எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச் சொல்லி ,நல்லோர்கள் வாழ்வை எண்ணி 8-)Quote:
Originally Posted by saradhaa_sn
Printable View
எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச் சொல்லி ,நல்லோர்கள் வாழ்வை எண்ணி 8-)Quote:
Originally Posted by saradhaa_sn
அனைவருக்கும் எமது இதயபூர்வமான ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் !!!
அன்புடன்,
பம்மலார்.
நெற்றிக்கண் பற்றிக் கூறிய சகோதரி சாரதா அவர்களின் கவனத்திற்கு,
திருவிளையாடல் திரைக்காவியத்தில் , தொடக்கத்தில் வரும் ஞானப்பழப் படலத்தில், சிவாஜி பெருமான் (சிவ பெருமான்) இரு கண்களையும் இமைப்பதாகவே காட்டியிருப்பார்கள்.
ஆனால், கடவுளர்கள் கண்களை இமைப்பதில்லை என்பது உண்மை.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது முதுமொழி.
அருட்செல்வரின் இந்தத் தவறை பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது.
அன்புடன்,
பம்ம்லார்.
நவராத்திரி நியூஸ் :
1995-ல் குமுதம் வார இதழில் "அரசு பதில்கள்" பகுதியில் வந்த ஒரு கேள்வி-பதில் :
வில்லாதி வில்லன் மூன்று சத்யராஜ், அபூர்வ சகோதரர்கள் கமல், மூன்று முகம் ரஜினி பற்றி..? (டி.ஆர். பாலசந்தர், திருநெல்வேலி டவுன்)
மூவரின் இந்த மூன்றும் ஒரு நவராத்திரிக்கு ஈடாகுமா ...!
இந்த ஒரு பதிலுக்காகவே குமுதம் இதழுக்கு ஆயுள் சந்தா செலுத்தலாம்.
அன்புடன்,
பம்மலார்.
EID - Mubarak to all Islamic Brethern.
Regards
1940-களிலும், 50- களிலும்,60- களிலும் நடிகர் திலகத்தின் நாடக வாழ்க்கையிலும், திரையுலக பயணத்திலும் பொது வாழ்க்கையிலும் நடைபெற்ற நிகழ்வுகளை தேதி வாரியாக இங்கே அலசும் பம்மல் சுவாமிநாதன் எழுபதுகளில் பிறந்தவர் என்றால் இங்கே பல பேருக்கு நம்புவதற்கே கடினமாக இருக்கும். நடிகர் திலகத்தை தமிழ்த் திரையுலகம் ஹீரோ என்று கொண்டாடிய வருடத்தில் பிறந்தவர் [அவர் நடித்துக் கொண்டிருந்த எல்லா வருடங்களிலும் அவர்தான் ஹீரோ என்பது வேறு விஷயம்].காவியமான வசந்த மாளிகை வெளியான இதே செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர். நடிகர் திலகத்தின் சீனியர் ரசிகர்களுக்கே தெரியாத பல விஷயங்களை உள்ளடக்கியவர். அவரின் தொண்டு பல் சிறப்பு பெற்று விளங்க மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
DEAR MURALI SIR,
I was very eagerly expecting you to come with the theatre happenings of VM from sathyam complex.
one more amazing news is that of mr.swaminathan's age.
சத்தியமாக சொல்கிறேன்,அவருடைய வசந்த மாளிகை இதழை படித்தபோதும் சரி,இப்போது அவரது போஸ்டிங்சை படிக்கும் போதும் சரி,அவருக்கு சுமார் 60-65 வயதிருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன்.
இந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடும் அவரை பல்லான்டு காலம் வாழ்ந்து நமது நடிகர்திலகத்தின் புகழை பரப்ப வேன்டும் என்று வாழ்த்துகிறேன்.
சாமிநாதன் அண்ணா,இந்த இளைய சகோதரனின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளவும்
Dear Mr.Pammalar Swaminathan,
Mr.Murali have not mentioned your date of birth. Anyway, accept my best wishes . I take this opportunity on behalf of other NT fans and wish you and pray god and NT (who is in Heaven and our hearts) to give you long peaceful, happy and prosperous life - not only in your personal life but also to spread NT name and fame to the world.
Senthil,
VM was screened as a 8.30 am show in the morning of 19th and so I couldn't make it. Heard that between 250 to 300 people turned up for that show, which was great considering the odd timing.
Bala,
I may not have mentioned the exact date but the year & month are very much clear.
Regards
திரு. முரளி சார் அவர்களுக்கும், திரு. செந்தில் சார் அவர்களுக்கும், திரு. பாலா சார் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எமது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றி ! தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையெல்லாம் பெற்றது என் பாக்கியம் !! நமது இதயதெய்வமாம் நடிகர் திலகமே வாழ்த்தி ஆசி வழங்கினாற் போன்று இருக்கிறது !!!
அன்புடன் கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
என்றென்றும் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.