-
பொன்மனச் செம்மலின் படங்கள்
மக்கள் திலகக்ம் திரியில்
திரு சத்யா , திரு லோகநாதன், திரு ரவிச்சந்திரன், திரு வினோத், திரு ஜெய்சங்கர், திரு ராமமூர்த்தி , திரு செல்வகுமார், மற்றும் எல்லா மக்கள் திலகம் அன்பர்கள் பதிவு செய்தவைகளின் பிரதியே ஆகும்.
அவர்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்.
தலைவரின் படங்கள் காணக்கரிய பொக்கிசங்கள்.
அவற்றை நான் தலைவரின் புகழ் பாடவே பயன்படுத்துகின்றேன்.
நன்றிகள்
-
Quote:
Originally Posted by
ravichandrran
கார்த்திகை தீப ஒளியாம் தலைவன்
எம்மை என்றும் வாழ்த்துவான்
நலமுடன் அவன் தம் தொண்டர்கள்
வாழ வேண்டி
-
-
-
-
-
-
-
-
-
[IMG]http://i66.tinypic.com/
-
இனிய நண்பர்கள் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு யுகேஷ் பாபு இருவரின் பதிவுகள் மிகவும் அருமை .தஞ்சை நகரில் நாடோடி மன்னன் சாதனை பற்றி தகவல் தந்த திரு சுஹராம் அவர்களுக்கு நன்றி.இனிய நண்பர்கள் திரு முத்தையன் திரு ரவிச்சந்திரன் , திரு லோகநாதன் தொடர் பதிவுகளுக்கு நன்றி .
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை முன்னிட்டு பேசும் படம் இதழ் வெளியிட்ட சிறப்பு கட்டுரை .ஜூலை 1977.
http://i64.tinypic.com/r8scox.jpg
-
Quote:
Originally Posted by
esvee
திரு வினோத்
அற்புதமான கட்டுரையை தந்தமைக்கு நன்றி
-
Quote:
Originally Posted by
esvee
படிக்கும் போதே நெஞ்சம் விம்முகின்றது
எம் தலைவன் இன்று இல்லையே என்று
சந்திரோதயம் பதிவுகள்
அருமை
-
Quote:
Originally Posted by
esvee
https://youtu.be/zZXfePZSFv4
-
-
-
-
நூல் அறிமுகம் -எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் By மேஜர்தாசன் என்கிற தேவாதி ராஜன்
"எனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி!"
சிலரைப் பற்றிய செய்திகளும் தகவல்களும் எப்போது படித்தாலும் சுவையானதாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் MGR. அவரைப் பற்றி அவருடைய பால்ய நண்பரான பாலகிருஷ்ணனில் தொடங்கி சிவாஜி, கண்ணதாசன், வாலி, ஏவி.எம். சரவணன், ம.பொ.சி. என்று தொடர்ந்து கிருபானந்தவாரியார் வரை பலரும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த "எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர். என்னும் நூல். இதனை நேர்த்தியாகவும் அழகாகவும் தொகுத்திருப்பவர் பத்திரிகையாளரான மேஜர்தாசன் என்கிற தேவாதி ராஜன்.
MGRரைப் பற்றி சிவாஜி குறிப்பிடும்போது, "அண்ணன் MGR சிவாஜி வேடத்தில் நடிக்காததால், அந்த வேடம் எனக்குக் கிடைத்தது. அந்த வேடத்தின் பெயரே எனக்கு நிலைத்துவிட்டது" என்று மிகவும் அன்போடும் அடக்கத்தோடும் குறிப்பிடுகிறார்.
காஞ்சி மகான் பெரியவர் சங்கராச்சாரியார் தம் கழுத்தில் போட்டிருந்த மாலையைக் கழற்றி MGRருக்குப் போட்டதை அவருடைய பால்ய நண்பர் நினைவுகூர்கிறார்.
MGR தமிழக முதல்வராக இருந்தபோது தமிழறிஞர்கள் நிறைந்த ஓர் அவையில் உரையாற்றும்போது, “தொல்காப்பியத்தில் சினம், சிரிப்பு, வெகுளி, துன்பம் முதலான எட்டு சுவைகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஒன்பதாவது சுவையான மோனம் அதாவது தவம் அதில் இல்லை. காரணம் தவம் தமிழர்கள் நெறியல்ல அது மாற்றார் நெறி. ஆகவேதான் வள்ளுவர் தொல்காப்பிய அடிப்படையில்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போ ஓய்ப் பெறுவது எவன்
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்" என்று பேசி அறிஞர்களை வியக்க வைத்த செய்தியை திருவாரூர் தங்கராசுவின் கட்டுரை மூலம் அறிய முடிகிறது.
அதுபோலவே எழுத்தாளர் சோலை எழுதியிருக்கும் கட்டுரையில் MGR முதல்வராக இருந்தபோது ஒரு நாள் கோவை செல்வதற்காகப் புறப்பட்டபோது, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் அவரிடம் "நீங்கள் செல்லும் இரயிலுக்கு நக்ஸலைட்டுகள் குண்டு வைத்திருப்பதாக இரகசியத் தகவல் வந்தது" என்று கூற, MGR சிரித்தபடி, "எனக்கு ஆயுசு ரொம்பக் கெட்டி. நான் இரயிலில் போனால் அந்தக் குண்டு வெடிக்காது. அதனால் நூற்றுக்கணக்கானவர் பிழைப்பர். நான் போகவில்லை என்றால் கண்டிப்பாகக் குண்டு வெடிக்கும் எண்ணற்ற உயிர்கள் பலியாகும்" என்று கூறியதோடு "நான் எவருக்கும் அநியாயமாகத் துன்பம் இழைக்க எண்ணியதில்லை. எனவே தீவிரவாதிகளும் எனக்கு எதிராகச் செயல்பட மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.
ஒருமுரை MGR, நம்பியார் மற்றும் பல நண்பர்கள் திருப்பதிக்குச் சென்றுள்ளனர். வெங்கடாசலபதியைத் தரிசிக்க அனைவரும் தரும தரிசன வரிசையில் நின்றிருந்தனர். அந்தக் குழுவிலிருந்த ஒருவர் தனியே பிரிந்து எங்கோ சென்றுவிட்டு, சற்று நேரத்தில் வந்து "எல்லாரும் வாருங்கள் உள்ளே போய் வணங்கி வர பிரத்யேக அனுமதி வாங்கிவிட்டேன். வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். MGRருக்கு அது பிடிக்கவில்லை. அவர் மனம் அதற்கு இடம் தரவில்லை. அன்றுதான் அவர் கடைசியாக கோவிலுக்குப் போனது. இந்தத் தகவலை 30/11/68 அன்று ஒரு நாடக விழாவில் MGRரே குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறிவிட்டு MGR மேலும் கூறுகிறார் "அதனால் எனக்குத் தெய்வ பக்தி இல்லை என்றும், என்னைக் கடவுளை மறுப்பவனாகவும் எண்ணிவிடக் கூடாது!”
இந்நூலில் "சதி லீலாவதி" முதல் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வரை MGR நடித்த 134 படங்களின் பட்டியல், MGR நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அல்லது ஓரளவு படப்பிடிப்பு நடத்தப்பட்டு நின்றுபோன படங்களைப் பற்றிய விவரம், முதலில் வைக்கப்பட்ட தலைப்பு மாற்றப்பட்டு வெளிவந்த படங்கள், முதலில் அறிவிக்கப்பட்ட கதாநாயகி மாற்றப்பட்ட படங்கள், MGRரை வைத்து ஒரு படம் மட்டுமே இயக்கிய இயக்குநர்கள், MGRரோடு அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர் இப்படிச் சிறு சிறு தகவல்கள் ஏராளம். MGR இரசிகர்களோ சினிமா ஆர்வலர்களோ மட்டுமல்ல எல்லாருமே படித்து இரசிக்கக் கூடிய சுவையான நூல் "எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்."
Courtesy: http://cinemaexpress.com/cinemaexpress/story.aspx…
-
எம் ஜி ஆர் க்கும் மற்றவர் களுக்கும் உள்ளஂவித்தியாசம்
1.தன்னலம் கருதா உள்ளம்
2.சினிமாவை போதை ஆக்காமல் போதனை கூடம் ஆக்கியஂபண்பு
3.அஞ்சா நெஞ்சம் கொண்டஂமனம்
4.கருணை பொங்கும் பாங்கு
5.ஈகையே வாழ்வாகஂகொண்டது
6.புகழ்ச்சிக்கு மயங்காமை
7.மக்களின் அன்பை மட்டுமே
உடமையாக்கியது
8.இல்லை எனகூறஂவாரி வழங்கியது
9. தன்னோடுள்ளவரை தாயாகஂகாத்தஂஇயல்பு
10.தெய்வீகஂஅழகு
எம் ஜி ஆர் நினைத்திருந்தால் தமிழகத்தின் முதல் பணக்காரர் ஆகியிருக்கலாம் அத்தனை வெற்றிகளை பெற்றவர் ஆனால் தமிழகமக்களே என் பெரியஂசொத்து எனஂவாழ்ந்ததால் தான் இன்று அவரை மக்கள் தெய்வமாகஂகோண்டாடுகிறார்கள்
courtesy net
-
மக்கள்திலகம் மாண்புகளை பதிவிடும் தோழர்கள் திருவாளர்கள் வினோத், mgr பாஸ்கரன், லோகநாதன்,உகேஷ் பாபு, முத்தையன் அம்மு ஏனைய சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்...
-
-
-
-
-