https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...41&oe=5ED00FAB
Printable View
02-05-2020, சனிக்கிழமை
தொலைக்காட்சி சேனல்களில்
நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
சவாலே சமாளி - ராஜ் டிஜிட்டல் - காலை 10 மணிக்கு,
நீதிபதி - முரசு டிவியில் - காலை 11 மணிக்கு,
வீரபாண்டிய கட்டபொம்மன்- ராஜ் டிவியில் - பிற்பகல் 1:30 க்கு,
என் மகன் - வசந்த் டிவியில் - பிற்பகல் 1:30 க்கு,
நீதிபதி - முரசு டிவியில் - இரவு 7 மணிக்கு,
1968 ஆம் ஆண்டு....
அறிஞர் அண்ணா அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பியிருந்தார்...
சென்னையில் அன்று இரு முக்கிய விழாக்கள்.
மாதத்தையோ தேதி, கிழமையையோ விகடனார் குறிப்பிடவில்லை.
ஏன் இந்த முன்யோசனை அவருக்கு இல்லை என்று வியப்பே எனக்கு...
முதல் விழா காலையில்....
Mail ஆங்கில நாளேட்டுக்கு நூற்றாண்டு விழா....
மாலையில் இன்னொரு விழா !
நடிகர் திலகத்தின் 125 ஆவது படமான உயர்ந்த மனிதன் படத்தின் விழா மற்றும் சிவாஜிக்கும் பாராட்டு விழா...
இரண்டு விழாக்களிலும் கலந்து கொள்ள இரு மத்திய அமைச்சர்கள் வந்திருந்தார்கள்.
ஒருவர் சவாண்.. மற்றவர் K. K. ஷா....
இரண்டு விழாக்களுக்கும் தலைமை அறிஞர் அண்ணா.
நான் இங்கே தருவது நடிகர் திலகத்திற்கு நடந்த பாராட்டு விழா பற்றிய வரலாறுதான்...
A. V. M. ராஜேஸ்வரி அரங்கில் மாலை ஐந்து மணிக்கெல்லாம் கட்டுக்கடங்கா கூட்டம்....
இரும்பு தொப்பி போலீஸ்காரர்கள் தான் எங்கும் நிறைந்திருந்தனர்.
ஏதாவது மாணவர்கள் போராட்டமா என்று கேட்டுக்கொண்டே இருந்தனர் அந்த சாலை வழியே சென்ற பலரும்....
இல்லை, சிவாஜிகணேசனுக்கு பாராட்டு விழா என்று யாராவது ஒருவர் அவர்களுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தார்கள்...
முதல் ஆளாக அரங்கிற்குள் வந்தார் சவாண்.
K. K. ஷா வும் சத்யவானி முத்தும் ஒன்றாக வந்தார்கள்.
முன் வரிசை முழுக்க முக்கிய பிரமுகர்கள்.
பலர் திரைத்துறையை சேராதவர்கள்.
இருந்தால் என்ன, ஓரு தமிழனின் சாதனைகளை பாராட்டும் விழாவாயிற்றே..
சிவாஜிக்கு கிடைக்கும் பெரிய கவுரவம் இது என்று விகடன் வர்ணித்தது...
முன்வரிசையில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை சுந்தர்லால் நஹாதா வற்புறுத்தி மேடைக்கு அழைத்து சென்றார்...
அவர்தான் அன்றைய தென்னிந்தியா திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் என்று எண்ணுகிறேன்.
ரசிகர்கள் கொந்தளித்தார்கள்.. கொந்தளிப்புக்கு காரணம், மேடையே கண்ணுக்கு தெரியவில்லை. காமிராகாரர்கள் பெரும் கூட்டமாக மேடையில்...
Movie கேமிரா காரர்களும் கூட...
ஒரே பிளாஷ் மயம்தான்..
S. S. வாசன் அருமையாக சுருக்கமாக பேசினார்.
முரசொலிமாறன் நடிகர் திலகத்தை வானளாவ புகழ்ந்தார்...
பா. சிதம்பரதின் மாமியார் திருமதி. சௌந்திரா கைலாசம் கவிதை தமிழில் நடிகர் திலகத்தை புகழ்ந்து பேசினார்.
K.k. ஷா சிரிக்க சிரிக்க பேசினார்.
சவாண் பேசும் போது சிவாஜிக்கும் தனக்கும் இடையே இருந்த நீண்ட கால நட்பை குறிப்பிட்டார்.
அண்ணா அவர்கள் பேசிய அரை மணி நேர பேச்சில் தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவர் பேச்சின் இனிமையை அனுபவித்ததாக கூறினார்...
அண்ணாவின் அன்றைய பேச்சு அமுதமழைதான்.....
அறுவை சிகிச்சைக்கு பின் அவர் ஆற்றிய ஒரே நெடிய உரை இந்த மேடையில் அவர் ஆற்றிய உரைதான்..
கர்ணனின் வாழ்வு போன்றதுதான் நடிகர் திலகத்தின் வாழ்வும் என்று சொல்லி நிறுத்து கிறார் அண்ணா.... அரங்கில் ஆழ்ந்த அமைதி.
பிறந்த ----வாழ்ந்த இடங்களுக்கு இடையே நடக்கும் போராட்டம் தான் இருவரின் வாழ்வும் என்ற போது பலத்த கை தட்டல்கள்.....
தொடர்ந்து இருக்கும் இடம் எதுவானால் என்ன, எங்கிருந்தாலும் வாழ்க !என்று அண்ணா வாழ்த்தினார்.
அரும்பாக கணேசன் இருந்த போதே அந்த அரும்பு நன்றாக மலரும் என்று எனக்கு தெரியும் என்று மகிழ்வோடு சொன்னார் அண்ணா.
சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்யத்தில் காக பட்டராக நடித்த எனக்கு பொன்னாடை போர்த்தினார் கணேசன்.. இன்று அவருக்கு நான் இன்று பொன்னாடை போர்த்துகிறேன் என்று போர்த்தினார் அண்ணா...
சிவாஜி மற்றும் அகில இந்தியாவிலும் வாழும் ஏனைய சிறந்த நடிகர்கள் ஒன்றிணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் அண்ணா..
பாரத விலாஸ் படத்தை அப்படி எடுத்திருக்கலாம். ஏனோ, தவற விட்டு விட்டார்கள்.
அரங்கில் அமர்ந்திருந்த பிரபலங்கள், ரசிகர்கள் அனைவர் மனங்களிலும் கேள்வி ஒன்று ஒலித்து கொண்டிருந்தது... தங்களுக்குள்ளும் அந்த வினாவை கிசுகிசுத்து கொண்டார்கள் பலரும்....
கருணாநிதி எங்கே? ஏன் அவர் மேடையில் இல்லை?
தனது ஏற்புரையில் அதற்கான விடையை தந்தார் நடிகர் திலகம்..
கலைஞருக்கு கடுமையான உடல் நல குறைவென்றும் தானே அவரை நேரில் சென்று பார்த்து விட்டுத்தான் விழா அரங்கிற்கு வந்ததாகவும் குறிப்பிட்டார் நடிகர் திலகம் ...
விழா மேடையில் திருவாளர்கள் கிருஷ்ணன் -பஞ்சு, பெருமாள், AVM செட்டியார் ஆகியோரும் கவுரவிக்க பட்டனர்.
விழா இனிதே முடிந்தது.
அந்த இனிமை இன்றும் நினைக்க நினைக்க நெஞ்சில் இனிக்கிறது.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...1e&oe=5ED4A7A9
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...28&oe=5ED41ECF
Thanks.. Vino Mohan
அவலமான இக்காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு கொடைவள்ளல் சிவாஜி ரசிகர்கள்
தொடர்ந்தும் உதவும் காட்சிகள்
பெரியநாயக்கன் பாளையம்
கோவை
நண்பர் சிவாஜி ரவி மற்றும் மன்ற தோழர்கள்
இயலாதோர்க்கு உணவு பொட்டலங்கள்
வழங்கினர்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...24&oe=5ED18AFC
பொண்மனத்தாரின் நிஜ முகம் (5)
நான் வாழ வைப்பேன் திரைப்படத்தை கே ஆர் விஜயா அவர்கள் தயாரித்த வெளியிட்டார்.
1979 ல் வெளிவந்த அத்திரைப்படம் 100 நாட்களுக்குமேல் ஓடி வெற்றிநடைபோட்டு
வசூலிலும் சாதனை நிலைநாட்டிய திரைப்படம் நான் வாழ வைப்பேன்.
அத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் ரஜனிகாந்தும் நடித்திருந்தார்,
படத்தின் உச்சக்கட்ட காட்சியில் ரஜனிகாந்தின் பாத்திரப்படைப்பு சிறப்பாக பேசப்பட்டது,
படத்தின் ரிவியுவுின் பின் டைரக்டர் சிவாஜி கணேசனிடம் அதனை நீக்கிவிடுவோமா என
கேட்டபொழுது நடிகர் திலகம் வேண்டாம் ரஜனி வளர்ந்துவரும் நடிகன்
அக்காட்சியமைப்பு அப்படியே இருக்கட்டும் என பொன்மனத்துடன் பெருந்தன்மையாக
மறுத்துவுிட்டார்,
இதே போன்ற சம்பவம் திருவுிளையாடல் படதத்தில் நாகேஷ் தருமியாக நடித்த காட்சி அமைப்பிற்கும்
நடைபெற்றது, அதனையும் எங்கள் தெய்வம் வேண்டாம என தடுத்துவுிட்டார்,
ஆனால்
நாடோடி மன்னன் என்று ஒரு திரைப்படம் அதில் நம்பியாருக்கும் அதன்
தயாரிப்பாளரான ஸடண்ட் நடிகருக்கும் வாள் சண்டை காட்சி ஒன்று
படமாக்கப்பட்டபுின் அதன் மறுகாட்சியை போட்டு பார்த்த தனக்குத்தானே
பொன்மனம் என பட்டத்தை கேட்டு வாங்கிக்கொண்ட ஸ்டண்ட் நடிகருக்கு
கரிமனமாகிவிட்டது, காரணம் ஸ்டண்ட் நடிகரைவிட நம்பியார் சிறப்பாக
வாள்சண்டை செய்திருந்தாராம். அப்புறும் என்ன அக்காட்சி கத்தரிக்கு இரையாகி மறுகாட்சி
எடுக்கப்பட்டதாம். இதுதான் பொண்மனம்,
சிவாஜி எங்கே ? எம் ஜி ஆர் எங்கே?
'உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..உனக்கு நீதான் நீதிபதி..மனிதன் எதையோ பேசட்டுமே..மனசை பார்த்துக்க நல்ல படி....உன் மனசை பார்த்துக்க நல்லபடி..'
இன்று 03/05/2020 - இரவு 09.00 p.m. மணிக்கு மெகா 24 டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " அருணோதயம் "
படத்தை காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், சரோஜாதேவி, லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
( படம் மாறவோ/மாற்றவோ வாய்ப்புள்ளது. )
'அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்... என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்
உன்னை மறந்து நான் உயிரைத்தாங்கலாம்..
நீ....சொன்னது எப்படி உன்மையாகலாம்
நம்ப முடியவில்லை..'
இன்று 03/05/2020 கலைஞர் டி.வி. இல் இரவு 10.00 p.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம் "செல்வம் ". !
படத்தை கண்டு களியுங்கள். !!
இந்த படத்தில் நடிகர் திலகம், கே.ஆர். விஜயா, நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
( படம் மாற்ற வாய்ப்புண்டு )
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.(ராக)வன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
thanks Gopalakrishnan Sundararaman
திமுக வை உடைக்க இந்திரர செய்து அதற்காக சிறப்பான தன்கட்சிக்கு கஷ்டப்பட்ட தன் கட்சியைச்சேர்ந்த நம் ஐயாவுக்கு பாரத் பட்டம் தராது அந்த நடிகருக்கு அதுவும் அந்த படத்துக்கு கொடுத்தார் இந்திரா.அப்படத்தில் என்ன சிறப்பாக நடித்தார் என்பதற்காக அப்படத்தை பிறகு பார்த்தேன். நடிப்பே இல்லை அப்படத்தில். எல்லா படத்திலும் அப்படித்தான் என்கிறீர்களா.
இந்திரா நினைத்தமாதிரியே கணக்கு கேட்டு (அவர் தான் பொருளாளர்)கட்சியைவிட்டு விலகும் அல்லது உடைக்கும் சூழ்நிலை உண்டாக்கினார்.ஆக இந்திரா செய்த
இமாலயத்தவறு
இன்னும் தொடர்கிறது
Thanks...fb
'மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்...மறு நாள் எழுந்து பார்ப்போம்....மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை... மலர்கள் மண்ணிலே பொங்கிய மேனி... களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே...'
நாளை 04/05/2020 காலை 07.00 a.m. மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" அன்னை இல்லம்" மெகா ஹிட் படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், தேவிகா, முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
( subject to change )
04-05-2020,
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைக்காவியங்கள்,
அன்னை இல்லம் - காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
ஊரும் உறவும் - காலை 9:30 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்,
புதிய பறவை - காலை 10 மணிக்கு ஜெயா டிவியில்,
உத்தம புத்திரன் - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
இரு மேதைகள் - இரவு 7:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
05-05-2020
இன்று தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
தங்க மலை ரகசியம் - காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்,
பாலும் பழமும் - காலை 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்,
நவராத்திரி - காலை 11 மணிக்கு. முரசு தொலைக்காட்சியில்,
சிவந்த மண் - காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
கந்தன் கருணை - பிற்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
தாவனிக் கனவுகள் - பிற்பகல் 1:30 க்கு ஜெயா தொலைக்காட்சியில்,
நவராத்திரி - இரவு 7 மணிக்கு முரசு டிவியில்,