அன்புள்ள நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
இந்த திரிக்கு புதிதாய் வரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நடிகர் திலகத்தின் பாடல் வரிகளையே வரவேற்புரையாக வாசிப்பது வழக்கம். உங்களுக்கும் அதே முத்தான வரிகள்
நல்ல இடம் நீங்கள் வந்த இடம்!
உங்கள் அனுபவ பதிப்புகளை படிக்க ஆர்வம் ஏற்படுகிறது. காரணம் இரண்டு. ஒரோருவரின் ரசிப்பு தன்மையை ஒட்டி வெளிப்படும் எண்ணங்கள் வித்தியாசப்படும் என்பது முதல் காரணம் என்றால் இங்கே யாரும் அவ்வளவாக தங்கள கருத்துகளை பதிவுசெய்யாத கருடா சௌக்கியமா படத்தைப் பற்றி பதிவிடப் போகிறேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது இரண்டாவது காரணம். அது மட்டுமல்ல முதலில் எடுத்தவுடன் 80-களில் வெளியான ஒரு படத்தை பற்றிய பதிவு என்பதும் மேலும் ஒரு காரணம்.
அண்மைக் காலத்தில் எப்படி சாந்தியில் வெளியான படங்களுக்கு வெளியில் நடைபெற்ற கொண்டாட்டங்களை அழகான ஒளி ஓவியமாக்கினீர்களோ அதே போல் இந்த மன்றத்தில் உங்கள் பங்களிப்பும் இனிதாக அமைய வாழ்த்துகள்!
அன்புடன்