-
கலைமன்னன்
சமூக சிற்பி
http://i39.tinypic.com/2dh7cjd.jpg
மக்கள் திலகத்தின் 8 படங்கள், விவரங்கள் தெரிந்தவரை, (18.08.2013) தமிழ் நாட்டில் மக்கள் வெள்ளத்தில் திருவிழாவாக திரையிடப்பட்டது என்ற செய்தி நமக்கு இன்பத்தேன். இந்த திரைப்படங்கள் அன்றும், இன்றும் மக்களால் விரும்பப்படுவதற்கு முக்கிய காரணம் புரட்சித்தலைவர் என்றாலும், இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணிகள் என்ன? நம் இதய தெய்வம் ஆரம்ப காலங்களிலிருந்தே, தன்னுடைய படங்கள் மக்களுக்குத் தேவையான செய்திகளை, நல்ல அறிவுரைகளை சொல்லும் ஊடகமாகத் திகழ வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார். நாம் திறம்பட நடித்தோம், பணம் பெற்றோம், அதோடு நம் பங்கு முடிந்தது என்றில்லாமல், அந்த திரைப்படத்தை எப்படியெல்லாம் பட்டை தீட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் பட்டை தீட்டி, ஜொலிக்க வைத்த நடிகப்பேரொளி நம் மக்கள் திலகம். பட்டை தீட்டியது மட்டுமல்லாமல், பாடல்கள், இசை, வசனங்கள், காட்சி அமைப்புகள், சண்டை காட்சிகள் என ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு, ஒரு சிலையை அழகுடன் ஜொலிக்க ஒரு சிற்பி எவ்வளவு கவனமும், சிரத்தையுடனும் எடுப்பாரோ அந்த அளவிற்கு ஒரு திரைப்படத்தை செதுக்கிய சிற்பி அவர். ஏனெனில் அவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாது, சிறந்த திரைப்பட தொழில்நுட்பக்கலைஞர். மேலும் அதில் சொல்லப்படும் கருத்துகளை நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கும் ஏற்றதாகக் கூறி, எல்லா தரப்பினரையும் கவரும் வண்ணம் மாற்றங்களை செய்து,அந்த திரைப்படங்கள் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தையே ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபட்டாரே அவரை, சமூக சிற்பி என்றாலும் முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசி என்றாலும் தகும்.
http://i44.tinypic.com/14e8avt.jpg
தீர்க்கதரிசி
அதனால்தான் இன்றளவிற்கும் அவருடைய படங்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கிறது. படம் முதல் வெளியீட்டிலிருந்து, இன்று வரை வசூலை அள்ளிக்குவிக்கிறது. தலைவரது திரைப்படங்கள் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது பாசம் வைக்குமே தவிர எந்த காலகட்டத்திலும் மோசம் செய்யாது. அது கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் சரி, வண்ணப்படமாக இருந்தாலும் சரி, அப்படங்கள் வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டத்தையோ, மினிமம் கேரண்டி ராமச்சந்திரன் என்ற நம்பிக்கையையோ எந்த காலத்திலும் வீணாக்கியதே இல்லை. சமீப வெளியீடான முகராசி, மதுரை வீரன், நாடோடி மன்னன் மற்றும் உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன்.................. இன்னும் பல திரைப்படங்கள் இதற்கு உதாரணங்கள். இடைவெளி இல்லாமல், தினசரி விளம்பரம் இல்லாமல் நம் தெய்வத்தின் திரைப்படங்கள் சாதிக்கும் சாதனைக்கு ஈடிணை உண்டோ?
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
-
100 % உண்மை திரு கலியபெருமாள் சார்
இந்த இரண்டு வாரத்தில் மட்டும் நெல்லையில் ஒரு தாய் மக்கள் விழா
கோவையில் உரிமைக்குரல் விழா உடனே நினைத்ததை முடிப்பவன் விழா ,
சேலத்தில் நாடோடிமன்னன் விழா
சென்னையில் இன்றுபோல் என்றும் வாழ்க விழா ,உடனே நேற்று இன்று நாளை விழா
மற்றும் திருச்சியில் புதியபூமி
திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள்திலகத்தின் படங்கள் வந்தாள்தான் முடியும் என்று நம்புகிறார்கள்
அந்த நம்பிக்கையை நம் தலைவன் அவர்களுக்கு இன்னமும் அளித்து கொண்டிருக்கிறார்
என்றும் அளிப்பர் நம் தலைவன்
http://i42.tinypic.com/aww9si.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
-
Thanks Vellore Ramamurthy for bringing back our Verangan memories.
-
-
இன்றைய தினமலர் (21.08.2013) செய்தி.
http://i43.tinypic.com/aw2fbp.jpg
புரட்சித்தலைவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில், 1967ல், அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்து குரல்வளையிலிருந்து குண்டை அகற்றிய டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில் 'முது முனைவர்' பட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நம் இதய தெய்வத்தின் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த, நன்றி கலந்த, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
100 % உண்மை திரு கலியபெருமாள் சார்
இந்த இரண்டு வாரத்தில் மட்டும் நெல்லையில் ஒரு தாய் மக்கள் விழா
கோவையில் உரிமைக்குரல் விழா உடனே நினைத்ததை முடிப்பவன் விழா ,
சேலத்தில் நாடோடிமன்னன் விழா
சென்னையில் இன்றுபோல் என்றும் வாழ்க விழா ,உடனே நேற்று இன்று நாளை விழா
மற்றும் திருச்சியில் புதியபூமி
திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள்திலகத்தின் படங்கள் வந்தாள்தான் முடியும் என்று நம்புகிறார்கள்
அந்த நம்பிக்கையை நம் தலைவன் அவர்களுக்கு இன்னமும் அளித்து கொண்டிருக்கிறார்
என்றும் அளிப்பர் நம் தலைவன்
http://i42.tinypic.com/aww9si.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
இனிய நண்பர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களின் நாடோடி மன்னன் வெற்றி விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு மிகவும் அருமை. ஒவ்வொரு புகைப்படத்திலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. வெற்றி விழா முழுமையும் நேரிலிருந்து பார்த்த நிறைவினைத் தரும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
இன்றைய தினமலர் (21.08.2013) செய்தி.
http://i43.tinypic.com/aw2fbp.jpg
புரட்சித்தலைவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில், 1967ல், அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்து குரல்வளையிலிருந்து குண்டை அகற்றிய டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில் 'முது முனைவர்' பட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நம் இதய தெய்வத்தின் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த, நன்றி கலந்த, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
நன்றி திரு கலியபெருமாள் sir,
மிக நல்ல செய்தி
இப்படிக்கு
எஸ் ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்.
------------------------------------------------
-
-
-
-
-
-
-
மக்கள் திலகத்தின் *'' நாடோடி மன்னன் '' இன்று 56வது ஆண்டு துவக்க *நாள் . 55 ஆண்டுகள் *தொடர்ந்து *பல வருடங்கள் நாடோடி மன்னன் *படம் தமிழகமெங்கும் திரையிடப்பட்டு வந்துள்ளது *ஒரு சாதனையாகும் .
*நாடோடி மன்னன் '' வெளியான *இன்றைய *நாளி ல் 22.8.1958] - * * 22.8.2013 *சேலம் *நகரில் *படம் *நடைபெறுவது மகிழ்ச்சியான *செய்தியாகும்
நாடோடி மன்னன் '' *பற்றிய புதிய *தகவல்கூறியவர்- ஒய்வு பெற்ற மேலாளர் - கிருஷ்ணா *அரங்கம் -
நாடோடி மன்னன் *படம் இரண்டாம் *வெளியீட்டில் *1959ல் *இரண்டு ஊர்களில் *100 நாட்கள்
http://i43.tinypic.com/11v2t92.jpg
திருவண்ணாமலை - கிருஷ்ணா *
தர்மபுரி - கணேசா
நாடோடி மன்னன் '' 100வது *நாள் விழா
*திருவண்ணாமலை .- கிருஷ்ணா *அரங்கில் 100 வது நாள்*விழாவில் *மக்கள் திலகம் - நம்பியார் - வீரப்பா - சரோஜாதேவி *மற்றும் பலர் கலந்து கொண்டனர்
எல்லோருக்கும் *திரை அரங்கு சார்பாக *கேடயமும் - நினைவு பரிசும் *அரங்கின் சார்பாகவும் . விநியோகஸ்தர் சார்பாகவும் *வழங்கபட்டது .
விழா முடியும் தருவாயில் *மக்கள் திலகம் *அவர்கள் *கிருஷ்ணா *அரங்க உரிமையாளர் திரு கிருஷ்ணா ரெட்டி *, அரங்க *மேலாளர் *மற்றும் விநியோகஸ்தர் *மூவரையும் * மேடையில் *அழைத்து *எம்ஜியார் பிச்சர்ஸ் *சார்பாக *மிகப்பெரிய *நினைவு பரிசை *அவர்களுக்கு வழங்கினார் .அரங்கின் சார்பாக * வழங்கபட்ட *கேடயம் *மக்கள் திலகத்தின் *நினைவு இல்லத்தில் *காணலாம் .
கிருஷ்ணா *அரங்கின் உரிமையாளர் *வீட்டில் *மக்கள் திலகம் வழங்கிய *நினைவு பரிசு *அவருடைய*
வீட்டில் *வரவேற்பறையில் *அலங்கரித்து *கொண்டிருக்கிறது .
நன்றி திரு *கலீல் . திருவண்ணாமலை .
-
மக்கள் திலகத்தின் '' இதயக்கனி '' இன்று[ 22.8.1975- 22.8.2013 ] 39 வது ஆண்டு துவக்க நாள் .
1975-. சத்யா மூவிஸ் தயாரித்த படங்களில் ரிக்ஷாகாரனுக்கு அடுத்து வந்த வெற்றி படம் .. சென்னை - சத்யம் அரங்கிலும் , வேலூர் - கிருஷ்ணா அரங்கிலும் 100 நாட்கள் ஓடிய முதல் படம் .
1976ல் சென்னை நகரில் இடம் பெற்ற 100வது நாள் வெற்றி விழாவில் முக்தா ஸ்ரீனிவாசனின் பேச்சு மிகவும் அருமயாக இருந்தது . இதயக்கனி படம் ஏற்படுத்திய சாதனையை அவர் விவரித்து பாராட்டிய விதம் பாராட்டுக்குரியது .
http://i40.tinypic.com/13ydsuq.jpg
-
-
today makkal thilagam's movies in tv.
Jaya tv - 10 am kumarikkottam
ktv - 1 pm idhayakkani
-
Quote:
Originally Posted by
ravichandrran
உண்மைதான் திரு. ரவிச்சந்திரன் அவர்களே !
கடையேழு வள்ளல்கள் (பாரி, ஓரி, அஞ்சி, பேகன், ஆயி எயினன், நள்ளி, மலையமான் காரி)
கூட மன்னர்களாக இருந்து அன்றைய அரசுக் கருவூலத்திலிருந்து தான் பொதுப் பணத்தை தானமிட்டனர்.
ஆனால், தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை (ஆரம்ப காலத்தில் குறைவாக சம்பாதித்த நேரத்தில் கூட) இவரைப்போல் எவரும் இதுவரை வாரி வழங்கியதுமில்லை. இனி நமது மன்னாதி மன்னனைப் போல் எவரும் பிறக்கப்போவதுமில்லை என்று தான் தோன்றுகிறது.
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக முதல்வராக ஆன பின்பும் கூட, அரசாங்க வாகனத்தை பயன்படுத்தாமல், நவீன வசதிகளுடன் கூடிய பல ரக புதுமையான நான்கு சக்கர வாகனங்கள்
சந்தையில் அறிமுகமான நிலையில், பழைய நிலையை மறக்காமல், வழக்கமாக தான் பயணிக்கும் tmx 4777 என்கின்ற அம்பாசடர் வாகனத்தையே பயன் படுத்தி வந்தார்.
முதல்வராவதற்கு முன்பு தான் வசித்து வந்த ராமாபுரம் வீட்டையும் புதுப்பிக்காமல், இறுதி வரை எளிமையாக வாழ்ந்தவர் தான் நம் ஏழைப்பங்காளன் எம். ஜி. ஆர். அவர்கள்.
அன்பன் : செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
"நாடோடி மன்னன்" வெளியீட்டு தினமாகிய இன்று அந்த படத்தினை பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டதற்கு, நன்றி திரு. வினோத் அவர்களே !
இத்தருணத்தில், "நாடோடி மன்னன்" திரைப்படம் படைத்த மற்றுமோர் சாதனையை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன் :
மறு வெளியீடுகளில், 1973 மற்றும் 2006 வருடங்களில், இடைவெளியில்லாமல் இணைந்த 100 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்தது, நமது மக்கள் திலகத்தின் "நாடோடி மன்னன்"
http://i43.tinypic.com/65o6sh.jpg
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
உங்களின் பதிவு மிகவும் அருமை . மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய அயராத உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை திமுகவின் கட்சியின் வளர்ச்சிக்கும் , தொண்டர்களுக்கும் , ரசிகர்களுக்கும் , ஏழை மக்களுக்கும் வாரி வழங்கிய தலைவர் நம் மக்கள் திலகம் .
-
22.,8.1975
மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' முதல் நாள் ,முதல் காட்சியின் அனுபவம் .
வேலூர் நகரம் - கிருஷ்ணா அரங்கில் திரையிடப்பட்ட முதல் படம் மக்கள் திலகத்தின் ''நாளை நமதே''. 4.7.1975 முதல் 21.8.1975 வரை 49 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடிவந்தது .கடைசி நாள் அன்று மாலை காட்சியும் இரவு காட்சியும் அரங்கு நிறைந்தது .
22.8.1975 நள்ளிரவு முதல் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர் .காஞ்சிபுரத்தில் படம் வெளியாகததால் அங்கிருந்து பெரும் ரசிகர்கள் வேலூர் -கிருஷ்ணா அரங்கிற்கு வந்த சேந்தனார் .
22.8.1975 காலை 9 மணிக்கு இதயக்கனி சிறப்பு காட்சி துவங்கும் முன்பு அன்றைய அண்ணா திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜி .விஸ்வநாதன் , மற்றும் வேலூர் நகர எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பின் படம் துவங்கியது .
ஆரம்ப காட்சியில் அண்ணாவின் குரலில் மக்கள் திலகம் அவரது இதயத்தில் தோன்றும் காட்சியில் அரங்கமே அதிர்ந்து போகும் அளவிற்கு கை தட்டலும் விசிலும் அமர்க்களப்பட்டது .
டைட்டில் காட்சி மிகவும் புதுமையாக மெல்லிசை மன்னரின் இசை பிரமிக்க வைத்தது . ஆரம்ப பாடல் காட்சியில் காவிரியின் பெருமைகளுடன் மக்கள் திலகத்தின் பெருமையை ஒப்பிட்டு இடம் பெற்ற பாடல் சூப்பர்.
பின்னர் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பும் ,மக்கள் திலகத்தின் நடிப்பு , பாடல்கள் , சண்டை காட்சிகள்
வசனங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்து . முதல் காட்சியிலே படத்தின் வெற்றியின் அறிகுறி
தெரிந்தது .
கிருஷ்ணா அரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் படம் என்ற பெருமை - இதயக்கனிக்கு உண்டு .
-
Quote:
Originally Posted by
ravichandrran
தங்கள் வாக்கியத்திலும் தலைவரின் முகத்திலும் அழகு மிளிர்கிறது. அதனால்தான் இதுவரை தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களிலே, முதல்வராக நம் முப்பிறவி கண்ட முதல்வர் திகழ்கிறார். எந்த முதல்வரும் தன்னுடைய சொந்த உழைப்பில் வந்த பணத்தை நாட்டு மக்களுக்காக செலவிடவில்லை. தான் கஷ்டப்பட்டு நடித்து ஈட்டிய செல்வங்கள் அனைத்தையும் எழைசெல்வங்களின் நலனுக்காகவே செலவிட்ட பொன்மனச்செம்மல் அவர். எனவேதான் எந்த முதலமைச்சரும் இடம்பெற முடியாத மக்களின் இதயத்தில் இன்றும் குடியிருந்து வருகிறார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் .
-
Dear Roop Sir,
Some time back you had expressed your desire to publish the Interview held with our beloved God M.G.R. immediately after becoming CM of Tamil Nadu in the year 1977. The Interview was conducted by the Actress Latha.
Herebelow, the details of the Interiview published in the August 1977 issue of "BOMMAI" for its Readers.
http://i42.tinypic.com/14udjzp.jpg
http://i42.tinypic.com/29pt3jp.jpg
http://i40.tinypic.com/3304g3n.jpg
http://i41.tinypic.com/2ih9nd1.jpg
Always Yours,
S. Selvakumar
[B]Endrum M.G.R.
Engal Iraivan [/B]
-
-
தமிழகத்தை இன்றும் ஆளும் தர்மதேவனின் குடும்ப சந்திப்பு
புதுச்சேரியிலிருந்து நானும், பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாகிகளும் நான்கு நாள் சுற்றுலாவாக தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு (ஆலப்புழா) சென்றோம். இதை சுற்றுலா என்பதை விட எங்கள் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட குடும்ப நண்பர்களின் சந்திப்பு என்றும் சொல்லலாம். அந்த நண்பர்கள் எங்கள் மீது காட்டிய பரிவு, பாசம், விருந்தோம்பல் ஆகிய இனிய நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். முன்பெல்லாம், புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு செல்லும்போது ஏதோ ஒரு புதிய இடத்திற்கு செல்வது போல சென்று வருவோம். ஆனால் இப்போது நம் சொந்தங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிற சந்தோஷத்தில் சென்று வருவது ஒரு புதிய அனுபவம். நம் பொன்மனச்செம்மல் படைத்த இதயத்தின் இதயங்கள் அல்லவா அவர்கள். கனிவுக்கும், பரிவிற்கும் கேட்க வேண்டுமா? நம் தலைவர் நமக்கு விட்டு சென்ற சொந்தங்கள் அல்லவா? இவர்கள் பாசத்திற்கு இணை ஏது?
15.08.2013 அன்று காலை 11.30 மணிக்கு எங்கள் பயணம் தொடர்ந்தது. அன்று இரவு தேனியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் கூறியிருந்தார். மதிய உணவை உளுந்தூர்பேட்டை சாலையோரத்தில் இருந்த ஒரு ஓட்டலில் (ஆர்ய பவன் என்று நினைக்கிறேன்) சாப்பிட்டோம். அந்த ஓட்டலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தங்களில், தேச தலைவர்கள் மகாத்மா காந்தி, அம்பேத்கர், பகத்சிங், மத்தியில் நம் பாரத ரத்னாவின் 'வாத்யார்' புத்தகம். திரு. முத்துக்குமரன் ஆசிரியர். அதில் அவர் கொடுத்திருந்த சப்-டைட்டில் "ஆயிரம் தன்னம்பிக்கை நூல்கள் தராத உத்வேகத்தை எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு தந்துவிடும். எவ்வளவு பெரிய உண்மை.
http://i43.tinypic.com/2eceuyv.jpg
பயணத்தின் முதலில் திண்டுக்கல்லில் திரு. மலரவன் அவர்களை சந்தித்தோம். பெயருக்கேற்றாற்போல் மலரின் மென்மையை மனதில் கொண்ட சொந்தம். அவர் கொடுத்த தேநீரும், பழச்சாறும் அதனுடன் கலந்த அவர் விருந்தோம்பலும் இன்னும் இனிக்கிறது. அவர் உருவாக்கும் புரட்சித்தலைவர் மணி மண்டபம் மற்றும் சில ஆக்கபூர்வ விஷயங்களை அளவளாவி விட்டு விடை பெற்றோம். இடையிடையே இனிய நண்பர் ரவிச்சந்திரன் அவர்கள், தன் இடையறாத பணியிலும், எங்கே வருகிறீர்கள்? என்று கேட்டவாறு இருந்தார். பயணத்தில், சில இடங்களில் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தும்போது, பெரும்பாலான கடைகளில் நம் தலைவரின் படப்பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் ஒரு நண்பரைக் கேட்டேன்..என்ன தலைவர் பாட்டா? அவர் சொன்னது..ஆமாம் சார். மொபைல் மெமரி கார்டில் தலைவரின் பாடல்களை ஏற்றி பாக்கெட்டில் போட்டுவிட்டு வேலை செய்து கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. சந்தோஷமாக இருக்கும்' என்றார். தலைவரின் பாடல்கள் உழைப்பின் வலியைப் போக்கும் அருமருந்தாக இருப்பதைக் கண்டேன். பயணம் தொடர்ந்தது. தேனீ ராஜதாசன் அவர்களும் தொடர்பு கொண்டு திரு. ரவிச்சந்திரன் அவர்கள் சொன்னவாறு எங்களுக்கு தேனியில் வசந்தம் விடுதியில் ரூம் போட்டிருப்பதாகவும், காலையில் உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறினார். தேனீ வசந்தம் விடுதிக்கு சென்றோம். அழகான குளிரூட்டப்பட்ட அறை. ரிலாக்ஸ் செய்து தொலைக்காட்சியை ஆன் செய்தோம். அங்கே லோக்கல் சேனல் 'சிகரத்தில்' நம் சிகரத்தைத் தொட்டவரின் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம்.
http://i41.tinypic.com/2s9bnkp.jpg
தேனீ மார்க்கெட்டை சுற்றி வந்தோம். பெரும்பாலான கடைகளில் நம் தெய்வத்தின் படப்பாடல்களே. ஒரு கடையில், தற்போதைய முன்னணி நடிகர்களின் புத்தகங்கள்கூட இல்லாத நிலையில் நம் தலைவரின் ' இதயக்கனி' புத்தகம். எங்கேயும் எம்ஜிஆர் நிறைந்தார். எங்கள் மனமும் நிறைந்தது.
http://i40.tinypic.com/4ktxft.jpg
...சந்திப்பு தொடரும்.....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
அழகிய, அற்புத, அரிய உரையாடலை அனைவரும் அறிய உதவிய உய/யிர் நண்பர் பேராசிரியர் செல்வக்குமார் அவர்களுக்கு அகமகிழ நன்றி கூறும் அன்பன் கலியபெருமாள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
-
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
அருமை நண்பர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு
மிக மிக அற்புதமான பதிவு. நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அருமையான பேட்டி . ரூப்குமார் மட்டுமல்ல நானும் தங்களிடம் தொலைபேசி வாயிலாகவும், திரியின் வாயிலாகவும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். எனது வேண்டுகோளை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றிகள் பல. மேலும் இது போல பல அரிய பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.இந்தப் பேட்டியின் தொடர்ச்சியினையும் முடிந்தால் வெளியிடவும். நன்றி.
-
அன்பு நண்பர் வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு,
தங்களது நாடோடிமன்னன் 55வது ஆண்டுவிழா மற்றும் சேலம் வெளியீட்டு கொண்டாட்டங்கள் பதிவு அருமை. தங்களைச் சந்திக்கும் வாய்ப்பும், நாடோடி மன்னன் படத்தினை தங்களுடன் சேர்ந்து பார்க்கும் வாய்ப்பும் ஒருங்கே அமைந்தது மாபெரும் மகிழ்ச்சிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. முழுமையாக விழாவில் கலந்து கொள்ள இயலாமல் கடைசி நேரத்தில் மட்டும் சிறிது நேரம் கலந்து கொள்ள நேர்ந்தாலும், தங்களைச் சந்தித்ததும் திரைப்படத்தினை pxd ஒளிபரப்பில் பார்த்ததும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
நாடோடி மன்னன்,
55 ஆண்டுகளுக்குப் பின்னும் புதுப்படம் பார்க்கும் உணர்வை தோற்றுவித்தது. நான் அதிகம் பார்த்த படம் நாடோடி மன்னன் தான். மக்கள் திலகத்தின் தயாரிப்பில் நாடோடிமன்னன்,அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்ற மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் என்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மூன்று முத்துக்கள் என்றால் நாடோடி மன்னன் அவற்றுள்ளும் மிகச் சிறந்தது என்பது எனது கருத்து. அதற்கு முன் எத்தனை முறை பார்த்தேன் என்பது நினைவில் இல்லாவிட்டாலும் மூன்றும் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டு தோறும் எனது முழுஆண்டு விடுமுறையில் தவறாமல் பார்த்தேன் என்றாலும் ஆறாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறைக்கு வனவாசி என்ற சிற்றூருக்குச் சென்றிருந்தேன். (எனது சித்தப்பா அவர்களது இல்லத்தில்) அப்போது தியேட்டரில் ஆப்பரேட்டராக இருந்த எனது சித்தப்பாவுடன் நாள் தோறும் 3 காட்சிகளும் ஒரு நாள் கூட தவறாமல் பார்த்தது (படம் அந்தக் கிராமத்தில் 3 வாரங்கள் ஓடியது) இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது. அதன் பின்னும் முழு ஆண்டு விடுமுறை கொண்டாட்டம் என்றால் அது நாடோடி மன்னன் படத்துடன் தான். (ஆண்டு தவறாமல் எங்கள் ஊரில் கோடை விடுமுறை காலத்தில் நம்நாடு, அடிமைப்பொண், நாடோடி மன்னன் படங்கள் கண்டிப்பாக ஒளிபரப்பப்படும்). அதன் பின்னரும் எனது கல்லூரிக் காலத்தில் கோவை கே.ஜி.ஆர்ட்ஸ் திரையரங்கில் மனித தெய்வம் அமெரிக்க மருத்துவமனையில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒளிபரப்பப் பட்ட போது மிக மிக அருமையான பிரிண்டிலும் அற்புதமான ஒலியமைப்பிலும் பார்த்து மகிழ்ந்தேன். இன்னும் அடிக்கடி டிவிடி வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் நாடோடி மன்னன் படத்தினை குறைந்தது ஆயிரம் முறை பார்த்திருப்பேன். ஆனாலும் இன்னமும் ஒவ்வொரு காட்சியும் புதிதாய் பார்க்கும் உணர்வையும் பரவசத்தையும் தோற்றுவிக்கிறது என்றால் அது மிகையல்ல. எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்குவது நாடோடி மன்னன் தான். அதிலும் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கும் போது நமது ரசனையை ஆமோதிப்பது போல் அவர்கள் கரவொலியுடன் கேட்பது அலாதியான இன்பத்தை தருகிறது. ஒரு காட்சிகூட சலிப்பைத் தராத படம் (விதிவிலக்கு வண்ணத்தில் சந்திரபாபு வரும் நகைச்சுவை காட்சிகள்)
-
நாடோடி மன்னன்,
55 ஆண்டுகளுக்குப் பின்னும் புதுப்படம் பார்க்கும் உணர்வை தோற்றுவித்தது. நான் அதிகம் பார்த்த படம் நாடோடி மன்னன் தான். மக்கள் திலகத்தின் தயாரிப்பில் நாடோடிமன்னன்,அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்ற மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் என்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மூன்று முத்துக்கள் என்றால் நாடோடி மன்னன் அவற்றுள்ளும் மிகச் சிறந்தது என்பது எனது கருத்து. அதற்கு முன் எத்தனை முறை பார்த்தேன் என்பது நினைவில் இல்லாவிட்டாலும் மூன்றும் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டு தோறும் எனது முழுஆண்டு விடுமுறையில் தவறாமல் பார்த்தேன் என்றாலும் ஆறாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறைக்கு வனவாசி என்ற சிற்றூருக்குச் சென்றிருந்தேன். (எனது சித்தப்பா அவர்களது இல்லத்தில்) அப்போது தியேட்டரில் ஆப்பரேட்டராக இருந்த எனது சித்தப்பாவுடன் நாள் தோறும் 3 காட்சிகளும் ஒரு நாள் கூட தவறாமல் பார்த்தது (படம் அந்தக் கிராமத்தில் 3 வாரங்கள் ஓடியது) இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது. அதன் பின்னும் முழு ஆண்டு விடுமுறை கொண்டாட்டம் என்றால் அது நாடோடி மன்னன் படத்துடன் தான். (ஆண்டு தவறாமல் எங்கள் ஊரில் கோடை விடுமுறை காலத்தில் நம்நாடு, அடிமைப்பொண், நாடோடி மன்னன் படங்கள் கண்டிப்பாக ஒளிபரப்பப்படும்). அதன் பின்னரும் எனது கல்லூரிக் காலத்தில் கோவை கே.ஜி.ஆர்ட்ஸ் திரையரங்கில் மனித தெய்வம் அமெரிக்க மருத்துவமனையில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒளிபரப்பப் பட்ட போது மிக மிக அருமையான பிரிண்டிலும் அற்புதமான ஒலியமைப்பிலும் பார்த்து மகிழ்ந்தேன். இன்னும் அடிக்கடி டிவிடி வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் நாடோடி மன்னன் படத்தினை குறைந்தது ஆயிரம் முறை பார்த்திருப்பேன். ஆனாலும் இன்னமும் ஒவ்வொரு காட்சியும் புதிதாய் பார்க்கும் உணர்வையும் பரவசத்தையும் தோற்றுவிக்கிறது என்றால் அது மிகையல்ல. எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்குவது நாடோடி மன்னன் தான். அதிலும் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கும் போது நமது ரசனையை ஆமோதிப்பது போல் அவர்கள் கரவொலியுடன் கேட்பது அலாதியான இன்பத்தை தருகிறது.
http://i44.tinypic.com/2eevbwx.jpg
-
-
-
-
-
மக்கள் திலகத்தின் ''குடியிருந்த *கோயில் '' படத்தில் இடம் பெற்ற பாடல்களில் பாடகர் திலகம் - இசைஅரசி சுசீலா - இசை அரக்கி ஈஸ்வரி ஆகியோரின் உன்னத நவரச குரல்களில் உருவான , அருமையான கீதங்கள் . மெல்லிசை மன்னரின் இசையில் ,வாலி புலமை பித்தன் , ஒரே பாடல் எழதிய பெண் பாடலாசிரியர் ரோஷன் பேகம் , ஆலங்குடி சோமு இவர்களுடைய பாடல் வரிகளில் மக்கள் திலகம் தன்னுடைய மாறு பட்ட நடிப்பில் ரசிகர்களை மயக்கிய பாடல்கள் காலத்தால் அழியாத இனிய கீதங்கள்
.http://youtu.be/sGt9qA26sLo
1.உன் விழியும் என் வாளும்- இந்த பாடலில் மக்கள் திலகம் - ராஜஸ்ரீ இருவரின் நடனமும் நடிப்பும்
பாடலின் வரிகளும் நெஞ்சைகொள்ளை கொள்ளும் .
http://youtu.be/dHNFl7sF7Ss
2. என்னை தெரியுமா - இந்த பாடலில் மக்கள் திலகம் தான் ஒரு நல்ல ரசிகன் என்பதையும்
நான் புதுமையானவன் - உலகை புரிந்து கொண்டவன் என்ற வரிகளில் மூலம்தன்னுடய முக்காலத்தை பற்றி பாடுவது - இவருக்கு மட்டும் பொருந்திய வரிகள் . அதே போல் பல புதுமைகளை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்து வெற்றி கண்டவர்
http://youtu.be/kStrYS51s-g
3. நீயேதான் எனக்கு மணவாட்டி - மக்கள் திலகம் - ஜெயா காதல் பாடல் மிகவும் யதார்த்தமாக அமைந்த பாடல் . எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத இனிமையானபாடல்
http://youtu.be/IPPZYul_9Rk
4. துள்ளுவதோ *இளமை - மக்கள் திலகம் - ராஜஸ்ரீ இருவரின் அட்டகாசமான மேடை பாடல் .
மனதை மயக்கும் காட்சிகள் - பாடல் வரிகள் - மக்கள் திலகத்தின் சூப்பர் உடை அலங்காரம் -
இன்று பார்த்தாலும்புத்தம் புது பாடல் போல் ஜொலிக்கிறது
5. ஆடலுடன் பாடலை கேட்டு - பாங்க்ரா நடனம் . அசல் பஞ்சாபி போல் தோற்றமளித்த நம் உலக பேரழகன் மக்கள் திலகத்தின் நடனமும் , துள்ளலும் , இளமையும் , சுறுசுறுப்பும் இனி எந்த ஜென்மத்திலும்காண முடியாத காவிய பாடல்
.
6. குங்கும பொட்டின் மங்கலம் - பெண் பாடலாசிரியரின் காதல் தேன் அமுது பாடல் .மக்கள் திலகத்தின் காதல் பாடலில் அபிநயமும் நடிப்பும் அற்புதம்
7.புலவர் புலமை பித்தனின் முதல் தத்துவ பாடல் .
பாடலின் வரிகளும் , பாடகரின் குரலும் , பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பும் என்னவென்று சொல்ல ?
http://youtu.be/ciE9Lrnd-X8
ஒரே படத்தில்7 விதமான பாடல்மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த நம் மக்கள் திலகம்*
அவர்களின் '' குடியிருந்த கோயில் '' என்றென்றும் ரசிகர்கள் உள்ளத்தில் *குடியிருக்கும் பாடல்கள் *என்பது நிதர்சனமான உண்மை .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல்திரைப்பட ரசிகர்களுக்கும் . மக்களுக்கும் , மற்ற மொழி மக்களுக்கும் அன்றும் - இன்றும் - என்றும்பிடித்தமான நடிகர் நம் *மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பது நமக்கு பெருமையான செய்தியாகும் .
-
-
1968ல் மக்கள் திலகத்தின் மூன்று வண்ண படங்கள்
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாத சாதனையாகும் . மூன்று படங்களிலும் மக்கள் திலகத்தின் நடிப்பு , பாடல்கள் , சண்டை காட்சிகள் , புதுமைகள் , நடனங்கள் , கருத்துக்கள்
விறுவிறுப்பான காட்சிகள் மிகவும் பிரபலமானவை .
ரகசிய போலீஸ் 115 படத்தில் இடம் பெற்ற 4 காதல் பாடல்கள் , குடியிருந்த கோயில் படத்தில் இடம் பெற்ற எல்லா 7 பாடல்கள் , ஒளிவிளக்கு படத்தில் இடம் பெற்ற 5 பாடல்களும் அருமை
மூன்று படங்களிலும் மெல்லிசை மன்னரின் இசை - ரீரெகார்டிங் , டைட்டில் இசை புதுமை .
ரகசிய போலீஸ் 115ல் துப்பறியும் அதிகாரியாகவும் , குடியிருந்த கோயிலில் இசைபாடகராகவும் , கொள்ளயாராகவும் , ஒளிவிளக்கில் திருடனாகவும் வித்தியாசமான பாத்திரத்தில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பில் நடித்து வெளுத்து கட்டினார் நம் மக்கள் திலகம் .
51 வயதில் , குரலில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் இளமை அழகுடன் , சுறுசுறுப்புடன் நடித்து ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்ட வண்ண நாயகன் .
மக்கள் திலகத்தின் மூன்று வண்ண படங்களின் சில சாதனை துளிகள் .....
கண்ணதாசனின் கை வண்ணத்தில் உருவான தமிழ் இலக்கிய பாடல் '' பால் தமிழ் பால் '' கவிதை நயம் - இலக்கிய ரசம் , படமாகப்ட்ட விதம் எல்லாமே இனிமை .
என்ன பொருத்தம் பாடலில் மக்கள் திலகம் துள்ளி குதித்து , ஆடி பாடும் காட்சி பிரமாதம் .
கண்ணில் தெரிகின்ற வானம் - காதலர்களின் சந்திப்பின் நினவு கூறும் பாடல் .
கண்ணே .. கனியே ,,முத்தே ... காதலர்களின் கனிரச பாடல் .
ஒளிவிளக்கில் இடம் பெற்ற பாடல்கள்
தைரியமாக சொல் நீ மனிதன் தானா ---- குடியின் கொடுமைகளை விவரிக்கும் தத்துவ பாடல்
ருக்குமணியே ... பாடல் . வித்தியாசனமான முறையில் படமாக்கப்பட்ட பாடல்
இறைவா .. உன் மாளிகையில் - இந்த பாடல் மூலம் இசை அரசி சுசீலாவின் புகழும் , நடிகை சௌகார் ஜானகியின் புகழும் எங்கோ அழைத்து சென்று மங்கா புகழ் பெற்றது .
1968 மக்கள் திலகத்தின் 3 வண்ண படங்கள் முக்கனியாக திரை உலக வரலாற்றில் வசூல் காவியங்களாக என்றென்றும் ரசிகர்களின் நினைவில் பசுமையாக நிலைத்திருக்கும் படங்கள் .
-
Quote:
Originally Posted by
jaisankar68
Dear Jai Shankar Sir,
Thank you very much for having posted the stills of our beloved God's ' NADODI MANNAN"
Also thank you for the compliments you have given to me.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
Makkal thilagathin padhilgal
courtesy - net
நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம்? அதில் ஏற்ற வேடம்?
‘மனோகரா’ நாடகம். மனோகரன் வேஷம்.
பெண்வேஷம் போட்டு நாடகங்களில் நடித்தது உண்டா?
உண்டு.
உங்கள் அன்னையார் இப்போது உயிரோடு இருந்தால்?
என் நிலைமைக்காக மிகவும் அனுதாபப் பட்டிருப்பார்.
உங்கள் சொந்த வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனை?
ஒரு பெண் என்னைக் காதலித்ததுதான். தயவு செய்து இதற்குமேல் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்.
உங்களை உயர்த்தியது எது?
பருவம்.
உங்கள் தொழிலில் பெரிய சவாலாக இருந்தது எது?
என்னை அழிக்க விரும்பிய எதிரிகளின் நட்பு.
உண்மை அழிந்த பின்பு நிலைத்திருப்பது என்ன?
உண்மைதான். ஏனென்றால் அது அழிவது கிடையாது.
மதுவை விடக்கொடியது எது?
அதை அருந்தும் மனம்.
நன்றியில்லாத ஒருவனை நன்றியுள்ளவனாக ஆக்குவது எப்படி?
நாம் நன்றி உள்ளவராக நடந்துகொள்வதன் மூலம்.
உங்களால் பாதிக்கப்பட்டவர் யாராவது உண்டா?
நானே இருக்கிறேனே, போதாதா?
உங்களுக்குக் கவிதை பிடிக்குமா?
கவிதையும் பிடிக்கும்.
தங்களுக்குக் குழந்தை பிறந்தால்?
முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும்.
உங்களுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுத்தபோது அதை நீங்கள் வாங்க மறுத்தது உண்மையா?
உண்மை.
சாதிவெறியைத் தூண்டிவிடும் தமிழ்த் தலைவர்களுக்கு உங்கள் பதில் யாது?-
அவர்கள் தமிழை வணங்காதவர்கள்.
சில சமயம் நீங்கள் கவிஞர்களுக்கே பல்லவி எடுத்துத் தருவீர்களாமே?
பல்லவி எடுத்துக் கொடுப்பது கிடையாது. கருத்துச் சொல்வது உண்டு-.
ரசிகன், தொண்டன், உடன்பிறப்பு இம்மூன்றில், எப்படி அழைப்பது உங்களுக்குப் பிடிக்கும்?
நான் எழுதும் கடிதத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறேனே அப்படி.
கோழை எதைச் சாதிக்கிறான்?
வீரனை வெளிக்காட்டுகிறான் அல்லவா?
ஒரு தமிழ்ப்பெண் எப்படி நடந்துகொண்டால் அவளது வாழ்வு பிறர் பார்த்து மதிக்கும்படி இருக்கும்?
‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள, கற்பெண்ணும் திண்மைஉண் டாகப் பெறின்’ என்ற குறள் நெறியைப் பின்பற்றி நடப்பதே மதிப்புத் தருவதாகும்.
திருமணமான பெண் வேலை செய்வது பற்றி தங்கள் கருத்தென்ன?
திருமணமான பெண் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
உங்களைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?
பிறரால் அனுதாபப்பட வேண்டிய ஒருவன்.
இறைவன் மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைக் கொடுத்திருப்பது ஏன்?
அவன் மீதுள்ள அவ நம்பிக்கையால்.
ஜிம்மி கார்ட்டரின் வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உலக அரசியலுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது என நினைக்கிறேன்.
உங்களுடைய வாரிசாக வர விரும்புகிறேன். உங்களுடைய சம்மதம் தேவை?
என் வாரிசாக வர விரும்புகிறவர்கள் என் சம்மதத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. என் லட்சியத்தைக் காப்பாற்றுகிற அனைவருமே என் வாரிசுகள்தான்.
அறிவுள்ளவன் யார்?
தன்னை அறிந்தவன்.
நண்பர்களைக் கவர்வது எப்படி?
தூய்மையான நட்பைக்கொண்டு.
முயற்சி இல்லாமல் கிடைப்பது எது-?
மரணம்!
துன்பத்திலேயே அதிகத் துன்பம் எது?
நன்றி கொன்றவர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் துன்பம்.
நீங்கள் அரசியலில் நுழையக் காரணமானவர் யார்?
சுபாஷ் சந்திரபோஸ்.
ஏழை ஒருவன் நடிகையை மணக்க முடியுமா?
நடிகையரிலும் ஏழை நடிகை இருக்கிறார் அல்லவா?
மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தது உண்டா?
உண்டு. நாடக கம்பெனியில் இருந்தபோது-.
தங்களால் வாழ்வு பெற்றவர்கள் தங்களையே தூற்றுகிறார்களே?
அது அவர்களது இயற்கை. காலம் மாறும். காத்திருப்போம்.
தாங்கள் சிறந்த நண்பர் என்று யாரைக் கருதுகிறீர்கள்?
அறிவை.
நீங்கள் இறக்கும்போது உங்கள் கடைசி ஆசை என்னவாக இருக்கும்??
பிறவாதிருக்கவேண்டும் என நினைப்பேன் என இப்போது சொல்கிறேன். அப்போது என்ன நினைப்பேனோ?