ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்!
Printable View
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்!
ஒரு நடிகரின் திரை உலக வெற்றிக்கு பல் வேறு அம்சங்கள் இருந்தாலும் ''ரசிகன்'' என்ற மாபெரும் தனி நபரின் ரசிப்பு தன்மை ஒரு ஆவலாக , பிரமிப்பாக மாறும் போது ,பல ரசிகர்கள் உருவாகிறார்கள் .அந்த ரசிகர்களின் ஆதரவுதான் ஒரு நடிகரை மாபெரும் நடிகராக உருவாக்குகிறது .
ரசிகனின் ஆவலை பூர்த்தி செய்து படத்திற்கு படம் பல வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து எல்லோரின் ஆதரவிற்கு தன்னை முன்னிலை படுத்தி வெற்றி மேல் வெற்றி காணும் ஒரு நடிகரின் சரித்திர சான்றை கூற வேண்டுமானால் அது திரு எம்ஜிஆர் என்ற ஒரு நடிகருக்கு மாத்திரம் கிடைத்த வெற்றி .
திரு எம்ஜிஆர் 30 ஆண்டு காலம் திரை உலகை தன வசம் வைத்து முடி சூடா மன்னனாக வலம் வந்தார் . அவர் நடித்தது 134 படங்களே . அதிலும் கதாநாயகனாக 115 படங்கள் மட்டுமே .''ராஜகுமாரி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் '' வரை ஒவ்வொரு ஆண்டிலும் [1947-1977] வந்த இவர் படங்கள் அடைந்த வெற்றிகள் வரலாறு பேசும் .சில படங்கள் வர்த்தக ரீதியாக தோல்வியாக இருந்தாலும் மறு வெளியீடுகளில் லாபத்தை தந்துவிடும் அளவிற்கு அவருடைய படங்கள் தொடர்ந்து ஓடிகொண்டே இருக்கும் என்பது உண்மை .
தமிழ் முன்னணி தயாரிப்பளர்கள் - இயக்குனர்கள் எம்ஜிஆரை வைத்து படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றிகள் கண்டார்கள் . எம்ஜிஆரின் வெற்றிக்கு முழு காரணம் அவருடைய படங்களின் ''தலைப்புகள் ''- அருமையான நடிப்பு - புதுமையான சண்டை காட்சிகள் - இனிமையான பாடல்கள் - சமூக சிந்தனை கொண்ட சீர் திருத்த காட்சிகள் கொண்ட இவரின் படங்கள் ரசிகர்களுக்கும் , திரைப்பட உலகிற்கும் , மக்களுக்கும் மன மகிழ்வை தந்து அவர் மீது தனிப்பட்ட அன்பை பொழியும் அளவிற்கு உருவெடுத்தார் எம்ஜிஆர் .
எம்ஜிஆரின் திரை உலக வெற்றிகளை தொடர்ந்து அரசியலிலும் வெற்றி கொடி ஈட்டினார் .30 ஆண்டுகள் திரை உலக பயணத்தை முடித்து 1977-1987 வரை தமிழக நிரந்தர் முதல்வராக மக்கள் முதல்வராக வாழ்ந்து ,இன்னும்
மக்கள் முதல்வராக மக்கள் மனதிலும் , ஊடகங்களிலும் எம்ஜிஆர் தினமும் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
உலகில் எந்த ஒரு நாட்டிலும் , எந்த ஒரு மொழியிலும் ஒரு நடிகருக்கு கிடைக்காத மக்கள் செல்வாக்கு எம்ஜிஆர்
என்ற ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை ஒவ்வொரு எம்ஜிஆர் ரசிகருக்கும் கிடைத்த பெருமை .கோடிக்கணக்கான ரசிகர்களுடன் எம்ஜிஆர் இன்றும் வாழ்ந்து வருகிறார் .- இது தமிழன்னை செய்த பாக்கியம் .
நன்றி திரு -ஸ்டீபன் - முக நூல் .
கால் முறிந்த போதும் -1959
குரல் இழந்த போதும் - 1967
தலைமை தூக்கியபோதும் -1972
துரோகம் நடந்த போதும் -1979
தேர்தலை சந்தித்த போதும் -1980
உடன் இருந்தோரின் துரோகங்கள் நினைத்த போதும் -1984
கால தேவன் அழைத்த போதும் -1984
மன்னாதி மன்னனே ..நீ கலங்கவில்லை .
ரசிகர்கள் - மக்கள் உன்னை அரவணைத்தார்கள் .
மீண்டு வந்தாய் .. 1985
வரலாறாய் வாழ்ந்து - விண்ணுலகம் சென்றாலும்
இந்த மண்ணுலகம் உன்னை மறக்க வில்லை .
உன்னால் உயர்ந்தோர் ...உன்னை மறைத்து ....மறைக்க பார்த்தார்கள்
உங்கள் அருள் பார்வையால் அவர்கள் இன்று ''கூண்டுக்கிளி '' யானார்கள் .
http://i63.tinypic.com/w8uwpk.jpg
உடல் நிலை சரியில்லாத சமயத்திலும் ஸ்டைலாக புரட்சித் தலைவர் உட்கார்ந்திருக்கும் அழகைப் பாருங்கள். தமிழகத்தின் முதல்வர் ஒரு பொது நிகழ்ச்சியில் திண்டு மெத்தைகள், குஷன் சோபாக்கள், ஆடம்பர நாற்காலி இல்லாமல் சாதாரண பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்த எளிமை இனிமேல் எந்த முதல்வருக்கும் வருமா? புரட்சித் தலைவருக்கு அடுத்து உள்ள நாற்காலியும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருப்பவர்களின் நாற்காலிகளும் அதே மாதிரிதான் உள்ளன. எல்லாருக்கும் உள்ளதே தனக்கும் என்ற கொள்கைப்படி வாழ்ந்த சமத்துவ தலைவர் புரட்சித் தலைவர்.
தமிழ் இந்து -17/02/2017
http://i64.tinypic.com/5ebkv8.jpg
தினகரன் -18/02/2017
http://i64.tinypic.com/rcsyvr.jpg
தின இதழ் -18/02/2017
http://i64.tinypic.com/if0m0x.jpg
தினத்தந்தி -18/02/2017
http://i63.tinypic.com/2ibdvg7.jpg
http://i67.tinypic.com/29w8lg5.jpg
தினச்செய்தி -16/02/2017
http://i67.tinypic.com/15fp4rt.jpg