகம் திருப்பு... ஆண்களோ விருப்பு..
அயலாத்தே சுந்தரின்னு ஒரு படத்தில் பிரேம் நசீர் ஜேசுதாஸ் குரலில் சங்கர் கணேஷ் இசையில் பாடிய "லக்ஷார்ச்சன கண்டு மடங்கும்போளொரு லஜ்ஜையில் முங்கிய முகம் கண்டு" பாட்டைக் கேளுங்க
http://youtu.be/AmaYzCApmac
இதே பாட்டு தமிழில் எஸ்.பி.பி, வாணி ஜெயராம் குரல்களில் "பொன்னோவியம் ஒன்று" என்று பாக்கியராஜ் ராதிகாவை வர்ணிக்கும் "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே" படப் பாடல்
http://youtu.be/co-sM74FaPY
இது படு படு அபத்தமான வாதம். நான் 1984 வரை மாணவ பருவத்தில் இருந்தவன். 1976- 1981- பீ.டெக்.1982-1984- எம்.டெக் .முழுக்க முழுக்க ஹாஸ்டல்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள். நானோ எல்லோரிடமும் சரளமாக உரையாடி ரசனை அறிபவன். கிட்டத்தட்ட 90% ஜானகியின் முழு வெறுப்பாளர்கள். இளைய ராஜாவின் அற்புதமான இசையால் , வேறு வழியில்லாமல் பல்லை கடித்து அந்த மிமிக்ரி சகித்தோம்.
பல நண்பர்கள் ராகத்துடன் ஒலி குறிப்பை கொடுப்பது சிறந்தது என்று சொன்னதால் முதல் பத்திற்கு .
பக்கம் 8-178ஆம் பதிவு-சிந்துபைரவி
http://www.ragasurabhi.com/carnatic-...-bhairavi.html
பக்கம்-20- 192 ஆம் பதிவு-சுபபந்துவராளி
http://www.ragasurabhi.com/carnatic-...ntuvarali.html
பக்கம்-27- 270 ஆம் பதிவு -மாயா மாளவ கௌளை
http://www.ragasurabhi.com/carnatic-...avagowlai.html
பக்கம்-28- 276 ஆம் பதிவு -சாருகேசி
http://www.ragasurabhi.com/carnatic-...charukesi.html
பக்கம்-37- 368 ஆம் பதிவு-நடபைரவி
http://www.ragasurabhi.com/carnatic-...abhairavi.html
பக்கம்-44- 439 ஆம் பதிவு- பாகேஸ்வரி
http://www.ragasurabhi.com/carnatic-...-bageshri.html
பக்கம்-57- 570 ஆம் பதிவு- ஆபேரி .
http://www.ragasurabhi.com/carnatic-...a--abheri.html
பக்கம்-59-583 ஆம் பதிவு கல்யாணி
http://www.ragasurabhi.com/carnatic-...--kalyani.html
பக்கம்-68- 675 ஆம் பதிவு- மோகனம்.
http://www.ragasurabhi.com/carnatic-...--mohanam.html
பக்கம்-69- 687 ஆம் பதிவு- பிருந்தாவன சாரங்கா
http://www.ragasurabhi.com/carnatic-...a-saranga.html
Ragendu Kiranangal
https://www.youtube.com/watch?featur...&v=3IGdGI2tv58
சீமாவுக்கு இசையரசி இதோ சில கானங்கள்
https://www.youtube.com/watch?v=XIgDUkNaQLA
https://www.youtube.com/watch?v=wvNVn78CEV8
இன்னும் நல்ல நல்ல பாடல்கள் உண்டு. ஜெ.பியை போலவே சீமாவும் நல்ல நடிகை, நிறைய பெண்மை போற்றும் புரட்சி வேடங்கள் செய்துள்ளார்
இருந்தாலும் அவளுடே ராவுகள் இமேஜ் இவரை விட்டு போகவில்லை பாவம்
என்னுள் கலந்த கானங்கள் 6
ஊறும் இளமை உணர்வுகளைச் சித்திரமாய்
கூறும் பலகவிதை காண்.. என ஆன்றோர்(?!) வாக்கு…
இளமை கொலுவிருக்கும் இயற்கை துணையிருக்கும்
இனிமை மணம் பரப்பும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமிலை உலகத்திலே
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
இளமை எனும் பூங்காற்று பாடுவது ஓர் பாட்டு
ஒரு பொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே..
இதெல்லாம் திரைபாடல்கள்..
இந்த மிஸ்டர் பட்டினத்தார் என்ன சொல்கிறார்..
சீயுங்குருதிச் செழுங்கழு நீர்பாயும்புடவை ஒன்றிலாதபோது
பகலிரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்றவற்றுக்குள்
மாயும் மனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையே
.
அது சரி..அதுக்காக
இளமையில அனுபவிக்க வேண்டிய விஷயங்களை அனுபவிக்கக் கூடாதா என்ன
கணுக்காலும் கண்ணிமையும் கொட்டியே சொல்லும்
அனுபவத்தில் தான்வருமே ஆம்..
எஸ்..எல்லாம் அனுபவம் தான்..எது..இளமைப்பருவம்..கண்ணதாசன் சொல்வதென்ன..அனுபவத்தால் அமைவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்..ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து அனுபவமே தான் நான் எனச் சொன்னான்....
எனில் இந்த இளமைப் பருவம் இருக்கிறதே.. ஒருமுறை தான் வரும் .. பதில் சொல்லக் கூடும் உல்லாசஏம் உற்சாகம் காட்டும் இளமை டாண்ட்டாண்டா டட டாடா…என அந்தக் காலத்தில் வந்தபாட்டைப் போலவே தான்..எல்லாருக்கும் மறக்காது (குறிப்பாய் எனக்கு..இன்னும் இளமைப் பருவத்தில் தான் இருக்கிறேன்!
)
ஆணோ பெண்ணோ எல்லாமே விசித்திரமாய் இருக்கும்..
ஆணென்றால் :எதைப் பற்றியும் கவலைப் படாத வயது..
எழுந்தோமா அம்மா வச்ச டிஃபனை சாப்பிட்டோமா காலேஜ் போனோமா..என்னாச்சு..ஓ அந்தப் பொண்ணப் பார்த்ததும் என்னாகிறது..அதுவும் பட்டாம் பூச்சிக் கண்ணிமைகள் படக் படக் என அடித்துக் கொள்வதைப் பார்த்தால் இதயம் தடக் தடக் என்கிறதே..
இதுவே பெண் என்றால்.. அவளுக்கும் அப்படித் தான்..ஆனால் ஆணைப் போல் வெளிக்காட்டிக் கொள்வதில்லை..கொய்ங்க் கொய்ங்க் என்று எதிரணி அவஸ்தைப் படுவதை உள்ளத் தாமரையில் உவகை கொப்பளிக்க ஏதும் தெரியாதது போல் அன்ன நடை பயின்று சென்று கொண்டிருப்பாள்..
காரணம்..கெமிஸ்ட்ரியா பருவம் செய்யும் வேலையா..
அதுவும் கல்லூரிப் படிப்பு முடிந்தால் –ஆணுக்கு வேலை அவசியமாகிறது..இந்தக் காலத்தில் பெண்ணுக்கும் வேலை அவசியமாகிறது..
//டாட்.. யூ ஸீ என்னோட படிப்புக்கேத்த வேலை பாக்கறேனே..அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணி வைக்கற வரைக்கு்ம்..
அடிப்பாவி ஒன்னச் சின்னப் பொண்ணுன்னுல்ல நினச்சுண்டிருக்கேன்..
நோ டாட்.. சி.பொண் லாம் சொல்லாதீங்க.. நான் வளர்கிறேனே டாடி..வேலை பாக்கட்டா..
உன் இஷ்டம் போல செய்டா கண்ணா..//
அந்தக் காலத்தில் அதுவும் வசதி வாய்ப்பெல்லாம் இல்லாமல் இருக்கும் இந்த கிராமத்துப் பெண்ணுக்கு..கல்யாணம் பற்றிய கனவு தான்..அதுவும் வெகு அழகாகப் பாடுகிறாள்..அவளுக்கு ஒரே ஒரு உறவு..தந்தையின் தம்பி..வீட்டில் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டவுடன் அவரும் தொடர்ந்து பாடுகிறார்….
கேக்கலாமா..
படம்.. கல்யாண ஊர்வலம்.. பாடியவர் எஸ்.ஜானகி கேஜேஜேசுதாஸ்.. படத்தில் வெகு ஸ்லிம் மணிமாலா.. சித்தப்பாவாக நாகேஷ்.. படம்
பார்த்ததில்லை..ஆனால் பாட்டு வளர இஷ்டம்…லிரிக்ஸ்.. வாலிபக் கவிஞர் வாலி...
நல்ல படமா.என்ன..
*
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் அதில் மல்லிகைச் செண்டு கொஞ்சம்
காதலி உள்ளம் வெள்ளம் அதில் காதலின் ஓடம் செல்லும் - இளம்
வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?
நெஞ்சமெனும் ஆலயத்தில் நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதைத் தன்னுடனே எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள் புது
மனையில் புகுந்து மணவரையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ கல்யாண நாள் வருமோ?
சித்தப்பா...
ஆயிரம் காலத்தைக் கடந்து விழி நீரினைக் கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
பருவ மழையில் இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ?
நல்ல பாடல் தானே..
சீமா பாட்டுக்கு நன்றி ராஜேஷ்..இன்னும்பாக்கலை ..வைரமுத்துவின் இந்தக்கால வரிகளில் ஒன்று..உதட்டின் மேலேபடுத்துக்கலாமா.அந்தக்காலத்தில் அந்த உதட்டழகால் புகழப்பட்டவர் அவர்..எப்படியாகினும் நல்ல நடிப்பு என்பது அவரிடம்..ம்ஹீம் இல்லவே இலலை..மஹாலிங்கபுரத்தில் ஐவிசசியின் வீடு இருக்கிறதுஅதுவே இவரின் வீடும் கூட.. இவர் பெண்கள் அப்படியே அம்மாவை ஜெராக்ஸ் எடுத்தது போல் இருப்பார்கள்..இந்த சந்தர்ப்பத்தில் முக நூல் ஜோக் நினைவுக்கு வருகிறது..
//டார்லிங்.. என்னுடைய செல்ஃபோனை மறந்து எங்கோ விட்டுவிட்டேன்..
டியர்..இட்ஸ் இன் யுவர் ஜீன்ஸ்..
யோவ்..உன் அப்பா அம்மவும் தான் ஞாபக மறதிக் காரர்கள்..என் பரம்பரையைப் பழிக்காதே..
ஓஹ்..மை ஸ்வீட் ஹார்ட் இட்ஸ் இன் யுவர் ஜீன்ஸ் பாண்ட்..மறந்துவிட்டாயா.. :)//
எனில் சீமாவின் குழந்தைகள் அவர் மாதிரி இருப்பதற்குக் காரணம் ஜீன்ஸ் :) வரட்டா நாளை பாக்கலாம் குட் நைட் :)
சி.கவின் சின்ன விண்ணப்பம்..இந்த இழை முடியும் காலம் ஆகிவிட்டது
பானகம் நன்றாகப் பல்விதமாய்த் தின்றாலும்
கானம் முடியாது காண்..
என்பதற்கேற்ப இவ்விழையின் கடைசிப் போஸ்டில் முக்கியமான கோபாலின் ராகங்கள், வாசுவின் இன்றைய ஸ்பெஷல், ராகவேந்திரரின் பொங்கும் பூம்புனல் எஸ்வியின் படங்கள் பாடல்கள், ராஜேஷின் கானங்கள், ஜி.கே யின் இடுகைகள் என லிங்க்ஸ்கொடுத்தால் நலமாக இருக்குமே..
வாசு ஜி, கோபால் ஜி , இசையரசி பாடும் fast number உங்களுக்காகவே ..
மாமாவின் இசை
குங்கும தும்பிகள் குறுமொழி பூக்களில்
http://www.youtube.com/watch?v=SRiqAIqUWsc
பழைய பக்கங்களை படித்து கொண்டிருந்தபோது சோவை பற்றிய கட்டுரை படித்தேன்.. உடனே எனக்கு நினைவு வந்தது சோவின் நகைச்சுவை காட்சி
பொம்மலாட்டம் திரையிலிருந்து ...
எத்தனையோ நகைச்சுவை காட்சிகளில் சோ நடித்திருந்தாலும் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களின் படங்களில் இன்னும் தூள் கிளப்புவார்
அப்படி கிளப்பிய காட்சிதான் இது.. அதுவும் எப்படி காதலிப்பது என்று இவர் ஜெய்க்கு நடத்தும் பாடம் இருக்கிறதே
கண்டுக்க கண்டுக்க
காட்சி 37:20’ல் தொடங்கும்
http://www.dailymotion.com/video/xrh...tam_shortfilms
சில தினங்களுக்கு முன் கிருஷ்ணா ஜி ஆயிரத்தில் ஒருவனாகமதுர கான திரியில் ....
மதுர கான திரியில் ....இன்று ராஜேஷ் சார் ''இரண்டாயிரத்தில் ஒருவன் ''- பாராட்டுக்கள் .
அமுத சுரபியாய் அள்ளி அள்ளி தந்த ராஜேஷ் அவர்கள் நம் எல்லோரின் இளமைக்கு விருந்தாக இன்னும்
பல சேவைகள் புரிவார் என்று எதிர் பார்க்கிறேன் .
இரண்டாயிரத்தில் ஒருவனுக்கு இன்றைய ஸ்பெஷல் பாடல் ..
திரு ராஜேஷ் அவர்களுக்காக ........
http://youtu.be/kcrfFfz8Tqw
எஸ்.வி சார். வாழ்த்துக்களுக்கு நன்றி .பாடல் அற்புதம் உலகெங்கும் ஒரே மொழி தானே இசை மொழி அது நம் நட்பு மொழி
ராஜேஷ் ...
மனதை மயக்கும் மதுர கானங்களின் தங்கள் தொடர் பங்களிப்பின் மூலம் தங்களுடைய 2000 பதிவுகளைக் கடந்ததை அறிய முடிந்தது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
பொங்கும் பூம்புனல்
இந்த பதிவில் இடம் பெறும் பாடல் மிக அபூர்வமானது என கருதுகிறேன். 1963ம் ஆண்டு வெளிவந்த கைதியின் காதலி திரைப்படத்திலிருந்து ஏ.எல்.ராகவன் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய இனிய பாடல்.. (அல்லது T.S.ராஜேஸ்வரியா.. ஏனெனில் படத்தின் டைட்டில் இரண்டு ராஜேஸ்வரிகளைப் பின்னணிப் பாடகர்களின் பட்டியலில் இடுகிறது. இந்த டி.எஸ்.ராஜேஸ்வரி யார் எனத் தெரியவில்லை. மேலும் இந்த பட்டியல் ஒரிஜினல் அல்ல. டிவிடி நிறுவனத்தார் தயாரித்தது போல் தோன்றுகிறது. யாரிடமாவது இசைத்தட்டு அல்லது பாட்டுப் புத்தகம் இருந்தால் தெரிந்து கொள்ளலாம்)..
மிகவும் அருமையான பாடல். கே.வி.எம். என்றாலே மெலடி என்ற இலக்கணத்தில் அடங்கும் இன்னொரு பாடல்.
தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.
https://www.mediafire.com/?tga0jnsg6z3dd6k
வாசு ஜி. ஆம் நிறைய பதிவுகள் செய்வதில்லை .. இந்த திரியில் தான் அதிகம் பதித்துள்ளேன் என்று நினைக்கிறேன்
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சார்... அந்த குங்கும தும்பிகள் பாட்ட கேளுங்க ...
பொங்கும் பூம்புனல்
கைதியின் காதலி திரைப்படத்திலிருந்து மற்றொரு அபூர்வமான பாடல். வந்து வந்து ஒவ்வொண்ணா போகுது... பாடகர் திலகத்தின் பசுமையான குரலில்
http://www.mediafire.com/listen/gx1o...yinKadhali.mp3
மலையாள மொழியில் இசையமைப்பு என்றுமே தொன்மையை விட்டுக்கொடுத்ததில்லை. இசைக் கருவிகள் புதியதாய் இருந்தாலும் அவற்றையும் பழமையின் சிறப்பிற்கே பயன்படுத்தி வந்துள்ளனர் என நான் எண்ணுகிறேன். அந்த வரிசையில் இந்த குங்குமத் தும்பிகளும் அடங்கும்.
ராஜேஷ், வாசு தாங்களிருவரும் வேற்று மொழிப் பாடல்களிலிருந்து அபூர்வமான இனிய பாடல்களைக் கொண்டு வருகிறீர்கள். கிருஷ்ணா வினோத்தும் பின் தொடர்கிறார்கள். தங்களனைவருக்கும் பாராட்டுக்கள்
இனிய நண்பர் திரு ராஜேஷ் சார்
இனிய நண்பர் திரு வாசு அவர்கள் சென்னை பயணத்தில் இருப்பதால் திரியின் நண்பர் திரு ராஜேஷ்
அவர்களின் 2000 பதிவிற்கான இனிய வாழ்த்துக்களை தெரிவிக்கும்படி அலைபேசி மூலம் எனக்கு
தகவல் கூறினார் .
http://youtu.be/4cfDheNyeuQ
ராஜேஷ்..வாழ்த்துக்கள்..2000க்கு :) நன்றி.. அந்த எந்தன் உயிர்க் காதலன் கண்ணன் கண்ணன் நல்ல பாட்டு..எனக்குப் பிடிக்கும்..
சகோதர சகோதரி பாசம் என்பதற்கு என்று ஒதுக்கப் பட்ட இந்த ரக்ஷா பந்தன் நாளையொட்டி உலகெங்கிலும் உள்ள நம் சகோதரிகளுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாழ்வில் தாங்களெல்லாம் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ வேண்டும் என இறைவனிடம் நம் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொண்டு தங்களுக்காக இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறோம்.
https://www.youtube.com/watch?v=sltxkZQvcfU
MSV'S MUSIC IS BASED ON CHORDS... ONE VERSION..
NO, NO.. HIS MUSIC IS NOT BASED ON ANY PARTICULAR ASPECT OF THE THEORY OF MUSIC .. ANOTHER VERSION...
DEAR GOPAL,
YOUR ATTENTION PLEASE. தங்களுடைய இசையறிவிற்கு சரியான தீனி .... எம்எஸ்விடைம்ஸ் இணையதளத்தில் தாங்கள் ஏன் பங்கு கொள்ளக் கூடாது.. ஆக்கபூர்வமான விஷயங்கள் விவாதங்கள்... இசையின் நுணுக்கங்கள்.. இவற்றையெல்லாம் அங்கே ஆழமாக விவாதிக்கலாமே...
www.msvtimes.com/forum
My Hearty wishes to dear brother Rajesh for his land mark with qualitative contributions.
dear rajesh sir
all the best for your 2000 post
endrum natpudan
krishna