http://i62.tinypic.com/acafm1.jpg
Printable View
NOW RUNNING SUNLIFE TV PLE. WATCH MY FR.
http://i57.tinypic.com/2zppci1.jpg
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் - முதல் நாள் முதல் காட்சி பார்த்த உங்கள் அனுவம் பற்றிய பதிவு மிகவும்
சுவாரசியமாக இருந்தது .
எனக்கு நன்றாக நினைவு தெரிந்த 1987-1998 காலகட்டங்களில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,உலக நாயகன் கமல்ஹாசன்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முண்ணனி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டால்,
பஞ்சாயத்து தொலைக்காட்சி இருக்கும் ஊர் மடம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.1992 ம் ஆண்டில் கோடை விடுமுறையான மே மாதத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப்பெண்' திரைப்படம் ஒளிபரப்ப இருந்தது.
சரியாக 5 மணிக்கு திரைப்படம் ஒளிபரப்பாகும்.நாங்கள் சிறுவர்கள் விளையாடிவிட்டு படம் பார்ப்பதற்கு மெதுவாக வந்தோம். மடத்தில் வந்து பார்த்தால்,பெண்கள் கூட்டம் அதிகமாகி உட்காருவதற்க்கே இடம் இல்லாமல் போய்விட்டது.நாங்கள் ஓரமாக ஜன்னல் ஓரத்தில் போய் நின்று கொண்டோம்.
அப்போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டியை வெளியே எடுத்து வைப்பதற்கு குறிப்பிட்ட சில பேர் இருப்பார்கள்.அவர்களில் எனது அப்பா,தலைவர்-ராமசாமி நாயக்கர்,ரத்னகுமார்,சோலையப்பன்,வரதராஜ் மாமா,கண்ணன் மாமா போன்றோர்கள்.இவர்கள் படம் போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே கருப்பு,வெள்ளை நிறத்தில் ஓடக்கூடிய தொலைக்காட்சியை வெளியே எடுத்து வைப்பார்கள்.
அடிமைப்பெண் திரைப்படம் ஒளிபரப்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்தே இளைஞர்களின் விசில் சத்தம் காதை பிளக்க ஆரம்பித்துவிட்டது.பக்கத்து
ஊரான ஸ்ரீரெங்கராஜபுரத்திலிருந்து வாலிப இளைஞர்கள் ஓடோடி வந்தார்கள்.அவர்கள் வந்தால் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரமாக நின்றோ,அமர்ந்து கொள்வார்கள்.
அடிமைப்பெண் திரைப்படம் ஒளிபரப்ப ஆரம்பமாகி,படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களெல்லாம் போட்டு முடித்து படம் ஓடத் தொடங்கியது.படத்தின் ஆரம்பக் காட்சிகளே பிரமிப்பை ஏற்படுத்தியது.நடிகர் எம்.ஜி.ஆரு-க்கும்,அசோகனுக்கும் இடையே நடக்கும் வாள் சண்டை உணர்ச்சி பிழம்பாக இருக்கும். சண்டைக்காட்சிகள் முடிந்த பிறகு தந்தை எம்.ஜி.ஆர். வஞ்சமாக கொல்லப்பட்டு,அவருடைய மனைவி கைது செய்யப்பட்டு,மலை நாட்டு இனமக்கள் அனைவருக்கும் அடிமை விலங்கு போடப்பட்டு சிறைக் கைதிகளாக்கப்படுவார்கள்.மகன் எம்.ஜி.ஆர்.வெளி உலகமே தெரியாமல் கைது செய்யப்பட்டு ஒரு குகையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார்.ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வரும்.அடிமை விலங்குகளை உடைத்தெறி
வதற்காக எம்.ஜி.ஆர்.அவருடைய தாயிடம் சபதம் செய்வது,"தாயில்லாமல் நானில்லை" என்ற உணர்ச்சிகரமான பாடல் காட்சி,படத்தின் இறுதியில் சிங்கத்துடன் சண்டை போடும் ஆக்ரோசமான காட்சிகளெல்லாம் என்னை அப்படியே அன்றைய தினம் திக்பிரமை பிடிக்க செய்தது.இருபத்தைந்து தடவைகளுக்கு மேல் இந்த திரைப்படத்தை பார்த்திருப்பேன்."தாயில்லாமல் நானில்லை" என்ற காலத்தால் அழியாத பாடலை கேட்கும்போது கண்ணீர்த் துளிகள் நெஞ்சை நனைக்கும்.
இந்த திரைப்படம் திரைக்கு வெளிவந்தது 1969 ம் வருடம்.
ஜெயலலிதா அவர்கள் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.அன்றைய தினம் தொலைக்காட்சியில் திரைப்படம் ஒளிபரப்பு ஆகியபோது 1992 ம் வருடத்தில் தமிழக முதல்வராக செல்வி.ஜெயலலிதா அவர்கள் இருந்தார்கள்.நமது கிராமத்து தாய்மார்கள் பேசிக்கொண்டார்கள்-முன்னாள் தமிழக முதல்வரும்,இந்நாள் தமிழக முதல்வரும்
நடிக்கிறாங்களே படம் என்னாம்மா இருக்கும் தெரியுமா.எம்.ஜி.ஆர்.போடுற வாள்சண்டை,கத்திச் சண்டை,விதவிதமான அலங்கார ஆடைகள்ல ஜெயலலிதா அம்மா பாட்டு சீனுக்கு ஆடுறதுன்னு பாக்கறதுக்கு மனசுக்கு எவ்வளவு ரம்மியமா இருக்கும் என்று அவர்கள் பேசியது இன்றுவரைக்கும் என் இதயத்தில் பசுமையாக உள்ளது.அன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியாகி 23 வருடங்கள் கழித்தும் மக்களின் மனதில் உணர்ச்சி பிழம்புகளை உருவாக்கியதை என் சிறுவயதில் கண்டேன்.இது போன்று எண்ணற்ற திரைப்படங்களை நமது கிராமத்து மக்களுடன் பஞ்சாயத்து தொலைக்காட்சியில் பார்க்கும்போது,கிராமத்து மக்களுடன் ஏற்பட்ட பசுமையான நினைவுகளை அடுத்தடுத்த தொடர்களில் பதிவு செய்வேன்.
கபில்தேவ் -1983
1983 ம் ஆண்டில் நமது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில்தேவ் தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில்
சாம்பியன் பட்டம் வென்றது.நான் பிறந்த 1982 ம் வருடத்தில்தான்,அப்போதைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களால்
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. கிராமத்து தொலைக்காட்சிகளில் சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்ப தொடங்கிய பிறகுதான், நமது கிராமத்து இளைஞர்களிடம் கிரிக்கெட் விளையாட்டு ஒரு வசீகரத்தையே உண்டு பண்ணியது.
courtesy-senthilkumar -net
1980 பாராளுமன்ற தேர்தலையடுத்து நமது புரட்சித்தலைவரின் புனித ஆட்சி, காரணமின்றி கலைக்கப்பட்டது. அப்போது, திருவொற்றியூரில் இயங்கி வந்த எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர் குழுவினை சார்ந்த நானும், இதர உறுப்பினர்களும், மக்கள் திலகத்தை தலைமை கழகத்தில் நேரில் சந்தித்து, துரோகிகள் பலர் இயக்கத்தை விட்டு வெளியேறிய நிலையில், இதய தெய்வம் தலைமையில் நம்பிக்கை வைத்து, தியாகராயர் கல்லூரி மாணவர்கள் பலரை கழகத்தில் இணைத்து, அவரின் தலைமயில் நம்பிக்கை வைத்து எங்கள் முழுமையான ஆதரவினை தெரிவித்தோம். அந்த சமயத்தில், அவரிடம், என்னுடைய நோட்டு புத்தகத்தில் வாங்கப்பட்ட கையெழுத்து :
http://i59.tinypic.com/2lwm79y.jpg
"உழைப்பவரே உயர்ந்தவர்" என்ற உயரிய தத்துவத்தையும், தான் வணங்கும் தெய்வமாம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நாமம் வாழ்க என்றும் தனது கைப்பட எழதி எனக்கு வழங்கியதை போற்றி பொக்கிஷமாக பாதுகாத்து வரும் இந்த வேளையில், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதமான நாளில், தொழிலாள தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து அதனை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
http://i62.tinypic.com/2vxk2vc.jpg
சென்னை சரவணாவில் தொடர்ந்து 4 வது வாரமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "தாய் சொல்லைத் தட்டாதே " இன்று முதல் (01/05/2015) உழைப்பாளர்
தினத்தை முன்னிட்டு தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
அதன் சுவரொட்டியை காண்க.
குறைந்த இடைவெளியில் சரவணாவில் 2 வது முறையும், கடந்த ஆண்டில் மகாலட்சுமியில் ஒரு முறையும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள்
------------------------------------
http://i62.tinypic.com/2gv2bdj.jpg
http://i57.tinypic.com/eqb3i1.jpg
http://i59.tinypic.com/2njznm0.jpg
http://i60.tinypic.com/2w3713k.jpg
http://i62.tinypic.com/w9z060.jpg