இன்று (14/8/17) சென்னை திருநின்றவூர் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் அருகில்
மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i280.photobucket.com/albums/k...pslpphtua5.jpg
Printable View
இன்று (14/8/17) சென்னை திருநின்றவூர் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் அருகில்
மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i280.photobucket.com/albums/k...pslpphtua5.jpg
தற்போது சென்னை பாட்சாவில் (11/8/17 முதல் ) தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு "
http://i280.photobucket.com/albums/k...psccvmheo8.jpg
நேற்று (13/8/17) ஞாயிறு மாலை 6.30 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய பேனர்கள் /சுவரொட்டிகள்
http://i280.photobucket.com/albums/k...psd5uwy5ih.jpg
http://i280.photobucket.com/albums/k...psychgk6nz.jpg
மேடையில் மெகா டிவி -அமுதகானம் புகழ் திரு.ஆதவன் பேசியதாவது :
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் . இந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் பேரானந்தம் அடைகிறேன் . எனது சொந்த ஊர் சங்கரன் கோயில் . இப்போது அங்கு ஆடி தபசு, மற்றும் ஆடித்திருவிழாவானது
கோமதி சங்கரநாயனார் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது
சுமார் 15நாட்கள் திருவிழா நடக்கும். மேலும் குற்றாலம் சீசன் நடைபெறும் சமயம்
சங்கரன்கோவிலில் கோமதி என்கிற அரங்கமும் , கீதாலயா என்கிற திரை அரங்கமும் உள்ளன .கீதாலயா கொஞ்சம் புதிய அரங்கு .அங்கு இப்போது மக்களின் ஏகோபித்த , உன்னத , தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த " ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் விழாக்கோலம் பூண்டு வெற்றி நடை போடுகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .தென்னகத்தில் பல ஊர்களில் , நகரங்களில் பல ஆண்டு காலமாக ,திருவிழா நேரங்களில் பொதுவாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் வெளியிடுவது தொன்று தொட்டு வரும் பழக்கம் .
மக்கள் திலகமாக திரைத்துறையில் நுழைந்து , ஈடிணையில்லா வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து, அரசியல் துறையிலும் கோலோச்சி ,முதல்வர் ஆட்சி கட்டிலில் அமர்ந்து பத்தாண்டுகள் மேல் அரசாட்சி புரிந்து ,பல நல்ல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் மட்டுமல்லாது அனைவரின் இதயங்களிலும்
குடியிருக்கும் நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் என்றும் வாழ்க, வளர்க என்று கூறி பேச வாய்ப்பளித்த இசை குழுவினருக்கு நன்றி.வணக்கம் .
http://i280.photobucket.com/albums/k...psntanfk7j.jpg
சங்கரன் கோயில் கீதாலயா அரங்கில் தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
கோவை ராயலில் கடந்த வெள்ளி முதல் (11/8/17) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"என் அண்ணன் ) தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i280.photobucket.com/albums/k...pscjwemdy9.jpg
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.
கோவை டிலைட்டில் கடந்த வெள்ளி முதல் (11/8/17) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
(புகழ் )"பல்லாண்டு வாழ்க " தினசரி 2காட்சிகள் நடைபெறுகிறது
http://i280.photobucket.com/albums/k...psmakilk29.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i280.photobucket.com/albums/k...pse3wd1and.jpg
நியூஸ் 7 சேனல் செய்திகள் -14/8/17 இரவு 10மணி
--------------------------------------------------------------------------
இன்று இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான நியூஸ் 7சானல் செய்திகளில் சுதந்திர இந்தியாவின் சிற்பிகள் 100 பேரில் ஒருவராக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தேர்வு .
இந்தியாவில் பல துறைகளில், பல வகைகளில் , பல பதவிகளில் பணியாற்றி
புதுமைகளை புகுத்தியும், மக்களுக்கு தொண்டு செய்ததையும் ,,அரிய பல சாதனைகள் புரிந்ததையும் கணக்கில் கொண்டு, இந்திய சுதந்திர வரலாற்றில் இடம்
பிடித்த 100பேர்களில் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், இந்திரா காந்தி, தந்தை பெரியார் ,மன்மோகன் சிங், வி.பி.சிங் , மொரார்ஜி தேசாய், ஜோதி பாசு, ஜெயப்ரகாஷ் நாராயணன் , ராஜீவ் காந்தி , கிருஷ்ண மேனன் , அம்பானி, டாடா, நரசிம்ம ராவ் ,
போன்றவர்கள் வரிசையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
ஏற்கனவே அமுலில் இருந்த மதிய உணவு திட்டத்தை ,சத்துணவு திட்டமாக மாற்றி மாநில அரசே முழு பொறுப்பு ஏற்று நடத்தும் வகையில், துணிந்து நின்று , தனது சக மந்திரிகள், அதிகாரிகள், மத்திய அரசு ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி ,வெற்றிகரமாக நடத்தியதோடு, அதன் காரணமாக பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்ததோடு, மற்ற மாநிலங்கள் அந்த திட்டத்தை பின்பற்றுவதற்கு காரணமாக திகழ்ந்தார் என்பதோடு, ஐ.நா. சபை
இந்த திட்டத்தை பாராட்டும்படி அமைந்ததும் முக்கிய காரணம் . அவர் மறைந்த பின்பும் இந்த திட்டம் மேலும் செரிவூட்டப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது .ஆகவே, சத்துணவு திட்டத்தின் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். சுதந்திர இந்தியாவின் சிற்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
எந்த ராஜா எந்த பட்டனம் போனாலு்ம் சரி. எவன் செத்தாலும் சரி, வாழ்ந்தாலும் சரி, ஆட்சி இருந்தலும் சரி, கவுந்தாலும் சரி உலகமே அழிஞ்சு கொண்டிருந்தாலும் சரி.
யார் வந்தாலும் வராவிட்டாலும் எதப்பத்தியும் கவலையே படாமல் புரட்சித் தலைவர் புகழ் பரப்புவதே வேலையாகக் கொண்டு எல்லா பத்திரிகயிலும் புரட்சித் தலைவர் பற்றி வர செய்திகளை பதிவு செய்யும் லோகாநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
நீங்கள் போடும் பதிவுகளால் புரட்சித் தலைவர் மறைந்து 30 வருசம் ஆன பின்னாலும் எல்லா பத்திரிகயிலும் இன்னும் அவர் பற்றின செய்தி வருவது எல்லாருக்கும் தெரிகிறது. பல வருசம் கழித்து இந்த திரிய பார்ப்பவர்கள் இவ்வளவு செய்தி இத்தனை வருசம் கழித்தும் புரட்சித் தலைவர் பற்றி வந்திருக்கிறதே என்று ஆச்சிரியப்படுவார்கள்.
புரட்சித் தலைவர் அளவுக்கு எல்லா பத்திரிகையிலும் வேற யாரைப் பற்றியும் நடிகரைப் பற்றியோ தலைவர்களைப் பற்றியோ இப்ப இருக்கிற தலைவர்கள் நடிகர்கள் பற்றி கூட இந்த அளவு செய்திகள் படங்கள் வருவது இல்லை. உங்கள் பதிவு மூலம்தான் அது தெரிகிறது. இல்லாவிட்டால் எல்லாரும் பார்த்து படிச்சு மறந்துவிடுவார்கள். இவ்வளவு பத்திரிகையில வந்ததா என்பதே தெரியாது. நீங்கள் அதை காலங்காலத்துக்கும் இருக்கிறது மாதிிரி எல்லாருக்கும் எத்தனை வருசம் ஆனாலும் உணர்த்துகிற மாதிரி செய்தி ஆவணங்களை பதிவு போடுகிறீர்கள்.
என்னாலேயும் சில சமயத்தில் வரமுடியவில்லை. அசராமல் புரட்சித் தலைவர் புகழை பரப்பி வரும் உங்காளுக்கு நன்றி. நன்றி. நன்றி. 15 ஆயரம் பதிவு போட்டதற்கு வாழ்த்துகள். நன்றி.
ஆகா, ஆகா. சுதந்தர இந்தியாவின் சிற்பியாக தேர்வு செய்யவதுற்கு தகுதி உடயவர் புரட்சித் தலைவர் .
நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு நன்றி.
கண்ணு தெரிஞ்சா எல்லாரும் புரட்சித் தலைவர் சாப்பிடற தட்ட பாருங்கய்யா. குழந்தைங்க சாப்பிட அதே அலுமினிய தட்டு. அவருக்கு மட்டும் தனியா பெரிய வெள்ளி தட்டு இல்லை. அதுனாலதான் அவர் மக்கள் தலைவர்.
அன்பு நண்பர்களுக்கு,
மக்கள் திலகத்தின் புகழ்பாடும்
இந்த திரியில் அவரைப்பற்றியும்
அவரின் அளப்பரிய சாதனைகளையும்
பதிவிடுங்கள். அவருடன் நடித்தவர்களின்
சிறப்புக்களைப்பற்றி எழுதுங்கள்.
பிறர் மனம் புண்படும்படி யாரும் பதிவிட வேண்டாம்.
சுதந்திர இந்தியாவின் 100 சிற்பிகளில் எம்.ஜி.ஆர். ஒருவராக தேர்வு .-நியூஸ் 7 சானல் செய்திகள்
---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த செய்தி பற்றி நேற்று உடனடியாக பதிவிட்டேன் . இன்று இரவு 9.30 செய்திகளில்
மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது .அந்த பதிவுகள் நண்பர்களின் பார்வைக்கு
http://i280.photobucket.com/albums/k...psvdrmcfgk.jpg
தந்தை பெரியார் அவர்களும் சுதந்திர இந்தியாவின் 100 சிற்பிகளுள் ஒருவராக
தேர்வு ஆகியுள்ளார் . சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை, தமிழ் எழுத்து சீர்திருத்தம்
மற்றும் பல சேவைகளுக்காகவும் தந்தை பெரியார் தேர்வு செய்யப்பட்டார் .
அதன் பதிவுகள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i280.photobucket.com/albums/k...pslxdjtom8.jpg
மக்கள் குரல் -14/08/17
http://i280.photobucket.com/albums/k...psylmkkay5.jpg
தின செய்தி -15/8/17
http://i280.photobucket.com/albums/k...ps7wtknco1.jpg
தின இதழ் -15/8/17
http://i280.photobucket.com/albums/k...psutnsp8ss.jpg