ஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
http://i63.tinypic.com/23i7y37.jpg
Printable View
ஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
http://i63.tinypic.com/23i7y37.jpg
ஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி , விழா மலருடன் காட்சி.
http://i65.tinypic.com/wqv57s.jpg
இன்று தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தினம் ( 10.10.2018).இதே நாளில் (10.10.1972)46 ஆண்டுகளுக்கு முன்னால் தி.மு.கழகத்தில் இருந்து புரட்சித்தலைவரை வெளியேற்றிய நாள் . செய்தி காட்டுதீயை போல் பரவியது. எங்கும் பதட்டநிலை உருவாகியது. தலைவர் புகைப்படம் இருந்தால் தான் வாகனங்கள் நகரும் நிலை ஏற்ப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போராட்டம் .மன்றங்கள் போர் கொடி எழுப்பினர். பொதுமக்கள் கலங்கினர். தொண்டர்கள் கண்டன குரல் எழுப்பி நாலாபக்கமும் ஊர்வலம் நடத்தினர். உலகசரித்திரத்தில் தனி ஒரு மனிதருக்காக அன்று 4கோடி தமிழ் மக்களும் கொதித்ததினம். அது மட்டுமல்ல தமிழர்கள் உலகமெங்கும் உள்ளவர்களும் கண்டன கனைகளை எழுப்பியதினம். ஒரு அரசாங்கத்தையே மக்கள் சக்தி ஆட்டி பார்த்த தினம். உலக அரசியல் வரலாற்றில் புரட்சித்தலைவரின் மக்கள் செல்வாக்கு என்ன என்பதை அன்றைய தினம் நிரூப்பித்த நாளாகும். இப்படிப்பட்ட மாபெரும் தலைவர் அன்றே மக்களின் முதல்வர் ஆனார்கள்.இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தமிழகம் அதற்கு முன்னும் அதன் பின்னும் கண்டதில்லை. அந்த வரலாற்று தலைவரின் சக்தியால் தான் இன்று வரை தமிழகம் தலை நிமிர்ந்து செல்கிறது. ஒழிக்க நினைத்தவர்கள் மறைக்க பார்த்தவர்கள் பொய்யுரை தூற்றியவர்கள் வதந்திகளை பரப்பியவர்கள் யாவரும் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டார்கள். ஆனால் மண்ணுக்குள் தங்கமாக சந்தன பெட்டியில் உறங்கினாலும் மக்கள் மனங்களில் சந்தனமாக மணக்கும் மனிதபுனிதராக வாழ்கின்றார். மகானாக நிற்கின்றார். மாமனிதராக பயணிக்கின்றார். தீர்க்கதரிசியாக உயர்ந்து நிற்கின்றார். ஏழேழு தலை முறையும் எம். ஜி. ஆர். திருநாமம் சொல்லும் தமிழ்நாடாக திகழும்.சரித்திரத்தில் MGR என்ற மூன்றெழுத்து சொல்லே நிலைத்து நிற்கும். என்றும் வள்ளல் புகழை பாடும் உண்மையான பக்தன் உரிமைக்குரல் பி.எஸ். ராஜு..... Thanks Friends...
இன்று சென்னை மாநகரின் கோயம்பேடு பேருந்து நிலையம்" புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம்" பெயர் சூட்டப்பட்ட அருமையான நல்ல நிகழ்வுகள் மகிழ்ச்சி அளிக்கிறது...
மக்கள் குரல் -10/10/18
http://i63.tinypic.com/2ijpyly.jpg
மாலை மலர் -10/10/18
http://i65.tinypic.com/jkkh2a.jpg
http://i68.tinypic.com/ux2mc.jpg
http://i66.tinypic.com/34h8414.jpg
இரங்கல் செய்தி .
------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த , தீவிர பக்தர் திரு.சுரேந்திரபாபு
அவர்கள் இன்று (11/10/18) அதிகாலை 5 மணியளவில் மாரடைப்பால் காலமானார்
என்கிற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .
மக்கள் திலகம் எம்.ஜி..ஆர். திரைப்படங்கள் சிலவற்றை பக்தர்களுக்கு இலவசமாக
பல்வேறு பிரிவியூ அரங்குகளில் காண்பிக்க அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்து வந்தார். .அப்போது பக்தர்கள் சிலருக்கு குடும்ப கல்வி நிதி, மற்றும் பல சமூக நல திட்டங்களையும் செய்து வந்தார் .பக்தர்கள் உடல்நல குறைவால் அவதிப்படும் விஷயம் அறிந்ததும் ,
பிரார்த்தனை குழு ஒன்றினை பக்தர்கள் மூலம் உருவகப்படுத்தி வடபழனி முருகன் கோவிலில் பிரார்த்தனைகளை நடத்தினார். அதன்மூலம் பல பக்தர்கள் உடல்நலமுற்று பயனடைந்து அவருக்கு நன்றி செலுத்தி வாழ்த்தியுள்ளனர் .
நானும் ஒரு சில பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன் .
இறைவன் எம்.ஜி.ஆர். திருவடியை அடைந்துள்ள திரு.சுரேந்திரபாபு அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .
இன்று (11/10/18) மாலை 4 மணியளவில் அவரது பூத உடல் திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில் உள்ள லால் பேகம் தெருவில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் .
அன்னாரை பிரிந்து வாடும் , அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எனது சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
கற்புடைய எம் ஜி ஆர் ரசிகர்கள்!
-------------------------------------
ஆம் உலகில் இது போன்ற எம் ஜி ஆர் ரசிகர்களை எங்கும் காண முடியாது
திரைப்படத்தில் கதாநாயகி உடன் வந்தாலும் மக்கள் பார்ப்பது மக்கள் திலகத்தை தான்
இன்று வரை அவர்கள் மற்ற படங்கள் பாப்பது அரிது தன் வீட்டிலும் எம் ஜி ஆர் படம் தான்
பெரும்பாலும் பேசுவது எம் ஜி ஆரைப் பற்றி தான்
ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் என் தந்தை லைட் பாயாக வேலை செய்து கொண்டிருந்தார் அன்பே வா படம் முடியும் தருவாயில் எல்லோக்கும் ஐநூறு ரூபாய் கொடுத்தார் என் தந்தைக்கும் கிடைத்தது
அதில் நாங்கள் நான்கு கறவை மாடுகள் வாங்கினோம் வழி வழியாக அதன் முலம் இன்றும் பிழைத்து வருகிறோம்
ஒருவர் பொங்கல் திருநாளில் பல தலைவர்களை குறிப்பிடுகிறார் எம் ஜி ஆரை பற்றி குறிப்பிடவில்லை
அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன் மக்கள் திலகத்தை குறிப்பிடாததால் தூக்கி எறிந்து விட்டேன்
மக்கள் திலகம் பொங்கல் பண்டிகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார் என்று உலகறிந்த விஷயம்
தன் அறிவாற்றலை காட்ட வேண்டுமா? எம் ஜி ஆரை பற்றி தேடு பெரிய வெள்ளை காகிதத்தில் பூதக் கண்ணாடி கொண்டு பல மணிநேரம் தேடுவது அதிலும் ஆயிரம் முறை கண்களை துடைத்து கொண்டு
ஏதேனும் மூலையில் சிறிய புள்ளி தென்பட்டால் நானும் ரெளடி தான் வடிவேல் பாஷையில் நானும் அறிவாளிதான் என்று பிதற்றிக் கொள்வது
மேலே குறிப்பிட்ட மக்கள் திலகத்தால் வாழ்ந்து கொண்டிருப்போரும்
கற்புள்ள எம் ஜி ரசிகர்கள் இருக்கும் வரை அவர் புகழை அழிக்க முடியாது
மதம் ஜாதி இனம் என்று பாராமல் வாழ்நாள் முழுவதும் ஓவ்வொரு கனமும் ஏழைகளுக்கு உதவிய எங்கள் தலைவனை அறிவாளிகள் என்று பிதற்றிக் கொண்டு திரியும் உங்கள் திறமையை உன்னத தலைவனிடம் காட்டாதீர்கள்!
ஹயாத்!... Thanks Friends...
தினகரன் -11/10/18
http://i63.tinypic.com/2ibbx9u.jpg
தினச்செய்தி -11/10/18
http://i65.tinypic.com/2w6w584.jpg
மனித குல மகான் மக்கள் திலகம் பக்தர், தொண்டர் திரு சுரேபித்தி
சுரேந்திர பாபு மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக...
மறு வெளியிட்டு திரைப்பட காவியங்களுக்கு மதிப்பும், அகிலம் காணா பெருமையும் பெற்று கொடுத்து கொண்டேயிருக்கும் அசல் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "குலேபகாவலி" தினசரி 4 காட்சிகள் (1955 ம் ஆண்டு வெளி வந்த) சென்னை புரசைவாக்கம் பாலாஜி dts யில் வெற்றி நடை போடுகிறது...👍 👌
#உடல் #சுமந்த #எம்ஜிஆர்
(மீள்.....)
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் , அண்ணன் சக்ரபாணியும் சிறு வயதில் கந்தசாமி முதலியார் நாடகக் கம்பெனியில் சேர, அப்போது அங்கு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஒருவர் பெரும் உதவி செய்தார். பெயர் காமாட்சி.
பின்னர் பாகவதர், சின்னப்பா, எம்.கே.ராதா, எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் வரவுக்குப் பின் நாடகங்கள் குறைந்து சினிமா பிரபலமானது. நடிகர் காமாட்சிக்கு நடிப்பு வாய்ப்பு குறைந்து பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இவர்தான்
"உன் கண் உன்னை ஏமாற்றினால் " - படம் -வாழ்க்கை,
"புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே "
, "ஓ ரசிக்கும் சீமானே வா" படம் -- பராசக்தி,
"தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டு " படம்_ அமரதீபம்,
"சிற்பி செதுக்காத பொற்சிலையே" - படம் -எதிர் பாராதது
ஆகிய சிறந்த பாடல்களை எழுதிய காமாட்சி என்கிற கவி கே.பி. காமாட்சி.
புரட்சித் தலைவர் எம். ஜி ஆர் தன் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்திற்கு பாட்டெழுத , காமாட்சி செய்த நன்றியை மறவாமல் கவி கே.பி. காமாட்சியை தமக்கு கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் சேர பெரிதும் உதவி செய்ததற்கு நன்றிக்கடனாக பாடல் எழுத அழைத்திருந்தார்.
எம் ஜி ஆரை சந்திக்கச் சென்ற காமாட்சிக்கு இருந்த குடிப் பழக்கத்தினால் நாடோடி மன்னன் படத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் எம்ஜிஆர் எதுவும் சொல்லாமல் அனுப்பி விட்டார்.
சில நாட்களுக்குப் பின் கவி.காமாட்சி காலமாகிவிட விஷயத்தைக் கேள்விப்பட்ட எம் ஜி ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி, கே.ஆர்.ராமசாமி போன்றவர்கள் காமாட்சி வீட்டிற்கே வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காமாட்சியின் உடல் அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைக்கப்பட்டது. உடலைத் தூக்கிச் செல்லக் கூட சரியான ஆட்கள் இல்லை. இதை கவனித்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் சிறிதும் யோசிக்கவில்லை.
உடல் வைக்கப்பட்ட பாடையின் முன்புற கைப்பிடியை பற்ற அடுத்த கைப்பிடியை என்.எஸ்.கிருஷ்ணன் தூக்கிக் கொண்டார். பின்புறம் கே.ஆர்.ராமசாமியும் ,வி.கே.ராமசாமியும் தூக்கிக் கொண்டார்கள். சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூக்கி வந்த எம் ஜி ஆர், என்.எஸ்.கே ஆகிய நால்வரும் கண்ணம்மாபேட்டையில் வந்து தான் இறக்கினார்கள்.
அங்கு போயும் எம்.ஜி.ஆர் சும்மா இருந்தாரா. காமாட்சியின் உறவினர்கள் யார் எனக் விசாரித்தார். அங்கே இருந்த தயாரிப்பாளரும், கதைவசனகர்த்தாவும், இயக்குநருமான கலைஞானம்
"நான் தான் அவருடையதம்பி "என்றார்.. "
"காமாட்சி அண்ணன் ஏதாவது கடன் எவச்சிருக்காரா "? என்றார் எம் ஜி ஆர்.
"ஆயிரம் ரூபாய் கடன் இருக்குதுங்கண்ணே" என்றார் கலைஞானம்.
" நாளைக்கு வந்து ஆபீஸ்ல வாங்கி கொண்டு போய் கடனை அடைத்து விடுங்க" என்றார் மக்கள் திலகம்.
அதே போல் அடுத்த நாள் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ஆபீஸ் சென்ற போது தயாராக ஒரு கவரில் ரூ 1000 போட்டு ரெடியாக இருந்தது. பிணம் தூக்கியது மட்டும் அல்லாமல் கடனையும் அடைத்தார் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்.
இந்த கவி கே.பி. காமாட்சி வேறு யாருமல்ல. பராசக்தி படத்தில் போலி பூசாரி்யாக நடித்தவர் இவர்தான். மேலும் பழைய 1941 அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வீரப்பா செய்த திருடர் தலைவன் வேடம் செய்தவர்..... Thanks Friends...
"தேடிவந்தமாப்பிள்ளை" யாகவந்து ஒரு வாரம் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும்
101000.00 மேல்வசூல்சாதனைசெய்த புரட்சித்தலைவர் வரப்போகும் தீபாவளித்திருநாள் ஜெயிலர் ராஜனாக அவதாரம் எடுத்து வந்து வசூலை வாரிக் குவிக்க ரசிகர்களை மதிக்காத சென்ட்ரல்சினிமாவில் வருகிறார் பல்லாண்டுவாழ்க புரட்சித்தலைவரின் கொள்கையில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...
மிக நீண்ட பதிவு.. பொறுமையாகப் படிக்கவும்..
ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்குள்ளும் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை வெடிக்க வைக்கும் பதிவு!!
நன்றி: திரு. Shyam Shanmugaam அவர்கள்
ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல்..
எம்.ஜி.ஆருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..
நிலவைப் போலே.. பளபளங்குது
நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது
மலரை போலே.. குளுகுளுங்குது
மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்...
ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.
எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.
எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.
135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.
எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.
எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.
எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.
ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.
அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?
'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.
எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.
அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.
முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.
இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?
52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.
இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.
அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.
'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.
ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.
சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.
’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?
சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.
கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.
எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.
நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.
அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.
எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.
அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.
எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.
படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.
அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.
இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.
நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து
மனதை கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு
மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
என்னை தெரியுமோ
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமோ
உங்கள் கவலை மறக்க
கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா
ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...
#புரட்சித்தலைவர்_நூற்றாண்டு... Thanks Friends...
எம்.ஜி.ஆரா….எனக்குத் தெரியாது!
ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.
கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். வள்ளலின் கார் அவரைக் கடந்து செல்கிற போது, வள்ளலின் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.
உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.
“பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.
நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று வள்ளல் வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!
லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.
“இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் வள்ளலிடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிரக்க வைத்து விட்டது.!
வள்ளலின் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகான் வாசனையையும், வைத்து, இது வள்ளலின் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!
அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை வள்ளலைப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.
“நான் தான் எம்.ஜி.ஆர்”
“கேள்விப்பட்டிருக்கிறேன்”
பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.
“என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”
“நான் சினிமாவே பார்ப்பதில்லை. “புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.
போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.
“ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”
“சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. “நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி.
வள்ளல் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.
அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார் வள்ளல்.
இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.
டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.
கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா? என்கிறார். வள்ளலும் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர். அந்த போலீஸ்காரர்கள்.
மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் வள்ளல், போலீஸ்காரர் மறுக்கிறார்.
“நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த வள்ளலின் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர். பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்... Thanks Friends...
M.G.R.பற்றி!!
நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் ஒரு துக்க வீட்டிற்கு ஹைதராபாத் சென்றிருந்தப் பொழுது , அங்கேயே மாரடைப்பால் காலமானார் . அவரது மறைவுச் செய்தி மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .
தேங்காய் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு மரியாதை செலுத்த வரும் நிலையில் மக்கள் திலகத்தின் உடல் நிலை இல்லை என்பதால் , ஜானகி அம்மையார் மட்டும் மரியாதை செலுத்த வருவார் என்றும் , அது வரை இறுதி ஊர்வலம் கிளம்ப வேண்டாம் என்றும் முதலில் தெரிவிக்கப் பட்டது .
ஆனால் திடீர் என்று , மக்கள் திலகமே வருகிறார் என்று தெரிவித்தனர் , அவரும் வந்தார் , நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்தப் பொழுதும் , அங்கே அவர் வந்து தேங்காய் ஸ்ரீநிவாசனுக்கு மரியாதை செலுத்தியதுடன் , அவரது முகத்தை பார்த்தப் படி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் .
பின்னர் கிளம்பும் பொழுது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகனை மட்டும் தனது கார்க்குள் ஏறச் சொன்னார் ... இந்த நேரத்தில் எங்கே அழைத்துச் செல்கிறார் முதல்வர் என்று அனைவரும் புரியாமல் திகைத்து நிற்க , கார் சற்று தூரம் சென்று நின்றது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகன் இறங்கி வந்தார் , அவர் கையில் பொட்டலம் கட்டிய படி பணக் கட்டு
உலகம் சுற்றும் வாலிபன் , படபிடிப்பு , ஹாங்காங்கில் , யார் யாருக்கு என்றைக்கு பிறந்த நாள் என்று மக்கள் திலகம் டைரியில் குறித்து வைத்திருப்பார் , அன்று , நாகேஷின் பிறந்த நாள் ...
அனைவரையும் அழைத்தார் மக்கள் திலகம் , " இன்று இரவு 10 மணிக்கு சின்ன பன்க்ஷன் இருக்கு , எல்லோரும் கலந்துக் கொள்ள வேண்டும்" என்றார் .... என்ன பன்க்ஷன் என்பதையும் அவரே விவரித்தார் .
ஆனால் அன்று இரவு நடந்ததோ , பெரிய பங்க்ஷன் , பணத்தை பற்றியெல்லாம் மக்கள் திலகம் கவலை படவில்லை , நாகேஷுக்கு 9 கற்கள் பதித்த வைர மோதிரத்தை பரிசாக அளித்தார் ... அதை நாகேஷ் தான் இறக்கும் வரை கையில் அணிந்திருந்தார்
எங்க வீட்டு பிள்ளை , படத்தை தயாரித்தவர் நாகிரெட்டி , படம் 100 நாட்களையும் தாண்டி மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விட்டது ... இவ்வளவு பெரிய வெற்றியாக இந்தப் படம் அமைந்திடும் என்று எதிர்பார்கவில்லை , அதனால் உங்களுக்கு பேசிய சம்பளத்தை விட அதிகமாக தனியாக ஒரு தொகையை தரப் போகிறேன் , நீங்க அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் திலகத்திடம் நாகி ரெட்டி வற்புறுத்த ...
"சரி , அந்தத் தொகையை வாகினி ஸ்டுடியோ ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுங்கள் " என்று கூறி விட்டார் மக்கள் திலகம்
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும் பொழுதும் , தன்னுடைய சம்பளத்தை பெறுவதற்கு முன்னர் , திரைப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து ஊழியர்கள் , நடிகர்கள் , டெக்னீஷியன்களையும் தனித் தனியே அழைத்து , அவர்களுக்கான சம்பளம் எவ்வளவு , அது முழுவதுமாக வந்து விட்டதா என்று விசாரிப்பார் மக்கள் திலகம் ...
அதுமட்டுமில்லாமல் , சம்பளம் 5000 என்றால் , தயாரிப்பாளரை அழைத்து 7000 என்று கொடுக்கச் சொல்வார் , அதை எந்த தயாரிப்பாளரும் மீற முடியாது ...
அனைவருக்கும் சம்பளம் வந்து விட்டது என்று அறிந்துக் கொண்ட பின்னரே , தனது சம்பளத்தை பெற்றுக் கொள்வார் மக்கள் திலகம் .... Thanks Friends...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 20 நிமிடம் மட்டும் தோன்றும் அவசர போலீஸ் 100 17-10-1990 அன்று வெளியானது.சென்னை அலங்கார் 58 நாள் மகாராணி 44 நாள் வசந்தி 58 நாள் கமலா 51 நாள் ஓடியது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த 135 வது படமாக வெளிவந்த அவசர போலீஸ் 100 சென்னை அலங்கார் திரையரங்கில் திரு.பாஸ்கர் திரு.பிரஸ் பெருமாள் தலைமையில் இயங்கும் கலை வேந்தன் எம்ஜிஆர் அறக்கட்டளை 135 ஸ்டார் கட்டி தியேட்டரில் சாதனை செய்தார்கள்.... Thanks Friends...
நமது தமிழக அரசுக்கு எம்.ஜி.ஆர் பக்தர்கள் விடுக்கும் ஒரு அன்பான மற்றும் பணிவான வேண்டுகோள். தலைவர் எம்.ஜி.ஆர் மீது அளவு கடந்த பக்தி,மரியாதை வைத்துள்ளோம்.நூற்றாண்டு கடந்தும் இன்னும் அவரை தெய்வமாகவே நினைத்து கோவில்கள் கூட கட்டி வணங்கிவருகிறார்கள்.ஆக இரட்டை இலை எம்.ஜி.ஆர் பக்தர்கள் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் கணிசமாக உள்ளனர். நமது அரசு மதுரைக்கு எம்.ஜி.ஆர் பஸ்ஸ்டாண்ட்,கோயம் பேடுக்கும் எம்.ஜி.ஆர் பஸ்டான்ட் பெயர் வைத்தது மகிழ்ச்சி.தலைவர் மீது பற்று வைத்துள்ள விசுவாசிகள் அரசில் உள்ளனர் என்று இந்த பொருளில் நாங்கள் மகிழ்கிறோம். கோயம்பேடுக்கு ' புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேரூந்து நிலையம்'என்று பெயர் சூட்டப்பெற்றுள்ளது. நமது தலைவரை நாம் ஒரு மாபெரும் கட்சியின் தலைவராக அழைத்த பெயர் புரட்சித்தலைவர்.ஆனால் இன்று அவர் இந்தியாவுக்கும் உலகுக்கும் உயர்ந்த மக்கள் செல்வாக்கு பெற்றவர் ஆனதால் அவரை பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் என்று பெயர் வைத்தலே சாலச்சிறந்தது.அவர் நமக்கு மட்டும் சொந்தமல்ல.இந்த உலகுக்கே சொந்தம்.அவரை பாரதரத்னா என்று தான் உயர் இடத்தில் வைத்து நினைவு கூறவேண்டும். தமிழகத்தில் சேலம்,திருநெல்வேலி பேரூந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயர்சூட்டப்பெற்றுள்ளது.ஆனால் "பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேரூந்து நிலையம்" என பெயர் வைத்த முதல் பெருமை நெல்லைக்கே சேரும்.அதே போன்று கோயம்பேடுக்கு அரசு சார்பாக பெயர் வைக்கும்போது பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேரூந்துநிலயம்" என்று பெயரில் சிறு மாற்றம் செய்து வைக்கும் படி எம்.ஜி.ஆர் பக்தர்களின் பேரில் வேண்டுகிறோம். தொடர்ந்து தலைவர் பெயரை புதிய மெகா அரசு கட்டிடங்களுக்கும் பெயர்வைத்து புகழகாரம் சூட்டவேண்டுகிறோம்.நாம் தலைவருக்கு நன்றிக்கடன் இதுவரை செலுத்தியது போதாது. இன்னும் நினைவு கூறவேண்டும். பாசமுள்ள..., எம்.ஜி.ஆர் பக்தர்கள், நெல்லை -தூத்துக்குடி மாவட்டங்கள்... Thanks Friends...
*17-10-1972 மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், எம்ஜிஆர் அவர்கள், தனியாக கட்சி துவங்கிய நாள் இன்று. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயரிடப்பட்டு, பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது... *💐✌🏻🙏🏻. .... Thanks Friends...
விசேஷ அழைப்பின் பேரில், நமது மக்கள் திலகம் சென்று வந்த அயல் நாட்டு பல்கலை கழகங்கள் :
1. விஸ்கான்ஸின் பல்கலைகழகம்
2. சிகாகோ பல்கலைகழகம்
3. சான்பிரான்ஸிஸ்கோ பல்கலைகழகம்
4. கலிபோர்னியா பெர்ச்சவி பல்கலைகழகம்
5. சான்டியாகோ பல்கலைகழகம்
6. நியூ யார்க் பல்கலைகழகம்
7. பென்சில்வேனியா பல்கலைகழகம்
8. பிலடெல்பியா பல்கலைகழகம்
9. அரிசோனா பல்கலைகழகம் .... Thanks Friends...
மக்கள் திலகமே
நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை
திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்
திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்
உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்
தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்
தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்
குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்
வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்
வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்
கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்
தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்
உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்
தரக்குறைவான வசனங்களை பேசாதவர்
எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்
இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்
இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....
நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து
எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்
நல்ல மனிதர்க்கு விளம்பரம் தேவையில்லை என்பதை உணர்த்தியவர் பொன்மன செம்மல்... Hats Off... Thanks Friends...
தன்னை தூக்கியெறிந்த கட்சியை, தான் இருக்கும் வரை ஆட்சிக்கு வரவிடாமல் செய்தவர் யார்?! அவர்தான் பொன்மனச்செம்மல்... இன்றைக்கும் இவர்தான் cm., அவர் புகழ் ஒன்றே என்றும் வெற்றியடைய ஒரே வழி...👍 👌👍👍👌
சர்வதேசம் ... உலகம்... அண்டம்... பேரண்டம்... பிரபஞ்சம்... 17-10-1972 முதன் முதலாக திரைப்பட நடிகர், அரசியல் கட்சி இயக்கம் தொடங்கி பொதுமக்கள் பேராதவுடன் ஆட்சியை ஏற்படுத்த சரித்திர சகாப்தம் படைக்க வித்திட்ட திருநாள் இன்று...👌 👍
அன்பு சகோதரர்களுக்கு வணக்கம். வாழ்நாள் முழுவதும், தன் மனசாட்சிப்படியும், தர்மத்தின்படியும் வாழ்ந்து வெற்றிக்கொடி நாட்டிய உத்தமத்தலைவர் புரட்சித்தலைவர், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை துவக்கிய நாள், இன்று. நாம் பிச்சை கேட்காமலேயே, இந்திய நாட்டின் உயர் விருதான 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு மனமுவந்து தனக்கு அளிக்கும் அளவுக்கு, தன் கலையுலக மற்றும் அரசியல் உலக எதிரிகள் ஆச்சரியப்படும்படி, வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.
அந்த மாபெரும் தலைவரை வணங்கி, அவருடைய தம்பிகளாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
நன்றி.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை...... Thanks Friends.. 👍👌
தங்கத்தை உருக்கி என்னநகைசெய்தாலும் அதுஅழகாகவேஇருக்கும் அதுபோல்தங்கமான மனம்படைத்த தம்பி திரு ராமச்சந்திரன் இன்று திரையுலகில் முன்னணி நடிகர் அரசியலில் நாளை ஜொலிப்பார். பேரறிஞர் அண்ணாவின் வாக்கு பொய்யாகுமா நூறுநாட்கள் ஓடும்படமென்று தலைவரின் அரசியல் கட்சி ஆரம்பத்தில் வாயாடியவர்களின் தலையைகுனியவைத்து இன்றுவரை நிமிரமுடியாமல் செய்த வெற்றித்திருமகன் புரட்சித்தலைவரின் அ.இ.அ.தி.மு.க 47. வதுஆண்டுவெற்றிவிழா இதுதான் தர்மத்தின்வெற்றி மதுரை எஸ். குமார்... Thanks Friends...
மலைபோல்வரும்சோதனை யாவும்பனிபோல்நீங்கிவிடும் நம்மைவாழவிடாதவர்வந்து நம்வாசலில்வணங்கிடவைத்துவிடும் என்றும்புரட்சித்தலைவரின் கொள்கையில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks...
தோல்வியே எதிரிக்கு
பரிசளித்து
பழகியவன்
நான்!
------------------------
மக்கள் திலகத்தின்
நிறைவான ஆட்சி
கலைக்கப்பட்டது
சந்தர்ப்ப வாதிகள்
வெளியேறினர்
நெஞ்சிலார்
நாஞ்சிலாரும்
வெளியேறினார்
நண்பரைகாண
மதுரை சென்றேன்
ஜங்ஷனில்
ஏணி கூட
வசதி இல்லாமல்
தொண்டன் ஒருவன்
குனிய அவன்
முதுகில் ஒருவன்
நின்று கொண்டு
போஸ்டர் ஒட்டுகிறான்
தலைவா
யார் எப்பக்கம்
சென்றாலும்
கவலையில்லை
நாங்கள் என்றும்
உன் பக்கம் தான்
தொண்டனின்
உணர்ச்சி
போஸ்டரின்
வாசகம்
இன்றும்
கண்கள்
குளமாகின்றன!
ஹயாத்!... Thanks Friends...
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!
இன்று அனைத்திந்திய அண்ணா திமுகவை புர*ட்சித்த*லைவ*ர் 1972 அக்டோப*ர் 17ல் துவ*க்கிய நாள்! 1973ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்த*ல் வெற்றி, கோவை பாராளுமன்ற தேர்த*ல் வெற்றி, ப*ட்ட*தாரிக*ள் ச*ங்க தேர்த*ல் வெற்றி, 1974ல் பாண்டிச்சேரி ச*ட்ட*மன்ற தேர்த*ல் வெற்றி, 1977ல் பாராளுமன்ற தேர்த*ல் வெற்றி என சொல்லிக்கொண்டே போக*லாம். இந்த* வெற்றிகள் அனைத்தும் மக்கள் திலகத்திற்கு சாதார*ணமாக கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற சோத*னைக*ளையும், வேத*னைக*ளையும் தாண்டி ஒவ்வொரு த*டைக்க*ற்க*ளையும் த*ன் வெற்றிக்கான ப*டிக்க*ற்க*ளாக மாற்றி உச்ச*த்தை அடைந்தார்.
அத*ற்கு முக்கிய கார*ணம் ஏழைமக்களும், ந*டுத்த*ர மக்களும், தாய்மார்க*ளும் மக்கள் திலகத்தின் நேர்மைமீது வைத்திருந்த அசைக்க முடியாத* ந*ம்பிக்கை. மக்கள் திலகமும் இறுதிவ*ரை த*ன்னை நேசிக்கும் மக்கள்மீது உண்மையான அன்பு கொண்டிருந்தார்.
1977ல் பாராளுமன்ற தேர்த*லில் இந்திரா காங்கிர*ஸ் உட*ன் எம்ஜிஆர் கூட்ட*ணி வைத்தபோதும் சிலமாத*ம் க*ழித்து ந*ட*ந்த ச*ட்ட*மன்ற பொதுத்தேர்த*லில் காங்கிர*ஸ் கூட்ட*ணியில் கிடையாது. மார்க்சிஸ்ட் க*ம்யூனிஸ்ட், பார்வேர்ட் பிளாக், முஸ்லீம் லீக் க*ட்சிக*ளை மட்டும் இணைத்துக் கொண்டு தேர்த*லை ச*ந்தித்து அதிமுக 130 இட*ங்க*ள், கூட்ட*ணி க*ட்சிக*ள் 14 இட*ங்க*ளையும் கைப்ப*ற்றி ஆட்சிய*மைத்தார்.
1980ல் ந*ட*ந்த ச*ட்ட*மன்ற தேர்த*லிலும் சிபிஐ, சிபிஐ(மா), காம*ராஜ் காங்கிர*ஸ் (நெடுமாற*ன்), காந்தி காமராஜ் தேசிய காங்கிர*ஸ்(குமரி அன*ந்த*ன்), பார்வேர்ட் பிளாக், அர்ஸ் காங்கிர*ஸ் ஆகிய க*ட்சிக*ளை இணைத்துக்கொண்டு க*ளம் க*ண்டார். அண்ணாதிமுக அணி 162 இட*ங்க*ளில் வென்று 2வ*து முறை ஆட்சி அமைத்தார்.
1984ல் அமெரிக்காவில் சிகிச்சைக்கு அனுமதிக்க*ப்ப*ட்ட* போது ந*ட*ந்த தேர்த*லில் இருந்துதான் இந்திராகாங்கிர*ஸுட*ன் ச*ட்ட*மன்ற தேர்தலுக்கு கூட்ட*ணி வைக்க*ப்ப*ட்ட*து. அப்போது அண்ணாதிமுக அணி 195 இட*ங்களை வென்று அண்ணாதிமுக மூன்றாம் முறையாக தொட*ர்ந்து ஆட்சியை பிடித்த*து.
வெற்றிச் ச*ரித்திர*ம் தொட*ர*ட்டும்! 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணாதிமுக நூறாண்டைக் காண வாழ்த்துகிறேன்...... Thanks Friends...
திமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர் கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.
ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும். அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர்.
அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.
அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.,அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தது.
நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர்.
அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது? என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.
அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.
மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை பற்றி உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சிதலைவர்
உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள். காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.
காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர், ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.
காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.
இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேள்வியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயம்தான்.
மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்…!!!.... Thanks Friends...
#த*மிழ*க*த்தின் அக்டோப*ர் புர*ட்சி#
தமிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். அடுத்த ஒரு வார*த்தில் அக்டோப*ர் 17ல் அண்ணா திமுக*வை துவ*க்கினார்.
புர*ட்சித்த*லைவ*ர் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதன்முறையாக எம்.ஜி.ஆர், கருணாநிதிக்கு எதிரான ஒரு உரையை நிகழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் அது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதே தினத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக சொந்தக்கட்சியின் தலைவர்கள் மீதே எம்.ஜி.ஆர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் பேச்சை கருணாநிதிக்கு உளவுத்துறை அனுப்பிவைத்தது. கோபம் கொண்டார் கருணாநிதி.... 8.10.1972 அன்று எம்.ஜி.ஆர் பேசிய அந்தப்பேச்சின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் திராவிட இயக்கத்தில் அ.தி.மு.க என்ற புதிய கட்சி உதயமானது. அரசியலில் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் அரங்கேறின. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்தப்பேச்சு இதுதான்....
“திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.
‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!
உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்துக்கு உரியவர்கள்!
முன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.
அப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தது பழக்கம்! ஆனால், யாரை என்றே தெரியவில்லை.
கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக்கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.
கடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.
கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.
ஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்கவேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.
இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்துகொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?
கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?
ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு!
இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.
மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.
நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம்!
இதுவே அந்த* வீர* உரை!
ந*ன்றி: இனிய*ன் கிருபாக*ர், பூமிநாத*ன் ஆண்ட*வ*ர்..... Thanks Friends.......
அனைத்து மக்கள் திலகம் அபிமானிகள் எல்லோருக்கும் இனிய "சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை" நல்வாழ்த்துக்கள்...
எந்த அளவுக்கு தி மு க உடான்ஸ் பிறப்புக்களுக்கு அறிவில்லைன்னா … இறந்து முப்பாந்தாண்டுகளாகியும் மக்கள் திலகம் என்கிற பெயரைக்கேட்டாலே இவனுங்களுக்கு ........... போயிடுது … அவர் குரலை மைய்யப்படுத்தி தான் இவனுங்க கேலியும் கிண்டலும் …
மக்கள் திலகத்திடம் ஒரு முறை சிலர் சென்று ஆதங்கப் பட்டார்களாம் .... தலைவரே உங்களை பற்றி கருணாநிதி ... ஊமையன் நாட்டை ஆளலாமா என்று மக்களிடம் மேடை தோறும் கேட்டு வருகிறார் என்று .... அதற்கு மக்கள் திலகம் சொன்னது என்ன தெரியுமா ? ரசிகர் மன்றக் கூட்டத்தை கூட்டுங்கள் என்றார் ... கூடிய மாபெரும் கூட்டத்தில் மக்கள் திலகம் பேசியது சில வார்த்தைகள் தான் .... அதாவது என் ரத்தத்தின் ரத்தங்களே நீங்கள் எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார் .... மேடையில் இருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி ... என்ன தலைவர் இப்படி பேசுகிறாரே என்று .... அடுத்த நாள் எல்லா ஊடகங்களிலும் இது தான் தலைப்புச் செய்தி ... கிளம்பினார் கருணாநிதி .... ஒரு முதல்வர் இப்படி பொறுப்பற்ற முறையில் தொண்டர்களை கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லி பேசலாமா என்று மேடைகள் தோறும் கேள்வி எழுப்பினார் .... 2 வாரங்களுக்கு பிறகு மக்கள் திலகத்திடம் ஆதங்கப் பட்டவர்களை மீண்டும் அழைத்தார்
என்னை ஊமையன்னு ஊரெல்லாம் சொன்ன அதே கருணாநிதியை இன்னைக்கு அதே ஊரெல்லாம் சென்று முதல்வர் இப்படி பேசலாமா என்றும் கேட்க வைச்சிட்டேன் பாருங்க .... நான் பேசுவதை அவரே மக்களிடம் ஒப்புக் கொள்கிறார் .... என்றார் ....
அவர் குரல் தேவையில்லை .. இரட்டை விரல் போதும் உங்களை ஓடவிட … போக்கத்த ஈர வெங்காயங்களா... Thanks Friends...
தமிழ்நாடு கல்வியில் முதலிடம் பெற ஆண் சரஸ்வதி ஆக மேற்கல்வி கடவுளாக அருளினார் எம்.ஜி.ஆர்., பள்ளியில் மேற்கல்வி ப்ளஸ் டூ அறிமுகம் செய்து எளிமை படுத்தினார், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதி தாசன் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தி தமிழர்களை இந்தியாவிலேயே கல்வியில் முதலிடம் காண செய்தார் எம்.ஜி.ஆர்., வணங்குவோம் அவரை ... வளர்க, நீடுழி வாழ்க எம்.ஜி.ஆர்., புகழ்...
கழகம் தோன்றிய தினத்தை கொண்டாடும் போது உயிரைகொடுத்த தொண்டனின் தியாகத்தை சொல்லணும் முதல் தியாகி வத்தலகுண்டு ஆறுமுகம்
,
இந்த நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில், 1971–ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாங்கம் என்னும் தி.மு.க. எம்.பி. மரணமடைந்தார். அதனால் அங்கே இடைத்தேர்தல் 1973ம் ஆண்டு நடைபெற இருந்தது.
திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதை ஆதரிப்பதும் உறுதியாகி விட்டது.ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதும் உறுதியாகிவிட்டது. அதைச் சுதந்திராக்கட்சி ஆதரித்தது.இந்த நிலையில் புரட்சித்தலைவர் என்ன செய்யவிருக்கிறார்? என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
புரட்சிதலைவரோ ஆறுமாத குழைந்தை அதிமுகவை கையில் ஏந்தி தனித்துபோட்டி என்று அறிவித்துவிட்டு மாயத்தேவர் என்பவரை வேற்பாளராக அறிவித்துவிட்டு பிரச்சாரம் செய்ய கிளம்பிவிட்டார் !!
திண்டுக்கல் தொகுதிக்குப் பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து தேர்தல் பணியாற்றினர். அண்ணா தி.மு.க. கூட்டங்களில் கல்லெறிந்தனர்; அடி தடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்; அ.தி.மு.க. தொண்டர்களைக் கண்ட இடங்களில் வெட்டினர். கை கால்களை உடைத்தனர்; பிரச்சார வேன்களைக் கவிழ்த்தனர். வாக்காளர்களை அச்சுறுத்தினர்; இந்த வெறியாட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதியில் முதன்முதலில் களபலியானவர் வத்தலகுண்டு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரான ஆறுமுகம் ஆவார்.
இரத்த வெள்ளத்தில் பிணமாகி மிதந்த அவரைக் கண்ட பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ”பதிலுக்குப் பதில்! பழிக்குப் பழி!” என்று கிளம்பிவிட்டனர். அந்தச் செய்தியை அறிந்ததும், எம்.ஜி.ஆர் விரைந்து சென்று, கம்பும் கழிகளும் அரிவாளும் தாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கில் திரண்டு விட்ட அ.தி.மு.க. தொண்டர்களை வழிமறித்ததார்.!!கம்பால் அடித்தால் மறந்துவிடுவார்கள் மாயதேவரை வெற்றி பெறசெய்து அவர்கள வாழ்கையில் மறக்கமுடியாத வலியை ஏற்படுத்தவேண்டும் என்றார் அவர் காலம் வரை திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை மட்டுமல்ல பெரிய அளவில் எதிர் கட்சியாககூட சோபிக்க முடியவில்லை... Thanks Friends...