http://i1170.photobucket.com/albums/...psbwcbzftd.jpg
Printable View
சுட்டெரிக்கும் வெய்யிலின் தார்க்கத்திலிருந்து விடுபட, நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வரும் 12-04-2015 ஞாயிற்றுக்கிழமை சென்னை சைதை பகுதியில் ஜோன்ஸ் சாலையில் நடைபெறவிருப்பதையொட்டி, மக்கள் அறியும் பொருட்டு, மக்கள் திலகம் தோன்றும் பதாகை :
http://i59.tinypic.com/2rnbxwi.jpg
பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,
நெல்சன் மண்டேலாவின் படத்தை காட்டியபடி புரட்சித் தலைவர் தோன்றும் ஸ்டில் அற்புதம். இதுவரை நமது திரியில் இடம் பெறாத படம். மிக அரிய புகைப்படம் என்பதிலிருந்தே இந்தப் படத்துக்காக நீங்கள் எவ்வளவு மெனக்கெட்டிருப்பீர்கள் என்பது தெரிகிறது. உலகத் தமிழர்களுக்கு இந்த அரிய புகைப்படத்தை காட்சிப்படுத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். மிக்க நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தலைவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் இயக்குநர் திரு.பி.ஆர்.பந்துலு. இதுவும் முதல் முறையாக நமது திரியில் இடம் பெறுகிறது. நன்றி திரு.செல்வகுமார் சார்.
மேலும் முதல்வர் பக்தவத்சலத்திடம் தலைவர் விருது பெறும் படம், மகாத்மா படத்துக்கு கீழே தலைவர் நின்றபடி புத்தகம் படிக்கும் படம், அன்னை ஜானகி அம்மையாருடன் இருக்கும் படம் போன்ற அரிய படங்களும் அருமை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[QUOTE=Yukesh Babu;1218025நான்கைந்து வருடங்களுக்கு முன்... Mgr -ன் பிறந்த தினம். ஒரு தொலைக்காட்சியில் அவரின் பழைய படப் பதிவுகளின் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது... ஏதோ அவசர வேலையில் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தவன், இந்தப் காட்சிகளைக் கண்டு நின்றுவிடுகிறேன்... தொப்பியும், கருப்புக் கண்ணாடியுமாக, தமிழக முதல்வராக... மேடையில் நின்று ஆதரவற்ற எளிய பெண்களுக்கு புடவையும், அரிசியும்,உதவித் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்... மக்கள் கூட்டம் பேரன்பில் கூச்சலிடுகிறது... ஒவ்வொருவராக வரிசையில் நின்று மெல்ல அருகில் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, புன்னகைத்து அன்பாகக் கொடுத்தனுப்புகிறார். அப்போது, அப்போது, மேடையின் கீழே, இழுத்துப் போர்த்திய கிழிசல் புடவையோடு ஏறத்தாழ ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி வரிசைக்குள் வர காவலர் அந்தப்பெண்மணியை விலக்குகிறார். அதை கவனித்த mgr, அந்தப் பெண்மணியை தன்னிடம் வரவிடுமாறு சைகையில் சொல்ல, அந்த பெண்மணி வற்றி வதங்கிய உடலோடும், கிழிசல் மறைத்த உடையோடும், தயங்கித் துவண்ட நடையோடும், மெல்ல...மெல்ல..நெருங்கி mgr அருகே வருகிறார். கைகூப்பி வணங்குகிறார். வணக்கம் சொல்லிய முதல்வர் ஏதோ கேட்டவாறே, புடவை,அரிசி,உதவித்தொகை இருக்கும் பையை கொடுக்க, அந்தப் பெண்மணி அதீத சங்கோஜம் கொண்டு, அவரிடமிருந்து விலகி தனது கிழிந்த புடவைத் தலைப்பை விரித்து அதில் வாங்கிக் கொள்ள முனைகிறார். Mgr அருகே வரச் சொல்லி சைகை காட்டியும், அந்தப் பெண்மணியின் பஞ்சடைந்த கண்கள் மெல்லத் தாழ்கின்றன... கூச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையும் mgr -ன் முகத்தை நேரிட்டுக் காண மருகித் தயங்குகின்றன... அருகே இருந்த உதவியாளரிடம் கையிலிருப்பதைக் கொடுத்து விட்டு, பொன்மனச்செம்மலின் கரங்கள் அந்த பெண்மணியின் இரு கரங்களையும் பற்றுகின்றன... மெல்ல அந்த கரங்களை பற்றி, தனது இரு கன்னங்களிலும் வைத்துக் கொள்கிறார். சில நொடிகள் கடக்கின்றன... சிறுவயதில் தான் கண்ட தனது தாயின் ஏழ்மையை இவர் நினத்தாரோ? அல்லது, திரையரங்கில் மட்டுமே பார்த்து வியந்த, கனவு நாயகனின் கைகள் தனது கைகளைப் பற்றிய நெகிழ்வை அந்தப் பெண்மணி உணர்ந்தாரோ? இருவருமே கலங்கி நிற்கின்றனர்... கண்ணாடியை உயர்த்தி கண்ணீரைத் துடைத்து, அந்தப் பெண்மணியின் விழிநீரை கைக்குட்டையால் துடைத்து உதவிப் பொருட்களை அதிகமாகவே வழங்கி, வணங்கி வழியனுப்புகிற mgr…
உடல் முழுக்க சிலிர்க்கிறது... அந்தப் பெண்மணி மனம் எத்தனை நெகிழ்ந்திருக்கும்? எத்தனை இயல்பாக அந்தப் பெண்ணின் தாழ்வு மனத்தை தகர்த்தெறிந்தார்?
என்ன விதமான அன்பு? எத்தனை அழகான வெளிப்பாடு?
மரபு தாண்டிய பேரன்பு... தமிழ் மண்ணின் பெரும்பான்மையான ஏழை, எளியோர் தமது சொந்தமாகவே எண்ணி அனைத்துக் கொண்ட நேசம்…
தமிழ் மண்ணையும், தமிழரையும் தமது வாழ்வெல்லாம் மனத்தில் சுமந்த ஈரம்.... [/QUOTE]
ஏழைகள் மீது தலைவர் கொண்டிருந்த தாயன்பு..... முழுமையாக படிக்க முடியாதபடி கண்களை நீர் மறைக்கிறது. திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு வி .என் . சிதம்பரம் அவர்கள் மக்கள் திலகத்தை பற்றி எழதிய கட்டுரை .
http://i61.tinypic.com/2ntlk7o.jpg
மக்கள் திலகத்தின் அபூர்வ படங்களை வழங்கிய திரு செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
கலைவேந்தன் அவர்களின் பதிவுகள் மிகவும் அருமை .
யுகேஷ் பாபு பதிவிட்ட மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் அருமை .