MUST READ FOR ALL DIE HARD FANS:
http://www.rediff.com/entertai/sivaji.htm
Printable View
MUST READ FOR ALL DIE HARD FANS:
http://www.rediff.com/entertai/sivaji.htm
அண்ணாவின் அன்புப்பிடியில் சிக்கிய சிவாஜி, அவருடனேயே 1946-ம் ஆண்டில் சில மாதங்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார். அப்போது அண்ணா 'திராவிட நாடு' பத்திரிகையை நடத்திக் கொண்டு இருந்தார். பத்திரிகைக்காக அண்ணா எழுதித் தரும் பக்கங்களை படித்து,அடுக்கி வைப்பதிலும், அச்சுப் பணிகளிலும் ஈடுபடுவார் சிவாஜி.
அறிஞரைப் பற்றி நடிகர் திலகத்தின் வாக்கு மூலத்தினை நோக்குங்கள் :
அன்பு என்கின்ற சொல்லுக்கு அண்ணா என்பது விளக்கம்.பாசப்பெருமழையில் நனைய வைப்பார். அவர் படிக்கும் நல்ல புத்தகங்களை என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்வார்.அவர் எழுதும் கட்டுரைகளை படிக்கும் முதல் வாய்ப்பும் எனக்குத்தான். அவரது பத்திரிகை வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். பொதுகூட்டங்களுக்கு அவர் செல்லும் போது உடன் என்னையும் அழைத்துச் செல்வார். மேடையில் என்னை பேசச் சொல்வார். எனக்கு கூச்சமாக இருக்கும்."
அப்போதெல்லாம் நமது நடிகர்திலகம் பொதுக்கூட்ட மேடைகளில் பேசும் போது, பேசிக் கொண்டே மேடையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருப்பார். இதைக் கண்ட அண்ணா 'கணேசுக்கு இந்த மேடையை விட நாடக மேடையே சிறந்தது, ஏற்றது' எனக் கருதி ஒரு நல்ல, பிரபல நாடக மன்றத்தில் அவரை இணைக்க திட்டம் தீட்டினார். அதன்படி, அன்று மிகப் பிரபலமாக இருந்த - சக்தி டி.கே. கிருஷ்ணசாமி நடத்தி வந்த - சக்தி நாடக சபாவில், தன் திறமையோடு கூடிய அண்ணாவின் சிபாரிசோடு , 10.8.1946 அன்று சேர்ந்தார் சிவாஜி கணேசன்.
அறிஞரை விட்டுப் பிரிய திலகத்திற்கு மனமில்லை. அண்ணாவுக்கும் அப்படித்தான். மிகுந்த பாசப் போராட்டத்திற்குப் பிறகு சக்தி நாடக சபாவில் இணைந்தார் நமது சிவாஜி.
பேரறிஞர் - நடிகர் திலகம் தகவல்கள் தொடரும் ...
அன்புடன்,
பம்மலார்.
NT's Vasantha Maaligai at Chennai Sathyam Cinemas, shown as a morning 8:30 special show today (19.9.2009), proved to be a good hit. It had a moderate crowd. If the show would have been a matinee or otherwise, the film would have become a grand hit. Anyway, Thanks to all those who had a Good VM morning at Sathyam today.
Regards,
Pammalar.
Dear Pammalar,
Your entry has given new blood to our thread. Thank you and keep us energetic by your posts.
Just came across a Dinamalar Page of 2006.
from the Pages of DinamalarQuote:
05-10-2006
01. Navarathri Golu celebrated in California ( Sivakumar Natarajan , News Reporter ,California
California celebrated Navarathri Golu with Indian Tradition and colorful golu and parties in every house, all most all nine days. Speciality in one home is the doll set of Thillana Mohanaanbaal scene, where Naatiya Peroli Padmini and Nadigar Thilagam Sivaji are kept as dolls in the competition of dance and Nagaswaram in Thiruvarur.
http://www.dinamalar.com/Ulagatamila...26/America.asp
A Navarathri Golu in 2006 in California features Thillana Mohanambal replica. Shows how NT has made an impact on World Tamils!
Great
Raghavendran
Dear Mr. Harish,
Thanks for your info. and a double thanks for the two excellent links.
Dear Raghavendran Sir,
Thanks for the info. The link looks amazing.
Wah!!! What a way to celebrate Navarathiri.
I also wish to have a Thillaanaa doll set like that.
Regards,
Pammalar.
ஜோ அவர்களுக்கும், க்ரோசோ அவர்களுக்கும், சாரதா அவர்களுக்கும் எமது நன்றி !
இன்று முதல் 9 நாட்களும் நவராத்திரி நாட்கள்.எனவே, பேரறிஞர்-நடிகர் திலகம் தகவல்களுடன், நவரசத் திலகத்தின் நவராத்திரி திரைப்படம் குறித்த தகவல்களையும் காண்போம்.
அன்புடன்,
பம்மலார்.
நவராத்திரி நியூஸ் :
ஆனந்த விகடன் இதழுடன் இணைப்பாக வந்த ஐ லவ் யூ விகடன் 20.11.2005 இதழிலிருந்து :
சினிமாவில் என்றென்றும் தனக்குப் பிடித்த காதல் காட்சியாக நடிகை ராதிகா கூறுவதை கவனியுங்கள் :
"காதல் காட்சி...இதுக்கு ஈடா...சான்ஸே இல்லை! நவராத்திரி திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்...சிவாஜியும், சாவித்திரியும் வசனங்களே இல்லாமல் கண்களாலேயே பேசிக் கொள்கிற காட்சி !!"
உயர்ந்த ரசனை. ராதிகா நல்ல நடிகை மட்டுமல்ல, நல்ல ரசிகையும் கூட. நடிகவேளின் மகளல்லவா !!!
நியூஸ் கன்டிநியூஸ் ...
அன்புடன்,
பம்மலார்.
நவராத்திரி நியூஸ் :
நவரசங்களின் சிறப்புக்களை உள்ளடக்கிய நவராத்திரி நமது நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியம். 1964 தீபாவளி வெளியீடாக 3.11.1964 அன்று வெளியானது.100 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றியையும், ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்றது.
அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன், விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் என்கின்ற தனது சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இயக்கிய முதல் திரைப்படம் நவராத்திரி. இதன் அபார வெற்றி, ஏபிஎன் அவர்களை , இதே பேனரில் அடுத்தடுத்து திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், தில்லானா மோகனான்பாள் போன்ற இந்திய சினிமாவின் தலைசிறந்த படங்களை , மாபெரும் வெற்றிப் படங்களை வழங்க உந்துசக்தியாய் விளங்கியது. அருட்செல்வரை நவராத்திரி தனிப்பெரும் தயாரிப்பாளராக உயர்த்தியது. விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ் என்கின்ற ஏபிஎன் பேனருக்கு லக்ஷ்மி கடாட்சம் கிட்டியதெல்லாம் நமது கணேச கடாட்சத்தால் மட்டும் தான். (அதாவது நடிகர் திலகத்தின் திரைப்படங்களால் மட்டும் தான்).
நமது நடிகர் திலகத்தின் நல்ல ராசியை கவனியுங்கள் !!!
நியூஸ் கன்டினியூஸ் ...
அன்புடன்,
பம்மலார்.
திருவிளையாடலில் நடிகர்திலகம் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டு, படம் முழுதும் கண்களை இமைக்காமலே நடித்திருப்பார்.Quote:
Originally Posted by HARISH2619
ஆனால், நக்கீரன் - தருமி படலத்தில், நக்கீரனுக்கு சிவன் குளோசப்பில் நெற்றிக்கண்ணைக் காட்டும்போது 'ட்ரிக்-ஷாட்' காட்சியில், நெற்றிக்கண் இமைப்பதாகக் காட்டியிருப்பார் ஏ.பி.நாகராஜன்.
ஏ.பி.என். செய்தது சரிதானா அல்லது கவனக்குறைவா?.
('நெற்றிக்கண் இமைப்பதாக இயக்குனர் காட்டியது குற்றம் குற்றமே'?)
அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் 'ரம்ஜான் ஈத் பெருநாள்' நல்வாழ்த்துக்கள்.
ஜாதி, மத வேற்றுமைகளைக் களைந்து, வலிமையான பாரதத்தை உருவாக்க இந்நன்னாளில் உறுதியெடுப்போம்.