அடுத்தமுறை தொல்காப்பியன் (திருச்செல்வம்) திரையில் வரும்போது கவனித்துப்பார்க்க வேண்டும், எந்த அளவுக்கு தலையில் வீக்கம் இருக்கிறதென்று. :shock:
ஏனென்றால் அந்த அளவுக்கு 'ஆனா'விடம் சுத்தியல் அடி வாங்கியிருக்கிறார். :lol:
Printable View
அடுத்தமுறை தொல்காப்பியன் (திருச்செல்வம்) திரையில் வரும்போது கவனித்துப்பார்க்க வேண்டும், எந்த அளவுக்கு தலையில் வீக்கம் இருக்கிறதென்று. :shock:
ஏனென்றால் அந்த அளவுக்கு 'ஆனா'விடம் சுத்தியல் அடி வாங்கியிருக்கிறார். :lol:
:roll: :rotfl2:
தான் வாங்கியிருக்கும் ஃப்ளாட் ஏரியாவுக்கு தன் படைகளுடன் மீண்டும் வருகிறாள் மேனகா. இம்முறையும் ஆதியும் கிரியும் கூடவே வருகின்றனர் (வேறு காரில்தான்).
தங்கள் ஃப்ளாட்டைத்தர மறுத்த ஓனர்களை மீண்டும் சந்தித்துப்பேசுகிறாள். அவர்கள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருக்கின்றனர் (அதாவது ஃப்ளாட்டை மேனகாவிடம் விற்பதில்லையென்ற முடிவில்). அவர்களுக்கும் ஆதித்யாவுக்கும் பேச்சு வார்த்தை முற்ற, ஆதி அவர்கள் மேல் பாய, நிலைமை மோசமாவதைக் கவனிக்கும் மேனகா, ஆதியை அடக்கி விட்டு, அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறாள் (????????). என்ன செய்வது, காரியம் நடக்கனுமே.
ஆனால் அவர்கள் இதனாலெல்லாம் சமாதானம் அடையவில்லை. 'ஏம்மா, நாங்க எங்க ஃப்ளாட்டுக்களை விற்கத்தயாராயில்லைன்னு எத்தனை தடவை சொல்றது?. இல்லேன்னு சொன்னா போக வேண்டியதுதானே, எதுக்கு வீணா வம்பு பண்றீங்க?'.
'நீங்க தரமாட்டேன்னா, நான் வாங்கிய இடங்களை வைத்து எப்படி என் ப்ராஜக்டைத் ஆரம்பிக்கிறது?'
'அது உங்க தலைவலி. எங்களைக்கேட்டுக்கிட்டா மத்த ஃப்ளாட்டுக்களை வாங்கினீங்க?. சும்மா சும்மா வந்து தொந்தரவு பண்ணாம வேறு வேலையிருந்தா போய்ப் பாருங்கம்மா'.
'ஆக, எனக்கு உங்க ஃப்ளாட்டை விற்பதில்லைங்கிற முடிவில் உறுதியா இருக்கீங்க. சரி, பார்க்கலாம். ஆதி வாங்க போகலாம்'.
தெரிஞ்சுபோச்சு, மேனகா ஏதோ ஒரு முடிவு பண்ணிவிட்டாள். இனி அந்த ஃப்ளாட் ஓனர்கள் என்ன அவதிக்கு ஆளாகப்போகிறார்கள் என்பது மூணாவது செக்மெண்ட்டில் தெரிய வருகிறது..
அபியின் வீடு....
அனந்திக்கு டாக்டரும், கார்த்திக்கும் சேர்ந்து, கைத்தடி உதவியில்லாமல் நடக்க வைக்க முயலுகின்றனர். லேசான வலியிருப்பினும் பொறுத்துக்கொண்டு நடக்கிறாள். இன்னும் கொஞ்சம் பழகினால் சரியாகிவிடுமென்றும், நாளை ஆஸ்பத்திரியில் வந்து ஒரு ஸ்கேன் எடுத்துக் கொள்ளும்படியும் டாக்டர் சொல்கிறார்.
டாக்டர் போனதும் தன் மகள், பேத்தியுடம் வள்ளி வருகிறாள். (யாரிந்த வள்ளி, அபியின் குடும்பம் சைதாப்பேட்டை வீட்டில் இருந்தபோது பக்கத்தில் இட்லி சுட்டு விற்றுக்கொண்டிருந்த ஆயா. ரொம்ப வருஷங்களுக்குப்பிறகு வந்திருக்கிறாள். வழக்கம்போல அவள் எப்படி இருக்கா, இவன் எப்படி இருக்கான் என்ற விசாரிப்புகள். ஆர்த்தி கல்யாணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் போனது பற்றியும், மனோவுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருப்பதையும் கற்பகம் சொல்கிறாள்.
தன் மகளின் கணவன், அவளைக்கொடுமைப்படுத்துவதாகவும், தினமும் குடித்துவிட்டு வந்து அவளைப்போட்டு அடிப்பதாகவும் அதனால் மகளையும் பேத்தியையும் அழைத்து வந்து விட்டதாகவும் வள்ளி சொல்கிறாள். உடனே ஆனந்தியின் கல்யாணம் பற்றி கேட்கும் அவள், என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் ஆனால்தான் நல்லது என்கிறாள். சில வினாடிகளுக்குள் இருவேறுபட்ட கருத்துக்கள்.
மேனகா வாங்கியிருக்கும் ஃப்ளாட்களுக்கு, ஆட்டோக்களில் ஏராளமான ரவுடிகள் வந்து இறங்கி, அவளால் இதுவரை வாங்கப்பட்டிருக்கும் ஃப்ளாட்டுகளில் சிலவற்றில் குடியேறுகின்றனர். குறிப்பாக, இடங்களை விற்க மறுத்தவர்களின் ஃப்ளாட்டுகளுக்கு எதிர் ஃப்ளாட் அல்லது பக்கத்து ஃப்ளாட் களில் குடியேறி, ஸ்டீரியோவை சத்தமாக வைத்துக்கொண்டு ஒரே ஆட்டமும் பாட்டுமாக அவர்களுக்கு இடைஞ்சல் செய்கின்றனர். அவர்கள் வீட்டுப்பெண்கள் போகும்போதும் வரும்போதும் பின்னாலேயே போகின்றனர். அவர்கள் மீது கைவைக்காதவரையில், அந்த ரவுடிகளை ஃப்ளாட் ஓனர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரவுடிகள் இவர்களின் எல்லையைத்தாண்டாமல், ஆனால் பழைய ஓனர்களுக்கு அச்சத்தைக்கிளப்பும் வகையில் செயல்படுவதால் அவர்கள் எந்த புகாரும் கொடுக்க முடியவில்லை. பொறுத்துப்பொறுத்துப் பார்த்தவர்கள், கடைசியாக மேனகாவையே நேரில் போய் சந்திக்கிறார்கள்... அவளோ படு கூலாக...
'யார் நீங்களெல்லாம்?'
'என்ன மேடம், எங்களை தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா?'
'சரி இப்போ எதுக்கு வந்தீங்க?'
'நீங்க குடி வச்ச ஆளுங்களால் எங்களுக்கு தொல்லைகள் தாங்க முடியவில்லை. அதான் எச்சரிக்க வந்தோம்'
'சரி என்ன செஞ்சாங்க?. உங்க வீட்டுப் பொண்ணுங்களிடம் தவறாக நடந்தாங்களா? இல்லே உங்க மனைவிகளை கையைப்பிடிச்சு இழுத்தாங்களா?. இல்லையே... அவங்க பாட்டுக்கு அவங்க ஃப்ளாட்டுகள்ளதானே இருக்காங்க?'
'இருந்தாலும் அவங்களை நீங்க உடனடியா காலி பண்ணனும். வீட்டுல அமைதியா ஒரு பூஜை பண்ன முடியலை, ஒரு சங்கீதம் கேட்க முடியலை'
'என்ன சொல்றீங்க?. இப்போதான் குடி வந்திருக்காங்க. அதுக்குள்ள எப்படி காலி பண்ண சொல்ல முடியும்?. அதுகு என்ன காரணம் சொல்வீங்க?'
'அவங்களை நீங்க குடி வெச்சது சரியில்லை. அவங்க அங்கே இருக்கக்கூடாது'
'என் ஃப்ளாட்ல யாரை குடி வைக்கணும், யாரை வைக்கக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு?'
'நீங்க இப்படி பிடிவாதமா பேசினா, நாங்க போலீஸுக்குப் போவோம்'.
'போங்க, உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்குங்க".
:lol:Quote:
Originally Posted by saradhaa_sn
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
இவ்வளவு விரைவாகவா?
2/3 கிழமைக்குப்பின் என்றல்லவா ..
mmmm
சில நேரங்களில் நாம் எதிர்பாராதவை நடப்பதில்லையா, அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.Quote:
Originally Posted by aanaa
திருவள்ளுவரே தன் கைப்பட எழுதிய 'கம்பராமாயண'த்தில் கோவலனும் கண்ணகியும், துரியோதனனின் சூழ்ச்சியால் கடல் கடந்து போக நேரும்போது... 'நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்' என்று எழுதி வைத்திருக்கிறாரே.
கம்பெனி அக்கவுண்ட்ஸ் ஃபைலைப்பார்த்துக்கொண்டிருக்கும் அபியின் கவனம், அதிலுள்ள ஒரு எண்ட்ரியில் நிலைக்கிறது. சஸ்பென்ஸ் அக்கவுண்ட்டில் கம்பெனி பணம் பதினைந்து லட்ச ரூபாய் வழங்கப் பட்டிருப்பதைப் பார்த்து சற்றே அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து, கிருஷ்ணனை அழைத்துக்கேட்கிறாள்.
'கிருஷ்ணன், நம்ம கம்பெனி அக்கவுண்ட்ல பதினைந்து லட்ச ரூபாய் யாருக்கோ கொடுக்கப்பட்டிருக்கிறதே, அது என்ன?'
'அது நாலைந்து மாசமாவே சஸ்பென்ஸ் அக்கவுண்ட்ல இருக்குதும்மா'
'அதான் ஏன்னு கேட்கிறேன்'
'அது வந்து... வந்து.... நம்ம ஆர்த்தி மேடம் வாங்கியிருக்காங்க'.
'ஆர்த்தியா?. அவளுக்கு எதுக்கு இவ்வளவு பணம்?. சரி அப்படியே அவள் வாங்கியிருந்தாலும் நீங்க ஏன் என்கிட்டே சொல்லலை?'
'அது வந்தும்மா... சொல்லணும்னுதான் நெனச்சேன். ஆனாலும் அவங்க உங்க சிஸ்ட்டர். அதனாலே அவங்களே சொல்லுடுவாங்கன்னு நெனச்சு, நான் சொல்லலை'
'சரி, நீங்க போய் உங்க வேலையைப்பாருங்க'
சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அபி, ஆர்த்தியை அழைத்துக்கேட்கவில்லை. மாறாக பெரிய யோசனையில் ஈடுபட்டிருக்கிறாள்.
'ஆர்த்தி ட்ராவல்ஸ்' அலுவலகம்....
'வா ஆர்த்தி, இதுதான் நம்ம ட்ராவல்ஸ் ஆஃபீஸ். பார்த்துக்கோ'
'என்ன ராஜேஷ், அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல வேலைகள் அதிகமா இருந்ததாலே கொஞ்ச நாளா இங்கே வர முடியலை. அதுக்காக இப்படி கிண்டல் பண்றீங்களே'.
அப்போது சிவசு, 'வாங்க மேடம், எப்படி இருக்கீங்க?'
'அதிருக்கட்டும் சிவசு, ட்ராவல்ஸ் எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு'.
'அதுகென்னம்மா, ஜோரா போய்க்கிட்டிருக்கு. நாம நெனச்ச மாதிரியே டேங்கர் லாரி நல்லா ஓடிக்கிட்டிருக்கு'.
அப்போது சிவசுவின் தங்கை, 'மேடம், டேங்கர் லாரி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தனியாக இந்த நோட்ல மெயிண்ட்டெயின் பண்ணிக்கிட்டு வர்ரேன். இந்தாங்க பாருங்க'.
அக்கவுண்ட்ஸைப்புரட்டிப்பார்க்கும் ஆர்த்தி, 'பரவாயில்லையே, டேங்கர் லாரி வாங்கியதில் இருந்து ஒருநாள்கூட நிற்காமல் ஓடிக்கிட்டிருக்கே'.
சிவசு, 'என்ன மேடம், இவ்வளவு பணம் போட்டு சும்மா நிறுத்தி வைக்கிறதுக்கா லாரி வாம்க்கியிருக்கோம்?'.
'இப்படியே தொடர்ந்து ஓடிக்கிட்டு இருந்தால் கூடிய சீகிரமே லோன் எல்லாம் அடைச்சிடலாம்'
'லோனை அடைக்கிறது மட்டுமில்லே மேடம், இன்னொரு லாரியும் வாங்கி விட்டுடலாம்'.
அபோது ஒரு சிறிய போலீஸ் படை உள்ளே நுழைகிறது.
'இங்கே ராஜேஷ்ங்கிறது யாரு?'
'நான்தான் சார்'.
டேங்கர்லாரி நம்பரைச்சொல்லி, 'இது உங்க வண்டிதானே?'
'ஆமா சார், என்ன விஷயம்'.
'டேங்கர் லாரியில் கள்ளச்சாராயம் கடத்தின குற்றத்துக்காக உங்களை அரெஸ்ட் பண்ணுறோம்'
ராஜேஷ், ஆர்த்தி இருவருக்கும் கடும் அதிர்ச்சி... 'இது எப்படி நடந்தது?' என்று. சிவசுவுக்கும் அதிர்ச்சி 'இவ்வளவு சீக்கிரம் மாட்டிக்கிட்டோமே' என்று.
'என்ன சார் சொல்றீங்க?. நாங்க இதுவரை பெட்ரோல் மட்டும்தான் லோடு பண்ணிப்போயிட்டிருக்கோம். என்ன சிவசு இதெல்லாம்?'
'என்ன ராஜேஷ் என்னைக்கேட்கிறீங்க?. எனக்கென்ன தெரியும்?. நான் உங்க கிட்டே வேலை செய்ற மேனேஜர் மட்டும்தான். மத்தபடி என்ன லோடாகுது, எங்கே போகுதுங்கிறதெல்லாம் உங்களுக்குத்தானே தெரியும்?'
'அடப்பாவி, உன்னை நம்பித்தானே ஒப்படைச்சேன்'.
அப்போது ஆர்த்தி, 'சார், ராஜேஷ் அப்படியெல்லாம் செய்யக்கூடியவர் இல்லே, இதுல ஏதோ தவறு நடந்திருக்கு. அவர் நிரபராதி. அவரை விட்டுடுங்க'.
'நீங்க யாரும்மா?'
'நான் ராஜேஷின் மனைவி, அதோடு நான் அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பார்ட்னர்'.
'என்ன மூணு பேரும் சேர்ந்து நாடகம் ஆடுறீங்களா?. நீங்க யாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. எங்க கடமையைச்செய்ய விடுங்க. கான்ஸ்ட்டபிள்ஸ், இவங்க ரெண்டு பேரையும் ஜீப்பில ஏத்துங்க'.
'சார், அவர் நிரபராதி, அவருக்கு ஒண்ணும் தெரியாது. அவரை விட்டுடுங்க'
ஊகும்.... ஆர்த்தியின் கூச்சல் எதுவும் பலிக்கவில்லை. ராஜேஷையும், சிவசுவையும் போலீஸ் அள்ளிக்கொண்டு போய் விட்டது...
காவல் நிலையம்....
ஏற்கெனவே அவர்களின் டேங்கர் லாரி டிரைவர் லாக்கப்பில் இருக்கிறான்.
ராஜேஷ் இன்ஸ்பெக்டரிடம், 'சார் இது அபாண்டமான பழி, எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. யாரோ உங்களுக்கு தவறான தகவல் தந்திருக்காங்க'.
'யோவ், நாங்களே சோதனை போட்டு கையும் களவுமா பிடிச்சிருக்கோம்'.
'ஏன் சார், எங்க வண்டி நம்பரைப்போட்டு வேறு யாராவது இதைச் செய்திருக்கலாமில்லையா?'
அப்போது ட்ரைவர், 'முதலாளி, இவங்க பிடிச்சது நம்ம லாரிதான்'.
'பார்த்தியா உன் டிரைவரே ஒப்புக்கொண்டான். இவங்க ரென்டுபேரையும் சேர்த்து லாக்கப்புல வைங்கய்யா'.
அப்போது ஆர்த்தி, 'சார், இதை நான் அனுமதிக்க முடியாது. நீங்க பண்றது அராஜகம்'.
'இங்க பாரும்மா, மேற்கொண்டு எதுவா இருந்தாலும் கோர்ட்டில வந்து பேசிக்க. இனிமேலும் நீ இங்கே நின்னு இந்த மாதிரி பேசிக்கிட்டு இருந்தா உன் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். கெட் அவுட்'.
அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் அலுவலகம்....
டிஜிட்டல் வேல்லி ப்ராஜக்ட் விஷயமா சைட்டைப்பார்வையிட முக்கியஸ்தர்கள் வந்திருக்க, அவர்களுடன் அபி பேசிக்கொண்டிருக்கிறாள்.
'பெங்களூர் போற ரோட்டில நாலைந்து இடம் பார்த்து வச்சிருக்கேன். அதுல பொருத்தமான ஒண்ணுதான் நாம முடிவு பண்ணனும். இன்னொரு இடம்கூட பார்த்துக்கிட்டிருக்கேன். கொஞ்சம் அவகாசம் கொடுத்தா அதையும் ரெடி பண்ணிடலாம்'.
'இல்லே மேடம், இப்பவே மேலேயிருந்து ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க. அதனால இதுவரை ரெடியாயிருக்கிற சைட்ஸ நாம பார்த்து அதுல ஒண்ணு ஃபைனலைஸ் பண்ணுவோம். வாங்க இப்பவே போகலாம்'.
அவர்களோடு அபி வெளியாகும் நேரம், ஆர்த்தி ஓடி வந்து, 'அக்கா ஒரு நிமிஷம் உள்ளே வாயேன்' என்று அழைத்துப்போகிறாள்.
'என்ன ஆர்த்தி?'
'அக்கா, ராஜேஷை போலீஸ்ல பிடிச்சிகிட்டுப் போயிட்டாங்க'.
'என்னது போலீஸா?. எதுக்கு?'
'எங்களுடைய டேங்கர் லாரியில சாராயம் கடத்தினதாக அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க'.
'உங்களுடைய டேங்கர் லாரியா? எப்போ வாங்கினீங்க?. என்கிட்டே சொல்லவேயில்லையே'.
'அதிருக்கட்டும்க்கா, இப்ப உடனே என்னோடு ஸ்டேஷனுக்கு வா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு'.
'இப்பவேவா, ஆர்த்தி ஒரு முக்கியமான விஷயமா சில வி.ஐ.பி.க்களோடு சைட் விசிட் போயிட்டிருக்கேன். நீ வீட்டுக்குப்போ. நான் போன்ல ஏற்பாடு பண்றேன்'.
'இல்லக்கா நீ இப்பவே வா அக்கா'.
'ஆர்த்தி என்ன இது? நான்தான் என் சூழ்நிலையை சொல்லிட்டேன்ல?. அப்புறம் ஏன் பிடிவாதம் பண்றே?. நான் போன்ல பேசி ஏற்பாடு செய்றேன். நீ பயப்படாமல் போ'.
அபி போய்விட்டாள். ஆர்த்தி முகத்தில் ஏமாற்றம்.
ஆனால் ஆஃபீஸுக்கு வெளியில் வரும் அபி, காரில் ஏறுமுன்னர் விஸ்வநாதனுக்கு போன் செய்து, விவரத்தைச்சொல்லி, சாலிக்கிராமம் போலீஸ் ஸ்டேஷக்குப்போகும்படி சொல்ல அவரும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அபியின் இந்த ஏற்பாடு ஆர்த்திக்கு தெரியாது. அநேகமாக அவள் உதவி தேடி 'ஆதியண்ணா'விடம் போகக்கூடும். (ஒரு யூகம்தான்... கற்பனைக்கென்ன காசா பணமா).
EXACTLY...... I also think she will approach Aadhi.
Saradha... super write up. Thank you.
நன்றி சுதா....Quote:
Originally Posted by sudha india
'ஆதியண்ணா'வுக்கும் ஆர்த்திக்கும்தான் TERMS ரொம்ப நல்லா இருக்கே, அதை வைத்துத்தான் ஒரு யூகம் வருகிறது.
(ஏன் எப்போவாவது வர்ரீங்க?. அடிக்கடி தலையைக்காட்டுங்க)