கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 23
கே: நடிப்பிலே போதிய தேர்ச்சி இல்லாத மஞ்சுளா, உஷாநந்தினி போன்ற நடிகையருடன் சிவாஜி இணைந்து நடிக்கத் தான் வேண்டுமா? (மதுரைவாலா, தாராபுரம்)
ப: அவர்கள் இருவரும் வளர வேண்டிய நடிகைகள், போகப் போக வளர்ச்சியை நடிப்பில் காட்டும் ஆர்வம் கொண்டவர்கள். சிவாஜி இவர்களுடன் நடித்து, நடிப்பு சொல்லிக் கொடுத்து, தைரியமூட்டி இவர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டுகிறார். இன்னாருடன் தான் நடிக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்திருந்தால், பல நடிகைகள் முன்னுக்கு வந்திருக்க முடியாது தெரியுமோ!
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1974)
அன்புடன்,
பம்மலார்.