-
Looks like TTLS is finally dusted for release. Don't know in which language though.
http://entertainment.oneindia.in/mal...lm-020210.html
thanks,
Krishnan
-
"Chinna Polike" from Om Shanti.... everytime i listen to it, i just wonder why was it not by SPB. I'm sure it would have given so much nativity if it were SPB and the song would have reached more audience. Forget audience, it would have commanded my complete attention atleast. Pch.. Why Kunal Gunjawala, of all!!!!!!!
-
Vikatan Interview.......
'இளைஞர்களை இசை மூலமாகச் சந்திப்பேன்!''
இளையராஜாவின் புதிய திட்டம்
.
எப்போதும் கலகலக்கும் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி வளாகம், அன்று பவ்யமும் திவ்யமுமாக நிறைந் திருந்தது. காரணம், ராஜா!
கல்லூரி விழாவுக்கு வந்திருந்தவரிடம், ''பத்மபூஷ ணுக்கு வாழ்த்துக்கள்!' என்றேன். சின்னப் புன்னகை யுடன் ''காரில் ஏறுங்க'' என்றார். கோடம்பாக்கமே தவம் இருக்க, அபூர்வமாக புன்னகைத்துக் கடக்கிற அதே ராஜா, பழைய ஞாபகங்களில் தொடங்கி இந்த நொடி வரை ஒரு நதியாக வளைந்து நெளிந்து பெருகும் மெட் டைப் போலவே அரிதான உரையாடலில் தொடங்கினார்.
''பத்மபூஷண் விருது உங்களுக்குக் கிடைத்திருப்பதில் ரொம்ப சந்தோஷம். ஆனாலும், 20 வருடங்களுக்கு முன்னாடியே கிடைச்சிருக்கணும்னு பேசிக்கிறாங்க. எப்படி உணர்றீங்க?''
''விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. மிகுந்த மரியாதையுடன் அதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டுக்கும், தமிழ் இசைக்கும், தமிழ் இசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த உயரிய கௌரவமாகக் கருதுகிறேன்!''
''இத்தனை வருடங்களாக நாங்க இளையராஜாவைப் பார்த்த பிரமிப்பும், கொடுத்த மரியாதையும், இந்தத் தலைமுறை மாணவிகளிடமும் இருக்கு. திரையிசையில் மாபெரும் வெற்றி பெற்ற உங்களின் அடுத்த திட்டம் என்ன?''
''திட்டமிட்டு எதையும் நான் செய்யறது இல்லை. திட்டம் போட்டு நடக்கணுங்கிறது நம்ம கையிலா இருக்கு? நமக்கு விதிச்சது இல்லாமல் எதுவும் நடக்காது. 'அன்னக்கிளி' ஆரம்பிச்சு 25 படம் வரைக்கும் பிளான் பண்ணி மியூஸிக் போட்டிருக்கலாம். அப்புறம் ஆன்மிகம், தெய்வ நம்பிக்கைன்னு வந்த பின்னாடி, எல்லாமே அன்னன்னிக்கு வந்த விஷயம்தான். How to name it, Nothing but wind, திருவாசகம் எல்லாமே தானாக நிகழ்ந்ததுதான். காற்றுபோல, ஒளிபோல இசையும் பரவி யாரையாவது, எங்கேயாவது போய் அடைஞ்சுக்கிட்டே இருக்கணும். கொட்டுகிற இசை மழை யில் எங்கேயாவது, யாராவது துளிர்க்கணும்... பூக்கணும். அடையாளம் தெரியாத இந்தப் பயணத்தை இசை செய்துக்கிட்டே இருக்கணும். நொடிக்கு நொடி என்னைப் புதுப்பிச்சுக்கிட்டு இத்தனை வருஷமா இயங்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட நல்ல சூழலில் என்னை இறைவன் வைத்திருக்கும்போது, நான் நிறைவாக உணர்வது தானே நியாயம்?
நமக்குத் தெரிஞ்ச இசையை இளைஞர்களுக்குக் கொடுத்துட்டுப் போகணும்னு மட்டும் தோணுது. அதற்குச் சூழல் அமையணும். நான் எடுத்துட்டுப் போக ஒண்ணுமே இல்லை. கொடுத்துட்டுப் போகத்தான் இருக்கு. எனது அனுபவத்தைப் பகிரவும் இளைய தலைமுறைக்கு விட்டுட்டுப் போகவும் தயாரா இருக்கேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து இளைஞர்களை இசை மூலமா ஒன்றிணைக்கணும். பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!''
''கொடுத்துட்டுப் போவதாக இருந்தால், அதை எந்த மாதிரி செய்யலாம்னு, அதற்கான செயல்திட்டம் என்ன?''
''உலகத்தோட ஒரு பக்கத்துல பீத்தோவன், மொஸார்ட்னு இருந்திருக்காங்க. நம்ம பக்கம் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர்னு இருந்தாங்க. எல்லாமே 18-ம் நூற்றாண்டோடு முடிஞ்சுபோச்சு. அதற்குப் பிறகு இன்னொரு மொஸார்ட் வரவே இல்லை. உலகம் தோற்றுவிக்கலைன்னு அர்த்தம் கிடையாது. அந்த நிகழ்வு நடை பெறலை. புரந்தரதாசர் வரைக்கும் அவங்க பங்குக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டுப் போயாச்சு.
எனக்கு என்ன தோணுதுன்னா, இப்ப இருக்கிற கர்னாடக, இந்துஸ்தான், வெஸ்டர்ன் மியூஸிக்கோடு அதன் எல்லைகள் முடிஞ்சு போச்சா? இல்லைதானே! உண்மையான... இன்னும் உன்னதமான இசை எங்கேயோ இருக்கு. அந்த இசைதான் என் தேடுதலா இருக்கு. இதற்கு நான் பதில் அறியாமலும் போகலாம். ஆனா, என்னிக்காவது ஒரு நாள் இதுக்குப் பதில் கிடைக்காமல் போகாது. போய் ஊடுருவிப் பார்க்கிறவங்க கண்டுபிடிப்பாங்க. என் கையில் விதை இருக்கு. விதைக்காமல் போனால் வித்துக்கும் நஷ்டம்... உயிருக்கும் நஷ்டம். இந்த ஊரில் இருந்தே 200 பீத்தோவன், 200 தியாகராஜ சுவாமிகள் வரட்டுமே. வறுமையில் வாழ்ந்துட்டு இசை படைத்தவர் தியாகராஜ சுவாமிகள். இத்தனை தியாகராஜ சுவாமிகள் வரணும்னு சொன்னது திறமையைவெச்சுச் சொல்லலை. திறமைங்கிறது வித்வத்வம், பண்டித்துவம், அது கர்வத்தை மட்டுமே வளர்க்கும்.
என் அனுபவத்திலே நிறைய இருக்குன்னு சொல்லும்போது இதைத் தெரிஞ்சுக்க ஓர் அமைப்பு இல்லைங்கிறது என்னுடைய துரதிருஷ்டமா, நாட்டின் துரதிருஷ்டமா?''
''கலைஞனுக்குச் சமூகத்தின் மேல் அக்கறை இருக்கணும் என்கிறது ஒரு தரப்பு. அப்படி எல்லாம் இல்லை. கலைஞன் வேறு மாதிரி, அவன் தனிமையானவன்கிறது வேற தரப்பு. இரண்டில் எது சரி?''
''இரண்டு பக்கத்துக்குமே எது சரின்னு சொல்ற உரிமை கிடையாது. யாருக்கு எப்படி இஷ்டமோ அப்படி இருந்துட்டுப் போகட்டும். நான் சொல்றதையே என் உடம்பு கேட்க மாட்டேங்கிறது. அடுத்தவங்க கேட்கணும்னு நான் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கு?''
''பீத்தோவன், மொஸார்ட், பாக்னு எப்பவும் பெருமிதமா... உயர்வா பேசுவீங்க. நம்ம ஊர் இசையமைப்பாளர்களைப்பற்றி ஒண்ணும் சொன்னதே கிடையாதே?''
''இசை என்பது உன்னதமான கலை வடிவம். பீத்தோவன், பாக் போன்றவர்கள் நாம் பின்பற்ற வேண்டிய மேதைகள். நான் எனக்கு முன்னாடி ரோடு போட்டவர்களைப்பற்றித்தான் பேச முடியும். நான் ரோடு போட்டேன்னா, எனக்குப் பின்னாடி வர்றவங்க அதைப்பத்திப் பேசணும். யார் யாரு நான் போற பாதையெல்லாம் மரம் நட்டுட்டுப் போனாங்களோ, புத்தகம் வெச்சுட்டுப் போனாங்களோ, குடிக்கத் தண்ணீர் வெச்சுட்டுப் போனாங்களோ அவங்களை நான் போற்ற முடியும், வணங்க முடியும், தொட்டுக் கும்பிடவும் முடியும்.
ஆனா, எனக்குப் பின்னாடி வர்றவங்களை நான் ஃபாலோ பண்ண முடியாது, இல்லையா? எனக்குப் பின்னாடி வர்றவங்களை எனக்குத் தெரியவே இல்லை. எனக்கு முன்னாடி போனவங்களைப் பார்த்து, 'ஐயோ! இப்படியெல்லாம் பண்ணிட்டாங்களே, இப்படியெல்லாம் பண்ணிட்டாங்களே'ன்னு வியந்துகிட்டே இருக்கேன். இன்னும் அவங்க பக்கத்தில் என்னால் நெருங்க முடியலை. ஒரு சி.ஆர்.சுப்பராமன் பண்ணின 'சின்னஞ்சிறு கிளியே' போல இன்னும் யாராலும் ட்யூன் பண்ண முடியலை. அந்தப் பாட்டு ட்யூன் பண்ணி 60 வருஷம் ஆச்சு. எல்லா கர்னாடகக் கச்சேரிகளிலும் 'சின்னஞ்சிறு கிளியே' பாடறாங்க. சினிமாவில் இருந்து கர்னாடக கச்சேரிக்குப் போகிற அளவுக்கு அந்த ஆளு ட்யூன் பண்ணிட்டு 32 வயசுலயே போயிட்டார். அவரைப் போற்றாமல் வேறு யாரைப் போற்ற?
எனக்கு எஸ்.வி.வெங்கட்ராம னைத் தெரியும். பார்த்திருக்கேன். அவர் என்னைப் பாராட்டினார். நான் அவர் காலைத்தொட்டு வணங்கினேன். இந்தத் தலை முறையில் யாரைப் பாராட்ட லாம்னு நீங்களே சொல்லுங்க?''
''ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிட்டார். அவர் மியூஸிக்பற்றி உங்க கருத்து என்ன?''
''அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் என் பேச்சைக் கேட்கலையா? அப்புறம் ஏன் இந்தக் கேள்வி? உலகம் அங்கீகரிச்ச பிறகு நான் யாரு? உலகத்தில் ஒருத்தன்தானே நான்! உலகத்தைவிட்டுத் தனியாவா நான் இருக்கேன்?''
'' 'அழகர்மலை' படத்தில் 'இந்த அன்னை பூமி போதும்' பாட்டு. எப்பவும் மண் சார்ந்த பிரியம்...''
''என்னங்க, கங்கையில் குளிச்சிட்டு வந்தாலும் ஏன்னு கேட்பீங்க போலிருக்கே? என் மண்ணை நான் பாடாமல் யார் பாடுவாங்க? என்னங்க இது... (சிரிப்பு...)''
''ஜெயகாந்தன் பிரவாகமா ஆரம்பிச்சு, ஒரு கட்டத்தில் எழுதினது போதும்னு நிறுத்திட்டார். அது மாதிரி எப்பவாவது இந்த மியூஸிக்கை நிறுத்திடணும்னு தோணியிருக்கா?''
''இப்பவும் ஒரு பாட்டு முடிஞ்சதும் மியூஸிக்கை நிறுத்திடுவேனே. (சிரிப்பு) அது ஜெயகாந்தனோட முடிவு. அவர் அவர்தான். நான் நான்தான். அவர் முடிவு பண்ணி அவர் சொன்னாரு. அதே முடிவை நான் சொல்லணும்னு நீங்க எதிர்பார்த்தா எப்படி?''
''இறைவனிடம் சரண் அடைய எப்பவும் விருப்பப்படுகிறவர் நீங்கள். ஆனாலும், நீங்கள் ஈகோ உடையவர், அதிக இறுக்க மானவர்னு உங்களைப்பற்றிப் பேச்சிருக்கு. இந்த இரண்டு அம்சங்களுக்கும் முரண்பாடு காணப்படவில்லையா?''
''உங்களுக்கு இருக்கிற ஈகோவால்தானே இந்தக் கேள்வியையே கேட்க முடியுது. இந்தக் கேள்வியே உங்களுக்கு இருக்கிற ஈகோவைக் காட்டுதே தவிர, பண்பைக் காட்டலை. இருக்கட்டும். ஈகோ இல்லா மல் நான் எப்படி வேலை செய்ய? உங்களுக்கு ஏன் ஈகோ இருக்குன்னு ஈகோ இல்லாத ஆளுதானே கேட்கணும்? அப்படிக் கேட்டால், 'உங்களை மாதிரி ஆக முடியலை சாமி!'ன்னு சொல்வேன். சரியாகச் சொன்னால், 'உன்னை முதல்ல பார்த்துட்டு வாய்யா... போய்யா!'ன்னு சொல்லணும்... சொல்லவா!'' (மீண்டும் சிரிப்பு)
''' 'பா' ஹிந்திப் படத்தில் உங்க மியூஸிக்பற்றி அமிதாப் அவரோட ப்ளாக்கில் உருகி எழுதியிருந்தாரே..?''
'' 'பா' படத்துக்காகப் பாடும்போது அவரை அதே மேக்-அப்போடு பாடவெச்சேன். இது அமிதாப் பாடுகிற பாட்டு இல்லை. அந்தக் குறையுடைய கேரக்டர் பாடுகிற பாட்டு என்பதால் அப்படிச் செய்தேன். அதை அமிதாப் ரொம்பவும் ரசித்தார். என் வீட்டைப் பார்த்துவிட்டு 'ஏதோ புனித யாத்திரைக்கு வந்த மாதிரி இருக்கு'ன்னு சொன்னார். ஏதோ ஒண்ணு அவரை அப்படிப் பார்க்கவெச்சிருக்கு. கார்த்திக் ராஜா, அமிதாப்புக்கு ரொம்ப ஃப்ரெண்ட். எப்ப வந்தாலும் அவனுக்கு போன் செய்துவிட்டு வருவார். அமிதாப் தன்னு டைய அப்பாவின் கவிதைகளுக்கு கார்த்திக்கை ட்யூன் போடச் சொல்லிக் கொண்டுபோயிருக்கார். நானும் அந்த 'ப்ளாக்' படிச்சேன். பக்குவப்பட்ட மனசு. சொல்ல நினைச்சுச் சொல்லியிருக்கார்.''
''உங்க குடும்பத்திலேயே கார்த்திக், யுவன், பவதாரிணின்னு மூணு பேர். அவங்க இசைத் திறமைபற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?''
''நான் அதைப்பத்தி கருத்துச் சொல்றது சரியாக இருக்காது. உலகம் பார்த்திருக்கு. உலகமே முடிவு பண்ணட்டும். என்னுடைய சர்ட்டிஃபிகேட் எதுக்கு? நான் அவங்களோட தகப்பன். அவங்க வளர்ச்சியைப் பார்த்துச் சந்தோஷப்படலாம். அவங்க இசை, பாட்டுபற்றி அபிப்ராயம் கேட்டப்ப, அவங்ககிட்டே அதைப்பற்றிச் சொல்லியிருக்கேன். அவங்க குழந்தையா இருந்தபோது அவங்களுக்காக நேரம்கூட ஒதுக்கியதில்லை. இந்த அளவுக்கு அவங்க வளர்ந்ததுக்கு அவங்களேதான் காரணம்!''
-
"உலகம் அங்கீகரிச்ச பிறகு நான் யாரு? உலகத்தில் ஒருத்தன்தானே நான்! உலகத்தைவிட்டுத் தனியாவா நான் இருக்கேன்?''
appadi pOdunga!
-
உண்மையை சொல்லனும்னா நான் ராஜாகிட்ட இருக்குற அந்த ஈகோவை ரசிச்சுக்கிட்டு தான் இருக்குறேன். என்ன ஒரு ஈகோ!
அது அவர் கிட்ட இருக்குற அசைக்க முடியாத தன்னம்பிக்கையுனால வந்ததா இருக்கலாம், இல்ல இந்த உலகம் என்னடா நான் போடுறதுதாண்டா மியுசிக்கு அப்படின்னு, இல்ல இந்த உலகம் இன்னும் என் மியுசிக்க சரியாய்அங்கீகரிக்குற அளவுக்கு வளரலை அப்படின்னா கூட இருக்கலாம்
-
sanjeevi - this 'ego' thingy is what drives everything, from society to industry - if you dont have it, then you become redundant - the problem i see is ppl focussing on this aspect of IR, but then it is IR himself with his 'spiritual' talks drew ppl's attention to that kind of talk! so he himself has to blame for part of it -adhu oru pakkam
OTOH, 'naan romba panivaa nadakka try panraen' - appadeennu sonnaa oduney, 'aahaa andha pulla evvalavu adakkam' appdeennu paaraattuvaanga
IR did not have time for anything other than music - so dedicated was he to his passion/love for his profession/ chosen path - that being the case, andha eedupaatai paarthu inspire aagaamal, motta mandaikkum muzhangaalukkum mudichhu podum aasaamigal niraiyaa per
to date, i have not come across a single journalist/ magazine that explores in-depth his musical output and instead focus on idiotic side-issues - avar kettaarey oru kelvi "if i bathe in ganges, you wud ask me why i did so ?" - ROTFL!!
as i said in another thread on Kamal, 99% of journalists in India are unadulterated, malicious morons with no idea/clue of what to write and what not to! almost all of them come from a heritage whose cultural attributes included sitting around in front of a home/house (veettu thinnai) playing cards and gossipping abt the chinna veedu of a local pannaiyaar/periya manushar than doing anything useful in life - such an attitude is wired in their genes, you cant change them - they simply dont know the difference between 'kalai' and 'kuckoos'
-
irir123,
well said...
Oruvarai interview seivadhu endral,
Avarudiaya vetrigal. experiences , kadandhu vandha paadhai
ipadi ellam theirndhu kondu kelvi kaetka vendum.
Enaku theirndhu - Abroad il , idhai sariyaga seivadhu pola thonugiradhu..
Ingae, either in TV or magazine,
yar endrae theiryadhu....
Music director - idhu matum therigiradhu.
hahhahahaha.. IlaiyaRaja - idhu romba nalla theriyudhu.......
TV show ilum, old people - endha thuraiyaga irundhalum,
interview seiyum , indha kalathu youngsters.....
romba easya, poi, poi ya oru expressions....
kelvi...
kodumai...
Interview seiya pattavarin - Achievements , adhai avar
epadi seidhar... enna feel panrar
ipadi kelvi kaeka vendiyadhu dhanae.....
Arivu illamal kelvi....
idhil IR mel complaint......... kodumai......
-
"Enaku theirndhu - Abroad il , idhai sariyaga seivadhu pola thonugiradhu."
to an extent its true - but while there are classy magazines/journals, there are tons of cheap magazines that pander to the prurient - on a comparative scale, we have more of the latter than the former, and many of the latter masquerade as the former
-
irir123, again you did super post :)
-
ellaa payalukkum paatulaye badhil irukku
'poda poda punnaakku
podaadhe thappukanakku'