-
MGR Filmography Film 42 (1958) Poster
"நாடோடிமன்னன்"
எம்.ஜி. ராமச்சந்திரன் என்னும் ஒரு நடிகனை வருங்காலத்தில் ஒரு மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் முதலமைச்சராக உயர்த்துவதற்கு முடிவு செய்த விதி, அதற்கு முதற்படியாகப் பயன்படுத்திக் கொண்டது: நாடோடி மன்னன் என்ற பெயரில் ஒரு சொந்தப்படத்தைத் தயாரிக்கும்படி அவர் மனதில் எண்ணத்தைப் புகுத்தியதுதான்! 'நானே போடப்போறேன் சட்டம்!' என்று வீராங்கன் பாடியது பத்தொன்பதே ஆண்டுகளில் மெய்யப்பட்டது!
நீண்ட நாட்களாக ஒரு சொந்தப்படம் எடுத்துத் தன் விருப்பப்படி தன் இமேஜை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முயன்று கொண்டிருந்த எம்ஜியாரும் அவரது தமையன் எம்ஜி சக்ரபாணி மற்றும் ஆர்எம் வீரப்பன் ஆகியோர் If I were king, The Prisoner of Zenda ஆகிய படங்களைப் போல, அவற்றின் loosely based thread என்பதாக விவாதித்து உருவாக்கிய கதை நாடோடிமன்னன். இதன் விளம்பரங்களில் Prisoner of Zenda வைத் தழுவிய படம் என்றே விளம்பரங்களில் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
எம்ஜியார் திமுகவின் பிரசார ஊடகமாக தன் சினிமாவைப் பயன்படுத்தத் தொடங்கியதும் இப்படம் துவங்கியே. ஒரு ஆணும் பெண்ணுமாக கருப்பு சிவப்புக் கொடியை ஏந்தியதாக EMGEEYAAR PICTURES லோகோ உருவானது. அவரது அடுத்த சொந்தப்படமான அடிமைப்பெண்ணுக்கும் அதுவே லோகோ. மூன்றாம் படமான உலகம் சுற்றும் வாலிபனில் அது அதிமுக கொடியாக மாற்றம் கண்டது!!!......... Thanks.........
........... to be contd....
-
MGR Filmography Film 42 (1958) Poster (Contd..)
இப்போது பாலிவுட் படங்களில் 1000 மிலியன் கிளப் என்று சொல்கிறார்கள் இல்லையா? முதன் முதலாக ஒரு கோடி வசூலித்த படம் என்ற பெருமையைப் பெற்றது எம்ஜியாரின் மதுரை வீரன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பெருமையைப் பெற்றதும் எம்ஜியார் படமான நாடோடி மன்னன்.
தமிழ்நாட்டின் நகரங்கள் மட்டுமல்லாது, பெங்களூர் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் மற்றும் இலங்கையில் பல இடங்களிலும் நூறு நாட்களைத் தாண்டிய பெருமை நாடோடி மன்னனுக்கு உண்டு. சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகியவற்றில் ஐம்பது நாட்கள் ஓடிய படம். மொத்ததில் எம்ஜியாரின் திரைவாழ்க்கையில் மட்டுமன்றி, தமிழ்த் திரை வரலாற்றிலும் மாபெரும் வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது இப்படம்.
படத்தின் நீளம் 226 நிமிடங்கள் என்று விக்கி சொல்கிறது: அதாவது 3 மணி நேரம் 46 நிமிடங்கள்.பின்னாட்களில் இது ஏறத்தாழ மூன்றரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கலாம். இப்போது யூட்யூபில் கிடைக்கும் வர்ஷன் 3 மணி 20 நிமிடங்களாக உள்ளது.
பிரம்மாண்ட தயாரிப்புகள் மூன்று மணி நேரத்தைத் தாண்டுவதாகவே அந்நாளில் அமைந்திருந்தன. 1956ஆம் வருடம் செசில் பி டெமில் இயக்கத்தில் வெளியான டென் காமாண்ட்மென்ட்ஸ் 220 நிமிடங்கள்;1962ல் வெளியான டேவிட் லீனின் லாரன்ஸ் ஆஃப் அரேபியா 222 நிமிடங்கள்; 1964ல் வெளிவந்த ராஜ்கபூரின் சங்கம் 238 நிமிடங்கள்.
மேலும், பிரம்மாண்டம் அல்லாது சாதாரணக் குடும்பக் கதை கொண்டிருந்த பல தமிழ்ப் படங்களும் அந்தக் காலகட்டத்தில் ஏறத்தாழ 3 மணி நேரத்திற்குக் குறையாமல்தான் இருந்தன. ஜெமினி கணேசனின் சூப்பர் ஹிட்டான கல்யாணப் பரிசு (1959) 198 நிமிடங்கள்; சிவாஜி கணேசனின் பாசமலர் (1961) 180 நிமிடங்கள்.
படத்தின் நீளம் அதிகம் என்றாலும், எந்த இடத்திலும் தொய்வு விழாதபடி அமைக்கப்படும் திரைக்கதையே ஒரு படத்தின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
நாடோடி மன்னன் படத்தை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். சுமார் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் வரும்; தொடர்ந்து ஒரு ஆக்ஷன் பிளாக்; ஒரு நகைச்சுவைக் காட்சி; ஒரு செண்டிமெண்ட் சீன்; ஒரு அழுத்தமான வசனக்கோர்வை. படத்தின் இறுதிவரை இந்தக் கட்டுக்கோப்பு மாறாமல் தொடரும்! பர்ஃபெக்ட் பேக்கேஜிங் என்று சொல்லக் கூடிய தகுதி பெற்ற மிகச்சில மசாலா படங்களுள் நாடோடி மன்னனும் ஒன்று. இதைப் போன்ற சிறப்பு பெற்ற மற்றொரு எம்ஜியார் படம்: எங்க வீட்டுப் பிள்ளை.
...................... to be contd........... Thanks...
-
MGR Filmography Film 42 (1958) Poster (3)
நாடோடி மன்னனில் வீராங்கன் என்ற கதாபாத்திரத்துக்கு டிசைன் செய்யப்பட்ட காஸ்ட்யூம் சுவாரசியமானது. இதற்கு இரண்டாண்டுகள் முன்னதாக வெளியான டென் கமாண்ட்மெண்ட்ஸ் என்னும் படத்தில் யூத அடிமைகளை எகிப்திய மன்னனிடமிருந்து காப்பாற்றிச் செல்லும் மோசஸ் என்னும் பழைய ஆகமப் பாத்திரமாக நடித்த சார்ல்டன் ஹெஸ்டனின் காஸ்ட்யூமை ஏறத்தாழ ஒத்திருக்கும் அது! கையில் கம்புடன் எம்ஜியார் நிற்பது மக்கள் மந்தையை நல்வழி நடத்திச் செல்லும் ஒரு மேய்ப்பனைப் போன்ற பிம்பத்தை உருவாக்கப் பெரிதும் உதவியது. மோசஸ் போன்றே இப்படத்திலும் எம்ஜியாரின் வீராங்கன் கொடுங்கோல் மன்னர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக சாதாரண மக்களைத் திரட்டிப் போராடுவதாகத் துவங்குவது குறிப்பிடத்தக்கது.
நாடோடி மன்னன் எந்த அளவு தமிழ்த்திரை வரலாற்றில் பெரிய இடம் பெற்றதோ அந்த அளவு, அந்தப் படத்தின் நடிகர்கள், படப்பிடிப்பின்போதான சம்பவங்கள் போன்று பலவும் அவரவர் கற்பனைக்கேற்றவாறு இன்றளவும் பேசப்படுவனவேயாக உள்ளன. அவற்றுள் பிரதானமானது எம்ஜியாருக்கும் பானுமதிக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு அதன் காரணமாக இந்நாளைய சீரியல் பாணியில் பானுமதியைக் கழற்றி விட்டு சரோஜாதேவியை நுழைத்தார் என்பார்கள். உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், அது உண்மையாக இருந்தால் அந்த மாற்றம் வேண்டுமென்று செய்யப்பட்டது போல அல்லாது மிக இயல்பாக ஒன்றிய திரைக்கதையின் பெருமையையே உரைக்கும்!
எம்ஜியாருடன் சரோஜாதேவி இணைந்த முதல் படம். அப்போது அவர் ஏறத்தாழ புதுமுகம் என்பதால் அவர் பகுதியை கலரில் எடுத்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறியதுண்டு. என்னென்ன செய்தால் படத்தின் வெற்றியை மேலும் சிறக்க வைக்க முடியுமோ அத்தனையும் இதற்காகச் செய்தார் எம்ஜியார் என்பார்கள். 'இது வெற்றி பெற்றால் நான் மன்னன்; இல்லாவிட்டால் நாடோடி' என்று எம்ஜியார் கூறியதாகச் சொல்வார்கள். ஒருவேளை இது ஆவரேஜாகப் போயிருந்தால் கூட, எம்ஜியாருக்கான பிற்காலத்தை திரையுலகில் மட்டுமல்ல, அரசியலிலும் விதி மாற்றி எழுதியிருக்கலாம். படத்தின் வெற்றி விழாவுக்காக எம்ஜியார் எழுதி வெளியிட்ட ஒரு சிறு புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தில் தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் எம்ஜியார் மனம் திறந்து பாராட்டியுள்ளார். (லிங்க் முதல் காமெண்ட் பாக்சில் காணலாம்).
....concluded........... Thanks.........
-
அவரை மாதிரி பல லட்சம் , பல கோடி தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர்… சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார் புரட்சித்தலைவர்..
அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து.
“தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு,” என்றார்.
ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!
கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை.
ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!
தன்னை விமர்சித்தவர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்த பெரும் வள்ளல் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.......... Thanks.........
-
[திருநெல்வேலியில் 1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் #புரட்சித்தலைவர் முதல்வர் #எம்ஜிஆர்.
அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
‘முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும்’ என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது.
அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது.
அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
“அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும்”, என்று அழுதார்.
“அழாதேம்மா… நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன்,” என்ற எம்ஜிஆர்,
அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?
ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார்.
அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது.
அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
“கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
Cont...] ( கடந்த பதிவின் முந்தைய பதிவு)... Thanks...
-
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர், #MGRபேஷன்டெயிலர் என்று கடை நடத்தி வந்தார் . புரட்சித்தலைவர் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பபூர் மக்களிடையே பிரபலமானார் .
அவர் புரட்சித்தலைவரை காண இந்தியா வந்தார். "காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன். ஒரு சூட் "என்று கொடுத்தார்..
"அளவு ஏது ? நாயுடு கொடுத்தாரா ? " என்று கேட்டார் மக்கள் திலகம்.
"இல்லை ,ஒரு உத்தேசம் தான் .என் மனக்கனக்கால் பார்த்து வெட்டிச் தச்சேன் " என்று போடச் சொன்னார் , அத்தோடு 20000 பணம் கொடுத்தார் .
" எதற்கு ? " என்று புரட்சித்தலைவர் கேட்க.. உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன் , நூத்துக்கு ஒரு டாலர் வீதம் , உங்க பங்குக்கு சேர்ந்த பணம் . இதுவும் என் காணிக்கை .. என்றார் அந்த சிங்கப்பூர் டெயிலர் ...
புரட்சித்தலைவர் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு , தனது பெட்டியிலிருந்து 5000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20000 ரூபாய்க்கு மேல் வைத்து , "என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி என்றார்"..
அது தான் புரட்சித்தலைவர் ...
பிறந்த நாளுக்கு வாசலில் பண மாலையுடனும் , பணத்தாலான கிரீடத்துடனும் அமர்ந்து உண்டி குலுக்கி ... ஏழை தொண்டர்களிடம் ஏதாவது பீராயலாமா என்று 90 வயதிலும் பல லட்சம் கோடிக்கு அதிபதியாக இருக்கும் பொழுதும் அலைந்திடும் ஜென்மங்கள் வாழ்ந்த இதே நாட்டில் தான் நம் மக்கள் திலகமும் பிறந்துள்ளார் ....
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே ... அது எம்ஜிஆர் ஆவதும் கருணாநிதி ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே...
புரட்சித்தலைவர் புகழ் சிலப்பதிகாரம் ஆக வாழ்க......... Thanks...
#MGR103
-
எங்கள் MGR..
..
எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136.
முதல் படம் : சதிலீலாவதி(1936).
கடைசிப் படம் : மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி.
இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !
எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்.!
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !
எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’. இப்ப....!!!
பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !
அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன்.
இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !
‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் என்னை போன்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்.
முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !..
இது சில மட்டுமே. அவரின் பெருமைகள் இன்னும் பல இருக்கிறது..
....
Sai Subramanian............ Thanks...
-
‘ஒருதாய் மக்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.
இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலதுகையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி........ Thanks...
-
M.G.R. தனது அண்ணன் சக்ரபாணியைப் போலவே மேலும் மூன்று பேரை தனது உடன்பிறவா அண்ணன்களாகவே கருதினார். தனது ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடித்து கஷ்டப்பட்டு, பட வாய்ப்புக்களுக்காக காத்திருந்தபோது உதவி செய்தவர்களை எம்.ஜி.ஆர். பின்னர் கவுரவிக்கத் தவறியதில்லை.
1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜ குமாரி’ திரைப்படம்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம். இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்க காரணமாக அமைந்து, எம்.ஜி.ஆரின் திறமை பற்றி உயர்ந்த அபிப்ராயம் ஏற்படுத்திய படம் அதற்கு முந்தையதாக வெளிவந்த ‘ஸ்ரீ முருகன்’. இப்படத்தில் சிவனாக நடித்த எம்.ஜி.ஆர். அற்புதமாக சிவ தாண்டவம் ஆடுவார். அதற்காக கடுமை யான பயிற்சிகளும் மேற்கொண்டார். இந்த முயற்சியும் உழைப்பும் திறமையும் தான் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக உயர்த்தியது.
‘ஸ்ரீ முருகன்’ படத்தின் கதாநாயகனாக முதலில் தியாகராஜ பாகவதர் நடிப்பதாக இருந்தது. விளம்பரம் வந்ததுடன் சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலையில் பாகவதர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவர் சிறை செல்லவேண்டி வந்தது. அதனால், தியாகராஜ பாகவதருக்கு பதிலாக இன்னொரு பாகவதர் கதா நாயகனாக நடித்தார். அவர் கர்நாடகா வைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர். கர்னாடக இசையில் திறமை மிக்க இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற படத்தை தயாரித்தவர். கன்னடத்தில் பல படங்களை தயாரித்து நடித்துள்ளார். பின்னாளில், ஒரு நிகழ்ச்சியில் இவரை எம்.ஜி.ஆர். கவுரவித்தார்... Thanks...
-
M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான். ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.
பெற்றால்தான் பிள்ளையா?’ படத் தில் ‘நல்ல நல்ல பிள்ளை களை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது. அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும். ‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.
அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார். வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.
இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகை யாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந் தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை...’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார். படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்........ Thanks...
-
அனைத்து எம்ஜிஆர் நெஞ்சங்களுக்கும் வணக்கம்...
முந்திய பதிவின் தொடர்ச்சியாக தலைவரின் நண்பர் மறைந்த அசோகன் அவர்களுடைய புதல்வர் வின்சென்ட் அசோகன் அவர்களின் தொடர் பதிவு.
என் தந்தை முதலில் சினிமாவில் வாய்ப்பு கேட்டு நடிக்க போன இடம் ஜெமினி அவர்களின் வாசன் ஸ்டூடியோ...அப்போது அவர்கள் நடித்து காண்பிக்க சொல்ல அப்பா நடித்து காட்டிய காட்சிகள் மருதநாட்டு இளவரசி படத்தில் இருந்து சில காட்சிகள்.
அப்பாவும் தலைவரும் இணைந்து பல வெற்றி படங்களில் பின் நடிக்க அப்பா ஒரு படம் தயாரிக்க விரும்பி அதில் அப்போது மிக பெரிய ஸ்டார் ஆன எம்ஜிஆர் அவர்களை வைத்து ஆரம்பிக்க பட்ட படம் நேற்று இன்று நாளை.
1969..70..களில் துவக்க பட்ட இந்த படம் அருமையாக வந்து கொண்டு இருக்க சட்டென அரசியல் சூழ்நிலைகள் மாறிவிட படம் தாமதம் ஆனது.
72 இல் எம்ஜிஆர் அவர்கள் தனிக்கட்சி துவங்க படத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டிய சூழல்.
கதை, பாடல்கள், வசனம் எல்லாம் சிறந்து வர முதலில் அதிமுக கட்சி கொடி எம்ஜியார் படத்தில் வந்தது இதே படத்தில் மட்டுமே.
கட்சி வேலைகளில் எம்ஜிஆர் அவர்கள் மூழ்கி போக படம் தாமதம் ஆக வதந்திகள் பரவ தொடங்கின.
ஒரு கட்டத்தில் அப்பா அவர்களே மனம் சோர்ந்து போகும் அளவுக்கு செய்திகள் பரவின....ஆனால் புரட்சிதலைவருக்கும் அப்பாவுக்கும் ஆன நட்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்லை...
இந்த விஷயம் அவர்கள் இருவர் சம்பந்தப்பட்டது....இந்த படம் வர கூடாது என்று ஒருசிலர் முயற்சிக்க
ஒரு நாள் என் அப்பாவை கூப்பிட்டு நீங்கள் இந்த படத்தை எடுத்தவரை போதும் எங்களிடம் விற்று விடுங்கள்...நீங்கள் செலவு செய்தது போக ஒரு மிகப்பெரிய தொகையை உங்கள் பட நிறுவனத்துக்கு நாங்கள் தருகிறோம் என்று சொல்ல
என் அண்ணன் அமல் ராஜ் பெயரில் அப்பா இந்த நிறுவனைத்தை ஆரம்பித்து இருந்தார்.
அவர்கள் சொன்ன வற்றுக்கு ஒப்பு கொள்ளாத அப்பா படம் வந்தால் வரட்டும் யாருக்கும் உரிமையை விற்பதில்லை என்று சட்டுனு கிளம்பி வெளியே வருகிறார்.
அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொண்ட எம்ஜிஆர் அவர்கள் அப்பாவை அழைத்து நடப்பது நம் இருவருக்கு மட்டுமே தெரியும்.. படம் தொடரும் என்று சொல்லி ஒரு அடுத்து வர இருந்த ஒரு கனவு காட்சி பாடலை அடுத்து வர விருந்த வாங்கி இந்த படத்தில் இணைத்து. ( அந்த பாடல் நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்.)
அத்துணை தடைகள் தாண்டி 12.07.74.இல் இந்த படம் வெளியானது...வியாபார ரீதியாக இந்த பெரும் வெற்றி பெற்றது...இந்த படத்தினால் அப்பாவுக்கு ஒரு நட்டமும் இல்லை..படம் தாமதம் ஆனது ஒன்றே தவிர வேறு ஒரு குறை இல்லை .
நான் எங்கு போனாலும் இந்த கேள்வி கேட்காதவர் இல்லை.. அப்பாவுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் என்ன பிரச்சனை என்று.
அவர்கள் இருவரும் இன்று நம்மிடையே இல்லை...ஆனாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை ஆகும்.
கோவையில் என்ஜினீயர் பட்ட படிப்பில் நான் சேரும் போது ஒரு வருடம் மட்டுமே அங்கு படிப்பேன்...பின் சென்னையில் படிப்பை தொடருவேன் என்று சொல்ல...முதல் வருடத்தில் நான் ஒரு பாடத்தில் தோற்க படிப்பை சென்னையில் தொடரமுடியவில்லை.
அப்பா பின் சில நாட்களில் அம்மா இருவரும் மறைய என் அப்பாவின் அக்கா அத்தை தான் எல்லாம் எங்களுக்கு.
என்னை சென்னையில் படிக்க தொடர முடியாமல் போனதில் வருத்தம் எனக்கு...முதல்வர் எம்ஜிஆர் நினைத்து இருந்தால் எல்லாம் நடக்கும் என்று நினைத்த புரியாத வயது அது.
என் தாய், என் அத்தை, நான் எல்லோரும் என் சிறுவயதில் தலைவர் வீட்டுக்கு செல்ல எனக்கு விளையாட்டு பருவம்..பல முறை அங்கு சென்று விளையாடி மகிழ்ந்து உள்ளேன்.
நான் என்ஜினீயர் ஆகி ஒரு நாள் அவரிடம் நான் ஆசி வாங்க என் அத்தை ஜானகி அம்மாவிடம் கேட்டு அனுமதி வாங்க.
அனுமதி கிடைத்த அன்று காலையில் நான் தூங்கி விழிக்க 9 மணி ஆக...என் அத்தை புறப்படு இன்று நாம் முதல்வர் எம்ஜிஆர் வர்களிடம் சென்று நீ ஆசி வாங்க வேண்டும் என்று சொல்ல.
அன்று பார்த்து எங்கள் வீட்டு கார் ஓட்டுநர் வரவில்லை.... எனக்கும் புரியவில்லை...சரி விடுங்கள்...இன்னும் ஒரு முறை போகலாம் என்று நான் சொல்ல.
அன்று காலை 10 மணி அளவில் கோட்டைக்கு கிளம்பிய முதல்வர் அத்தை எங்கள் குடும்பம் வருவதாக சொல்ல சரி என்று.
ஒரு 10 நிமிடம் காத்து இருந்து சரி விடு ஜானு நம்ம வீட்டு பிள்ளை தானே இன்னும் ஒரு முறை பார்த்துக்கொள்வோம் என்று கிளம்பிவிட.
எனக்கு மீண்டும் ஒரு நாள் அந்த மனித புனிதரை பார்க்க தேதி கொடுக்க பட்டது.
அந்த தேதி 1987 டிசம்பர் மாதம் 25 கிருத்துமஸ் அன்று காலை..
அப்போது தான் நான் என்ன ஒரு விளையாட்டு தனம் நான் படிப்பில் ஒரு பாடத்தில் தோற்க அதனால் சட்டம் மீறி அவர் எனக்கு உதவி செய்ய முடியாத நிலையில்...ஒரு முதல்வர் காத்து இருந்தும் முன்பு நான் அவரை சந்திக்க
என்று பேசி கண் கலங்குகிறார் வின்சென்ட் அசோகன் அவர்கள்.
இதுதான் விதி என்பதா எம்ஜிஆர் நெஞ்சங்களே...நேற்று இன்று நாளை படம் வர கூடாது...அந்த பாடல் தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்று அன்று திரை அரங்குகளில் ஒலிக்க கூடாது என்று திரை போட்டவர்கள் சதியே மேற்படி நிகழ்வுகளுக்கு காரணம் என்று நமக்கு தெரியும்...நாட்டுக்கும் தெரியும்.
பொருளாதார ரீதியாக மாபெரும் வெற்றி படமே அது...இன்றும் ஆங்கிலத்தில் yesterday today tomorrow... என்று அடிக்க பட்ட போஸ்டர்கள் கண் முன் வர.
நன்றி வின்சென்ட் அசோகன் சார்....என்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் நெஞ்சில் உங்கள் குடும்பத்துக்கு என்று ஒரு நிரந்தர இடம் உண்டு.
உங்கள் திரைத்துறை பயணம் வெற்றி பெற வாழ்த்தும் அனைத்து உலக எம்ஜிஆர் ரசிகர்கள்...நன்றி.
வாழ்க எம்ஜிஆர் புகழ்.. தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி ..நன்றி......... Thanks...
-
என் நண்பனை தேடி அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவன் குடும்பம் ஒரு பிராமின் குடும்பம். அவன் தாயாரை பார்த்து ஏம்மா கிச்சா வீட்டிலே இல்லையா என்று கேட்டேன். இல்லடா பக்கத்தில் தான் போயிருக்கான் இப்போ வந்துடுவான் என்றார்கள். இல்லம்மா அவன் எங்கேன்னு சொல்லுங்க நான் போய் கூட்டிட்டு வர்ரேனு சொன்னேன். ஆத்துக்கு பின்னால் ஏதோ எம்ஜிஆர் படம் வருகிறது வால் போஸ்டர் ஒட்டியிருக்கான். அதை எல்லோரும் கூட்டமா நின்னு பாத்துண்டிருக்கா இவனும் அதை பார்க்கத்தான் அங்கே போயிருக்கிறான் நீ சித்த இரு இப்போ வந்துடுவான் என்றதும் இருங்கம்மா நானும் பார்த்துட்டு வாரேன் என்று கிளம்பி விட்டேன் போஸ்டரை பார்ப்பதற்கு. 1969 ம் வருடம் நவம்பர்
2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன் ஒரு பெருங்கூட்டம் நின்று நம்நாடு வால்போஸ்டரை பார்த்துக் கொண்டிருந்தது. என் நண்பன் நடுநாயகமாக நின்று போஸ்டரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தான். எம்ஜிஆர் வாங்கையா வாத்தியாரய்யா பாட்டில் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு போஸ் கொடுத்திருப்பார். வருகிறது என்று மேல் பகுதியிலும் தூத்துக்குடி சார்லஸில் என்ற சிலிப்புடனும் ஒட்டியிருந்தார்கள். அனைவரும் சிவந்த மண் கூட வருகிறது எது ஜெயிக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். (நம்நாடு நவம்பர் 7ம்தேதியும் சிவந்த மண் நவம்பர் 9ம்தேதியும் வெளியானது. ஆனால் தீபாவளி நவம்பர் 8ம்தேதி கொண்டாடப்பட்டது) என் நண்பன் எல்லோரிடமும் நம்நாடு தான் ஜெயிக்கும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது நான் அங்கே வந்ததும் வால்போஸ்டர் பிரமாதம்டா உங்க ஏரியாவில் ஒட்டிட்டானா என்று கேட்டான். நானும் அதை பார்த்து விட்டுத்தான் உன்னை பார்க்க வருகிறேன் என்றேன் தயாரிப்பு யார் தெரியுமா எங்க வீட்டு பிள்ளை,மாயாபஜார்,மிஸ்ஸியம்மா
தயாரித்த விஜயா வாகினி நாகிரெட்டி சக்கரபாணி தான் அது. படம் நிச்சயம் சில்வர் ஜூப்லிதான்.
வந்த அன்றைக்கே பாக்கணும். எங்க அப்பாகிட்டே சொல்லி காசு வாங்கணும் என்றான். அவன் அப்பா அந்த காலத்திலேயே 4 டிஜிட் சம்பளம் வாங்க கூடிய ஒரு பேங்க் ஆபிஸர். அவன் அப்பா டேய் அம்பி 2வது வாரத்தில் போகலாம்.முதல் வாரத்தில் கூட்டம் கன்னா பின்னான்னு. இருக்கும்னு சொல்லிட்டார். முதல் நாள் படம் பார்த்தவர்களிடம் படம் எப்படினு நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தான். படம் பிரமாதம்னு அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று ஒவ்வொரு காட்சியையும் படம் பார்க்காமலே எல்லோரிடமும் விவரித்தான். அப்படி அந்த சின்ன வயதிலேயே நாங்கள் எம்ஜிஆர் மீது மிகவும் அதிகமான பற்று வைத்திருந்தோம். இவ்வளவுக்கும் அவன்SSLCயில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேறி முதல் பரிசு வாங்கினான். நான் கல்லூரியில் முதல் மாணவனாக வென்று முதல் பரிசை பெற்றேன். ஏன் சொல்கிறேன் என்றால் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றவுடன் படிப்பு வராது என்று நினைப்பவர்கள் அந்தக்காலத்தில் அதிகம். அவனும் தேசிய வங்கியில் மிக உயரதிகாரியாக வேலை செய்து ரிடையர் ஆகி விட்டான். நானும் தேசிய வங்கியில் வேலை செய்து VRSல் வந்து விட்டேன். அவனுடைய தாயார் தற்போது நினைவு இழந்து கொண்டு வருகிறார்கள். சென்ற வாரம்KTV யில் நம்நாடு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது அவர்கள் படத்தை பார்த்தவுடன் என்னை நினைத்து டேய் உன் பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லுடா அவனும் படம் பார்க்கட்டும் அந்தக் காலத்தில் நம்நாடு வால்போஸ்டரை பார்ப்பதற்கு என்ன அலைச்சல் அலைந்தீர்கள் என்றார்களாம். அவர்களுக்கு 85 வயதுக்கு மேல் ஆகி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவை இழந்து கொண்டு வந்தாலும் நம்நாடு போஸ்டர் நினைவை இழக்காததை என் நண்பன் சொல்லும் போது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
என் நண்பனும் நானும் போனில் பேசினால் குறைந்தது 1மணி நேரம் பேசுவோம். கடந்த கால எம்ஜிஆர் நினைவுகளை பகிர்ந்து கொள்வோம். மற்ற நினைவுகளை இழந்தாலும் தன் மகன் எம்ஜிஆர் மீது கொண்ட பற்றினை இன்னமும் ஞாபகம் வைத்திருக்கும் அந்த தாயின் தாய்மை உள்ளம் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்தது..... Thanks...
-
#நண்பர்கள்_அனைவரும்
#இனிய_மதியவேளை_வணக்கம்
கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான் அந்த மாணவன்.
கொஞ்சம் பெரிய படிப்புதான்.
எனவே அதற்கு பெரிய தொகை நன்கொடையாக தேவைப்பட்டது.
1000 ரூபாய் என்பது 1968 ல் பெரிய தொகைதானே !
யாரிடமும் போய் உதவி கேட்டுப் பழக்கமில்லை. என்ன செய்வது?
#ஒரே_ஒருவர்_நினைவுதான்_அவனுக்கு #உடனே_வந்தது.
தயக்கத்துடன் போனான். தடுமாற்றத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.
அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் அடுத்த நாள் அவனை வரச் சொன்னார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஓரளவு அவனுக்கு வந்தது. நிம்மதியுடன் புறப்பட்டு வீடு சென்றான்.
#மறுநாள்_பணத்தை_எதிர்பார்த்து #சென்ற_அந்த_மாணவன்_கையில்
#ஒரு_காகிதத்தை_கொடுத்தார்_அந்த #மனிதர்_புரியாமல்_அந்த_காகிதத்தை #புரட்டிப்_பார்த்தான்.
#அது_ஒரு_ரசீது_1000_ரூபாயை
#அந்த_கல்லூரியில்_தன்_பெயரிலேயே #செலுத்தி_அதற்கு_ரசீது_வாங்கி #வைத்திருந்தார்_அந்த_மனிதர்.
ஆனந்தக் கண்ணீர் ஆறாக பொங்கி வழிய நன்றி சொல்ல வார்த்தை எதுவும் இன்றி தவித்தான் அந்த மாணவன்.
கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.
சரி. அந்த கட்டண ரசீது என்ன ஆனது ? புத்தகங்களுக்கு நடுவே புகுந்து கொண்டதா ?
அல்லது பூஜை அறை சாமி பக்கத்தில் சயனம் கொண்டதா ?
இல்லை. அப்படி எல்லாம் அந்த மாணவன் செய்யவில்லை. அந்த ரசீதை அழகாக லாமினேட் செய்து பத்திரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் அந்த மாணவன்.
காலத்தாற் உதவி செய்த அந்த மனிதர், சில ஆண்டுகளுக்குப் பின் காலமாகி விட்டார்.
அந்த மாணவன் படித்து முடித்து, உத்தியோகத்திலும் அமர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்.
ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பணத்தை எடுக்க, பக்கத்திலுள்ள ATM போகிறார். அங்கே மெஷினிலுள்ள பட்டன்களை அழுத்துகிறார்.
கட கடவென்ற ஓசைக்குப் பின்...
#பணத்தை_கொடுப்பது_எல்லோரின் #கண்களுக்கும்_எந்திரமாக_தெரிகிறது.
#சம்பந்தப்பட்ட_இந்த_மனிதருக்கு
#மட்டும்_அது_எம்ஜிஆராக_தெரிகிறது.
ஆம். 1967-68 ல் இவர் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டபோது உடனடியாக நிதி உதவி செய்த அந்த மாமனிதர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் தன் பெயரில் பணம் செலுத்தி படிக்க வைத்த அந்த மாணவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகன் Nallathambi Nsk.
#இதோ_நல்லதம்பி_அவர்களே
#சொல்லும்_அந்த_நன்றிக்_கதை..
"1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் Engineering படிக்க சேர்ந்தபோது, மக்கள் திலகம் எனக்காக கட்டிய Capitation Fees Receipt.
அதை Laminate செய்து வைத்துள்ளேன்.
கல்லூரியில் சேரும்போது தலைவர் என்னை கூப்பிட்டு "
#கலைவாணர்_பல #கோடிகள்_சம்பாதித்தார்_ஆனால் #அதையெல்லம்_தர்மம்_செய்துவிட்டு #அழியாத_புகழை_விட்டு_சென்றுள்ளார்.
#எனவே_செல்வம்_அழிந்து_போகும்.
ஆனால் நான் உனக்கு கொடுக்கப்போகும் கல்வி அழியாது. நன்றாக படி"என்று ஊக்கமும் கொடுத்தார் எம்ஜிஆர்.
#படித்து_வேலை_செய்து_ஓய்வு
#பெற்றுவிட்டேன்_இன்றும்_ATM_சென்று #ஓய்வூதியம்_பெறும்போது_அரசாங்கம்
#கொடுப்பதாக_எனது_கண்களுக்கு
#தெரியவில்லை
#தலைவர்எனக்கு_கொடுப்பதாக #நன்றியோடு_நினைத்துக் #கொள்கிறேன்."
நன்றி நல்லதம்பி அவர்களே !
உங்கள்
நல்ல மனம் வாழ்க !
நன்றி மறவாத
அந்த தெய்வ குணம்
வாழ்க !
#நன்றி_மறவாத_நல்ல_மனம்_போதும்
#என்றும்_அதுவே_என்_மூலதனம்_ஆகும்
#எனப்_பாடிய_வரிகளுக்கும்
#அது_போல_வாழ்ந்து_காட்டிய
#மன்னாதி_மன்னன்
#பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்_புகழ்...
#என்றென்றும்
#வாழ்க_வாழ்க... !
அண்ணன் நல்லதம்பி அவர்கள் கல்லூரியில் சேர்ந்துவிட்டு,
#மக்கள்திலகம் அவர்களை சந்தித்து செய்தி சொல்கிறார்...
கல்லூரியில் சேர்ந்துவிட்டாய் மாத செலவுக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார் நம் #வள்ளல் அதை எதிர்பார்த்து செல்லாத அண்ணன் நல்லதம்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
#நம்_இறைவன்_சொன்னார்_மாதா #மாதம்_செலவுக்கு_இங்கு_வந்து_பணம் #பெற்றுக்கொள்_என்கிறார்.
அடுத்த மாதம் தோட்டத்திற்கு செல்கிறார். அப்போது #தலைவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருகிறார். என்ன செய்வது என்று அண்ணன் நல்லதம்பி யோசிக்க...
இவரை பார்த்த #பொன்மனச்செம்மல் #ஜானகி_அம்மையாரை காணச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். ஜானகி அம்மையாரை சந்தித்தால், அந்த மாத செலவுக்கு பணம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ள சொல்கிறார். அண்ணன் நல்லதம்பி தன் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........ Thanks...
-
ஜெயா மூவிசி ல் தினசரி காலை 7 மணிக்கு
ஒளிபரப்பாகும் படங்கள்
----------------------------------------
21/04/20- ஊருக்கு உழைப்பவன்
22/04/20- ஒரு தாய் மக்கள்
23/04/20- குமரிக் கோட்டம்
தொடரும் சாதனைகள் !
_________________________
கொரோனா காலகட்டத்திலும் மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடர்வது
வியப்பின் விளிம்பிற்கே நம்மை அழைத்து செல்கிறது சன் தொலை காட்சியில் இன்று இரவு 9-30 மணிக்கு அன்பேவா
நாளை இரவு 9-30 மணிக்கு எங்க வீட்டுப் பிள்ளை இது இல்லாமல் மற்ற தொலைகாட்சியிலும் நம் மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்து தொலைகாட்சியினருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !
ஹயாத் !....... Thanks...
-
நன்றி: மதுரை ராமகிருஷ்ணன்....From 20.3.2020 to 20.4.2020
Sunlfe
Murasu
Jaya
Mega
Vasanth TV channels.
MGR's 62. MOVIES TELECASTED.
1. Adimaipenn
2. Namnadu
3. Mattukkaravelan
4. En Annan
5. Thedi vantha mappillai
6. Engal thangam
7. Kumarikottam.
8. Rikshakaran
9. Neerum neruppum.
10.oru thai makkal.
11.sange muzhanku.
12.Nalla neram
13.Raman thediya seethai
14.Naan yen PIRANTHEN.
15.Idhaya veenai
16.ulagam sutrum valiban
17.pattikattu ponniah
18.urimai kural
19.Ninaiththai mudippavan
20.Naalai namadhe.
21.Idhayakani
22.Pallandu VAZHGA.
23.Neethikku thalai vananku.
24.uzhaikkum karangal
25.oorukku uzhaippavan.
26.Navarathinam.
27.kadhal vaganam
28.kanavan
29.Puthiya bhoomi
30.kannan en kadhalan
31.Ther tiruvizha
32.kudiyiruntha koil
33.Ragasiya police 115
34.vivasayi
35.kavalkaran
36.Arasakattalai
37.Thaikku thalaimagan
38.Petralthan pillaya
39.Thanipiravi
40.Chandrothayam
41. Mugarasi
42. Naan anayittal
43.Anbe vaa
44.Enga veettu pillai
45.Ayirathil oruvan
46. Kalangarai vilakkam
47. Kannithai
48. Thazhampoo
49. Thayin madiyil
50. Padakoti
51.Thozhilali
52.Deiva thai
53.panakkara kudumbam
54.vettaikaran
55.Dharmam thalai kakkum
56.Periya idathu penn
57.Neethikku pinpasam
58.Thayaikathathanayan
59.Tirudathe
60.Thai solla thattathe
61. NALLAVAN VAZHVAN
62.qulebagavali
Plus 7 movies
Aanantha jothi
Koduthu vaithaval
Vikkiramathithan
Mannadhi mannan
Alibabavum 40 tirudargalum
Nadodimannan
Mahadevi Total 70 movies.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சிகளில் கடந்த ஒரு மாதத்தில் எம்ஜிஆரின் 70 திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.......... Thanks.........
-
அய்யா ......
காங்கிரஸ் ஆட்சியிலே .. கடுமையான அரிசிப் பஞ்சம் ஏற்பட்டது.
அரசி பஞ்சத்தை நீக்குவதற்கு காங்கிரஸ் அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. அதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
அண்ணா ஆட்சி அமைத்தார். ஓராண்டு காலமே உயிர் வாழ்ந்தார். இதில் அண்ணாவை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
திரு, கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். அரசி பஞ்சத்தை நீக்கினாரா..? இல்லை.. அவருடைய பஞ்சத்தை நீக்குவதற்கே அவருக்கு நேரம் போதவில்லை.... இதில் மக்களுடைய அரிசி பஞ்சத்தை எப்படி போக்குவார்...? அதனால் அவரும் ஆட்சியை இழந்தார்.
நாங்கள், இட்லியை சாப்பிட விரும்பினால்... எங்கள் வீட்டில் தீபாவளிக்கு அல்லது பொங்கலுக்கு தான் இட்லியை தருவார்கள். இதுதான் அன்றைய நிலை.
புரட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்தவுடன் தான்... அரிசிப் பஞ்சம் போனது.
ஏழைகள் வயிறார அரிசி உணவுவை அருந்தினார்கள்.
எங்களுக்கும் வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாள் இட்லி கிடைத்தது.
நாங்களும் மனமகிழ்ந்து இட்லி சாப்பிட்டோம்.
இப்படி எங்களை வாழ வைத்த தலைவரை நாங்கள் மறக்க முடியுமா ...?
........ Thanks...
-
[வரலாற்றில் 15 நவம்பர் 1983 முதல்வர் #எம்ஜிஆர். சட்டமன்ற விவாத்தில் அளித்த பதில்..
பழ.நெடுமாறன் 1000 பேருடன் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில்..
"நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிதான் இருக்கிறதா?
ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது.
அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?
அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்... நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்;
ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது;
வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும்.
உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம்"
]........ Thanks...
-
[கஷ்டப்பட்டதை மறக்காதவர்! (பாகம் 1)
அரச அவையில் சில திட்டங்களை மன்னனாக இருந்து நாடோடி வீராங்கன் அறிவிக்கின்றான். அதில் தொலைநோக்கு பார்வை கொண்ட வசனம் :–
“ஐந்து வயது ஆனவுடனே குழந்தைகளைக் கட்டாயமாகப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு, பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரையில் மாணவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.”
எம்.ஜி.ஆர். மூன்றாவதுக்கு மேல் படிக்க முடியாத வறுமைச் சூழலில் இருப்பது போன்ற பிள்ளை செல்வங்கள் படித்து நாளைய உலகை உருவாக்கும் நல்லவர்களாக உயர்வதற்கான திட்டமிடல் இந்த வசனங்களில் புதைந்திருப்பதை அறியலாம்.
”தான் நடித்த காட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்காமல் படம் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.
குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும்படியாக படம் எடுக்க வேண்டும், பொழுதுபோக்குப் படத்திலும் நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்பார். இந்த கருத்து சின்னவருடைய மனதில் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சின்னவர் நடித்த ’வீரஜெகதீஷ்’ என்ற பழைய படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த படத்தில் ஒரு காட்சியில் புகை பிடிப்பவனுக்கு சின்னவர் அறிவுரை சொல்வதுபோல வசனம் இருக்கும். ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழ்மையை சந்தித்து வாழ்ந்தவர். காலில் செருப்பு கூட இல்லாமல் பல இடங்களுக்குச் சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவர், அந்த வறுமை தந்த பாடமே வாழ்க்கைத் தத்துவத்தை அவருக்கு உணர்த்தியது எனலாம். புகழும் பெருமையும் வந்த காலத்தில், இளைமையில் வறுமையில் தான் பட்ட கஷ்டங்களை மறந்து இருக்க முடியும். ஆனால், அவர் கடைசி வரையிலும் அதை மறக்கவில்லை. அது அவரது சிறப்பு” என்பது இயக்குநர் கே. சங்கரின் அனுபவம்.
எம்.ஜி.ஆர். பாடல்கள் பேசப்படக் காரணம்?
சின்னவரின் படங்களில் பாடல்கள் புகழ்பெற, வாழ்க்கையில் அவர் அனுபவித்து அறிந்ததை பாடல்களில் சொன்னதும் ஒரு காரணம்.
பாடல் பதிவின் போது ஒரு பாடலை அவர் ஓ.கே. செய்தால் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் அப்பாடா மறு ஜென்மம் என்று சொல்வார்கள். (அந்த அளவுக்கு பாடலில் கவனம் செலுத்தி வேலை வாங்குவார்) சின்னவருக்காக ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 25 டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.
’இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் வரும் ‘அன்புக்கு நான் அடிமை’ பாடல் காட்சியை இரவு ஒன்பது மணிக்கு ஷூட் பண்ண ஏற்பாடு, அதற்கு ஒரு வாரமாகவே முயற்சித்தும் பாடல் சரியாக அமையவில்லை.
அந்தக் காட்சியை படமாக்க இரண்டு மணி நேரத்திற்கு முன் மாலை 7 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் எழுத பாடல் ஓ.கே. ஆனது” என்கிறார் இயக்குநர் கே. சங்கர்
'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கவிஞர் மருதகாசியை ஒரு பாடல் எழுத வைத்தார்.
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற பாடலின் சரணத்தை
“பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்துவிட்டு
தன்வழியே போகிறவர் போகட்டுமே!”
என்று கவிஞர் எழுதி காட்டினார்.
“தன் வழியே என்று சொல்கிறீர்களே… அது ஏன் ஒரு நல்ல வழியாக இருக்கக்கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவன் ஏன் தன் வழியில் போகக்கூடாது? அதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று புரட்சித்தலைவர் சொல்ல, ’தாங்கள் விரும்புவது என்ன? இந்த இடத்தில் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றீர்கள்?” என்று கவிஞர் கேட்கிறார்.
Cont...]....... Thanks....
-
“ (பாகம் 2) தீய வழி என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்கிறார் மக்கள் திலகம்.
‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’
என்ற வரிக்குப் பதிலாக
‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’
என்று எழுதி கவிஞர் சொல்ல,
“ஆகா… பொருத்தமான வரி! அற்புதம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் எம்.ஜி.ஆர். “ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர். கூர்ந்து கவனிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய அறிவாற்றல் மிக்கவர்களோடு பணிபுரிவது பெரும் பாக்கியம்” என்று தன்னிடம் கவிஞர் மருதகாசி மொழிந்ததை வழிமொழிகிறார் பத்திரிகையாளர் நாகை தருமன்.
“எந்தக் காட்சியும் படமாக்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு பெறும், எந்த விதத்தில் படமாக்கினால் நன்றாக அமையும் என்றெல்லாம் விவாதித்த பிறகுதான் ஒப்புக் கொள்வார். அவருககுத் தெரியாத எந்தப் பிரிவுமே இந்தத் துறையில் கிடையாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேங்காய் சீனிவாசன்.......... Thanks...
-
Con-1
சிவாஜிக்கு 60 படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி அவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் நிழற்படங்களிலும் ஒலித்தன. நிஜவாழ்க்கையிலும் அவை பிரதிபலித்தன.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...' ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததை எதிரொலித்தது. அதன்பிறகு அவர் வெளியே வந்த பிறகும் அவரது மூன்றெழுத்து பெயரும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்...' இந்தப் பாடல் வரிகளும் நிஜமாகின. சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆரை முதலமைச்சராக மாற்றியது. அவரும் தனது ஆட்சியில் ஏழை எளியோரை வேதனைப்படாமல் பார்த்துக் கொண்டார்.
ஜெமினியின் ‘ஒளிவிளக்கு' படத்தில் கதைப்படி தீ விபத்துக்குள்ளான எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி ஊர்மக்கள் பிரார்த்தனை செய்து பாடுவதுபோல் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் வாலி.
‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'
இந்தப்பாடல் படத்தில் ஒலித்து பாராட்டுக்களை பெற்றது.
இதேப் போன்று எம்.ஜி.ஆர் நிஜமாகவே உடல்நலம் சரியில்லாத போது அவர் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் மக்கள் இந்தப்பாடலைப் பாடித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘தலைவன்' என்றொரு படம். நீண்ட காலமாகவே முடிக்கப்படாமல் கிடப்பிலிருந்த படம். எதனால் இந்தப்படம் எடுத்து முடிக்க தாமதமாகிறது என்று யோசித்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியை அழைத்து, 'இந்தப்படம் தாமதமாவதற்கு நீங்கள்தான் காரணம்,' என்று கூறினார். வாலியும் 'நான் எப்படி காரணமாவேன்?' என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர். நீங்கள் எழுதி கொடுத்த பாடல் வரிகளை திரும்பவும் சொல்லிப்பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.
‘நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருக்க...' இப்படி பாடல்வரிகளை எழுதி கொடுத்தால் எப்படி படம் முடியும் வெளியே வரும் என்றார் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர்........ Thanks...
-
எனது அரசுப்பணி வரலாற்றில் எனக்குப் பிடித்த உன்னதர்களில் ஒருவர் திரு.பிச்சாண்டி IAS அவர்கள்.அவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிரதம உதவியாளராக கடைசிவரை பணிபுரிந்தவர்.1995ல் அம்மையார் அவரை திண்டுக்கல் கலெக்டராக நியமித்தார்.நானும் அவரும் இணைந்து 1995ல் மாநிலம் தழுவிய கொடைக்கானல் கோடைவிழாவினை நடத்தினோம்.அதன் நினைவாக ஒரு வீடியோ...... Thanks...
-
ஊருக்கு வெளியே பஸ் நிறுத்தம். பயணிகள் காத்திருக்கும் அந்த கட்டிடத்தின் பின்புற சுவரில் அண்ணா, எம்ஜிஆர் அவுட்லைன் ஓவியங்கள். வரைந்தவர் எனது மாமா. இந்த கோட்டோவியங்கள் எப்போதெல்லாம் சேதாரமாகிறதோ அப்போதெல்லாம் கரித்துண்டு கொண்டு அவற்றைப் புதுப்பித்தேன். தேர்தல் நேரம்...ஊருக்கு வெளியே 'ரெட்டை இலை வெற்றித்தந்த இலை' ' இதோ புரட்சித்தலைவர் பேசுகிறார்' என ஒலிபெருக்கி சத்தம் கேட்கிறது.வீட்டிலிருந்து சிறுவர்கள் சிட்டாகப் பறந்து செல்கிறோம். தேர்தல் ஜீப் வாக்கு கேட்டபடி தெருவுக்குள் நுழைகிறது. உங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என்ற வாசகத்துடன் இருவிரல் காட்டி எம்ஜிஆர் நிற்கும் அரைமுழ நீள நோட்டீஸ்களை ஜீப்பில் தொங்கி கொண்டு வாங்கிய பிறகே சிறுவர்கள் கீழே இறங்குகிறோம். (அப்போது ஜீப்பை ஸ்டார்ட் செய்ய ' ட ' வடிவில் வளைந்த இரும்பு கம்பியை ஜீப்பின் முன்புறம் செருகி சுழற்றுவார்கள்) அன்று..திருமண வீட்டில் அதிகாலையிலேயே பக்தி பாடல் ஒலிபரப்பிவிட்டு 'பூ மழை தூவி' இசைத்தட்டை அதற்கான பிளேயரில் பொருத்தி அந்த இசைத்தட்டுல் சரியாக அந்த ஊசிமுனை கைப்பிடியை எடுத்து வைக்கிறார் சவுண்ட் சர்வீஸ்காரர். இசைத்தட்டில் பாட்டுப் போட அனுமதி கிடைத்ததில் பேரானந்தம் எனக்கு. இசைத் தட்டு சுழல...ஸ்பீக்கர் முகப்பில் நாய்க்குட்டி முகம்பார்த்து குந்தவைத்து இருக்க அந்த கொலம்பியா இசைத்தட்டை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு எம்ஜிஆர் பாடல்களை மட்டுமே ஆசைதீர ஒலிபரப்ப ஒரு சந்தர்ப்பம். இரவில் மதுரை வீரன், உரிமைக்குரல் கதை வசன ஒலி கேட்டு ஊரே இன்புற்று தூங்குகிறது. திருமண விசேஷம் முடிந்து வாழை மரம் பந்தலிலிருந்து தூக்கி வீசப்பட்டுக் கிடக்க கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளின் ஏக்கம் தணிக்க, சிறுவர்கள் சவுண்ட் சர்வீஸ் விளையாட்டு விளையாடுவோம். பிளாஸ்டிக் புனலை ஸ்பீக்கராக பயன்படுத்தி தெருவில் உள்ள பூவரசு, வேப்ப மரங்களில் ஏறி கிளைகளில் கட்டி வைப்போம். களிமண்ணால் செய்த இசைத்தட்டு பிளேயரில் சோடா பாட்டில் மூடியை வட்ட வடிவமாக்கி இசைத்தட்டாக பயன்படுத்துவோம். வயர் வேண்டுமே...வாழை நாரை பயன்படுத்துவோம். டியூப் லைட் வேண்டுமே...வாழைத் தண்டை பயன்படுத்துவோம். சிறுவர்கள் மரத்திற்கு மரம் ஏறி உட்கார்ந்து 'அய்ங்...அய்ங்... நேத்து பூத்தாளே' பாட்டுப் பாடி கத்திக் கொண்டிருப்போம். பொங்கல் வாழ்த்து எங்க வீட்டுக்கு வருகிறது. பளபள வழவழப்பான தாளில் இதயக்கனி எம்ஜிஆர் கைகூப்பி நிற்கிறார். பின் அது துணிகள் வைக்கும் பெட்டியினுள்... பெட்டியைத் திறந்தால் அந்த படமே முகமலர்ச்சியை தரும். தேர்தல் பரப்புரை...மெஞ்ஞானபுரத்தில் திமுக பேச்சாளர் எம்ஜிஆரை திட்டுகிறார். பெண்கள் காதைப் பொத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடுகிறார்கள். ஏன் எம்ஜிஆரைத் திட்டுபவர்கள் திட்டு வாங்கிய காலம் அது.( இப்போதும் கூடத்தான்) தியேட்டர் பக்கம்...ரஜினி,கமல் படம் ரிலீஸ். மறுவாரம் எம்ஜிஆர் படம் மறுவெளியீடு. புதிய படத்தைவிட இரண்டு மடங்கு கூட்டம். உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் மாட்டு வண்டியில் பயணித்து உரிமைக்குரல் பார்க்க கிராமவாசிகள் சிரமம் பார்க்கவில்லை. மர்பி, பிலிப்ஸ் ரேடியோக்களில் இலங்கை வானொலியில் எம்ஜிஆர் பாட்டு ஒலிபரப்பப்படும்போது மட்டும் அதிக சப்தம் - (வால்யூமை அதிகரிக்க) செய்து கேட்பது. திடீரென ஒருநாள் எம்ஜிஆர் முதலமைச்சராகிவிட்டார் என்ற ஆரவாரம் தமிழ்நாட்டில்.
பாடப்புத்தகத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சர் புகைப்படம் பார்த்து நெகிழ்கிறேன். இன்று கற்பித்தலில் பாடப்புத்தகம் தவிர்த்து வீடியோ clips காண்பிக்கும் வழக்கம் உள்ளது. அன்று வகுப்பறையில் கற்பிக்கப்படும் கருத்துக்களை உள்ளடக்கி இருக்கும் எம்ஜிஆர் சினிமா காட்சிகள். தாயை வணங்குவதே கடவுளை வணங்கியது போல என்றும் சான்றோர்கள் நல்வழிக்கு வழிகாட்டியவைகளையெல்லாம் காட்சிப்படுத்தி சிறுவயதிலயே நம் மனதில் எளிமையாக பதியும்படி பாடல்கள் மற்றும் நடிப்பு மூலம் எம்ஜிஆர் தனது கலையை அர்ப்பணித்திருந்தார்.( திரையில் பாடம் நடத்திய வாத்தியார் என்பதால் எம்ஜிஆருக்கு நான் ரசிகனாக... பக்தனாக மாறியதற்கு காரணம் இது ஒன்றே என்பதை கோடிட்டுக் காட்டுகிறேன்)
அன்று தெருவின் மைய பகுதியில் இரவு 9 மணிக்குமேல் சைக்கிளில் எடுத்து வந்து ஜவுளி ஏலம் விடுவது வழக்கம். ஜவுளி வியாபாரி ஒரு தீபந்தத்தை எரிய விட்டிருப்பார். லுங்கி, வேட்டி, புடவை என ஒவ்வொன்றாக ஏலம் விட்டுக் கொண்டிருப்பார் வியாபாரி. சில பெற்றோர் அண்ணா நீ என் தெய்வம் எம்ஜிஆர் படம் போட்ட பனியன் சிறுவர்களுக்கு வாங்கி கொடுப்பார்கள். அதை அணிந்து கொண்டு தூங்கி மறுநாள் பலருக்கு தெரியும்படி ஊரில் வலம் வருவோம்.
ஊரில் கோயில் பண்டிகை காலங்களில் உறவினர் வருகை தருவது வழக்கம். விழா முடிந்ததும் உறவினர் தங்கள் ஊருக்கு புறப்படுவதை தடுத்து அவர்களை இன்னும் இரண்டொரு நாள் தங்க வைக்க ஆசைப்படுவோம். ஏதாவது காரணம் சொல்லும்போது 'நம்ம ஊரில் இன்று இரவு எம்ஜிஆர் படம் திரையில் போடுறதா இருக்கு. பாத்துட்டு நாளைக்குப் போகலாம்' என்போம். திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களில் சவுண்ட் சர்வீஸ்காரரிடம் பந்தலில் உட்கார்ந்து கொண்டு சில பெருசுகள் எம்ஜிஆர் பாட்டைப் போடு என அதிகாரம் செய்துகொண்டிருப்பார்கள். 16 எம்எம்மில் தெருவில் சினிமா திரையிட்டால் எம்ஜிஆர் படம் இல்லாமல் சிவாஜி படம் இருக்காது. முதலில் எம்ஜிஆர் படம் திரையிட்டால் இரண்டாவது சிவாஜி படம் பார்க்க ஆள் இருக்காது.
80 களில் புதிய படங்கள் பார்க்க தியேட்டருக்குப் போவோம். கோழி கூவுது, மௌன கீதங்கள், அன்னை ஓர் ஆலயம் படங்களில் எம்ஜிஆர் படங்களின் பாடலோ, சண்டைக் காட்சிகளோ இடம்பெற்றிருக்கும். வீடு வந்தபின்புன் எம்ஜிஆர் காட்சிகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக கோழி கூவுது படம் பார்த்த பின்பு குடியிருந்த கோயிலும் மௌன கீதங்கள் பார்த்த பின்பு மீனவ நண்பனும் பார்க்க துடித்தேன். 87 ம் வருடம்தான் அந்த ஆசை நிறைவேறியது.பில்லா, வாழ்வே மாயம் புதிய படங்கள் இரவு காட்சி பார்க்க போவோம். இடைவேளை நேரத்தில் வணிக மற்றும் பிற வியாபார பொருட்களின் கடை விளம்பரம் நடிகர்களின் புகைப்படத்துடன் சிலைடில் காட்டப்படும். எம்ஜிஆர் புகைப்பட சிலைடு போடும்போது கைத்தட்டல் விசில் சத்தம் மற்றதைவிட அதிகமாகவே கேட்கும். அன்று 'ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க' என போஸ்டர் ஒட்டுவார்கள். நீதிபதி படம் அப்போது ரிலீசான காலக்கட்டம். அது மேட்னி உள்பட 3 காட்சி படம். அத்துடன் ஒருவாரமாக மாட்டுக்கார வேலன் காலை 10.30 காட்சியாக திரையிட்டிருந்தனர். சிவாஜி படம் இடைவேளையில் 'பூ வைத்த பூவைக்கு' என்ற பாடலை காட்டி 'தினசரி காலைக் காட்சி காணத்தவறாதீர்கள்' என சிலைடு போடுவார்கள். அப்போது எம்ஜிஆரைக் கண்டதும் ரசிகர்கள் ஆரவாரமாக அடங்க வெகு நேரம் பிடித்தது. நீதிபதி படம் ஒரே வாரத்தில் தூக்கப்பட்டு மாட்டுக்கார வேலன் 2 வது வாரமாக ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க என 4 காட்சியாக்கப்பட்டது. அந்த 2 வது வார ஞாயிறு மேட்னி மீனவர்களின் ஆர்ப்பரிப்பால் உடன்குடி அமளி துமளிப்பட்டது.
இதயக்கனி படம் பார்த்துவிட்டு வந்தவுடன் கறுப்புக் கண்ணாடி அணிவித்து என்னை 'எம்ஜிஆர் போல இருக்கிறாய்' என கூறி உறவினர் கலகலப்பூட்டிய நிகழ்வே எம்ஜிஆர் என்னைக் கவர்ந்த முதல் அனுபவம். மனித முகம் வரையும் போதெல்லாம் எம்ஜிஆர் மூக்கு, கண்கள், புருவம், அரும்பு மீசை, தாடையில் சிறு குழி, நல்லநேரம் ஹேர் ஸ்டைலிலேயே வரைவேன். ஆண் உருவம் வரைந்தால் எம்ஜிஆர் சாயலில்தான் வரைகிறேன். அன்று ஒருநாள்...மாலை 4 மணிக்கு 'எம்ஜிஆர் நம்ம ஊருக்கு வருகிறாராம்' என்ற செய்தி கேட்டு பள்ளிக்கூடத்தில் இருக்க முடியவில்லை. பள்ளி கடைசி மணி அடித்ததும் மின்னலாக வந்து மேடை முன்பு அமருகிறேன். சற்று நேரத்தில்..புரட்சித்தலைவர் வருகிறார்...வாழ்க..வாழ்க கோஷம் ஆர்ப்பரிக்கிறது. சந்தன நிறத்தில் சந்திரன் மேடையை அலங்கரிக்கிறார். அனைத்து கண்களும் நிலைகுத்தி நிற்கிறது.மேடை காலியாகிறது. அன்று எம்...ஜி...ஆர் என் கண்ணுக்குள் நுழைந்தார்... இதயத்தில் இன்றும் ....( நண்பர்களே இங்கு சுட்டிக்காட்டப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் விரிவாக கூற ஆயுள் போதாது)....... Thanks mr. Samuel...
-
பெரியவாளும்
எம்.ஜி.ஆரும்....
ஒரு சோம்பலான மதியம் மூன்றரை மணி!!
அதாவது மதியத்தின் முடிவு--மாலைப் பொழுதின் ஆரம்பம் என்ற இரண்டுங்கெட்டான் பொழுது??
காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது!!
காரிலிருந்து இறங்குபவரைப் பார்த்ததும்
மடம் -தீ பிடித்துக் கொண்டதைப் போல் ஆகிறது??
ஆம்!! காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்!!
எந்தவித முன் அறிவிப்பும் இல்லை. அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை.
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள்.காரணம்?
அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை!! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்.
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்!!
ஏன் இந்தப் பரபரப்பு?
அவரிடம் தயங்கியபடியே விபரம் சொல்லப்படுகிறது!!
மகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.இவ்வளவு தானே.அங்கேபோய்அவரைதரிசித்துக்கொள்கிறேன்பதட்டம ில்லா பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்??
மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கிநம் மனதிலோ பிரமிப்பில் நெடிலை நோக்க.
இப்படி வருத்தப் படுகிறது முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி.
உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை.
அதனால் என்ன?இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!! என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.
இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்!! அந்த ஒரு சிலரில்
எம்,ஜி,ஆரும் ஒருவர்!!!
ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!!
நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி--திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு!! அதுக்கு தேக சிரமம்--கால விரயம்--பணச் செலவுன்னு ஆகிறது!!
ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்!!
இவ்வளவு தானே?இந்த சின்ன விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே?
நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்தசங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்கஉன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை,, என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.
நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா!! அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்!! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து!! நீ கிளம்பு என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி!!
இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!!!!
எம்,ஜி,ஆர்,அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்காட்சியும்,அரசாட்சியும் அருமையாக அமைந்து விட்டால்---அரசனும்--ஆண்டவனும் ஒன்றே என்பது நமக்கு விளங்குகிறது அல்லவா நன்றே.......... Thanks...
-
வசனகர்த்தாவோ, பாடலாசிரியரோ எழுதுகின்ற ,சொல்லுகின்ற எந்த கருத்தும் ,அவர்களின் ஏட்டிலே இருக்க்கின்றவரை தெருவில் பாடுகின்ற குரலாகத்தான் இருந்தது ! எம் புரட்சித்தலைவரின் கைகளில் வந்த பிறகுதான் அது திருக்குறளாய் மாறியது ! ஆமாம்! ஆட்சிபீடத்திற்கு உரியவர்கள் ஆண் பெண் என்ற பேதமில்லை! யாராக இருந்தாலும் மக்களின் உதவி என்னும் நூலை கொண்டுதான் பதவி என்னும் பட்டம் வானமளாவி பறக்கவேண்டும் ! நேர்மையான செங்கோல் ,நிம்மதியான ஆட்சி இதுதான் ஒரு ஆட்சிக்கு அளவுகோல் ! என்ன ஒரு சத்தியமான வார்த்தை ! அதை சாத்தியமாக்கிய சரித்திர நாய்கர் !....... Thanks...
-
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.
உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன் என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.
கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.
எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர்.
பிறப்பு என்பது தற்செயலாக நடக்கும் இயற்கை நிகழ்வு. இதில் பெருமை படவோ அல்லது சிறுமை கொள்ளவோ எதுவுமில்லை. சுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான மன நோய
கக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர்.ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது.(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள் ) அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:
எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’
தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.
1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.
அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,
‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.
மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,
எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.
கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.
கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.
அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.
கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!..... Thanks...
-
பத்திரிகை: இந்த தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?
கருணா: உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வள்ளுவர் கோட்டம் போய் பாருங்கள். அங்கு பிரம்மாண்டமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாளை மறுநாள் என் பதவியேற்பு விழாவில் பிரதமர் இந்திரா கலந்து கொள்ள உள்ளார். நீங்களும் தவறாது கலந்து கொள்ளுங்கள். (நகைச்சுவையாக) வடக்கும் தெற்கும் ஒன்றிணைகிறது. ஆம். சுவையான வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகள் பரிமாறப்படும். அந்த அளவுக்கு நான் வெற்றி பெறுவது உறுதி. என் கவலையெல்லாம் நாளை என்பது சீக்கிரம் வர வேண்டுமே என்றுதான்.
மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மக்கள் மறுபடி எம்ஜிஆர் அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அதே நிருபர் எம்ஜிஆர் இடம் பேட்டி.
பத்திரிகை :கருணாநிதி அவர்கள் நேற்று பேட்டியில் வெற்றி பெற்று விடுவேன். என மிகுந்த நம்பிக்கை யுடன் இருந்தாரே... ஆனால் வெற்றி உங்கள் பக்கம். இது எப்படி சாத்தியமானது?
எம்ஜிஆர் : கருணாநிதி அதிகாரத்தையும் ஜோசியத்தையும் நம்பினார். நான் மக்களை நம்பினேன்..இந்திராவிடம் என் ஆட்சியை கலைக்க சொன்ன கருணாநிதிக்கு நன்றி சொல்கிறேன். மக்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை எனக்கே உணர்த்திய நண்பர் கருணாநிதிக்கு நன்றி!!
அதுதான் எம்ஜிஆர்......... Thanks...
-
[#பட்டங்களுக்குப் #பெருமை
கல்மனம் நிறைய உண்டு...நன்மனம் பார்ப்பது அரிது...அதிலும் அரிது #பொன்மனம் #தரம் #குறையாதது...பெண்ணும் பொன்னும் மாற்றுக்குறையாமல் இருக்கவேண்டுமென்பது விதி..அந்த நன்மனம், பொன்மனம் எப்படி நெகிழ்ந்தது...மகிழ்ந்தது ...!!!
பொன்மனச்செம்மல் பட்டம், தமிழ் வளர்த்த பெரியார் வாரியார் அவர்களால் வழங்கப்பட்டதை அறிவோம்...
#வாரியார் #என்ற #பெயருக்கே பொன்மனச்செம்மல் அளித்த விளக்கம் : "தமிழ்ச்சுவையை வாரி வாரி வழங்குவதால், அப்பெரியார்க்கு அப்பெயர்" என்றார்.
பொன்மனச்செம்மல் #நகைச்சுவை #உணர்வு மிகுந்தவர்...
ஓர் முறை ராமாவரத்திலிருந்து வரும் போது நல்ல மழை. கார் போரூரை நோக்கி கார் போய்க்கொண்டிருந்தது...அப்போது ஒரு கார் வேகமாகக் கடந்து சென்றது. வேகத்தில் சேற்றை அவரது காரின் மீது இறைத்தது...
அப்போது மக்கள்திலகம் சிரித்துக்கொண்டே சொன்னார்:
"பாரி வள்ளல் வாரிக்கொடுத்தான் அக்காலத்தில்...
காரில் போகிறவர்களும் வாரியடிக்கிறார்கள் இக்காலத்தில்...இவர்களையும் "வாரியார்" என்றே சொல்லலாம்...
உலகில் ஒருவர் மற்றவரை மதிக்கிறார் என்றால் அவருக்கு அந்த நபர் '#கொடுக்கிறார்' என்றே பொருள். அதாவது மதிப்புக்கும் விலை கொடுக்கவேண்டும். ஆனால் பொன்மனச்செம்மல், வாரியார் அவர்களை நமக்கு பட்டம் தரவேண்டும் என்பதற்காக மதிக்கவில்லை...
இதற்கு ஒரு சிறு உதாரணம் :
வாரியார் சுவாமிகள் பிரபலமாகாமலிருந்த போதே அவரது தமிழ்ச்சேவைக்காக மக்கள்திலகம் மதித்தார்.
1954- ல் பொருட்காட்சியில் "இன்ப கனவு" நாடகம் நடந்து கொண்டிருந்தது. பெருங்கூட்டம். அந்நாடகத்தில் வில்லன் வேடமேற்று நடித்த சேதுபதி என்பவர் ஒரு கட்டத்தில் "கிருபானந்த வாரியார் காலட்சேபத்துக்கு சுண்டல் வாங்கப் போனேன்" என்று சொல்வதற்கு பதில் '#கிருக்கானந்தவாரியார்' #உம்ஹும் '#கிருபானந்தவாரியார்' என்று கிண்டலடிப்பார். கூட்டத்தில் பலர் சிரித்தனர்...
மேடை மேல் ஓரமாக நின்ற மக்கள்திலகம் முகம் சிவந்தார். நாடகம் முடிந்ததும் கண்டிக்கப்பட்டார்.
"மன்னிச்சுக்கங்க அண்ணா. சும்மா தமாசுக்கு சொன்னேன். ஜனங்களை சிரிக்கவைக்க" ன்னார் சேதுபதி.
அப்ப மக்கள்திலகம், "அப்ப அண்ணா பேரு, காந்தி பேரு, காமராசர் பேரு வந்தாக்கூட இப்படித்தான் கிண்டல் பண்ணுவியா??? #மத்தவங்களை #சிரிக்கவைக்க #மகான்களின் #பெயரை #இழுக்கக்கூடாது...அது மிகவும் #இழிவான #செயல்" என்று பொட்டிலடித்தாற் போலக் கூறினார்.
பட்டங்களால் சிறப்பு பெறுபவர் பலர் உண்டு...!!!
அந்தப் #பட்டங்களே #சிறப்புபெறுவது நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலுக்கு சூடியதால் மட்டுமே என்பதை யாரால் மறுக்கமுடியும் !!!]....... Thanks...
-
பல வருடங்களுக்கு முன்னால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஏற்பட்ட கட்சி மோதலில் மாணவர் பாலசுந்தரம் சில தீயசக்தி கும்பலால் வெட்டி சாய்க்கப்பட
அவர் அருகில் இருந்த ஒரு மாணவர் அவரை தன் மடியில் சாய்த்து கொண்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்ற முனைகிறார். அதிக ரத்தம் வெளியேற அந்த மாணவர் பாலு அவர் சக தோழர் மடியில் உயிர் நீக்கிறார்.
இதை கேள்விப்பட்ட நமது தலைவர் அந்த மாணவர் பாலு உயிரை காக்க கடும் முயற்சி செய்தவர் பற்றி விவரம் சேகரிக்க அவர் தச்சு வேலை செய்யும் ஒரு ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் அந்த மாவட்டம் முழுவதும் அறிய பட்ட தனது தீவிர ரசிகர் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.
அடுத்து அந்த மாணவரை அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆக்குகிறார்.
அவருக்கு தன்னை எப்பொழுது சந்திக்க வந்தாலும் தோட்டத்தில் சிறப்பு அனுமதி கொடுக்கிறார் பொன்மனம்.
பின்னாளில் அவரை அவர் சார்ந்த மாவட்ட ஆட்சியர் வசம் கட்டுப்பாட்டில் இருந்த cooptex சொசைட்டியை பிரித்து புதிதாக சேர்மன் என்ற பதவியை உருவாக்கி அவருக்கு கொடுக்க சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு இடுகிறார்.
மாவட்ட ஆட்சியர் யாரோ பெரிய கட்சிக்காரர் போல இவர் என்று நினைத்து கொண்டு தலைவர் சொன்ன படி அந்த பொறுப்பை கொடுக்க அவர் வீட்டுக்கு சென்று அரசு முறைப்படி பதவி ஏற்பு நிகழ்வு விவரம் சொல்ல போக.
அங்கே அவர் கண்ட காட்சி அவரை உறைய வைத்தது....சாதாரண ஓட்டை ஓலை குடிசை வீட்டு வாசலில் வந்து நிற்கிறார் ஆட்சியர்.
வீட்டு வாசலில் தலைவர் நலம் பெற வேண்டி அவர் வகுத்த தீக்குண்டம், அவரின் எளிமையான இனிமையான குணம் கண்டு மிகவும் கண்டிப்பான அந்த ஆட்சியர் உடன் இவர் வீட்டை அடையாளம் காட்ட வந்த மேனேஜர் வேலாயுதம் ஆச்சர்யம் அடைகின்றனர்.
உண்மையான தொண்டனை தலைவர் ஒரு நாளும் கை விட்டது இல்லை.
சரி இவ்வளவு நேரம் பதிவில் அவர் பெயரை நான் குறிப்பிடவில்லை
அவர் யார் என்றால் கடலூர் மாவட்டம் சேர்ந்த அந்த தொண்டரின் பெயர் முருகுமணி.
சரித்திரம் படைத்த மதுரையில் நடந்த எம்ஜியார் மன்ற மாநாட்டுக்கு தலைமை வகித்தவரும் இதே முருகுமணியே.... அன்று நடைபெற்ற ஊர்வலத்துக்கு தலைமை நெல்லை ...ப.இளமதி ஆகும்.
மாநாட்டு மேடையில் அம்மையார் ஒரு வெள்ளி செங்கோலை தலைவர் அவர்களிடம் கொடுக்கும் படம் வரலாற்று புகழ் பெற்றது.
அந்த நினைவு பரிசை கொடுக்கும் போது தலைவர் மாநாட்டு தலைவர் முருகுமணியை அழைத்து அந்த நிகழ்வில் நிற்க அந்த செங்கோலை பிடிக்க சொல்லும் படம் பதிவில் இணைக்க பட்டு உள்ளது.
அந்த மூன்றாம் நபர் தொண்டன் கடலூர் முருகுமணியே ஆகும்.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி..
நாளை சந்திப்போம்....... Thanks...
-
இரண்டு மணி நேரம் பொறுமையாய் படம் பார்க்கும் நம் மக்கள் எண்ட் கிரெடிட் டைட்டில்ஸ் ஓடுகையில் ஏதோ திரையரங்கில் தீப்பிடித்துக் கொண்டது போல ஓட முற்படுவார்கள். அத்தனை பொறுமை!!
இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்துக்கொண்டு மூன்றுமணி நேரம் ஓடுகிற படத்தில், அதுவும் க்ளைமாக்ஸ் காட்சி முடிந்தபின் ஒரு பாடல் வைக்கலாம் என்று எந்த இயக்குநராவது யோசிப்பாரா..? ஏ.சி.திருலோகசந்தர் யோசித்தார், வைத்தார்.
நாலு நிமிடம் ஓடுகிற அந்த ‘அன்பே வா’ ஹேப்பி ஸாங் முடிகிற வரையில் ஒருத்தராவது எழுந்து வெளியே போகணுமே... அப்படி ஈர்த்தது எம்ஜிஆரின் ஆகர்ஷண சக்தி. வேறு எந்த ஹீரோவுக்கும் அப்படியொரு கட்டிப் போடுகிற பவர் இருந்ததில்லை என்றும். இன்று காணலாம் அத்திரைப்படத்தை மீண்டும்.
நன்றி கணேஷ்பாலா........ Thanks.........
-
உண்மை. சிறுவயதில் அந்த அனுபவம்நிறைய உண்டு.டீ.வி இல்லாத .காலம்.பற்பல தடவைகளுக்கு மேல் பார்த்து இருக்கிறேன்.....பிரமித்தேன் .....அன்று எம்ஜிஆர்........ ஒரு பிரம்மாண்டம்........ Thanks...
.
-
#எம்_எஸ்_வி_பற்றி #புலவர்_புலமைப்பித்தன் -
வீட்டில் இருந்து காலையில் ஏழு மணிக்கு எல்லாம் ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நாங்கள் அவர் வருவதற்கு முன்பே கூடிவிடுவோம். அவர் வரும்போது பத்து பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கி அடுக்கி இட்லி கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். ‘வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க... இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துடும்’ என என்னிடம் சொல்லிவிட்டு ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படிச் சிரிப்பார். எல்லாமே அவருக்கு விளையாட்டுத்தான். அப்படி ஒரு பிள்ளை மனசு.
உலக விஷயங்கள் எதுவும் தெரியாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது அவரிடம் சொன்னால், ‘அப்படியா... எப்ப வந்தார்?’ எனக் கேட்கும் அளவுக்கு வேட்டி சட்டை அணிந்த வெள்ளந்திப் பிள்ளை அவர்.
ஒருநாள் ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் பதிவுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, ‘வாத்தியார் அய்யா... நேத்து ஒரு கனவு கண்டேன். நீங்க எழுதிக்குடுத்த பாட்டுக்கு நான் போட்ட மெட்டு நல்லா வரலைன்னு, நீங்க என் கையை நீட்டச் சொல்லி அடி பின்னிடுறீங்க. அப்புறம் நான் முழிச்சுக்கிட்டேன்... பார்த்துக்கங்க’ எனக் கைகளை முன்னே காட்டி, முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார். பக்கத்தில் இருந்த எல்லோரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டோம். நான் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் கண்டிப்பான தமிழ் வாத்தியார். கீழ்படியாத மாணவர்களைப் பிரம்பெடுத்து விளாசிவிடுவேன். மெல்லிசை மன்னரின் இரண்டு பிள்ளைகள் என் மாணவர்கள் என்பதால், அந்த விஷயம் அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு அப்படி ஒரு கனவு வந்தது என்றார்
‘குடியிருந்த கோயில்’ படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் நான் எழுதின பாடல்தான் என் திரையுகல வாழ்வின் முதல் பாடல். கோவையில் இருந்து சென்னைக்கு என்னை அழைத்துவந்த கே.சங்கர்தான் இயக்குநர். ஏற்கெனவே இரண்டு மூன்று பேர் அந்தப் பாடல் சூழலுக்கு எழுதியும் திருப்தியாக வராத நிலையில்தான், என்னை எழுதச் சொன்னார்கள். சூழலைச் சொல்லிவிட்டு மேற்கு மாம்பலம் பவர் ஹவுஸ் பக்கத்தில், காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார் கே.சங்கர். காரில் வரும்போதே மனசுக்குள் பாடல் முழுவதும் வந்துவிட்டது. பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் பேப்பர் வாங்கலாம் எனப் போனால், சட்டைப்பையில் பேப்பர் வாங்கக்கூட காசு இல்லை. கையில் வைத்திருந்த பேப்பர் ஃபைலைத் திருப்பி, அதில்தான் எழுதினேன் ‘நான் யார்... நீ யார்... நாலும் தெரிந்தவர் யார்... யார்?’ அன்று மாலையே அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு. பாடல் எழுதின பேப்பரைக் கையில் எடுத்த எம்.எஸ்.வி., ஒரே மூச்சில் முழுப் பாட்டையும் பாடி மெட்டமைத்த அதிசயத்தை, அன்றுதான் நேரில் பார்த்தேன். அந்தப் பாடல் எழுதுவதற்கு முன்பே எனக்கு எம்.எஸ்.வி. பழக்கம் என்றாலும் அந்தப் பாடலுக்குப் பிறகு எங்களுக்கு நட்பின் பிணைப்பு இன்னும் இறுக்கமானது.
தமிழ்த் திரையுலகில் எம்.எஸ்.வியைப் போல குருபக்தி கொண்டவர்களைக் காண்பது அரிது. தன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை, தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றியவர் எம்.எஸ்.வி. சுப்பையா நாயுடுவின் கடைசிக்காலம் வரை அவரிடம் எம்.எஸ்.வி காட்டிய நன்றி விசுவாசம் எல்லையற்றது. எம்.எஸ்.வியின் ஒவ்வொரு பிறந்த நாளும் ஏற்காட்டில் உள்ள அவரது பங்களாவில் நடக்கும். அவரோடு வேலைபார்க்கும் முக்கியமனவர்களை மட்டும் அழைப்பார். பிறந்த நாள் அன்று காலை குளித்து முடித்ததும் அவரது அம்மா நாராயணி அம்மாள், குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருவரின் கால்களிலும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவார். சுப்பையா நாயுடுவின் காலில் விழுந்து வணங்கி எழுந்திருக்கும்போது எம்.எஸ்.வியின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடும். அத்தனையும் நன்றிக்கடனுக்காக சிந்தும் கண்ணீர் என்பது என்னைப் போல எம்.எஸ்.விக்கு நெருக்கமாக இருந்த நண்பர்களுக்குத் தெரியும். சுப்பையா நாயுடு இறந்தபோது அவரது இறுதிச் சடங்குகளைப் பிள்ளையின் ஸ்தானத்தில் இருந்து செய்து முடித்தார் எம்.எஸ்.வி.
எம்.எஸ்.வி., ஒரு பாடலுக்கு மெட்டு போட்டால் கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரஞ்சரமாகக் கொட்டும். ‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலை நான்தான் எழுதினேன். எம்.ஜி.ஆருக்கு எழுதிய காதல் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அந்தக் காலத்தில் பட்டிதொட்டி எங்கும் இந்தப் பாடல் ஒலித்தது. இந்தப் பாடலுக்கு அடுத்தடுத்து பத்து மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார் எம்.எஸ்.வி. இந்தப் பாடல் வெளியாகி பிரபலமாகி இருந்த சில நாட்களுக்குப் பிறகு, சிவாஜி பிலிம்ஸ் தாயரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்கு சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று எம்.எஸ்.வி&டமும் அப்படியே பேசியிருக்கிறார். ‘என்னடா... அண்ணனும் (எம்.ஜி.ஆர்) மலையாளி... நீயும் மலையாளி... அதனால அண்ணனுக்குத்தான் நீ நல்ல பாட்டா போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ என, ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலைச் சொல்லிக் கேட்டார். பதறிப்போன எம்.எஸ்.வி. உடனே, ‘எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டுதான் நானு... பாட்டு எழுதினதெல்லாம் வாத்தியார் அய்யாதான்... நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க...’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்துவிட்டு எம்.எஸ்.வியைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
வாஹிணி ஸ்டுடியோவில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்துக்கான பாடல் பதிவு. ‘தீர்த்தக்கரையிலே தெற்கு மூலையிலே செண்பகத் தோட்டத்தினிலே...’ என்ற பாரதியார் பாடலை எடுத்துக்கொண்டு வந்துகொடுத்து இசையமைக்கச் சொன்னார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். அது சிந்து வகைப் பாடல். மெட்டுக்குள் கட்டுப்படாமல், ஒரு குழந்தையைப் போல நழுவி நழுவி ஓடும் தன்மை கொண்டது. பாடலைக் கையில் வாங்கிய எம்.எஸ்.வி., ஏற்கெனவே பத்து முறை பாடி பயிற்சி எடுத்ததுபோல படபடவென்று பாடி முடித்துவிட்டார். எங்களுக்கெல்லாம் பெருத்த ஆச்சர்யம். பாடி முடித்ததும் என்னைப் பார்த்து ‘வாத்தியார் அய்யா பாட்டு எப்படி?’ என்று கேட்டார். நான் ‘பாரதியார் நேரில் வந்து மெட்டமைத்திருந்தால்கூட இப்படி அமைத்திருக்க மாட்டார்’ எனச் சொல்ல, எம்.எஸ்.வியின் கண்களில் தாரைத்தாரையாகக் கண்ணீர்... அவர் மிகவும் உணர்ச்சிவசப் பட்ட தருணம் அது.
எம்.எஸ்.வி., மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதையெல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். தமிழ்த் திரையுலகில் இப்படிப்பட்ட பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்களா என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார் எம்.எஸ்.வி. உதாரணமாக மூன்று சம்பவங்களைச் சொல்கிறேன்...
அப்போது தேவர் பிலிம்ஸ் கம்பெனியின் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்தான். ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, ‘தம்பி... நம்ம கம்பெனியோட புதுப்படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க...’ எனச் சொல்லிப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., ‘மாமா (கே.வி.மகாதேவன்) இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது இல்லைனு முடிவு பண்ணிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர் எம்.எஸ்.வியின் அம்மா நாராயணி அம்மாளிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் ‘என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி... அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். அடுத்து...
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த ‘வியட்நாம் வீடு’ படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை. அப்போது அவர்கள் தயாரிக்கவிருந்த ‘கௌரவம்’ படத்துக்கான கதை விவாதம் முடிந்து இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை இசையமைக்கும்படி சொல்லி, கதை சொன்னார்கள். கதையைக் கேட்டு முடித்த கே.வி.எம்., எழுத்துபோயிருக்கிறார். ‘ஏன் கதை பிடிக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை... இந்தக் கதை கொஞ்சம் முற்போக்கானது. இதற்கு என்னைவிட எம்.எஸ்.வி பொருத்தமாக இருப்பார். அவரை இசையமைக்கச் சொல்லுங்கள்’ எனச் சொல்லிவிட்டார் கே.வி.எம்.
எம்.எஸ்.வியிடம் சொன்னால், ‘மாமா இசையமைப்பதாக இருந்த படத்த்துக்கு நான் இசையமைக்க மாட்டேன்’ எனச் சொல்லிவிட, கே.வி.எம்மே போன் போட்டு, ‘நீயே இசையமைத்துக் கொடு எனக்கு அந்தப் படம் சரிவராது’ எனச் சொன்னபிறகுதான், கௌரவம் படத்துக்கு எம்.எஸ்.வி. இசையமைத்தார். இதேபோலத்தான்... உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க இரண்டு பாடல்களும் பதிவாகிவிட்டன. எம்.ஜி.ஆரை அந்தப் பாடல்கள் ஈர்க்கவில்லை. குன்னக்குடி வைத்தியநாதனை அழைத்து, ‘நான் எடுக்கவிருக்கும் ஒரு சரித்திரப் படத்தில் உங்களுக்கு நான் வாய்ப்புத் தர்றேன். இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி., இசையமைச்சா பொருத்தமா இருக்கும்’ எனச் சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டார். குன்னக்குடி வைத்தியநாதனும் சம்மதித்துவிட்டார். ஆனால், வழக்கம்போல எம்.எஸ்.வி., ‘குன்னக்குடி அவர்கள் இசையமைத்த படத்துக்கு நான் எப்படி இசையமைப்பது முறை இல்லை...’ எனச் சொல்லி மறுக்க, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே நேரில் வந்து சொன்னப் பிறகுதான் எம்.எஸ்.வி. ஒப்புக்கொண்டு இசையமைத்துத் தந்தார். இதுதான் தமிழ்த் திரையிசை வரலாறு. வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அதிலும் பண்பாடு காத்து பாடல் போட்டவர் எம்.எஸ்.வி. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையில் மயங்கிப்போய் எம்.ஜி.ஆர்., 50000 ரூபாய் சம்பளம் தந்தார். அதுவரை எம்.எஸ்.வி. இசையமைக்க வாங்கியத் தொகை 25ஆயிரம்தான்.
ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘இதயக்கனி’ படத்துக்காக எம்.எஸ்.வி. இசையில் ஒரு மெட்டுக்கு பாடலும் எழுதிவிட்டேன். இடைவேளையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தட்டைக் கீழே வைத்துவிட்டு, ஒரு மெட்டை பாடிக்காட்டி, ‘வாத்தியார் அய்யா இந்த மெட்டுக்கு ஒரு பாட்டு கொடுங்க... அந்தப் பாட்டு வேண்டாம்...’ என்றார். நானும் அப்போதே எழுதிக்கொடுத்தேன். அந்தப் பாடல்தான் இன்பமே உந்தன் பேர் பெண்மை... அப்போது பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான காதல் பாடல் இது. ஆனால் பிறந்தது என்னவோ ஒரு சாப்பாட்டு இடைவேளையில். அதே படத்துக்காக ‘நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...’ பாடலுக்கு முன்புவரும் தொகையறாவில், ‘காவிரியையும் எம்.ஜி.ஆரையும் இணைத்துப் பாடல் எழுத முடியுமா?’ என ஆர்.எம்.வி கேட்டார். ‘ஏன் முடியாது?’ எனச் சவாலாக எடுத்துக்கொண்டு எழுதிய
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே,
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி, எங்கள் இதயக் கனி இதயக்கனி..
தொகையறாவை உடனே மெட்டமைத்துப் பாடிக்காட்டி அசத்தியவர் எம்.எஸ்.வி.
பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் காலைப் பிடித்துப் பாராட்டுவார் எம்.எஸ்.வி. ‘வரம்’ படத்தில் ஒரு பாடலில் ‘அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா’ என ஒரு வரி எழுதிவிட்டேன். அதை இசையமைக்கும்போது படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் என் காலைத் தொட்டுப் பாராட்டினார். ‘இப்படி நீங்கள் செஞ்சா நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், ‘வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜம்’ என்றார். ஒரு பாடலுக்கு நன்கு இசையமைத்துவிட்டால், அதுக்கான கிரெடிட்டை ‘வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனதுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு துட்டு வாங்கியது கிடையாது. பத்தாயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, 25 ஆயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, அதே இசைதான்.
டி.எம்.எஸ் போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது. அப்போதெல்லாம் அவர் ட்யூனைக் கற்றுக்கொள்ளும் வரை விடமாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும் அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார்.
கௌரவம் படத்தில் ‘பாலூற்றி வளர்த்த கிளி’ பாடலை முதலில் பாடியது எம்.எஸ்.விதான். படத்தில் பின்னணியில் ஒலிக்கும் பாடலாக வரும் என்றுதான் முதலில் எடுத்தார்கள். அப்படியே எம்.எஸ்.வியும் பாடிமுடித்துவிட்டார். பாடலை கேட்ட சிவாஜி ‘இதற்கு நான் வாயசத்து நடித்துவிடுகிறேன்’ எனச் சொல்லி நடித்தும்விட்டார். ரீ ரிக்கார்டிங்கில்தான் எம்.எஸ்.வி&க்கு இந்த விஷ்யம் தெரியவந்தது. ‘சிவாஜிக்கு என் குரலா? இல்லை இல்லை டி.எம்.எஸ்ஸைக் கூப்பிடுங்கள்’ என்றார். நான் ‘உங்கள் குரல் சிவாஜிக்கும் சூழலுக்கும் பொருத்தமாதானே இருக்கு...’ என வற்புறுத்தினேன். உடனே எம்.எஸ்.வி. அவர்கள் ‘இல்ல வாத்தியார் அய்யா... சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடினால்தான் பொருத்தமா இருக்கும்’ என தனக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றவருக்கு விட்டுத்தந்த மாமேதை எம்.எஸ்.வி.
பாட்டுக்கு மெட்டு போட்டு விட்டு நேரம் கிடைத்தால் ‘வாத்தியார் அய்யா வாங்க சீட்டு போடுவோம்’ என்பார். எம்.எஸ்.வி., இயக்குநர் ஆர்.சி.சக்தி, நான்... மூவரும் இணைந்தால் அங்கே சீட்டாட்டம் நிச்சயம் இருக்கும். எம்.எஸ்.விக்கு சீட்டாடுவதிலே அவ்வளவு பிரியம். ஆனால், அவரைப் போல தோற்பவர்களைப் பார்க்க முடியாது. ஏனென்றால் அவருக்கு சீட்டு விளையாடவே தெரியாது. சமயத்தில் ஜோக்கரையே கீழே இறக்கிவிடுவார். ‘அய்யோ... இது ஜோக்கர் எடுத்து உள்ள வைங்க’ என்று சொன்னால் அப்பாவிப் போல முகத்தை வைத்துக்கொண்டு, நாக்கைத் துருத்திச் சிரிப்பார். அவ்வளவு அப்பாவி.
‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளையடித்தவன் நீதான் என் உள்ளத்தை, கொட்டி வைத்தவன் நீதான் இன்பத்தை’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி., 80 மெட்டுக்கள் போட்டார்; நான் 120 பல்லவிகள் எழுதினேன். அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்த இடிச்சபுலி செல்வராஜ், இந்த விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொல்ல... ‘எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்ட எம்.ஜி.ஆர் உங்களை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்’ என்றார். இல்லை தலைவரே இது ஒருவகையான பயிற்சி. இனி எந்தச் சூழலுக்கும் நான் பாட்டு எழுதிவிடுவேன்’ என்று சொல்லிச் சமாளித்தேன்.
அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். ‘மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய ‘காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்.... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்’ பாடலை அழுதுகொண்டே மெட்டமைத்துப் பாடியது எம்.எஸ்.வியின் ஈர மனதுக்கு எடுத்துக்காட்டு.
திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல. நாங்கள் இருவரும் இணைந்து... எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அதிமுக பிரசாரப் பாடல்களும் தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரமபலம். அதிமுக முதன்முறையாக தேர்தலில் நின்ற 1977ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி. இசையமைக்க நான் எழுதிய ‘வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல் ஒலிக்காத ஊரே கிடையாது. 1984ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டு மணி நேரத்தில் 9 பாடல்களை இரண்டே நாட்களில் மெட்டமைத்து பதிவு செய்து அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி.
தான் கண்ட கனவு ஒன்றை 30 வருடங்களுக்கு முன்பு சொன்னார் எம்.எஸ்.வி.... ‘வாத்தியார் அய்யா நேத்து ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவுல நான் செத்துப் போயிட்டேன். இறுதி ஊர்லவத்துல என்கூட பழகினவங்கள்ல யாரெல்லாம் வர்றாங்கனு மேல போத்திருந்த துணியை விளக்கிப் பார்த்தேன்... அப்புறம் முழிச்சுக்கிட்டேன். என்னங்க வாத்தியார் அய்யா இப்படி ஒரு கனவு’ என்றார். நான் ‘உங்களுக்கு ஆயுசு நூறு இப்போ உங்களுக்கு சாவு கிடையாது’ என்றேன். எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்திருக்கலாம். ஆனால், அவரது நாதம் காற்றை இன்றும் என்றும் உயிர்பித்துக்கொண்டிருக்கிறது. தமிழர் என்ற ஒரு இனம் இருக்கும்வரை அவர்களது சுக துக்கங்கள் இருக்கிறவரைக்கு எம்.எஸ்.வியின் பாடல் ஒலிக்கும். அவை ஒலிக்கிற வரைக்கும் எம்.எஸ்.வி இருப்பார்! ஏனெனில் அவர் விஸ்வரூபம் எடுத்த நாதம்!........ Thanks...
-
#அனைத்துலக##எம்ஜிஆர்##பொதுநல##சங்கம்#
--------------------------------------
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
அன்பார்ந்த
புரட்சிதலைவர் விசுவாசிகளே கழகநட்புகளே என் தனிப்பட்ட நட்புக்களே அனைவருக்கும் வணக்கம் கொரோனாவின் தாக்கம் வறியோருக்காக உங்களிடம் கையேந்துகிறேன்
எல்லோரும் வருந்தும் ஏழை மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுள்ளோம் நான் என்னுடைய பார்வையில் எம் ஜிஆர் விசுவாசிகளின் வேதனைகளை கண்டறிந்தேன் வேலைக்கு போனால்தான் சோறு என்றநிலையில் நிறையபேர் முதியோர் அடுத்த வேளை எப்படி என்று காலம் கழிக்கின்றனர் தீடிரென கொரோனாவின் தாக்கம் நிலைகுலைய செய்துள்ளது அவர்கள் பசியாற மளிகை பொருட்கள் வாங்கி தருவோம் வாருங்கள்
நாம் சாப்பிடும் சாப்பாட்டை கொடுக்கவும் முடியாத நிலை ஊரடங்கு சட்டம் அவர்களின் வறுமையை ஓரளவு சரி செய்ய ஏதாவது செய்யனும் நினைச்சேன் சங்கத்தினரை தொடர்பு கொண்டேன் அவர்களும் உதவலாம் என்றனர் மேலும் எம் ஜிஆர் கலைவேந்தன் பக்தர்கள் குழு V.s shiva perumal அவர்களும் பதிவிட்டு இருந்தார் இந்த உதவிகள் சார்பாக மேலான ஆலோசனையும் தந்திருந்தார்
இப்பொழுது உங்களின் மேலான உதவி தேவைபடுகிறது தங்களால் இயன்ற தொகையை இந்த மக்களுக்கு உதவிட கருணையுள்ளத்தோடு தருமாறு மிக்க தயைகூர்ந்து கேட்கிறேன் உங்கள் மனிதநேயத்தை இந்த நேரத்தில் வெளிபடுத்துங்கள் உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தோர் என்பதை மெய்ப்பியுங்கள் மனித தெய்வங்கள்தான் இப்பொழுது அருள் புரியனும் இருகை கூப்பி கேட்டு கொள்கிறேன் உங்களால் முடிந்ததை தாருங்கள்.
அனைத்துலக எம் ஜி ஆர் சங்க பொருளாளர் பாபு அவர்களின் அக்கவுண்ட் நம்பரை இதோடு இணைக்கிறேன் அதில் உங்களால் இயன்றதை சேர்ப்பிக்கவும் அப்படி அனுப்பும் தொகையை இங்கே பதிவிடவும்
K Babu
S B AC No 01111000107625
Madipakkam Branch
H D F C bank
இப்படிக்கு
அனைத்துலக எம் ஜி ஆர் பொதுநல சங்கம்
கலைவேந்தன் எம் ஜி ஆர் அறக்கட்டளை.... Thanks.......
-
#சுந்தர்ராஜன் #அண்ணா #எனது #பெருமை
சுந்தர்ராஜன் அண்ணா!
தூய, நேர்மையான, சுயவிளம்பரப் படுத்திக்கொள்ளாத எம்ஜிஆர் பக்தர்...!
அநேக சினிமா பாடல் வரிகளையும் (முக்கியமாக எம்ஜிஆர் பாடல்கள்) இசையையும் கரைத்துக்குடித்தவர் ராகங்கள் உட்பட...!
பல்கலை விற்பன்னர்...!
வெறும் பதிவுகள் போடாமல் இசைவடிவில் பல வித்தியாசமான, புதுமையான முயற்சிகளைப் புகுத்த மிகவும் மெனக்கெடுபவர்...!
மிகவும் பாராட்டுக்குரிய செயல் இது...! சிலர் அவரைப் பற்றி நக்கலாகவும், கிண்டலாகவும் செய்கிறார்கள்...இது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்...!
ஆனால், அண்ணா அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசமாட்டார்...! அப்பேர்ப்பட்ட பெருந்தன்மை குணமுடையவர்...
நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், இதுபோன்று விமர்சனம் செய்பவர்களால், அவரைப் போல
ஒரு சதவீதம் கூட செய்ய இயலாது என்பது சத்தியமான உண்மை...
அண்ணாவின் இசைஞானத்தைப் பற்றி அவருடன் நெருங்கிப் பழகுபவர்கள் அறிவர், அடியேன் உட்பட...!
இன்னொரு விஷயம், வீட்டில் பொழுதுபோகாமல் சும்மா உட்கார்ந்து கொண்டு டைம்பாஸ் க்காக பாடுபவரல்ல...
அண்ணா அவர்கள் Provident Fund மத்திய அரசுப்பணியில் உயர்அதிகாரியாக பணியாற்றுபவர்... மிகுந்த வேலைப்பளுவிலும், வீட்டிற்குச் சென்று ரெஸ்ட் எடுக்காமல், Gossyps போன்ற அநாவசிய விஷயங்களில் ஈடுபடாமல், புரட்சித்தலைவரின் மேல் தனக்குள்ள அளவில்லா பற்றுதலால், இசையில் பல புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்...!
புரட்சித்தலைவரின் மீதான தனது பக்தியை இதுபோன்ற செயல்கள் மூலம் வெளிப்படுத்தி வரும் அப்பழுக்கில்லாத எம்ஜிஆர் பக்தர்...!
அண்ணாவை கிண்டல் செய்து விமர்சனம் செய்பவர்கள் காலணாவிற்குப் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்பது தான் உண்மை...!
புதுமையான முயற்சிக்குத் தலைவரின் ஆசீர்வாதங்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு...!
வீணர்கள் பற்றிக் கவலைப்படவேண்டாம்...!
எதையும் எதிர்பாராமல் செய்யும்
தங்களின் முயற்சிகளுக்குக் கண்டிப்பாக பலன் உண்டு...!
தங்களின் அற்புதமான ஞானத்திற்கு கட்டாயம் காலம் பதில் சொல்லும்...!
👍👍👍💪💪💪🙏🏻🙏🏻🙏🏻...... Thanks...
-
குலேபகாவலி !
__________________
ஆஸ்கார் எனும் அரைவேக்காடுத்தனத்தை கையாள்பவர் இதை உற்று நோக்குங்கள் .
அடுக்கடுக்கான கேள்விகளில் அறிவுத் திறனை அடக்கி ஆளும் மக்கள் திலகம் .
அவரின் பதில்களால் ராணி அவர்கள் மக்கள் திலகத்தின் திறம்பட பதில்களை படிப்படியாக உள் வாங்கும் பாங்கு அதை கண்களால் நம்மையும் உணரவைக்கும் தன்மை !
இறுதியில் ராணி அவர்கள் மெய்மறந்து மக்கள் திலகத்தை நோக்க நிதானமாக நின்று ராணியை , ராஜபார்வை பார்க்கும் நம் மக்கள் திலகம் .
தலை சிறந்த நடிப்பு என்பது யதார்தத்தின் வெளிப்பாடு இதை லாவகமாக கையாள்வார் மக்கள் திலகம் .
இதை முழவதுமாக உற்றுப் பாருங்கள் .
யதார்த்தத்தின் இலக்கணம் இந்த கேள்வி பதில் காட்சி தான் .
ஹயாத் !
Ahayath A........ Thanks...
-
வாத்தியார் வைத்தியராக வாழ்ந்து புதிய பூமி படைத்த காவியத்தில் இருந்து புகைப்படத்தோடு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியன்று பதிவிட...
உலகளாவிய அளவில் 4'7' ஆராய்ச்சிகள் நடந்து வந்த சூழலில் "இரண்டே இரண்டு" ஆராய்ச்சிகள் மட்டும் அடுத்த நிலை அதாவது இறுதி நிலை ஆராய்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது உலக சுகாதார அமைப்பின் மூலம்...
அதனில் இந்தியாவில் இருந்து இறுதி நிலைக்கு தேர்வாகி உள்ள ஆய்வு
நமது தாய்த் தமிழகத்தில் நமது வாத்தியார் பெயரில் இருக்கும் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு...
#வாத்தியார்_வாழ்கிறார்
#covid_19
#mgr........ Thanks.........
-
டாடா அண்ணன் பரணிதரன் அவர்களுக்கு ஒரேயொரு காவியத்தின் மூலமாக பாடம் எடுத்தாகி விட்டது...
மனைவிக்கு...
குடியிருந்த கோயில்
தர்மம் தலை காக்கும்
தாய் சொல்லை தட்டாதே
திருடாதே
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
எங்க வீட்டுப் பிள்ளை
அடிமைப்பெண்
மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்
ஏ...ஏ... என்னப்பா... இது கேள்வி கேட்ட மனைவி...
இரு இரு இன்னும் இருக்கு...
அதெல்லாம் வேணாம் மேட்டர் புரிஞ்சுது...
என்ன புரிஞ்சுது...
உங்க தலைவர் தான் பெஸ்ட்... போதுமா...
அது......
அப்பறம் என்ன...
நல்ல படம்
நல்ல டைட்டில்
நல்ல க்ளீன் அன்ட் க்ளியர் கான்செப்ட்
அதை அப்படியே சொல்ற டைட்டில் இதுலல்லாம் இல்லையா என்ன...
தெய்வமா நடிச்சதுக்கும்...
மனித தெய்வமா வாழ்ந்து காட்னதுக்கும்...
வித்தியாசம் வேணாம்...
கேள்வி நாமலும் கேப்போம்ல...
ஓகே தானே...
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்..... Thanks...
-
என்ன உறவோ ...
என்ன பிரிவோ...
அட்டகாசமான பாடல்..
நம் புரட்சித் தலைவரை மட்டுமே கவனிக்கிறது என் கண்கள்...?
அவரை மட்டுமே வைத்துத் தான் அவரின் எல்லாப் படங்களும் வெற்றி அடைந்தது..
வசீகரிக்கும் முகம்..புன்னகை.. சுறுசுறுப்பு.. படங்களில் வீரம் .. அன்பு.. காதல்.. பாசம்..கருணை.. நடை..உடை..பாவனை..மனிதநேயம்..
அன்றய ரசிகர்கள்.. அவரின் பண்புகளால் தொண்டர்களானார்கள்.இன்றும் அவரின் பொற்கால ஆட்சியை ... நம் தலைவரை மறக்க இயலாமல் இதயதெய்வமாக நெஞ்சில் சுமக்கும் பக்தர்களானார்கள். நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?
வாழ்க நம் புரட்சித் தலைவரின் புகழ் என்றும்.இனிய அதிகாலை வணக்கம் அன்புள்ளங்களே........... Thanks.........
-
1966 நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்
1969 நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன்
1971 எம்ஜிஆரரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக தொண்டராக மாறினேன்
1972 அதிமுக இயக்கத்தில் இணைந்து பயணித்தேன்
1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை கண்டு வியந்தேன்
1977 நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் கண்ட இமாலய வெற்றி கண்டு மகிழ்ந்தேன்
1977 சட்டசபை தேர்தலில் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினத்தில் நானும் மக்களோடு மக்களாக கலந்து கொண்டேன்
1977- 1987 பத்து ஆண்டுகள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பொற்கால ஆட்சியை கண்டு இன்புற்றேன் .
1972 -2020
48 ஆண்டுகள் தொடர்ந்து எம்ஜிஆருக்கு மட்டும் விசுவாசியாக தொடர்கிறேன் . தொடர்வேன் .
எம்ஜிஆரை மறந்தவர்களை நான் என்றுமே நினைத்து பார்ப்பதில்லை
எம்ஜிஆர் பெயரும் புகழும் எங்களது சொத்து .
எம்ஜிஆர் படங்கள் எங்களுக்கு பாடங்கள் .
எந்த திரையில் பார்த்தாலும் எம்ஜிஆர் மட்டுமே எங்கள் கண்களுக்கு விருந்து
எங்கள் மனத்திரையில் நிரந்தரமானவர் எம்ஜிஆர் ஒருவரே .
மாதா - பிதா பிறகு குருவும் எம்ஜிஆரே ..... தெய்வமும் எம்ஜிஆரே
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் .......... Thanks WA., Friends...
-
#கருணையில்லா #நிதி
தமிழகத்தில் ஒரு குடும்பக்கட்சி விளைவித்த இன்னல்கள் வெகு அதிகம்..... இலட்சாதிபதி, கோடீஸ்வரர் என்ற கணக்கை எல்லாம் தள்ளிவிட்டு, மில்லினியர் பில்லினியர் குடும்பத்தை உருவாக்கி மாபெரும் சாதனையைப் படைத்த கட்சி.....
ஆனால், புரட்சித்தலைவரோ #ஏழைப்பங்காளன் என்ற பெயரோடு, பெரிதாக தனக்கென்று சொத்து சுகம் வைத்துக் கொள்ளாமல், கட்சிக்கும், மக்களுக்கும் பல நன்மைகளைச் செய்துவிட்டுப் போன தெய்வம்...!........ Thanks...
-
[#மக்களுக்கு மக்கள்திலகம் எழுதிய நன்றிக் கடிதம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் துப்பாக்கியால் நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு உயிர் பிழைத்து மருத்தவ சிகிச்சைப் பற்றுக் கொண்டு 100 நாட்கள் ஓய்வில் இருந்தார்.குணமாகி அதன் பின்னர் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.அப்போது பத்திரிகைகள் வாயிலாக எல்லோருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
"பேரன்பு கொண்டோரே!
100 நாட்கள் கழித்து 21-04-1967 வெள்ளிக்கிழமை முதல் சத்யா ஸ்டுடியோவில், அரசக்கட்டளை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்.
நாள்தோறும் 12 மணி நேரத்திற்கு மேல் உழைத்துக் கொண்டிருந்த என்னை கொடுமையின் தாக்குதல் 100 நாட்களாக உழைப்பிடமிருந்து பிரித்து வைத்திருந்தது.
ஜனவரி 12 ம் நாள் அந்தி சாயும் நேரத்திலிருந்து இலட்சோப லட்ச உள்ளங்கள் நான் பிழைப்பேனா மீண்டும் எந்த குறையுமில்லாமல் வெளி வருவேனா? படங்களில் நடிப்பேனா? என்று தங்களுடைய ஏக்கங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தன.எப்படியும் பிழைத்து முன்போல் நான் நலம் பெற்று வரவேண்டும் என்பதற்காக இந்திய துணைக்கண்டத்திலும், கடல் கடந்த நாடுகளில் இருந்தெல்லாம் என்னை வாழ்த்தியும், ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தியும் எனக்கு உயிர்சக்தி அளித்து வந்தார்கள்.
என்னைப் பெற்ற தாய் இப்போது இல்லை-- ஆனால் நாடெங்கும் உள்ள தாய்மார்கள் என்னை தான் பெற்ற பிள்ளையாகக் கருதி என்னுடைய மறுபிழைப்புக்காக தாய்மை உணர்வோடு வேண்டிக் கொண்டார்கள்.
என்னுடைய நலத்துக்காக வேண்டிக்கொண்டிருகும் அன்னையரே, அருமை நண்பர்களே, ஆயிரமாயிரம் சகோதரர்களே உங்கள் நல்வாழ்த்தால் நான் பூரண நலம் பெற்று என் கலைப் பணியைத் துவக்கும்போது தங்களின் பாதங்களில் என் சிரம் தாழ்த்தி நன்றியையும் வணக்கத்தையும் காணிக்கையாக்குகிறேன்.
அன்பன்:
எம்.ஜி.ராமச்சந்திரன்]......... Thanks...