http://i62.tinypic.com/2usy2av.jpg
Printable View
இன்று (31/07/2015) முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i59.tinypic.com/33tkvhs.jpg
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்
http://i61.tinypic.com/9ixsma.jpg
கடந்த வெள்ளி முதல் (07/08/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆரின் "ஆசைமுகம் " தினசரி 3 காட்சிகள் , 4 நாட்களுக்கு மட்டும்
திரையிடப்பட்டது.
தகவல் உதவி : திரு. நசீர் அகமது
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 31/07/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
"உரிமைக்குரல் " தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போட்டு , ஓடி முடிய
ரூ.97,000/ வசூல் குவித்துள்ளது என்று 09/08/2015 அன்று அரங்க மேலாளர் நேரில் தெரிவித்தார்.
மேலாளர் மேலும் தெரிவித்தவை.:
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தால் இன்னும் கூடுதல் வசூல்
ஆகியிருக்கும்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களின் சாதனை விவரங்கள் :
ஒரு லட்சம் மேல் வசூல் செய்த படங்கள் :
கடந்த தீபாவளியில் வெளியான நான் ஆணையிட்டால் -ரூ.1,27,000/-
அடுத்து அடிமைப்பெண் -ரூ.1,10,000/-
நம் நாடு - ரூ.1,04,000/-
அடுத்த மாத வெளியீடு : மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சித்திரம்
"இதயக்கனி ".
பொங்கல், தீபாவளி திருநாட்களில் வெளியாகும் புரட்சி தலைவரின் படங்கள்
மகத்தான வசூல் காண்பதால் ,2015 தீபாவளியிலும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். படம் வெளியாகும் என்று தெரிவித்தார். இந்த செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
முன்னதாக , நானும், நண்பர்கள் திரு. ஹயாத், மற்றும், திரு. நாகராஜன் ஆகியோரோடு புதனன்று (05/08/2015) பகல் காட்சி பார்த்து ரசித்தோம்.
பிரிண்ட் சுமார் ரகம் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் பலர் எங்களை வரவேற்று உபசரித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.
ஆர். லோகநாதன்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i59.tinypic.com/302t1sk.jpg