https://uploads.tapatalk-cdn.com/201...a0c15f2421.jpg
Printable View
31.1.2017
திரு.முரளி சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்பு முரளி சார்,
https://media.tenor.co/images/72014b...2f12/tenor.gifhttps://pbs.twimg.com/media/CtqP_7BUkAAV3Zp.jpg
நடிகர் திலகத்தை எந்நாளும் சுவாசிக்கும், நேசிக்கும் உங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
முரளி சீனிவாஸ் அவர்களுக்கு என்
இதயபூர்வமான இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
நடிகர்திலகத்தின் அதி தீவிர ரசிகர், எங்கள் ஆருயிர் நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
குணத்தில் அமைதி, பேச்சில் கண்ணியம், செயலில் தீவிரம், அனைவரிடமும் சாந்தம், விரல்நுனியில் புள்ளிவிவரங்களை கையாளும் பாங்கு, அபார நினைவாற்றல் இப்படி பல்வேறு நற்குணங்களுக்கு சொந்தக்காரராக திகழும் எங்கள் முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் பல்லாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.
Dear murali sir,
many many happy returns of the day
பசித்தவனிடம் நீட்டப்பட்ட உணவுத் தட்டு -
ஞாயிறன்று பாசமலர் பார்க்க எனக்குக் கிடைத்த அனுமதிச்சீட்டு.
பூரித்துத் திரண்ட பெருங்கூட்டம். மேளதாளம், வெடிச்சத்தம்...
மற்றுமொரு ஆலயமாயிற்று மதுரையின் 'அலங்கார்'.
தமிழ்த் திரையுலகையும் எங்களையும் ஆண்டவன் - அங்கே ஆண்டவன்.
ஆண்டவனுக்குரிய இடத்தில் நிம்மதிக்கேது பஞ்சம்?
நிலைக்கும் கலை அருளி அவன் நிறைத்தான் எம் நெஞ்சம்.
சராசரி திருப்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சரித்திர நாயகரின் சாதனைப் படைப்பை ஓட்டிக் காட்டியது..
அய்யா நடிகர் திலகத்தின் உள்ளத்தின் நிறம் கொண்ட வெள்ளைத் திரை.
அவசர, அவசரமாய் ஆலைக்குக் கிளம்பும் அறிமுகக் காட்சியில் துவங்கி அழுது, அழ வைத்து அமரராகும் இறுதிக்காட்சி வரை அய்யாவை விட்டு வேறு புறம் பார்வை நகர்த்தாத ரசிகர்களின் அன்பு போதுமே..
'பாசமலர்' - வேற்றுக் கிரகத்திலும் வெள்ளி விழாக் காணாதோ?
'பாசமலர்' - ஓய்வை உல்லாசப் படுத்தும் தமிழ் சினிமா மரபுடைத்து ஓய்வை அர்த்தப்படுத்தியது.
கறையேறிப் போன நம் இதயப் பாத்திரங்களை கண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தியது.
முயன்று, முடியாமல் மூன்று மணி நேரமும் அழுது விட்டு..
அழாதவர் போல் நடிப்பதில் அய்யாவை ஜெயிக்கப் பார்க்கிறோம் முட்டாள்தனமாக.
எந்தக் காலமும் வியக்கும் 'பாசமலர்' எனும் அந்தக் கால அதிசயத்தை மீண்டுமெங்கள் கண்களுக்குத் தந்த அத்தனை பேருக்கும் ஒருத்தர் விடாமல் நன்றி.
காட்சி முடிந்து வெளியேறுகையில் காத்திருக்கிறது ஒரு கூட்டம், பெருங்கூட்டம். அடுத்த காட்சியைப் பார்ப்பதற்கு.
எனக்குத் தெரியும். அந்தக் காட்சி முடிந்து வெளியேறுகையில் அந்தக் கூட்டமும் சந்திக்கும்..
அதை விடப் பெரிய கூட்டத்தை.
---------------------------------------------------------------------------------
-மதுரை அலங்கார் திரையரங்கில் டிஜிட்டலில் வந்த "பாசமலர்" பார்த்து விட்டு 21.8.2013 அன்று
முகநூலில் நான் இட்ட பதிவு இது.
இதை ரசித்து "அருமை" என்று பாராட்டி விட்டு,
"நீங்கள் மதுரையைச் சேர்ந்தவரா?" என்று பதிவின் கீழ் கேட்டிருந்தார்.
அவரையும், என்னையும் இணைத்த பெருமைக்குரிய இந்த பதிவை, பிறந்த நாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன்.. அவருக்கு.
அவர் - மரியாதைக்குரிய முரளி சார்.
வருடம் தவறாமல் என் பிறந்த நாளன்று வாழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ள வினோத் சார், உங்கள் பெருந்தன்மைக்கு என் சிரந்தாழ்ந்த நன்றி!
சிவா சார், அற்புதமான புகைப்படத்திற்கும் அருமையான வாழ்த்துகளுக்கும் என் மனங்கனிந்த நன்றி!
வாசு, அட்டகாசமான ஸ்டில் மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி!
இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுதப்பட்ட அன்பு வாழ்த்துக்களுக்கு மனங்கனிந்த நன்றி ஆதிராம் சார்!
பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி செந்தில்வேல்
பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி செந்தில்!
பாசமலர் என்னும் வாடா மலரால் உறவை பிணைத்த ஆதவன் ரவி, உங்களுக்கு மனமார்ந்த நன்றி!
அழகான புகைப்படத்தோடு என்னை வாழ்த்திய ராகவேந்தர் சாருக்கு நன்றிகள் பல!
அன்புடன்
ராகவேந்திரா சார்,
உங்களுக்கு ஆயுசு நூறு.நேற்றுதான் என்னை போல் ஒருவன் திருப்பி பார்த்தேன். இன்று உங்கள் காலை செய்தி என்னை போல் ஒருவன்.
ராமண்ணா ,நடிகர்திலகத்தை பிரதான நாயகனாக வைத்து ஆறு படங்கள் இயக்கி உள்ளார்.
கூண்டு கிளி, காத்தவராயன்,ஸ்ரீவள்ளி,தங்கசுரங்கம்,சொர்க்கம், என்னை போல் ஒருவன்.
என்னுடைய தர வரிசையில் சிறந்தவை என்னை போல் ஒருவன்,காத்தவராயன்,தங்க சுரங்கம். என்னை போல் ஒருவன் ,ஏழு வருடங்கள் (1971 முதல் 1978 வரை)தயாரிப்பு தாமதம், ராமண்ணாவின் அகல கால் வைத்த பொருளாதார நெருக்கடி இவற்றால் தாமதமாக வந்தாலும் பிரமாத வெற்றி பெற்ற படம்.இன்றளவும் ரசிகர்களால் போற்ற படும் இப்படம் ,அற்புதமான செண்டிமெண்ட்-நகைச் சுவை-பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படம்.வரவேண்டிய நேரத்தில் வந்திருந்தால் வெள்ளிவிழாதான்.
இதன் மிக சிறந்த அம்சங்கள்.
1)நடிகர்திலகம்-இந்த படத்தின் தன்மை,நீக்கு போக்கு அறிந்து ,இரட்டை வேடத்தில் மிக குறைந்த அளவே வித்தியாச படுத்துவார். நடை உடை பாவனை உருவம் ஒத்து போவதாக கதையமைப்பு. சிறிதே குண திரிபும், குண நலனும் உடைய இரு பாத்திரங்கள். திராவிட மன்மத மேதையின் சித்திரிப்பில் ஜொலிக்கும்.முதலில் ராஜசேகரின் குண சித்திரம் மூன்று காட்சிகளில்.அடுத்த காட்சி இருவரின் சந்திப்பு. அடுத்தடுத்த காட்சிகள் சுந்தரமூர்த்தி,சேகராக நடிக்க வேண்டிய கட்டாய காட்சிகள். இவற்றில் அபார நகைச் சுவை timing ஓடு situation comedy ரகம். விவரங்கள் தெரியாமல், எச்சரிக்கையோடு, சங்கடம் தவிர்த்து,மற்றோர்க்கு இதமாக,உறவின் எல்லை மீறாமல் கத்தி மேல் நடக்கும் சூழ்நிலை.
ரசிகர்களின் நாடி பிடித்து அசத்துவார். உதாரணம் தான் மயங்கி கிடப்பதாக எண்ணி வாசுவும்,ஆலமும் உரையாடும் காட்சியில் தாளமிடும் கை .மிகவும் கம்பி மேல் நடக்கும் பாத்திரங்கள். உதாரணம் சேகர் தன் அம்மாவுக்கு மருந்து வாங்க அலுத்து கொள்ளும் பணமுடை.
2) செறிவான,அலுக்காத திரைக்கதை. இன்றைய படங்கள் போல எந்த உணர்ச்சியும் எல்லை மீறாமல் ,ஆனால் மனதில் பதியும் விந்தை. சக்தி கிருஷ்ணசாமி, சரித்திர படங்கள் அளவு, குடும்ப-பொழுது போக்கு சித்திரங்களிலும் தனது வசன திறமையை காட்டுவார்.பொழுதுபோக்கு மன்னன் ராமண்ணா கேட்கவே வேண்டாம். அவரது சிறந்த படங்களில் ஒன்று. நான் முதல், இது இரண்டாவது.
3)ரஹ்மான் கேமரா, சுந்தரம் நடனம், வெங்கடேசன் சண்டை, விஸ்வநாதன் இசை அனைத்தும் படத்தோடு ஒன்றும். தனித்து தெரியாமல்.
4)ஆலம் -சிவாஜி இணை அழகோ அழகு. நெருக்கம். இதில் கதாநாயகிகள் உஷாநந்தினி,சாரதாவிற்கு டூயட் கிடையாது. ஆலத்திற்கு இரண்டு.
5)அத்தனை பாத்திரங்களும் பேசும் முறை, நடிப்பு இயல்போ இயல்பு. சாரதா,ருக்மிணி,வாசு,மனோகர் அனைவரும். உஷாநந்தினி உறுத்தல்.
6)உட்கார்ந்தால் எழுவது தெரியாமல் ஆறிலிருந்து அறுபது வரை கவரும் அற்புத பொழுது போக்கு.
Adhavan Ravi,
I never miss a word in your post. Highly aesthetic with keen observation with right kind of Word Smithy and craftiness. Kudos.
அந்த மோதிரக் கையால் குட்டுப்பட்டாலே குஷியாகி விடுகிறவன் ஆதவன் ரவி.
மோதிரக் கை தட்டிக் கொடுத்துப் பாராட்டுகிறது.
கேட்க வேண்டுமா? கிடந்து குதிக்கிறான்.
கோபால் சாருக்கு நன்றி சொல்கிறான்.
வாசு, ராஜா டிஜிட்டலில் மாற்றி ரீலீஸ் செய்வது பற்றி எழுதியிருந்ததை படித்தேன். அதற்கு முன்னரே அதைப் பற்றி விசாரித்தோம். இப்போது வெளியிட்டவர்களின் உரிமை உடனே முடிவுக்கு வருகிறது என்றும் வேறு ஒரு நபர் தமிழக உரிமையை (மதுரை தவிர்த்து) வாங்கி விட்டதாகவும் செய்தி. ஆனால் வாங்கியவர் பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை. விரைவில் அதை தெரிந்துக் கொண்டு அவர்களின் பிளான் என்ன என்பதையும் தெரிந்துக் கொண்டு சொல்கிறேன். நன்றி
அன்புடன்
நினைப்போம். மகிழ்வோம் -141
"எங்கிருந்தோ வந்தாள்".
தன்னை வாழ்விக்க வந்தவள் தன்னை விட்டுப்
பிரிந்து செல்வது பொறுக்காமல், "நான் உன்னை
அழைக்கவில்லை" பாடியும் தீராமல், கிளம்பிப்
போனவளே திரும்ப வந்து தேற்றியும் அடங்காமல்
மடங்கி அமர்ந்து கொண்டு கேவிக் கேவி அழும்
அழுகை.
( அவர் அழும் போது, அழாமல் பார்த்ததாக வரலாறே இல்லை.)
நினைப்போம். மகிழ்வோம் -142
"எங்க மாமா".
தங்கள் இடத்திற்குப் புதிதாக வந்திருக்கும் பெண்ணுக்கு, தன் பராமரிப்பிலிருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு பெயர் வைத்ததை
விளக்கும் காட்சி.
ஒரு பையனின் பெயர் "காந்தி" என்று சொல்வார்.
கனிவும், சாந்தமுமாய் அதிர்வற்ற அந்த உச்சரிப்பில் காந்தியே வந்து போவார்.
நினைப்போம். மகிழ்வோம் -143
"கௌரவம்".
சின்னவர் பேருந்து நிறுத்தத்தில் கையில் சந்தைச்
சுமையோடு நிற்பார்.
காதலியின் தோழியர் கூட்டம் ஆர்ப்பாட்டமாய் அவரிடம் வந்து அறிமுகம் ஆகி கை நீட்ட " கை குடுக்க முடியாது. கையில கறிகாய் இருக்கு"
என்பார்.. அந்தப் பெண்கள் கூட்டம் பேசிய அதே
தொனியில்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...b2&oe=590F5BE6பார்க்கப் பார்க்க சலிக்காது. எப்படிப் போட்டாலும் அழகு கூடும்
முத்துக்களோ கண்கள்... பாருங்கள்... "சிவாஜி கணேசனாக" மாறி நிற்கும் கட்ஜுவைப் பாருங்கள்! சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த படத்தின் பாடல் ஒன்றை தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். By: Sutha முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜுவின் தமிழ்ப் பற்றும், தமிழ்க் காதலும் வர வர கூடிக் கொண்டே போகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகு அவர் முழுமையான தமிழ்க் காதலராக மாறி விட்டார். முகநூல் பக்கத்தில் தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழர்களின் போராட்டங்களுக்கும் ஆதரவாக போஸ்ட் போட்டு வருகிறார் கட்ஜு. தமிழகத்தில் நடந்த இளைஞர்களின் எழுச்சிப் போராட்டம் அவரை வெகுவாக கவர்ந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர் புகழாத நாள் இல்லை. This is the favourite Tamil song of Markandeya Katju Popular Videos
இந்த நிலையில் தனக்குப் பிடித்த தமிழ்ப் பாட்டு ஒன்றை அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1967-68ல் இருந்தபோது தான் இந்தப் பாட்டை விரும்பிக் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞனாக இருந்தபோது அர்த்தமே புரியாத நிலையிலும் இப்பாடலை தான் கேட்டு ரசித்ததாக அவர் கூறியுள்ளார். அது சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த முத்துக்களோ கண்கள் என்ற காதல் பாடலாகும். பாடலைக் குறிப்பிட்டதோடு விடாமல் அதன் யூடியூப் இணைப்பையும் சேர்த்துப் போட்டு அசத்தியுள்ளார் கட்ஜு. இதற்கு செம ரெஸ்பான்ஸ். பலரும் கட்ஜுவை புகழ்ந்தும், வாழ்த்தியும், ஆச்சரியப்பட்டும் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒரு கமெண்ட்டுக்குப் பதிலளித்த கட்ஜு, நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன், என்னால் டூயட் பாடவும் முடியும். தயாரிப்பாளர்களிடம் சொல்லுங்கள் என்று அன்புக் கோரிக்கையும் வைததுள்ளார் கட்ஜு.
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...ju-273194.html
http://i1065.photobucket.com/albums/...ps6iufvkxq.gif
வியட்நாம் வீடு சுந்தரம்
2.10.73
அன்பு ரசிகர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம்.அனைவருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.இனிப்பான நாளில் உங்களை சந்திக்கிறார் பாரிஸ்டர் ரஜினிகாந்த்."கௌரவம் "என்ற சொல்லின் இலக்கணமேஅவர்தான்.தன் தொழில் மீது அசைக்க முடியாத தன்னம்பிக்கையும், மதிப்பும் கொண்டவர்.அவர் வளர்ப்பு மகன்
கண்ணன் பாரதி பாடிய கண்ணனாக பாரிஸ்டரின் இதயமாக இருப்பவன்.தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் உலகமாக இருப்பவர்கள்.பாரிஸ்டர் மனைவி "செல்லா "சிறு வயது முதல் கண்ணனை தர்மம், நீதி, நியாயம் என்று கீதை சொல்லி வளர்த்தவள்.தவறை தவறு என்று சொல்லத் தயங்காத தர்மதேவதை கண்ணன்.அந்த வீட்டிலுள்ள பிடுங்கி தின்னும் பேய்களுக்கு கண்ணனை கண்டால் பிடிக்காது.கண்ணனின் காதலி ராதா.கண்ணன், காதலியை விட பெரியப்பா ரஜினியிடம் அன்பும், மரியாதையும் கொண்டவன்.
"பாரிஸ்டர் " ரஜினிகாந்த் வாழ்வில் ஒரே லட்சியம் ஜஸ்டிஸ் போஸ்ட். அவர் திறமையால் அவருக்கு கிடைத்த பேரிலும், புகழிலும் ஊரே பெருமைப்பட்டது.
ஓர் நாள்...
விதி மோகன்தாஸ் கொலைகுற்றவாளி என்ற உருவில் வந்து நுழைந்தது.மனைவியை கொன்றவனை தன் தொழில் வேகத்தில் காப்பாற்றி விட்டார் ரஜினி.அவனே இரண்டாவது தடவை செய்யாத கொலையில் சிக்கி வந்து நின்றபோது -
ரஜினி எதிரே கண்ணன் வந்தான்.எதிர்த்தான்...
கௌரவம். அதை எதிர்த்து தர்மம்.
தந்தையும் , மகனும் தர்மயுத்தத்தில் நீதி மன்றத்தில் நிற்கின்றனர்.
கதையின் கருவூலம் :
தன்நிலை தாழாமையும்
அந்நிலை தாழ்ந்தக்கால்
உயிர் வாழாமையும்
மானம் எனப்படும்.
என் வரிகள்தான்..
தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் ..உணர்ச்சி மிகு சம்பவங்களை என் தந்தை நடிகர்திலகத்தின் "நடிப்புக்கலை "க்கு காணிக்கையாக்கி அவரது லட்சோப லட்சம் ரசிக இதயங்களில் சமர்ப்பிக்கிறேன்
வணக்கம்
அன்பன்
வியட்நாம் வீடு சுந்தரம்.
Courtesy :facebook
" ஜல்லிக்கட்டு "
உலகையே சென்னையை உற்று நோக்க வைத்தது ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்,
கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்ததனால் வேறு வழியின்றி மத்திய அரசும் மாநில அரசும் தீர்வை உருவாக்கின,
இப்படி வெற்றி பெற்று இருந்தாலும் கூட இந்த போராட்டம் குறித்து கருத்து கூறும் அறிவு சார்ந்த சான்றோர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் இந்த தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் மதுவை எதிர்த்து ஏன் போராடவில்லை?
விவசாயத்தையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி போராட முன் வராமல் போனது ஏன்?
போன்ற கேள்விகள் எழுப்புகின்றனர்,
அந்த கேள்விகள் நியாயம் தானே!
இது போன்ற கேள்விகள் வரும் போது
நமக்கு 1970 களில் அகில இந்திய சிவாஜி நற்பணி மன்றங்கள் அப்போதைய ஆளும் அரசை எதிர்த்து நடத்திய துனிவான போராட்டங்கள் நினைவுக்கு வருகிறது,
இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் என்றால் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதும் அதை பெரிய அளவில் விளம்பரம் செய்வது அதற்காக ரசிகர்களை உசுப்பும் நிகழ்வுகளை மட்டுமே கான முடிகிறது, ஆனால் நடிகர்திலகம் நடிப்பதோடு நின்று விடாமல் ஆளும் அரசு செய்யும் தவறுகளையும், அட்டூழியத்தையும் எதிர்த்து பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து போராடி வந்திருக்கிறார்.
அப்படி அகில இந்திய சிவாஜி நற்பணி மன்றங்கள் நடத்திய விவசாயத்தை காப்பாற்றவும் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கிட வலியுறுத்தியும் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று நடத்திய அறப்போராட்டம் அன்றைய திமுக அரசை திக்கு முக்காட வைத்தது,
சுமார் 120000 க்கும் அதிகமான அகில இந்திய சிவாஜி மன்ற உறுப்பினர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் கள்,
நிலைமையை உணர்ந்து கொண்ட அரசு விவசாயிகளுக்கு தேவையான நல திட்டங்களை அறிவித்தது, கைதான சிவாஜி நற்பணி மன்ற உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இதேபோல 1980 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாத்தில் ஈடுபட்ட நடிகர் திலகம் அப்போதைய முதல்வரான எம்ஜிஆர் ன் மது ஆதரவு கொள்கையை எதிர்த்தும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்தி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ததனால் அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் 40 ல் 2 என்ற மோசமான தோல்வியை தழுவினார்.
நடிகர்திலகத்தை வெறும் நடிகர் என்று மட்டுமே சித்தரிக்கும் ஊடகங்கள், அவருடைய பொதுத் தொண்டுகளை மறந்து அரசியல் பேசுவோர் உண்மையான வரலாறு தெரியாதவர்கள் என்பது தான் உண்மை.
கோபால் சார்,
சமீபத்தில் தங்கள் விருப்பத்திற்காக நான் 'you tube' ல் தரவேற்றிய தலைவரும், வைஜயந்தி மாலாவும் காதல் ஊடலில் தூள் பரத்தும் 'இரும்புத்திரை' காவியத்தின் காதல் காட்சியை Ermalai Arun என்ற அன்பர் அகம் மகிழ்ந்து பாராட்டியுள்ளார். அவரது பதிவிலிருந்து அவர் எப்படிப்பட்ட மேம்பட்ட ரசிகர் என்பது புரிகிறது. நடிகர் திலகம் அவர் மனதில் எந்த அளவு ஊடுருவி உள்ளார் என்பதும் தெரிகிறது. அவருடைய, அந்தக் காட்சிக்கான கமெண்ட் கீழே. அவருக்கு என் உளமார்ந்த நன்றி.
this is height of versatility, brilliance, what a performance by SG and VJ. SG you are an incomparable inimitable actor - billion times talented than Kamal - that gives the current moron where they stand. single shot, multitude of expressions, and VJ is giving lovely cute expressions and counter reactions. I dont have words to express my feeling - I cried - this is not an emotional scene, - cute love scene.
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 162– சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...a_Manidhan.jpg
1968ம்வருடம்தான் சிவாஜியின் 'எங்க ஊர் ராஜா', 'லட்சுமி கல்யாணம்', 'உயர்ந்த மனிதன்' படங்கள் வெளிவந்தன.
'எங்க ஊர் ராஜா' படத்தை இயக்குநர் பி. மாதவனின் அருண்பிரசாத் மூவீஸ் தயாரித்திருந்தது.
படத்தை மாதவனே இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் கதையை பாலமுருகன் எழுதியிருந்தார். இதில் தந்தை மகன் வேடம் சிவாஜிக்கு!
`யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ பாட்டு இந்த படத்தில் மிகவும் பிரபலம்.
இந்த படம் சென்னை சித்ரா தியேட்டரில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தயாரித்த படம் ` லட்சுமி கல்யாணம்’. என்ன காரணத்தினாலோ இந்த படத்தை எடுப்பதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்.
`ராமன் எத்தனை ராமனடி,’` பிருந்தாவனத்திற்கு வருகின்றேன்,’ `யாரடா மனிதன் அங்கே கூட்டி வா அவனை இங்கே’ போன்ற பாடல்கள் பிரபலமாக இருந்தும் படம் சரியாக போகவில்லை.
சிவாஜியின் 125வது படமாக ஏவி.எம். தயாரித்த `உயர்ந்த மனிதன்’ வெளிவந்தது.
அந்த சிறப்புக்கு ஏற்ற முறையில் அமைந்திருந்தது.
இந்த படத்தை பற்றி அதன் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த ஏவி.எம்.சரவணன் கூறும்போது, `நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்கள் பேனரில் வெகு நாட்களாக படம் பண்ணாமல் இருந்தார். ஒரு சிறிய மிஸ்–அண்டர்ஸ்டாண்டிங் காரணமாக இடைவெளி விழுந்திருந்தது.
எங்கள் கல்கத்தா (கோல்கட்டா) பங்குதாரர் வி.ஏ.பி. அய்யர் ` உத்தர் புருஷ்’ என்ற வங்காள மொழிப் படம் பற்றி குறிப்பிட்டு ` நல்லா போகுது’ என்று சொன்னார்.
அந்தப் படத்தைப் பார்த்து, ஜாவர் சீதாராமனை வைத்து அழகாக ஒரு திரைக்கதையை உருவாக்கினோம். பின்னர் அந்த கதையை பெங்களூருவில் வைத்து விவாதித்தோம். யார் ஹீரோவாக நடித்தால் அந்தக் கதைக்குப் பொருந்தி வரும் என்று பேச்சு வந்தபோது நான் சிவாஜி பெயரை வலியுறுத்தினேன்.
`பழைய மனக்கசப்பை மறந்து விடுவோம். நீங்க போய் சிவாஜியிடம் பேசுங்க’ என்றார் ஏவி.எம். செட்டியார்.
நான், என் சகோதரர்கள் குமரன்முருகன் ஆகியோர் சிவாஜியின் வீடான 'அன்னை இல்லம்’ போனோம்.
உடல் நலமின்றி இருந்ததால் அப்போது வீட்டில் ஓய்வில் இருந்தார் நடிகர் திலகம்.
நாங்கள் அவரிடம் பேசி எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம்.
`அதற்கென்ன? நடிக்கிறேன்' என்று ஒப்புக்கொண்டார். `யார் டைரக்*ஷன்?’ என்று கேட்டார்.
`கிருஷ்ணன் – பஞ்சு.’
`பஞ்சு அண்ணன் டைரக்*ஷன்ல நான் ஆக்ட் பண்ண மாட்டேன். எனக்கும் அவருக்கும் சரிப்பட்டு வராது’ என்றார். இத்தனைக்கும் கிருஷ்ணன் – பஞ்சுதான் சிவாஜியின் முதல் படமான `பராசக்தி’ படத்தின் இயக்குநர்கள்.இரண்டு பேருக்குமிடையே ஏதோ மனத்தாங்கல் அப்போது வளர்ந்திருந்தது.
`ஒரு நாள் நடிச்சீங்கன்னா எல்லாம் சரியாகப் போயிடும்’ என்று நான் நடிகர் திலகத்தை கன்வின்ஸ் செய்தேன். ` சரி’ என்றார்.
சிவாஜிக்கு உடல்நிலை சரியானதும் `உத்தர்புருஷ்’ படத்தை போட்டுக்காட்டினோம்.
`இதில் எனக்கு சரியான ரோல் இல்லையே… அப்பா ரோல் போட்டா `படிக்காத மேதை’யில் ரங்காராவ் போட்ட ரோல் மாதிரி ஆயிடும். அந்த டாக்டர் ரோல் பண்ணலாம். சின்ன ரோல்தான். நான் வேணும்னா கெஸ்ட் ஆர்டிஸ்ட்டா அந்த படத்திலே நடிச்சுத் தர்றேனே’ என்றார் சிவாஜி.
`இல்லே சார். நீங்க ஹீரோவா பண்ணினாத்தான் நல்லா வரும்’ என்று நான் என்னுடைய கருத்தைச் சொன்னேன்.
`எனக்கு உடன்பாடு இல்லே சரவணன். ஆனால் உங்களுக்காக வேணும்னா ஆக்ட் பண்றேன்.’
அந்த டாக்டர் ரோலை பண்ண வேண்டும் என்ற ஆசை அவருக்குள்ளிருந்ததை நான் உணர்ந்தேன். ஆனால் அதை அசோகன் பண்ணவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்.
`டாக்டர் ரோலை அசோகன் பண்றார்’ என்ற தகவலை சிவாஜியிடம் சொன்னபோது, அதை அவர் பெரிதாக ரசிக்கவில்லை. அப்போது அவர்கள் இருவருக்கும் `டெர்ம்ஸ்’ சரியாக இல்லை. அசோகன், எம்.ஜி.ஆர். கேம்பை சேர்ந்தவர் என்ற எண்ணம் சிவாஜியிடம் வளர்ந்திருந்தது. சிவாஜி மீது அசோகனுக்கும் சற்று வெறுப்பு இருந்தது.
ஆனால் நடிகர் திலகமும் சரி, அசோகனும் சரி, இந்த உணர்வுகளையெல்லாம் நடிக்கும்போது வெளிப்படை யாக காட்டிக்கொண்டதில்லை என்பதையும், அது இருவரின் பெருந்தன்மை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இருந்தாலும் ரகசியமாக என்னிடம் ஒருவர் பற்றி இன்னொருவர் முணுமுணுப்பார்கள்.
படத்தில் ஒரு காட்சியில் அசோகன் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போவார்.
அப்போது எப்படி நடிக்க வேண்டும், முகபாவங்களை எப்படிக் காட்டவேண்டும் என்று அசோகனுக்கு சிவாஜி கற்றுக் கொடுத்தார்.
சிவகுமார், சிவாஜியின் மகன் என்ற உண்மையை சிவாஜியிடம் சொல்ல அசோகன் வரும்போது அவரால் முடியாமல் இருதய வலி வந்து செத்துப் போவதாக காட்சி.
இடைவேளையின் போது சிவாஜி தனக்கு கற்றுக் கொடுத்தது பற்றி என்னிடம் மெதுவான குரலில் அசோகன் கேட்டார், ` ஏண்ணே, இந்த ஆள் (சிவாஜி) என்னைக் கவுத்திடலியே?’
`அடப்பாவி மனுஷா! அவர் எவ்வளவு அக்கறையா கத்துக் கொடுக்கிறார்! ஏன் அப்படி நினைக்கிறீங்க?’ என்றேன் நான்.
இன்னொரு பக்கம் சிவாஜி ` எனக்கு அவன் (அசோகன்) துரோகி. அவனுக்கு நான் ஆக்*ஷன் கத்துக் கொடுக்க வேண்டியிருக்கு பார். படம் நல்ல வரணும்ங்கறதுக்காக நான் சொல்லித் தர்றேன்' என்று என் காதில் கமெண்ட் அடித்தார்.
அதே போல இன்னொரு சம்பவமும் இப்போது நினைவிற்கு வருகிறது. ஒரு நாள் ` அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ பாடல் காட்சி ஷூட்டிங்கின்போது சிவாஜி நடித்துக் கொண்டிருந்தார்.
சற்று தொலைவில் அசோகன், அவரைச் சுற்றி கூட்டம் கூடியிருந்தது. எம்.ஜி.ஆரை எம்.ஆர் ராதா எப்படி சுட்டார் என்ற விவரத்தை அங்கே அந்த கூட்டத்திற்கு அசோகன் மோனோ ஆக்டிங் செய்து காட்டிக்கொண்டிருந்தார்.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும், அசோகன் இருந்த இடத்திற்கும் இடையே தூரம் நிறைய இருந்த போதும் சிவாஜி
என்னைக் கூப்பிட்டு, `அவனை மொதல்ல போகச் சொல்லும்’ என்றார்.
`அசோகன் தூரத்தில்தானே இருக்கிறார்?’ என்று சொல்லிப் பார்த்தேன்.
`என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான். ஒண்ணு அவனை பாக் – ஆப் பண்ணு. இல்ல நான் பாக்– அப் பண்ணிக்கிறேன்’ என்றார் சிவாஜி.
பிறகு அசோகனிடம் நான் சென்றேன். அசோகனுக்கு நான் சொன்ன
விஷயம் பிடிக்கவில்லை. இருந்தாலும்………..
(தொடரும்)
வாக்கப்பட்டு வந்த பொஞ்சாதி வக்கனையா ஆக்கிப் போட தெரியாதவளா இருந்தாலும் சரி, நல்ல பேச்சு நாலு பேசத் தெரியாதவளா இருந்தாலும் சரி, நாலு பேருக்கு கிள்ளிப் போடாதவளா இருந்தாலுஞ் சரி கட்டிக்கிட்ட புருசன் மனச கல்லாக்கிக்கிட்டு காலத்தைஏதோ ஓட்டிடலாம்.ஆனா மானத்தை தொலச்சவள கட்டிக்கிட்ட புருஷன் தான், வெளியவும் சொல்ல முடியாம உள்ளவே புழுங்கிக்கிட்டு நடைப்பிணமாத்தான் வாழ்ந்துகிட்டு இருப்பான்.இது நல்ல மனுசனுக்குண்டான குணம்.
ஊருக்கே பெரிய மனுசனா இருந்தாலும், குடும்பம்னு ஒண்ணு இருந்தா அவரு பேச்சை கேட்கிற மாதிரி பொண்டாட்டியும் , புள்ள குட்டிகளும் இருந்தாத்தேன் மனுசனுக்கு படுக்கையிலே தூக்கம் வரும்.இல்லேன்னா அந்த படுக்கை கூட சுமையாத்தான் தெரியும்.ஊருக்குள்ள போயிட்டும், வந்துட்டும் இருக்கும் போது கௌரவத்திற்கு சிரிச்சு தொலச்சு செத்த பொணமா வாழ்க்கைய நடத்தனும்ங்கறமாதிரிதான் அவுக பொழப்பு இருக்கும்.
இங்க மலைச்சாமியோட கதயும் இதப் போலத்தேன்.மத்த மனுசங்களோட குணத்தோட இந்த மனுசனோட குணத்த இணைச்சுப் பேச முடியாது.அந்த மனுசனோட குணம் பூமிக்குள்ள புதஞ்சிருக்கிற வைரம் மாதிரி.அந்த வைரத்தோட குணம் பொஞ்சாதிக்குத்தான் தெரியாம போச்சு.ஆனா ஊருக்கு நல்லாவே தெரியும்.
அவுரு பொஞ்சாதியோட கத தான் என்ன?
கண்ணாலத்துக்கு முன்னயே வேற ஒருத்தனோட உறவாண்டுகிட்டு கர்ப்பமும் ஆகிப்போனா.விதச்சவனோ விதியேன்னு ஓடிப் போயிட்டான்.
மகளோட சேதி தெரிஞ்ச அப்பனுக்குத்தான் வேற வழி தெரியல.அவனோ மானம், மருவாத கெட்டா தூக்குல தொங்கற ஆளு. அந்த கணம் சாமி மாதிரி தெரிஞ்ச ஒரே ஆளு மலைச்சாமி தான்.மலைச்சாமி கால்ல விழுந்து, நாசமாப் போன மகள நீ தான் கட்டிக்கிடனும். இல்லலேன்னா என் உசுறு என் உடம்புல தங்காதுன்னு கெஞ்சறான்.என் உடம்பு உன் காலுல, என் மானம் உங் கையிலன்னு அழுகறான். பெரிய மனுசன் கால்ல விழும்போது அந்த " சாமி " க்கு எதிர் வார்த்த சொல்ல வரல.
ஒத்துக்கிறாரு.
கண்ணாலம் முடிஞ்சாலும் அவ புத்தி மாறல.அது நாய் புத்தி.மலைச்சாமி ஊருக்கு பொண்டாட்டியா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள அவள ஏத்துக்கல.
ஆனாலும் அவுளுக்கு பொறந்த மகள தன் மக மாதிரிதான் பாசம் காட்டி வளர்க்கிறாரு.
மலைச்சாமிக்கு பாதி நிம்மதி கிடைக்கறது வீட்டுல இருக்குற குயிலு, காட்டுல பாடுற பாட்டு, வயலு, வரப்புதான்.இப்புடியே பொழப்பும் ஓடிட்டிருக்கு.
மரியாதைன்னா என்னா?அது கடுகளவு கூட தெரியாது அவுளுக்கு.
ஒரு நா, எச்சப் பாத்திரத்த கழுவறா.கழுவுற எச்சத் தண்ணிய வீசறா.அது மலைச்சாமி மேல வந்து விழுகுது.அதுக்காக அவ வருத்தமா பட்டா? கேக்குறா கேள்வி. எச்சத் தண்ணி வீசறது தெரியாம குறுக்கு வர்றதுக்கு அறிவா கெட்டுப் போச்சு? மத்த புருஷனா இருந்தா அப்பவே அவ கன்னம் வீங்கியிருக்குமே! ஆனா இது ஊருக்கே சாமியாச்சே.
அந்த ஈரத்தோட வீதில இறங்கி நடந்து வர்றாரு.எதுக்கால வர்றா ஒருத்தி.ஈரம் பாத்து, என்னான்னு கேக்குறா?
மலைச்சாமி சொல்றாரு.
" உங்க்கக்கா மஞ்சத்தண்ணி விளையாண்டுட்டா புள்ள ".
மலைச்சாமிக்குள் இருக்கும் நகைச்சுவை அங்கே தலையெடுக்கிறது.ஒரு சோகம் அங்கே சந்தோசமாய் மாறியது. அந்தப்பேச்சு மலைச்சாமியை பார்த்து வியக்க வைக்கிறது.
"முதல் மரியாதை "
-----------------------------------------------------------------------பிடித்தால் தொடரும்.