உத்தமபுத்திரன் ரீலிசுக்காக காத்திருக்கும் *ஜெனிலியா
காக்க காக்க படத்தின் இந்தி ரீ-மேக்*கில், தமிழில் ஜோதிகா நடித்த கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் நடிகை ஜெனிலியா, அந்த படத்தைவிட தீபாவளிக்கு தமிழில் ரீலிஸ் ஆகவிருக்கும் உத்தமபுத்திரனைத்தான் ரொம்பவே எதிர்பார்க்கிறாராம். இந்தி காக்க காக்கவில் நாயகனாக நடிப்பவர் ஜான் ஆபிரகாம். டைரக்டர் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை தயாரிப்பவர் விபுல் ஷா. இவர் ஏற்கனவே மெகா தோல்வி படமான லண்டன் ட்ரீம்ஸ் படத்தை தயாரித்திருக்கிறார். விபுல் ஷாவும், லண்டன் ட்ரீம்ஸ் படத்தின் நாயகியான அசினும் ரொம்பவே நெருங்கி பழகியதால் இந்தி காக்க காக்கவின் நாயகியாக அசினே நடிக்கக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் சத்தமில்லாமல் ஜெனிலியா சூட்டிங்கிற்கு தயாராகி விட்டார். தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன காக்க காக்க இந்தியிலும் வெற்றிப்படமாக அமையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தீபாவளி தினத்தில் தமிழில் ரீலிஸ் ஆகவிருக்கும் உத்தமபுத்திரனைத்தான் ரொம்பவே எதிர்பார்க்கிறேன். அந்த படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறேன் என்று ஜெனிலியா கூறி வருகிறார். இந்த தீபாவளி தனக்கு ஸ்பெஷல் தீபாவளியாக இருக்கும் என்றும் ஜெனிலியா கூறுகிறார்.