Dhinamum varen. Unga post padikkaren (seriala pakkaren thro your post)
Sari inime oru post udane podaren.
Printable View
Dhinamum varen. Unga post padikkaren (seriala pakkaren thro your post)
Sari inime oru post udane podaren.
:exactly:Quote:
Originally Posted by saradhaa_sn
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
:2thumbsup:
நாம் நினைத்த மாதிரியே ஆர்த்தி உதவி வேண்டி 'ஆதியண்ணா'விடம்தான் போகிறாள்...
அவள் சென்ற நேரம், ஆதித்யா மிக முக்கியமான் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும், ஒரு மணிநேரத்துக்கு யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாதென்றும் ஒரு மணி நேரத்துக்கு எந்த போன்கால்களையும் அவருக்கு மற்றக்கூடாதென்றும் எம்.டி. (ஆதி) சொல்லியிருப்பதாக, ரிஸப்ஷனிஸ்ட் சொல்ல, ஆர்த்தி தவிக்கிறாள். ஆதியின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்ப்பட்டிருக்கிறது. இதுபோக இன்னும் சில முக்கியமான பிஸின்ஸ்மேன்கள் ஆதியைப்பார்ப்பதற்காக ரிஸப்ஷனில் காத்திருக்கிறார்கள்.
திடீரென மீட்டிங் அறையிலிருந்து வரும் ஆதி, ரிஸப்ஷனிஸ்ட்டை நோக்கி கோபத்துடன், "அந்த அக்ரிமெண்ட் ஃபைல் கேட்டேனே, என்ன ஆச்சு?. கிரி என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்" என்று சத்தம் போட்டுக்கொண்டு வரும்போது...
'அண்ணா'
'என்ன ஆர்த்தி திடீர்னு வந்திருக்கே, என்ன விஷயம்'
'ஒரு பெரிய பிரச்சினை அண்ணா, உங்ககிட்டே உதவிக்காக வந்திருக்கேன்'.
'என்ன ஆச்சு சொல்லு'.
'ராஜேஷை போலீஸில் பிடிச்சிகிட்டுப் போயிட்டாங்க'.
'அப்படியா, எதுக்காக?'
'டேங்கர் லாரியில் சாராயம் கடத்தினதா சொல்றாங்க. ஆனா அவருக்கு அது பத்தி எதுமே தெரியாது அண்ணா. நீங்க கொஞ்சம் உடனே வந்தா தேவலைண்ணா'.
'என்ன ஆர்த்தி, உனக்காக இதுகூட செய்ய மாட்டேனா?. இதோ உடனே வரேன்' என்றவன் ரிஸப்ஷனிஸ்ட் பக்கம் திரும்பி, 'மீட்டிங்கை ஒருமணிநேரம் நிறுத்தி வைக்கச்சொல்லு. இதோ வந்திடுறேன்'.
'சார் நீங்க முக்கியமான அக்ரிமெண்ட்ல கையெழுத்துப்போடணும்ங்கிறதுக்காக இவங்கள்ளாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க'.
'ஸாரி சார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஜஸ்ட் ஒரு மணிநேரத்துல வர்ரேன்'.
'பரவாயில்லை, போயிட்டு வாங்க மிஸ்ட்டர் ஆதி'.
ஆதியண்ணா எந்த மாதிரி சூழ்நிலையில் உதவிக்கு வருகிறான் என்று நினைத்து ஆர்த்தி உருகிப்போகிறாள்.
'சரி ஆர்த்தி, ராஜேஷை எந்த ஸ்டேஷன்ல வச்சிருக்காங்க?. எஃப்.ஐ.ஆர்.போட்டுட்டாங்களா?'
'அதெல்லாம் தெரியலைண்ணா. சாலிக்கிராமம் ஸ்டேஷன்ல வச்சிருக்காங்க'.
'அட அந்த இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சவர்தான். ஒண்ணும் பயப்படாதே'.
போலீஸ் ஸ்டேஷன்....
'என்ன இன்ஸ்பெக்டர், என்ன நடக்குது இங்கே?'
'சார் நீங்களா?. வாங்க சார்'.
'அதெல்லாம் இருக்கட்டும். எதுக்காக இவரை உள்ளே வச்சிருக்கீங்க?. உடனே அவரை ரிலீஸ் பண்ணுங்க'.
'சார், டேங்கர் லாரியில சாராயம் கடத்தியிருக்காங்க'.
'அதை ராஜேஷ்தான் பண்ணினார்னு எப்படி சொல்றீங்க?. ப்ரூஃப் இருக்கா?'
'அவர்தாங்க வண்டியோட ஓனர்'.
'சரி அவங்களை வெளியில கொண்டாங்க நான் கேட்கிறேன்'. மூவரும் லாக்கப்பிலிருந்து விடுவிக்கப்பட.....
சிவசுவிடம் ஆதி, 'ஏன்யா, நீதானே மேனேஜர். உனக்கு லாரியில என்ன சரக்கு லோடாகுதுன்னு தெரியாதா?'
'தெரியாது சார், எல்லாம் ராஜேஷுக்குத்தான் தெரியும்'.
அப்போது ஆர்த்தி, 'ஐயோ அண்ணா, இந்த பாவி பொய் சொல்றான். வண்டியோட முழு கண்ட்ரோலும் இவன்கிட்டேதான் ராஜேஷ் கொடுத்திருந்தாரு'.
'சரி, இன்ஸ்பெக்டர். நான் டிரைவர்கிட்டே தனியா பேசணும்'
டிரைவரை ஆதி வெளியே அழைத்துப்போய், 'இதோ பாரு, இந்த தப்பை நீதான் செஞ்சேன்னு ஒத்துக்கோ. அதிகமா போனா ஆறுமாசம் ஜெயிலில் வைப்பாங்க. அதுக்காக உனக்கு ஒரு லட்சம் ரூபாய் தர்ரேன். போதலைன்னா மேற்கொண்டு ஐம்பதாயிரம் தர்ரேன். நீதான் செஞ்சேன்னு ஒத்துக்கிட்டு உள்ளே போ. நீ ஜெயில்லே இருந்து வந்ததும் நானே உனக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு பண்ணித்தர்ரேன். எனா சொல்றே?'
சிறிதுநேர யோசனைக்குப்பின் டிரைவர் சம்மதிக்கிறான். உள்ளே வரும் ஆதி, 'இப்போ கேளுங்க இன்ஸ்பெக்டர்'.
'என்னய்யா சொல்றே?'.
'ஆமா சார், நான்தான் தப்பு பண்ணினேன். அவங்களுக்கு எதுவும் தெரியாது சார்'.
'பின்னே ஏண்டா, முதல்ல தெரியாதுன்னே?. கான்ஸ்டபிள், இவன்கிட்டே ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்குய்யா. சார், நீங்க இவங்களை அழைச்சிக்கிட்டு போகலால்ம்'.
சிவசுப்பார்த்து ஆதி, 'யூ ராஸ்கல், ஓடிப்போடா. இனிமேல் உன்னை இந்த ஊர்ல எங்காவது பார்த்தேன்னா ஷூட் பண்ணிடுவேன்'.
'உங்களுடைய பிஸி ஷெட்யூலுக்கு நடுவுல எனக்காக இவ்வளவு தூரம் வந்து உதவினதுக்கு ரொம்ப நன்றிண்ணா'.
'ஏய் ஆர்த்தி, என்ன நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு?. இது என்னோட கடமை. சரி, எனக்கு முக்கியமான வேலைகள் இருக்கு நான் வரேன். இனிமேலாவது யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாதுன்னு தெரிஞ்சு நடங்க'.
ஆதி போனதும், ராஜேஷ் ஆர்த்தியிடம், 'என்ன ஆர்த்தி இது?. அபியண்ணி இவ்வளவு நன்றிகெட்டபங்களா இருப்பாங்கன்னு நினைக்கலை. சஷ்டியப்த பூர்த்தி விழா சமயத்துல கூட அந்த மனோ ஆதிகூட போய் சேர்ந்துக்கிட்டபோது நாம அபிக்கு துணையா அவங்க கூடத்தானே நின்னோம். ஆனா இந்த மாதிரி நேரத்துல உதவிக்கு வரமாட்டேன்னுட்டாங்களே'.
அப்போது காரில் அங்கு வந்திறங்கும் விஸ்வநாதன் பதட்டத்துடன், 'என்ன ஆர்த்தி என்ன ஆச்சு?. அபி போன்ல ஒண்ணும் விவரமா சொல்லலை. அதான் ஓடி வந்தேன். என்ன ஆச்சு?'
ஆர்த்தி கோபத்துடன் கையெடுத்துக்கும்பிட்டு, 'ரொம்ப நன்றி சார், ஒண்ணும் பிரச்சினையில்லை. இவர் மேலே தப்பு இல்லேன்னதும் விட்டுட்டாங்க. போய் உங்க அபி மேடத்துகிட்டே சொல்லுங்க'. விஸ்வநாதன் திகைத்து நிற்கிறார்.
பெரிய போலீஸ் அதிகாரியின் (அஸிஸ்டெண்ட் கமிஷனர்...?) அலுவலகம்.....
மேனகாவிடம் மோதிய பத்து ஃப்ளாட் ஓனர்களும் அவரிடம் வந்து முறையிடுகிறார்கள்.
'சார், எங்க ஃப்ளாட்டைத்தரமாட்டோம்னு மறுத்ததுக்காக எங்களுக்கு தொல்லை கொடுக்கிறாங்க. மோசமான ரவுடிகளை எங்க எதிர் ஃப்ளாட்கள்ள குடி வச்சு பெண்களை பயமுறுத்துறாங்க. சதா ஸ்டீரியோவை சத்தமாக வைத்துக்கொண்டு ஆட்டமும் பாட்டமுமாக எங்களை நிம்மதியா தூங்க விடமாட்டேன்கிறாங்க. போய் அவங்களிடம் சொன்னால் காலி பண்ண முடியாது. முடிஞ்சா போலீஸ்கிட்டே போய் கம்ப்ளைண்ட் பண்ணுங்கன்னு ரொம்ப அஸால்ட்டா பதில் சொல்றாங்க'.
'அப்படியா?. குடியிருப்பவர்களுக்கு தொல்லை தருவதுபோல நடப்பது ரொம்ப மோசமான குற்றம். இதுக்கு பல செக்ஷன்களில் கேஸ் போடலாம். நீங்க ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக்கொடுங்க'.
'இதோ எழுதியே கொண்டாந்திருக்கோம் சார்'.
'கொடுங்க, இது ஒண்ணு போதும் அவங்க மேல் நடவடிக்கை எடுக்க. இப்பவே போகலாம் வாங்க என்னோடு'.
அப்போது ஒரு போன் கால் வர, எடுத்துப்பேசுகிறார்...
'சரி சார்... எஸ் சார்.... ஓகே சார்.... நான் பார்த்துக்கிறேன் சார்..'
போனை வைத்துவிட்டு, அவர்களிடம் திரும்பி... 'ஆமா நீங்க இவ்வளவு நேரம் பேசினது மேனகா மேடத்தைப்பத்தி தானே. போங்கப்பா, போய் அவங்ககூட சமாதானமா போகப்பாருங்க. எதுக்கு வீணா பெரிய இடங்களைப் பகைச்சுக்கறீங்க. அவ்ங்க உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்தா இப்போ இருக்கிற இடத்தை விட்டு வேறு இடத்துக்குப்போங்க'.
குடித்தனக்கார்கள் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே வெளியேறுகின்றனர்.
அபியின் வீடு....
'அம்மா... அம்மா...' வீடே இரண்டுபடும்படியாகக் கத்திக்கொண்டு வரும் ஆர்த்தியைப்பர்த்து... 'என்னடி ஆச்சு? எதுக்கு இவ்வளவு கோபமா வர்ரே?' என்ற் கற்பகம் கேட்க....
'அக்கா வந்தாச்சா...?'
'யாரைக்கேட்கிறே? அபியையா ஆனந்தியையா..?'
'ஓ... அப்ப உனக்கு விஷயமே தெரியாதா?. உனக்கு கூட ஒரு போன் பண்ணிச்சொல்லணும்னு அபி மேடத்துக்கு தோணலையா?'
'என்னடி சொல்றே நீ?. ஒண்ணுமே புரியலை. என்ன ஆச்சு?'
'ராஜேஷை போலீஸ்ல பிடிச்சிக்கிட்டுப்போயிட்டாங்கன்னு அபி மேடத்துகிட்டே போய் சொன்னா, அவங்க அதைக்கண்டுக்காம அவங்க பிஸினஸ்தான் பெரிசுன்னு போயிட்டாங்க. தெரியுமா?'
'என்னது மாப்பிள்ளையை போலீஸ்ல கொண்டுபோயிட்டாங்களா.. ஏண்டி'.
'டேங்கர் லாரி விஷயமா ஒரு பிரச்சினைம்மா, அதுக்காகத்தான். உடனே போய் அக்கா கிட்டே சொன்னா அவங்க எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அவங்க பிஸினஸ்தான் பெரிசுன்னு போயிட்டாங்க. நான் எனக்கு 'வேண்டிய' ஒரு ஆள் மூலமா அவரை வெளியில் கொண்டு வந்திட்டேன்'.
'ஆர்த்தி, நீ அபி மேலே குற்றம் சொல்லாதே. அவளுடைய சூழ்நிலை எப்படியோ?'
'நீங்கள்ளாம் இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. எனக்கு வந்த நிலைமை உங்களுக்கும் வந்தால் அப்போ தெரியும்'
வாசலில் அபி, 'என்ன தெரியணும் ஆர்த்தி?'
'வந்துட்டீங்களா?. உனக்கு கூடப்பிறந்தவங்கலோட பிரச்சினையை விட உன் டிஜிட்டல் வேல்லி பிஸின்ஸ்தானே பெரிசு?. அதுதானே முக்கியம்?.
(ஆர்த்தியின் நல்ல நேரம், ஆனந்தி அங்கேயில்லை. இருந்தால் அபியைவிட சூடாக பதில் கொடுத்திருப்பாள்).
'பைத்தியம் மாதிரி பேசாதே ஆர்த்தி. நான் விஸ்வநாதன் சாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டு, அடிக்கடி அவருக்கு போன் பண்ணி கேடுக்கிட்டுத்தான் இருந்தேன்'.
'நிறுத்துக்கா, நடிச்சதெல்லாம் போதும் இனிமேலும் நம்ப நாங்க தயாராயில்லை. இனிமேல் உங்க ஒட்டும் வேணாம் உறவும் வேணாம். ஆளை விடு'.
ஆர்த்தி கோபத்துடன் வெளியேற, அபி திகைத்தபடி நிற்க கற்பகம் சாரதாவைப்பார்த்து... 'என்ன சாரதா இதெல்லாம்....' என்று ஆரம்பிக்கும் நேரம், சட்டென்று ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றினேன். (பின்னே...? நேரம் ஆச்சு, இதுக்குப்பிறகு எந்த முக்கியமான காட்சியும் வரப்போவதில்லை. அப்படியிருக்க கற்பகத்தின் புலம்பலைக்கேட்க வேண்டுமா?. தூங்கப்போகும் நேரத்தில் நமக்கேன் இந்த தண்டனை..?).
ஆர்த்தி என்னதான் ஆகா ஊகூ என்று தன் பக்கம் நியாயத்தைப்பேசினாலும், நமக்கு அவள் மேல் அனுதாபம் கொஞ்சமும் வரவில்லை. ஆர்த்தி என்றாலே நமக்கு 'தொல்காப்பியன் - பாண்டிச்சேரி - ஓட்டல் அறை - ஆர்த்தியின் துரோகம்' இவையெல்லாம் நினைவுக்கு வந்து... 'போடி, நீ ரொம்ப யோக்கியமோ?' என்ற எண்ணமே மேலோங்குகிறது.
Exactly.Quote:
Originally Posted by saradhaa_sn
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
""ஆதி: இப்பதான் ஆரம்பம் ""என்கின்றான்
அப்படியானால் இன்னும் எத்தனை வருடங்கள்... :hammer: :hammer:
Quote:
ஆறு வருடங்கள் தொடர்ந்த கோலங்கள் சீரியல் வரும் மார்ச் மாதத்தில் முடிய இருக்கிறது. இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் அடுத்து பெரிய திரைக்கு வர இருக்கிறார். முற்றிலும் புது முகங்களைக் கொண்டு முற்றிலும், குடும்பச் செண்டிமெண்டை மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என்கிறார்.
பெரிய நிறுவனங்களின் தயாரிப்பு என்றால் சுதந்திரம் இருக்காது என்று கருவதால் தன் நண்பரை தயாரிப்பாளராக களமிறக்குகிறார். முதல் படமே ஆக்சன் படமாக அமைந்து அது ஓடாவிட்டால் இவனுக்கு சீரியல இயக்க மட்டும் தான் தெரியும் போல என்று முத்திரை விழுந்துவிடும். அதனால் கிளாசிக்கலாக ஒரு படமெடுத்து அது ஓடாவிட்டாலும் படம் நண்றாக இருக்கிற விஷயம் தெரிந்தவன் தான் என்று பெயர் வாங்கிக் கொடுத்தாலே போதும் என்கிறார் திருச்செல்வம்.
‘தொடர்’ந்து ஜெயிச்சுக்கிட்டே இருங்க பாஸ்!!
'ஆனா' அடிக்கடி சொல்வதுபோல, அடுத்த அஸைன்மெண்ட் கிடைக்கும் வரை 'கோலம்' போடலாம் என்று இருந்திருப்பார் (இழுத்திருப்பார்) போலும். இப்போது அடுத்த வாய்ப்பு, அதுவும் பெரிய திரையில் கிடைத்திருப்பதால், கோலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்.
அவர் இந்த சீரியலை முடிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் இதில் அவர் போட்டிருக்கும் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்க வேண்டும். பெரும்பாலான சீரியல்கள் எந்த உருப்படியான தீர்வுமின்றி 'சப்'பென்று முடித்து விடுவார்கள். (பெரிய உதாரணம் சமீபத்தில் வந்த 'பொறந்த வீடா புகுந்த வீடா' தொடர்).
ஆனா; கோலங்கள் அப்படியல்ல... ஏகப்பட்ட முடிச்சுகள், மற்றும் சிக்கல்கள். அதை சரியானபடி கையாண்டு காலம் காலமாக பார்த்து வரும் ரசிகர்கள் திருப்தியடையுமாறு முடிக்க வேண்டும்.
இப்போது திருச்செல்வம் இன்னொரு சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார். 'கோலங்களை' சரியானபடி முடிக்காவிட்டால், அதன் எஃபெக்ட் அவர் எடுக்கப்போகும் திரைப்படத்தையும் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. (சரி, மிரட்டுவதாகத்தான் வச்சுக்குங்களேன்).
அது சரி, திரைப்படம் அநேகமாக 30 ரீல்களுக்கு மேல் இருக்குமா?. அப்படீன்னா ஒரு நாளைக்கு திரையரங்கில் ஒரு காட்சிதான் திரையிட முடியும். மூன்று இடைவேளைகள் தேவைப்படும்.
பார்ப்போம்....
இப்படியும் செய்தி வர வாய்ப்புண்டு....
"திருச்செல்வத்தின் திரைப்பட பிரவேசம் கொஞ்சம் தாமதமாவதால் 'கோலங்கள்' தொடரை மேலும் ஒராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளார்".