http://i65.tinypic.com/x9c2o.jpg
Printable View
நம்பியவர்களை எம்ஜிஆர்என்றுமே ஏமாற்றியதில்லை
நடிகருக்கு நாடாளத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஒரே பதில்: இவரது மரணம்வரை இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை என்பதே. கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கினாலும், அவர்மீது வைத்திருந்த மரியாதையை எம்ஜிஆர் எப்போதும் குறைத்ததேயில்லை. முக்கியமாக, தன் இறுதி மூச்சுவரை ‘கருணாநிதி’ என்று அழைக்காமல் ‘கலைஞர்’ என்று மரியாதையுடன் அழைத்து வந்தார். அதுதான் எம்ஜிஆர்.! இவருடன் நடித்த நடிகர்கள் பலபேர் இவரது கட்சியில் அடைக்கலமாகி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியலில் வலுவான பதவிகளைப் பெற்றனர். இவரது தொண்டர்கள் மந்திரிகளாக மாண்பு பெற்றனர். கிராமங்கள்தோறும் எம்ஜிஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டு கோலோச்சிக் கொண்டிருந்தது. ஏழைகளைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக கர்மவீரர் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழைக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி சாதனை புரிந்தார்.
அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும், தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை. அவரை முழுமையாக நம்பியவர்களை அவர் என்றுமே ஏமாற்றியதில்லை, மாறாக அவரால் பலனடைந்து பணம் சம்பாதித்தவர்கள் ஏராளம்.
courtesy - vallamai
Courtesy : Dinathanthi 21-11-2015
http://i65.tinypic.com/wwcffb.jpg
The hindu : 10/28/2015
http://i67.tinypic.com/sze8ms.jpg
The Municipal Elementary School, Yanaiadi, here the alma mater of late matinee idol and Chief Minister M.G. Ramachandran, has risen up marvellously shedding its nature-ravaged bruises with a generous donation of Rs. 60 lakh by the State government.
Kumbakonam in Thanjavur district was where MGR spent a significant part of his childhood and as a boy he attended school here between 1922 and 1925. The townsmen used to fondly recall the association of MGR with the temple town through the ages as he rose in social prominence first through cinema and then in the political sphere to reach the pinnacle of State power in 1977. Over the years, the school lost its sheen due to the vagaries of nature and turned a pale shadow of its former self, resulting in its alumni, the public and even the AIADMK cadres petitioning the State government to take efforts and restore the school.
The Municipal Administration and Water Supply Department sanctioned Rs. 60 lakh to spruce up the school. With the funds made available, the Kumbakonam Municipality, under whose control the school is functioning, readied a new building and Chairperson Rathna Sekar declared it open that has quite a lot of modern facilities, including stainless steel desks and chairs, blackboards and other pupil-friendly utilities to rival private educational institutions. The guests who attended the opening ceremony garlanded a life-sized MGR statue on the campus and recalled the town’s association with the leader.
மக்கள் திலகம்,
புரட்சித் தலைவர்,
பொன்மனச் செம்மல்,
புரட்சி நடிகர்
என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அவரது மறைவு தினம் டிசம்பர் 24.
பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜீஆர்.
அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல்.
அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே வலியுறுத்தின.
அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, உற்சாகத்தினைக் கொடுக்கின்றன.
கூத்தாடியென்றார்கள்.
மலையாளியென்றார்கள் .
ஆரம்பகாலத்தில் எத்தனையோ பல வருடங்கள் சென்னையில் அவரது கால்களே படாத இடமில்லை என்னுமளவுக்கு அலைந்து திரிய வைத்தது காலம். தயாரிப்பாளர்களெல்லாரும் அவரை ஆரம்பத்தில் பல்வேறு வழிகளில் ஏளனம் செய்து ஒதுக்கி வைத்தார்கள். துப்பாக்கிக் குண்டுகள் உடலைப் பதம் பார்த்தன. வாழ்வில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் கொஞ்சமல்ல. இளமையில் வறுமை அவரை வாட்டியது. துயரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அவரை ஆட்கொண்டன. முதல் மனைவி வறுமை காரணமாகக் கேரளாவில் இறந்த பொழுது அவர் அங்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள வழக்கப்படி மனைவியின் இறுதிக் கிரியைகள் முடிந்து விட்டன.
வாழ்வில் அனைத்துச் சவால்களையும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர்.
இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக இருந்து மறைந்தவர்
எம்ஜிஆர். இறந்து இருபதாண்டுகளைக் கடந்த நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல
thanks pathivukal.com