https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...17&oe=5904C78E
Printable View
தொடருங்கள் செந்தில் (சக்தி)வேல். அருமை.
Senthil sir superb,all rare images ,many of them never seen before
செந்தில்வேல் சார்...
ஏதோ அவசரத்தில்தான் செந்தில்வேலை, சக்திவேல் என்று கோபால் சார் மாற்றி அழைத்து
விட்டார் என்று நினைத்திருந்தேன்.
அய்யனின் சிறப்பை ஏற்க மறுப்போரைத் துளைக்கும் விதமாய் ஆவண வேல்களை அடுத்தடுத்து எரியும் நீங்கள் "சக்திவேல்" தான்.
இதயத்திலிருந்து வாழ்த்துகள். நன்றிகள்.
I talked about Mudhal Mariyadhai ,Senthilvel.
Thanks for all
வெள்ள வேட்டி.சாதா சட்ட.துண்டெடுத்து ஒரு உருமா கட்டு.கையில அருவா. வீட்டுக்குள்ள பாக்குற பெரிசு வேற.வீதில இறங்கிட்டா அது வேற.பெரிசுக்கு வீடு கொடுக்காத சுகத்த வெட்ட வெளி கொடுக்குது.இதுக கூட உறவுகதானே சந்தோசப்பட்டுக்கற மனசு அது.மலைச்சாமி சாந்தமான மனுசந்தான்.அவுரு கிட்டயும் பெரிய வீரம் ஓளிஞ்சுகிட்டுதா இருக்கு.அந்த வீரத்த அவுரு புடிச்சிருக்கிற அந்த அருவாவ கேட்டா கூட சொல்லும்.அருவா கைப்புடிய புடிச்சு அத பின்ன மடக்கின மாதிரி நடப்பாரு பாருங்க அதுல தெரியும் அவுரு கெத்து.
மனுசன் செருப்பு போட்டு பாத்திருக்காது அந்த ஊரு.வெறுங்காலு தான். அதுக்கு கூட ஒரு காரணம் இருக்கு.எந்த காலுல விழுந்து மாமன் தன் பொண்ண கட்டிக்கோன்னு கெஞ்சுனானோ அந்த கால்ல போட்ட செருப்பா பொஞ்சாதிய நினச்சதாலதான், அந்த சாமி செருப்பே போடர்றதில்ல.
குதிரையில் ஏறி அய்யனார் போற மாதிரி நடந்து போறாரு மனுசன்.
நடந்து போற மனுசன் மேல பூமில இருக்கற முள்ளுக்கு என்ன கோபமோ அவரு கால முள்ளு தச்சுருச்சு.
முள்ளு தச்ச இடம் செங்கோடன் வீட்டு வாசல்ல.செங்கோடன் அந்த ஊருக்கு செருப்பு தைக்கிறவன்.
"டேய் செங்கோடா "
பெருசு கூப்பிடுது.
தூக்கத்துல கேட்டாலும் இந்த குரலுக்கு உருவம் ஒண்ணுதான்.அது செங்கோடன் மனசுல பதிஞ்சது.
"அய்யா " .இது செங்கோடன்.
" கால்ல முள்ளு தச்சுருச்சு ."
கிடுக்கியோடு முள்ளெடுக்கறான் செங்கோடன்.
பெருசு பேச்சு பெரும்பாலும் ஒத்த பேச்சுதான்.ஆனா அது பெரும்பேச்சு.
அப்பிடித்தான் அது அப்ப சொல்லுது.
"உன் வீட்டுகிட்ட தான் என் கால்ல முள்ளு தைக்கனுமா"
அவன் கேக்குறான்
"ஊருக்கே செருப்பு தக்கிறேன்.உங்க கால்லுக்கு ஒரு செருப்பு தச்சு போட முடியலயே "
பெருசு போகுது ஒண்ணும்சொல்லாம.
கட்டுன பொஞ்சாதிகளுக்கு கூட தெரியாத சில சங்கதி அந்த ஊரு வண்ணானுக்கும், நாசுவனுக்கும் தெரியும்பாங்க.செங்கோடன் கூட அத போலத் தானே.அவனுக்குத் தெரியுமே பெருசோட கத.
***
ஆண்டவன் படச்சானா இல்ல, அதாவே அமஞ்சதா இயற்கை.அது ஆருக்கும் தெரியாது.
பாரப்பட்டி கிராமந்தான் மலைச்சாமியோட ஊரு.மலைச்சாமியோட சந்தோசங்கள்ள ஒண்ணு தான் இசப் பாட்டு படிக்கிறது.வித போடறது, நாத்து நடறது, களை எடுக்கறதுன்னு அது பாட்டுக்கு அந்த வேலைக நடக்கும் .கூடவே பாட்டுப் படிக்கறதும் நடக்கும்.விவசாயம் வயத்துக்குன்னா பாட்டு மனசுக்கு.இது எல்லா ஊர்லயும் உண்டுதான்.
பெருசும் சில சமயம் குசும்பு வேலையெல்லாம் செய்யறதுண்டு.
"ஆம்பளக்கு ஒரு வேல
பொம்பளக்கு நூறு வேல"
அப்படிம்பாங்க.
குடும்பத்துல என்ன சண்டயோ, வயல் வேலக்கு வந்தவங்க, சில சமயம் பாடாம தேமேன்னு வேல செய்வாங்க.அதப் பாக்கற பெரிசுக்கு, இவிகள எப்படியாச்சு பாட வச்சாகணும்ற காரியமா தொட்டில்ல போட்ட குழந்தய கிள்ளி விட்டிருவாரு.அழுக சத்தம் கேட்டு வர்ற ஆத்தா ஆராராரோ பாடி தொட்டில ஆட்டுவா.
இப்ப எப்படி பாட்டு வந்துச்சுன்னு வெளிய வரும் பெரிசு.
***
முதல் மரியாதை...
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...ad&oe=58FF5F10
Deva Chandran
Deva Chandran சாம்ராட் அசோகர் நேரில் வந்து எம் தலைவரை பார்த்திருந்தால் மிகவும் பிரமித்து போய் இருப்பார் - உண்மையான அசோகர் அவரா அல்லது நடிப்புலகின் சக்ரவர்த்தியா என்று மிரண்டிருப்பார் - சிங்கம்லே
Like · Reply · 2 · 18 hrs
Sundar Rajan
Sundar Rajan இந்த கம்பிரம் யாருக்கு வரும் தலைவரை தவிர
Like · Reply · 2 · 17 hrs
Srinivasa Narasimhan
Srinivasa Narasimhan அசோக சக்ரவர்த்தியே, இதுபோல் கம்பீரமாக நிற்கமுடியுமா ? சந்தேகமே ! இதுபோன்று நின்றால் ..... சண்டையே கிடையாது ஒன்லி சரண்டர்தான் !
Like · Reply · 1 · 14 hrs
Mohamed Farook
Mohamed Farook புருவங்களை நெரிப்பாரே..யாராலும் முடியாது..
Like · Reply · 1 · 14 hrs
வாழ்த்துகள்.. செந்தில்வேல் சார்.
"முதல் மரியாதை" தொடர் அற்புதம்.
எளிய, இனிய கிராமிய நடையிலேயே வர்ணனையை நகர்த்திச் செல்லுவது மிகப் பொருத்தம்.
ஒரு சந்தேகம்... இதில் அய்யாவின் பெயர் "மலைச்சாமி" இல்லை?
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 163– சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...0sivakumar.jpg
வெகு நேரம் சமாதானப்படுத்திய பின் அசோகன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
சரவணன் மேலும் தொடர்ந்தார், `இன்று அசோகன், சிவாஜி இருவரும் இல்லை. இவர்களைப்பற்றிச் சொல்வது நாகரிகமில்லையென்றாலும், இந்த சம்பவத்தை நான் பகிர்ந்து கொள்வதற்குக் காரணம், கலைஞர்களிடையே ஏற்படும் சிலவகை மனக்கசப்புகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
அதிலும் தமிழ் திரையுலகில் இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் எல்லா காலங்களிலும் இருந்து வந்திருக்கின்றன. இதில் எந்த ரகசியமும் இல்லை. நடிகர்திலகம், அசோகன் இருவருமே அந்தப் படத்தில் மிக நன்றாக நடித்தார்கள் என்பது உண்மை.
சொல்லப்போனால், சிவாஜி சொல்லிக் கொடுத்ததில் ஒரு சதவீதம்தான் அசோகன் நடித்தார் என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து. அதுவே பெரிய ஹிட்.
படம் நூற்றியிருபத்தைந்து நாட்கள் ஓடி பெரும் வெற்றி பெற்றது. அந்தப் படம்தான் 'உயர்ந்த மனிதன்'.
படத்தில் நடிக்க முதலில் சிவாஜி எப்படி சம்மதிக்கவில்லையோ அப்படியே இயக்குநர் பஞ்சு சாரும் சம்மதிக்கவில்லை. அவரையும் `கன்வின்ஸ்’ செய்தோம்.
படத்தில் சிவாஜி நடிப்பது உறுதியானதுமே அவரிடம் சம்பளம் பற்றிக் கேட்டோம்.
`சண்முகம் வந்து உங்களிடம் பேசுவார்’ என்றார் சிவாஜி. அப்படியே சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகம் வந்தார்.
`நீங்க என்ன கொடுத்தாலும் வாங்கிக்கலாம்னு அண்ணன் சொல்லச் சொன்னார்’ என்றார்.
எங்களுக்கு அது சரியென்று படவில்லை. அந்த மாபெரும் நடிகர் அப்போது என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாரோ அதைத் தருவதுதான் நியாயம் என்று முடிவெடுத்தோம்.
`ஏவி.எம். நிறுவனம் என்ன சம்பளம் தந்தாலும் ஓ.கே. என்று சிவாஜி தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. சண்முகத்திடம் பேசிப்பேசி கடைசியில் சிவாஜியின் அப்போதைய சம்பளம் என்ன என்ற விவரம் கிடைத்தது. கடைசியாக ஏ.பி. நாகராஜன் படத்துக்கு அண்ணன் வாங்கிய சம்பளம் இரண்டு லட்சம் ரூபாய்! எங்களுக்கு அதில் ஒரே பாயிண்ட்டுதான். ஏ.பி.என். படம் வண்ணப்படம். `உயர்ந்த மனித'னோ கறுப்பு வெள்ளை. மேலும் ஏ.பி.என். படத்தில் காஸ்ட்டியூம்கள் ஹெவியாக இருந்தன. கனமான அணிகலன்களையும் அணிய வேண்டும். அதே போல படப்பிடிப்பு நாட்களும் அதிகம்.
`உயர்ந்த மனிதன்’ படத்தில் அந்த சிரமங்கள் எதுவும் இல்லை. ஷூட்டிங் நாட்களும் அங்கே அதிகம். எனவே, சிவாஜிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் சரியாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. இதை சண்முகத்திடம் தெரிவித்தோம். மறுபேச்சின்றி ஒப்புக்கொண்ட அவர், `ஆனால் ஒரு கண்டிஷன்’ என்றார்.
`இப்போ காலணா தரக்கூடாது. படம் முடிஞ்சு சென்ஸார்ல ஓ.கே. ஆனதும் ஒரே பேமண்ட்ல மொத்தமா கொடுக்கணும்.’
ஆனால் `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பில் சிறு தடங்கல் ஏற்பட்டது.
நாங்கள் `குழந்தையும் தெய்வமும்’ படத்தை இந்தியில் `தோ கலியான்’ என்று எடுத்தபோது அதை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது `பாரண்ட் ட்ராப்’ என்ற கதையின் அடிப்படையிலேயே `வாபஸ்’ என்ற பெயரில் வடக்கில் வேறொரு கம்பெனி ஒரு படத்தை எடுத்து
வந்தது.
`பாரண்ட் ட்ராப்’ கதையைத் தழுவித்தான் ` குழந்தையும் தெய்வமும்’ எடுத்தோம். எனவே `வாபஸ்’ வெளியாவதற்குள் நாங்கள் `தோ கலியான்’ படத்தை ரிலீஸ் செய்தாக வேண்டும்.
அதற்காக நடுவில் கொஞ்ச காலம் ` உயர்ந்த மனித’னை நிறுத்தி வைத்துவிட்டு 'தோ கலியா'னில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். சுமார் எட்டுமாத காலம் பிரேக் விழுந்துவிட்டது.
இந்த இடைவெளி சிவாஜிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
`ஒரு வேளை ஏவி.எம். `உயர்ந்த மனிதனை’ டிராப் செய்துவிட்டார்களோ’ என்ற சந்தேகம். சண்முகம் வந்து கேட்கவும் செய்தார்.
இது தெரியவந்ததும், `முதல்ல ஒரு ஐம்பதாயிரம் கொண்டு போய் சண்முகம் ஆபீஸ்ல அட்வான்ஸை கொடுத்துவிட்டு வாங்கப்பா’ என்றார் அப்பச்சி!
அதே போல கொண்டு போய் பணத்தைக் கட்டாயப்படுத்திக் கொடுத்துவிட்டு வந்தோம்.
`உயர்ந்த மனிதன்’ படத்தை பற்றி சொல்லும்போது எங்களுக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் சிவகுமாருக்கு அதில் கிடைத்த நல்ல ரோல்.
`காக்கும் கரங்கள்’ படத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிவகுமார் நடித்த காட்சிகளைப் பெருமளவு வெட்ட வேண்டி வந்ததால் சிவகுமார் மிகவும் மனமுடைந்து போனதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
`உயர்ந்த மனிதன்’ படத்தில் அவருக்கு நல்ல ரோல் தந்தோம்.
அது மட்டுமல்ல, அதற்குப் பிறகு ஏ.பி.நாகராஜன் எடுத்த ஒரு படத்தில் முருகர் வேடத்துக்கு சிவகுமாருக்கு தெரியாமலேயே அவரது பெயரை அப்பச்சி சிபாரிசு செய்தார்.
சிவகுமாரின் நீண்ட திரையுலக வாழ்க்கைக்கும், வேகமான முன்னேற்றத்திற்கும் ஏவி.எம். நிறுவனமும் ஓரளவு காரணமாக இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி!
'உயர்ந்த மனித'னில் சிவகுமாருக்கு `கேள்விக்கென்ன பதில்’ என்று ஒரு பாடல் வைத்திருந்தோம். முதலில் பாட்டை ஒலிப்பதிவு செய்துவிட்டோம். பாடல் காட்சியை வெளிப்புறப் படப்பிடிப்பில் முடித்துக் கொண்டும் வந்தாயிற்று.
ஆனால் அப்பச்சிக்கு அந்தக் காட்சி பிடிக்கவில்லை.
ஏனென்றால், கதையின்படி சிவகுமார் ஒரு படிக்காத பையன். காதலியோ காலேஜில் படித்த பெண் மாதிரி ஒரு கிரேஸ்புல் கேரக்டர். அந்த காதல் காட்சியில் இருவரும் ஒருவரையொருவர் தொடாமல் நடித்தால் அழகாக இருக்கும் என்று அபிப்ராயப்பட்டார் அப்பச்சி!
ஆகவே மீண்டும் பாடலை கொஞ்சம் மாற்றி இசையமைத்து அதே மாதிரி காட்சியையும் ரீ-ஷூட் செய்தோம். இப்போது கூட கவனித்துப் பார்த்தால், அந்தப் பாடலில் இசைத்தட்டில் இருப்பதற்கும், படத்தில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கும்.
`உயர்ந்த மனிதனில் பாட்டின் நடுவில் வசனங்களோடு `அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற பாடல் அப்போது புதுமை.
இந்த புதுமைக்கும் என் சகோதரர் குமரன்தான் காரணமாக இருந்தார்.
அச்சமயம் சென்னையில் பிரபலமாக இருந்த ஒரு ஆங்கிலப்படத்தை எம்.எஸ். விஸ்வநாதனைப் பார்க்கும்படி சொல்லி, அதில் ஒரு காட்சியில் வந்தது போல, அந்த இன்ஸ்பிரேஷனை வைத்து பாட்டையும் வசனத்தையும் இணைக்குமாறு ஐடியா கொடுத்தார் குமரன்.
அதே போல பி.சுசீலா பாடிய `நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா ‘ என்ற அருமையான பாடல் அவருக்கு அந்த ஆண்டு தேசிய விருதினைப் பெற்றுத்தந்தது. அதற்காக அவரைப் பாராட்டி நாங்கள் எடுத்த சிறப்பான விழாவில் ஒரு அகில இந்திய ஏன் உலகில் இருக்கும் இந்தி பேசும் மக்களிடமெல்லாம் மிகவும் புகழ்பெற்றிருந்த ஒருவர் தலைமை தாங்க வந்திருந்தார்.
(தொடரும்)
பூமிய நம்பி வாழறவனுக்கு மழ தான் சாமி.அது ஒண்ணுக்கு ஊத்தற மாதிரி ஊத்துனாலும் ஏதோ ஒரு சாண்
வயிறுனாச்சும் நெறையும். மழைங்கிறதே மாயமாகிப் போச்சு, அப்பிடிங்கிற நெலம வந்தா ஊர் சனம் என்ன செய்யும்? பஞ்சந்தா தல விரிச்சு ஆடயில பாவி மக்க எங்கிட்டு போவாங்க? கூலி வேல தான் நாதின்னு இருக்கிற கூட்டம் கூழ கும்பிடு போட்டுகிட்டு பஞ்சம் தேடி மறு தேசம் போவாங்க.
கஞ்சியோ, கூழோ ஏதோ ஒண்ணு கிடச்சாத்தானே வயிறு கேக்கும்.அதுக்கு கூட வக்கில்லாம குடல எத்தன நா(ள்) சாகடிக்கிறது.
இந்த நிலமையில தான் பாரபட்டிக்கு வராங்க குயிலும், அவங்கப்பனும்.
அவுக எந்த சாமிய நெனச்சு அந்த பூமிக்கு வந்தாங்களோ தெரியாது, ஆனாஅவுகளமுதலா
பாக்குறதுதென்னமோ மலைச்சாமிதான்.
வந்தவங்க வாழ்ந்த ஊரு பேரு "அரைக்குடித்தனம் பட்டி ".ஒரு வயசாள ஆளு, ஒரு கொமரிபுள்ள, அவங்களுக்கு ஒத்தாசையா ஒருத்தன்.வயலுக்கு அரணா போட்ட வேலிப்படல மிதிச்சுகிட்டு உள்ள வராங்க.பெரிசு பாத்துட்டு சத்தம் போடுது.
"எவண்டாவன், வேலிய மிதிச்சுகிட்டுஉள்ள வர்றது "
வயசான ஆளு சொல்றான்,
" அஞ்சாதிங்க சாமி , பஞ்சம் பொழைக்க வந்திருக்கோம் "னு.
பெரிசு கேக்குது,
" இங்கயே பஞ்சம் அவுத்துப் போட்டு அம்மணத்தோட ஆடுது.நீங்க வேற பஞ்சம் பொழைக்க வந்துட்டீங்களா ".
சித்த நேரம் யோசிக்கிறாரு.
பாக்கவும் பாவமா இருக்குது.இல்லாதவங்கள விரட்டியடிக்கவும் மனசில்ல.ஒரு மனசா, அவங்கள ஒரு ஓரமா குடிசையப் போட்டு தங்கிக்கவும் சொல்லுது பெரிசு.
அந்த "மழைச்சாமி "கை விட்டாலும், இந்த
"மலைச்சாமி "யால
பஞ்சம் பொழைக்க வந்தவங்களுக்கு ஒரு வழி பொறக்குது.
வந்தவங்கள்ள ஒரு கொமரி இருக்கா ல்ல.அவ பேரு குயிலு.அவளுக்கு பேருக்கேத்த குரலுதா.மனசுல ஒண்ணும் வச்சிக்கத் தெரியாது.ஆளு கருப்பு.மனசு வெள்ள.
அம்பா வந்தாலும், வம்பா வந்தாலும், வர்ற வார்த்தைக்கு சளைக்கமா பட்டுன்னு சொல்லிருவா பதில.
களங்கமில்லாத அவ பேச்சு பழக்கம் எல்லாம் பெரியசாமிக்கு புடிச்சுப் போச்சு.
அதே சமயம் அவர அப்பப்போ சீண்டி விட்டு விளையாட்டும் பண்றது அவளுக்கு பழக்கமாவும் போச்சு.
அப்பிடித்தான் ஒரு நா,
பேச்சு வாக்குல பெரிச கிழவன்னுட்டுர்றா.பெருசுக்கு பொத்துகிச்சே கோபம். என்னய்யா கிழவங்கற.உன்ன மாதிரி கொமரிக என் கையில ஊஞ்ச கட்டி ஆடலாம்னு தன் வீரத்த சலிக்க,
அதுக்கு அவ
பெரிய பாறாங்கல்ல தூக்க முடியுமா உன்னாலன்னு ஒரு கேள்விய கேட்டுப்புட்டா.கேட்டுப்புட்டு ஓடிப்புட்டா.வீரத்தப்பத்தி பொம்பள பழிச்சா பொட்டையனுக்கும் ரோஷம் வருமே.பெருசுக்கு சொல்லவா வேணும்.அவ கேட்டதுல நிலை கொள்ளல.வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு கல்லதூக்கிப் பார்க்கிறாரு..தூக்கறாரு. தூக்கறாரு..ம்கூம்.அரையடி தூக்குறதுக்குள்ள மூச்சு வாங்குது.இது சரிப்பட்டு வராதுன்னு அப்ப நடய கட்டுறாரு.இத அவளும் தூரத்திலிருந்து பாத்துகிட்டுதா இருக்கா.
பெருசு அந்த கல்லு வழியா தா அப்பப்போ வரும்.போகும்.கல்ல பாக்கையில அவ கேள்விதா மனசுல குடயும்.அப்பப்போ தூக்கிப் பாக்கும்.கொஞ்சம் தூக்குறதும் பின்ன வக்கிறதும் பல நா பொழப்பாப் போச்சு.
இது ஒரு சாதாரண விஷயந்தானே? பெரிசுக்கு ஏன் வயசுக்கு ஒப்பாத காரியம்.
என்ன ஆச்சு பெரிசுக்கு?
******
முதல் மரியாதை...
மெய் சிலிர்க்க வைத்த மெய்யான நடிகர். (10 ம் பாகத்தின் மீள்பதிவு)
தந்தை என்பது தெரியாமல் தங்கம் கடத்தும் தொழிலின் தலைவர் ஸ்பையைப் பிடிக்கப் போராடுகிறான் சிபிஐ அதிகாரி ராஜன். ஒவ்வொரு முறையும் ஸ்பையைப் பிடிக்க முயலும் போதெல்லாம் ராஜனின் திட்டங்கள் தோல்வியுறுகின்றன. ஸ்பை சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் ராஜனிடமிருந்து தப்பித்து விடுகிறான். யாரோ ராஜனுடைய திட்டங்களை ஸ்பைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி விடுகிறார்கள். யார் அது?! குழம்புகிறான் ராஜன். அப்படி யாரும் இருப்பதாக அவன் நினைவுக்கு எட்டிய வரையில் வரவில்லை. ஆனால் அவன் தன்னுடைய தொழில் ரகசியங்களை தான் தாயிடம் மட்டுமே கூறுவான். இறுதியாக ஸ்பையை பிடிக்க இருக்கும் திட்டத்தை ராஜன் தன் தாயிடம் தெரியப்படுத்தி இருந்தான். இதிலும் ஸ்பை எஸ்கேப். இப்போது வருகிறது சந்தேகம் ராஜனுக்கு.
தாயிடம் கோபமும் வருத்தமும் கலந்த நிலையில் வருகிறான் ராஜன். அவன் முகத்தைக் கண்டே அவன் தாய் அவன் உள்ளத்தைப் புரிந்து கொண்டு விடுகிறாள். தன் கணவனான ஸ்பையைக் காப்பாற்ற ராஜனின் திட்டங்களை ஸ்பையிடம் சொல்லி ஸ்பையை தப்பிக்க வைப்பவளே அவள்தானே! மேலும் தன் கணவனைப் பற்றி ராஜனிடம் அவள் மூச்' விட்டதில்லை. அப்படி சொன்னால் ராஜன் தன் தந்தையை அரெஸ்ட் செய்து விடுவானே!
மகனின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள் தாய். போன காரியம் வெற்றியடையாமல் திரும்பி வந்ததை மகனின் முகம் காட்டுகிறது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றியடந்ததா என்று மேலுக்குக் கேட்கிறாள். ராஜன் வெற்றியடைந்து விட்டதாக ஜாடை செய்கிறான் வேண்டுமென்றே! பதறுகிறாள் தாய். தன் கணவன் தன் மகனிடம் பிடிபட்டு விட்டானோ என்று ஒருகணம் ஸ்தம்பித்துப் போகிறாள். அந்தக் கணமே தன் தாயின் முக பிரதிபலிப்புகளின் மூலம் தன் திட்டங்களுடைய தோல்விகளுக்கெல்லாம் அவள்தான் காரணம் என்று கண்டுபிடித்து விடுகிறான் ராஜன்.
எரிமலையாய் வெடிக்கிறான் ராஜன். தன் தாய் யாரோ ஒருவனைக் காப்பாற்ற தன்னை ஏன் பலிகடா ஆக்கினாள் என்று குமுறுகிறான். வார்த்தைகளால் அவளைக் கொல்கிறான். தன் தாய் இரண்டாவதொரு வாழ்க்கை வேறொருவனிடம் வாழ்கிறாள் என்று அவளிடமே கேட்டு அவளைத் துடிக்க வைக்கிறான். அப்போதுதான் அந்தத் தாய் மகன் தேடும் அந்த ஸ்பைதான் அவனின் தந்தை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறாள். அதிர்ச்சியில் சிலையாய் உறைகிறான் ராஜன். தன் தாய் குற்றமற்றவள் என உணருகிறான். அதே சமயம் ஒரு பயங்கரக் குற்றவாளியைத் தப்பிக்க வைத்த குற்றவாளியாய் தன் தாயைப் பார்க்கிறான். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாச பந்தங்களை அறுத்து, தாயென்றும் பாராமல் அவளைக் கைது செய்கிறான். வேதனையின் விளிம்புக்கே செல்கிறான்.
தாயாக எஸ்.வரலஷ்மி. தந்தையாக o.a.k.தேவர்.
சிபிஐ அதிகாரி ராஜனாக நம் நடிகர் திலகம்.
கேட்கவும் வேண்டுமோ! அற்புதமான சில நிமிடக் காட்சிகள்.
ஸ்பையைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று, தன் தாயின் மேல் சந்தேகப்பட்டு வீட்டுக்கு வரும் நடிகர் திலகம் எதுவுமே பேசாமல் தடுமாறும் தன் தாயைப் பார்க்கும் அந்தப் பார்வை...தன் தோல்விகளுக்கு அவள்தான் காரணமோ என்ற சந்தேகப் பார்வை... தன் தாய் குற்றவாளியா இல்லையா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளத் துடிக்கும் அந்தக் கண்கள்... தன்னிடம் காபி கொடுக்கும் அவளின் கை நடுங்குவதைக் கவனித்து தீர்க்கமாக அவளையே ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் அழுத்தமான அமைதிப் பார்வை...
"போன காரியம் வெற்றியா முடிஞ்சுதாப்பா?" என்று கேட்கும் வரலஷ்மியிடம் மெளனமாக "முடிந்தது" என்பது போல தலையாட்டும் பாவம்..."அவுங்களைப் புடிச்சிட்டியா?" என்று தாய் கேட்க "ஆமாம்" என்பதற்கான ஆழமான தலையசைவு... "அவுங்க இப்ப ஜெயில்லதான் இருக்காங்களா" என்பவளிடம் அதற்கும் "ஆமாம்" என்று வசனமில்லாமலேயே பொய்யாக உணர்த்தும் அற்புதம்...
தன் கணவன் தன் பிள்ளையிடம் மாட்டிக் கொண்டானே என்று அவள் அழும் போது வெடிக்க ஆரம்பிப்பார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு அவள்தான் காரணம் என்று கதறுவார். "அந்த ஸ்பைக்கும் உங்களுக்கும் என்ன உறவு?" என்று கேட்டு "இரண்டாவது வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கீங்களா அம்மா?" என்று அவமானத்தால் கூனிக் குறுகிப் போவார். பின் அந்த ஸ்பைதான் ராஜனின் அப்பா என்று விளக்கியவுடன் அப்படியே சிலையாகி விடுவார். பின் அவள் தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்லி தன் கணவனும் ராஜனின் தந்தையுமான ஸ்பை எப்படி தேசத்துரோகி ஆனான் என்று விளக்கும் போது சோபாவில் அண்ணாந்து சாய்ந்தபடியே வெறித்து நோக்கியபடி இருப்பார். எதையும் பேசவே மாட்டார்.
தாயைக் கைது செய்யுமுன் அவளைப் பார்க்க முடியாமல் கண்கலங்கும் காட்சி
http://anonymouse.org/cgi-bin/anon-w..._000108606.jpg
பின் மேலதிகாரியிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்து தாயை அரெஸ்ட் செய்வார். காவல் அதிகாரிகள் தன் கண்முன்னமேயே தன் தாயை அரெஸ்ட் செய்யும் போது கண்களில் குளமாய் தண்ணீர் தேங்கி நிற்கும். கோட் தோள்களில் சுமக்கப்பட்டிருக்கும். நேராக நிற்க மாட்டார். கதவில் சாய்ந்தபடி நிற்பார். நிற்பதில் ஒரு தொய்வு தெரியும். தன் தாய் கள்ளமற்றவள் என்ற திருப்தியைத் தாண்டி தன் தாய் ஒரு தேசத் துரோகியை தப்பிக்க வைத்தவள் என்ற ஆத்திரம் மேலோங்கி இருக்கும். அவமானத்தால் அசிங்கப்பட்டு நிற்பது போல நிற்பார். அதே சமயம் தன் தாயைத் தவிர யாருமில்லாத தான் எப்படி இனித் தனியாக வாழ முடியும்? என்ற ஏக்கம் அந்த நிற்கும் பாவனையில் பிரதிபலிக்கும். தன் தாய் தன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் தாயைப் பார்க்க முடியாமல் (பிடிக்காமல்) வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வார். காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.
தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்
http://anonymouse.org/cgi-bin/anon-w..._000201899.jpg
மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.
படம்: தங்கச் சுரங்கம்.
அன்பு வாசு சார்,
அருமையான நிழற்படம் தந்துள்ளீர்கள். நன்றி.
இது ஆல் இந்தியா ரேடியோவில் அண்ணன் ஒரு சுதந்திர தினத்தன்று வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியின்போது எடுத்த ஸ்டில். தன்னுடைய பொது நிகழ்ச்சி உடையாக சந்தன கலர் குர்தா உடையை தேர்ந்தெடுக்கும் முன் 1967 முதல் 70 வரை பொது நிகழ்ச்சிகளுக்கு (இதில் அணிந்திருக்கும்) வெள்ளை அரைக்கை சட்டை, வெள்ளை பேண்ட் அல்லது வெள்ளை அரைக்கை சட்டை வெள்ளை வேஷ்டி அணிந்து வருவார். அப்போது கலந்துகொண்ட நிகழ்ச்சிதான் இது.
பின்னர் அவரது பொது நிகழ்ச்சி உடையாக சந்தன கலர் குர்தா பல ஆண்டுகள் (கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்) தொடர்ந்தது. பின்னர் திரிசூலம் மதுரை விழாவின்போது தன்னுடைய உடையை மாற்றி, மெரூன் கலர் ஜிப்பா, மெரூன் கலர் வேஷ்டி அணிந்தார்.ஆனால் சிறிது காலமே. (நட்சத்திரம் படத்தின் இறுதிக்கு காட்ச்சியில் ஸ்ரீபிரியா உடலுக்கு அஞ்சலி செலுத்த காரிலிருந்து இறங்கி வரும்போது அணிந்திருப்பார்). அதன்பின் மீண்டும் சந்தன கலர் குர்தாவுக்கு மாறினார்.