http://i1065.photobucket.com/albums/...psfks7rl0m.jpg
Printable View
Shooting spot
http://i1065.photobucket.com/albums/...ps4qwgkcgk.jpg
டியர் செந்தில்வேல் சார்,
தங்கள் அபார உழைப்பில் இங்கு நீங்கள் பதிவிடும் ஆவணப்பதிவுகள் ஒவ்வொன்றும் அற்புதமானவை மட்டுமல்ல காணக் கிடைக்காத பொக்கிஷங்கள் கூட.
ஐரோப்பிய நாடுகளில் நடந்த சிவந்த மண் படப்பிடிப்பு பற்றி இயக்குனர் ஸ்ரீதர் எழுதிய 'பறந்து பறந்து படம் பிடித்தோம்' கட்டுரைதொடரும் இன்று நீங்கள் பதித்த 'அருணோதயம்' படத்தின் பாடல் காட்சிக்கான கொடைக்கானல் ஷூட்டிங் பற்றிய கட்டுரையும் மிக மிக அருமை.
ஸ்ரீதர் கட்டுரையில் இதுவரை அறிந்திராத பல்வேறு சுவையான விஷயங்கள் பொதிந்திருந்தன. இவையல்லாது நீங்கள் பதித்து வரும் அனைத்து ஆவணங்களுமே அற்புதம்தான்.
எனக்குப்பிடித்த பதிவுகளை பாராட்டுவதில் நான் என்றைக்கும் வஞ்சம், பஞ்சம், கொஞ்சமும் வைப்பதில்லை என்பது திரியை பார்வையிடுவோர்க்கு தெரியும். மனம் திறந்து பாராட்டுவேன். அந்த வகையில் உங்கள் ஆவணப்பதிவுகள் அனைத்தையும், அவற்றை பாதுகாத்து, தொகுத்து அளிக்கும் உங்கள் உழைப்புக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
[QUOTE=adiram;1261062]டியர் செந்தில்வேல் சார்,
ஆவணப்பதிவுகள் ஒவ்வொன்றும் அற்புதமானவை மட்டுமல்ல காணக் கிடைக்காத பொக்கிஷங்கள் கூட.
அனைத்து ஆவணங்களுமே அற்புதம்தான்.
எனக்குப்பிடித்த பதிவுகளை பாராட்டுவதில் நான் என்றைக்கும் வஞ்சம், பஞ்சம், கொஞ்சமும் வைப்பதில்லை என்பது திரியை பார்வையிடுவோர்க்கு தெரியும். மனம் திறந்து பாராட்டுவேன்.
THANKYOU SIR
NT Fans அமைப்பின் சார்பாக
திரையிடப்பட்ட "நிறைகுடம்"
திரைப்படத்தை நடிகர் திலகத்தை மிக நேசிக்கும் அன்பு நெஞ்சங்களோடு இணைந்து நானும் பார்க்கக்
கூடிய பொன்னான வாய்ப்பு.
ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் ஒரு மணி நேரத்தில்
படம் முடிந்து விடும். இந்த
நேரத்தில், இந்தப் படத்தின்
இறுதிக் காட்சிக்கு முந்தைய
காட்சியொன்றில் நடிகர் திலகம்
பேசுவதாய் வரும் ஒரு வசனம்
நினைவுக்கு வருகிறது.
"இந்த இரவு நீடிச்சுக்கிட்டே
இருக்கணும். இந்த இரவு
விடிஞ்சிடக் கூடாது".
ஆம்.
எங்களுக்கும் அப்படித்தான்
தோன்றுகிறது.
நட்ட நடுச் சாலையிலிருந்துதான் அகற்ற
முடியும்.. நல்லவர்களின்
நட்ட நடு நெஞ்சிலிருந்து
இந்தத் திருவுருவத்தை எப்படி
அகற்ற முடியுமென்று கேள்வி
எழுப்ப வைக்கிற அந்த அன்பு
உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.அதற்காக, இந்த
இரவு நீடித்துக் கொண்டே
இருக்க வேண்டும். விடிந்து விடக் கூடாது.
விளையாட்டாய் நடிக்கும் போது ரசிக்க வைத்து,
விழி கசக்கி அழும் போது
நம்மைத் துடிக்க வைக்கும் இந்தக் கலை வித்தகரை பார்த்துக்
கொண்டேயிருக்க வேண்டும்.
அதற்காக, இந்த இரவு நீடித்துக்
கொண்டே இருக்க வேண்டும். விடிந்து விடக் கூடாது.
நின்றாலும், நடந்தாலும், திரும்பி புருவம் தூக்கினாலும்,
சிரித்தாலும், அழுதாலும்,
நம் நடிகர் திலகம் எது செய்தாலும்...
கரவொலியும்,குரலொலியும்
எழுப்பி கும்பிட்டுக் கொண்டாடுகிற அய்யா நடிகர் திலகத்தின் அன்புக்குரிய ரசிகர்களோடு உட்கார்ந்து,
ஆயிரம் முறை ஓட்டினாலும்
"நிறைகுடம்" பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதற்காக, இந்த இரவு நீடித்துக்
கொண்டே இருக்க வேண்டும்.
விடிந்து விடக் கூடாது.
அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்...
எங்களுடைய தெய்வம் நடிகர் திலகம் - யாருக்கும் கனவில் கூட தீங்கு நினைக்காது..
ஆனால் அவரைச் சீண்டினால்..... அவருக்காக அந்த தெய்வமே இறங்கி வந்து அன்றே கொல்லும்..
இதை வரலாறு பலமுறை கூறிவிட்டது...
நடிகர் திலகத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..
அதற்கு இன்றைய நடிகர் சங்கத் தேர்தல் நிகழ்காலச் சான்று..
ஒரு நாளைக்கு மூன்று ஷிஃப்ட் ஷூட்டிங்... முடிந்தவுடன் வீட்டுக்குக் கூட போகமாட்டார்..
நேராக ஹபிபுல்லா சாலைக்கு வண்டியைத் திருப்பு ... கார் நேராக நடிகர் சங்க வளாகத்தில் போய் நிற்கும்..
ஒவ்வொரு செங்கல்லையும் வைத்துப் பார்த்து பார்த்து கட்டுவதை மேற்பார்வையிட்டு தொழிலாளர்களெல்லாரும் வீட்டுக்குப் போன பிறகு தான் வீட்டு நினைவு வந்து வீட்டுக்குப் போவார்.
நடிகர் திலகம், மேஜர், வி.கே.ஆர்... இந்த மூவரின் ஈடிணையற்ற உழைப்பு...
இந்த நடிகர் சங்க கட்டிட செலவின் பின்னால் பல நலிந்த நடிகர்களின் வியர்வையிலும் ரத்தத்திலும் உழைத்த உழைப்பில் கட்டிய சந்தா என்கிற அஸ்திவாரம்.. அதன் மேல் நாம் நிற்கிறோம் என்பதைக் கனவில் கூட மறக்காமல், அதன் காரணமாய் ஒவ்வொரு செங்கல்லுக்கும் செலவு கணக்கைத் துல்லியமாய் வைத்து, ஒரு நயா பைஸா கூட தேவையற்ற செலவு செய்யாமல் வங்கியில் மிகவும் சிறந்த அமைப்பு என்ற நற்பெயரையும் வாங்கி...
சிவாஜி என்கிற சிங்கத்தின் உழைப்பின் உருவாய் உருவகமாய் கம்பீரமாய் எழுந்து நின்ற அந்த பிரம்மாண்டமான கட்டிடம்..
தீப்பெட்டியைப் போல ஒரு இயந்திரத்தை வைத்து பொல பொல வென இடித்துத் தள்ளிய போது...
உதிர்ந்தது அந்த கட்டிடம் மட்டுமல்ல...
நடிக சமுதாயத்தின் முதுகெலும்பும் தான்...
இன்று வெறுமனே காட்சியளிக்கும் அந்த வெறுமனையின் கீழே தோண்டினால்
கிடைக்கக் கூடியது தண்ணீரல்ல..
நடிகர் திலகம் என்னும் ஆன்மா சிந்திய கண்ணீர்..
கோடானு கோடிசிவாஜி ரசிகர்களின் கண்ணீர்..
இன்றைய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்
உணர்த்துவது என்ன...
இதன் பின்னால் உள்ள பாடம் என்ன...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு...
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் ..
சொல்ல வேண்டியவர்களுக்கு, சொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய விதத்தில்
சொல்லி விட்டது..
புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய சரியான தருணம் இது.
நடிகர் திலகம், கமல், நாசர்
தேவர் மகன் குழுவுக்கு
முதல் மரியாதையைத் தந்த
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.
கமல் புரியும் படி பேச மாட்டார்..
அவர் பேசுவது அவருக்கே புரியாது...
அவர் கருத்தில் தெளிவிருக்காது..
என்றவாறெல்லாம் நிலவி வந்த விமர்சனங்களனைத்தையும் பொடிப்பொடியாக்கி
தெள்ளத்தெளிவாக
குழந்தைக்குக் கூட புரியும் படியாக
நெத்தியடியாக
நடிகர் சங்கத்தேர்தல் முடிவுகளின் மூலம் சொல்லி விட்டார் கமல்..
தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதி, தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதில் தெளிவு, என கமல் நடிகர் சங்கத் தேர்தலில் எடுத்த முடிவும் கூறிய கருத்துக்களும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
எல்லாவற்றையும் விட
இந்திய நடிகர் சங்கம் எனக் கூறியது...
Punch to the core.
Hats off Kamal