Respected Pammalar Sir,
Thank you very much for proof of box office kind nadigarthilagam by providing valuable evidences
Printable View
Respected Pammalar Sir,
Thank you very much for proof of box office kind nadigarthilagam by providing valuable evidences
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)தொடர்கிறது...
குலமகள் ராதை
http://i1098.photobucket.com/albums/...adhai00008.jpg
சமகால நடிகை தேவிகாவுடன்
http://3.bp.blogspot.com/-nXp4lUG9s1...vqoo1_1280.jpg
'குலமகள் ராதை' படப்பிடிப்பில்
http://directorksomu.com/gallery/fil...thai/gal_1.jpg
1963 -ல் வெளியான 'குலமகள் ராதை' யிலும் இந்த ஜோடி அட்டகாசம் செய்தது. "ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி" என்று பைங்கிளியின் பின்பக்கமாக நின்று அவரின் இரு ஜடைகளையும் நம்மவர் பிடித்து இழுக்க, இருவர் பிம்பங்களும் எதிரே இருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் அழகை மறக்க முடியுமா! அருமையான ஜோடியாக அமைந்த இன்னொரு வெற்றிப் படம். (கார்த்திக் சார்! வருகிறேன்... வருகிறேன்...விரைவில் வருகிறேன். நீங்கள் நினைப்பது புரிகிறது.. இதைவிட இன்னும் சிறப்பாக)
'கல்யாணியின் கணவன்' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன்
http://www.thehindu.com/multimedia/d...a_1039536f.jpg
அதே வருடம் பக்ஷி ராஜாவின் கடைசிப்படம் 'கல்யாணியின் கணவன்'. இதிலும் இந்த ஜோடியே ஆக்கிரமித்தது. அதுவும் முதல் பாதியில் இருவரும் பண்ணும் சேட்டைகளும் அமர்க்களங்களும் மறக்க முடியாதவை. நமது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்தான். இரவுபகல் தூக்கமில்லாமல் செய்த ஸ்டைல் டூயட்டை மறக்க இயலுமா?
'புதிய பறவை'
http://www.hindu.com/cp/2009/06/26/i...2650331601.jpg
1964 -ல் இந்த ஜோடியின் இன்னொரு சுனாமி. இது கலர் சுனாமி. பிரம்மாண்ட சுனாமி. 'புதிய பறவை' என்னும் சுனாமி. அதுவரை கறுப்புவெள்ளையில் பார்த்து பரவசப்பட்ட இந்த ஜோடி வண்ணத்தில் நம் எண்ணமெல்லாம் குளிர காட்சியளித்தது. கண்பட்டுவிடக் கூடிய அளவிற்கு இன்றைய இளையதலை முறையினரும் வியந்து பார்க்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது இந்த ஜோடி. 'காதல் பாட்டுப் பாட காலம் இன்னும் இல்லை' என்ற வண்ண மயிலாளிடம் 'ஆஹா!...மெல்ல நட... மெல்ல நட... உன் மேனி என்னாகும்?' என்று அழகன் அக்கறைப்பட, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்ததைப் பார்த்து அன்றைய திரையுலகில் புதிய பறவைகளாய் பறந்து வந்து புதுமை புரிந்த ஜோடி. ஜோடிகள் எல்லாவற்றிக்கும் அப்போதைய உச்சகட்டம். அபிநய சரஸ்வதியை ரசிப்பதெற்கென்றே கூட ஒரு தனிக் கூட்டம் அலைந்தது. இந்த புதிய பறவை மட்டும் பழைய பறவையாக ஆகவே ஆகாது. தரத்திலும் சரி! வசூலிலும் சரி!
அதற்குப் பிறகு 1966 வரை கார்த்திக் சார் காலம்.
1968-இல் 'என் தம்பி'யில் தலைவர் தன்னிகரில்லா அழகில் உடல் இளைத்து தம்பி போல ஆகிவிட தம்பிக்கு அக்கா போன்ற தோற்றம் வர ஆரம்பித்தது சரோஜாதேவிக்கு. எவ்வளவு இளமையான கதாநாயகியைப் போட்டாலும் அவர்களையெல்லாம் விட படுஇளமையாக, கல்லூரி மாணவனாக, இல்லை இல்லை பள்ளி மாணவனாக தெரிய ஆரம்பித்து அப்போதைய உலகின் எட்டாவது அதிசயமாக அனைவரையும் ஆச்சரயத்தில் நடிகர் திலகம் ஆழ்த்திக் கொண்டிருக்கும் போது யார்தான் என்ன செய்ய முடியும்? நேற்றுப் பிறந்தவர் போல நடிகர் திலகம் அழகில் மிளிர நேரம் தெரிந்து வந்த அபிநய சரஸ்வதி அவ்வளவாக உறுத்தவில்லை "என் தம்பி"யில். 'நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ' என்று தேவி கேட்டதும் 'நடுக்கமா...எனக்கா?' என்று சாட்டையடி தந்து சடையிலிருந்து பூவையும் ,பாலாஜி கையில் இருந்து சிகரெட் கேஸையும் நடிகர் திலகம் சாட்டையால் பறிக்கும் போது பூலோகம் பூரித்துப் போனதே. அந்த வெற்றிக்கும் இந்த ஜோடிதானே காரணம்!
அன்பளிப்பு
http://i3.ytimg.com/vi/fDo4EN7BUzw/hqdefault.jpg
1969- ல் 'வள்ளி மலை மான் குட்டி'யுடன் 'அன்பளிப்'பில் ஜோடி சேர மீண்டும் ஜோடிப் பொருத்தம் சற்று இடிக்க, தேரு வந்தது போல் இருந்தது சரோஜாதேவி வரும்போது. வயதாக ஆக அபிநய சரஸ்வதியிடம் முதிர்ச்சி தெரிய, வயது ஏற ஏற நடிகர் திலகத்திடம் இளமை இன்னும் ஏற ( இதிலும் சாதனைத் திலகம் தான்) படம் சுமாரான வெற்றி.
அஞ்சல் பெட்டி 520
http://i1087.photobucket.com/albums/...2/VTS_01_7.jpg
அதே வருடம் அஞ்சல் பெட்டி 520. காமெடியிலும் கொடி நாட்டுவோம் என்று நிரூபித்து இதிலும் வெற்றி கண்டது இந்த ஜோடி. குறைந்த செலவில் சிம்பிள் சினிமா என்றாலும் திருமகள் தேவையான அளவிற்கு தயாரிப்பாளர் வீட்டில் தேடி சென்று வாசம் செய்த படம். பத்துப் பதினாறு முத்தமிட்ட ஜோடி.
'அருணோதயம்'
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-46.jpg
'தேனும் பாலும்'
http://i1087.photobucket.com/albums/...anstuffcom.jpg
1971-ல் 'அருணோதயம்' கண்டு 'முத்து பவழம் முக்கனி சர்க்கரை' அளித்த ஜோடி அதே வருடம் 'தேனும் பாலும்' அளித்து மனதினில் வெள்ளம் கரைபுரண்டோடச் செய்தது.
அப்புறம்... நாயகியின் வயது முதிர்வு. பல நாயகிகளின் போட்டி. நடிகர் திலகத்திற்கு வேறு ஜோடிகள்.
ஒன்ஸ்மோர்
http://i1087.photobucket.com/albums/...wnloadscom.jpg
பிறகென்ன... நடிகர் திலகத்திற்கும் வயதாகாதா? வயதானதும் ஒன்ஸ்மோர் இந்த ஜோடியை 'ஒன்ஸ்மோரி'ல் நடிக்க வைத்தார் இயக்குனர் சந்திரசேகரன் இன்றைய இளம் கதாநாயகன் விஜய்யுடன். பல சாகசங்களை நிகழ்த்திய ஜோடி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஜோடியாக சாகசம் நடத்தி படத்தை மாபெரும் வெற்றியாகியது. அதற்கு தங்கள் பழைய இருவர் உள்ளமும் கலந்தது. அனைவரையும் கவர்ந்தது. வயதாகியும் மீண்டும் போராடி சாந்தாவைக் கைபிடித்தார் நாயகன்.
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)தொடர்கிறது...
பாரம்பரியம்
http://i1087.photobucket.com/albums/...AMBARIYAM1.jpg
1993 ல் பாரம்பரியம் மிக்க இந்த ஜோடி 'பாரம்பரிய'த்தில் மீண்டும் ஒன்று சேர்ந்தது. அதன் பின் நம் தெய்வமும் தெய்வங்களோடு சங்கமமானது.
அபிநயப் பறவையோ நம் இதய தெய்வத்தின் புகழை சென்றவிடமெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறது.
தன் கணவருடன்
http://www.pkp.in/images/b/Saroja%20...%20husband.jpg
வாழ்க 'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி.
முடிவற்றது
Dear Karthik Sir,
Excellent writeup and wonderful experience we enjoyed thank you very much
Vasudevan Sir,
Did yu see my earlier post here to you !
டியர் சவுரி சார்!
தங்கள் உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றி! தங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். கடந்த இரண்டு நாட்களாக நாயகியர் தொடருக்காக (சரோஜா தேவி) முழுமையாக நேரம் எடுத்துக் கொண்டதால் திரியைப் படிக்க இயலவில்லை. இப்போதுதான் பார்த்தேன்.
தாங்கள் என் வீட்டிற்கு வந்தபோது தலைவர் வீடியோக்கள் பார்க்கவே நேரம் சரியாய் இருந்ததே. ஆவணங்கள் பார்க்க நேரம் ஏது?...
'உள்ளம் என்பது ஆமை' பதிவை ரசித்துப் படித்தேன். அருமை.
குலமகள் ராதையில் அந்த அமர்க்களமான காட்சி.
http://i1087.photobucket.com/albums/...2/VTS_06_1.jpg
டியர் கார்த்திக் சார்,
'உத்தமன்' நினைவலைகளை வெகு சிறப்பாக அளித்துள்ளீர்கள். சற்று பின்னடவிக்குப் பின் உத்தமன் பெற்ற மாபெரும் வெற்றியைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள். ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. ஜுக் பாக்ஸ் விவரங்கள் பிரமாதம். அப்போதெல்லாம் ஒரு படத்தின் பாடலைக் கேட்க எவ்வளவெல்லாம் சிரமப்படவேண்டியிருந்தது?. முதல்நாள் படத்தைப் பார்க்க முடியாமல் அடுத்த நாள் பார்க்க முடிந்ததை தங்களுக்கே உரிய பாணியில் குறித்து அசத்தியுள்ளீர்கள். மஞ்சுளாவின் பங்கையும் மறக்காமல் குறிப்பிட்டதற்கு நன்றி (எனக்கு மஞ்சுளாவை மிகவும் பிடிக்குமாக்கும்!) அதே போல 'தேவன் வந்தானடி' பாடலின் ஓட்ட நடை பற்றி என் மனதில் உள்ளதை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள். நம் எண்ண ஓட்டங்களின் ஒற்றுமைதான் என்ன?! நம் தலைவர் எந்த காலத்தில் பார்மிலிருந்து விலகினார் சார்.? அவர்தான் அன்றும் ராஜா... இன்றும் சக்கரவர்த்தி... என்றும் நம் இதயதெய்வம். அவரை அசைத்துப் பார்க்க இனி ஒருவர் ஒருவர் பிறந்ததுமில்லை பிறக்கப் போவதுமில்லை.
அருமையான நினைவலைகளை இங்கு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் சார்.
டியர் பம்மலார் சார்!
நன்றி! வீரகேசரி இதழின் 'உத்தமன்'100வது நாள் விளம்பரம் (இலங்கை) பதித்து அசத்தியதற்கு நன்றி!
உத்தமன்" இலங்கையில் வெற்றிவாகை சூடிய அரிய தகவல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!