Quote:
செல்லமே
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `செல்லமே.'
உயிருக்கு உயிரான மனைவி முத்தழகியை பிரிந்து சினேகாவின் வசிய வலையில் சிக்கித் தவிக்கிறார் செல்லம்மாவின் அண்ணன் கடற்கரை. அவரை எப்படியாவது மீட்டு குடும்பத்துடன் சேர்க்க படாதபாடு படுகிறாள் செல்லம்மா.
இதனால் அண்ணன் கடற்கரையும், தங்கை செல்லம்மாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்கள். கடற்கரையின் முயற்சிகள் ஒவ்வொன்றையும் தடுத்து அவரை நிலைகுலையச் செய்கிறாள் செல்லம்மா. அதே நேரம் தன் அண்ணியான முத்தழகியை பாதுகாத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறாள்.
இதற்கிடையே கொடூர இளைஞர்களால் சீரழிக் கப்பட்ட அஞ்சலிக்கும், வாசுவுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை செல்லம்மாவே முன்னின்று செய்கிறாள். ஆனால் தாலி கட்டும் நேரத்தில் எல்லோரையும் திடுக்கிட வைக்கும் பரபரப்பான சம்பவம் நிகழ்கிறது. திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் "அய்யோ'' என்று அலறித்துடித்தபடி சிதறி ஓடுகிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது அந்த திருமணத்தில்?
தொடரின் நட்சத்திரங்கள்: ராதிகா சரத்குமார், ராதாரவி, டெல்லிகணேஷ், மாளவிகா, கன்யா, வரலட்சுமி, மகாலட்சுமி, நீலிமாராணி, அபிஷேக், ராஜ்காந்த், விச்சு, நந்தகுமார்.
திரைக்கதை: ராஜ்பிரபு. ஒளிப்பதிவு: காசி. இயக்கம்: சி.ஜே.பாஸ்கர். இவர் ராடன் நிறுவனத்தில் ஏற்கனவே சித்தி, அண்ணாமலை தொடர்களை இயக்கியவர்.
கிரியேட்டிவ் ஹெட்: ராதிகா சரத்குமார். தயாரிப்பு: ராடன் நிறுவனம்.