http://i60.tinypic.com/qqbc41.jpg
Printable View
சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு, தங்கள் அறிவுரையை சிரமேற்கொண்டு ஏற்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. தலைவரையும் அவரது பட வசூல்களையும் எதிர்தரப்பில் விமர்சிக்கும்போது பதில் தரவேண்டியது அவசியமாகிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது,
சிவாஜி கணேசன் அவர்கள் என் சாப்பாட்டில் மண் அள்ளிப் போடவில்லை. அதேபோல, எங்கள் வள்ளலுக்கும் மற்றவர்களை சாப்பிட வைத்துதான் பழக்கமே தவிர, யார் சாப்பாட்டிலும் மண்ணை அள்ளிப் போட்டவர் கிடையாது ( உங்கள் சாப்பாடு உட்பட) என்பது உலகம் அறிந்த உண்மை. நிதானமாக செயல்படும் நீங்களே கூட நான் ஏன் பிறந்தேன் படத்தைப் பற்றி மதுரை தங்கம் அவர்களிடம் நீங்கள் கேட்ட நிகழ்ச்சியை விவரிக்கும் போது, அவரை புரட்சித் தலைவர் ஒதுக்கி விட்டார் என்று கூறுவதும் மூன்று தமிழ் தோன்றியதும் பாடலை மு.க.முத்துவுக்கு எழுதியதற்காக காரில் திரும்பும்போது வாலியை புரட்சித் தலைவர் கோபித்துக் கொண்டார் என்று கூறுவதையும் தவிர்க்கலாமே. (அது வாலி எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட. பல சம்பவங்கள் பல புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் மேற்கோள் காட்டுவது மன வருத்தத்தையே ஏற்படுத்தும்)
சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. சொல்லப்போனால் எஸ்.வி.ரங்காராவ், பாலையா, எம்.ஆர்.ராதா, சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா , நாகையா போன்ற தமிழகத்தின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் தனி இடம் உண்டு. நன்றி.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
நண்பரே ! இதுல சிங்கப்பூர் எங்கே இருக்குண்ணு கொஞ்சம் சொல்ல முடியுமா ?
அப்புறம் இது மாதிரி 'ஒரே' வார்த்தையை உபயோகப்படுத்துறதுக்கு முன்னால கொஞ்சம் யோசியுங்க தோழரே !
கொஞ்சம் நாளைக்கு முன்னால தான் கோடியில் ஒருவன் ரிலீஸ் ஆச்சு.
குறிப்பு : நானும் சிங்கப்பூருல தான் குப்பை கொட்டுறேன்.
போதும் என்று நினைத்தாலும் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே? நண்பர்களே.. மீண்டும் நாங்களாக ஆரம்பிக்காத நிலையில், பிரச்னைகளை கிளப்புவது நீங்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களின் வினாக்களுக்கும் கேலிகளுக்கும் எதிர்விளைவே இந்த பதில்...
கேள்வி கேட்க வந்திருக்கும் ஜோ அவர்களே, ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் மட்டும் ஓடியதன் மர்மம் என்ன? என்று ஏற்கனவே கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு நான் விளக்கமும் அளித்தேன். ஆனால், இப்படி கேள்வி கேட்பவர், முதலில் நான் நேற்று எழுப்பிய திரிசூலம் ரூ.2 கோடி வசூலித்தது என்று சொல்வதற்கான ஆதாரம் எங்கே? என்று கேட்டதற்கு, முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு ஆயிரத்தில் ஒருவன் பற்றி கேள்வி கேளுங்கள்.
ஒரு காலத்தில் உங்கள் நடிகர் கதாநாயகராக இருந்திருக்கலாம். கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து துணை நடிகராகத்தான் படங்களில் தலைகாட்டினார். 1992ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஒரு படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் பட்டம் கிடைத்ததே. அது ஒன்றே போதுமே உங்கள் நடிகர் ஒரு துணை நடிகர்தான் என்பதற்கு? உடனே, எங்கள் தலைவர் சிறிய வேடத்தில் ஆரம்பத்தில் நடிக்கவில்லையா? என்று கேட்காதீர்கள். திறமையால் முன்னேறி கதாநாயகனாக உயர்ந்தவர் கடைசி வரை கதாநாயகனாக திகழ்ந்தார். ஆனால்,நீங்கள் வாழ்ந்து கெட்டவர்கள்.
ஆயிரத்தில் ஒருவன் பற்றி நீங்கள் செய்யும் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். 3 ஆண்டுகளுக்கு முன் உங்கள் தியேட்டரிலேயே ரிலீஸ் ஆகி ஒரு வாரம் தாக்குப்பிடிப்பதற்குள்ளாகவே தியேட்டரில் ஈயாடிய படத்தை, இப்போது உங்களைப் போலவே நாங்களும் ஆவலுடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அது... சோகபார்ட் சொங்கித்துரை ஆவதை பார்க்க.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
சிங்கப்பூர் , ஒரே .. கேட்ட கேள்விக்கு பதில் இல்ல .. கையப்புடிச்சு இழுத்தியா பாணியில சம்பந்தம் இல்லாம ஏதாவது பேசுறது . சரி ..உங்களிடம் பதில் இல்லை என்று எடுத்துக்கொள்கிறேன் .
நீங்க பண்ணுற காமெடியைத் தான் கேட்கிறேன் .. மக்கள் திலகத்தின் மகத்துவம் எனக்குத் தெரியும் . அவரை என்றுமே நான் தூற்றியதில்லை ..அது பற்றி மற்றவரிடம் அறிவுரை வாங்கும் நிலையில் நான் இல்லை நண்பரே.
நான் எழுப்பிய திரிசூலம் ரூ.2 கோடி வசூல் பற்றிய கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை என்று புரிந்து கொண்டு விட்டோம். உண்மையை உங்கள் பதில் மூலம் உணர்த்தியதற்கு நன்றி ஜோ. எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும் என்று தர்மி பாணியில் வரும்போதுதான் அறிவுரை வழங்க வேண்டியுள்ளது. சரி பதில்தான் வேண்டாம். ரூ.2 கோடி வசூல் கேள்வியை அங்கே கேட்டு எங்களுக்கு தெரியப்படுத்துங்களேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சொன்னவரிடம் சொன்னது பற்றி கேள்வி கேட்பது தான் முறை .. நீங்க சொன்னதற்கு உங்களிடம் கேட்கிறேன் .. உங்கள் கேள்வியை யார் சொன்னார்களோ அவர்களிடம் கேளுங்கள் .. நான் யாருக்கும் எடுப்பு அல்ல . சரியாண்ணே!.
இப்போ நீங்க சொன்னது பற்றி நான் கேட்டதுக்கு .. அவன நிறுத்தச் சொல்லு ..நான் நிறுத்துறேன்னு அடம் பிடிக்காம தெளிவா சொல்லுங்க பார்ப்போம் .
1..2..3
நமது பெருமைமிகு பெரும் போற்றுதலுக்கு தகுதியான மக்கள்திலகம் புகழ் பாடும் திரியின் மூத்த உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு கட்டாயம் செவி சாய்க்க தான் முயற்சிக்கிறோம்...ஆனால் நம் சக தோழர்கள் ஒத்து வர மறுக்கும்போதுதான் விமர்சனங்கள் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளியே பாய்கிறது...நம் உறுப்பினர்களும் பதிலுக்கு,பதில் லாவணி பாட வேண்டியதில்லை! நாம் யாரையும் எதிரிகளாக நினைக்கவில்லை... மக்கள்திலகம் அவர்களின் சாதனைகள்,சரித்திரங்கள் - இவைகளுக்கு ----- சரிசமமான பிரமுகர்களிடம் -compare -செய்தால் தான் MGR -எனும் அற்புததின், அற்புத படைப்பின் புகழொளி பிரகாசிக்கும் என்பது கண் கூடு...அதுவும் நாங்கள் 1972-1973 ஆம் ஆண்டுகளிலேயே தாண்டி,கடந்து வந்து விட்டோம் -என்றால் அது மிகையாகாது!!!!!!
உங்கள் நண்பர்கள்தானே அவர்கள், தனிப்பட்ட பிரச்னையாக இருந்தால் கேள்வி கேட்டவரிடம் மட்டுமே கேட்பேன். ஆனால், இது உங்கள் அபிமான நடிகர் படத்தின் வசூல் பற்றிய பிரச்னை. ஒன்று அதற்கு பதில் கூறிவிட்டு கேள்வி கேளுங்கள். அல்லது திரிசூலம் படம் ரூ.2 கோடி வசூல் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டு கேளுங்கள் சொல்கிறோம். சரியா...? உங்கள் நண்பர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவீர்கள் என்று பார்த்தால் அவர்களை கைகழுவி விட்டீர்களே? சரி போகட்டும்... சமாதானங்களை எதிர்பார்க்காமல் பதிலோடு உங்கள் நேர்மையையும் எதிர்பார்க்கிறேன். திருப்பியும் நொண்டிச்சாக்கு சொன்னால் லாவணி பாட விரும்பவில்லை ஜோ.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஜோ, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று கூறுகிறீர்கள். அதனால்தான் ஆயிரத்தில் ஒருவனின் சிறப்பை பற்றி நீங்களும் உங்கள் கூட்டமும் தெரியாமல் இருந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. நாங்கள் அந்த ரகம் என்று முதலிலேயே சொல்லியிருக்கலாமே? 5 அறிவுகளுடன் எங்களுக்கு ஏன் விவாதம்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
சிவாஜி ரசிகர்கள் என் நண்பர்கள் , எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என் எதிரிகள் என்று யார் உங்களுக்கு சொன்னது ? இது என்ன மாதிரியான லாஜிக் ?
என்னுடைய கிராமத்தில் என்னுடைய உயிர் நண்பர்கள் பலர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தான் .. அதோட , நான் எந்த கூட்டத்துலயும் இல்ல .. நான் சிவாஜி ரசிகன் ..அவ்வளவு தான்.
வசூல் பிரச்சனை ? ஹா ஹா .. சொன்னவர் அதற்கு விளக்கம் சொல்லுவார் .. அதுவரைக்கும் நீங்க சொன்னது எதுக்கும் எனக்கு பதில் சொல்ல மாட்டீங்களா ? என்ன லாஜிக்கோ ? :)))
சரிண்ணே .. இப்போ நான் ஒப்புகொள்ளுறதால உங்களுக்கு சாந்தியும் அமைதியும் கிடைக்கும்னா , ஒத்துக்கிறேன் .
இப்ப சொல்லுங்கண்ணே .. அந்த 11 தியேட்டருல சிங்கப்பூர் தியேட்டர் எங்கிருக்கு ? அந்த 'ஒரே' காவியம் -ன்னு சொன்னீங்களே .. அந்த ஒரே -வுக்கு என்ன அர்த்தம்ணே ... இப்பவும் பதில் சொல்லாம மறுபடியும் கைய பிடிச்சு இழுந்தீங்க ..எனக்கு கெட்ட கோபம் வரும் ..ஆமா .. என் கண்ணுல்ல ..சொல்லு ராஜா !
ஜோ என்ற பெயரில் வரும் ........
உங்கள் கேள்விகளை பார்த்தால் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் நண்பராக தெரியவில்லையே. திரிசூலம் படத்துக்கு ரூ.2 கோடி வசூலுக்கு பதில் சொன்னால்தான் அடுத்து உங்களுக்கு என் பதில். மழுப்பல் வேண்டாம். அதுவரை... சூ.. சூ... போ... போ (சாரி, இங்கே ஒரு கழுதை வந்து விட்டது. அதைத்தான் விரட்டினேன்)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அண்ணே ! நீங்க சரியான கல்லூளிமங்கன் தான் ..என் தோல்வியை ஒப்புக்குறேன் .
நெக்ஸ்ட் மீட் பண்றேன் :)
FROM TO DAY 10.9.2014
MADURAI - RAM THEATER
http://i59.tinypic.com/r7nn2q.jpg
http://www.youtube.com/watch?v=7bYkrfGignQ
ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து
nenjam undu nermai undu- malay
http://www.youtube.com/watch?v=dVTlRAGS_Fs
can anyone follow?
nalla nalla pillaigalai nambi- malay
http://www.youtube.com/watch?v=9j6rTq4yU9w
வேலூர் records 18
http://i59.tinypic.com/2qmls7r.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வேலூர் records 19
http://i59.tinypic.com/ily4rc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி
மக்கள் திலகம் ''பாரத் '' பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் மற்றும் எம்ஜிஆரின் இயற்கை
நடிப்பை பாராட்டியும் ,பாரத் பட்டம் பெற்றதற்கு வாழ்த்தும்தெரிவித்த ஆஸ்திரேலியா -பிரபல இயக்குனர் ஜான் மெக்கலம் இருவரின் செய்திகள் வந்த 5.5.1972 தினத்தந்தி பத்திரிகை ஆவணம் மிகவும் அருமை .
தங்களிடமிருந்து மேலும் பல அரிய அபூர்வ ஆவணங்கள் எதிர்பார்க்கிறேன் .
திரை உலகில் மக்கள் திலகத்தின் செல்வாக்கு - புகழ் - மற்றும் விநியோகஸ்தர்கள் - தயாரிப்பாளர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எம்ஜிஆர் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு - வசூல் படைத்த சாதனைகள் ஏராளம் .
மறு வெளியீடுகளில் எம்ஜிஆரின் படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆரின் சாதனைகள் பற்றி எல்லா பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி உள்ளார்கள் .
திரை உலக வசூல் சக்ரவர்த்தி - இந்த பட்டம் எம்ஜிஆருக்கு என்றென்றும் நிலைத்து உள்ளது .எனவே சில ''நண்பர்கள் ''தங்கள் அடி மனதில் ஊறிப்போன ''எதிர்ப்பு ''எண்ணங்களை பல்வேறு கோணத்தில் பதிவாக செய்து வருகிறார்கள் .
பதிலுக்கு பதில் என்ற ரீதியில் எம்ஜிஆரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவும் துவங்கி விட்டார்கள் .
நம்முடைய திரியின் வேகம் தடைபடுவதற்கு நாம் யாரும் காரணமாக இருக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
மக்கள் திலகத்தை பற்றி பதிவிட எத்தனையோ தகவல்கள் உள்ள போது குறுக்கீடு பதிவுகளுக்கு பதில் தேவை இல்லை .நம்மை தூண்டும் விதமாக ''வார்த்தை சித்தர்கள் ''- அள்ளிவிட போகும் ஏவு கணைகள் எல்லாவற்றையும் அமைதியாக மவுனம் '' என்ற நிலையில் ' பொறுமை காப்போம் .
''
http://i58.tinypic.com/2i6idly.jpg
Makkal Thilagam M.G.R, Mr.Devar, and Actress Vijayakumari are in this image
Working Still From The Movie "Ther Thiruvizha"
எஸ்வீ சார் நாம் எப்பொழுதும் யாரிடம் சண்டைக்கோ வாக்கு வாத திற்கோ போவது இல்லை . தலைவரின் புகழ் யாராலும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாது . சூரியன் உதிக்கும் திசை உலகம் தெரிந்தது அது போல தலைவரின் சாதனைகள் இந்த பிரபஞ்சம் அறிந்தது . கண் தெரியாதவர்கள் சூரியன் உதிக்கும் திசை பற்றி தெரிந்திருக்க நியாம் இல்லை. ஆகவே இனி வரும் காலங்களில் தெய்வத்தின் புகழ் மட்டுமே பாடும் புனித பணியினை செய்திடு வோம் .
அதே சமயத்தில் தலைவரின் புகழையோ வரலாற்று வெற்றிகளில் குறை கண்டு பதிவு செய்வோர்களை சொற் போரால் தாக்கவும் தயங்கமாட்டோம் .
தலைவர் நீங்கள் 1917-இல் பிறந்திர்கள் இருபதாம் நூற்றாண்டுக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1927-இல் நாடக துறையில் நுழைந்திர்கள் நாடக துறைக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1936-இல் திரை துறையில் நுழைந்திர்கள் திரை துறைக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1958-இல் இயக்குனாராக அறிமுகமானிர்கள் தொழில்நுட்பம் துறைக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1967-இல் குண்டடிபடிர்கள் அண்ணாவின் இயக்கத்துக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1972-இல் அ தி மு க வினை நிறுவியதன் முலம் உங்கள் ரசிக கண்மணிகளுக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1977-இல் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றாய் தமிழக மக்களுக்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா நீங்கள் 1987-இல் உடலால் மறைந்திர்கள் வானுலகிற்கு ஆரம்பமானது நல்ல நேரம்
தலைவா இன்றுவரை உங்கள் திரைப்படங்களை விநியோகிக்கும் விநியோகஸ்தற்கு என்றுமே நல்ல நேரம் தான்
[QUOTE=MGRRAAMAMOORTHI;1163410]வேலூர் records 18
http://i59.tinypic.com/2qmls7r.jpg
http://www.youtube.com/watch?v=N0el-hD5xNM
அப்புறம் தலைவரே!
எஸ்வி சார் பொம்மை பத்திரிகை ஆவணங்கள் சூப்பர் அதிலும் ஆபிரகாம் லிங்கன், கென்னெடி, இந்திரா காந்தி போன்று புகழின் உச்சியில் இருக்கும் பொழுது அமரத்துவம் ஆன mgr என்றும் ஹீரோ மறைந்த பிறகும் அவர் தான் ஹீரோ
என்று கட்டுரை நிறைவு செய்து இருப்பது சிம்ப்லி சூப்பர்
காலம் கடந்தாலும் தலைமுறைகள் மாறினாலும் எங்கள் மக்கள் திலகம் ஒருவரே மக்களால் கவரப்பட்ட ஒரே நிரந்தர கதாநாயகன் .
http://i59.tinypic.com/o10sgn.jpg
Courtesy: Vanambadi Magazine, Malaysia & Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/10oi2l1.jpg
Courtesy: Vanambadi Magazine, Malaysia & Singapore
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்