SUNDARAM WITH RANJITH
http://i43.tinypic.com/15cy2ia.jpg
Printable View
SUNDARAM WITH RANJITH
http://i43.tinypic.com/15cy2ia.jpg
என்றும் பழசை மறக்காத சுந்தரமும் (மக்கள் திலகம்) சுக்கு coffee விற்பனை செய்யும் தேங்காய் ஸ்ரீனிவாசனும். இருவருக்கும் இடையிலான உரையாடல் மிக அற்புதம். அனைவரும் மிக மிக ரசித்த காட்சி
http://i42.tinypic.com/i4kbva.jpg
இனிய நண்பர் திரு ரவி சார்
நெல்லை நகரில் மக்கள் திலகத்தின் '' ஒரு தாய் மக்கள் '' படம்
திரையிடப்பட்டுள்ள தகவலுக்கு நன்றி .
கோவை - நினைத்ததை முடிப்பவன் பட செய்திகள் - படங்கள்
எல்லாம் அருமை .
18.8.1973
மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் இன்று 100 வது நாள் .
1965ல் மிகப்பெரிய சாதனை புரிந்த மக்கள் திலகத்தின் ''எங்க வீட்டு பிள்ளை '' தமிழகத்தில http://i1110.photobucket.com/albums/...GEDC5897-1.jpg
15 திரைஅரங்கில் 100 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது . எட்டு ஆண்டுகள் கழித்து அவருடைய
இமாலய சாதனையை அவருடைய ''உலகம் சுற்றும் வாலிபன் '' தமிழகத்தில் 20 திரை அரங்கில் http://i39.tinypic.com/sya03k.jpg
100 நாட்கள் ஓடி முந்தைய சாதனையை முறியடித்த படம் . 1977 வரை இந்த சாதனையை மக்கள் திலகம் தன்னுடன் தக்க வைத்து கொண்டார் .தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் இந்த சாதனை
என்றென்றும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை மகாலட்சுமி திரை அரங்கில், எந்தவித ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும், சந்தடியும் இன்றி, ஒரு நாள் கூட நாளிதழ் விளம்பரமும் இல்லாமல், ஓசையின்றி, கடந்த 09-08-13 முதல் 15-08-13 வரை திரையிடப்பட்ட பொன்மனச்செம்மல் " இன்று போல் என்றும் வாழ்க " காவியத்தின் ஒரு வார வசூல் ரூபாய் 79,000/-
மீண்டும், மீண்டும் தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி நமது மக்கள் திலகம் ஒருவரே என்று இதுபோல் தொடர்ந்த சாதனைகள் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் நமது குல தெய்வம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் !
http://i44.tinypic.com/w9vdy9.jpg
அன்பன் : .செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் தனிச் சிறப்புக்கள்
1. மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த சில திரைப்படக் காட்சிகள் பல திரைப்படங்களில் இடம் பெற்றிருந்தாலும், அவர் நடிப்பதை நிறுத்தியும், மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னும், அவர் நடிப்பில் (கிராபிக்ஸ் முறையில்) புதிய திரைப்படங்களே (திருப்பதி ஏழு மலை வெங்கடேசா, கந்தா - கடம்பா - கதிவேலா போன்ற படங்கள்) வெளியாயிற்று.
2. அவரது பல திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகளை மட்டுமே வைத்து, " காலத்தை வென்றவன்" மற்றும் "நமது தெய்வம்" போன்ற திரைப்படங்கள் வெளியாகி, மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றன.
3. அவரது புகழ் பரப்பும் விதத்தில் வெளியாகி, மக்களின் வரவேற்பை பெற்ற மற்றுமொரு வெற்றிப்படம்
"தர்ம தேவன்".
4. உலகிலேயே திரைப்பட நடிகர் மற்றும் அரசியல் தலைவர் ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டு, முக்கால பூஜையும் நடைபெற்று வருகிறது என்றால், அது நமது இதய தெய்வம் புரட்சித் தலைவர் ஒருவருக்கே !
5. தமிழ் இலக்கியங்களில் ஒன்றான சிற்றிலக்கியங்களில் "உலா " பாடுவது என்பது ஒரு வகையாகும். இது பாட்டுடைத் தலைவன் பவனி வரும்போது, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,
பேரிளம்பெண், ஆகிய ஏழு பருவத்து மகளிரும், அந்த தலைவனின் சிறப்பில் மகிழ்ந்து, அவனிடம் மயங்கி, அவனிடம் நாட்டம் கொள்வதாக, கலி வெண்பாவால் தொடர் நிலைச் செய்யுளாகப் புலவர்களால் பாடப் பெறுவது.
கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான மலை நாடாண்ட சேரமான்
பெருமான் நாயனார், சிவபெருமான் மீது பாடிய "திருக்கயிலாய உலா" தான் முதன் முதலில் பாடப்பட்ட உலாவாகும். அதனால் இந்த உலாவுக்கு ஆதி உலா என்ற பெயரும் உண்டு.
தெய்வங்கள் மீதும், பண்டையக்கால மன்னர்கள் மீதும் பாடப்பட்ட இந்த உலா, நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் மீதும் "புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். உலா " என்ற பெயரில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களால் பாடப்பட்டிருக்கிறது.
மேலும் அவரால் (கவிஞர் முத்துலிங்கம் அவர்களால்) "எம். ஜி. ஆர். பிள்ளைத்தமிழும்" , அபிராமி அந்தாதி போன்று "எம்.ஜி. ஆர். அந்தாதியும்" பாடப்பட்டிருப்பது நமது பொன்மனச்செம்மலுக்கு கிடைத்த தனிச் சிறப்புக்களாகும்.
மக்கள் திலகத்தின் தனிச் சிறப்புக்கள் தொடரும்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
One of the True Devotees - Dear Ravichadnran Sir,
A NICE WORK. SALUTE TO YOUR HARD WORK AND EFFORTS IN POSTING THE IMAGES OF OUR BELOVED GOD, EVEN IN THE LATE NIGHT AND EARLY MORNING HOURS.
CONGRATULATIONS !
Thank you very much in bringing out our Thalaivar's images in a beautiful manner.
Ever Yours : S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
Realy true sir
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
திரியின் நண்பர்கள் அனைவருக்கும் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி இன் வணக்கங்கள் .
நீண்ட இடைவெளிக்கு பின்பு இணைவதில் ஆனந்தம் அடைகிறேன்
http://i40.tinypic.com/9ri0kl.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
சேலம் என்றுமே மக்கள்திலகத்தின் கோட்டை என்பதற்கு மக்கள்திலகத்தின் திரைப்படங்கள் தொடர்ந்து சாதனை படைத்தது கொண்டிருப்பதே காரணம்
அதில் இன்று 55 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் மாதம் வெளியான நமது புரட்சித்தலைவரின் புரட்சிபடைப்பு
நாடோடிமன்னன் பலமுறை திரையிடபட்டும் இன்று அதே ஆகஸ்ட் மாதத்தில் சேலம் அலங்கார் திரையரங்கில் வெற்றி பவனி வருகிறது
இன்று (18-08-2013) மாலை காட்சியில் நடோடிமன்னனுக்கு 55வது ஆண்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது
அதன் நேரடி காட்சிகள் உங்கள் பார்வைக்கு
http://i39.tinypic.com/15d59nd.jpg
சேலம் அலங்கார் திரையரங்கில் பேனர்
http://i40.tinypic.com/2z8c4ev.jpg
ஓலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழின் வரவேற்பு பேனர்
http://i44.tinypic.com/okqvsy.jpg
தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
(தூங்காதே)
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
(தூங்காதே)
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
(தூங்காதே)
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -
சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(தூங்காதே)
http://i44.tinypic.com/5djrky.jpg
Attachment 2502
In the year 1972
http://mgrperannews.blogspot.in/2013...superstar.html
Tripur Ravichandran and Vellore Ramamurthy had done their duty.
Here is my contribution.
MGR double action movie Netru Indru Naalai released in Mahalakshmi theater this week. My clicks.
http://i125.photobucket.com/albums/p...psb4a98649.jpg
And the article in srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2013/...i-2013-ii.html
http://i125.photobucket.com/albums/p...ps633ea64e.jpg
கம்ப்யூட்டர்
கண்டுபிடிக்கப்பட்ட
காலத்திற்கு முன்
அந்த காலத்து
photo shop வேலை இது .
Madakkulam Prabhakaran in facebook.
மக்கள் திலகத்தின் படங்கள் நேற்று தமிழ் நாட்டில் மக்கள் வெள்ளத்தில் திருவிழாவாக கொண்டாடிய செய்திகள் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
நேற்று இன்று நாளை - சென்னை - மஹாலக்ஷ்மி
நாடோடி மன்னன் - சேலம் - அலங்கார்
ரிக்ஷாக்காரன் - சேலம் - ரத்னா
நினைத்ததை முடிப்பவன் - கோவை - ராயல்
ஒளிவிளக்கு - திருப்பரங்குன்றம் - மீனாக்ஷி
குடும்ப தலைவன் -மதுரை - அரவிந்த்
ஒரு தாய் மக்கள் - நெல்லை - சென்ட்ரல்
மக்கள் திலகத்தின் 7 படங்கள் ஒரே நேரத்தில் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருப்பது சாதனையாகும் .
திரியின் நண்பர்கள் திரு ரவிச்சந்திரன் . திரு ரூப்குமார் திரு ராமமூர்த்தி -உங்களின் உடனுக்குடன் பதிவுகளுக்கு நன்றி .