-
எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.
1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.
1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். 'பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்' என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.
அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். 'நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் 'மறுபிறவி.' எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.
'மறுபிறவி' படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, 'தேர்த்திருவிழா' படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.
தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.'
courtesy - பேராசிரியர் முத்தையன்
-
‘மந்திரிகுமாரி’(1950).
ஆட்சியாளர்களை மதவாதிகள் எப்படி ஆட்டிப் படைக்கிறார்கள் என்பதுதான் கதை. கலைஞரின் வசனத்தில் எம்.ஜி.ஆர். ‘வீரமோகன்’ என்ற தளபதி பாத்திரத்தில் நடித்தார். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார். இந்தப் படத்திலும் கலைஞரின் வசனங்கள் வரவேற்பைப் பெற்றன. “அரண்மனை நாயே.. அடக்கடா வாயை…” என்பது மந்திரிகுமாரியின் வசனத் தெறிப்புகளில் ஒன்று.
நாட்டு நடப்பை புராண-இதிகாச-காப்பியங்கள் அடிப்படையிலான திரைப்படங்களிலும் திறமையாக வெளிப்படுத்தும் கலைஞரின் ஆற்றல் இதிலும் வெளிப்பட்டது. கொள்ளைக்கூட்டத் தலைவன் வெளியே சென்றிருக்கும் சமயத்தில், குகையில் உள்ள அவனுடைய கூட்டத்துக்குத் தற்காலிகத் தலைவனாக ஒருவன் உருவாகிவிடுவான். மற்றவர்கள் அவனை எதிர்த்ததும், எதிர்ப்பவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பதவி கொடுத்து சரிகட்டுவான். “நீ நிதி மந்திரி.. நீ உணவு மந்திரி..’ எனப் பதவிகள் வழங்கப்படும். அப்போது ஒருவன், “எனக்கு எதுவும் கிடையாதா? நீங்க போன்னா போறதுக்கும் வான்னா வரதுக்கும் நான்தான் ஆளா?” எனக் கோபப்படுவான். உடனே அந்த தற்காலிகத் தலைவன், “போன்னா போறே.. வான்னா வர்றே.. நீதான்டா போக்குவரத்து மந்திரி” என்பான். அந்த நேரத்தில், கொள்ளைக்கூட்டத் தலைவன் திரும்பி வந்துவிடுவான். குகையில் இருந்தவர்கள் தற்காலிகப் பதவிகளை மறந்து, வழக்கம்போல கொள்ளைக்கூட்டத் தலைவனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். அப்போது ஒருவன் மெல்லிய குரலில், “என்னடா மந்திரி பதவி வந்ததும் தெரியலை.. போனதும் தெரியலை…” என்பான். திரையரங்கம் சிரிப்பால் அதிரும். இன்றைய நிலையிலும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய வசனம் இது.
-
-
கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள் 24.6.2015
மக்கள் திலகத்தின் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி புகழ்பெற்றவர் கவியரசர் கண்ணதாசன்
கண்ணதாசன் வசனம் எழுதிய மக்கள் திலகம் படங்கள் .
மதுரை வீரன் - 1956
மகாதேவி -1957
நாடோடி மன்னன் - 1958
ராஜா தேசிங்கு - 1960
மன்னாதி மன்னன் - 1960
திருடாதே - 1961
ராணி சம்யுக்தா -1962
அரசியல் ரீதியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் - கண்ணதாசன் நட்பில் விரிசல் இருந்தாலும் காலபோக்கில் மாறுதல்
ஏற்பட்ட பின் கவியரசர் தமிழக ஆஸ்தான கவிஞராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் .
-
Music. Sound, Voice = M.S.V.
நவீன உலகில் இசை உருவாக்கம் என்பது கணிணி சார்ந்த ஒன்றாகிவிட்டது.
அன்றைய காலக்கட்டத்தில்.. எல்லாமே அந்த ஆர்மோனியக் கட்டைக்குள் இருந்துதான்.. அப்படியென்றால் இசைக்கலைஞனின் மூலையிலிருந்துதான்.. முழுக்க.. முழுக்க..
அப்படி.. இசையை கேள்வியறிவின்மூலம் பெற்று.. முன்னணி இசையமைப்பாளரிடம் உதவியாளராய் பணிபுரிந்து.. தனது ஞானத்தால், தெய்வ அருளால், பெரியவர்களின் ஆசியால்.. காலம் கனிந்திட.. கண்ணதாசன் முதலான மாபெரும் கவிஞர்களின் பாடல்களுக்கெல்லாம் உயிர்கொடுத்த இசை வழங்கி.. ஆயிரக்கணக்கில் பாடல்களுக்கு இசையமைத்து நூற்றாண்டு சாதனை படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.. 24.6.2015 அன்று இனிய பிறந்த நாள் .
-
MELLISAI MANNARIN SUPERB TITLE MUSIC.
https://youtu.be/3HvyBAAopq0
-
-
-
-
-
-
-
-
-
-
The following image was posted at the request of my dear Brother and Co-Hubber Mr. M.G.C. PRADEEP BAALU.
http://i62.tinypic.com/scc01k.jpg
In this Picture, it is his Grandfather Palagummi Padmaraju (Writer/Novelist/Director) & Makkal Thilagam
This image was taken on June 20-1976 on his parents wedding day.
Thank you my dear brother M.G.C.Pradeep for the opportunity given to me to post this rare image.
-
-
-
-
TODAY AT 12:00 NOON [ INDIA] - ORU THAI MAKKAL
https://www.youtube.com/watch?v=pJGOfcgrWUw
-
நாளை இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்
வழங்கும், தேவரின் "தாயைக் காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/1fin2v.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு.சுந்தர்.
-
-
நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு .
----------------------------------
கடந்த சில நாட்களாக , தின இதழ் நாளிதழில், உண்மைக்கு புறம்பான,தவறான
செய்திகள் பிரசுரம் ஆகி வந்தது குறித்து, நண்பர்களின் விமர்சனங்களை/ ஆலோசனைகளை கருத்தில் கொண்டு , நண்பர் திரு. ராஜ்குமார் , தின இதழ்
ஆசிரியர் திரு.குமரனிடம் இது குறித்து, புகார் தெரிவித்தும், நண்பர்களின் கருத்துக்கள் /விமர்சனங்கள் /கண்டனங்கள் எழுந்தது குறித்தும் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் சார்பாக , தொலைபேசியில் விரிவாக , உரையாடியுள்ளார்.
உரையாடலுக்கு பின்னர், தின இதழ் ஆசிரியர், இனி வரும் நாட்களில் இது போன்ற
தவறுகள் , பிழைகள் நேரா வண்ணம் பார்த்து கொள்வதாக உறுதி அளித்ததாக
திரு. சைதை ராஜ்குமார் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.
ஆர். லோகநாதன்.
-
-
-
-
-
HAPPY BIRTHDAY TO THIRAI ISAI CHAKRAVARTHI [MELLISAI MANNAR]. OUR SINCERE WISHES FOR YOUR SPEEDY RECOVERY:
நான் சபை ஏறும் நாள் வந்தது நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன் நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன் பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !!
https://www.youtube.com/watch?v=LD0ydSvlkBw
-
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பிறந்த தினம் இன்று!
ஒரேநாளில் பிறந்த இரண்டு மாமேதைகள் தான் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற வரிகளின் மூலம் இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து வருபவர் கண்ணதாசன் அவர்கள்.
தன் வாழ்வின் பெரும்பகுதியில் நாத்திகனாக இருந்து, பின் இவர் எழுதிய ’அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நாவலின் வாயிலாக இறைவனை புரிந்துகொண்டார்.
பாடல்கள் மட்டுமின்றி ’ஏசு காவியம்’, ‘அவள் ஒரு இந்து பெண், வனவாசம் என காலத்தால் அழியாத நாவல்களை படைத்துள்ளார்.
இதேபோல் பாடலின் வரிகள் இவை இல்லையெனில் வெறும் காகிதங்களாக தான் இருக்கும், அதன் பெயர் தான் விஸ்வநாதன், மன்னிக்கவும் இசை. எனக்கு இசையும், விஸ்வநாதனும் வேறு ஆளாக தெரிவதில்லை. இவரால் தான் ஒரு மாநிலத்தில் தலையெழுத்தே மாறியது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.தன் பாட்டின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காது நிழைத்திருக்கும் ’புரட்சி தலைவர்’ எம்ஜிஆர் அவர்களுக்கு 75% படங்களுக்கு இசையமைத்தது என்றால் இவர் தான்.
மேலும் கண்ணதாசனும்-விஸ்வநாதன் அவர்கள் கூட்டனியில் ’ஆயிரத்தில் ஒருவன், உரிமைக்குரல், என் கடமை, தங்கப்பதக்கம்’ போன்ற பல படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர்.
ஒரு பாடல் வரிகள் இல்லாமல் முழுமையடையாது, அதேபோல் இசையில்லாமல் வரிகள் உயிர் பெறாது. அதனால் தான் கலைத்தாய் இருவரையும் ஒன்றாக படைத்தார் போல!இதுபோல் மாமனிதர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் என்றும் ‘சினி உலகத்திற்கு’ பெருமை தான்.
courtesy - net
-
கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,
‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.
புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!
இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?
‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’
என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.
courtesy - vallamai
-
கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.
எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்
"அச்சம் என்பது மடமையடா;
அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.
அதே பாடலில்,
"கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."
- என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.
மதுரை வீரன் படத்தில் ,
"கடமையிலே உயிர் வாழ்ந்து
கண்ணியமே கொள்கையென
மடிந்த மதுரை வீரா..."
- என்று தொடரும் இப் பாடலில் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற அண்ணாவின் பிரபல மேற்கோளை கோடிட்டு காட்டினார் கண்ணதாசன்.
அதே படத்தில் இன்னொரு பாடல்.
" செந்தமிழா எழுந்து வாராயோ - உன்
சிங்காரத் தாய்மொழியை பாராயோ"
- என்று சொல்வார்
எம்.ஜி.ஆர். தயாரித்த ' நாடோடிமன்னன் ' படத்தில், 'செந்தமிழே வணக்கம்.." என்று
பாடலாக வணங்கிய கண்ணதாசனின் தமிழ், அதே படத்தில் 'அண்ணா.. நீங்கள் நாடாள வர வேண்டும்" என்ற வசனத்தின் மூலம் அண்ணாதுரையை முதலமைச்சராக வர வேண்டுமென 1958லேயே தனது ஆசையை வெளியிட்டது.
courtesy - thinnai
-
-
-
-
-
-
-
-
-
இன்று பிறந்த நாள் காணும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி.அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
இன்று மதியம் 12 மணிக்கு ஜெயா மூவிஸில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த
"ஒரு தாய் மக்கள்" ஒளிபரப்பாகிறது.
http://i61.tinypic.com/2myb0x2.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்