Rakesh, its from "Celebration of 75 Years of Tamil Cinema" featured in Galatta Cinema magazine.
Printable View
Rakesh, its from "Celebration of 75 Years of Tamil Cinema" featured in Galatta Cinema magazine.
Good news. Can we expect a Chennai release ???Quote:
Originally Posted by RAGHAVENDRA
And, any news about Karnan & Gowravam, sir ? When is it getting released here ???
சென்ற வாரம் ஜெயா டி.வி.யின் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரமேஷ் கண்ணா கலந்துக் கொண்டு பாடல்களை வழங்கினார். ஒவ்வொரு ஹீரோவிற்கும் வித்தியாசமான பாடல்களை [திரும்ப திரும்ப எல்லா சிறப்பு விருந்தினர்களும் சொல்லும் பாடல்கள் இல்லாமல்] ஒளிப்பரப்பினார். நடிகர் திலகத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட பாடல் இருவர் உள்ளம் படத்திலிருந்து இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா பாடல். மேலோட்டமாக கதையை சொல்லிவிட்டு அந்த பாடலின் சூழலுக்கு வந்தார்.
நாயகனின் கடந்த கால நடவடிக்கையால் அவனை வெறுக்கும் நாயகி சூழ்நிலை காரணமாக அவனை மணக்க நேரிடுகிறது. திருந்தி விட்ட அவனை நம்பாமல் அவனிலிருந்து விலகி வாழும் நாயகி, அவளாக மனது மாறி வரட்டும் என காத்திருக்கும் நாயகன், இவை எதுவும் தெரியாத நாயகனின் பெற்றோர் மற்றும் அண்ணன், அவர்களுக்கு முன் நடிக்கும் நாயகன் நாயகி, வீட்டில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சியில் நாயகியை பாட சொல்ல அவள் தன் மனதின் உணர்வுகளை தன்னையறியாமல் பாடலின் மூலமாக வெளிப்படுத்த நாயகன் பரிதவிக்கிறான், இது புரியாமல் பாடலை ரசிக்கும் உறவினர் மற்றும் நண்பர் கூட்டம். தர்மசங்கடமான சூழலில் தவிக்கும் நாயகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பாலாஜி உன் மனைவி பிரமாதமாக பாடுகிறாள் என்று சைகையில் சொல்ல முகத்தில் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையை காட்டி விட்டு உடனே இந்த பக்கம் திரும்பி மீண்டும் பரிதவிக்கும் நடிகர் திலகம், அந்த கண நேர முகபாவ மாற்றம், தவிப்பு, புன்னகை, மீண்டும் தவிப்பு என்று எப்படி மின்னல் போல் வந்து போகிறது!
ரமேஷ் கண்ணா இதை சொன்ன போது, நாம் இந்த திரியில் பல முறை நடிகர் திலகத்தின் நுணுக்கங்களை, nuances என்று சொல்லுவோமே, அதை பற்றி பேசியிருக்கிறோம், அது நினைவிற்கு வந்தது. ரமேஷ் ஒரு கோணத்தில் சொன்னார். இப்படி நடிகர் திலகத்திற்கு இருந்த, இருக்கிற லட்சக்கணக்கான ரசிகர்கள் இது போல ஒவ்வொரு நுணுக்கத்தை சொல்கிறார்கள் என்று சொன்னால் அவர் எவ்வளவு பெரிய நடிப்பு கடல், அதில் இப்படி மூழ்கினால் எத்தனை எத்தனை முத்துக்கள் எடுக்கலாம் என்ற எண்ணமே மனதில் மேலோங்கியது.
அன்புடன்
PS: ரமேஷ் கண்ணா படையப்பா படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நிகழ்ச்சியையும் சொன்னார். " சிவாஜி சார் ஒரு நாளைக்கு எங்க டைரக்டரை கூப்பிட்டு என்னை சுட்டிக் காட்டி அவன் பெயர் என்ன என்று கேட்டார். நான் ஏதோ அதிகபிரசங்கித்தனமாக பேசி விட்டேனோ என்று பதறிப் போன எங்க டைரக்டர் [KS ரவிகுமார்] ஏன் சார் என்று கேட்க ஒண்ணுமில்லடா! நம்ம முத்துராமன் பையனோட சேர்ந்து இவன் நடிச்ச படம் ஒண்ணு பார்த்தேன். நல்ல டைமிங் sense இருக்குடா இவனுக்கு! நல்லா பண்ணியிருந்தான் என்று சொன்னார்.
நான் சினிமாவில் வந்ததன் பயனை அன்னிக்கே அடைஞ்சுட்டேன். இனிமேல் எனக்கு என்ன வேணும்?. அந்த பாராட்டின் பெருமை என்னனா அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான்! அவர் எத்தன பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பார்த்திருக்கிறார். என்னை போல ஒரு சின்ன ஆர்டிஸ்ட்டை பாராட்டனுமுனா அதுவும் எல்லோர் முன்னிலையிலும் பாராட்டினர்னு சொன்னா அவர் உண்மையிலே கிரேட் என்று சொல்லி முடிக்கும்போது ரமேஷ் கண்ணா சிறிது உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு சில ரசிகர்களால் இதய ராஜா என்ற இதழ் வெளியிடப்பட்டதும், அதன் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை மண் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்கு வழங்கப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டிருந்தோம். அந்த இதழை படித்து பார்த்த போது பளிச்சென்று கண்ணில் பட்டது ஒரு விளம்பரம். அது ஞான ஒளி படத்தின் விளம்பரம்.
[html:6bd24a9878]
http://farm6.static.flickr.com/5161/...cc1f8d91_z.jpg
[/html:6bd24a9878]
நடிகர் திலகம்தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை பலமுறை பல ஆதாரங்களோடு சொல்லியிருக்கிறோம். இதோ மேலும் ஒரு சாதனை சான்று.
நடிகர் திலகத்தின் BO சாதனைகளைப் பற்றிய ஆதாரங்களைப் பற்றி பேசும் போது இப்போதும் சிலர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் அல்லது, வேறு சிலர் படங்களை விட சிவாஜி படங்கள் வசூல் சாதனை புரிந்தது என்பதை நம்ப முடியவில்லையே என்பார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் முத்தாய்ப்பான ஆதாரமாக இந்த விளம்பரம் உதவும் என நினைக்கிறேன்.
விளம்பரமே self explanatory என்றாலும் சில தகவல்கள். இந்த விளம்பரம் 1972 ஏப்ரல் மூன்றாம் வாரம் சென்னை பதிப்பில் வெளியானது. சென்னை நகரிலும் சுற்றுப்புறங்களிலுமாக நடிகர் திலகத்தின் சுமார் 20 படங்கள் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருந்த சூழலிலும் ஞான ஒளி சென்னை பிளாசா திரையரங்கில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் ஓடியிருக்கிறது [ஞான ஒளி மட்டுமே பிளாசா தவிர மேலும் 4 திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருந்தது]. இது தவிர சென்னை சபாக்கள் தங்கள் உறுப்பினர்களுக்காக மிக அதிகமாக சிறப்பு காட்சிகள் [55 காட்சிகள்] நடத்திய படமும் ஞான ஒளிதான். இவற்றையெல்லாம் தாண்டி இந்தப் படம் இப்படிப்பட்ட சாதனை புரிந்திருக்கிறது என்றால் நடிகர் திலகத்தின் BO பவருக்கு இதை விட ஆதாரம் வேண்டுமா என்ன?
வழக்கம் போல் விளம்பர பிரதியை ஸ்கேன் செய்து அனுப்பியது அன்பு சகோதரர் சுவாமிநாதன் அவர்கள்தான். அவருக்கு நமது மனமார்ந்த நன்றி.
அன்புடன்
டியர் முரளி சார்,
ஞான ஒளி பற்றிய தங்கள் பதிவு என்னை 1972 காலத்திற்கு அழைத்து செல்கிறது.
ஞான ஒளி நாடகத்தின் நூறாவது நாடகத்திற்கு நடிகர் திலகம் தலைமை ஏற்று நடத்தினார். அதே காலகட்டத்தில் அந்நாடகத்தை நடிகர் திலகம் திரைப்படமாக நடிக்கும் செய்தியும் வெளிவந்தது. சொல்லப் போனால் இப்படத்தின் பெயரை வைத்து திருவல்லிக்கேணியில் ஒரு சிவாஜி ரசிகர் மன்றமே இயங்கியது. அவர்கள் பல நற்காரியங்களை அந்தப் பகுதியில் செய்து வந்ததோடு சுற்றுலாக்களையும் நடத்தி வந்தார்கள்.
ஞான ஒளி படமும் வெளிவந்தது. படம் வருவதற்கு முன்னரே தேவனே பாடல் பிரபலமாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் படத்தின் ஸ்டில்கள் படத்திற்கு மற்றொரு விதத்தில் எதிர்பார்ப்பை அதிகப் படுத்தியிருந்தது. மொத்தத்தில் அப்படம் மிகுந்த அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதன் காரணமாக ரசிகர்களின் ஆர்வமும் அதிகரித்திருந்தது.
அந்தக் காலகட்டத்தில் ஓம் விக்னேஸ்வரா கல்சுரல் அகாடெமி புதிய படங்களை முடிந்தவரை முதல் நாள் முதல் காட்சிக்கு முன்னர் பிரத்தியேகக்காட்சியோ அல்லது படம் வெளியான வாரத்தில் வரும் முதல் ஞாயிறு அன்று காலையோ அப்படத்தைத் தன்னுடைய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்வார்கள். அவர்களைத் தொடர்ந்து வேறு சில சபாக்களும் அமைப்புகளும் அதே போல் படங்களைத் திரையிடத் தொடங்கின.
ராஜா படத்திற்கு தேவிபாரடைஸில் காலைக் காட்சி திரையிடப்பட்டது. அப்படம் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருந்தபோதே ஞான ஒளி வெளியீட்டு விளம்பரம் வெளிவரத் தொடங்கியது. சென்னை ஜெயராமன் பிக்சர்ஸ் ஞான ஒளி படத்தை நகரில் வெளியிட்டார்கள். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அப்போது இருந்த அனைத்து சபாக்களும் இத்திரைப்படத்தை திரையிட முன்வந்தனர். கிட்டத்தட்ட 55 காட்சிகள் முதல் இருநாட்களிலும் சபாக்களில் திரையிடப்ப்ட்டன.
ராஜாவின் வெற்றி நடையின் போதே ஞான ஒளி யும் திரையிடப்பட்டு வசூல் வாரிக்குவித்தது.
அந்த நாட்கள் என்றும் பசுமையாக நினைவிருக்கும்.
---
நண்பர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப தங்கை திரைப்படம் நெடுந்தகடாக வெளிவந்துள்ளது.
அன்பு மிக்க மாடரேட்டர் அவர்களுக்கு- இந்த இடத்தில் இப்படத்தைச் செருகுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
http://i872.photobucket.com/albums/a...a/Thangai1.jpg
அன்புடன்
Nt's another best movie
NAam pirandha mann
http://www.youtube.com/watch?v=ePHfKGFPm6I
it has 8 parts.
thanks to arugeirundhal for uploading
ஞான ஒளி படத்தின் விளம்பரம் பல தகவல்களைத் தந்தது.
முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜசோழன் படத்தைப் பற்றி நம் தளங்களில் பேசப் பட்டதா? ராஜராஜசோழன் நடிகர் திலகத்தின் வெற்றிப் படம் தானா?
ராஜராஜசோழன் பற்றி ஏதாவது சுவாரஸ்யமான தகவல் உண்டா?
செல்வா,
ராஜ ராஜ சோழன் படத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம். முதல் சினிமாஸ்கோப் படம் என்பதை தவிர்த்து தமிழகத்தின் தன்னிகரற்ற வரலாற்று வீரனைப் பற்றிய படம் என்பதாலும் டி.கே.எஸ். சகோதரர்களால் நடத்தப்பட்ட நாடகத்தின் திரையாக்கம் என்பதினாலும் எதிர்பார்ப்பு கூடியது. அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் முதன் முறையாக ஆனந்த் தியேட்டர் உமாபதி தயாரிக்கிறார் என்பதும் இதற்கு வலு சேர்த்தன.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கும் சரி, பொது மக்களின் எதிர்பார்ப்பிற்கும் ஏற்றவாறு படம் அமையவில்லை என்பதே உண்மை. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை சதி வேலை மூலமாக கைப்பற்ற நினைக்கும் அயல் நாட்டு ஒற்றனின் சதி வலைகளும் அதை சாமர்த்தியமாக முறியடிக்கும் சக்ரவர்த்தியின் சாகசங்களும் ஒரு மேடை நாடகத்திற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய திரைப்படத்திற்கு அது போதாது என்பதை ஏ.பி.என். மறந்து விட்டார். அது போலவே குந்தவை விமலாதித்தன் காதலும் அதற்கு தோன்றும் எதிர்ப்பும். பின்னாளில் யோசிக்கும் போது அது அந்த காலக் கட்டத்தில் ஏ.பி.என்ற்கு இருந்த மன நிலையே காரணம் என்று தோன்றுகிறது. அதாவது தில்லானாவிற்கு பிறகு வா ராஜா வா, திருமலை தென்குமரி, கண்காட்சி என்று சின்ன பட்ஜெட் படங்களாக அவர் எடுத்தார். அந்த மனோநிலையில் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படம் அவரால் செய்ய முடியவில்லை என்றே தோன்றுகிறது. மேலும் நாடகத்தை அப்படியே திரைக்கதை ஆக்கியதும் ஒரு காரணம்.
படம் பாக்ஸ் ஆபீஸைப் பொறுத்தவரை பெரிய சாதனைப் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சென்னை மதுரை திருச்சி சேலம் போன்ற ஊர்களில் நூறு நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொட்டது. நகரங்களிலிருந்து கீழே உள்ள ஊர்களிலும் நல்ல வசூலை கொடுத்தது. குறிப்பாக மறு வெளியீடுகளில் நல்ல விலைக்கு விநியோகஸ்தர்களால் வாங்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு வசூலும் இருந்தது.
படத்தைப் பற்றிய விமர்சனம் இங்கே பெரிய அளவில் பேசப்படவில்லை.
அன்புடன்
இரு நண்பர்கள். இருவரும் முன்னாள் ராணுவ வீரர்கள். முதலாமவர் முகாமில் இருக்கும் போது ஒரு ஆதிவாசிப் பெண்ணைக் காதலிக்கிறார். மொழி தெரியாமலேயே பழகும் இருவரிடமும் காதல் மலர்ந்து அப்பெண்ணுக்குத் தன் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார். மற்ற நண்பர் இந்தக் காதலுக்கு உதவியாயிருக்கிறார். போரின் உச்சத்தில் குண்டு மழை பொழிய, அந்தக் காதலி இறந்து விட்டதாக நினைத்து விடுகிறார்கள் நண்பர்கள். நண்பர்களும் வெவ்வேறு முகாம் சென்று அப்படியே பிரிந்து விடுகிறார்கள்.
காலம் மாறுகிறது. அந்தக் காதலியை தற்செயலாக நண்பன் சந்திக்கிறான். போர்க்காலத்தில் ஒரு விபத்தில் அவனுடைய ஒரு கால் ஊனமாகிறது. நண்பனின் காதலியோ உயிரோடு இருக்கிறாள். அவளைத் தான் இருக்கும் தாய்நாட்டின் தலைநகருக்கு அழைத்து வருகிறான். அவளுடைய காதலனை எப்படியாவது கண்டு பிடித்து சேர்த்து விடுவதாகக் கூறுகிறான்.
வந்த ஊரில் அவனுக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. இதற்கு மத்தியில் ஒரு இளம் பெண்ணின் கார் பாதி வழியில் நின்று விட அந்தக் காரை சரி செய்ய உதவி அவளை அனுப்புகிறான்.
எதேச்சையாக நண்பனை வழியில் பார்க்கிறான். அவனிடம் காதலியைப் பற்றிக் கூற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவனை அணுக, காதலனோ தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அவனிடம் காதலியைப் பற்றிச் சொல்ல முற்படும் போது இடைஞ்சலாக நண்பனை அப்பா என்று கூறிக் கொண்டே ஒரு சிறுவன் வருகிறான். அவனுக்குப் பேரிடி... அப்போது தான் முதன் முறையாக தன் நண்பன் கல்யாணமாகி குழந்தையும் உள்ளவன் என்று தெரிந்து கொள்கிறான். நண்பனின் மனைவியின் சகோதரி வருகிறாள். அவளை காதலன் அறிமுகப் படுத்துகிறான். அவள் தான் அவன் கார் ரிப்பேர் செய்து தந்த பெண். பின்னர் மீண்டும் நண்பனின் காதலியைப் பற்றி சொல்ல எத்தனிக்கிறான். இதற்குள் நண்பனின் மனைவியும் வர அவளையும் அறிமுகப் படுத்துகிறான் காதலன். இவனுக்கு இதயம் உடைந்து விடுகிறது. மிகுந்த மன உளைச்சலடைகிறான். அப்போது காதலன் அவனை மாடிக்கு தன் அறைக்கு அழைத்து சென்று தன் பழைய நினைவுகளைப் பற்றிப் பேசுகிறான். அப்போது சலனமற்று இருக்கும் நண்பனின் முகம், காதலன் தன் காதலியைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போது மெல்ல ஆர்வத்தைக் கூட்டுகிறது. பின்னர் அவளிடம் தன்னுடைய காதலியைப் பற்றி மிக மனம் வருந்தி காதலன் பேசும் போது இவனுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி ஏற்படுகிறது, அவளை இன்னும் மறக்காமல் இருக்கிறானே என்று. அடுத்ததாக அவன், தன் காதலி இறந்து விட்டதாக சொல்ல, இவன் இல்லை இல்லை, அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என சொல்ல எத்தனிக்கும் போது நண்பனின் மனைவி காபியுடன் வருகிறாள்.
சொல்ல வந்ததை சொல்லாமலேயே நண்பன் கிளம்புகிறான்.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு முழுவதும் அவருடைய முகத்தில்... எத்தனை உணர்வுகள், எத்தனை வேறுபாடுகள்.
முகம் ஒன்று உணர்வுகள் பல
நான் மிகவும் என்றென்றைக்கும் ரசிக்கும் காட்சி மட்டுமல்ல,
SUBDUED ACTING என்றால் என்ன என்று விளக்கும் காட்சியும் கூட
இந்தக் காட்சி இடம் பெற்ற படம் பார்த்தால் பசி தீரும்
காட்சியில் நடித்த மற்றொரு நடிகர், ஜெமினி கணேசன்.
அன்புடன்
ராஜராஜசோழன் பற்றி கேட்டவுடன் தகவல்களைத் தந்தமைக்கு மிகுந்த நன்றி.Quote:
Originally Posted by Murali Srinivas
ராஜ் டிவியில் ராஜராஜசோழன் ஒளிபரப்புச் செய்தபோது பார்த்ததாக நினைவு. ஆனாலும் இப்படம் எனக்குப் பிடித்திருந்தது.