http://i62.tinypic.com/302qg4i.jpg
Printable View
BANNER BY KAMAL FANS
http://i61.tinypic.com/2ebfvxh.jpg
பெங்களுர் -ஆயிரத்தில் ஒருவன் திருவிழா
http://i62.tinypic.com/11jsrxy.jpg
பெங்களுர் மையப்பகுதியான மல்லேஸ்வரம் - சம்பிகே அரங்கில் இன்று பிற்பகல் 2மணிமுதல் மாலை 5 மணி வரை
ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டமும் , மாலை அணிவித்தல் ஆரவாரமும் ,அந்த சாலை முழுவதும் மக்கள் வெள்ளத்தில் நீந்தினார்கள் . காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர் . சாலை போக்குவரத்தும் ஸ்தம்பித்தது .
ரசிகர்களின் பாண்டு செட் ஊர்வலம் திரை அரங்கை நெருங்கிய போது பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள் .
1965ல் ஆயிரத்தில் ஒருவன் வந்தநேரத்தில் கண்டு களித்த மூத்த ரசிகர்கள் ஒன்றுகூடி கடந்த கால ஆரவார
நிகழ்ச்சிக்கும் , இன்றைய ரசிகர்களின் ஆரவாரத்தின் பெருமைகளையும் ஒப்பிட்டு பாராட்டி மகிழ்ந்தார்கள் .
49 ஆண்டுக்கு பிறகு இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டத்தை ஒன்று சேர்த்த மக்கள் திலகம் எம்ஜிஆரின் சாதனையை
போற்றி பாராட்டினார்கள் .
2011 அடிமைப்பெண் படத்திற்கு பின் மக்கள் வெள்ளத்துடன் ஆயிரத்தில் ஒருவனை - புதிய வடிவில் காட்சிக்கு காட்சி
ரசித்து படம் பார்த்த சந்தோஷம் எல்லையில்லாத ஆனந்தமே .
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவனை - பிரமாண்ட படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த திரு சொக்கலிங்கத்தின் உழைப்பிற்கு ரசிகர்கள் எல்லோரும் அவரை மனம் குளிர்ந்து வாழ்த்தினார்கள் .
பெங்களுர் சிவில் ஏரியா -
http://i59.tinypic.com/20zz1u9.jpg
சங்கீத் அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் - சம்பிகே அரங்கை போலவே மக்கள் வெள்ளத்திலும் ரசிகர்களின் ஆரவாரத்திலும் அரங்கமே திருவிழா போல காட்சி அளித்தது . பல் வேறு எம்ஜிஆர் மன்ற
அமைப்புகள் மக்கள் திலகத்தின் பதாகைகள் - கட் -அவுட்டிற்கு மாலைகள் அணிவித்து பட்டாசு வெடித்து
கொண்டாடினார்கள் .
இன்றைய தினம் சம்பிகே - சங்கீத் இரண்டு மாபெரும் அரங்கில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன்
வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தில் - பார்வையாளர்களின் மனதில் எம்ஜிஆர் என்ற மாமனிதரின்
சக்தியினை நினைத்து பரவசப்பட்டு ஆனந்தமடைந்தார்கள் .
சங்கீத் அரங்கின் படங்கள் நாளை .........