http://i66.tinypic.com/358uvl5.jpg
Printable View
http://i63.tinypic.com/200wrx3.jpg
From the face-book of Janaki Muthaiyan. - Thanks for the Rare Image.
ஆலயங்களில் மக்கள் மனப்பூர்வமாக கடவுளை நினைக்கிறதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் நினைக்கிறாங்க...”
எவ்வளவு அரிய உண்மை...!
அனுபவபூர்வமாக உணர்ந்த ஒருவர்தான் இதை கூறியிருக்க முடியும்...!
ஆம்...சொன்னவர் எம்.ஜி.ஆர்.!
சொன்னது...விஜயா ஹாஸ்பிடல் உரிமையாளர் நாகிரெட்டியிடம் ..!
இதோ..எம்.ஜி.ஆரை சந்தித்தது பற்றி நாகிரெட்டி சொன்ன வார்த்தைகள் :
“அமெரிக்கா சென்று திரும்பிய எம். ஜி. ஆரை , நான் அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
அப்போது அவர் என்னிடத்தில், "உலகத்துலே பிறந்தோம்... இருந்தோம்.... இறந்தோம் என்று இல்லாமல் எப்போதும் நிலைத்து இருக்கும்படியாக ஏதாவது செய்ய வேண்டும்... நான் எத்தனையோ ஆஸ்பத்திரிகளுக்குப் போயிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்கு ஓர் உண்மை தெரிந்தது. ஆலயங்களில் மக்கள் மனப்பூர்வமாக கடவுளை நினைக்கிறதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் நினைக்கிறாங்க...
ரெட்டியார்... அமெரிக்காவில் நான் பெற்ற சிகிச்சை...மறக்க முடியாதது. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நான் முதலமைச்சராக இருந்ததால் அப்படிப்பட்ட சிகிச்சையைப் பெற முடிந்தது. ஆனால் சாதாரண மனிதர்களுக்கும் அந்த சிகிச்சை தேவைப்படும்போது என்ன செய்வது?
அதனால், நீங்கள் ஒரு ஹெல்த் சென்டர் கட்டுங்கள். ஆஸ்பத்திரி மாதிரி இல்லாமல் ஒரு ஹெல்த் ரிசார்ட் மாதிரி வேண்டும். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர்...”
# ஆஹா...ஐடியா கொடுப்பது பெரிதல்ல..! அதற்கேற்ற பணமும் தருகிறேன் என்று சொல்கிறாரே ..அதுவல்லவா பெரிது..?
சரி..எத்தனை லட்சங்கள் கேட்டார் நாகிரெட்டி..?
அதையும் அவரே சொல்கிறார் :
"கடவுள் கிருபையால் பணத்துக்குக் குறைவில்லை. உங்கள் வாழ்த்துகள் ஒன்றே போதும்... விரைவில் கட்டுகிறேன்'' என்றேன்.”
# ஆச்சரியப்பட்டுப் போன எம்.ஜி.ஆர். , மனம் நிறைந்த ஆசிகளை அள்ளி வழங்கி இருக்கிறார்...அவர் ஆசைப்பட்டபடியே 1987ஆம் ஆண்டு விஜயா கார்டனில் ஹெல்த் சென்டர் ஒன்றை கட்டி விட்டார் நாகிரெட்டி ..
சரி..இதற்கு யார் பெயரை வைப்பது..?
நாகிரெட்டியார் :
“தான் பெற்ற நல்ல சிகிச்சையை நாட்டு மக்களும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர். பெயரையே சூட்டலாம் என்று முடிவெடுத்து, அவரிடம் சொன்னேன். ஆனால்...அதை மறுத்த எம்.ஜி.ஆர். , மறைந்த என் மூத்த மகன் பிரசாத் பெயரை வைக்கச் சொன்னார். அதற்கு மேல் நான் அவரை வற்புறுத்தவில்லை...”
பிரசாத் மெமோரியல் என்ற பெயரில் அந்தப் புதிய ஹெல்த் சென்டரை, எம்.ஜி.ஆரை வைத்தே திறக்க ஆசைப்பட்டிருக்கிறார் நாகிரெட்டியார் ...!
ஆனால்...அதற்குள்...எம்.ஜி.ஆர். மறைந்து போனார்..!
மனதுக்குள் எம்.ஜி.ஆருக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன நாகிரெட்டி , மனம் திறந்து சொன்ன வார்த்தைகள் :
“மருத்துவமனையின் ஒரு பகுதிக்கு எம். ஜி. ஆர். விருப்பப்படி பிரசாத் மெமோரியல் என்றும், இன்னொரு பகுதிக்கு நான் விரும்பியபடி எம். ஜி. ஆர். மெமோரியல் என்றும் நுழை வாயிலில் வளைவுகள் அமைத்து அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்தேன்.”
# இந்த செய்தியைப் படித்தபோது எம்.ஜி.ஆர். – நாகிரெட்டி ..
இருவரில் எவருக்கு அதிக நன்றி சொல்வது எனத் தெரியவில்லை..!
“வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்”
http://i1170.photobucket.com/albums/...ps2pxucjzq.jpg
எம்ஜிஆர் பக்தர்கள்
லாபம் பார்த்தோ
அரசியல் பார்த்தோ
பதவி பார்த்தோ
பணம் பார்த்தோ
எம் ஜி ஆர் ரை பூஜிக்க வில்லை
ஆண்டும் பலகடக்கலாம் எம் ஜி ஆர் சக்தி யுகங்கள் தாண்டும்
விலாசம் இல்லாமலேயே தமிழகம் வந்தார் இன்று தமிழகமே இவர் விலாசம்
தன் உடமை தன் உழைப்பு தன் சக்தி
தன் பொருள் தன் செல்வாக்கு ஏன் தன்னையே தமிழர்க்கும் தமிழகத்துக்கும் எனவாழ்ந்த எம் ஜி ஆரின் பக்தர்கள் புகழ் வாழ்க வளர்க
courtesy net
திருமாவளவனுக்கு எம்.ஜி.ஆர் விசுவாசிகளின் எச்சரிக்கை!
மாமண்டூரில் நேற்று(10-04-2016) மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மது விற்பனையை பெருகச் செய்த குடிமகன்களின் கூட்டம் கூடிய இடத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பேசிய போது, “நடிகனாய் இருந்து முதல்வரான எம்.ஜி.ஆரை விடவும், ஜெயலலிதாவை விடவும் மிகச் சிறந்த பண்பு நலன் கொண்டவர் விஜயகாந்த், எனவே அவர் தமிழக முதல்வராக வேண்டும்” என பிதற்றியுள்ளார்!
எம்.ஜி.ஆரை விடவும் விஜயகாந்த் பண்பானவர் என்று சொன்னால் அதைவிட பெரிய நகைச்சுவை இந்த நூற்றாண்டில் எதுவும் இருக்க முடியாது. விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்ததிலிருந்தே திருமாவளவன் முகம் சரியில்லை! பேச்சு சரியில்லை!– அதற்காக எம்.ஜி.ஆரை இழுத்திருக்கக் கூடாது.
எம்.ஜி.ஆர் மதம், சாதிக்கு அப்பாற்பட்டவர். அவர் பெயரை சொல்லி விமர்சிக்க இன்று எவருக்கும் தகுதியில்லை. சாதியின் பெயரால் கட்சி நடத்தும் திருமாவளவன் இதுவரை தி.மு.க, அ.தி.மு.க, ப.மா.க என்று சேராத கூட்டணியே இல்லை. இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேயை வெட்கமின்றி சந்தித்து ‘பெட்டி’ வாங்கியது முதல், கட்டப் பஞ்சாயத்து மூலம் ஏராளமான கோடிகளை சம்பாதித்து, பல பெண்களின் கண்ணீர் கதைகளுக்கு காரணமான ‘பாலியல் வன்முறை வளவன்’ என்று ஏராளமான துர் நடத்தை விபரங்களை தனது பின்ணணியாக கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவன் என்று கூறிக் கொண்டு அந்த மக்களை தாழ்ந்த நிலையிலேயே வைத்திருக்கும் திருமாவளவனை இனியும் மக்கள் நம்பினால் அதோ கதி தான். அந்த கட்சியிலுள்ள எம்.ஜி.ஆர் விசுவாசிகள் யாரும் இந்த முறை திருமாவளவன் கட்சிக்கோ, சார்ந்துள்ள கூட்டணிக்கோ வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
எம்.ஜி.ஆர் விசுவாசிகள் அனைவரும் மக்கள் மத்தியில் இந்த கருத்தை கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இதயக்கனி.எஸ்.விஜயன்.
courtesy net
நண்பர் தொல்.திருமா அவர்களே ! நீங்கள் குடிகாரனை எப்படிவேண்டுமானாலும் துதிபாடுங்கள் ! பாவம் அது உங்கள் தலைவிதி ! ஆனால் எங்கள் தலைவர் சொக்கத்தங்கத்துடன் ஒப்பிட்டு பேசும் தவறை இனி எப்பொழுதும் செய்யாதிர்கள் ! எங்கள் தலைவரின் வரலாறு உனக்கும் தெரியாது ! உன் தண்ணி பீப்பாவுக்கும் தெரியாது
courtsy fb
இதோ புரட்சித்தலைவர் பேசுகிறார்
========================================
பேரன்பு கொண்ட தாய்மார்களே, பெருமைக்குரிய தமிழ் பெருமக்களே, என்ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அமரர் அண்ணா அவர்கள். அதைதான் மக்கள் ஆட்சி தத்துவமாக அறிவித்தார்கள் அரசியல் அறிஞர்கள் . மக்களுக்காக மக்களால் மக்களே அமைத்து கொள்கின்ற ஆட்சி மக்கள் ஆட்சி. அந்த மக்கள் ஆட்சிக்கு அஸ்திவாரம் போன்றதுதான் மக்களின் வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் மீது எழுப்பப்படும் அற்புதமான மாளிகைதான் நல்லரசு. அந்த அரசு நடத்தும் ஆட்சிதான் மக்கள் ஆட்சி. அத்தகைய ஆட்சி நடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நா நயம் மிக்கவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நாணயம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். நெஞ்சுரம் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது, அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்களாக மட்டும் அமைய கூடாது. இப்படி மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சிக்கு வருபவர்கள், அரசில் இடம் பெறுபவர்கள் தூய்மை உள்ளவர்களாக, தொண்டுள்ளும் கொண்டவர்களாக, ஏழை எளிய மக்களின் தோழர்களாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதவர்களாக, அரசியல் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பே தவிர மக்களை ஆட்டி படைக்கும் உரிமையை தரும் சாதனமாக கருதாதவர்கலாக, மக்களோடு மக்களாய், மக்களின் தொண்டர்களாய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதான் அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு அளித்த அரசியல் நெறியாகும்.
http://i66.tinypic.com/332p4b4.gif
தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்யாசம் தெரியாத பயல்கள்ளாம் பேசினா இப்பிடிதான். ஏன்டா, என் தலைவனுக்கும் தகரத்துக்கும் நிறம் கூடாவா வித்யாசம் தெரிலை. இவனுகள்ளாம் எங்க ஜெயிக்கப் போறான்கள். போ போ இப்பிடியே பேசு. அப்பத்தான் டெபாசிட் கூட கிடைகாது.
http://s16.postimg.org/r0y1uz945/cd7...947e4cc588.jpg
Maalaimalar Advt.
குமுதம் வார இதழ் -18/04/2016
http://i64.tinypic.com/5lcsk7.jpg
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேச்சைக் கண்டித்து
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நேற்று (10/04/2016)
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடைவிடாத உண்ணாவிரத
போராட்டம் வெகு சிறப்பாக , அனைத்து எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகளின்
ஒத்துழைப்புடன், உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு.பி. எஸ்.ராஜு
தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், மதுரை, கோவை,
திருச்சி, தஞ்சை,புதுவை போன்ற நகரங்களில் இருந்தும் திரளான பக்தர்கள்
கலந்து கொண்டு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெருமைகளையும், சிறப்புகளையும் புகழ்ந்தும், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா , புரட்சி தலைவரை பற்றி இழிவாக பேசியதற்கு இகழ்ந்தும் , எச்சரிக்கை விடுத்தும் பேசினார்கள்
முன்னதாக , உண்ணாவிரத போராட்டத்தை, முறைப்படி, இயக்குனர் திரு.வி.சி.குகநாதன் துவக்கி வைத்தார்.
இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன், சின்னத்திரை நடிகர் கனகராஜ் ,திரு.ஓம்பொடி பிரசாத் , தின இதழ் ஆசிரியர்கள் திரு. சிரஞ்சீவி அனீஸ், திரு. துரை கருணா , திரு. எம்.ஜி.சி. பிரதீப் , திரு. டி.கே.எஸ். கலைவாணன் ,தர்மம் தலை காக்கும் மாத இதழ் ஆசிரியர் திரு.மின்னல் பிரியன், அவரது மனைவி திருமதி.பவானி , ஒளி விளக்கு மாத இதழ் ஆசிரியர் திரு.மதுரை சோலை நாராயணன் மற்றும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் தலைவர்கள், பக்தர்கள் சுமார் 200பேர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பத்திரிகை நிருபர்கள் பலர் வந்திருந்து திரு. பி.எஸ். ராஜு, திரு. இதயக்கனி விஜயன், திரு. சிரஞ்சீவி அனீஸ், திரு. துரை கருணாஸ், திரு. எம்.ஜி.சி. பிரதீப் ஆகியோரிடம் பேட்டி எடுத்தனர்.
மாலை 5 மணியளவில் , முன்னாள் சுகாதார அமைச்சர் திரு. ஹண்டே அவர்கள் பேசிய பின் அவரது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும், குளிர்பானங்கள் , பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன
நிகழ்ச்சியில், இறுதியாக 9 கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ..
தின இதழ் -11/04/2016
http://i65.tinypic.com/153s2f5.jpg
தின செய்தி -11/04/2016
http://i65.tinypic.com/2r5ysfk.jpg