-
MGR filmography Film 27 (1952) Poster
"என் தங்கை", அண்ணன், தங்கை சென்டிமென்டில் வந்த முதல் வெற்றி படம்.
பெரும் உணர்ச்சிப் பிரவாகமாக அமைந்த எம்ஜியாரின் அடுத்த சோஷியல் படம் . கண்பார்வை இழந்த தங்கை (ஈ.வி.சரோஜா), அவளது சடலத்தைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு தானும் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் கதாநாயகனாக எம்ஜியார்! எம்ஜியார் தற்கொலை செய்து கொள்வதைப் போல நடித்த இரண்டே படங்களில் இது ஒன்று; மற்றொன்று: போரில் தான் கொன்றது தன் சகோதரன் என்று அறிந்து வாளை மேலே தூக்கிப் போட்டு அதற்குத் தானே இரையாகும் ராஜாதேசிங்கு!
எம்ஜியார் இறந்தால் படம் ஓடாது என்ற செண்டிமெண்ட் இன்னும் உருவாகாகதால், இந்தப் படம் ஹிட்டானது. இதைப் பற்றி ராண்டார் கை சொல்கிறார்: 'Remembered for its emotion drenched storyline and MGR’s role as a loving brother, considered by critics as one of his best performances ever.'
சிலோனில் ஏறத்தாழ ஒரு வருடம் ஓடியதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியம்: முதலில் இதில் நடிக்கத்துவங்கியவர், பாடகர் திருச்சி லோகநாதனாம். ஒரு ஷெட்யூல் முடிந்தபின்னர் அவர் பாடகர்தான், நடிகரல்ல (ஜி.என்.பி. அல்லது பிற்காலத்திய டி.என்.சேஷகோபாலன் போல!) என்று படக்குழுவினருக்குத் தெளிவு ஏற்பட, அவர் விலக்கப்பட்டு எம்ஜியார் ஒப்பந்தமானார். இந்தப் படத்தோடு எம்ஜியாருக்கு ஒரு பர்சனல் ஈக்வேஷனும் உண்டு; அவரது குழந்தைப் பருவத்தில் மருத்துவத்திற்கான வசதி இல்லாது அவரது சொந்தச் சகோதரி மாண்டு போனது, இந்தப் படத்தின் கதையோடு அவரை மிகவும் ஒன்ற வைத்ததாம்!........ Thanks...
-
MGR filmography Film 30 (1953) Poster (malayalam)
MGR filmography Film 31 (1953) Poster(tamil)"ஜெனோவா"
மீண்டும் எம்ஜியார் காஸ்ட்யூம் ட்ராமாவுக்குத் திரும்பிய இந்தப் படம் தமிழ், மலையாளம் இரண்டிலும் பை லிங்குவலாக எடுக்கப்பட்டு, மலையாள ரிலீஸுக்குப் பல நாட்களுகுப் பிறகு தமிழில் ரிலீசானதாம். எம்ஜியார் நடித்த ஒரே மலையாளப் படம் இது. அநேகமாக எம்ஜியார் நேரடியாக நடித்த பிறமொழிப்படமும் இதுவாகவே இருக்கலாம். அவரது படங்களில் சில தெலுங்கு இந்தியில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் அவர் அந்த மொழிகளில் நேரடியாக நடித்ததில்லை. பொதுவாக எம்ஜியார் படங்களில் மதக்குறியீடுகள் இருக்காது என்றாலும் கழுத்தில் சிலுவையணிந்து எம்ஜியார் காட்சியளிப்பார் இப்படத்தில்! ராமன் தேடிய சீதை போல சிலவற்றில் ஓரிரு காட்சிகளில் நெற்றியில் குங்குமத்தோடு தோன்றுவார்.எங்கள் தங்கம் படத்தில் பாகவதர் ரோலில் நெற்றியில் பட்டையுடனும், ஒரு தேவர் படத்தில் கான்ஸ்டபிள் கெட்டப்பில் நாமத்துடனும் வருவார்!
அவர் கிறித்துவக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரே படம் இதுதான். ராஜா தேசிங்கு, சிரித்து வாழ வேண்டும் போன்றவற்றில் இஸ்லாமியக் காரெக்டராகத் தோன்றியிருக்கிறார்.
இந்தப் படத்தில் எம்எஸ்வியைப் போடவேண்டாமென்று எம்ஜியார் சொல்லி, ப்ரொட்யூசர் ம்யூசிக் டைரக்டரை மாற்ற முடியாது; வேணுமானால் ஹீரோவை மாற்றுகிறேன் என்று சொன்னதாக ஒரு கதை உண்டு! ஆனால், மிக அதிகமான எம்ஜியார் படங்களுக்கு இசை அமைத்தவர் எம்எஸ்விதான்! அரசியலைப் போலவே திரையுலகிலும் கூட்டணிகளின் நோக்கம் வெற்றிதானே ஒழிய, சொந்த விருப்புவெறுப்புகள் அல்ல என்பதற்கு ஒரு உதாரணம்.
வெற்றிப் படமாக அமைந்த இதன் கதையையே 1957ஆம் வருடம் மகாதேவி என்ற பெயரில் இந்துப் பின்னணியில் தயாரித்தார்கள். அதுவும் வெற்றிப்படமாகவே அமைந்தது...... Thanks...
-
MGR filmography Film 28 (1953) Poster
"நாம்"
புதுவருடம் ஒரு சமூகப்படத்துடன் துவங்குகிறது. எம்ஜியாரை வைத்துத் தொடர்ந்து படமெடுக்கும் ஜூபிடர் பிக்சர்சுடன் இந்த முறை மேகலா பிக்சர்சும் இணைந்து தயாரிக்கிறது. கருணாநிதி குடும்பத்தினருடன் எம்ஜியார், பி.எஸ்.வீரப்பாவும் அதன் பாகஸ்தர்களாக இருந்த காலகட்டமாக இருக்கலாம். கருணாநிதியின் திரைக்கதை வசனம் பாடல்களுடன் சிதம்பரம் ஜெயராமனின் இசையில் காசிலிங்கம் இயக்கிய இந்தப் படம் வெற்றி பெறவில்லை. எம்ஜியார், ஜானகி ஆகியோரின் சிறந்த நடிப்பை விழலுக்கிரைத்த நீராக்கி, எம்ஜியார் சமூகப்படங்களுக்குத் தோதில்லை என்ற கருத்து மீண்டும் உருவாக வழிவகுக்கிறது.
அதே போல் ஏஎம் ராஜா பாடிய பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும், சிஎஸ்சுக்கும் இசை அமைப்பாளராகா பெரிதும் உதவவில்லை இந்தப் படம்....... Thanks...
-
MGR filmography Film 29 (1953) Poster
"பணக்காரி"
எம்ஜியார் காலை மீண்டும் இடறி விட்ட ஒரு சோஷியல் ட்ராமா. டி.ஆர்.ராஜகுமாரியுடன் இணைந்து எம்ஜியார் நடித்த இந்தப் படத்தை எஸ்வி வெங்கட்ராமன் இசையில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார் (பணமா பாசமா கேஎஸ்ஜி அல்ல).
நல்ல தயாரிப்பு, சிறந்த நடிப்பு, இசை ஆகியவற்றைக் கொண்டிருந்தும், லியோ டால்ஸ்டாயின் ஆனா கரினாவைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை அக்கால முறைமைகளில் ஆன்டி செண்டிமெண்ட் ஆகி, படம் தோல்வியைத் தழுவியது.
ஒரு சுவாரசியம்: இதற்கு முன்னால் வெளியான பிச்சைக்காரி என்ற படம் வெற்றியடைந்ததால், பிச்சைக்காரி பணக்காரியானாள்; பணக்காரி பிச்சைக்காரி ஆனாள் - என்று ஜோக் அடித்தார்களாம் இந்தப்படம் பற்றி!
இந்தப் படத்தின் கதி குறித்து எம்ஜியார் வருந்தினாரா தெரியவில்லை; ஆனால், எம்ஜியார் ரசிகர்கள் வருந்த வேண்டாம் - அடுத்த படம் அவரை ஸ்டார் ஸ்டேட்டசுக்கு உயர்த்தவிருக்கிறது....... Thanks...
-
MGR film poster Film 32 (1954) Poster
"மலைக்கள்ளன்"
திரையில் தோன்றி ஒண்ணரை மாமாங்க காலத்திற்குப் பிறகு, முப்பது படங்களுக்கு மேலாக நடித்த பிறகு, எம்ஜியாரை A Star to reckon with எனும்படியான நட்சத்திர அந்தஸ்துக்கு, உயர்த்திய படம். இதன் பிறகு MGR had never to look back.
ராபின் ஹூட் போல எளியார்க்கு நல்லானான கொள்ளைக்காரன் கதையாக நாமக்கல் கவிஞர் எழுதிய கதைக்கு, தொடர்ந்து எம்ஜியாரின் தோழராகவும், அவர் படங்களுக்கு கதை வசனகர்த்தாவாகவும் இருந்து வந்த கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத, எஸ்எம் சுப்பையா நாயுடுவின் இசையில் வெளியானது.
படத்தின் நீளம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக என்றாலும், (அந்தக் காலகட்டத்தில் சிறிய படம் என்றாலே குறைந்தது இரண்டே முக்கால் மணி நேரம் இருக்க வேண்டும்!) விருவிருப்பான சண்டைக் காட்சிகளும், இனிமையான பாடல் காட்சிகளும் அந்த வருடத்தின் மிகப் பெரும் வெற்றிப்படமாகி எம்ஜியாரை வசூல் சக்ரவர்த்தியானார்; தன் திரையுலக வாழ்க்கை முழுதும் அந்தப் பட்டத்தை இழக்காமலேயே தொடர்ந்தார்!
இந்தப் படத்தை பஷிராஜா ஸ்ரீராமுலு நாயுடு தமிழ் (எம்ஜியார்), தெலுங்கு (என்டிஆர்) மலையாளம் (சத்யன்), கன்னடம் (கல்யாண் குமார்) இந்தி (திலீப் குமார்) சிங்களம் (சூரசேனா) ஆகிய ஆறு மொழிகளில் தயாரித்தார். அனைத்தும் வெற்றிப்படங்களாயின. இந்திப் படத்திற்கு (ஆசாத்) சி.ராமச்சந்திரா (வஞ்சிக்கோட்டை வாலிபன் இசையமைப்பாளர்) இசையமைக்க, மற்ற அனைத்திலும் எஸ்எம்எஸ் நாயுடுவே இசையமைப்பாளர். இதைப் போல ஐந்து மொழிகளில் ஒரு படத்திற்குப் பணியாற்றிய இசையமைப்பாளர் அநேகமாக அவராகவே இருக்கலாம், இன்றுவரை!
திரைப்படங்களுக்குத் தேசியவிருதுகள் வழங்கப்படத் துவங்கியதன் இரண்டாவது வருடம் வெளியான இப்படம், அந்த வருடத்தின் சிறந்த தமிழ்ப்படமாக வெளியானது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமைக்கு உரித்தானதும் எம்ஜியாரின் படமாகவே அமைந்தது. இதைப் போல பல எம்ஜியார் படங்கள் 'முதலாவது' என்னும் பெருமையைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...... Thanks..........
-
MGR Filmography - Film 34 (1955) Poster
"குலேபகாவலி"
கூண்டில் அடைத்து வைத்து இரு கிளிகளின் சிறகையும் வெட்டியதற்குப் பரிகாரமாக, அடுத்த வருடமே ஒரு கிளியை வானில் பறக்க விட்டு ராமண்ணா வெற்றி கண்ட படம்! ஆயிரத்தோரு அராபிய இரவுகள் கதைகளில் ஒன்றை எடுத்தார் ராமண்ணா என்றால், தமிழையே உயிர் மூச்சாகக் கொண்ட திராவிட இயக்கத்தைச் சார்ந்து விட்ட எம்ஜியார் உருதுமொழிச் சொல்லை தலைப்பாகக் கொண்ட படத்தில் நடித்தது ஜாலியான ஆச்சரியம்! இன்று வரை, அந்தப் படத்தின் தலைப்பை யாரும் கேள்வி கேட்டதாகக் கூடத் தெரியவில்லை.
இனிமையான பாடல்கள், அற்புதமாக அமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் என்று ஜனரஞ்சகமாக உருவாகி, 150 நாட்களைத் தாண்டி ஓடியது. அது மட்டுமன்றி, எப்போது ரீ ரன்னாக வந்தாலும் வசூலைக் குவிக்கும் எம்ஜியார் படங்களிலும் ஒன்றானது. முந்தைய படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்ட மயக்கும் மாலை பாடல் இதில் இடம் பெற்று எவர்க்ரீன் ஹிட்டானது.
மலைக்குகையில் காட்டுவாசிகளுடனான சண்டையில் சந்திரபாபு, ராஜகுமாரி எல்லாம் எம்ஜியார் வெளியில் வந்தவுடன் குகையை பாறையைப் போட்டுச் சாத்தி விடலாம் என்று முயன்றிருக்க, வெளியே வரும் எம்ஜியார் மீண்டும் மீண்டும் குகைக்குள் நுழைந்து வாட்போரிட, இவர்கள் தவித்திருப்பது அழகான காட்சியாக்கம். இது போல பல சுவாரசியங்களுடன், அம்மா செண்டிமெண்ட்+ உண்மையே வெல்லும் + விருவிருப்பான சண்டைக்காட்சிகள்+ இனிய இசை இத்யாதி என்று முழுமையான எம்ஜியார் ஃபார்முலாவில் உருவான படம் வெற்றியடைந்ததில் வியப்பென்ன!..... Thanks...
-
MGR filmography Film 33 Poster
"கூண்டுகிளி"
சிகரத்தை நோக்கி விரையும்போது ஒரு சின்ன சறுக்கல் புவிமாந்தர் அனைவருக்கும் பொதுவானதுதானே, புரட்சித் தலைவர் மட்டும் விதிவிலக்காகி விடமுடியுமா!
ஒரு மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பின்னர் எம்ஜியாருக்கு மட்டுமல்ல, தன் முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று விட்ட சிவாஜி கணேசனுக்கும் ஒரு சறுக்கலாகவே அமைந்து விட்ட படம் கூண்டுக்கிளி. அவரவர் பாதையில் உயரத்துவங்கி விட்ட இரு நட்சத்திரங்களும் ஒன்றாகத் தனது படத்தில் பிரகாசிக்க வேண்டும் என்ற ராமண்ணாவின் விருப்பத்துக்கு உடன்பட்டதால் வந்த வினை! சிவாஜி படமாகவும் இல்லாமல் எம்ஜியார் படமாகவும் இல்லாமல், சொல்லப் போனால் எவர் நடித்திருந்தாலும் சவசவ என்றே போயிருக்கக் கூடிய படமான அதில் அவ்விருவரும் நடித்தது அவர்கள் விதிப்பயன்தான்! இரு திலகங்களும் இணைந்து நடித்த ஒரே படம் என்பதைத் தவிர வேறேதும் பெருமையில்லாத இந்தப் படம் வந்த சுருக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது.
ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. இந்த இரண்டு திலகங்களும் தீவிரமாக அரசியலிலும் ஈடுபட்ட பின்னர் ஒரு முறை மீண்டும் ரிலீஸ் செய்ததாகவும், அப்போது வசூல் ஓரளவு கண்டபோதும், இருவரது ரசிகர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலைக் கையாள முடியாமல் திரையரங்குகள் தாமாகவே படத்தைத் தூக்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
இப்போது இந்தப் படம் யூட்யூபில் கிடைக்கிறது. திலகங்களின் ரசிகர்களாக இல்லாதவர்கள் பார்க்க முயற்சி செய்யலாம்; ரசிகர்களுக்கோ இன்றும் அது அயர்ச்சிதான்!
இந்தப் படத்தின் இன்னொரு சுவாரசியம்: இதற்காக கேவி மகாதேவன் இசையில் ஏ.எம்.ராஜா-ஜிக்கி குரலில் உருவான, 'மயக்கும் மாலைப் பொழுதே' பாடல் இதில் இடம் பெறவில்லை. சிலகாலம் பின்னர் ராமண்ணா எம்ஜியாரை வைத்துத் தயாரித்த அரேபிய இரவுகள் கதையில் உருவான சூப்பர் ஹிட் படமான குலேபகாவலியில் இடம் பெற்று அமரத்துவம் பெற்றுவிட்டது அப்பாடல்! ஆனால், படத்தின் டைட்டிலில் மட்டுமன்றி, இசைத் தட்டுகளிலும் கேவிஎம் பெயர் அல்லாது, குலேபகாவலிக்கு இசையமைத்த இரட்டையர் விஸ்வநாதன் ராமமூர்த்தி பெயரே இப்பாடலுக்கும் இசையமைப்பாளராகக் கொடுக்கப்பட்டு விட்டது!..... Thanks...
-
MGR Filmography Film 26 (1952) Poster
"குமாரி"
மருத நாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மர்மயோகி போன்ற வெற்றிகளுக்குப் பிறகு வெளியான இந்த காதல்&காஸ்ட்யூம் ட்ராமா வெற்றிப் படமாகவும் அமையவில்லை; எம்ஜியாரின் கெரியருக்கு எந்த வகையிலும் உதவமுமில்லை. எம்ஜியார் நாயகனாக நடித்த அவரது ஆரம்பகாலப் படங்களுள் ஒன்று என்பதைத் தாண்டி வேறு சுவாரசியங்கள் ஏதும் இது கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை...... Thanks.......
-
MGR filmography - Film 14 Poster (1946)
"ஸ்ரீ முருகன்"
ஹொன்னப்ப பாகவதரின் இந்தப் படத்தில் சிவபெருமான் வேடம் தாங்கியிருந்தார் எம்ஜியார். அவர் செய்த சிவதாண்டவ ஸ்டில் பின்னாளில் பாபுலரானது! முப்பதாண்டுகள் கழித்து உழைக்கும் கரங்கள் படத்தில் மீண்டும் சிவதாண்டம் ஆடினார்!...... Thanks...
-
MGR filomography - Film 15 Poster Boyjbm
"ராஜகுமாரி"
திரையில் பிரவேசித்துச் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு எம்ஜியாருக்குக் கிடைத்த கதாநாயகன் ரோல். இந்தப்படத்தில் ஒரிஜினலாக சின்னப்பா நடிக்கவிருந்து, இதற்கு முந்தைய படமான ஜூபிடர் பிக்சர்ஸின் ஸ்ரீ முருகனில் எம்ஜியாரும் கே.மாலதியும் செய்த சிவதாண்டவம் பரபரப்பாகப் பேசப்படவே டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமியின் சிபாரிசின் பேரில் அவர்களே இதில் நாயகன் நாயகி ஆயினர். அப்போது ஜூபிடர் பிக்சர்சின் மாதச் சம்பளத்தில் எம்ஜியார் இருந்தாராம்; பின்னாளில் அந்தக் கம்பெனியின் பங்குதாரராகவே அவரை ஆக்கியது காலம்! திரைக்கதை வசனத்தில் உதவி செய்தவர் - கருணாநிதி!...... Thanks...
-
MGR filmography - Film 16 - Poster
"பைத்தியக்காரன்"
1946ஆம் வருடம் ஒரு படத்தில் நாயகனாக நடித்து விட்டாலும் அடுத்த ஆண்டு மீண்டும் துணை நாயகனாக எம்ஜியார் நடித்த இந்தப் படத்தில் இரண்டு சுவாரசியங்கள்:
ஒன்று, பின்னாளில் குணசித்திர வேடதாரியான எஸ்வி சகஸ்ரநாமம் இதில் கதை திரைக்கதை எழுதி, ஹீரோவாகவும் நடித்தார்.
இரண்டாவது: டி.ஏ.மதுரம் டபுள் ரோல் செய்தார்; அதில் ஒன்று எம்ஜியாரின் ஜோடியாக!
போனஸ் சுவாரசியம் : போஸ்டரில் படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில்! அந்நாளில் பலபடங்கள் இவ்வாறுதான் விளம்பரமாயின!..... Thanks...
-
MGR Filmography Film 35 (1956) Poster
"அலி பாபாவும் நாற்பது திருடர்களும்"
ஏ சர்ட்டிஃப்கேட் பெற்ற முதல் தமிழ்ப்படம் (மர்மயோகி), தேசிய விருது வாங்கிய முதல் தமிழ்ப்படம் (மலைக்கள்ளன்) என திரைத்துறையில் பல விஷயங்களில் எம்ஜியார் படமே முன்னோடி, ட்ரெண்ட் செட்டர் என்பதைப் பார்த்தோம்; அந்த வரிசையில் இன்னொரு முதன் முதலாக எனச் சேர்கிறது, தமிழில் முதன் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.
1954ஆம் வருடம் வெளியான மஹிபால் நடித்த அலிபாபா சாலிஸ் சோர் என்னும் இந்திப்படத்தின் மறுவாக்கமே என்றாலும், அதன் காட்சிகள், இசை அனைத்தும் அப்படியே இதில் பயன்படுத்தப்பட்டன என்றாலும் ஒரிஜினல் போல கருப்பு வெள்ளையில் அன்றி இதைக் கலரில் எடுக்கத் தீர்மானித்த மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் ஆர்வம் மட்டுமன்றி அவரது மார்க்கெட்டிங் திறனும் கவனிக்கத்தக்கது. வண்ணப்படம் என்றால் காண்பதற்கு எப்படி இருக்கும் என்று மக்கள் அறிவதற்காகப் படம் வெளியாவதற்கு முன்னர் ஒரு சிறிய வண்டியில் படத்தில் சில நிமிடங்களை மட்டும் ஒரு சிறிய ப்ரொஜெக்டர் வழி ஊர் ஊராக அனுப்பித் திரையிட வைத்தாராம். படத்துக்குக் கிடைத்த கோலாகலமான வரவேற்பைக் கூற வேண்டியதில்லை!
வெற்றிக்கு அது மட்டும் காரணமல்ல; இந்திப் படத்தில் நடித்திருந்த மஹிபாலும் ஷகிலாவும் பி கிரேடு நடிகர்களே; மாறாக, தமிழில் உச்ச நட்சத்திரமாகி விட்ட எம்ஜியாரும், அவருக்கு சீனியராக ஏற்கனவே பாகவதர் காலத்திலிருந்து கதாநாயகியாக நிலை பெற்று விட்ட பானுமதியும், இப்போது சொல்கிறோமில்லையா அதைப் போல அவர்களிடையே பாடல் காட்சிகளில் காணப்பட்ட கெமிஸ்ட்ரியும், அபு ஹசன் ரோலில் இந்தியில் சவசவா என்று செய்திருந்த வ்யாஸ் போல அல்லாது நடுங்க வைக்கும் ஆர்பாட்டச் சிரிப்பு கொண்ட பி.எஸ்.வீரப்பாவும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியில் இல்லாத வண்ணமும் (இந்தியில் தேக்கோஜி சாந்த் நிக்கலா என்ற பாடல் மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. தமிழில் இது அழகான பொண்ணுதான்). படத்தை முற்றிலும் வேறு தளத்திற்குக் கொண்டு சென்று விட்டன. சுந்தரத்தின் இன்னொரு இன்னோவேஷன், குகையின் வாசல் திறப்பதை மாயாஜாலமாக்காமல் 'அண்டா கா கசம் அபு கா ஹுக்கம்' என்பதைக் கேட்டு உள்ளிருக்கும் அடிமைகள் விசையைச் சுற்றிக் கதவைத் திறப்பதைப் போல அமைத்தது! (யாருமில்லாத அந்தக் குகையில் சங்கிலியால் கட்டப்பட்ட அந்த அடிமைகளுக்கு சோறு தண்ணி எப்படி கிடைத்தது; ஒன் டூ காரியங்களுக்கு என்ன செய்வார்கள் என்றெல்லாம் அப்போதென்ன இப்போது பார்க்கையிலும் கேள்வி எழாது! :) )
இது முதல் கலர்படமல்ல; 1955ஆம் வருடத்து ஜெமினி கணேசன் நடித்த கணவனே கண்கண்ட தெய்வத்தின் ஒரு பகுதி கலரில் எடுக்கப்பட்டது என்பார் உண்டு; இந்தப் படத்தைப் பற்றிப் பல சுவாரசியமான கதைகளும் உண்டு - அல்லா என்ற சொல்லை அப்போது பகுத்தறிவுக் கட்சியச் சார்ந்து விட்ட எம்ஜியார் சொல்ல மறுத்ததாகவும், சுந்தரத்தின் கட்டாயத்தின் பேரில் சொன்னதாகவும் சொல்வார்கள்; அதைப் போல, படம் முடிவடையும் தருவாயில் எம்ஜியார் வேறு படங்களில் பிசியாகி விட, காத்திருத்தல் என்பதை அறியாத சுந்தரம், கரடிமுத்து என்னும் நடிகரை டூப் போட வைத்துப் படத்தை முடித்து விட்டதாகவும், அந்த மனக்கசப்பினால்தான் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் எம்ஜியார் நடிக்கவில்லை
பல எம்ஜியார் படங்களைப் போல, இதுவும் ஆக்கத்திலும் வசூலிலும் சரித்திரம் படைத்து விட்ட ஒன்று!......... Thanks...
-
MGR filmography Film 36 (1956) Poster
"மதுரைவீரன்"
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகளைச் சுவைக்கத் துவங்கிய எம்ஜியாரின் திரையுலக வாழ்க்கையை ஒரு கையாக உச்சக்கட்டத்துக்கு மிக அருகில் அழைத்துச் சென்றது, 1956ஆம் வருடம் தமிப்புத்தாண்டு தினத்தன்று ரிலீசாகி 36 தியேட்டர்களில் நூறு நாட்களும் மதுரையில் சில்வர் ஜூபிளியும் கொண்டாடி மொத்த வசூல் அன்றைய தேதியில் ஒரு கோடியைக் கடந்த இந்தப் படம்!
இரு கதாநாயகியரில் முன்பே எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்திருந்த பானுமதியுடன், முதன் முறையாக அவருக்கு ஜோடி சேர்ந்தார் நாட்டியப்பேரொளி பத்மினி இந்தப் படத்தின் வெற்றி காரணமாக வேறு பல படங்களிலும் அந்த ஜோடி தொடரலானது.
இதன் மாபெரும் வெற்றிக்கு நடிப்பு, பட ஆக்கம், இசை என்று அனைத்தும் துணை நின்றன. பிரதான நடிகர்கள் மட்டுமல்லாது துணைப்பாத்திரங்களிலும் பாலையா, என்எஸ்கே, மதுரம், ஓஏகே தேவர் என்று மிகச் சிறப்பான பங்களிக்க, ஜி. ராமநாதனின் இசையில் நாட்டுப்புற இசை கர்நாடக இசை இரண்டும் மிக அருமையாக கையாளப்பட்டு இனிய பாடல்கள் உருவாக, வசனங்களை கவிநயத்தோடு கண்ணதாசன் கையாண்டார். 'வானகமே! வையகமே! ஆராய்ச்சி மணி கட்டி ஆண்டு வந்த தென்னகமே!' என்பன போன்ற பல வசனங்கள் மனப்பாடம் போல உருப்போடப்படலாயின! இதன் வெற்றியால், நாடோடி மன்னன், மன்னாதி மன்னன் போன்றனவற்றிற்கும் கண்ணதாசன் வசனகர்த்தா ஆனார்.
ஒரு சின்ன கான்ட்ரவர்சி உண்டு, இந்தப் படத்தைப் பொறுத்து.
மலைக்கள்ளன், அலிபாபாவைத் தொடர்ந்து ஏழைகளின் நாயகனாகவும் புரட்சி வீரனாகவும் மட்டுமன்றி சாதி வேறுபாடுகளை தடைகளைத் தாண்டிச்செல்லும் சமூக வீரனாகவும் எம்ஜியாரை நிலைநிறுத்தியது இப்படம். ஆனாலும், அந்நாளைய சமூக எண்ணங்களுக்கொப்ப மதுரைவீரன் அரசகுலத்தில் பிறந்து, ஹரிஜன தம்பதியால் வளர்க்கப்பட்டான் என்று திரைக்கதையில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டாலும், அது பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை, எவராலும்!....... Thanks.........
-
MGR Filmography Film 37 (1956) Poster
"தாய்க்கு பின் தாரம்"
எம்ஜியாரின் திரைவாழ்க்கையில் பொன்னான ஆண்டாக மலர்ந்தது 1956ஆம் வருடம். அந்த வருடம் வெளியான அவரது மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாயின. அது மட்டுமல்ல, மூன்றும் மூன்று வெவ்வேறு களங்களைக் கொண்டிருந்தன. அலிபாபா அராபிய ஃபாண்டஸி கதையாக இந்தியிலிருந்து மறுவாக்கம் செய்யப்பட்டது. அடுத்து வந்த மதுரைவீரன் தமிழர்களின் காவல் தெய்வத்தின் கதையைச் சொன்னது; மூன்றாவதான தாய்க்குப்பின் தாரம் தமிழ்நாட்டு கிராமத்தின் இயல்பான தன்மையைச் சித்தரித்து எம்ஜியாருக்கு சமூகப்படங்கள் சரிப்பட்டு வராது என்ற தவறான கருத்தை முறியடித்து வெற்றிவாகை சூடியது.
எம்ஜியார் பானுமதி ஜோடி இதிலும் தொடர, இப்படம். முதல் முறை மட்டுமன்றி, ரீரிலீஸ்களின்போதும் வசூலை அள்ளிக்குவித்த வகையில் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் தேவர் ஃபிலிம்ஸ் கம்பெனிக்குப் அஷயபாத்திரமாகவே அமைந்தது. இதை அடுத்து எம்ஜியார் நாயகனாக நடிக்க கேவி மகாதேவன் இசையமைக்க, தேவரின் தம்பியும் எடிட்டருமான எம்ஏ திருமுகம் இயக்க தேவர் ஃபிலிம்ஸ்15 படங்களைத் தயாரித்தது; அவற்றில் பெரும்பாலும் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜியாருக்கும் தேவருக்கும் அவ்வப்போது சிறுசிறு பிணக்குகள் வந்ததுண்டு என்றாலும், இருவருடம் பரஸ்பரம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். இன்னொருவரை ஹீரோவாகப் போட்டு தேவர் ஃபிலிம்ஸ் படம் எடுக்காது என்று சின்னப்பா தேவர் எம்ஜியாரிடம் கூறியதாகச் சொல்வார்கள். வேறு நாயகர்கள் நடித்த தேவரின் தமிழ்ப்படங்கள் தேவர் ஃபிலிம்ஸ் அல்லாமல் தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் என்ற பேனரில் தயாரிக்கப்பட்டன.
எம்ஜியாரின் அம்மா செண்டிமெண்ட் ஏற்கனவே குலேபகாவலியில் இருந்தாலும், அழுத்தமாக எம்ஜியாரின் பிராண்டட் மார்க்கெட்டிங் டெக்னிக்காக அது மாறத்துவங்கியது இந்தப் படம் துவங்கித்தான். தாய் என்ற சொல்லை டைட்டிலாக வைத்தே வரிசையாகப் படங்கள் தயாராகத் துவங்கின.
எம்ஜியாரின் அரசியல் பிரசாரமும் இந்தப் படத்தில் தொடர்ந்தது. ஏற்கனவே மலைக்கள்ளனில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!' என்று பிரசாரித்ததைப்போல, இதிலும் அழுத்தமாக, 'மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே!' என்று சமூக, அரசியல் நிலைகளைச் சாடி ஒரு பாடல் அமைந்தது தற்செயல் அல்ல! இதற்குப்பின் அநேகமாக ஒவ்வொரு எம்ஜியார் படத்திலும் இதைப்போல ஒரு பாடல் இடம்பெறலானது....... Thanks...
-
MGR filmography Film 38 (1957) Poster
"சக்கரவர்த்தி திருமகள்"
1957ஆண்டு ஒரு வெற்றியோடு எம்ஜியாருக்குத் துவங்குகிறது. அதுதான் ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் ப. நீலகண்டன் இயக்கி ஜி.ராமநாதன் இசையில் உருவாகிப் பல தியேட்டர்களில் 150 நாட்களைத் தாண்டி ஓடிய படமான சக்ரவர்த்தித்திருமகள். படத்தின் அமோக வெற்றிக்குக் காரணம் பல சம்பவங்களால் கோர்க்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக எந்த இடத்திலும் தொய்வு நேராதவண்ணம் மிக அழகாக அமைக்கப்பட்ட அதன் வெகு சுவாரசியமான திரைக்கதை. ஃபேரி டேல் பாணியில் சேடியின் சூழ்ச்சியால் அநாதியாக்கப்படும் இளவரசி, அவள் மீது காதலால் சேடிக்கு துணைபோகும் தளபதி, திருமணத்திற்கு முன்னரே இளவரசியைச் சந்தித்து விட்டதால் சேடி போடும் நாடகத்தை அறிந்தாலும் நிரூபிக்க முடியாத இளவரசன் என்று பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமன்றி, என்எஸ்கே, மதுரம், தங்கவேலு போலப் பலரும் மிக அருமையாகத் தங்கள் பங்கைச் செய்ததும் படத்தின் பெரு வெற்றிக்குக் காரணம்.
பொதுவாக எம்ஜியார் டப்பாங்குத்து ஆடியதில்லை. ஆனாலும், இருபடங்களில் அவர் அதைச் செய்ததுண்டு; ஒன்று இந்தப்படத்தின் 'ஆடவந்த அம்மாளு'; மற்றொன்று தேர்த்திருவிழாவின் 'ஏ குட்டி என்னா குட்டி'!
எம்ஜியாரின் அரசியல் நிலைப்பாடு அவர் படங்களின் மூலமாக பிரசாரிக்கப்படுவது வழக்கமாகி இந்தப்படத்திலும் தொடர்கிறது; நாயகன் பெயர் உதயசூரியன்!
இந்தப்பட ஷூட்டிங்கில் நீலகண்டனுக்கும் எம்ஜியாருக்கும் ஒரு சிறு உரசல் உருவாகிப் பின்னர் சமன்பட்டதாகச் சொல்வார்கள். எம்ஜியாரின் படங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் இயக்கியவர் என்ற பெருமை நீலகண்டனுக்கு உண்டு! பின்னாளில் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு எம்ஜியாரே இயக்குனர் என்றாலும், நீலகண்டன் அதில் செகண்ட் யூனிட் டைரக்டராகப் பணியாற்றினார் டைட்டிலில் அவர் பெயரும் தனியாக இடம்பெறும். தமிழ்வாணன் இதைக் கண்டு, படத்தின் டைரக்டர் நீலகண்டன்தான்; எம்ஜியார் தன்னுடைய இயக்கம் என்று சொல்லி ஏமாற்றுகிறார் - என்று கொஞ்சகாலம் சொல்லி வந்ததும் உண்டு! ஆனால், எம்ஜியார் தன் வழக்கப்படி இவை போன்ற எதையும் பொருட்படுத்திப் பதில் சொன்னதும் இல்லை!...... Thanks...
-
மனிதர் இறந்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டன !! அவரின் படங்கள் வந்து ஐம்பது வருடங்கள் உருண்டோடி விட்டன !! சன் டிவிக்காரன்விளம்பரம் செய்து ஒரு வாரம்தான் ஆகிறது !! ஆனால் அவரின் ரசிக கண்மணிகளுக்கு !! இந்த கொரானாவிலும் !! புது பட ஜுரம் தொத்தி கொண்டது !! இன்று இரவு அன்பேவா படமும் !! நாளை மறுநாள் இரவு எங்கள் வீட்டு பிள்ளை படமும் !! தலைவர் ரசிகர்கள் !! பக்தர்கள் இடையே !! புதிய உற்சாகத்தை !! புதுப்படம் ரீலீஸ் போன்ற மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது !! இதுதான் தலைவரின் புகழ் ரகசிய விந்தை !! ஓங்குக நமது தலைவர் புகழ் பார் உள்ள வரை !!!......... Thanks...
-
எம்ஜிஆருக்கு வசூல் ராஜா பட்டம்; அதிக ரசிகர் மன்றங்கள்; மார்க்கெட்டை உயர்த்திய ‘மதுரை வீரன்’ ரீலிஸாகி 64 வருடங்கள்!
வி. ராம்ஜி
தி இந்து, ஏப்ரல் 17, 2020
முன்னதாகவும் படங்கள் ஓடியிருக்கின்றன. வசூல் குவிந்திருக்கின்றன. ஆனால் அப்படியொரு வசூலை அதற்கு முன்பு வேறு எந்தப் படங்களும் கொடுத்ததில்லை எம்ஜிஆருக்கு. அதேபோல், அவரை ரசிக்கத் தொடங்கிய கூட்டம் முன்னமே இருந்ததுதான். ரசிகர் மன்றங்களும் கூட முன்பே வைக்கத் தொடங்கிவிட்டார்கள்தான். ஆனால், அந்தப் படம் வந்த பிறகுதான், எம்ஜிஆரின் திரை வாழ்வில், பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது சின்னவரின் கொடி. அந்தப் படம்... ‘மதுரை வீரன்’.
இன்றைக்கும் தென்மாவட்டங்களில் பலராலும் வணங்கப்பட்டு வரும் தெய்வம்... மதுரை வீரன். தமிழ் கூறும் நல்லுலகில், மதுரை வீரன் குறித்தும் அவருடைய மனைவியர் குறித்தும் கர்ண பரம்பரைக் கதை உண்டு. அந்தக் கதையையே ஆதாரமாகக் கொண்டு, மிகப்பெரும் தயாரிப்பாளரான லேனா செட்டியார், எம்ஜிஆரின் கால்ஷீட்டை வாங்கி, ‘மதுரை வீரன்’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கினார்.
அநேகமாக, எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட்டும் ‘யாரது எம்.ஜி.ராமசந்திரன்?’ என்று எல்லோரும் வியந்து கொண்டாடியதுமான முதல் படம், முக்கியமான படம் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாகத்தான் இருக்கும். திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாட்களைக் கடந்து ஓடியது.
இதையடுத்து மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படமும் செம ஹிட்டைச் சந்தித்தது. ‘அண்டாகா கஸம், அபூக்கா குகும், திறந்திடு சீசேம்’ என்கிற வசனத்தைச் சொல்லாத தமிழ் ரசிகர்களே இல்லை. தமிழின் முதல் கேவா கலர்ப் படத்தில் நடித்த பெருமையும் இதனால் எம்ஜிஆருக்கு வந்து சேர்ந்தது.
எம்ஜிஆரின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் முக வசீகரத்தையும் முக்கியமாக அவரின் தெள்ளுதமிழ் வசன உச்சரிப்பையும் கண்டுணர்ந்த டி.ஆர்.ராமண்ணா, ‘குலேபகாவலி’ திரைப்படத்தை எடுத்தார். எம்ஜிஆரை சாகசக்காரனாக்கினார்.
இந்த சமயத்தில்தான் லேனா செட்டியாரின் ‘மதுரை வீரன்’ படத்துக்கு ஒப்பந்தமானார் எம்ஜிஆர். யோகானந்த் இயக்கிய இந்தப் படத்தில், பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா, ஓஏகே.தேவர், ஈவி.சரோஜா, எம்.ஆர்.சந்தானலட்சுமி முக்கியமாக என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்தனர்.
படத்தின் பாடல்களை கண்ணதாசன், உடுமலையார் (உடுமலை நாராயண கவி), தஞ்சை ராமையாதாஸ் முதலானோர் எழுத, படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதினார் கண்ணதாசன். வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விசில் பறந்தன. கைதட்டலால் அரங்கையே அதிரவைத்தார்கள் ரசிகர்கள்.
அட்டகாசமான சினிமாதான், மதுரை வீரன் கதை. பிறக்கும் போதே குழந்தையின் கழுத்தில் மாலை. இது தேசத்துக்கு ஆகாது என்கிறார் அரச ஜோதிடர். தேசத்தையும் ராஜ்ஜிய பதவியையும் காப்பதற்காக குழந்தையைக் காட்டில் விட்டுவிடுகிறார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியான என்.எஸ்.கே.வும் அவரின் மனைவி மதுரமும் குழந்தையைப் பார்க்கிறார்கள். வளர்க்க முடிவு செய்கிறார்கள். ‘வீரன்’ எனப் பெயர் சூட்டுகிறார்கள். இந்த வீரன் என்கிற சூரன் தான், எம்ஜிஆர். இந்தக் குழந்தையால் தேசத்துக்கே ஆபத்து என்று சொல்லப்பட்ட கதை, நிஜத்தில் பொய்யானது. எம்ஜிஆரின் அரசியலும் அவரின் ஆட்சியும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்தது என்பது நிஜ சரித்திரம்.
காமெடியுடன் நகரும் திரைக்கதை, படத்துக்குப் பலம் சேர்த்தது. ஜி.ராமனாதனின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘நாடகமெல்லாம் கண்டேன்’, ‘வாங்க மச்சான் வாங்க’ என்று எல்லாப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.
இந்தப் படம் தமிழகமெங்கும் நூறு நாட்களைக் கடந்து, இருநூறு நாட்கள், அதற்கும் மேலே என்றோடியது. மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. ’மதுரை வீரன்’ திரைப்படம், முக்கியமாக மதுரை சிந்தாமணி தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, 200 நாட்களைக் கடந்து ஓடியது. இந்தப் படத்தின் மூலமாக எம்ஜிஆருக்கு மூன்றுவிதமான வெற்றி கிடைத்தது என்கிறார்கள் ரசிகர்கள். அதாவது, எம்ஜிஆருக்கு இந்தப் படம் வெளிவந்த கையோடு, தமிழகமெங்கும் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு எம்ஜிஆரின் மார்க்கெட்டும் சம்பளமும் திரையுலகில் கூடியது.
இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று சொல்கிற அந்த அந்தஸ்தை எம்ஜிஆர் ஸ்டார் அந்தஸ்து எகிறியது. எம்ஜிஆர் நடித்தால், அந்தப் படம் ஹிட்டாகிவிடும் என்று பைனான்சியர்கள் நம்பினார்கள். தயாரிப்பாளர்கள் அவரைப் படையெடுத்தார்கள். விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் பணப்பையோடு வந்து, அவரின் படங்களை பூஜை நாளின் போதே, வாங்கத் துடித்தார்கள். மூன்றாவதான விஷயம்... அப்போது எம்ஜிஆர், திமுகவில் இருந்தார். ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு திமுகவில் அவரின் செல்வாக்கு உயர்ந்தது. மெல்ல மெல்ல, திமுகவில் பலரும் எம்ஜிஆர் ரசிகர்களானார்கள்.
1956-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸானது ‘மதுரைவீரன்’. எம்ஜிஆரை, மாறு கால் மாறு கை வாங்குவதுடன் படம் முடியும். துக்கத்தோடும் அழுகையோடும் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு எம்ஜிஆர், வேறு எந்தப் படத்திலும் தன் ரசிகர்களை அழவைக்கவே இல்லை.
எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்றும் வசூல் ராஜா என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் உயருவதற்குக் காரணமாக இருந்த ‘மதுரை வீரன்’ வெளியாகி, 64 வருடங்களாகிவிட்டன! இன்றும் எவர்கிரீன் ஹீரோவாக மக்களின் மனங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ‘மதுரை வீரன்’ எம்ஜிஆர்!........(மதுரை- சென்ட்ரல், சிந்தாமணி அல்ல)..
............ Thanks.........
-
வணக்கம் நண்பர்களே!! பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் நடந்து கொள்ளும் விதமே அலாதியானது. முத்தான இரண்டு நிகழ்வுகள். பலருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்கு....
அண்ணா முதல்வர். 1971 பொதுதேர்தல்.அண்ணா உயிரோடு இல்லை. ராஜாஜி யின் சுதந்திரா கட்சியும், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும் கூட்டணி. கண்டிப்பாக வெல்லும் என இணைக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணி காமராஜருக்கு ஆதரவாக சிவாஜி. கருணாநிதிக்கு ஆதரவாக எம்ஜிஆர்.
ஒரு கட்டத்தில் இது எம்ஜிஆர் - சிவாஜி மோதலாக பார்க்கப்பட்டது.
சென்னை தீவுத்திடலில் நடந்த பிரம்மாண்டமான காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சிவாஜி ,எம்ஜிஆரை தாக்கி பேசினார்." நடிப்பில் சந்திப்போமா? இல்லை வீரத்தில் சந்திப்போமா?என சவால் விட்டார்.
அடுத்த வாரம் அதே தீவுத் திடலில் திமுக கூட்டம். எம்ஜிஆர் பேசுகிறார். "தம்பி கணேசன் என்னை நடிப்பில் சத்திப்போமா? என கேட்கிறார். நடிப்பில் அவருடைய பாணி வேறு என்னுடைய பாணி வேறு என அவரே சொல்லியிருக்கிறார். என்னுடைய நடிப்பு உடல்மொழி நடிப்பு. அவர் நடிப்பு முகமொழி நடிப்பு. அது தெரிந்தும் ஏன் இப்படி கேட்டார் என தெரியவில்லை. ஒருவேளை சிவந்தமண் படத்தில் நண்பர் முத்துராமன் மிகச் சிறப்பாக நடித்ததால் கணேசனுக்கு தன் நடிப்பில் சந்தேகம் வந்துவிட்டதோ என்னவோ?" சிறிது பேச்சை நிறுத்திவிட்டு எம்ஜிஆர் மறுபடி தொடர்கிறார்... "வீரத்தில் சந்திப்போமா என கேட்கிறார்.ஐயோ பாவம்"
கூடியிருந்த மக்களின் சிரிப்பும் ஆரவாரமும் விண்ணைப் பிளந்தது. ஓ. ஏ. கே. தேவர். அடுத்து பேசினார்"கணேசா நீ முதலில் நடிப்பில் என்னுடன் மோதிப்பார். அப்புறம் எம். ஜி. ஆர் உடன் மோதலாம்" என பதில் சவால் விட்டார். அந்த தேர்தலில் எம்ஜிஆர் என்ற ஒற்றை ஆளுமை காமராஜர் ராஜாஜி சிவாஜி என மூன்று பெரும் மலைகளை வீழ்த்தி கருணாநிதி யை உயரத்தில் அமர்த்தியது. தமிழக வரலாற்றிலேயே ஒரு கட்சி203இடங்களில் போட்டியிட்டு 184 இடங்களில் வென்று சாதனை படைத்த கட்சியாக திமுக ஆனது. அந்த சாதனை இன்றுவரை எந்த கட்சியாலும் முறியடிக்கப்படவில்லை...
1980 எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு பொதுதேர்தல். மதுரை மேற்கு தொகுதியில் தலைவர் போட்டியிடுகிறார். பிறகு நடந்த மாபெரும் பொதுக்கூட்டம். மதுரை சித்திரை திருவிழா போல இருந்தது. தாய்மார்கள் கைக்குழந்தை யுடன் கணக்கிலடங்காது கலந்து கொள்கிறார்கள்.ஆட்சி கலைக்கப்பட்ட வேதனையில் அனைவரும் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். நெரிசல் மிகுந்து உள்ளது. எம்ஜிஆர் பேசி முடிக்கிறார்.கடைசியாக"ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்.நான் இங்கு பெண்களிடம் தனியாக பேச விரும்புகிறேன். தயவுசெய்து நீங்கள் கலைந்து செல்லுங்கள் "என்றார். ஆண்கள் கூட்டம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அமைதியாக கலைந்து செல்கிறது. ஆண்கள் எல்லோரும் போய் விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி கொண்ட எம்ஜிஆர் மைக்கை பிடித்து பேசினார்"இப்போது பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக கலைந்து செல்லலாம்"
தன்னை தேடி வரும் மக்களை அடிமைகளாக நினைக்காமல் தன் குடும்பத்தில் ஒருவராக நினைப்பவருக்கே இது போன்ற பாதுகாப்பு உணர்வு வரும்.
அதே 1980ல் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்.(பதிவு பெரிதாக இருப்பதால் மன்னிக்கவும்) .கருணாநிதி இந்திரா வுடன் கூட்டணி வைக்கிறார். அவர் இரண்டே நிபந்தனை வைக்கிறார். "எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். நான் முதல்வராக பதவியேற்கும் போது இந்திரா வரணும். "
இந்திரா காந்தி அலையின் காரணமாக எம்.பி. தேர்தலில் அதிமுக இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் திமுக கூட்டணி அபார வெற்றி. ஆட்சி கலைக்கப்படுகிறது. தேர்தல் முடிந்து விட்டது. மறுநாள் வாக்கு எண்ணிக்கை. கருணாநிதி ஏக மகிழ்ச்சியில் உள்ளார். பத்திரிகை சந்திப்பு...
பத்திரிகை: இந்த தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?
கருணா: உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வள்ளுவர் கோட்டம் போய் பாருங்கள். அங்கு பிரம்மாண்டமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாளை மறுநாள் என் பதவியேற்பு விழாவில் பிரதமர் இந்திரா கலந்து கொள்ள உள்ளார். நீங்களும் தவறாது கலந்து கொள்ளுங்கள். (நகைச்சுவையாக) வடக்கும் தெற்கும் ஒன்றிணைகிறது. ஆம். சுவையான வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகள் பரிமாறப்படும். அந்த அளவுக்கு நான் வெற்றி பெறுவது உறுதி. என் கவலையெல்லாம் நாளை என்பது சீக்கிரம் வர வேண்டுமே என்றுதான்.
மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மக்கள் மறுபடி எம்ஜிஆர் அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அதே நிருபர் எம்ஜிஆர் இடம் பேட்டி.
பத்திரிகை :கருணாநிதி அவர்கள் நேற்று பேட்டியில் வெற்றி பெற்று விடுவேன். என மிகுந்த நம்பிக்கை யுடன் இருந்தாரே... ஆனால் வெற்றி உங்கள் பக்கம். இது எப்படி சாத்தியமானது?
எம்ஜிஆர் : கருணாநிதி அதிகாரத்தையும் ஜோசியத்தையும் நம்பினார். நான் மக்களை நம்பினேன்..இந்திராவிடம் என் ஆட்சியை கலைக்க சொன்ன கருணாநிதிக்கு நன்றி சொல்கிறேன். மக்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை எனக்கே உணர்த்திய நண்பர் கருணாநிதிக்கு நன்றி!!
அதுதான் எம்ஜிஆர்............ Thanks.........
-
மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...
இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.
01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.
02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.
03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது
04. 1986 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் எம்ஜியார் தனது ரசிகர் மன்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா ஆளுயர செங்கோல் வழங்கினார்.
05. எம்ஜியார் அதிமுகவை தொடங்குவதற்கு விதை போட்டது மதுரைதான். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நாட்டிய நாடகம் நடத்த ஜெயலலிதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்த எம்ஜியார் ஜெயலலிதாவுடன் திறந்த வாகனத்தில் மதுரையை வலம் வந்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதே மாநாட்டில் எம்ஜியார் பேசி முடித்தவுடன் பெருவாரியான கூட்டம் கலைந்தது. இது அடுத்து பேசவிருந்த முதல்வர் கருணாநிதியை எரிச்சலூட்டியது. இருவருக்கும் இடையிலான தொடர் மோதல்களின் உச்சமாக பின்னர் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கினார்.
06. திமுகவிலிருந்து எம்ஜியார் நீக்கப்பட்டபோது அதிகம் கொந்தளித்தது மதுரை மாவட்டம்தான். பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடிக்கிடந்தன.
07. அதிமுகவை தொடங்கிய பிறகு அந்தக் கட்சிக் கொடியை எம்ஜியார் முதன் முதலாக ஏற்றியது மதுரையில்தான். அண்ணா படம் பொறித்த அந்தக் கொடியை மதுரை ஜான்சிராணி பூங்காவில் எம்ஜியார் ஏற்றிவைத்தார்.
08. அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை மதுரை கலெக்டர் அலுவலகம்தான் வழங்கியது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவரின் வெற்றிக்காக இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது.
09. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் ` உலகத் தமிழ்ச் சங்கம்` மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜியார்.
10. 1980 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் எம்ஜியார்.
11. சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த திரைப்படத்தின் பெயர்….மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்........ Thanks.........
-
#எட்டுத்திக்கும்...
புரட்சித்தலைவர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சை பெற்றுக் கொண்டிருந்தபோது உலகமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். வாத்தியாருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் வாத்தியாரு குணமாகி நாடு திரும்பினார்.
புரூக்ளின் மருத்துவமனையில்
வாத்தியாருக்கு சிகிச்சை செய்ய அங்குள்ள #டாக்டர் #எலிப்டரீட்மேன் வரும்போது வீடியாவில் எம்ஜிஆர் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அதை பார்த்துப் பார்த்து
அந்த டாக்டர் வாத்தியாரோட தீவிர ரசிகராகிவிட்டார்.
வாத்தியார் சென்னை
வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எலிப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகளை திரு.ஏ.வி.எம் சரவணன் தான் செய்துகொண்டிருந்தார். அவர் மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்க அப்போது அவர், ‘‘ ‘#அன்பே #வா' படத்தில் எம்ஜிஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றாரே பார்க்கலாம்.
வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்ஜிஆர் பெயர் பெற்றிருந்தார். அவரது விருப்பத்தை சரவணன் நிறைவேற்றினார்.
மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!!!....... Thanks.........
-
#எம்ஜிஆர் #லதா
எனக்கு, 'கலையரசி', 'கலைமாமணி' என எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும்.....
#எம்ஜிஆர் #லதா என மக்கள் அழைப்பதைத் தான் நான் மிகவும் உயர்ந்ததாக நினைக்கிறேன்...
ஆஸ்கர் விருதையெல்லாம் விட மிக உயரிய விருதாக 'எம்ஜிஆர் லதா' என்று என்னை அழைப்பதைக் கருதுகிறேன்..!
எனக்குக் கிடைத்திருக்கும் அனைத்து புகழுக்கும் புரட்சித்தலைவர் தான் காரணம்...
புரட்சித்தலைவரையும், என்னையும் தேவையில் லாமல் ட்வீட் செய்த நடிகை கஸ்தூரிக்கு கண்டனங்கள் தெரிவித்த என் பாசத்துக்குரிய எம்ஜிஆர் பக்தர்களை நினைத்து பூரிப்படைகிறேன்...
புரட்சித்தலைவரை யாரும் 'டச்' பண்ணக்கூடமுடியாது...
எந்த கொம்பனாலயும் அவரிடத்தைப் பிடிக்கவே முடியாது...
ஒரே ஒரு சூரியன்
ஒரே ஒரு சந்திரன்
ஒரே ஒரு இராமச்சந்திரன்...
நேற்று சென்னையில் மிகச் சிறப்பாக நடந்த அடிமைப்பெண் 50 ஆவது ஆண்டு விழாவில் எம்ஜிஆர் லதாம்மாவின் உருக்கமான, நெகிழ்ச்சியான, அதிரடியான உரை..
......... Thanks...
-
#பட்டங்களுக்குப் #பெருமை
கல்மனம் நிறைய உண்டு...நன்மனம் பார்ப்பது அரிது...அதிலும் அரிது #பொன்மனம் #தரம் #குறையாதது...பெண்ணும் பொன்னும் மாற்றுக்குறையாமல் இருக்கவேண்டுமென்பது விதி..அந்த நன்மனம், பொன்மனம் எப்படி நெகிழ்ந்தது...மகிழ்ந்தது ...!!!
பொன்மனச்செம்மல் பட்டம், தமிழ் வளர்த்த பெரியார் வாரியார் அவர்களால் வழங்கப்பட்டதை அறிவோம்...
#வாரியார் #என்ற #பெயருக்கே பொன்மனச்செம்மல் அளித்த விளக்கம் : "தமிழ்ச்சுவையை வாரி வாரி வழங்குவதால், அப்பெரியார்க்கு அப்பெயர்" என்றார்.
பொன்மனச்செம்மல் #நகைச்சுவை #உணர்வு மிகுந்தவர்...
ஓர் முறை ராமாவரத்திலிருந்து வரும் போது நல்ல மழை. கார் போரூரை நோக்கி கார் போய்க்கொண்டிருந்தது...அப்போது ஒரு கார் வேகமாகக் கடந்து சென்றது. வேகத்தில் சேற்றை அவரது காரின் மீது இறைத்தது...
அப்போது மக்கள்திலகம் சிரித்துக்கொண்டே சொன்னார்:
"பாரி வள்ளல் வாரிக்கொடுத்தான் அக்காலத்தில்...
காரில் போகிறவர்களும் வாரியடிக்கிறார்கள் இக்காலத்தில்...இவர்களையும் "வாரியார்" என்றே சொல்லலாம்...
உலகில் ஒருவர் மற்றவரை மதிக்கிறார் என்றால் அவருக்கு அந்த நபர் '#கொடுக்கிறார்' என்றே பொருள். அதாவது மதிப்புக்கும் விலை கொடுக்கவேண்டும். ஆனால் பொன்மனச்செம்மல், வாரியார் அவர்களை நமக்கு பட்டம் தரவேண்டும் என்பதற்காக மதிக்கவில்லை...
இதற்கு ஒரு சிறு உதாரணம் :
வாரியார் சுவாமிகள் பிரபலமாகாமலிருந்த போதே அவரது தமிழ்ச்சேவைக்காக மக்கள்திலகம் மதித்தார்.
1954- ல் பொருட்காட்சியில் "இன்ப கனவு" நாடகம் நடந்து கொண்டிருந்தது. பெருங்கூட்டம். அந்நாடகத்தில் வில்லன் வேடமேற்று நடித்த சேதுபதி என்பவர் ஒரு கட்டத்தில் "கிருபானந்த வாரியார் காலட்சேபத்துக்கு சுண்டல் வாங்கப் போனேன்" என்று சொல்வதற்கு பதில் '#கிருக்கானந்தவாரியார்' #உம்ஹும் '#கிருபானந்தவாரியார்' என்று கிண்டலடிப்பார். கூட்டத்தில் பலர் சிரித்தனர்...
மேடை மேல் ஓரமாக நின்ற மக்கள்திலகம் முகம் சிவந்தார். நாடகம் முடிந்ததும் கண்டிக்கப்பட்டார்.
"மன்னிச்சுக்கங்க அண்ணா. சும்மா தமாசுக்கு சொன்னேன். ஜனங்களை சிரிக்கவைக்க" ன்னார் சேதுபதி.
அப்ப மக்கள்திலகம், "அப்ப அண்ணா பேரு, காந்தி பேரு, காமராசர் பேரு வந்தாக்கூட இப்படித்தான் கிண்டல் பண்ணுவியா??? #மத்தவங்களை #சிரிக்கவைக்க #மகான்களின் #பெயரை #இழுக்கக்கூடாது...அது மிகவும் #இழிவான #செயல்" என்று பொட்டிலடித்தாற் போலக் கூறினார்.
பட்டங்களால் சிறப்பு பெறுபவர் பலர் உண்டு...!!!
அந்தப் #பட்டங்களே #சிறப்புபெறுவது நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலுக்கு சூடியதால் மட்டுமே என்பதை யாரால் மறுக்கமுடியும் !!!......... Thanks...
-
திரு.சோ அவர்கள் குறிப்பிட்டார்
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் தான் இருக்கிறார்கள்.
ஆனால் புரட்சி தலைவர் ஒருவருக்குதான் பக்தர்கள் இருக்கிறார்கள் என்றார்.
அதனால் தான் இன்றும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் மனதில் குடியிருக்கும் தெய்வமாக தலைவர் திகழ்கிறார்.
இனிய காலை வணக்கம் ... Thanks......
-
[கலைமாமணி கே. ரவீந்தர் எழுதிய "விழா நாயகன் எம்.ஜி.ஆர்" என்ற புத்தகத்தில் இருந்து]
#எம்ஜிஆரின் #தசாவதாரம்
கலைமாமணி ரவீந்தர் திரைக்கதை எழுதி எம்ஜிஆர் நடிக்க ' தசாவதாரம்' என்ற படம் எடுக்க முயற்சித்தபோது தலைவர் எம்ஜிஆர் கூறியதாக ரவீந்தர் எழுதியது.
டி.ஆர்.நாயுடு என்ற கன்னட கதையாசிரியர் எழுதிய 'அவதார மகிமைகள்' என்ற கதையின் தமிழ் மொழியாக்கத்தை செம்மலிடம்(எம்ஜிஆர்) கொண்டு சென்றேன். படித்தார். மூக்கை கசக்கினார். அவர் சிந்திக்கிறார் என்பதற்கு அறிகுறி அச்செயல். செம்மல் தந்த விளக்கம் நாத்திகர் மூளையையும் உலுக்கும்.
செம்மல் கூறினார்-- இந்த பத்து அவதாரமும் நமக்குள்ளே இருக்கிறது.ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய குணங்கள்.
சுறுசுறுப்புக்கு மீன்,
அடக்கத்திற்கு ஆமை,
முயற்சிக்கு கூர்மம்,
ருத்ரத்திற்கு நரசிம்மம்,
வைராக்கியத்திற்கு பரசுராமர்,
கடமைக்கு ராமன்,
காதலுக்கும், அரசியலுக்கும் கண்ணன், கடைசியிலே கல்கி. மனிதன் புத்தியாலே வாழ முடியாது.கத்தியாலேதான் வாழ முடியும்னு காட்டுகிறது.இது ஆயுத முகம்.இதை சொல்லவே அந்த அவதாரத்தின் தோற்றமே கையில் கத்தியுடன் இருக்கும்.
இந்த குணங்களை சிச்சுவேஷன் மூலம் வெளிப்படும் அளவுக்கு ஹீரோ இருக்கட்டும்.கடைசியில் பலர் அவனுக்கு கொடுத்த தொல்லைகள் தாங்காமல் ஆயுதத்தை தூக்கினான் என்பதை க்ளைமாக்ஸாக வச்சு தசாவதாரத்தை முடியும்" என்றார்.
சரியென சொல்லி எழுதினேன். ஆனால் படமாகவில்லை........ Thanks VN.,
-
சொந்தப் படமெடுத்து சொத்தை இழந்தவர்களில் நடிகை சாவித்திரி அவர்களும் ஒருவர்.
சென்னை ஹபிபுல்லா சாலையில் இருந்த சாவித்திரியின் பெரிய மாளிகையும் ஏலத்தில் போனது. இப்படி தன்னிடமிருந்த ஒவ்வொரு பொருளும் கைவிட்டு போய் மிகவும் வருமை நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் ஒரு நாள் எம்ஜிஆரின் மாம்பலம் அலுவலகத்திற்குச் சென்று தலைவரை சந்தித்தார் சாவித்திரி. தலைவரோ சாவித்திரி வசம் ஒருபையில் பணத்தை வைத்துக் கொடுத்ததுடன், சாவித்திரி தங்குவதற்கு ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.
அந்தப் பையில் இருந்ததோ பணம் ஒரு லட்சம். ஆனால் சாவித்திரி அதை வைத்து முன்னேறப்போவது கிடையாது. சாவித்திரி எப்படி செலவழிப்பார் என்பதும் தலைவருக்கு நன்றாகவே தெரியும்.
இருப்பினும் மாபெரும் நடிகை வந்துக் கேட்கும்போது உதவாமல் இருக்கவும் முடியாது, உதவினார். இது தலைவரின் மனித நேயத்தை காட்டுகிறது......... Thanks...
-
தமிழகத்தில் பக்தவத்சலம் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது சிறந்த சினிமா கலைஞர்களுக்காக கொடுக்கப்படும் N S K விருது மக்கள் திலகத்திற்கு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
பாரத் பட்டம் சிபாரிசின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதாக புலம்பும் மாற்று அணி ரசிகர்கள்
காமராஜர் ஆட்சி காலத்தில் யாருடைய சிபாரிசில் எம்ஜிஆருக்கு விருது கிடைத்தது. அந்த பட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதும் அதை தூக்கி எறிந்தார். பாரத் பட்டத்தை உதறித்தள்ளிய எம்ஜிஆர் என்ற புதிய பட்டம் அவருடன் சேர்ந்து கொண்டது.
பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது யாருடைய சிபாரிசில் எம்ஜிஆருக்கு கிடைத்தது. அப்படி சிபாரிசில் கிடைத்திருந்தால் அதுவும் ஊழல் ஆட்சியா? ஒரு படம் நடிப்பு,இசை,ஒளிப்பதிவு. இப்படி எல்லா அம்சங்களும் சிறந்து இருந்தால்தான் சிறந்த படமாக தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் அகில இந்தியாவிலும் சிறந்த படமாக மலைக்கள்ளனை தேர்ந்து எடுத்த மைய அரசு வெள்ளி பதக்கம் பரிசாக கொடுத்ததும் சிபாரிசின் அடிப்படையிலா?
இந்த கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். 1967 ல் காவல்காரனுக்கு கிடைத்த தமிழக அரசு விருது 1968 ல். குடியிருந்த கோயிலுக்கு கிடைத்த தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது
மக்கள் திலகத்தின் இயற்கையான
நடிப்புக்கு கிடைத்த விருது.
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் நமது மக்கள் திலகம்.
அதனால்தான் அவரை நடிகப்பேரரசர் என்று நாம் அழைத்து பெருமைபடுகிறோம்.
நேற்று சன் டிவியில் திரையிடப்பட்ட
"அன்பேவா" படம் பார்த்திருப்பீர்கள்.
அந்த J B பாத்திரத்துக்கு மக்கள் திலகத்தை விட பொருத்தமானவர் யார் இருக்கிறார்கள். சும்மா அநாயசமாக மிக இயல்பாக நடித்து அந்த பாத்திரத்துக்கே மெருகேற்றியிருப்பார்......... Thanks.........
-
தலைவரின் இரத்தத்தின்
இரத்தமான அன்பு
உடன்ப்பிறப்புகளுக்கு
வணக்கம் ....
கவிஞர் மருதகாசி அவர்கள்
பத்தாண்டு இடைவெளிக்கு
பிறகு தலைவருக்கு
எழுதிய பாடல்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
என்ற பாடல்....
குள்ளநரி கூட்டம்
வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை
தந்து மடக்கிடும்
என்ற பாடல் வரிகள்
ரஞ்சனுக்காக எழுதிய
காரணத்தினால்
தலைவரை கோபப்படுத்தியது.....
மருதகாசி பாடல்
எழுத வாய்ப்பு இல்லாமல்
போன காரணத்தினால்
வறுமையில் வாடினார்...
நினைத்ததை முடிப்பவன்
பட தயாரிப்பாளர்
அவர்கள்
தலைவரிடம் தெரியப்படுத்தாமல்
மருதகாசிக்கு வாய்ப்பு
தருகிறார்.....
மன்னரின் இசையில்
பாடல் பதிவு முடிந்து
தலைவருக்கு பாடலை
போட்டு காண்பிக்க
தயாரிப்பாளர்
மற்றும் மெல்லிசை மன்னரும்
தோட்டத்திற்கு செல்கின்றனர்
தலைவர் பாடலை கேட்டவுடன்
இந்த பாடலை
எழுதியது மருதகாசியா என்று
கேட்டு அசத்திவிட்டார்...
திகைத்துப்போன தயாரிப்பாளரும்
மெல்லிசை மன்னரும்
பாடல் பிடிக்கவில்லை என்றால்
மாற்றிவிடலாம் என்று கூற
தலைவர் பாடல்
படத்தில் இருந்து போகட்டும்
கூறி மருதகாசியை தன்னை
வந்து பார்க்குமாறு கூறினார்...
வித்வான் வே லட்சுமணனனோடு
தலைவரை பார்க்க வந்த
மருதகாசி ஒரு ஈர துணிப்பையை
தலைவருக்கு கொடுத்தார்
அதை வாங்கி பார்த்த
தலைவர்
பக்கத்தில் வைத்துக்கொண்டார்...
வெளியில் வந்த
வித்வான் வே லட்சுமணன்
என்னையா தலைவருக்கு
கொடுத்தாய் என்று
கேட்க
மருதகாசி அவல் பொட்டலத்தை
கொடுத்தேன் என்றார்....
மகாபாரதத்தில் குசேலன்
கண்ணனுக்கு அவல் கொடுத்து
அடுத்த கணமே
குபேரனானதை படித்துள்ளோம்..
ஆனால் நிச வாழ்க்கையில்
மருதகாசியின் அனைத்து
கடன்களையும் அடைத்து
அவரின் வாழ்க்கை தரத்தை
உயர்த்தியவர்
புரட்சித்தலைவர்....
இப்போது பாடலுக்கு
வருகிறேன்....
1973 இல் மிகப்பெரிய செட்
போட்டு எடுத்த பாடல்
கண்ணை நம்பாதே என்ற
பாடல்....
ரோமாபுரி அரசன் அரசி.....
கிரேக்க அரசன் அரசி.....
முகலாய அரசர் அரசி.....
சீன அரசர்...
இங்கிலாந்து அரசர் அரசி...
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்...
கடற்கொள்ளைக்காரன்...
அரபு நாட்டு சேக்...
ஜப்பானிய பெண்...
ஆப்கானியர்...
அலெக்ஸாண்டர்...
சாமியார்...
பிச்சைக்காரன்.....
மராத்தி
குஜராத்தி
ஆந்திரா
கர்நாடகா
கேரளா பெண்கள்....
பிலிப்பைன்ஸ் சிகரெட் விற்கும் பெண்கள்...
மேற்க்கத்திய தீவு பெண்கள்...
கோட் சூட் அணிந்த
இசைக்கலைஞர்கள்
என
பல தரப்பட்ட வேடங்களை
இப்பாடலில் சேர்த்திருப்பது
தனி சிறப்பு....
பாடல் முடியும் வரை
தலைவர் முழு செட்டையும்
தனது ஆடலில்
ஓடி ஆடி
அசத்தியிருப்பது
கூடுதல் சிறப்பு....
பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண் முன்னே
போகிறவர் போகட்டுமே
என்ற வரிகளில்
தலைவர் ஓடி வந்து
உட்காரும் சோபா
கறுப்பு சிவப்பு நிறத்தில்
இருக்கும்..
தலைவரின் அறிவு சார்ந்த
அரசியல் கூர்மை இது...
இறுதியில் நான் கூற வந்தது
மருதகாசி அவர்கள்
தலைவருக்கு தந்த
ஈர துணிப்பையை
தலைவர் மறக்காமல்
இப்பாடலில் தனது
இடுப்பில் கட்டி
ஆடியிருப்பது
தலைவரின் மாசு மருவற்ற மாண்பு அது..
கணனி மூலம் மெருகேற்றுப்பட்ட
பாடல்...
நன்றி...
பொன்மனம் பேரவை...
சென்னை........... Thanks.........
-
எழுகவே!!
----------------
முன்பே அறிவித்து விட்டேன்!
இன்றைய எம் எழுத்துப் போருக்கு-எமக்கு-
எம்.ஜி.ஆரே சாரதி!!
கொரானாவுடன் ஒரு குருஷேத்திரப் போர்!
குவலயம் முழுதும் ஒரே சமயத்தில்-
குறிப் பார்த்து நடத்தும் போர்!!
இங்கே நமது பெருமையைக் கொஞ்சம் பீற்றிக் கொள்ளலாமா?
உலகத்திலேயே வெறும் கவர்ச்சியாலோ,,டிஷ்யும் டிஷ்யும் சண்டையாலோ-ஓங்கி அழும் நடிப்பாலோ ஒருவருக்கு ரசிகர்கள் ஆகாதவர்கள்?
எம்.ஜி.ஆர் ரசிகர்களான நாம் தான்!!
எந்த அம்சத்தில் நாம் அவர் ரசிகர்களாகியிருந்தாலும்-
1977க்குப் பிறகோ அல்லது-
1987க்குப் பிறகோ நம் சிந்தையை வேறு திசை நோக்கிச் செலுத்தியிருப்போம்!!
கொள்கை சார்ந்த மாண்புகள் சார்ந்த மனிதம் சார்ந்த அவரது மகத்துவம் நமக்கு ஆனது மருத்துவம்!!
எம்.ஜி.ஆர் மூன்று முறை காலனை ஜெயித்தார்!!
ஒரு தடவை புதிய எம்.ஜி.ஆராக ஜனித்தார்?
அவரது பெருமையைப் பறை சாற்ற மட்டும் இல்லை அந்த நிகழ்வுகள்?
நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ளவும் தான்??
1958இல் கால் முறிவு!
நாம் சமூகப் படம் கொடுத்த தோல்வியில் நாம் மீண்டும் ஜெயிப்போமா என்ற எண்ணச் சிதறலில் இருந்தவரது காலில் அடி?
எம்.ஜி.ஆருக்கு சரித்திரப் படங்கள் மட்டுமே சாத்தியமா? சமூகப் படங்களையும் சந்திப்பாரா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கும்போதே-
அவரது தனித்தன்மையாம்--சண்டை காட்சிகட்கும்,,
ஓடிப் பாடும் காதல் காட்சிகளுக்கும் உலை வைக்கிறது இந்த விபத்து?
ஓய்ந்தாரா இல்லை சாய்ந்தாரா?
வருடாதே துன்பமே என் சிந்தையை என-
திருடாதே படத்தின் வெற்றி மூலம் தீர்ப்பு சொன்னார்?
1967!
தொண்டையின் அண்டையில் ஒரு குண்டு?
தன் பிழைப்பு மட்டுமன்றி ஒரு கட்சியின் எதிர்காலத்தையே தம்முள் அவர் தேக்கிக் கொண்டிருந்த நிலை?
இத்தோடு தீர்ந்தான் ராமச்சந்திரன்?--இனி-
பத்தோடு ஒன்றாகும் அவன் கட்சி??
எதிரிகளின் ஏகடியம் இது என்றால்--
கணீர் குரல் போவது ஒரு புறமிருக்க--
இனி குரலே வருமா? என்ற நிலையல்லவா அன்று எம்.ஜி.ஆருக்கு??
கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் போதுமே அவர்?
வஞ்சம் கொண்டோரைத் தஞ்சம் கொண்டிருக்காதா வெற்றி??
நான் குணம் பெறுவேன் என்று--
சொல்லி எழுந்தார்1 முன்னைக் காட்டிலும் வேகமாய்-
துள்ளி எழுந்தார்!!
1972!
சினிமாவில் புதிதாக இளைய நடிகர்களின் இறக்குமதி. சிறக்கு மதி சிவாஜியின் போட்டி ஒரு புறம்--இடையில்-
கிறுக்கு மதி கருணாவால் தூக்கி வீசப்படுகிறார்?
நடித்தது போதும் நாடாள வா என்று காலம் தம்மை அழைப்பதை சூட்சுமமாக அவர் ஒருவரால் தானே அனுமானிக்க முடிந்தது??
1984!
அரசியல் உலகமே அன்று-
எம்./ஜி.ஆரை வைத்துத் தானே சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தது?
மாயம் என்ன செய்தாரோ,,இவர் கட்சிக்குத் தானே-
தாயம் விழுந்து கொண்டிருந்தது?
காயம் பட வைத்த காலனின்
சாயம் தானே வெளுத்தது?
ஆக--அவர் சந்தித்த விபத்துக்கள் எல்லாமே மிகக் கடுமையானவை மட்டுமல்ல--மிக இக்கட்டான சந்த்ர்ப்பங்களில் என்பது நமக்கு விளங்குகிறதல்லவா?
எம்.ஜி.ஆரின் இறவாப் புகழுக்கு இலக்கணமான அவரது அத்தனை சிறப்புக்களையும் விட-
மனோதைரியம் என்ற அவரது மா பெரும் தனித்தன்மை தானே இந்த ரயிலை தண்டவாளத்தில் இருந்து தடம் புரளாமல் காத்தது?
நாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!
அவரது அடிச்சுவடை நமது அரிச்சுவடியாய் ஆக்கிக் கொள்ள என்ன தடை?
கொரானா--
வரவழைத்துக் கொண்டது நாம் தானே-அதை
வரவேற்று சமர் புரிந்து வெற்றி காண்பதைத் தானே சரித்திரம் விரும்புகிறது?
மரணம் எப்போது வரும்?--தெரியாது!
மரணத்துக்குப் பின் என்ன??--தெரியாது!
இடைப்பட்ட காலத்தில் ஏன் இந்த அவஸ்தை?
மரணத்தை எண்ணி மருகுவதை விட-
மரணத்தை மறுதலிக்க வேண்டிய மார்க்கத்தை சிந்திப்போமே??
விண் இரக்கம் கொண்டாலும்--
மண் இரக்கம் கொண்டாலும்-
மனித குலம் செழிக்கும்!--எப்போது தெரியுமா?
தன்னிரக்கம் என்னும் தற்கொலையை நம் உள்ளம் நாடாதிருந்தால்!!
உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு--இங்கு-
உன்னைவிட்டால் பூமி ஏது கவலை விடு
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து-அதில் நீதி உன்னைத் தேடிவரும் மாலைத் தொடுத்து!!!....... Thanks...
-
யார் தலைவன்?
----------------------------
ரஸமான பதிவு மட்டுமல்ல! மனதின்-
வசமான பதிவும் கூட!
சமர்க் களம் கண்டு எதிரியை வீழ்த்தி-மக்களிடம்-
அமர்க் களம் என்று பாராட்டு வாங்கித் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
கண்ணியத்தின் அடி தொட்டு-
விண்ணியத்தின் முடி தொடுதல் ஒரு வகை!!
மெய் வாய் அதன் மூலம், நல்லனவற்றை பரப்பி-
வாய் மை காத்தலின் மூலம் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
சொல்வாக்கு ஒன்றினாலேயே பல்லாக்கு ஏறியவன்-
மல்லாக்க விழுந்து மண் தொடலாம்!
செல்வாக்கு சீரிய முறையில் பெற்றவனோ-தம்-
உள்வாக்கு ஒன்றினாலேயே தலைவன் ஆவது ஒரு வகை!!
எம்.ஜி.ஆர் இதில் எதில் சேர்த்தி?
பதிவுக்குள் புகுவோமா??
பிச்சாண்டி ஐ.ஏ.எஸ்!!
எம்.ஜி.ஆரின் உள்ளம் தொட்ட அதிகாரிகளில்; ஒருவர்!
இவர்,,தம் வீட்டை விட ராமாவரம் தோட்டத்திலேயே அதிக நேரம் உலா வந்தவர்!
அது,,கொடைக்கானல் மலைப் பகுதிக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் முறையான அரசு வருகை!!
முதல்வருடன் வழக்கம் போல் பிச்சாண்டி!!
இருவரையும் பார்த்த மலைவாழ் மக்கள்-
அரவம் கண்டது போல் அலறி ஓடுகிறார்கள்??
காவலர்களை அனுப்பி விஷயத்தை அறிகிறார் முதல்வர்!!
மலைவாழ் மக்கள்,,அங்கே சாலையில் விழும் சுள்ளிகளை மூட்டைக் கட்டி விற்பார்களாம்! வனத் துறையினர் அவர்களைத் தடை செய்வார்களாம்!
கேட்ட மாத்திரத்தில் அங்கேயேஅரசாணை பிறப்பிக்கிறார் எம்.ஜி.ஆர்--
இனி இந்த மக்களை வனத் துறையினர் தொல்லை செய்யக் கூடாது! அவர்கள் சுதந்திரமாக சுள்ளிகளைப் பொறுக்கிக் கொள்ளலாம்!!
கூடவே,,அவர்களது வேறு சில குறைபாடுகளையும் குறிப்பெடுத்துக் கொள்ள சொல்கிறார் பிச்சாண்டியிடம்!
அந்த நேரம் பார்த்து அணி திரண்ட மேகங்களின் அவசர கதி மழை!!
அடை மழைக்கு அறிகுறியெனக் கண்டு-அந்த மக்கள் குடை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்!
குளத்தில்--
சேறு தழுவிய நீர் செந்தாமரையை சீண்டும்!
இங்கோ--
செந்தாமரையை சிலுப்பிய மழை நீர்,,கீழே சேறைத் தொடுகிறது??
நனையும் எம்.ஜி.ஆரிடமிருந்து நிலமகள் நீர் வாங்குகிறாள்!
அப்போது எம்.ஜி.ஆர் செய்த அந்தக் காரியம்??
ஆம்! கொடுக்கப்பட்ட குடை,,
பிச்சாண்டி தலைக்கு விரித்தபடி!!
எம்.ஜி.ஆர் அதைப் பிடித்தபடி!!
பதறி நிமிர்கிறார் பிச்சாண்டி!
ஒரு முதலமைச்சர் இப்படி எல்லோர் முன்னாலும் தமக்கு ஊழியம் செய்வதா?
பரிவுடன் அவரை தேற்றுகிறார் எம்.ஜி.ஆர்--
நான் சும்மா தானே நிக்கறேன். நீங்களோ அவுங்க குறைகளை எழுதிக்கிட்டிருக்கீங்க! நீங்க நனைஞ்சா,,உங்களால கவனமா எழுத முடியாது. அப்படி எழுதினாலும் இந்தப் பேப்பர் நனைஞ்சா என்னாகறது???
வணக்கம் வைத்தால் வாங்கிக் கொள்வது மட்டும் தலைவன் வேலையல்ல!
இணக்கம் கொண்டோருக்கு ஒரு இடையூறு எனில்-சுணக்கம் காட்டுவதும் அவன் வேலையே என்பதை-மணக்கும் இந்த மனித நேயத்தினால் காட்டுவதாலோ-கனக்கும் புகழ் மாலைகள் தினக்கும் அவன் தோள்களைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன இன்று வரை???......... Thanks..........
-
இது எம்.ஜி.ஆர் வழி!!
---------------------------------
அமானுஷ்ய செயல்களின் ஆன்மிக அதிர்வுகளை அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும். உணர இயலும்!! அதை,,இன்றையப் பதிவின் நிகழ்வு உறுதி செய்கிறது!
திண்டுக்கல் மலரவன்,,தழுதழுக்கும் குரலில் நம்மிடம் சொன்ன நிகழ்வு இதோ,,உங்களுக்காக!
பிப்ரவரி 9ஆம் தேதி திண்டுக்கல்லில் மலரவன் குழுவினர் நடத்தவிருக்கும் (நடந்தேறிய பின்பு பதிந்தது) எம்.ஜி.ஆர்103 நிகழ்ச்சியைப் பற்றி ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்!
அந்த விழாவின் முக்கியஸ்தர்கள்--
வி.வி.ஐ.பி--எம்.ஜி.ஆர்!
வி.ஐ.பி--கலந்து கொள்ளும் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களும்!!
விழாவுக்கான ஏற்பாடுகள் வினயமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,,அன்பர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்டு கொண்டிருக்கும் தருணத்தில்--
சேலத்தில் ஒருவருக்கு அழைப்பு அனுப்பப் படுகிறது!
அழைப்பிதழைக் கண்ணுற்ற அந்த அன்பர் முகம் சுளிக்கிறார்??
எம்.ஜி.ஆர் நிகழ்ச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
எனக்கு எதற்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்காங்க?
வாய் விட்டே சலித்துக் கொள்கிறார்?
உண்மையில்,,முக நூல் மூலம் பெறப்பட்ட முகவரியில் அவர் முகவரிக்கு தவறாக அந்த அழைப்பிதழ் அனுப்பப் பட்டு இருக்கிறது!
சார் உங்களுக்கு வேணாம்ன்னா நான் எடுத்துக்கட்டுமா??
அந்த நபரிடம் இப்படிக் கேட்டது--
அதை அவரிடம் சேர்ப்பித்த தபால் ஊழியரே தான்??
தபால் ஊழியரின் ஆவலுக்கு முன்னே அந்த நபரின் சலிப்பு அடிபட்டுப் போக--
அந்த ஊழியர் வசமே அந்த அழைப்பிதழைக் கொடுக்கிறார் அந்த நபர்!!
மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பிதழை வாங்கிக் கொண்ட அந்தத் தபால் துறை ஊழியர்--கண்ணன்,, மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகராம்!!
அடுத்தது,,அந்தக் கண்ணன் செய்த காரியம் தான் ஹை லைட்??
அழைப்பிதழில் உள்ள மலரவனிடம் ஃபோனில் தொடர்பு கொண்டவர்--
அடக்கத்துடன் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு,,விபரங்கள் கூற--
உண்மையான ஒரு எம்.ஜி.ஆர் ரசிகரிடம் அந்த அழைப்பிதழ் சென்றிருப்பதை அறிந்த மலரவன் அகம் பூரிக்க--
மலரவனை மேலும் திகைக்க வைக்கிறார் கண்ணன்?
என்னோட சக்திக்கு இப்போ 500 ரூபாய் உங்களுக்கு மணியார்டர் செஞ்சுருக்கேன்
நிகழ்ச்சிக்கு வரும்போது இன்னமும் என்னால் முடிந்ததைத் தர்றேன்???
ஒரு அக்மார்க் ரசிகரை நமக்கு அடையாளம்` காட்டியதோடு,,`
அழைப்பிதழை அவர் பெற்றுக் கொண்ட முறையில் இருந்த நேர்மை--
அழைப்பிதழை கண்ணுற்ற மாத்திரத்தில் அவர் காட்டிய கொடைத் தன்மை--`
ஆனந்தக் கண்ணீரை அருவியென கொடுக்கிறது மலரவனுக்கு!!
என் பாலிஸி இது தான்!
உழைத்துப் பிழைக்கும் சராசரி மனிதர்கள் தான் எனக்கு எப்போதுமே வி.ஐ.பிக்கள்! அதனால் அப்படிப்பட்ட ஒருவரையே உனக்கும் கொடுத்திருக்கேன் என்று எம்.ஜி.ஆரே,,மலரவனுக்கு உரைப்பது போல் இருக்கிறது எனக்கு!
உங்களுக்கு???....... Thanks...
-
இது எப்படி இருக்கு??
-------------------------------
இன்றையப் பதிவு கொஞ்சம் அபூர்வமானது!
அனேகமாக பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க நியாயமில்லை!!
எம்.ஜி.ஆர் விசுவாசிகள் வெறும் புன்னகையோடும்-ஜெ அபிமானிகள் வாய்க் கொள்ளா சிரிப்போடும் நிச்சயம் இந்தப் பதிவை எதிர்க் கொள்வார்கள்??
ஆம்! இது செல்வி ஜெ பற்றியதே!!
புத்தகப் புழு என்று சொல்லப்படும்--
அண்ணா--நேரு--வரிசையில் இவர் இளைய சகோதரி!!
அடுத்தவர் தாள் தொடாமல் இருந்திருக்கலாம். ஆனால் தாள் தொடாமல் இருந்ததில்லை!!
மொத்த -கமும் இவர் விரும்பித் திணிப்பது-
புத்தகம் ஒன்றில் தான்!!
இவர் கட்டும் சேலையும்--
கையில் இருப்பதும்--நூல் தான்!!!
சரி! சிறிய நிகழ்வு ஒன்றைப் பார்ப்போம்!!
ராஜா கண்ணப்பன் என்றொருவர்.
சிவகங்கை அ.தி.மு.க செயலாளராக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தவர். ஜெ காலத்தில் யூனியன் மினிஸ்டராக நெடுஞ்சாலைத் துறையை கவனித்தவர்.
இவர் இன்று எந்தக்கட்சியில் இருக்கிறார் என்று எமக்குத் தெரியாது. ஆகையினால் இவரது ரிஷி மூலம் குறித்த வாள் சண்டை தேவையில்லை?
நமக்குத் தேவை நிகழ்வு மட்டுமே!!
அவ்ர் ஒரு மானிய கோரிக்கையில் கண்ணப்பன் பெயரைக் குறிப்பிடும்போது--கலைஞர் குறுக்கிட்டு,,-
அம்மையார் வாய் தவறி என்னப்பன் என்று குறிப்பிடுகிறார் என்று அருகில் ஆற்காடு வீராசாமியிடம் விஷமம் தொனிக்கக் குறிப்[பிட--
சரேலென்று பதில் சொல்கிறார் ஜெ---
வயது காரணமாக நான் கண்ணப்பன் என்று குறிப்[பிட்டது உங்கள் காதில் என்னப்பன் என்று விழுந்திருக்கலாம்!
தஞ்சை மண்ணில் இருந்த உங்களுக்கு என்னப்பன் அருள் தான்--[சிவன்]--கிடைக்க்வில்லை அவர் பெயரையாவது சொல்வோமே என்ற் உங்கள் எண்ணத்தைப் பாராட்டலாம் என்று பதில் கூற--அருகில் இருந்த வீராசாமி--
கலைஞர் ஆட்சியிலே திருவாரூர் தேர் ஓடியதை சுட்டிக் காட்ட--
இருக்கும் இடத்தில் இருந்தால் இவர்கள் ஆட்சியில் நம்மைக் கூட இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் என்று அந்த தேருக்கே பயம்?? என்று அம்மையார் கொடுத்த மின்னல் வேக பதிலடி???
ஸ்ரீ முருகன் படத்தில் ருத்ர நடனம் ஆடியதன் மூலம் ஹீரோவாக ஆன எம்.ஜி.ஆரின் அரசியல் மாணவி அல்லவா???....... Thanks...
-
#நெஞ்சம்மறப்பதில்லை
எம்ஜிஆர்... என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்! - ஏவிஎம் சரவணன்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ஏவிஎம் நிறுவன அதிபர் ஏவி மெய்யப்பன். அதிலும் ஏவிஎம்மின் புதல்வர்களான எம் முருகன், எம் குமரன், எம் சரவணன், எம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அவரது ரசிகர்கள். எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள். எம்.ஜி.ஆர். அவர்களின் படம் ரிலீஸ் ஆகும் அன்றைக்கு முதல்நாள் முதல் காட்சிக்கே போய் படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள்.
அப்போதெல்லாம் எம்ஜிஆர் படங்கள் முதலில் தாம்பரத்தில் ரிலீசாகி, பிறகுதான் சென்னை நகரில் ரிலீசாகும். "இங்கே சிட்டியில் ரிலீசாகமாலா போகும்? அப்பபோய் பாருங்களேன்,' என்பார் ஏவிஎம் மெய்யப்பன். ஆனால், "முதல் நாளே அவர் படம் பார்த்தால்தான் எங்களுக்கு திருப்தியா இருக்கும்.
MGR and AVM
அதனால்தான் எம்.ஜி.ஆர் தயாரித்து, தானே இயக்கி நாயகனாக நடித்த 'நாடோடி மன்னன்' படம் வெளியானதும் நானும் என் சகோதரர்களும் (முருகன் & குமரன்) தாம்பரம் ஜி.ஆர்.தியேட்டரில் (இப்போது எம்.ஆர். தியேட்டர் என்ற பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) முதல் நாளே படத்தைப் பார்த்தோம். அந்த த்ரில் இன்றும் எங்கள் நினைவிலிருக்கிறது," என்றுஎம்.ஜி.ஆர் பற்றியான பசுமையான நினைவுகளைக் கூறுகிறார் ஏவிஎம் சரவணன்.
"அவர் கத்தி சண்டை போடும் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். 'சண்டை போடும்போது ஒரு பறவையை பிடிப்பது போல் லாவகமாக கத்தியைப் பிடிக்க வேண்டும் என்பார்கள். ரொம்ப அழுத்தினால் பறவை காலி. ரொம்பவும் லேசாகப் பிடித்தால் தப்பிப் போய்விடும்.
அதுபோலத்தான் கத்தியும். ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தந்து பிடித்தால்தான் அதை அழகாகச் சுழற்றி சண்டை போட முடியும்,' என்பார் எம்.ஜி.ஆர்.
MGR and AVM
இப்படி சிறிய வயதிலிருந்தே எம்.ஜி.ஆரைஎனக்கு மிகவும் பிடித்துப் போனதாலோ என்னவோ எங்கள் ஏவிஎம் பேனரில் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் ஒன்று தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் வளர்ந்து கொண்டே வந்தது.
எனது நண்பர் நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களும் அடிக்கடி என்னைச் சந்திக்கும்போதெல்லாம் 'எம்.ஜி.ஆரை வைத்து நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்திக் கொண்டே இருப்பார். எங்கள் விநியோகஸ்தர்களும் இதே கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கத் தயாரானோம். டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தரிடம் எம்.ஜி.ஆருக்கான ஒரு கதையை தயார் செய்யச் சொன்னோம். இதைஎங்கள் தந்தையிடம் சொல்வற்கு போனோம். எங்களுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஏனென்றால் எங்களது நிறுவனத்தில் கதைக்குதான் ஹீரோவைத் தேடுவோம்.
ஹீரோவுக்காக கதை கிடையாது. முதலில் நல்லகதையை முடிவு செய்தபிறகுதான் ஹீரோ பற்றியே பேசுவோம். அதனால் தான் முதலில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரை எம்.ஜி.ஆருக்கு ஒரு கதையை தயார் செய்ய சொன்னோம். எங்களது தந்தையும் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அடுத்து எம்.ஜி.ஆர்.ஒப்புக்கொள்ள வேண்டுமே.
நாங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு விரைந்தோம். அவருக்குள்ளும் எங்கள் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. கேட்டதும் 'ஓ.எஸ்....
பண்ணிடுவோம்' என்றுமகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.
ஏ.சி.திருலோகசந்தர் கதை சொன்னார். அப்போது பிரபலமாக ஓடிய 'கம்செப்டம்பர்' என்ற ஆங்கிலப் படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை அது.
கதையைச் சொன்னார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது.1965ஆம் ஆண்டு ஜனவரியில் 'எங்க வீட்டு பிள்ளை' ரிலீசாகியது.1966 ஜனவரி பொங்களுக்கு நாங்கள் 'அன்பே வா' என்ற பெயர் சூட்டியிருக்கும் இந்தப் படத்தை வெளியிட ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரைக் கேட்டோம்.
அவர், "அது முடியாது வீரப்பாவுக்கு (ஆம்.எம்.வீரப்பன்) 'நான் ஆணையிட்டால்' படத்தை வெளியிட ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு உங்கள் படம் ரிலீசாகட்டும்.
எதற்கும் வீரப்பாவிடம் பேசிவிட்டு பதில் சொல்கிறேன்," என்றார்.
'அன்பே வா' படத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். ஒப்புக் கொண்டோம். ஆனால் ஜனவரி பொங்கலுக்கு (1966) 'அன்பேவா' ரிலீசாக 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கேட்டார். இந்தப் படத்திற்காக அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது மூன்றே கால் லட்சம் ரூபாய்.
'அன்பே வா' படத்தை நாங்கள் சொன்னப்படி 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலன்று ரிலீஸ் செய்தோம்.
'அன்பே வா' படத்தின் முக்கிய காட்சிகள் சிம்லாவில் படமாக்கப்பட்டன. சிம்லாவில் பயங்கர குளிர். அங்கே போர்முனையில் காயம் அடைந்த இந்திய படையினருக்கான நிதி திரட்டும் நிகழச்சி அங்கே நடந்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் படப்பிடிப்பு முடிந்த மாலை நேரத்தில் போய் கலந்துக் கொண்டார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ அதற்கு சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட அன்பளிப்பாக இந்த நிதிக்கு வழங்குகிறேன் என்ற ஒரு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்காமல் வெளியிட, அனைவரின் கைதட்டல்களை பெற்றார் எம்.ஜி.ஆர்.
அந்தத் தொகை எவ்வளவு என்று தெரிந்ததும் தன் சம்பளத்தில் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு எங்களிடமிருந்து அந்தப் பணத்தை வாங்கி நிதிக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். அதற்காகத்தான் கூடுதலாக பணம் கேட்டிருந்தார் எம்ஜிஆர்.
அவ்வளவுதான்... ஒரே இரவில் சிம்லா மக்களின் ஹீரோவாகிப் போனார் எம்.ஜி.ஆர். சிம்லாவில் சோலன் என்ற ஒரு இடம். அங்கே எல்லா வண்டிகளும் நிற்கும். எங்கள் வண்டியும் நின்றது. அங்கிருந்து சற்று மேடான பகுதியில் நல்ல ஹோட்டல் இருந்தது. சுமார் ஐம்பது, அறுபது படிகள் மேலே ஏறிப்போக வேண்டும். எம்.ஜி.ஆர்.உட்பட அனைவரும் மேலே ஏறிப் போனார்கள். நான் மட்டும் கீழே காரிலேயே இருந்து விட்டேன். கடுமையான குளிர் காரணமாக கோட்டைக் கழற்றி போர்த்திக் கொண்டேன். எனக்கு தொண்டை கட்டிக் கொண்டு பயங்கரமான வலி. காரின் கதவை ஏற்றிவிட்டுக் கொண்டு படுத்துவிட்டேன்.
களைப்பு மிகுதியில் சிறிது நேரத்தல் தூங்கிவிட்டேன். யாரோ காரின் கதவைத் தட்டுவது போலிருந்தது திடுக்கிட்டு எழுந்து திறந்து பார்த்தேன். எம்.ஜி.ஆர் நின்றிருந்தார். கையில் சூடான பால் கோப்பையை ஒரு மஃப்ளரால் சுற்றி வைத்துக் கொண்டிருந்தார். எனக்கு திக்கென்றது. என்ன இது எம்.ஜி.ஆரே, பால் கொண்டு வந்திருக்காரே என்று சங்கடமாகிவிட்டது.
"இந்தாங்க சரவணன்... சூடா பால் குடிங்க தொண்டைவலிக்கு இதமாக இருக்கும்," என்றார்.
பதற்றத்துடன், "என்ன சார் நீங்களே கொண்டு வந்திருக்கீங்க' என்றேன். 'என் உதவியாளர் மலையப்பனிடமோ, எஸ்.பி.முத்துராமன், திருலோகசந்தரிடமோ கொடுத்தனுப்பியிருக்கலாமே சார்' என்றேன். அவர்கிட்ட கொடுத்தனுப்பியிருந்தா 'நீங்க குடிச்சிருக்க மாட்டீங்க. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வேண்டாம்னு சொல்லியிருப்பீங்க. இந்தப்பாலை இப்பநீங்க குடிக்கிறீங்க காலிகப்பை எடுத்துக் கொண்டுதான் நான் போவேன்," என்று அடம்பிடித்தார். அதேபோல் செய்தார்.
என் மேல் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட பாசத்தை உணர்ந்த நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.
தமிழ்த் திரையுலகம் எம்.ஜி.ஆர் என்ற பெயரை எப்படி எந்த நாளும் மறக்க முடியாதோ அப்படியே என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் என்னால் அவரை மறக்க முடியாது. என்னிடம் தனிப்பாசம் கொண்டிருந்தவர் அவர். 1985ஆம் ஆண்டு எனக்கு சென்னை மாநகர ஷெரீப் பதவியைத் தந்து கௌரவித்தார். நான் சற்றும் எதிர்பார்க்காத வாய்ப்பாக அது அமைந்தது.
'சம்சாரம் அது மின்சாரம்' வெற்றி விழாவுக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சிறப்புவிருந்தினராக அழைத்திருந்தேன். வருகிறேன் என்று ஒப்புதல் தந்தார்.
கலைஞர்கள் ஒவ்வொருக்கும் அவர் கையால் கேடயம் தரவேண்டும் என்று நான் கேட்டேன். அதற்கும் சரி என்றார்.
இதற்கிடையில் பிற்பகலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டு பரபரப்பானது. முதல்வருக்கு அதை உடனடியாகக் கவனித்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டிய கட்டாயம்.
இதுவிஷயமாக என் மதிப்பிற்குரிய பெரியவர் நாகி ரெட்டியார் என்னை அழைத்து நிலைமையைப் பார்த்தால் எம்.ஜி.ஆர் அநேகமாக இன்று நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது என்றார்.
எனக்கு அப்போதும் நம்பிக்கை தளரவில்லை. இல்லை சார் நிச்சயம் வருவார் பாருங்கள் டெக்னிஷீயன்ஸ் லிஸ்ட் கூட கேட்டார். அனுப்பியிருக்கிறேன் என்றேன்.
அனைவரும் வியக்க சரியான நேரத்தில் எம்.ஜி.ஆர் வந்திறங்கினார். ஒவ்வொரு கேடயமும் கிட்டதட்ட எட்டரை கிலோ அளவில் இருந்தன. அத்தனைக் கேடயங்களையும் அவர் ஒருவரே எல்லோருக்கும் வழங்கினார். ஒரு கேடயத்தின் அடிப்பாகத்தில் இருந்த கூரானபகுதி அவர் கையைக் கிழித்து ரத்தகூடவந்தது.
நான் 'போதும் சார்' என்று அதிர்ச்சியோடு சொன்னதும் மற்ற டெக்னிஷியன்களுக்கும் ஆசை இருக்காதா என்னிடமிருந்து கேடயம் பெற வேண்டும் என்று சொல்லி அத்தனை பேருக்கும் கேடயம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கே.பாக்யராஜ் இயக்கத்தில் நாங்கள் தயாரித்த 'முந்தானை முடிச்சு' படத்தின் வெள்ளி விழாவிலும் கலந்துக் கொணடு கேடயங்களை வழங்கினார்.
எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் டைக்ரடர் பாரதிராஜா 'புதுமைப் பெண்' என்றபடத்தை இயக்கினார். அந்தப் படம் நல்ல கதையமைப்புக் கொண்டப்படமாக
இருந்தாலும் பெரிய வெற்றியை எட்டமுடியாத நிலை. அதனால் முதல்வர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசினோம். 'புதுமைப் பெண்'
படத்திற்கு வரிவிலக்கு அளித்தார். படம் பார்க்க மக்கள்கூட்டம் தியேட்டருக்கு வந்தது. 'புதுமைப் பெண்' எம்.ஜி.ஆர் செய்த உதவியால் பெரிய வெற்றிப் படமானது.
எங்கள் நிறுவனத்துக்கு 'அன்பே வா' என்ற ஒரே ஒரு படம்தான் எம்.ஜி.ஆர் செய்து கொடுத்தார். என்றாலும் என் தந்தையார் காலத்திலிருந்து ஏவிஎம் நிறுவனம் மீது அவர் கொண்டிருந்த அபிமானமும் என் தந்தையார் மீதும் அவரைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்தின் மீதும் அவர் காட்டி வந்த உண்மையான பாசமும்,
அன்பும் எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாதவை. எம்.ஜி.ஆர் என்றும் எனக்குள் இருப்பார்," என்றார் நெகிழ்ச்சியுடன்....... Thanks...
-
அருமையான பதிவு இதில் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் எம்ஜியார் எப்போதும் பெரிய நிறுவனங்களுக்கு அதிகமாக படம் நடித்து கொடுத்தது இல்லை ஏனெனில் சிறு தயாரிப்பாளர்களை மேல் ஏத்தி விடவேண்டும் என்பதே அவருடைய நோக்கம் அதேபோல் இப்போது நடிகர் அஜித் குமார் அவர்களும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொடுப்பது இல்லை கஷ்டப்படும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே படம் நடிக்கிறார் எப்போதும் இல்லாதவரை வாழ வைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது அன்று எம்ஜிஆர் இன்று அஜித். வாழ்க........ Thanks...
-
ஒரே படம் AVM ல் நடித்திருந்தாலும் இன்றைக்கும் பெயர் சொல்லும்படி அமைந்து விட்டது.அது மட்டுமா, கிராமங்களில் AVMபடம் என்று விளம்பரம் வந்தாலே, எம்.ஜி.ஆர்., நடித்த "அன்பே வா "எடுத்தவர்கள் படமா? எனமக்கள் பேசிக்கொண்டு AVM படம் அனைத்தையும் வெற்றி படமாக்கினார்கள்......... Thanks...
-
"மிகச்சரியாக 55-ஆண்டுகளுக்கு முன்பு....
அன்று தீபாவளி பண்டிகை. 23-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1965-ஆண்டு.
கொழும்பு, 'இரத்மலானை' விமான நிலையம் விழா கோலம் பூண்டிருந்தது.
கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம்.
இந்திய வம்சாவளி-மலையகத் தமிழர்கள் ஏராளமான பேர் அங்கு குழுமியிருந்தனர்.
எல்லோர் பார்வையும் விமான ஓடு பாதையை நோக்கியே இருந்தது.
சிறிது நேரத்தில்.. வின்னில் மிதக்கும் 'சந்திரனை'-யே அழைத்து வருவது போல் ஒரு அலுமினிய பறவை மெதுவாக தரையிறங்க....
மக்களிடம் ஆர்வம், பரபரப்பும் தொற்றிக்கொள்ள... அத்தனை கண்களும் விமானத்தின் கதவுகளையே உற்று நோக்க...
திடீரென மின்னல் கீற்று போல அந்த #சந்திரன் ஆம் நம் #இராமசந்திரன் விடுவிடுவென வேகமாக விமானத்திலிருந்து இறங்கி வருகிறார்.
பின்னாலே அவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரோஜாதேவி...
அவர் பயணம் மேற்கொண்ட 'கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி' மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது...
அவ்வழியே பாராளுமன்றம் சென்று கொண்டிருந்த அன்றைய இலங்கை பிரதமர் 'டட்லி சேனநாயகா' வாகனமும் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டது.
எம்ஜியாரின் இலங்கை வருகைக்கு முக்கிய காரணம்..
இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ் வார இதழ் சார்பில்
'மலை நாட்டு லட்சுமி' எனும் அழகு ராணிப்போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள தென்னிந்திய பிரபல நடிகரான எம்.ஜி.ஆர். சரோஜாதேவியையும் அழைத்திருந்தனர்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும்..
அவரின் ஆழ் மனதில்... தன்னுடைய பழைய நினைவுகள் மேலோங்க, தான் பிறந்த மண்ணையும், அந்த மக்களையும் காண வேண்டும் என்ற ஆவல் கூட இருந்திருக்கலாம்.
விழா நடந்த 'நுவரெலியா'-விற்கும் எம்ஜியார் பிறந்த இடமான 'கண்டி-நாவலபிடியா' வுக்குமான தொலைவு வெறும் 66-கி.மீ. தான்.
அவர் பிறந்த மண்ணிலிருந்து, மக்கள்திலகத்தை காண, தன் மண்ணின் மைந்தனை காண, மாட்டு வண்டிகளில் ஏராளமானோர் வந்து குவிந்திருந்தனர்.
விழா நடக்கும் குதிரை பந்தய திறந்த வெளி திடல் முழுவதும் மனித தலைகள்.
அந்நிலப்பரப்பில் அப்படியொரு கூட்டத்தை, இலங்கையில் இதுவரை யாருமே பார்த்ததில்லை, கண்டதில்லை.
விழா அன்று மாலை 'திவொளி' திரையரங்கில் #எம்ஜிஆர், சரோஜாதேவி இருவரும், மக்களோடு மக்களாக அமர்ந்து #எங்கள்_வீட்டுப்பிள்ளை படம் பார்த்ததை அம்மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
விழாவில் 'மலை நாட்டு இலட்சுமி' பட்டத்தை வென்ற செல்வி.இராசம்மாவுக்கு ரூ.5,000 பரிசும், கிரிகிடமும், விருதும் வழங்கப்பட்டது.
அத்தோடு எம்.ஜி.ஆரின் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமும் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. இராசம்மா நடித்தாரா? என்பது தெரியவில்லை.
அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பைனாகுலர் மூலமாக பார்த்த #மக்கள்_திலகம்....
தொலைவில் கால் ஊனமுற்ற ஒரு ரசிகர் தம்மை பார்த்து கையாட்டியதை கண்டு... உடனே அவரை மேடைக்கு அழைத்து வர சொன்னார்.
மேடையில் ஏற்றப்பட்ட அந்த இளைஞர் திடீரென #எம்ஜிஆர் காலில் விழுந்து
"ஹனே மகே தெய்யோ" (என் மகா தெய்வமே) என்று கூற..
அதன் பின்புதான் தெரிந்தது அவர் #சிங்களவர் என்று...
பின்னர் அவர் தோளில் கைபோட்டு படம் எடுத்ததோடு மட்டுமல்லால் பணமுடிப்பும் கொடுத்தனுப்பினார்.
"பின்னாளில் அந்த முடமான அந்த சிங்கள சகோதரரை ஒரு முறை 'வட்டகொடை' வந்த போது அடையாளம் கண்டுகொண்ட நானும் எனது நண்பர்களும் உபசரித்தோம்.
மக்கள் திலகத்திடம் பெற்றதாக கருப்பு நிற துண்டு ஒன்றையும் காட்டினார்"
- என்கின்றனர் அன்று நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட, இலங்கை மலையகத்திலிருந்து #SuppaiahRajasegaran கனடாவிலிருந்து #ShanChandrasekar சென்னையிலிருந்து #SukumarShan ஆகியோர்...
இன்றும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரேனும் ஒருவர் அவரின் நினைவுகளை அசை போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
மக்களின் திலகமாக
#நேற்று மட்டுமல்ல..
#இன்று-ம்... ஏன்
#நாளை-யும்...
அவர் மக்கள் மத்தியில் திலகமாகவே
#வாழ்ந்தார்...
#வாழ்கிறார்....
#வாழ்வார்....
*முதல் படம் கொழும்பு 'இரத்மலானை' விமான நிலையத்திலிருந்த வெளியே வரும் எம்ஜிஆர்-சரோஜாதேவி
*இரண்டவது படம் 'நுவரெலியா' விழாவில் எடுத்தது........ Thanks...
-
சன் டிவி பார்க்க கூடாது என நினைச்சாலும் பார்க்க வச்சுறுதானுங்க. ........
நேற்று இரவு 9.30 க்கு தலைவர் நடித்த "அன்பே வா"
#இதே போல் நாளை இரவு 9.30 க்கு "எங்க வீட்டு பிள்ளை" என்ன பண்ண? எங்கள் தலைவனின் முகம் காண பார்க்க வேண்டி இருக்கு.......
# 1965ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலில் நம்பர் ஒன் ஆனது. தலைவர் இரட்டை வேடத்தில் தோன்றி இருப்பார்.
#எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிப்பு தட்டாத திரைப்படம். இந்த படத்தில்
#நான் ஆணையிட்டால்...
#நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..
#கண்களும் காவடி சிந்தாகட்டும்..
#பெண் போனாள்...இந்த பெண் போனால்..
#மலருக்குத் தென்றல் பகையானால்..
#குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
போன்று எவர்கிரீன் பாடல்கள் அமைந்துள்ள ஒரு ஒப்பற்ற காவியம்.
விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.
#கடந்த, 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தின் வசூலை, 1965ல் வெளியான, எங்க வீட்டுப் பிள்ளை தான் முறியடித்தது........ Thanks...
-
நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா லதா, சாரதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
எம்,ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.
நினைத்தை முடித்தவர் உங்களை தேடி வருகிறார் கண்டு மகிழுங்கள்.
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)
குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி ‘பொன் பொருளைக் கண்டவுடன் …’என்று வரும் இடத்தில ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து ‘கண் மூடி போகிறவர் போகட்டுமே ……’என்று மாற்றி எழுதினாராம்.
தொடரும்......... Thanks...
-
MGR Filmography Film 39(1957) Poster
"ராஜராஜன்"
முந்தைய வருடத்தைப் போல, 1957 முழுதுமே ஏறுமுகமாக அமையவில்லை, எம்ஜியாருக்கு. சக்ரவர்த்தித் திருமகளின் வெற்றியைத் தொடர்ந்து வந்த ராஜராஜன் கச்சிதமான திரைக்கதை, இளங்கோவனின் கூரான வசனம், தேர்ந்த நடிகர்களின் பங்களிப்பு, கேவி மகாதேவனின் இனிய பாடல்கள், எம்ஜியாரின் வாள்வீச்சுப் படங்கள் அனைத்திலும் சண்டைக்காட்சிகளை கம்போஸ் செய்த ஆர்என் நம்பியாரின் அற்புதமான வாள்வீச்சு அமைப்புகளும் இருந்தும், சுமாராகவே ஓடியது.
எம்ஜியாருக்கு ஜோடியாக பத்மினி நடிக்க, அவர் மீது ஒருதலைக் காதலுடன் லலிதா தோன்ற, லலிதா மீது ஒருதலைக் காதலுடன் நம்பியார் தோன்றினார். இந்தப் படக்கதையில் ஒரு சுவாரசியம் 'நீங்க நல்லவரா கெட்டவரா' என்று நம்பியாரைப் பார்த்துக் கேட்கும் அளவு அந்தப் பாத்திரப்படைப்பு சனலங்கள் மிகக் கொண்டதாக அழகாக அமைக்கப்பட்டிருந்தது........ Thanks...
-
MGR Filmography Film 40(1957) Poster
"புதுமைப்பித்தன்"
ராஜராஜனைத் தொடர்ந்து, குலேபகாவலியை இயக்கிய ராமண்ணாவின் இயக்கத்தில், அந்தப் படத்தில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, ஈ.வி.சரோஜா பி.எஸ்.சரோஜா ஆகியோரும் பங்களிக்க கருணாநிதியின் வசனத்துடன் உருவான புதுமைப்பித்தன், குலேபகாவலி அளவு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ராஜராஜனுக்கு மேலாக பெரிய வெற்றி பெற்று நூறு நாட்களைத் தாண்டினான்.
பகலில் பைத்தியக்கார இளவரசன், இரவில் ராபின்ஹூட் போன்ற சாகசவீரன் என்று எம்ஜியார் வேடம்தாங்க, அவரது சூழ்ச்சிக்கார சித்தப்பாவாக பாலையா நடித்தார். ஜி.ராமநாதனின் இசையில் பாடல்கள் பல ஹிட் ஆகின (மொத்தம் 14 பாடல்கள்!).
தந்தையாரின் சடங்கு மரியாதைகளைப் பார்வையிடும் எம்ஜியார் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டிருக்க, பி.எஸ்.சரோஜா ரகசியமாக ஒரு சிறு காகிதத்துண்டை அதில் திணிக்கையில் எம்ஜியாரின் முகத்தில் ஓடும் ஒரு லேசான அதிர்ச்சி வெகு அழகு; அதைப் போல ஈவி சரோஜாவின் நடனத்தின்பாதியில் பைத்தியக்காரன் போல தான் ஆடிப்பாடத் துவங்கி ஒரு மேஜை மேல் பாய்ந்து ஏறி நடராஜா போஸ் கொடுத்து நிற்பதும் அழகு; வில்லனிடமிருந்து தப்பிக்க பெண் வேடமிட்டுக் கொண்டு நடனமாடத் தெரியாமல் தடுமாறுவதும் ஹிலேரியஸ்.
எம்ஜியாரின் இதைப் போல நுணுக்கமான நடிப்பு பாராட்டுப் பெறாமல், அவரது வாள்வீச்சும் ரொமான்சுமே பெரிய அளவில் அவரது ரசிகர்களைச் சென்றடைந்தது. ஒரு ஸ்டாராக அவரை உருவாக்கிய அவரது ரசிகர்கள் அவருக்குள் இருந்த படாடோபமில்லாத இயல்பான ஒரு நடிகனை வெளிக்கொணரும் முயற்சிகளுக்கு ஆதரவு தரவில்லை. இதைப் பின்னாளில் இதே ராமண்ணா தயாரிப்பிலான பாசம் படமும் நிரூபித்தது........ Thanks...
-
MGR Filmography Film 41 (Poster)
"மகாதேவி"
1957ஆம் ஆண்டின் முதல் படத்தைப் போல, அந்த ஆண்டின் இறுதிப் படமும் எம்ஜியாருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஊமைப்படங்களின் காலத்தில் நடிகனாக, இயக்குனராகத் துவங்கிய சுந்தர் ராவ் நட்கர்னியின் இயக்கத்தில் சாவித்ரி எம்ஜியாருக்கு முதல் முறையாக ஜோடியாகச் சேர்ந்தார்.
மதுரை வீரனுக்குப் பிறகு கண்ணதாசனின் அழகான வசனங்களைத் தாங்கி விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய பாடல்களுடன் வெளியான இப்படம் ஓரு வகையில் ஜெனோவா படத்தின் மற்றொரு பதிப்பு என்றே இதைச் சொல்லலாம்; நண்பனின் மனைவியின் மீது ஆசை கொள்ளும் ஒரு காமுகன் அதை எதிர்த்துப் போராடி வெல்லும் ஒரு கற்புக்கரசி என்பதாகத்தான் இந்தப் படத்தின் கதையும்; ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் தோல்வி அடைந்த கூண்டுக்கிளியின் கதையும் இதுவே! ஆனால், அந்த சோஷியல் தோல்வி அடைந்தாலும் இந்த இரண்டு காஸ்ட்யூம் ட்ராமாக்களும் வெற்றி பெற்றன. அதிலும் மகாதேவி பெரும் வெற்றி பெற்றது. அதற்கு ஒரு காரணம், முதலிரண்டில் இல்லாத ஒரு விஷயம்: சாவித்ரியின் ஹை பவர் பர்ஃபாமன்ஸ்.
உண்மையில், இந்த படத்தில் சாவித்ரி - பிஎஸ் வீரப்பா நடிப்பு அபாரம் என்று சொல்ல வேண்டும்.சாவித்ரிக்கு ஈடாக கொடுஞ்சிரிப்பு வில்லன் வீரப்பா படம் முழுதும் விரவியிருப்பார். 'அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரணதேவி!' என்ற அவரது பஞ்ச் டயலாக் சாகாவரம் பெற்று விட்டது!
ஆனாலும், தன் பாத்திரத்தை மிக அழகாகத் தெளிவாகச் செய்திருந்தார் எம்ஜியார்.நாகம் தீண்டி மயங்கிக் கிடக்கும் இளவரசனை அதே பாம்பு தீண்டி விஷத்தை உறிஞ்சினால்தான் பிழைப்பான் என்று பாம்பாட்டிகள் முயன்று தோற்று இனிமேல் முடியாது என்று கை விரிக்க, அடிபட்டு கட்டுகளோடு இருக்கும் எம்ஜியார் ஒரு வார்த்தை பேசாது எழுந்து வந்து அந்தப் பாம்பாட்டியின் கையில் இருக்கும் மகுடியை வாங்கித் தான் ஊதத்துவங்குவாரே, அப்போது அந்த நடையிலும், கண்களிலும் வெளிப்படும் உறுதி - certainly a piece of classic acting. யூ ட்யூபில் படம் இருக்கிறது. பாருங்கள்........ Thanks...