https://scontent.fyto1-1.fna.fbcdn.n...30&oe=5C0E5EE2
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...80&oe=5BC61411
முற்றிலும் வித்தியாசமாக எல்லா காலத்திலும் தன் நடிப்பிலும் நடை உடை பாவனையிலும் முகத்திலும் உணர்வுகளைக் கொண்டு வர முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்தார். அதற்கு மற்றுமோர் சான்று 1992ல் வெளியான முதல் குரல் படத்தில் இடம் பெற்ற இந்நிழற்படம். மாறு வேடத்தில் நிற்கும் இவரை காவலர் அடையாளம் கண்டு கொண்டு விட்டார்களோ என்ற ஐயப்பாட்டை முகத்தில் கொண்டு வந்த காட்சி இது.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8b&oe=5BFB6B4B
Sundar Rajan
சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்து, அதனை திரைப்படத்தின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்த ஒரே கலைஞர் நமது நடிகர்திலகம் அவர்கள் தான்.
இன்றைய இளைஞர்கள் மட்டுமல்ல இனி ...வரும் சந்ததியினரும், வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, திருப்பூர் குமரன், பகத்சிங், போன்ற சரித்திரநாயகர்களை தெரிந்து கொள்ள ஏதுவாக அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியவர்.
பாவமன்னிப்பு, பாரதவிலால் போன்ற படங்களில் மதத்தினால் நாம் பிரிந்து விடக்கூடாது என மக்களுக்கு எடுத்துரைத்தவர் நடிகர்திலகம்.
ராணுவ வீரர்களின் மதிப்பினை அறிந்து,
பல சமயங்களில் அவர்களுக்கு உதவி புரிந்தவர்
நம் நடிகர்திலகம் தான். மற்றவர்கள் போல் அதனை வெளியில் சொல்லி விளம்பரம் தேடாதவர்.
ராணுவ வீரர்களை மதிக்கத் தெரிந்தவரும் நமது சிங்கத்தமிழன் சிவாஜி அவர்கள் மட்டும் தான்.
இதோ, அருமையான செய்தி உங்களுக்காக....
ராணுவ வீரர்களை அன்னை இல்லத்திற்கு அழைத்து அவர்களை கவிரத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு விழா எடுத்து நினைவுப்பரிசு வழங்கியுள்ளார்.
மக்கள்தலைவருடன், நமது தளபதி ராம்குமார் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருமையான புகைப்படம் செய்தியுடன்...
அன்பு இதயங்களே, இந்த செய்தியை
அனைவருக்கும் பகிருங்கள்...
தேச நாயகன் நடிகர்திலகத்தின் நாட்டுப்பற்றை, இன்றை இளையதலைமுறையினரும், நடிகர்திலகத்தின் அருமை தெரியாத பத்திரிக்கை நிருபர்களும், நடிகர்திலகத்தை விவாதம் செய்யும் நடுநிலையாளர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
தொலைக்காட்சி சேனல்களில் இன்று (16/08/18) ஒளி பரப்பாகும் நடிகர் திலகம் திரைக்காவியங்கள்,
காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில் - பரீட்சைக்கு நேரமாச்சு,
பிற்பகல் 1:30 க்கு புதுயுகம் டிவியில் - விடுதலை,
... பிற்பகல் 2 மணிக்கு பாலிமர் சேனலில் - கந்தன் கருணை,
இரவு 11:55 க்கு ஜெயா டிவியில் - ஆலயமணி,
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...85&oe=5C10A862
நன்றி பரசுராம்
சிவகுமார் எனும் மானுடம் ......
---------------------------------------------
அன்புள்ள நண்பர்களே ..
வணக்கத்துடன்
மனிதர்கள் சுயநலத்தில் புதைந்து போவதுதான் நடைமுறை .விதிவிலக்காக சிலர் புத்தனைப் போல மனித நேயத்தை செயலில் கொண்டு இருப்பார் .மானுடம் காக்கும் அவர்களை மஹாத்மா என்போம் ...அய்யா நடிகர் சிவகுமார் அவர்கள் அந்த வரிசையில் முதலானவர் ..
ஈரோடு மண்ணுக்கு என்று தனி வரலாறு உண்டு .மடமைகளை தீயிட்டு கொளுத்திய புரட்சி சிந்தனையாளர் பெரியார் முத்தமிட்ட ஞான பூமி இது .
கடந்த ஞாயிறு அன்று இம் மண்ணில் நடைபெற்ற புத்தக திருவிழா அரங்கில் பெரியாரால் அடையாளபடுத்தபட்ட தமிழ் கலைஞன் சிவாஜியின் வாழ்வியலை மையப்படுத்தி சிவாஜி ஒரு சகாப்தம் என்ற கருத்து திறனாய்வு நடைபெற்றது .
அய்யா சிவகுமார் அவர்கள் சுமார் ஒரு மணி முப்பத்தி ஒன்பது நிமிடங்கள் அய்யன் சிவாஜியின் வாழ்வியலில் நடந்த பல அறியாத சம்பவங்களை அழகு தமிழில் ஆபரணமாக தொடுத்தார் .
மகாபாரத்தை , கம்பராமாயணத்தை ,செவிக்கு இனிய மொழியில் கொண்டு வந்து சிந்தை குளிர வைத்த அய்யா சிவகுமாரின் தமிழ் ஆளுமை அய்யன் சிவாஜிக்கு கட்டிய இந்த திறனாய்வு .சிவாஜி காவியம் என்ற புதிய புதினத்தை உருவாக்கியது ...
தலைக்கு ரூபாய் பிரியாணி பொட்டலம் , என வித்தைகள் காட்டி அரசியல் சபைகள் கூட்டம் கூட்டும் முறையை கண்டு இருந்த கண்களுக்கு ,அய்யா சிவகுமாரின் தமிழை கேட்க அன்பால் கூடிய கூட்டத்தைக் கண்டு வியப்பு என்னையும் அறியாமல் மனதிற்குள் .சுமார் பத்தாயிரத்திற்கு மேல் மக்கள் வெள்ளம் திரண்டு இருந்தது ..
இந்த மேடையில் அணிலின் முதுகில் ராமர் செல்லக் கோடுகள் தீட்டியது போல , மஹா மானுடம் சிவகுமார் அய்யா அவர்கள் என் முதுகில் செல்ல கோடுகளை தீட்டினார்..
அய்யன் சிவாஜியின் வாழ்வியலை மையப்படுத்தி கலை மகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை என்ற தலைப்பில் நூல் வெளியிட்டு இருந்தேன் . இந்த நூலை தயாரிக்க நான் எடுத்துக் கொண்ட நாட்கள் சுமார் மூன்று வருடங்கள் .சிவாஜியை குறித்து அறிந்தவர்கள் என சுமார் ஒன்பதாயிரத்து நானுற்றி இருபத்தி நான்கு பேர்களை சந்தித்து நூல் உருவாக்க தகவல்களை பெற்றேன் ....
என் முயற்சியை கேள்விப்பட்ட அய்யா சிவகுமார் ,இந்த அணிலின் நூலை அம்மேடையில் அலங்கார கலையாக மக்கள் முன் வைத்தார் .என் நூல் அந்த அரங்கில் அய்யாவின் கருணையில் மாபெரும் விற்பனை சாதனையை செய்தது ..
இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட விழைகிறேன் . அய்யா சிவகுமார் அவர்கள் எனக்கு உதவி செய்ய போகிறார் என்ற செய்தி அறிந்த உடன் , சிலர் அய்யாவை தடுக்கும் வழிமுறைகளை கையில் எடுத்தனர்
.அறிமுகமில்லாத ஒரு எழுத்தாளனை நீங்கள் அங்கீகரிப்பது நன்றாக இருக்காது .வேறு யாரையாவது முன்மொழியுங்கள் என்று கோரிக்கை வைத்தனர் .
பலர் தடுத்தும் இந்த அணிலை கையில் எடுத்து செல்ல கோடு தீட்டி அங்கீகரித்த அய்யா சிவகுமார் உலகின் புதுமை மானுடம் , அவருக்கு என் ஆயுட்கால நன்றிகள் ..
மேடையில் அய்யா சிவகுமார் அவர்கள் அய்யன் சிவாஜியை குறித்து பேசிய விடயங்களில் பல எனது நூலான கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை இருந்து எடுக்கப்பட்டவை என விழா
தலைமை வகித்த மக்கள் சிந்தனை பேரவை தலைவர் குணசேகரன் மூலம் மேடையில் அறிவித்து என் எழுத்துக்களை உலகறிய செய்தார்
மேடையில் பேசிய உண்மைகள் சிவாஜி ரசிகனுக்கு அதிகார முத்திரை .இனி எவராலும் இப்படிஓர் ஆளுமை பேச்சை சிவாஜிக்காக தரமுடியாது .அய்யா சிவகுமாருக்கு மட்டும் சொந்தமானது அது ...
என்றும் நன்றியுடன்
மு.ஞா செ.இன்பா
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...34&oe=5BF4690B
nilla
(mudal mariyathai 33 years )
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...3a&oe=5C101F5A
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7c&oe=5C0D6DCE
Rare photo of NT. Thanks to NTFans
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...fe&oe=5BF2AC4C
நன்றி செந்தில்நாதன் முகநூல்