http://s10.postimg.org/e88vbm0gp/ccd.jpg
Printable View
சென்னை பாடி சிவசக்தியில் 14/07/2015 முதல் 3 நாட்களுக்கு மட்டும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் " கலங்கரை விளக்கம் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது.
அடுத்த மாதம் பொன்விழா ஆண்டு காண உள்ள " கலங்கரை விளக்கம் " வெள்ளித்திரையில் உலா வந்துள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம்.
http://i62.tinypic.com/2qb68aa.jpg
தகவல் உதவி ;முகப்பேர் நந்தா /ஓட்டேரி பாண்டியன் .
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, சென்னை சரவணாவில் இன்று (17/07/2015) முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். வழங்கும் "அலிபாபாவும் 40 திருடர்களும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i60.tinypic.com/2637jbd.jpg
தகவல் உதவி : ஓட்டேரி பாண்டியன்.
2015ம் ஆண்டில் , சென்னை சரவணாவில் இதுவரை வெளியான திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் 15 படங்களின் பட்டியல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
02/01/2015 - பறக்கும் பாவை.
16/01/2015 - உரிமைக்குரல்.
30/01/2015 - விக்கிரமாதித்தன்
06/03/2015 - தாழம்பூ
13/03/2015 - நாளை நமதே.
20/03/2015 - சிரித்து வாழ வேண்டும் (பாலாஜியில் )
10/04/2015 - ஊருக்கு உழைப்பவன்
17/04/2015 - விவசாயி.
24/04/2015க- இன்று போல் என்றும் வாழ்க.
01/05/2015 - தாய் சொல்லை தட்டாதே
29/05/2015- நான் ஏன் பிறந்தேன்
19/06/2015 - தொழிலாளி
03/07/2015 = ஆசைமுகம்
10/07/2015 - தெய்வத்தாய்
17/07/2015 - அலிபாபாவும் 40 திருடர்களும்
சென்னை சரவணா திரையரங்கில் இந்த ஆண்டு (2015) தொடங்கியதில் இருந்து 6 மாதங்களில் தலைவரின் 15 படங்களை வெளியிட்டுள்ளனர் என்றால் தோராயமாக 12 நாட்களுக்கு ஒரு படம் என்ற கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவுக்கு தலைவர் நடித்த படங்களுக்கு மக்கள் வரவேற்பும் ஆதரவும் இருப்பதால்தான் இந்த அளவுக்கு படங்களை வெளியிடுகின்றனர். சென்னை சரவணா தியேட்டர் என்றில்லை. தமிழகம் முழுவதும் மறு வெளியீடுகளில் தலைவரின் படங்கள் அதிக அளவில் வெளியாகின்றன.
திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பதிவில் இருந்து கோவையில் சிரித்து வாழ வேண்டும் திரையிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது. அதுவும் மிகக் குறுகிய காலத்துக்குள். மதுரை சென்ட்ரலில் ஏப்ரல் மாதம் வெளியான அடிமைப்பெண் திரைப்படம் ரூ.1,09,000/- வசூல் பெற்று சாதனை படைத்தது. சமீபத்தில் அதே திரையரங்கில் வெளியான நம்நாடு ரூ.1,03,000/- வசூலை குவித்தது.
சினிமாவில் நடிப்பதை தலைவர் நிறுத்தி 38 ஆண்டுகள் ஆகிறது. உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் கூட தலைவரின் படங்கள் நிகழ்த்தும் சாதனைகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த ஆண்டில் சென்னை சரவணா திரையரங்கில் வெளியான தலைவர் படங்கள் பற்றிய தகவல்களை நினைவில் வைத்திருந்து பதிவிட்டதற்கு நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நாளை முதல் கோவை
டிலைட் திரை அரங்கில்
தர்மம் தலை காக்கும்
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , சாதனை புரிய வருகிறார் பொன்மேடு கோபி.
31/07/2015 - வெள்ளி முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எழுப்பும் "உரிமைக்குரல் " தினசரி 4 காட்சிகள் வெள்ளித்திரையில் பவனி வருகிறது.
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i57.tinypic.com/dqlvux.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.