Originally Posted by
madhu
வாத்தியாரையா...
ஆசிரியர் தினத்தன்று உங்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். நிலத்தின் வகையறிந்து அதற்கேற்ற விதைகளை விதைத்து அறிவுப்பயிர் வளர்த்து எதிர்காலம் சிறக்க வைக்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்கள்.
அரை கிளாஸ் மிஸ் லூசி தொடங்கி மரகதம் டீச்சர், லோகாம்பாள் டீச்சர், புஷ்பராணி டீச்சர் என்று கோ-எட் பள்ளிக்குப் பின் லக்ஷ்மிகாந்தன் சார், சையத் சார், ஜி.டி.நரசிம்ம தாத்தாச்சாரி சார், புலவர் சூரியமூர்த்தி, சையத் சார், மந்திரம் சார் என உயர் நிலைப் பள்ளியிலும் பேரா.வி.வி.ராமன் சார், குரு.சுப்பிரமணியன் ஐயா, பாலு சார், மீனாட்சி சுந்தரம் சார், வெங்கட் சார் என கல்லூரியிலும் மனித உருவங்களாக வந்து வாழ்வெனும் சிற்பத்தை செதுக்கி வைத்த ஆசிரியர்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி.
இன்னும் உபகோசலன் போல காணும் பொருட்கள் எல்லாம் ஆசானாகி பயிற்றுவித்து வளர்த்த காரணத்தால் உலகமெனும் ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.