அன்பு நண்பர்களுக்கு
ஆனந்த விகடன் 2012 வார இதழில் வெளி வந்த செய்தி . எல்லோரும் படித்து இருப்பீர்கள் என்றாலும் இன்று நான் இதை மீண்டும் படித்தேன் வேறு ஒரு வலை பூவில். பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பகிர்ந்து உள்ளேன்.
சிறுக்கி... சினிமா கிறுக்கி!
'நான் பிறந்து வளர்ந்தது கோயம்புத்தூர் - அன்னூர்பாளையம் தம்பி. சின்ன வயசுல இருந்தே சினிமா ஆசை. சினிமாவுக்குப் போறேன்னு யார் கிளம்பினாலும் 'நானும் வர்றேன்’னு கிளம்பிடு வேன். 'இந்தச் சிறுக்கி சரியான சினிமாக் கிறுக்கியா இருக்காளே’னு அக்கம்பக்கத்துல கிண்டல் பண்ணுவாங்க.
அதுவும் எம்.ஜி.ஆர். படம்னா முதல் நாள் முதல் ஷோ பாத்துடுவேன். அந்தச் சமயத்தில்தான் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. தயாரிப்பாளர் தேவர் எங்க வூட்டுக்காரருக்கு ஃப்ரெண்டு. அப்ப தேவரு எம்.ஜி.ஆரை வெச்சு 'விவசாயி’ படம் எடுத்துக்கிட்டு இருந்தாரு. கோவையில் ஷூட்டிங். எம்.ஜி.ஆருடன் டான்ஸ் ஆட பொண்ணுங்களைத் தேடிட்டு இருந்தாங்க. நான் அப்ப செம டான்ஸ் போடுவேன். என் சினிமா ஆசை எங்க வூட்டுக்காரருக்கும் தெரியும். 'சரி கழுத நடிச்சுத் தொலை’னு நடிக்க பச்சைக் கொடி காட்டினாரு. அந்த 22 வயசுல தொடங்குன சினிமாப் பயணம், கடவுள் புண்ணியத்தால இன்ன மும் நிக்காம ஓடிட்டே இருக்கு ராசா!'' - வானத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி உற்சாகமாகப் பேசுகிறார் ரெங்கம்மா. இவரை சிறிதும் பெரிதுமான கேரக்டர்களில் ஏகப்பட்ட சினிமாவில் பார்த்திருப் போம்.
http://www.vikatan.com/av/2012/02/zj...ages/c115c.JPGhttp://www.vikatan.com/av/2012/02/zj...ages/c115a.jpg
'' 'நீதிக்குத் தலைவணங்கு’, 'நான் ஏன் பிறந்தேன்’, 'காவல்காரன்’னு எம்.ஜி.ஆர் பட குரூப்லயே டான்ஸ் ஆடிட்டு இருந்தேன். 'மீனவ நண்பன்’ல ஒரு சீன்ல சேறும் சகதியுமா இருந்த ஒரு இடத்துல நடிக்க ஹீரோயினி லதா மேடம் ரொம்பப் பயந்தாங்க. அப்ப அவங்களுக்காக நான்தான் டூப் போட்டு அந்த ஸீனை ஒரே டேக்ல முடிச்சேன். 'பிரமாதம் ரெங்கம்மா’னு எம்.ஜி.ஆர். உட்பட எல்லாரும் பாராட்டினாங்க. எனக்கு எம்.ஜி.ஆர்னா உசுருங்க. கட்சி மீட்டிங், சினிமா ஷூட்டிங்னு அவரு எங்க இருந்தாலும் என்னையும் அங்க பாக்கலாம். அந்தச் சமயத்துலதான் அவரு தி.மு.க-வுல இருந்து பிரிஞ்சுவந்து அ.தி.மு.க-வை ஆரம்பிச்சாரு. அப்போ அவரோட உருவத்தைப் பச்சை குத்தி இருந்தேன். இது அவருக்குத் தெரியாது. இதை லதாம்மா அவர்கிட்ட சொல்லிடுச்சு. உடனே என்னைக் கூப்பிட்டவரு, 'எதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்றே?’னு திட்டினார். 'இது என் அண்ணன் உருவம். அதை வரைய உங்கக்கிட்டக்கூட அனுமதி வாங்க வேண்டியது இல்லை’னு சொன்னேன். உடனே அவர் 'நமக்கு எப்பவுமே தலைவர் அண்ணாதான்’னு சொல்லி ஆட்களை வரவெச்சு தன் முன் னாலேயே அண்ணா படத்தைப் பச்சை குத்தவெச் சார். இதுதான் அந்தப் படம்'' என்று கையைக் காட்டி சிரித்த ரெங்கம்மா தொடர்கிறார்.
''தம்பி, எம்.ஜி.ஆர். இன்னமும் ஃப்ரிஜ்லவெச்ச ரோசாப்பூ கணக்கா என் கண்ணுக்குள்ளவே நிக்கிறாரு.
http://www.vikatan.com/av/2012/02/zj...mages/c115.jpg