-
There once lived a great mathematician in a village outside Ujjain . He was often called by the local king to advise on matters related to the economy. His reputation had spread as far as Taxila in the North and Kanchi in the South. So it hurt him very much when the village headman told him, "You may be a great mathematician who advises the king on economic matters but your son does not know the value of gold or silver."The mathematician called his son and asked,
"What is more valuable - gold or silver?" "Gold," said the son. "That is correct. Why is it then that the village headman makes fun of you, claims you do not know the value of gold or silver?
He teases me every day. He mocks me before other village elders as a father who neglects his son. This hurts me. I feel everyone in the village is laughing behind my back because you do not know what is more valuable, gold or silver. Explain this to me, son."
So the son of the mathematician told his father the reason why the village headman carried this impression. "Every day on my way to school, the village headman calls me to his house. There, in front of all village elders, he holds out a silver coin in one hand and a gold coin in other. He asks me to pick up the more valuable coin. I pick the silver coin. He laughs, the elders jeer, everyone makes fun of me. And then I go to school. This happens every day. That is why they tell you I do not know the value of gold or silver."
The father was confused. His son knew the value of gold and silver, and yet when asked to choose between a gold coin and silver coin always picked the silver coin. "Why don't you pick up the gold coin?" he asked. In response, the son took the father to his room and showed him a box. In the box were at least a hundred silver coins. Turning to his father, the mathematician' s son said, "The day I pick up the gold coin the game will stop. They will stop having fun and I will stop making money."
இந்த சின்ன கதை நமது தலைவர் விஷயத்தில் மிகவும் பொருத்தம் - அவருக்கு ஒரு மரியாதையை செய்துவிட்டால் தமிழகம் சிறப்பு பெற்று விடுமே - தமிழனின் மானம் உயர்ந்து விடுமே அதற்க்கு பிறகு என்ன செய்வது ? தமிழனின் தன்மானம் என்றுமே அடங்கி இருக்கவேண்டும் - தமிழின் பெருமை யாருக்கும் புரிய கூடாது - தேசபக்தி என்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு தெரிய கூடாது - அவரை மட்டம் தட்டி கொண்டே காலத்தை ஓட்டுவோம் என்றே ஒரு கூட்டம் இயங்கும்போது - தங்கத்தின் உண்மையான மதிப்பு சூரியனை மேக கூடங்கள் மறைப்பது போலத்தான் - ஒரு நாள் தங்க சுரங்கமாக வெளிவரும் - அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை
அன்புடன்
ரவி
:):smokesmile:
-
Quote:
Originally Posted by
goldstar
ESSVEE sir
known and unknown facts about ayirathil oruvan,
no doubt the film was a hit picture successfully ean 100 days in three theatres in madras, first time with 4 shows daily for 15 days to control the crowds, it was expected for silver jublie and not go for silver. 100 days run was good and 31st july thiruvilaiyadal released and it has captured VERY BIG CROWDSmost surprsingly and went for silver jubliee despite power cut problems etc due to indo=pak war that time,
Like pudiyaparavai a money spinner for NT== AO for mgr all time.BRB
crossing the tables to other side FOR business reasons.
-
எனக்கு தெரிந்து அந்தக் காலத்தில் வேரொறு செய்தியும் உலா வந்தது. அதாவது நவராத்திரி, முரடன் முத்து இரண்டு படங்களும் ஓரே நாளில் வெளியான படங்கள். பந்துலு அவர்கள் தனது முரடன் முத்து படத்தை நடிகர் திலகத்தின் 100 வது படமாக வெளியிட விரும்பியதாகவும் , ஆனால் நவராத்திரி படம் 100 வது படமாக அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது பந்துலு அவர்களுக்கு கோபத்தை உண்டாக்கியதாகவும் அதன் காரணமாகவே அவர் வேற்றுமுகாம் சென்றதாகவும் தகவல். அது உண்மையா அல்லது புனைந்துரையா என்பது எனக்குத் தெரியாது.
-
-
தினமலர் - (திருநெல்வேலி) வெளியாகும் தொடரின் முதல் பகுதி
செலுலாய்ட் சோழன்
சுதாங்கன்
நடிகர் திலகம் சிவாஜி கணசேனைப் பற்றி ஒரு தொடர் எழத முடியுமா ?’ தினமலர் ஆசிரியர் என்னைக் கேட்டார்.
மனதில் ஒரு உற்சாகத் துள்ளல். உடனே `செலுலாய்ட் சோழன்’ இதுதான் தலைப்பு என்றேன்.
உற்சாகமாகக் ஏற்றுக் கொண்டார். இன்றைய வாசகர்களுக்கு இந்த தலைப்பு புதிதாக இருக்கலாம். நாற்பது வயதைத் தாண்டிய வாசகர்களுக்கு இந்த தலைப்பு ஏற்கெனவே அறிமுகமானதுதான். 1992ம் வருடம் அக்டோபர் 1 நான் தினமணி நாளிதழில் சிறப்பு ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டேன்.
அது எத்தனை பொருத்தம். அக்டோபர் 1 தான் நடிகர் திலகத்தின் பிறந்த நாள். நான் அந்த நாளிதழில் ஆசிரியராக இருந்த காலத்தில்தான் கவிதை எழதக் கூடிய என் உதவி ஆசிரியர் மறைந்த சிவகுமார் அவர்களுக்கு இந்த தலைப்பை கொடுத்து ஓரு கவிதை எழதச் சொன்னேன். அது நடிகர் திலகத்தைப் பற்றிய கவிதை. அது வெகு நாட்கள் சென்னையில் சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் உள் சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்தது.
ஒரு சினிமா நடிகரின் தொடருக்கு இந்தத் தலைப்பு எப்படி பொருந்தும் ? அவர் எப்படி சோழனாக முடியும் ? ஒரு ` ராஜ ராஜ சோழன்’ படத்தில் நடித்ததற்காக இந்த தலைப்பா ? மேலும் சிவாஜி பிறந்தது விழப்புரம் தானே என்று சிலர் கேள்வி எழப்பலாம்.
சிவாஜி கணேசனின் தாயார் ஊர் தான் விழப்புரம். தந்தையாரின் பூர்விகம் தஞ்சை ஜில்லாவின் வேட்டைத் திடல் கிராமம்தான். அதனால் சிவாஜி கணேசன் சோழர் பரம்பரைதான். சரித்திர பூர்வமாக பார்த்தால் சோழ சாம்ராஜ்யம் திருச்சியில் துவங்கி, தஞ்சை, நாகப்பட்டினம் போய் இங்கே கடலூர், விருத்தாச்சம்வரை தமிழகத்தில் நீண்டது. விழப்புரமும் சோழ சாம்ராஜ்யத்தில் இருந்த பகுதிதான்.
அது சரி, சிவாஜி பிறந்த ஊர் வேண்டுமானால் சோழ நாடாக இருக்கலாம். அதற்காக அவரை எப்படி சோழன் என்று அழைக்கலாம் சில சரித்திர ஆசிரியர்கள் வம்புக்கு வரலாம்.
பல்லவ, பாண்டிய சாம்ராஜ்யத்திற்குப் பிறகு சோழ சாம்ராஜ்யம் தன் எல்லைகளை கடல் கடந்து பல நாடுகளுக்கு தன் எல்லையை விரித்தது. இன்றைய இந்தியா, இலங்கை மலேசியா, வங்காள தேசம்,மாலத்தீவுகள்,, சிங்கப்பூர், இந்தோனேசியா வரை அன்றைய சோழ சாம்ராஜ்யம் விரிந்து கிடந்ததாக சரித்திரக்குறிப்புகள் உண்டு.
இந்த சோழர் காலம்தான் தமிழ்கத்தின் பொற்காலம். மன்னர் ஆட்சியாக இருந்தாலும், சோழர்கள் காலத்தில்தான் ஜனநாயக நிர்வாகத்தின் வேர்கள் துளிர்க்க ஆரம்பித்தது. உள்ளூர் நிர்வாகம், கலை, இயல், இசை, தமிழ் இலக்கியம், சிற்பக் கலை, கட்டடக் கலை, மருத்துவமனைகள்,ஆன்மீக பரவல் என்று தமிழ்நாடு மேன்மை பட்டுக் கிடந்த காலம் அது.
சோழர்கள் காலத்தை நான்கு காலமாகப் பிரித்தார்கள். இடைகால சோழர்கள் காலம் என்பது கி.பி 848 ல் விஜயலாய சோழன் காலத்தில் தொடங்கி, மூன்றாம் ராஜராஜ சோழன் காலம் கி.பி 1249 வரை இருந்தது. இன்று தமிழகத்தின் சிற்பக் கலையில் உலகையே வியக்க வைக்கும் பல ஆலயங்கள் சோழர்கள் கால படைப்புக்கள்தான்.
இந்தக் கால கட்டத்தில்தான்ப் ஜைன, சைவ, வைணவ சமயங்கள் கோசோச்சியது. அதை விட சிறப்பு, திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி,, காலத்தால் அழிக்க முடியாத கம்பனின் கம்பராமாயணம், ஜெயம்கொண்டரின் கலிங்கத்துப் பரணி எல்லாமே சோழர்கள் காலத்துப் பொக்கிஷங்கள்தான்.
இவையெல்லாம் நேற்றைய பொற்காலங்க்ள். நேற்றை பற்றி சொன்னாலே இன்றைய தலைமுறையினருக்கும் பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த சரித்திரங்களின் ஆர்வமிருந்தும், படிக்க பொறுமையில்லாதவர்களுக்கு யார் இந்த சரித்திர பொற்காலங்களைச் சொல்வார்கள்.
ஒரே பதில் : எங்கள் சிவாஜி கணேசன் தான்.
கல்வெட்டுக் கதை மாந்தர்களை செலுலாய்ட் பிம்பங்களில் உயிர் நாளமாக வாழ்ந்து காட்டிய சிவாஜி கணேசன் செலுலாய்ட் சோழன் தானே ?
சிவாஜி கணேசனைப் பற்றி எழதுவது வெறும் சினிமா தொடராக இருக்க முடியாது.
தமிழனின் தியாகம். வீரம், தமிழ், நன்றியுணர்ச்சி, கொடை, பக்தி இதையெல்லாம் தமிழனுக்கு நாம் வாழகின்ற காலத்திலேயே நமக்கு பதிவு செய்து விட்ட போன யுக புருஷன் வரலாறு.
சிவாஜி கணேசன் தஞ்சைக் காரராக இருந்தாலும், நம் நெல்லைக்கு பெருமை சேர்த்தவர் சிவாஜி.
நானும் நெல்லைக் காரன் தான். நான் ஊருக்கு வரும்போது, கயத்தாறை தாண்டும்போது, கட்டபொம்மன் சிவாஜி ரூபத்தில் என் முன் நிற்பான்.
தூத்துக்குடி துறைமுகத்தை பார்க்கும் போது கப்பலோட்டிய தமிழனாக சிவாஜி கண் முன்னால் நடமாடுவார்.
ஆழ்வார்களின் பெருமையை நினைத்தால் பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வாராக அந்த செவாலியே கணேசன் அற்புத தமிழால் பக்தி பரவசமூட்டுவார்.
என் கொள்ளுத் தாத்தா மறைந்த தமிழறிஞர் பி.ஸ்ரீ எங்கள் ஊர் தாமிர பரணிக்கரையிலிருக்கும் தென்திருப்பேரை.பி.ஸ்ரீ என் தாய்வழிப் பாட்டனார் அவர். பரம்பரையை `கவிராயர் கூட்டம்’ என்பார்கள், இன்று போல அன்றும் `கவிராயர் கூட்டத்திற்கு மதிப்பிருந்ததில்லை. காரணம் `சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்தானே’.
ஆனால், பூர்வீக சொத்தாக எனக்கு உயிரணுக்கள் வழியாக வந்தது தமிழார்வம். கற்றதை விட தாத்தா வீட்டில் கேட்டல் அதிகம்.
வீட்டில் கேட்டதை விட அன்றைய வானொலியில் சிவாஜி குரலில் கேட்டு தெரிந்து கொண்ட தமிழ் அதிகம்.
பள்ளிப்படிப்பில் எனக்கு அதிக ஆர்வம் இருந்ததில்லை. அப்போது நான் எழாம் வகுப்பு திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு ஒரு தமிழாசிரியர் இருந்தார். பெயர் வி.வி. நடராஜன். அப்போது தமிழ்ப் பாடங்களில் கம்பராமாயணம் முக்கிய பாடமாக இருந்தது.
ராமனின் கோசல நாடு எப்படியிருந்தது என்பதை கம்பர் விவரிப்பார்.
நீரிடை யுறங்குஞ் சங்க நிழலிடை புர்ங்கும் மேதி
தாரிடை யுறங்கும் வண்டு தாமரை யுறங்குஞ் செய்யாள்
தூரிடை யுறங்கு மாமை துறையிடை யுற்ங்கு மிப்பி
போரிடை யுறங்கு மன்னம் பொழிலிடை உரங்குந் தோகை
இதுதான் பாடல். சங்குகள், எருமைகள், வண்டு,ஆமை,முத்துச்சிப்பிகள், அன்னம், மயில்கள் எங்கு எப்படியிருந்தது என்பதை விளக்கும் பாடல் இது.
இதை மனப்பாடம் செய்யாததால், ஆசிரியர் பிரம்போடு அடிக்க வந்தார். அதை அப்படியே நிறுத்தினேன்.
`நான் சொல்லும் தமிழ் உங்களுக்குத் தெரியுமா ?’ முறைப்போடு ஆசிரியரைக் கேட்டேன். என் தன்னம்பிக்கையை ஆர்வத்தோடு பார்த்தார் ஆசிரியர்.
`சொல்லு’ என்றார்.
சொல்ல ஆரம்பித்தேன்
`நீலவானிலே செந்நிறப் பிழம்பு,
அந்த வட்ட ஓளியின் பெயர் சூரியன்
சுட்டெரிக்கும் செஞ்சுடர்.
அதுதான் நீ என் நெற்றியிலே இட்ட
இந்த வட்டமான ரத்தநிறப் பொட்டு.
பரமனுக்கு முக்கண்.
அது தேவையல்ல வீரனுக்கு.
இந்த வெற்றி வடு ஒன்று போதும்
வாளை ஒட்ட,
அவர்கள் மீது வேலை பாய்ச்ச
இதனால் விளைவது என்னவென்று கேள்
வெண்மணல் நிலமெல்லாம் செக்கர்வான்ம் போல்,
செம்பவள மலை போல்,
செப்புத்தகடடித்து செப்பனிட்ட தரை போல்,
மாணிக்கக்கரை கட்டி மடை திறந்த நெருப்பாற்றைப் போல்,
எதிரிகளின் ரத்த ஊற்று குபுகுபு வெனப்
பொங்கி மேலெழந்து எங்கும் நிறைந்த பொருளாய்,
நம் ஏற்றமிகு செயலாய் களத்தில் நிறையப் போவது தான்.
அதனால் விளையப்போவது ?
அதுதானே உன் ஆசை?
அதுதானே உன் ஆசை ஜக்கம்மா ?
முழங்கினேன்.
அடிக்க வந்த ஆசிரியர், என்னை கைதட்டி அணைத்துக் கொண்டார்.
இது எந்தத் தமிழ். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் போருக்கு போகுமுன் கட்டபொம்மன் தன் மனைவி ஜக்கம்மாவிடம் பேசியது.
`இந்த தமிழால் நீ பிழைப்பாய் ?’ ஆசி கூறினார் ஆசிரியர்.
அந்த தமிழ் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
என் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு முதல் தமிழ் ஆசான் சிவாஜி கணேசன் தான்.
எழதியது சக்தி கிருஷ்ணசாமிதான்.
ஆனால் திரையின் மூலமாக இந்தத் தமிழையும், தமிழ் ஆர்வத்தையும், வளர்த்தவர் நடிகர் திலகம் தானே /
அதனால் சிவாஜி கணேசனைப் பற்றிய இந்தத் தொடர் தமினின் மேன்மையை பல ரசங்களிலும் சொல்வதுதான்.
இதை பெருமையோடு தொடர்ந்து படிக்கலாம்
(தொடரும்)
For Comments
sudhangan@gmail.com
-
2 Attachment(s)
From our raghavendra sir website(SORRY RAGHAVENDRA SIR FOR POSTING IT WITHOUT YOUR PERMISSION)
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் கோயிலருகில் நடிகர் திலகத்தின் நிழற்பட கட்அவுட் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டு ரூபாய் மாலை அணிவித்து வருகின்றனர் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றத்தினர். இந்த ஆண்டும் அதே போல் நடத்தியுள்ளனர். 11.01.2014 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நடிகர் திலகத்தின் கட்அவுட்டிற்கு ரூபாய் மாலை அணிவிக்கப் பட்ட காட்சி. நிழற்படத்தை நமக்கு அனுப்பிய திரு அண்ணாதுரை அவர்களுக்கு நமது நன்றி. மற்றும் மாவட்ட சிவாஜி மன்றத்தினருக்கும் உறுப்பினர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.
-
Vasu sir's kavidhai about gnana oli(sorry vasu sir for posting it without your permission):
ஆண்டனி...
முரடன் ஆனால் முத்தானவன்
பாதிரியார் மேல் பக்தி உள்ளவன்...
மாதா கோவில் மணியடித்து
சனம் இறந்தால் சவப்பெட்டி செய்பவன்
கண்டதே காட்சி
கொண்டதே கோலமென
பாதிரியே தெய்வமென
பாங்காய் பணி செய்து வந்தான்
காதலித்தான் ஒரு பெண்ணை
கல்யாணமும் செய்தான் பாதிரி உதவியினால்
சொல்லொணா அன்புகொண்டு கணவன் மனைவி சொர்க்கத்தில் மிதந்தனர்
அன்பின் அடையாளமாக கர்ப்பம் தரித்தாள் மனைவி
பெண் குழந்தையை ஈன்று கணவன் முகம் பாராமல்
விண்ணுலகம் சென்று விட்டாள்.
துடித்தான் துவண்டான் ஆண்டனி
துன்பம் குறைத்தார் பாதிரி.
மகளை வளர்த்து மனக்கவலை சற்று மறந்தான்
பெண்ணைப் படிக்க வைக்க பெருமுயற்சி எடுத்தான்
பால்ய வயது நண்பன் லாரன்ஸ் வந்தான்
காவல்துறை அதிகாரியாய்.
கண்டுகொண்டான் சிறுவயது நண்பனை
களிப்புடன் நட்பைத் தொடர்ந்தான்
பாதிரிக்கு ஒரு லட்சியம்
பூண்டி மாதாவுக்கு ஒரு கோவில்,
மழலையர் கல்வி பயில ஒரு பள்ளி
பிணி தீர்க்க ஒரு மருத்துவமனை
பாதிரியின் மூன்று கனவுகள்
கனவுகளை நனவாக்க முடிவெடுத்தான்
தன் பெண் மூலம் நிறைவேற்ற உறுதியளித்தான்.
ஆனால்...
மகளோ மதிகெட்டாள் மானமிழந்தாள்
மாசு பட்டாள் காதலன் என்ற கயவனுடன்.
கண்டுவிட்டான் மகளை கயவனோடு படுக்கையில்.
கொலை வெறி கொண்டான்
கொடுவாள் எடுத்து கொன்று விடத் துணிந்தான்
தடுத்தான் லாரன்ஸ்
மூன்று உயிர்களையும் காத்தான் தோழன்
அதிகாரியாய் ஆண்டனி முன்னிலையில்
இருவருக்கும் தன் மோதிரத்தால் திருமணம் செய்து வைத்தான்.
கனவு சிதைந்ததே என்று கலங்கினான் ஆண்டனி
கனவை விட மகளின் கற்பு கவலையை அதிகமாக்கியது
கலங்கிய மனத்துடன் அவள் காதலன் வீடு சென்றான்
கண்மணிக்கு வாழ்வுப் பிச்சை கேட்டான்.
கெஞ்சினான் கால் பிடித்தான் கதறினான்
காதலனோ காமுகன் காலால் எட்டி உதைத்தான்
கண்டபடி பேசினான் உன் மகளுக்கு நான் மட்டுமா
என்று ஏளனம் செய்தான் எள்ளி நகையாடினான்.
பொறுத்துப் பார்த்த சிறுத்தை பொங்கி எழுந்தது
நரசிம்மம் ஆனது இழிசொல் தாங்காது இடியென தாக்கியது
ஒரே அடி மருமான் மாண்டான். அறியான் ஆண்டனி
தூக்கினான் உடலை கொண்டு வந்தான் பாதிரியிடம்
மகளும் உடன் இருந்தாள் மருமகன் பிணமாய்க் கிடந்தான்
உண்மை தெரிந்தது
விபரீதக் கோபத்தால் விதவை ஆக்கி விட்டான் தன் செல்வத்தை
எல்லாம் முடிந்தது
கையில் விலங்கு கண்ணெதிரில் லாரன்ஸ்
சிறைத்தண்டனையில் சிதில் சிதிலாய் போனது வாழ்க்கை
அடிபட்ட இடத்திலே மேலும் ஒரு கொடுவாள் வெட்டு
ஆம் மகள் மாண்டாள் என்ற செய்தி
ஒரே உறவும் பறி போனது இப்போது தெய்வம் மட்டுமே பாதிரி வடிவில்
பாதிரிக்கு முடியாத முதுமை தன்
பாலகனைப் பார்க்க ஆசை
வேண்டுகோள் விடுத்தார் லாரன்ஸிடம்
குரு கேட்டதால் தட்சணையைக் கொண்டுவந்தான்
தன் மனத்தை சிறை கொண்டவன்
சிறைக் கைதியாய் எதிரே
பாசமகனைப் பார்த்த மகிழ்ச்சி
பாழ்பட்டுப் போனதில் நெகிழ்ச்சி
சாகும் தருவாயிலும் தன் கனவை எண்ணி
ஆண்டனியின் கை பிடித்தபடி
ஆண்டவனை அடைந்தார்.
கடவுளுக்கு கல்லறை வெட்ட அனுமதி கேட்டான்
மறுத்தான் இன்ஸ்பெக்டர் நண்பன்.
கோபமுறுக்கால் அவனைத் தாக்கி
தப்பி ஓட்டமெடுத்தான் தந்தையின்
தங்கக் கனவை நிறைவேற்ற...
(இடைவேளை)
-
நடிகர் திலகத்தை முதன் முதலாக திரைப்படத்துக்கு ஒப்பந்தம் செய்த அஞ்சலி தேவி காலமானார் என அறிகிறேன்.
அஞ்சலி!
-
பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 86 வயதான அஞ்சலிதேவி கடந்த ஒருவாரமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்வோம்
http://i1234.photobucket.com/albums/...ps4a202af0.jpg
http://i1234.photobucket.com/albums/...psa3f1cfd4.jpg
-
நான் சுவாசிக்கும் சிவாஜி! (15) - ஒய்.ஜி. மகேந்திரன்
என் தந்தை ஒய்.ஜி.பி., மத்திய அரசின் உயர் அதிகாரி என்பதால், சில ஆண்டுகள், சாஸ்திரி பவனுக்கு பின்னால் உள்ள அரசு குவாட்டர்சில் வசித்தோம். எதிர் வீட்டில், வசித்த சந்துரு என்ற நண்பருக்கு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள், விஸ்வநாத், கிர்மானி, சந்திரசேகர் எல்லாம் நல்ல நண்பர்கள்.
அவர்கள் ஒரு முறை, சந்துரு வீட்டுக்கு வந்திருந்த போது, சந்துரு என்னையும் அழைத்திருந்தார்.
அன்று இரவு, நாங்கள் அனைவரும் சாந்தி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த கவுரவம் படத்திற்கு போக முடிவெடுத் தோம்.ஜி.ஆர்.விஸ்வநாத்திற்கு, கவுரவம் என்ற பெயரை கேட்டதும், கண்கள் பெரியதாக விரிந்தன. 'சிவாஜி தானே அதில் ஹீரோ, நான் சிவாஜியின் பெரிய விசிறி. அப்படத்திற்கே போகலாம்' என்று தீர்மானமாக சொல்லி விட்டார். விஸ்வநாத், கிர்மானி, சந்திரசேகர், நண்பன் சந்துரு, என் சகோதரர் ராஜேந்திரன் மற்றும் நான் என, அனைவரும் சாந்தி தியேட்டருக்கு சென்றோம்.
படம் பார்க்கும்போது, பல காட்சிகளில் சிவாஜி நடிப்பை ரசித்து, பாராட்டி, கை தட்டிய விஸ்வநாத், 'மகேந்திரா, நீ கொடுத்து வைத்தவன், சிவாஜி உன்னைத் தொட்டு நடித்திருக்கிறாரே...' என்று, குழந்தை போல பேசினார். இந்த நிகழ்ச்சியை, சிவாஜியிடம் நான் சொன்னபோது, அவரும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தார். விஸ்வநாத்தோடு அன்று ஆரம்பித்த எங்கள் நட்பு, இன்றும் தொடர்கிறது. அதற்கு காரணம் சிவாஜி.
இயக்குனர் ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில், சிவாஜி நடித்த முதல்படம் ராஜா ராணி. அதில் வரும், 'சேரன் செங்குட்டுவன்' என்ற ஓரங்க நாடகத்தில், சிவாஜிக்கு, 867 அடி நீளமான ஷாட் இருந்தது. வசனம் பேசிக் கொண்டே நடிக்க வேண்டும். இப்போது இருப்பது போல, முதலில் படப்பிடிப்பு, பின், டப்பிங் பேசும் வசதி அப்போது இல்லை. படப்பிடிப்பின் போதே நடிகர், நடிகைகள் நடித்துக் கொண்டே, வசனங்களை பேச வேண்டும். ஒரே, 'டேக்'கில் நீண்ட வசனத்தை பேசி, உணர்ச்சிபூர்வமாக நடித்து முடித்தார் சிவாஜி.
படத்தின், 'ரஷ்' மற்றும் 'ரப் பிரின்ட்' பார்க்கும் போது தான், சவுண்ட் சரியாக பதிவு ஆகவில்லை என்று, தெரிய வந்தது. எப்படி இதை சிவாஜியிடம் சொல்வது என்று, சவுண்ட் இன்ஜினியரும், மற்றவர்களும் தயங்கினர். தகவல் அறிந்த சிவாஜி, இயக்குனர் பீம்சிங்கிடம், 'நான் வசனத்தை மைக்கிலே பேசிடறேன், வசனமும், படக்காட்சியும் ஒன்றாக ஒத்துப்போகிறதா பாருங்கள்...' என்றார். 867 அடி நீளமான ஷாட்டுக்குரிய வசனத்தை, மனப்பாடமாக, ஏற்ற, இறக்கத்துடன், ஒரே, 'டேக்'கில் பேசி முடித்தார். இது சிவாஜியின் அபார ஞாபக சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு.
எடிட்டிங்கின் போது, இயக்குனர் பீம்சிங் இந்த காட்சியைப் பார்த்தார். படமும், வசனமும் சரியாக ஒத்துப்போனது. ஆனந்தப் பெருக்கோடு சிவாஜியை கட்டிக் கொண்டார் .
ஆண்டுதோறும் நான் நடத்தும் சிவாஜியின் நினைவு தின விழாவில், இதைக் குறிப்பிட்டு, பீம்சிங்கின் மகனும், சிறந்த எடிட்டரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான பி.லெனின், 'டப்பிங் பேசுவோரில் பலர், பிரமாதமாக பேசுகின்றனர்; ஆனால், படத்தைப் பார்க்காமல், டப்பிங் பேசியவர் சிவாஜி தான்...' என்று, பாராட்டி பேசினார்.
சிவாஜியும், ஏ.பீம்சிங்கும் இணைந்து, ராஜா ராணி முதல், பாவ மன்னிப்பு, பார்த்தாலே பசி தீரும், பாலும் பழமும், மற்றும் படிக்காத மேதை என்று, 'பா' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும், பத்து படங்கள் செய்திருக்கின்றனர். இந்த பத்துமே பெரிய, 'ஹிட்!' வேறு எந்த நடிகரும், இயக்குனரும், தொடர்ந்து இவ்வளவு சூப்பர், டூப்பர் ஹிட் படங்கள் கொடுத்திருப்பரா என்பது சந்தேகம் தான்.
பாலும் பழமும் படம் ரிலீசான அன்று, இயக்குனர் பீம்சிங், சாந்தி தியேட்டரில், ரசிகர்களோடு அமர்ந்து, படம் பார்த்துக் கொண்டிருந் தார். ஒரு ரசிகர், 'சுவிட்சர் லாந்திலிருந்து ஒரு பார்சல் வருவதாக காட்டுகின்றனர். ஆனால், குளோஸ் அப் ஷாட்லே பார்த்தால், அதில், இந்திய தபால் தலை ஒட்டப்பட்டிருக்கிறதே...' என்று, கமென்ட் அடித்தார். அதைக் கேட்டவுடன், தான் செய்த தவறை உணர்ந்த பீம்சிங், அடுத்த நிமிடமே, தியேட்டரின் புரொஜக்டர் அறைக்குச் சென்று, அந்த, 'ஷாட்'டை வெட்டி, நீக்கியதுடன். மற்ற பிரின்ட்களிலும், நீக்கி விட்டார்.
அந்த அளவுக்கு தொழில் பக்தி நிறைந்தவர் பீம்சிங். இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கின்றனர்.
சிவாஜி நடித்த மலையாளப் படம், யாத்ரா மொழி. தமிழ் ஆளாக, தமிழ் பேசி, படம் முழுவதும் நடித்திருந்தார். அவரது மகனாக நடிகர் மோகன் லால் நடித்திருப்பார். படத்தை இயக்கியவர் பிரதாப் போத்தன். அந்தமான் காதலி படம் போன்று, யாத்ரா மொழி படத்தின் கதையும் இருக்கும். அதில், சிவாஜி ரொம்ப யதார்த்தமாக நடித்திருப்பார். ஒரு முறை மோகன் லாலிடம் பேசிக் கொண்டிருந்த போது, சிவாஜியைப் பற்றி ரொம்ப உயர்வாக பேசினார்.
சிவாஜி, என்னிடம், 'என்னமா நடிக்கிறான்டா இந்த மோகன் லால்...' என்று, பெருமையாக பல முறை சொல்லியிருக்கிறார். சிவாஜியின் நெருங்கிய நண்பர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கே. பாலாஜியின் மாப்பிள்ளை என்பது, மோகன் லாலுக்கு கூடுதல் பிளஸ்.
அந்தமான் காதலி படத்துக்கு, சிவாஜி உட்பட கலைஞர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரும், ஒரே கப்பலில், இரண்டு நாள் பயணம் செய்து, அந்தமானுக்கு சென்றோம். சிவாஜிக்கு பிரத்யேகமாக ஸ்பெஷல் கேபின் இருந்தாலும், அதிக நேரம், எங்களோடு தான் இருந்தார். பதினைந்து நாட்கள் மட்டும்தான் படபிடிப்பு. நான், ஏ.எஸ்.பிரகாசம், நடிகர் செந்தாமரை, மூவரும் அந்தமானில் பல இடங்களுக்கு சென் றோம். சிவாஜிக்கு மட்டும், 15 நாட்களும் படப்பிடிப்பு இருந்தது. 'இவங்க எல்லாம் ஊரை சுத்தறாங்களே... எனக்கு மட்டும் தினமும் ஷூட்டிங்...' என்று, குழந்தை மாதிரி ஆதங்கப்பட்டார்.
'உங்களை வைச்சுத் தானே, நான் படம் எடுக்கிறேன்...' என்று தயாரிப்பாளர் முத்தா சீனிவாசன் கூறுவார். அங்குள்ள தமிழ் மன்றம் சார்பில், எங்களுக்கு வரவேற்பு அளித்த போது. எல்லாரையும் பேச கூறினர். கடைசியாக சிவாஜி பேசிய போது, தேசியம் பற்றியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றியும், நிறைய பேசினார். அந்தமான் தீவுகளில் படப்பிடிப்பு நடந்த, முதல் தமிழ்ப்படம், அந்தமான் காதலி.
ஜாதி, மத, பேதம் இல்லாத உண்மையான இந்தியாவை, அந்த மானில் தான் பார்க்க முடியும். எல்லா ஜாதியினரும் எந்த பேதமின்றி, ஒன்றாக வாழ்கின்றனர், நன்றாக பழகுகின்றனர்;
அகில இந்திய வானொலி, அந்தமான் கிளைக்கு ஹகீம் என்பவர் இயக்குனராக அப்போது இருந்தார். அவரிடம், சிவாஜி சிபாரிசு செய்ததால், நடிகர் செந்தாமரையும், என்னையும் அழைத்து, வானொலி நாடகத்தில், நடிக்க வைத்தார் அவர். நாடகத்தில் நடித்தற்காக, எங்களுக்கு அரசிடமிருந்து சன்மானமும் கிடைக்கச் செய்தார்.
பராசக்தி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, பக்கத்து செட்டில், வேறு படத்திற்காக அஞ்சலி தேவி நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜி வசனம் பேசுகிற உச்சரிப்பு மற்றும் ஸ்டைலை பார்த்து, தன் படத்திற்கு அவரை, 'புக்' செய்தார். அஞ்சலி தேவி. அவரை 'முதலாளி அம்மா' என்று தான் சிவாஜி கூப்பிடுவார். அஞ்சலி தேவியும், சிவாஜியும் நடித்த படம், நான் சொல்லும் ரகசியம். அதில் இடம் பெற்ற, 'கண்டேன் உன்னை கண்ணாலே...' என்ற ஹிட் பாட்டை, சிவாஜிக்காக பாடியிருந்தார் பி.பி.ஸ்ரீநிவாஸ்.
— தொடரும்.
தொகுப்பு: எஸ்.ரஜத்