https://scontent.fdel1-1.fna.fbcdn.n...a9&oe=593FA80B
Printable View
ஒரு கிராமத்தோட வணிகம் அந்த ஊரு சந்தைய சார்ந்தது. எல்லாமே விக்கறதும் வாங்கறதும் அங்க நடக்கும்.பஞ்சம் பொழக்க வந்தாச்சு அந்த ஊருக்கு.அப்பிடியே இருந்தா பொழப்பு எப்பிடி நடக்கும்? அதான் ஒரு பரிசல அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓட்டி வர்ற வருமானத்துல பொழப்பு நடத்துறா குயிலு.அந்த வருமானம் பத்த மாட்டேங்குது.அதனால இன்னொரு பரிசல வாங்கி ஓட்டுனா ஓரளவுக்கு சமாளிச்சரலாமேன்னுயோசன வருது.இன்னொரு பரிசலுக்கு என்ன வழி? இருக்கிற ரெண்டு ஆட்ட வித்து பரிசல் வாங்கிக்கலாம்னு சந்தக்கு ஆடுகள கொண்டாறா.ஆனா யாபாரத்துல அவ்வளவு நெளிவு சுளிவு அவளுக்கு தெரியல.பேச்சுக்கேத்த வினயம் இல்ல.மலைச்சாமியும்அந்த சந்தைக்கு வராரு.இவளயும் பாக்குறாரு.என்ன விஷயம்னு கேட்டும் தெரிஞ்சுக்கிடறாரு.அவளோட சாமார்த்தியம் யாபாரத்துக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சு பெருசுக்கு.சரி, விவரம் தெரியாத பொண்ணு, நாமளே வித்துக் கொடுத்துடலாம்னு விவரமா பேசி ஆட்டுகள நல்ல விலைக்கு வித்துக் கொடுக்கார் மனுஷன்.அவளுக்கு ரொம்ப சந்தோசம். காச வாங்கிட்டு
சந்தைய சுத்தி வரா.அப்பத்தான் ஒரு போட்டோ கடய பாக்குறா குயிலு.போட்டோ எடுக்கணும்னு ஆச வந்துருது அவளுக்கு.போட்டோ கடக்காரன் எச்சா பணம் கேக்குறான்னு சண்ட போட்டுகிட்டு நிக்கிறா குயிலு.இதயும் பாக்குறாரு பெருசு.அங்கயும் ஒரு பஞ்சாயத்து.அவ கொடுக்க நினச்ச காசு போக மிச்ச காச தான் கொடுக்கிறதா சொல்ல பிரச்சன முடிஞ்சது.
போட்டோவுக்கு நிக்கிறா குயிலு. திடீர்னு பெரிசையும் கூப்பிட்டு தன் பக்கம் நிக்கச் சொல்லிடறா.பெருசுக்கு கொஞ்சம் சங்கடம் தா(ன்) .வெகுளியா இருக்கா, வலுவுக்கு கூப்பிடாறாளேன்னு போட்டோ எடுத்துக்கிடறாரு.அந்தக் கத அப்ப முடிஞ்சிருச்சு.
***
நம்ம குடும்பம் நல்லா இருக்கோ இல்லியோ அடுத்தவன் வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிறதலதான் சில பேருக்கு பொழப்பே.அடுத்தவன் பண்ற நல்லது கண்ணுக்குத் தெரியுதோ இல்லையோ அவன் எப்ப இடறுவான்னு தெரிஞ்சுக்கிறதலதா இந்த மாதிரி மனுஷங்க கண் கொத்தி பாம்பா இருப்பானுங்க.அப்பிடி ஒருத்தன் இருக்கான் பாரபட்டில.அவன் உண்மையான தொழிலே கயிறு திரிக்கிறதேன்.
மலைச்சாமியும் குயிலும் சேந்து போட்டோஎடுத்துக்கிட்டத பாத்து தொலச்சிடறான் .சமயம் பாத்து கிடக்கான்.
அன்னக்கி பொன்னாத்தா தனியா இருக்கா.அதான் சரியான நேரமுன்னு இல்லாத விஷயத்த பொல்லாத விஷயமா ஊதி ஊதி பேசி குயிலுக்கும் மலைச்சாமிக்கும் உறவு இருக்கிறதா சொல்லி சாட்சிக்கு அந்த போட்டோவைக் காட்டி வில்லங்கத்த
ஆரம்பிச்சு வச்சிடறான்.
புருஷன மதிக்காம பொன்னாத்தா குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தாலும் புருஷன ராமனா தான் நினச்சிக்கிட்டு இருக்கா அவ.ஆனா அந்தப் போட்டோ தான் அவ மனச கலைச்சிருச்சு.
எடுக்கிறா சீமாத்த.
விளாசறா குயில.
தெரு சனமே பேச்சத்துப் போயிடுது.
ஊருக்குள்ள வேற பேச்சு இல்ல.
இத ஒண்ணத் தவிர.
இது வரைக்கும் குயிலு மனசுல என்ன இருந்துச்சோ, தெரியல.பொன்னாத்தா கேட்டாளே ஒரு கேள்வி.
"ஏன்டி என் புருஷன வச்சிருக்கியா? "ன்னு.அது அவள காயப்படுத்துன மாதிரி தெரியலே.
ஒத்தயில இருக்கா அவ.விசனப்பட்ட மனசு , உண்மையா இல்லாதிருந்தா பொங்கியழும்.புலம்பித் தள்ளும்.அவளோ மவுனமா இருக்கா.பொன்னாத்தா சொன்னத நினச்சு பூமாரி பொழியறதா நினச்சுக்கறா.
இது இப்ப அவ நிலம.
ரெண்டு நா வெளியூரு போயிட்டு அப்ப தா வருது பெருசு.குயிலு வீட்டுக்கு போகுது.அவிக உறவு அவங்களுக்கே தெரியாத நிலயில அது கொச்சையா ஊரு பூரா காத்துல பறந்த விஷயம் பெருசுக்கு தெரியல போலேன்னு குயிலும் ஒண்ணுஞ் சொல்லாம வீட்டுக்கு போன்னு சொல்லறா.
அப்புறமென்ன?
பஞ்சாயத்து.
பெரிச எதுத்து எவனும் பேசுனதில்ல.அந்தமாதிரி எந்த எடக்கு மடக்கும் பெரிசும் செஞ்சதில்ல.அது உண்மையோ பொய்யோ, இது தான் சமயம்னு அவனவன் பங்குக்கு கேள்வி கேட்கறாங்க.
உங்களுக்கும் அவளுக்கும் தொடுப்புன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே அது உண்மையான்னு ஒருத்தன் கடைசி வார்த்தய துப்ப முடியல அதுக்குள்ள தலயக் கவுத்துக்கிட்டான்.அதுக்கு பெரிசு பாத்த பார்வைதான் காரணம்.
கிளி அப்பவே சொல்லிச் "சு "ன்னு ஒருத்தன் சொல்லி முடிக்கல.அவனும் பெரிசோட பார்வையில குனிஞ்சிட்டான்.இன்னொருத்தன்,
ஊருக்கே தலக்கட்டு குடும்பம், அந்த வீட்டுக்குள்ளயே குழப்பம் வந்துடுச்சேன்னு முடிக்க முடியல.
...வந்தவன் போனவன் எல்லாம் கேள்வி கேட்கறான்.என்னப் பத்தி கேள்வி கேட்க எவனுக்கு யோக்யதை இருக்குது ஊருக்குள்ள? .தான் யாரு தன் தன்மானம் என்னன்னு இன்னும் கூட புரிஞ்சுக்காத பாவி மக்களா இருக்கானுகளே? இப்படி அதும் மனசுக்குள்ள ஓடிட்டிருக்கோ என்னமோ? யாருக்குதெரியும்?
கடசியா ஊரு சனத்த பாக்குது பெரிசு. எல்லாரும் பேசியாச்சில்லங்கற மாதிரி ஒரு பார்வை..இப்ப வாயத் தொறக்குது.
"எல்லாரும் கேட்டுக்கங்க.
ஆமா!
அவள நான் வச்சிருக்கேன் ".
அல அடிச்சி ஓஞ்சாச்சி
புயல் வீசி அடங்கிருச்சி.
இப்ப கூட்டம் கலைஞ்சிருச்சு.குயிலோட நினைப்பா ஒத்தையிலே அந்த மகராசன்.
***
ஆயிரந்தா இருந்தாலும் பொன்னாத்தா விட்டுறுவாளா?
ஊர்க்காரங்கள கூப்பிட்டு விருந்து வக்கிறா.கிடா வெட்டி.கூடவே சாராயமும்.விஷயம் இதுக்குத்தான்.பரிசல்காரிய ஊரை விட்டு தொரத்தனும்.அதுக்குத்தான் தடபுடலா பொன்னாத்தா வீட்டுலயே விருந்துக்கு ஏற்பாடுகள் நடக்குது.கறிச்சோறு திங்கவே ஒரு கூட்டம் அலயும்.அந்தக் கூட்டம்தா பொன்னாத்தா வீட்டுல உட்காந்திருக்கு.
அங்கன வராரு பெருசு.
பாக்காரு.வீச்சரிவாவ கையில் எடுத்துக்கிறாரு.அப்ப சொல்றாரு.
"உங்க அத்தன பேருக்கும் சொல்றேன். வீடு பூரா வெட்டரிவாவும், வேல்கம்பும் வச்சிருக்கேன்.நீங்கஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா எடுத்துகிட்டு வாங்க.எவனுக்காவது தைரியமிருந்தா அவள தொட்டுப் பாருங்கடா.சாச்சுப்புடறேன் சாச்சு.
நா இப்ப ஆத்தங்கரைக்கிதா போறேன்."
குயில தேடி போகுது பெரிசு.குயில அங்க காணோம்.ஊரே பரபரத்து ஓடுது ஆத்தங்கரைக்கி.
வெறிச்சு நின்னுகிட்டு இருக்கா குயிலு.அவளச் சுத்தி நாலு போலீசும், நல்லா இருந்த ஊரும்.தரயில ஒரு பொணம்.பெரிசுக்கு ஒண்ணும் புரிபடல.யாருக்கும் எதும் தெரியல.கொல செஞ்ச குத்தத்துக்காக போலீசோட போறா குயிலு.
***
ஜெயில் :
நீ ஏன் இப்படிஞ் செஞ்ச. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தானே வக்கீலு வெக்க முடியும்.
-இது மலைச்சாமி.
நீ வக்கீலு வெக்க மாட்டேன்னு சொல்லு,உண்மையச் சொல்லுறேன்.
-இது குயிலு.
மலைச்சாமிக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல.காரணம் இல்லாம அவளும் இப்படி பேச மாட்டாளேன்னும் யோசிக்காம இல்ல. வேற வழி? சரின்னு ஒப்புக்கிறாரு.
இப்ப சொல்றா குயிலு...
எந்த அசிங்கத்த மறச்சு குல கவுரவத்துக்காக மானத்த பெரிசா நினச்சு எல்லாஅவமானங்களயும் ஏத்துகிட்டு அந்த மனுஷன் வாழ்ந்துட்டு வந்தாரோ, அந்த
கோட்டைய சாய்க்கத்தான் அவன் வந்தான்.இருபது வருஷத்துக்கு முந்தி பொன்னாத்தா சீரழிஞ்சு போயிட்டா ஒருத்தனால மாமன் கால்ல விழுந்து கெஞ்சி மானத்தக் காப்பாத்துடா மருமகனேன்னு சொன்னாரே, அதுக்காக பொத்தி பொத்தி மறச்ச அந்த அசிங்கமான உண்மய உடைக்கத்தான் அவன் வந்தான்.ஏன்னா அந்த அசிங்கத்துக்கு காரணமே அவந்தானே.வந்தவன ஊருக்குள்ள விட்டா என்னாகும்? பல நா கோட்ட ஒரு நா இடில சாஞ்சிருமே? மலச்சாமி வேதன குயிலுக்கு தெரியுமே. மலச்சாமி மேல அவ வச்சிருக்கிறது பாசமா? மரியாதையா? கஞ்சிக்கு வழி செஞ்ச வள்ளலா? இது அதுக்கு மேலே தானே.அது மனசொடிஞ்சா இவளாலே தாங்க முடியாதே?
அதான்...
பரிசல் ஓட்டிட்டு வந்தவகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடறான்.இவன ஊருக்குள்ள விட்டாத்தானே அத்தினி பிரச்சினையும்.துடுப்பாலேயே அடிச்சுக் கொன்னுட்டேன்னு சொல்றா.
கேட்டா கொடுக்குமுன்னுதான் சாமிய வேண்டிக்கிறோம்.கேட்காமயே நம்மள காப்பாத்துன சாமியா மலைச்சாமிக்கு தெரியறா குயிலு
அதயே அவகிட்டவும் சொல்றாரு.
இப்பத்தான் அவ கண்ணுல சந்தோசம் தெரியுது.இப்ப கேட்கிறா.
"ஏய்யா என்ன நீ நெனக்கல? உன் மனசுல எனக்கு இடமில்லையா?" உண்மயச் சொல்லு.
குயிலு!
நீ மட்டும் தான் என் மனசுல இருக்கே!
நீ எத்தினி வருஷம் கழிச்சு வந்தாலும் உனக்காக காத்துகிட்டு இருப்பேன்னு வாக்கு கொடுக்கார்.
***
பல வருஷ தண்டன குயிலுக்கு.அவ வராம தன் உசிரு போகாதுன்னு
அவ இருந்த குடிசையிலேயே தங்கிக்காரு பெருசு.அவ எப்ப வருவான்னு ஆத்தங்கரையையே பாத்து பாத்து அவரோட வாழ்க்கையும் பல வருஷம் ஓடிருது.நினச்சு நினச்சு விசனப்பட்டே வருஷங்களும் கரையுது.மனுஷன் படுத்த படுக்கையா கிடக்கார்.இப்பவோ அப்பவோன்னு உசிரும் இழுத்துகிட்டுஇருக்கு.ஊர் சனமும் இதுக்கு மேல தாங்காதுன்னு குயிலுக்கு சொல்லி அனுப்புறாங்க.
***
பெரிசு படுத்துருக்கு.மூச்சு மட்டும் வந்தும் போயிகிட்டும் இருக்குது.
குடிசைக்குள்ள காலடி வக்கிறா குயிலு.அவ மூச்சுக்காத்தும் வாசனையும் அந்த உடம்புக்கு தெரியாதாங்கற மாதிரி சின்ன உதறல் பெரிசு கிட்ட இருந்து.
"மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவாபெண்ணே "
பெரிசோட நினப்பு குயிலுக்கு தெரியாதா .
அவ கண்ணீரு பெரிச அசைக்குது.பெரிசுக்கு லேசா முழிப்பு வருது.அவளப் பாத்த சந்தோசம் கண்ணுல தெரியுது.இதுக்குத்தானே இத்தினி வருஷம் காத்திருந்தேன்னு சந்தோசமா கண்ண மூடுது.
கொள்ளி வச்சு முடிஞ்சதும் ரயிலேறிப் போகிற குயிலு உடம்புக்குள்ள மட்டும் உசுறு தங்குமா?
குயில் பாட்டு நின்னுடுச்சு.
*********************************************
ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறது.
-வைரமுத்து.
முதல் மரியாதை..
முற்றும்.
" சத்ரியன் இசை வெளியீட்டு விழாவில் அமீர் பேசிய பேச்சு."
இதற்கு பதில் இவ்வார பத்திரிக்கையில்.
நல்ல பதிலை அளித்தவருக்கு நம் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
https://uploads.tapatalk-cdn.com/201...5c0f7248aa.jpg
நெஞ்சை அள்ளும்
உடலை உலுக்கும்
நடன அசைவுகளில்
நடிகர்திலகம்
மெய்சிலிர்க்கும்
இந்த வீடியோ பதிவுகள்
சத்யம் படத்திலிருந்து..
YouTube. ல் இன்று நான் தரவேற்றியது...
Sivaji 's sathyam: http://youtu.be/TwwG48p8oYw
Sathyam-song: http://youtu.be/EROIWkJZu3g
திராவிட இயக்கங்கள் (முக்கியமாக தி.க.,தி.மு.க )சமூக நீதி கொள்கையில் சாதித்தாலும், பொதுவாக பகுத்தறிவு கொள்கையில் சமூகத்தை பின் தங்க வைத்து தனி நபர் துதிக்கு தள்ளி விட்டது. பேச்சு திறமை ஒன்றை மட்டும் முன்னிறுத்தி அதன் செயல்தன்மையை,உண்மை தன்மையை நிலை நிறுத்தாமல், ஆராய தலைப்படாமல், தலைவர்களின் சிலைகளை,சமாதிகளை சந்நிதிகளாக்கி ,பக்கதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவும்,விஞ்ஞானமும் கூட இந்த பகுத்தறிவாளர்களை அண்டாமல் காத்து பலனடைகிறது.
மாற்று முகாமை குறி வைத்து பொய்களை பரப்புதல் (முக்கிய குறி காமராஜ்,சிவாஜி போன்ற திறமை வாய்ந்த நேர்மையாளர்கள், சொன்னதை செய்து செய்வதை சொல்பவர்கள்), தங்கள் தலைவர்களை பற்றி இல்லாத கட்டுக்கதைகளை பரப்பி மக்களை போதையில் வைத்திருத்தல் இப்படியாகவே செயல்பாடுகள்.
உண்மைகளை சொல்லட்டும் .நமக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் மிகையான , லாஜிக் மீறிய பொய்கள்?
உதாரணம். சமீபத்தில். இதில் குறிப்பிட படும் நபர் மறைந்து 29 வருடங்கள் முடிந்து விட்டதால் பெயரை தவிர்க்கிறோம். ஒரு கட்சியின் நிறுவனர். ஆனாலும் குறிப்புகளை வைத்து யூகிக்கலாம்.
சமீபத்தில் பாக்யராஜின் புதல்வர் சாந்தனுவின் பட விழா (அல்லது பார்த்திபனின் படவிழா) வில் பேசிய எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து கருத்தை அள்ளி அள்ளி வீசும் பகுத்தறிவு இளம் சிங்கம் கரு.பழனியப்பனின் அற்புதமான கதை-வசனம்.அடிப்படை சரித்திர அறிவு,பொது அறிவு,தன் துறை சம்பத்த பட்ட விஷயங்களிலேயும் லாஜிக் இடறல்.ஆனாலும் யாருடைய இமேஜையோ காக்கும் அவசர பொய்.
ஒரு ஏழை தந்தைக்கு ஒரு மகன் மலைக்கள்ளன் பார்க்கும் போது பிறந்ததால் மலைக்கள்ளன் என்று பெயரிட்டாராம்.(சுமார் 54,55 என்றே வைப்போம்.கிராமத்தில் ஒரு வருடம் கழித்தே பார்த்திருக்க வாய்ப்பு) இவர் இவர் தலைவராக எண்ணி யார் பெயரை வைத்தாரோ அவரை பார்த்து மெடிக்கல் சீட் கேட்க வந்தாராம். தமிழகத்தில் சீட் பஞ்சம் ஆதலால் அப்போது சி.எம். ஆக இருந்த n .t .r அவர்களிடம் சொல்லி மலைக்கள்ளனை ஆந்திராவில் சேர்க்க வைத்தாராம் .இந்த தலைவர் அமெரிக்காவில் நலிவுற்று சிகிச்சை பெரும் போது சிகிச்சை கொடுக்க வந்தவரு அதே மலைக்கள்ளனாம்.
மலைக்கள்ளன் பிறந்தது- 1955.
மருத்துவ படிப்பு சீட் தேடியது-1983(என்.டி..ஆர் ஆந்திர முதல்வரான வருடம்)
மலைக்கள்ளன் அமேரிக்காவில் தன் தலைவருக்கு மருத்துவம் பார்த்தது -1987 (அவருக்கு சீட் வாங்கி கொடுத்தவர் மறைந்தது.)
சராசரி மாணவர்கள் மருத்துவ படிப்பு சேரும் வயது- 18.
சராசரி மாணவர் மருத்துவம் படிக்க ஆகும் வருடம் - m .b .b .s - 5 1/2 வருடங்கள். ஹவுஸ் சர்ஜன் -1 வருடம். Md /ms -2 வருடங்கள்.
கலை வேந்தன் கொடுத்த டிப்ஸ் போல.
உண்மையே உன் விலை என்ன?
முதல் மரியாதை
முழுப்பதிவு.
வாக்கப்பட்டு வந்த பொஞ்சாதி வக்கனையா ஆக்கிப் போட தெரியாதவளா இருந்தாலும் சரி, நல்ல பேச்சு நாலு பேசத் தெரியாதவளா இருந்தாலும் சரி, நாலு பேருக்கு கிள்ளிப் போடாதவளா இருந்தாலுஞ் சரி கட்டிக்கிட்ட புருசன் மனச கல்லாக்கிக்கிட்டு காலத்தைஏதோ ஓட்டிடலாம்.ஆனா மானத்தை தொலச்சவள கட்டிக்கிட்ட புருஷன் தான், வெளியவும் சொல்ல முடியாம உள்ளவே புழுங்கிக்கிட்டு நடைப்பிணமாத்தான் வாழ்ந்துகிட்டு இருப்பான்.இது நல்ல மனுசனுக்குண்டான குணம்.
ஊருக்கே பெரிய மனுசனா இருந்தாலும், குடும்பம்னு ஒண்ணு இருந்தா அவரு பேச்சை கேட்கிற மாதிரி பொண்டாட்டியும் , புள்ள குட்டிகளும் இருந்தாத்தேன் மனுசனுக்கு படுக்கையிலே தூக்கம் வரும்.இல்லேன்னா அந்த படுக்கை கூட சுமையாத்தான் தெரியும்.ஊருக்குள்ள போயிட்டும், வந்துட்டும் இருக்கும் போது கௌரவத்திற்கு சிரிச்சு தொலச்சு செத்த பொணமா வாழ்க்கைய நடத்தனும்ங்கறமாதிரிதான் அவுக பொழப்பு இருக்கும்.
இங்க மலைச்சாமியோட கதயும் இதப் போலத்தேன்.மத்த மனுசங்களோட குணத்தோட இந்த மனுசனோட குணத்த இணைச்சுப் பேச முடியாது.அந்த மனுசனோட குணம் பூமிக்குள்ள புதஞ்சிருக்கிற வைரம் மாதிரி.அந்த வைரத்தோட குணம் பொஞ்சாதிக்குத்தான் தெரியாம போச்சு.ஆனா ஊருக்கு நல்லாவே தெரியும்.
அவுரு பொஞ்சாதியோட கத தான் என்ன?
கண்ணாலத்துக்கு முன்னயே வேற ஒருத்தனோட உறவாண்டுகிட்டு கர்ப்பமும் ஆகிப்போனா.விதச்சவனோ விதியேன்னு ஓடிப் போயிட்டான்.
மகளோட சேதி தெரிஞ்ச அப்பனுக்குத்தான் வேற வழி தெரியல.அவனோ மானம், மருவாத கெட்டா தூக்குல தொங்கற ஆளு. அந்த கணம் சாமி மாதிரி தெரிஞ்ச ஒரே ஆளு மலைச்சாமி தான்.மலைச்சாமி கால்ல விழுந்து, நாசமாப் போன மகள நீ தான் கட்டிக்கிடனும். இல்லலேன்னா என் உசுறு என் உடம்புல தங்காதுன்னு கெஞ்சறான்.என் உடம்பு உன் காலுல, என் மானம் உங் கையிலன்னு அழுகறான். பெரிய மனுசன் கால்ல விழும்போது அந்த " சாமி " க்கு எதிர் வார்த்த சொல்ல வரல.
ஒத்துக்கிறாரு.
கண்ணாலம் முடிஞ்சாலும் அவ புத்தி மாறல.அது நாய் புத்தி.மலைச்சாமி ஊருக்கு பொண்டாட்டியா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள அவள ஏத்துக்கல.
ஆனாலும் அவுளுக்கு பொறந்த மகள தன் மக மாதிரிதான் பாசம் காட்டி வளர்க்கிறாரு.
மலைச்சாமிக்கு பாதி நிம்மதி கிடைக்கறது வீட்டுல இருக்குற குயிலு, காட்டுல பாடுற பாட்டு, வயலு, வரப்புதான்.இப்புடியே பொழப்பும் ஓடிட்டிருக்கு.
மரியாதைன்னா என்னா?அது கடுகளவு கூட தெரியாது அவுளுக்கு.
ஒரு நா, எச்சப் பாத்திரத்த கழுவறா.கழுவுற எச்சத் தண்ணிய வீசறா.அது மலைச்சாமி மேல வந்து விழுகுது.அதுக்காக அவ வருத்தமா பட்டா? கேக்குறா கேள்வி. எச்சத் தண்ணி வீசறது தெரியாம குறுக்கு வர்றதுக்கு அறிவா கெட்டுப் போச்சு? மத்த புருஷனா இருந்தா அப்பவே அவ கன்னம் வீங்கியிருக்குமே! ஆனா இது ஊருக்கே சாமியாச்சே.
அந்த ஈரத்தோட வீதில இறங்கி நடந்து வர்றாரு.எதுக்கால வர்றா ஒருத்தி.ஈரம் பாத்து, என்னான்னு கேக்குறா?
மலைச்சாமி சொல்றாரு.
" உங்க்கக்கா மஞ்சத்தண்ணி விளையாண்டுட்டா புள்ள ".
**
மலைச்சாமிக்குள் இருக்கும் நகைச்சுவை அங்கே தலையெடுக்கிறது.ஒரு சோகம் அங்கே சந்தோசமாய் மாறியது. அந்தப்பேச்சு மலைச்சாமியை பார்த்து வியக்க வைக்கிறது.
**
வெள்ள வேட்டி.சாதா சட்ட.துண்டெடுத்து ஒரு உருமா கட்டு.கையில அருவா. வீட்டுக்குள்ள பாக்குற பெரிசு வேற.வீதில இறங்கிட்டா அது வேற.பெரிசுக்கு வீடு கொடுக்காத சுகத்த வெட்ட வெளி கொடுக்குது.இதுக கூட உறவுகதானே சந்தோசப்பட்டுக்கற மனசு அது.மலைச்சாமி சாந்தமான மனுசந்தான்.அவுரு கிட்டயும் பெரிய வீரம் ஓளிஞ்சுகிட்டுதா இருக்கு.அந்த வீரத்த அவுரு புடிச்சிருக்கிற அந்த அருவாவ கேட்டா கூட சொல்லும்.அருவா கைப்புடிய புடிச்சு அத பின்ன மடக்கின மாதிரி நடப்பாரு பாருங்க அதுல தெரியும் அவுரு கெத்து.
மனுசன் செருப்பு போட்டு பாத்திருக்காது அந்த ஊரு.வெறுங்காலு தான். அதுக்கு கூட ஒரு காரணம் இருக்கு.எந்த காலுல விழுந்து மாமன் தன் பொண்ண கட்டிக்கோன்னு கெஞ்சுனானோ அந்த கால்ல போட்ட செருப்பா பொஞ்சாதிய நினச்சதாலதான், அந்த சாமி செருப்பே போடர்றதில்ல.
குதிரையில் ஏறி அய்யனார் போற மாதிரி நடந்து போறாரு மனுசன்.
நடந்து போற மனுசன் மேல பூமில இருக்கற முள்ளுக்கு என்ன கோபமோ அவரு கால முள்ளு தச்சுருச்சு.
முள்ளு தச்ச இடம் செங்கோடன் வீட்டு வாசல்ல.செங்கோடன் அந்த ஊருக்கு செருப்பு தைக்கிறவன்.
"டேய் செங்கோடா "
பெருசு கூப்பிடுது.
தூக்கத்துல கேட்டாலும் இந்த குரலுக்கு உருவம் ஒண்ணுதான்.அது செங்கோடன் மனசுல பதிஞ்சது.
"அய்யா " .இது செங்கோடன்.
" கால்ல முள்ளு தச்சுருச்சு ."
கிடுக்கியோடு முள்ளெடுக்கறான் செங்கோடன்.
பெருசு பேச்சு பெரும்பாலும் ஒத்த பேச்சுதான்.ஆனா அது பெரும்பேச்சு.
அப்பிடித்தான் அது அப்ப சொல்லுது.
"உன் வீட்டுகிட்ட தான் என் கால்ல முள்ளு தைக்கனுமா"
அவன் கேக்குறான்
"ஊருக்கே செருப்பு தக்கிறேன்.உங்க கால்லுக்கு ஒரு செருப்பு தச்சு போட முடியலயே "
பெருசு போகுது ஒண்ணும்சொல்லாம.
கட்டுன பொஞ்சாதிகளுக்கு கூட தெரியாத சில சங்கதி அந்த ஊரு வண்ணானுக்கும், நாசுவனுக்கும் தெரியும்பாங்க.செங்கோடன் கூட அத போலத் தானே.அவனுக்குத் தெரியுமே பெருசோட கத.
***
ஆண்டவன் படச்சானா இல்ல, அதாவே அமஞ்சதா இயற்கை.அது ஆருக்கும் தெரியாது.
பாரப்பட்டி கிராமந்தான் மலைச்சாமியோட ஊரு.மலைச்சாமியோட சந்தோசங்கள்ள ஒண்ணு தான் இசப் பாட்டு படிக்கிறது.வித போடறது, நாத்து நடறது, களை எடுக்கறதுன்னு அது பாட்டுக்கு அந்த வேலைக நடக்கும் .கூடவே பாட்டுப் படிக்கறதும் நடக்கும்.விவசாயம் வயத்துக்குன்னா பாட்டு மனசுக்கு.இது எல்லா ஊர்லயும் உண்டுதான்.
பெருசும் சில சமயம் குசும்பு வேலையெல்லாம் செய்யறதுண்டு.
"ஆம்பளக்கு ஒரு வேல
பொம்பளக்கு நூறு வேல"
அப்படிம்பாங்க.
குடும்பத்துல என்ன சண்டயோ, வயல் வேலக்கு வந்தவங்க, சில சமயம் பாடாம தேமேன்னு வேல செய்வாங்க.அதப் பாக்கற பெரிசுக்கு, இவிகள எப்படியாச்சு பாட வச்சாகணும்ற காரியமா தொட்டில்ல போட்ட குழந்தய கிள்ளி விட்டிருவாரு.அழுக சத்தம் கேட்டு வர்ற ஆத்தா ஆராராரோ பாடி தொட்டில ஆட்டுவா.
இப்ப எப்படி பாட்டு வந்துச்சுன்னு வெளிய வரும் பெரிசு.
***
பூமிய நம்பி வாழறவனுக்கு மழ தான் சாமி.அது ஒண்ணுக்கு ஊத்தற மாதிரி ஊத்துனாலும் ஏதோ ஒரு சாண்
வயிறுனாச்சும் நெறையும். மழைங்கிறதே மாயமாகிப் போச்சு, அப்பிடிங்கிற நெலம வந்தா ஊர் சனம் என்ன செய்யும்? பஞ்சந்தா தல விரிச்சு ஆடயில பாவி மக்க எங்கிட்டு போவாங்க? கூலி வேல தான் நாதின்னு இருக்கிற கூட்டம் கூழ கும்பிடு போட்டுகிட்டு பஞ்சம் தேடி மறு தேசம் போவாங்க.
கஞ்சியோ, கூழோ ஏதோ ஒண்ணு கிடச்சாத்தானே வயிறு கேக்கும்.அதுக்கு கூட வக்கில்லாம குடல எத்தன நா(ள்) சாகடிக்கிறது.
இந்த நிலமையில தான் பாரபட்டிக்கு வராங்க குயிலும், அவங்கப்பனும்.
அவுக எந்த சாமிய நெனச்சு அந்த பூமிக்கு வந்தாங்களோ தெரியாது, ஆனாஅவுகளமுதலா
பாக்குறதுதென்னமோ மலைச்சாமிதான்.
வந்தவங்க வாழ்ந்த ஊரு பேரு "அரைக்படித்தனம் பட்டி ".ஒரு வயசாள ஆளு, ஒரு கொமரிபுள்ள, அவங்களுக்கு ஒத்தாசையா ஒருத்தன்.வயலுக்கு அரணா போட்ட வேலிப்படல மிதிச்சுகிட்டு உள்ள வராங்க.பெரிசு பாத்துட்டு சத்தம் போடுது.
"எவண்டாவன், வேலிய மிதிச்சுகிட்டுஉள்ள வர்றது "
வயசான ஆளு சொல்றான்,
" அஞ்சாதிங்க சாமி , பஞ்சம் பொழைக்க வந்திருக்கோம் "னு.
பெரிசு கெக்குது,
" இங்கயே பஞ்சம் அவுத்துப் போட்டு அம்மணத்தோட ஆடுது.நீங்க வேற பஞ்சம் பொழைக்க வந்துட்டீங்களா "
பாக்கவும் பாவமா இருக்குது.இல்லாதவங்கள விரட்டியடிக்கவும் மனசில்ல.ஒரு மனசா அவங்கள ஒரு ஓரமா குடிசையப் போட்டு தங்கிக்கவும் சொல்லுது பெரிசு.
அந்த "மழைச்சாமி "கை விட்டாலும், இந்த "மலைச்சாமி "யால
பஞ்சம் பொழைக்க வந்தவங்களுக்கு ஒரு வழி பொறக்குது.
***
வந்தவங்கள்ள ஒரு கொமரி இருக்கா ல்ல.அவ பேரு குயிலு.அவளுக்கு பேருக்கேத்த குரலுதா.மனசுல ஒண்ணும் வச்சிக்கத் தெரியாது.ஆளு கருப்பு.மனசு வெள்ள.
அம்பா வந்தாலும், வம்பா வந்தாலும், வர்ற வார்த்தைக்கு சளைக்கமா பட்டுன்னு சொல்லிருவா பதில.
களங்கமில்லாத அவ பேச்சு பழக்கம் எல்லாம் மலைச்சாமிக்கு புடிச்சுப்போச்சு.
***
அவிக சிநேகிதம் அப்பிடியே வளந்துட்டு வருது.
பெருச அப்பப்போ சீண்டி விட்டு விளையாட்டு பண்றது அவளுக்கு பழக்கமாவும் போச்சு.
அப்பிடித்தான் ஒரு நா,
பேச்சு வாக்குல பெரிச கிழவன்னுட்டுர்றா.பெருசுக்கு பொத்துகிச்சே கோபம். என்னய்யா கிழவங்கற.உன்ன மாதிரி கொமரிக என் கையில ஊஞ்ச கட்டி ஆடலாம்னு தன் வீரத்த சலிக்க,
அதுக்கு அவ
பெரிய பாறாங்கல்ல தூக்க முடியுமா உன்னாலன்னு ஒரு கேள்விய கேட்டுப்புட்டா.கேட்டுப்புட்டு ஓடிப்புட்டா.வீரத்தப்பத்தி பொம்பள பழிச்சா பொட்டையனுக்கும் ரோஷம் வருமே.பெருசுக்கு சொல்லவா வேணும்.அவ கேட்டதுல நிலை கொள்ளல.வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு கல்லதூக்கிப் பார்க்கிறாரு..தூக்கறாரு. தூக்கறாரு..ம்கூம்.அரையடி தூக்குறதுக்குள்ள மூச்சு வாங்குது.இது சரிப்பட்டு வராதுன்னு அப்ப நடய கட்டுறாரு.இத அவளும் தூரத்திலிருந்து பாத்துகிட்டுதா இருக்கா.
பெருசு அந்த கல்லு வழியா தா அப்பப்போ வரும்.போகும்.கல்ல பாக்கையில அவ கேள்விதா மனசுல குடயும்.அப்பப்போ தூக்கிப் பாக்கும்.கொஞ்சம் தூக்குறதும் பின்ன வக்கிறதும் பல நா பொழப்பாப் போச்சு.
இது ஒரு சாதாரண விஷயந்தானே? பெரிசுக்கு ஏன் வயசுக்கு ஒப்பாத காரியம்.
என்ன ஆச்சு பெரிசுக்கு?
******
பெரிசுக்கு என்ன ஆச்சு?
அந்த வருஷம் நல்ல வெள்ளாம.மழை மண்ணுன்னு விளச்சலுக்கு பல விஷயம் இருந்தாலும் மனுஷனோட உழைப்பு நல்ல படியா இருந்தாத்தேன் அதிக போகம் பாக்க முடியும்.அந்த விளச்சலுக்கு காரணமானவங்க கூலிக்காரங்க.அவங்க உழைப்புக்கு
மரியாத செய்ய வேண்டி,
விளஞ்ச நெல்லுல கொஞ்சத்த கூலிக்கு மேல நீங்க அளந்து வச்சிக்கங்கன்னு மலச்சாமி சொல்ல, கூலிக்காரங்களும் சந்தோசமா நெல்ல பங்கு போட்டுக்கிட்டு இருக்காக.அங்க வரா பொன்னாத்தா .என்னன்னு கேட்டு விஷயம் தெரிஞ்சுக்கறா.
அந்தாளு எனக்கு வாக்கப்பட்டு வந்ததே நாலு வெள்ளாட்டோட மட்டுந்தா, வேட்டி கட்டி இருக்கிறதே எங்கப்பன் காசுலதே, யாரோட காச யாரு தூக்கி கொடுக்கிறதுங்கற அர்த்தத்துல கேவலப்படுத்துறா.
ஊருக்கே நாட்டாம, பெரியமனுஷன்னு பாக்காம கூலிக்காரங்க அம்புட்டு பேரு முன்னாலே அவ ஏசியத யாரால தாங்கிக்க முடியும்? கோபம் தள்ளுது.ரெண்டு சாத்து சாத்தலாம்னு பொங்குது மனசு.மாமனோட கெஞ்சல் மனசுல வந்து நிக்குது.ச்சீ போ ன்னு மன பாரத்தோட போறாரு.
வேற ஏதாவது கஷ்டம்னா நாலு பேருகிட்ட பேசி ஆறுதல் தேடிக்கலாம். இவ கேவலத்த யாரு கிட்ட சொல்ல முடியும்? அது குடும்ப கௌரவத்துக்கே கேவலமாகிப் போயிடுமே. இப்படியே தா அந்த மனுஷனுக்கு பாறாங்கல்லு மாதிரி மன பாரம் அசயாம தங்கிட்டே இருக்கு.
மனசுல இருக்கற பாரத்த அப்பப்போ பாட்டுப்பாடி ஆறுதல் படுத்திக்குவாரு.
அவுரு தன் சோகத்த தாங்க தாய்மடி ஏதாவது கிடைக்குமாங்குற அர்த்தத்துல பாடறாரு.அந்தக் கொடியும் படர ஏதாவது தேரு கிடைக்குமான்னு அலையுது.
"ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே
கனவுலகம் தாங்காதே "ன்னு
அப்படின்னு அப்பத்தேன் ஒரு குரலு காத்துல வருது.
தண்ணியில்லாம தவிச்ச செடிக்கு மழத்தூறலா தண்ணி கிடச்சா எப்படி இருக்கும்.சோகமான மனசு கொஞ்சம் சொக்குது.
"உள்ள அழுகறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் "ன்னு
அடுத்த அடி போட,
"இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
உன்ன மீறவும் ஊருக்குள்
ஆளில்ல "ல்னு
ஞாயத்த, பதில் குரல் சொல்ல,
இது மாதிரியான ஆறுதலத்தான இத்தன நாளா தேடுனேன் ?ன்னு
ஆச்சரியமும் சந்தோசமுமா சுத்தி முத்தி ஆள தேடி தேடி யாரையும் காணோமேன்னு
"பூங்குயில் யாரது "ன்னு பெருசு
கேள்வி கேக்குறாப்புல ' பாடுது.
இனியும் இந்த மனுசனுக்கு தன் முகத்த காட்டாம இருக்க முடியாதுன்னு சொல்லி ஒருத்தி வந்து நிக்குறா.
பிரமிச்சு நிக்குது பெருசு.
அது
குயிலு.
உனக்குள்ளயா இவ்வளவு சங்கதி ன்னு விழி விரிஞ்சு பாக்குறாரு மனுசன்.
கவலய எல்லாம் காத்துல பறக்க விடு, மன பாரத்த தூக்கி எறிங்கற மாதிரி அவ பேச்சு பெருசுக்கு ஆச்சர்யமாச்சு.
அவள எட போட்டது தப்பாப் போச்சேங்கறது அவரு முகத்தில தெரியுது.
"பேச்சு விவரமாத்தான் இருக்கு, பெரிய அஞ்ஞானமெல்லாம் பேசுறியே " அப்படிங்குது பெரிசு.
"அப்படி பேசுலேன்னா அல்லல குத்தி விளயாடும் இந்தக் கால இளவட்டம்"அப்படிங்கறா குயிலு.
இளவட்டம்ங்கற வார்த்த பெரிசுக்கு ஆர்வமாச்சு.
உடனே,
"இளவட்டம்ங்கற மரியாதய எனக்குத் தர்றியா "ன்னு கேட்கறாரு.
அவளுக்கு இது கொஞ்சம் ஆச்சர்யத்த கொடுத்திருக்கும் போல.
"விட்டா கட்டிக்கிறதுக்கு தாலியோட வந்துருவீங்க போலிருக்கு "ன்னு அவ கேட்க,
"வந்தா என்ன? "ன்னு இவரு கேட்க
அப்பத்தா அவ,
ஆச கிழவனுக்குன்னு ஒரு வார்த்தய விட்டுப்புட்டா.
அறுபது வயசு மனுசந்தேன்.அது அந்த வயசுக்கு அதுக்கேத்த மாதிரி வாழலியே.மனசுல அதுக்கு என்ன வெல்லாம் ஆச இருந்திருக்கும். அது நொறுங்கி பல வருஷம் ஆச்சே.நாளாக நாளாக அந்த மன பாரம் நீங்க அதுவும் ஒரு வடிகால் தேடுமில்லையா.அந்த நேரத்தில அவ குணமும் பேச்சும் கொஞ்சம் சந்தோசம்னு நினக்கையிலே பாவி புள்ள கிழவன்னுட்டாளேங்கற கோபம் உடனே என்னையா கிழவங்கற, உன் குடிசய எல்லாம் காலிபண்ணி புடுவேன்னு தன் அதிகாரத்த காட்டுது.அதிகாரத்தோட பலவீனம் இந்த மாதிரி சமயங்களில்தா தெரிஞ்சுக்க முடியுது.
அந்த வார்த்தா அவள குத்திருது.
அதிகாரத்த சாய்க்கனும்னா பலமான வார்த்தைய சொல்லியாகனும்.அதனால,
"நீ குமரன்னு நான் ஒத்துக்கனும்னா இந்தக்கல்ல தூக்குய்யா பாக்கலாம்.அப்பிடி நீ தூக்கிப்பிட்டின்னா உன்ன குமரன்னா ஒத்துக்கிடர்றேன் "னு சவால் விடுறா.
அதுக்கு பெரிசு, "நீ குமரன்னு ஒத்துகிட்டா பத்தாது. என்ன கட்டிக்கிடறயா, தூக்கறேன் "ன்னு ஒரு கொக்கிய வீசுது.
அதுல எல்லாமே அடங்கிப் போயிருமேங்கற சாமார்த்தியந்தான் அந்தக் கேள்வி.
தனக்குத்தா ஜெயிப்புன்னு நினச்சுத்தா மனுசங்க பந்தயத்தில இறங்கறாங்க.அதுக்கு அவளும் விலக்கல்ல. ஒத்துக்கிடறா, அப்ப விட்டாப் போதும்னு ஒரு சமாதானத்துக்கு.
இந்தக் கூத்துதான் பெரிசு அந்த பாறய தூக்கிப் பாக்றதும் , முடியாம வக்கிறதுக்கும் உண்டான காரணம்.
****
ஒரு கிராமத்தோட வணிகம் அந்த ஊரு சந்தைய சார்ந்தது. எல்லாமே அங்க விக்கறதும் வாங்கறதும் நடக்கும்.பஞ்சம் பொழக்க வந்தாச்சு அந்த ஊருக்கு.அப்பிடியே இருந்தா பொழப்பு எப்பிடி நடக்கும்? அதான் ஒரு பரிசல அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓட்டி வர்ற வருமானத்துல பொழப்பு நடத்துறா குயிலு.அந்த வருமானம் பத்த மாட்டேங்குது.அதனால இன்னொரு பரிசல வாங்கி ஓட்டுனா ஓரளவுக்கு சமாளிச்சரலாமேன்னுயோசன வருது.இன்னொரு பரிசலுக்கு என்ன வழி? இருக்கிற ரெண்டு ஆட்ட வித்து பரிசல் வாங்கிக்கலாம்னு சந்தக்கு ஆடுகள கொண்டாறா.ஆனா யாபாரத்துல அவ்வளவு நெளிவு சுளிவு அவளுக்கு தெரியல.பேச்சுக்கேத்த வினயம் இல்ல.மலைச்சாமியும்அந்த சந்தைக்கு வராரு.இவளயும் பாக்குறாரு.என்ன விஷயம்னு கேட்டும் தெரிஞ்சுக்கிடறாரு.அவளோட சாமார்த்தியம் யாபாரத்துக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு போச்சு பெருசுக்கு.சரி, விவரம் தெரியாத பொண்ணு, நாமளே வித்துக் கொடுத்துடலாம்னு விவரமா பேசி ஆட்டுகள நல்ல விலைக்கு வித்துக் கொடுக்கார் மனுஷன்.அவளுக்கு ரொம்ப சந்தோசம். காச வாங்கிட்டு
சந்தைய சுத்தி வரா.அப்பத்தான் ஒரு போட்டோ கடய பாக்குறா குயிலு.போட்டோ எடுக்கணும்னு ஆச வந்துருது அவளுக்கு.போட்டோ கடக்காரன் எச்சா பணம் கேக்குறான்னு சண்ட போட்டுகிட்டு நிக்கிறா குயிலு.இதயும் பாக்குறாரு பெருசு.அங்கயும் ஒரு பஞ்சாயத்து.அவ கொடுக்க நினச்ச காசு போக மிச்ச காச தான் கொடுக்கிறதா சொல்ல பிரச்சன முடிஞ்சது.
போட்டோவுக்கு நிக்கிறா குயிலு. திடீர்னு பெரிசையும் கூப்பிட்டு தன் பக்கம் நிக்கச் சொல்லிடறா.பெருசுக்கு கொஞ்சம் சங்கடம் தா(ன்) .வெகுளியா இருக்கா, வலுவுக்கு கூப்பிடாறாளேன்னு போட்டோ எடுத்துக்கிடறாரு.அந்தக் கத அப்ப முடிஞ்சிருச்சு.
***
நம்ம குடும்பம் நல்லா இருக்கோ இல்லியோ அடுத்தவன் வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிறதலதான் சில பேருக்கு பொழப்பே.அடுத்தவன் பண்ற நல்லது கண்ணுக்குத் தெரியுதோ இல்லையோ அவன் எப்ப இடறுவான்னு தெரிஞ்சுக்கிறதலதா இந்த மாதிரி மனுஷங்க கண் கொத்தி பாம்பா இருப்பானுங்க.அப்பிடி ஒருத்தன் இருக்கான் பாரபட்டில.அவன் உண்மையான தொழிலே கயிறு திரிக்கிறதேன்.
மலைச்சாமியும் குயிலும் சேந்து போட்டோஎடுத்துக்கிட்டத பாத்து தொலச்சிடறான் .சமயம் பாத்து கிடக்கான்.
அன்னக்கி பொன்னாத்தா தனியா இருக்கா.அதான் சரியான நேரமுன்னு இல்லாத விஷயத்த பொல்லாத விஷயமா ஊதி ஊதி பேசி குயிலுக்கும் மலைச்சாமிக்கும் உறவு இருக்கிறதா சொல்லி சாட்சிக்கு அந்த போட்டோவைக் காட்டி வில்லங்கத்த
ஆரம்பிச்சு வச்சிடறான்.
புருஷன மதிக்காம பொன்னாத்தா குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தாலும் புருஷன ராமனா தான் நினச்சிக்கிட்டு இருக்கா அவ.ஆனா அந்தப் போட்டோ தான் அவ மனச கலைச்சிருச்சு.
எடுக்கிறா சீமாத்த.
விளாசறா குயில.
தெரு சனமே பேச்சத்துப் போயிடுது.
ஊருக்குள்ள வேற பேச்சு இல்ல.
இத ஒண்ணத் தவிர.
இது வரைக்கும் குயில மனசுல என்ன இருந்துச்சோ. தெரியல.பொன்னாத்தா கேட்டாளே ஒரு கேள்வி.
"ஏன்டி என் புருஷன வச்சிருக்கியா? "ன்னு.அது அவள காயப்படுத்துன மாதிரி தெரியலே.
ஒத்தயில இருக்கா அவ.விசனப்பட்ட மனசு , உண்மையா இல்லாதிருந்தா பொங்கியழும்.புலம்பித் தள்ளும்.அவளோ மவுனமா இருக்கா.பொன்னாத்தா சொன்னத நினச்சு பூமாரி பொழியறதா நினச்சுக்கறா.
இது இப்ப அவ நிலம.
ரெண்டு நா வெளியூரு போயிட்டு அப்ப தா வருது பெருசு.குயிலு வீட்டுக்கு போகுது.அவிக உறவு அவங்களுக்கே தெரியாத நிலயில அது கொச்சையா ஊரு பூரா காத்துல பறந்த விஷயம் பெருசுக்கு தெரியல போலேன்னு குயிலும் ஒண்ணுஞ் சொல்லாம வீட்டுக்கு போன்னு சொல்லறா.
அப்புறமென்ன?
பஞ்சாயத்து.
பெரிச எதுத்து எவனும் பேசுனதில்ல.அந்தமாதிரி எந்த எடக்கு மடக்கும் பெரிசும் செஞ்சதில்ல.அது உண்மையோ பொய்யோ, இது தான் சமயம்னு அவனவன் பங்குக்கு கேள்வி கேட்கறாங்க.
உங்களுக்கும் அவளுக்கும் தொடுப்புன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே அது உண்மையான்னு ஒருத்தன் கடைசி வார்த்தய துப்ப முடியல அதுக்குள்ள தலயக் கவுத்துக்கிட்டான்.அதுக்கு பெரிசு பாத்த பார்வைதான் காரணம்.
கிளி அப்பவே சொல்லிச் "சு "ன்னு ஒருத்தன் சொல்லி முடிக்கல.அவனும் பெரிசோட பார்வையில குனிஞ்சிட்டான்.இன்னொருத்தன்,
ஊருக்கே தலக்கட்டு குடும்பம், அந்த வீட்டுக்குள்ளயே குழப்பம் வந்துடுச்சேன்னு முடிக்க முடியல.
...வந்தவன் போனவன் எல்லாம் கேள்வி கேட்கறான்.என்னப் பத்தி கேள்வி கேட்க எவனுக்கு யோக்யதை இருக்குது ஊருக்குள்ள? .தான் யாரு தன் தன்மானம் என்னன்னு இன்னும் கூட புரிஞ்சுக்காத பாவி மக்களா இருக்கானுகளே? இப்படி அதும் மனசுக்குள்ள ஓடிட்டிருக்கோ என்னமோ? யாருக்குதெரியும்?
கடசியா ஊரு சனத்த பாக்குது பெரிசு. எல்லாரும் பேசியாச்சில்லங்கற மாதிரி ஒரு பார்வை..இப்ப வாயத் தொறக்குது.
"எல்லாரும் கேட்டுக்கங்க.
ஆமா!
அவள நான் வச்சிருக்கேன் ".
அல அடிச்சி ஓஞ்சாச்சி
புயல் வீசி அடங்கிருச்சி.
இப்ப கூட்டம் கலைஞ்சிருச்சு.குயிலோட நினைப்பா ஒத்தையிலே அந்த மகராசன்.
***
ஆயிரந்தா இருந்தாலும் பொன்னாத்தா விட்டுறுவாளா?
ஊர்க்காரங்கள கூப்பிட்டு விருந்து வக்கிறா.கிடா வெட்டி.கூடவே சாராயமும்.விஷயம் இதுக்குத்தான்.பரிசல்காரிய ஊரை விட்டு தொரத்தனும்.அதுக்குத்தான் தடபுடலா பொன்னாத்தா வீட்டுலயே விருந்துக்கு ஏற்பாடுகள் நடக்குது.கறிச்சோறு திங்கவே ஒரு கூட்டம் அலயும்.அந்தக் கூட்டம்தா பொன்னாத்தா வீட்டுல உட்காந்திருக்கு.
அங்கன வராரு பெருசு.
பாக்காரு.வீச்சரிவாவ கையில் எடுத்துக்கிறாரு.அப்ப சொல்றாரு.
"உங்க அத்தன பேருக்கும் சொல்றேன். வீடு பூரா வெட்டரிவாவும், வேல்கம்பும் வச்சிருக்கேன்.நீங்கஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா எடுத்துகிட்டு வாங்க.எவனுக்காவது தைரியமிருந்தா அவள தொட்டுப் பாருங்கடா.சாச்சுப்புடறேன் சாச்சு.
நா இப்ப ஆத்தங்கரைக்கிதா போறேன்."
குயில தேடி போகுது பெரிசு.குயில அங்க காணோம்.ஊரே பரபரத்து ஓடுது ஆத்தங்கரைக்கி.
வெறிச்சு நின்னுகிட்டு இருக்கா குயிலு.அவளச் சுத்தி நாலு போலீசும், நல்லா இருந்த ஊரும்.தரயில ஒரு பொணம்.பெரிசுக்கு ஒண்ணும் புரிபடல.யாருக்கும் எதும் தெரியல.கொல செஞ்ச குத்தத்துக்காக போலீசோட போறா குயிலு.
***
ஜெயில் :
நீ ஏன் இப்படிஞ் செஞ்ச. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தானே வக்கீலு வெக்க முடியும்.
-இது மலைச்சாமி.
நீ வக்கீலு வெக்க மாட்டேன்னு சொல்லு,உண்மையச் சொல்லுறேன்.
-இது குயிலு.
மலைச்சாமிக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல.காரணம் இல்லாம அவளும் இப்படி பேச மாட்டாளேன்னும் யோசிக்காம இல்ல. வேற வழி? சரின்னு ஒப்புக்கிறாரு.
இப்ப சொல்றா குயிலு...
எந்த அசிங்கத்த மறச்சு குல கவுரவத்துக்காக மானத்த பெரிசா நினச்சு எல்லாஅவமானங்களயும் ஏத்துகிட்டு அந்த மனுஷன் வாழ்ந்துட்டு வந்தாரோ, அந்த
கோட்டைய சாய்க்கத்தான் அவன் வந்தான்.இருபது வருஷத்துக்கு முந்தி பொன்னாத்தா சீரழிஞ்சு போயிட்டா ஒருத்தனால மாமன் கால்ல விழுந்து கெஞ்சி மானத்தக் காப்பாத்துடா மருமகனேன்னு சொன்னாரே, அதுக்காக பொத்தி பொத்தி மறச்ச அந்த அசிங்கமான உண்மய உடைக்கத்தான் அவன் வந்தான்.ஏன்னா அந்த அசிங்கத்துக்கு காரணமே அவந்தானே.வந்தவன ஊருக்குள்ள விட்டா என்னாகும்? பல நா கோட்ட ஒரு நா இடில சாஞ்சிருமே? மலச்சாமி வேதன குயிலுக்கு தெரியுமே. மலச்சாமி மேல அவ வச்சிருக்கிறது பாசமா? மரியாதையா? கஞ்சிக்கு வழி செஞ்ச வள்ளலா? இது அதுக்கு மேலே தானே.அது மனசொடிஞ்சா இவளாலே தாங்க முடியாதே?
அதான்...
பரிசல் ஓட்டிட்டு வந்தவகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடறான்.இவன ஊருக்குள்ள விட்டாத்தானே அத்தினி பிரச்சினையும்.துடுப்பாலேயே அடிச்சுக் கொன்னுட்டேன்னு சொல்றா.
கேட்டா கொடுக்குமுன்னுதான் சாமிய வேண்டிக்கிறோம்.கேட்காமயே நம்மள காப்பாத்துன சாமியா மலைச்சாமிக்கு தெரியறா குயிலு
அதயே அவகிட்டவும் சொல்றாரு.
இப்பத்தான் அவ கண்ணுல சந்தோசம் தெரியுது.இப்ப கேட்கிறா.
"ஏய்யா என்ன நீ நெனக்கல? உன் மனசுல எனக்கு இடமில்லையா?" உண்மயச் சொல்லு.
குயிலு!
நீ மட்டும் தான் என் மனசுல இருக்கே!
நீ எத்தினி வருஷம் கழிச்சு வந்தாலும் உனக்காக காத்துகிட்டு இருப்பேன்னு வாக்கு கொடுக்கார்.
***
பல வருஷ தண்டன குயிலுக்கு.அவ வராம தன் உசிரு போகாதுன்னு
அவ இருந்த குடிசையிலேயே தங்கிக்காரு பெருசு.அவ எப்ப வருவான்னு ஆத்தங்கரையையே பாத்து பாத்து அவரோட வாழ்க்கையும் பல வருஷம் ஓடிருது.நினச்சு நினச்சு விசனப்பட்டே வருஷங்களும் கரையுது.மனுஷன் படுத்த படுக்கையா கிடக்கார்.இப்பவோ அப்பவோன்னு உசிரும் இழுத்துகிட்டுஇருக்கு.ஊர் சனமும் இதுக்கு மேல தாங்காதுன்னு குயிலுக்கு சொல்லி அனுப்புறாங்க.
***
பெரிசு படுத்துருக்கு.மூச்சு மட்டும் வந்தும் போயிகிட்டும் இருக்குது.
குடிசைக்குள்ள காலடி வக்கிறா குயிலு.அவ மூச்சுக்காத்தும் வாசனையும் அந்த உடம்புக்கு தெரியாதாங்கற மாதிரி சின்ன உதறல் பெரிசு கிட்ட இருந்து.
"மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவாபெண்ணே "
பெரிசோட நினப்பு குயிலுக்கு தெரியாதா .
அவ கண்ணீரு பெரிச அசைக்குது.பெரிசுக்கு லேசா முழிப்பு வருது.அவளப் பாத்த சந்தோசம் கண்ணுல தெரியுது.இதுக்குத்தானே இத்தினி வருஷம் காத்திருந்தேன்னு சந்தோசமா கண்ண மூடுது.
கொள்ளி வச்சு முடிஞ்சதும் ரயிலேறிப் போகிற குயிலு உடம்புக்குள்ள மட்டும் உசுறு தங்குமா?
குயில் பாட்டு நின்னுடுச்சு.
*********************************************
ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறது.
-வைரமுத்து.
முதல் மரியாதை..
முற்றும்.
கோபால் சார் நன்றாக ஆராய்ந்துள்ளீர்கள்
என்.டி.ஆர். பதவியேற்றது 1983 -ல்.
பதவியேற்ற மறுநாளே மருத்துவ சீட் கொடுத்திருந்தாலும் மலைக்கள்ளன் மருத்துவர் ஆகியிருப்பது 1983 +5 +1 +2 = 1991 -ல்
மருத்துவர் ஆன மறுநாளே அமெரிக்கா போயிருந்தால் கூட 1991 -ல் தான் போயிருக்க முடியும்.
சீட் வாங்கி கொடுத்தவர் அமெரிக்காவில் சிகிக்சை பெற்றது 1984 (அசைக்க முடியாத ஆதாரம் 84 தேர்தல்)
கரு பழனியப்பன் கொஞ்சம் கால்குலேட் பண்ணி கதை விடுதல் நல்லது.
நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இன்றைய தொலைக்காட்சி சேனல்களில்,
காலை 11 மணிக்கு சன் லைப்பில்
*நிச்சய தாம்பூலம்'
பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
" ஊரும் உறவும் "...
மாலை 3 மணிக்கு மெகா டிவியில்
" கந்தன் கருணை "
இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்
* உத்தம புத்திரன்
இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
" ஜெனரல் சக்ரவர்த்தி "
இரவு 11:55 மணிக்கு ஜெயா டிவியில்
* ஆலயமணி
அப்போது திரையரங்குகளில்,
இப்போது சின்னத்திரைகளில்
எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் *நடிகர் திலகம* மயமே இப்புவிதனில்
" ஊரும் உறவும் "...
மாலை 3 மணிக்கு மெகா டிவியில்
" கந்தன் கருணை "
இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்
* உத்தம புத்திரன்
இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
" ஜெனரல் சக்ரவர்த்தி "
இரவு 11:55 மணிக்கு ஜெயா டிவியில்
* ஆலயமணி
அப்போது திரையரங்குகளில்,
இப்போது சின்னத்திரைகளில்
எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் *நடிகர் திலகம* மயமே இப்புவிதனில்
See more
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a5&oe=593AFE05
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...83&oe=593EA8E3
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...07&oe=596D6FBF
(முகநூல் நண்பர் சேகர் பரசுராம் )
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...94&oe=59379264
(முகநூலில் இருந்து)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...eb&oe=596DB077
(முகநூலில் இருந்து)
செந்தில்வேல்,
உங்கள் முதல் மரியாதை பதிவு(கள் ) நெகிழ வைத்து உலுக்கி விட்டது.
உங்கள் எழுத்து திறன் வியக்க வைக்கிறது. தொடருங்கள்.நாங்கள் ஒரு ரசிகர் கூட்டமே தயார்.
இன்று 100 இருக்கைகள் மட்டுமே கொண்ட எத்தனையோ ஷாப்பிங் மால் திரையரங்குகளில் வெளியாகும் புத்தம் புதிய திரைப்படங்கள் காற்று வாங்கும் சூழ்நிலையில் 1200 இருக்கைகள் கொண்ட பழைய திரையரங்கான சென்னை மஹாலட்சுமியில் வசந்த மாளிகையின் house full அரங்கேற்றம், house full ஆனதோடு 400க்கும் மேலாக ரசிகர்கள் நின்றபடி படம் பார்த்து ரசித்த உற்சாகம்,
வசந்த மாளிகை என்றும் வசூல் மழை பொழியும் ஒரு கார்மேகம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8d&oe=592D0E95
(சேகர் பரசுராம் முகநூலில் இருந்து)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...19&oe=593B681D
(சேகர் பரசுராம் முகநூலில் இருந்து)
(From the old Hub postings)
முதல் மரியாதை- 1985-
திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை ,குருவிகளின் இசை, நதியின் சலனம் இவற்றினோடு, அந்த கிராம மனிதர்களின் சிரிப்பு,மகிழ்ச்சி,வலி,மனகிலேசம்,வைராக்கியம், தியாக உணர்வு அனைத்தையும் , நம் மனதை பிசையும் வகையில்,ஒரு அப்பாவி தனம் தொனிக்கும் deceptive simplicity யோடு,சாதாரண நிகழ்வுகளை கொண்டே ஒரு iconic moments அளவு பிரமிப்பை தந்த காவியம் முதல் மரியாதை.
நடிகர்திலகம்,பாரதிராஜா,செல்வராஜ்,கண்ணன்,வைரமு த்து, இளையராஜா,ராஜகோபால் இணைவில் , rhythmic என சொல்லப்படும் ஒத்திசைவோடு,எண்ண எழுச்சி,கிராம அழகியல்,Rustic sensitivity யோடு,மனித மனங்களை ஊடு பாவாகி நெய்த அழகிய அதிசயம்.
நடிகர் திலகத்தின் நடிப்பின் வீச்சை,வீரியத்தை,புதுமையை ,பசுமையை அன்றைய(இன்றைய) இளைய தலைமுறையினர்க்கு கல்வெட்டாய் உணர்த்திய படம்.
மலைச்சாமி(தேவர்) என்ற கிராமத்து பெரியவர்,ஒரு நதியோர குடிசையில் தன் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பதிலும்,(நெஞ்சு குழிக்குள்ளே ஏதோ ஏக்கம்),காத்திருக்கும் சுற்றத்தார் நண்பர்கள் உரையாடலில் தொடங்கும் கதை பின்னோக்கி பயணிக்கிறது.
மலைச்சாமி ,ஊருக்கு நாட்டாமையாய் மதிப்போடு வாழும் பெருந்தன நடுத்தர வயது காரர். (கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆன)ஆனால் வீட்டிலே மனைவியால் அவமரியாதையாய் (துரட்டு கம்பு,இருபது ஆடுகளுடன் பஞ்சம் பிழைக்க வந்து,தன்னை மணந்ததால் அந்தஸ்து பெற்றவர் என்று குறிப்பிட்டு ) ,இடித்து பழித்து கொண்டு ,சுருதி-பேதமாய் உறவு நிலை பேதலித்து கிடக்கிறது.நாடோடியாய்,ஊருக்கு பஞ்சம் பிழைக்க வரும் குயில் என்ற இளம் பெண்ணிடம்,வேடிக்கையாய் தொடங்கும் உறவு,பிறகு ஆதரவு தரும் நிலையாகி,ஈர்ப்பு,உணர்ச்சி (உணவும்தான்)பரிமாறும் நிலைக்கு உயர்ந்து, ஊராரால் கவனிப்பு பெரும் நிலைக்கு உயர்கிறது.இதற்கிடையில்,மலைசாமியின் தங்கை மகன்(அத்தையால் அதே முறையில் கேவலமாய் நடத்த படும் இன்னொரு துறட்டு கம்பு,ஆடு கேஸ்)செல்ல கண்ணு,அந்த ஊரில் வாழும் செங்கோடன் என்ற செருப்பு தைப்பவர் மகள் செவளியை காதலிக்க, முதலில் எதிர்க்கும் மலைச்சாமி,குயிலின் ஆவேச வேண்டுகோளுக்கு செவி சாய்த்து,காதலர்களை சேர்த்து வைக்கிறார்.ஆனால் விதிவசமாய்,நகைக்கு ஆசைப்பட்டு ஒருவன் செவளியை கொன்று விட,தடயங்களை வைத்து,தனது மகள் ராசம்மாளின் கணவனே (ஊதாரி,குற்ற செயல்களுக்கு அஞ்சாத பெண் பித்தன்,பொய்யன்,)என்றறிந்து,காவலர்களுடன் பிடித்து கொடுக்கிறார்.செல்லகண்ணுவும் செவளியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.வீட்டில் வாய் பேச்சு முற்றும் போது ,பொன்னாத்தா ஒருவனோடு ஓரிரவு படுத்து,வயிற்றில் பிள்ளை சுமந்த நிலையில்,தன் மாமனின் மனம் திறந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பொன்னாத்தாளை மணந்ததையும்,அவளோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு படாததையும் குறிப்பிட்டு,ராசம்மா தனக்கு பிறந்தவள் இல்லையென்றாலும்,ஏழேழு ஜென்மத்திற்கும் அவள்தான் தனது மகள் என்று நெகிழ்கிறார்.
ஊரிலுள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளி,தற்செயலாய் குயிலுடன் மலைச்சாமி சந்தையில் எடுத்து கொண்ட photo ஐ பொன்னாத்தாளிடன் காட்ட,பஞ்சாயத்து கூட்ட பட்டு,கேள்வி(கேலி?)களால் துளைக்க படும் மலைச்சாமி,ஆமா,அவளை நான் வச்சிருக்கேன்,என்ன முடியுமோ செஞ்சிக்கங்க என்று சொல்லி,குற்றவுணர்வுடன்(நிறைவுடன்?)குயில் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு தன மனம் திறக்கும் குயிலுடன் கோபித்து வீட்டிற்கு வருபவர்,பொன்னாத்தாள் தாய் வழி உறவுகளை துணைக்கழைத்து ,குயிலை விரட்ட(கொல்ல ?) திட்டமிட,அவர்களிடம் கோபித்து,சவால் விட்டு குயில் குடிசைக்கு வரும் மலைச்சாமி,அவள் அங்கு இல்லாததை கண்டு திகைக்கிறார்.
பின் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் குயில்,தான் கொன்றது பொன்னாத்தாளிடன் ஓரிரவு தகாத உறவு கொண்ட,குழப்பம் விளைவிக்க ஊருக்கும் வரும் ,மயில் வாகனன் என்ற மிருகத்தையே என்றும்,மலைச்சாமி குடும்ப மானம் காக்கவே அவ்வாறு செய்ததாக சொல்லி,இதை கோர்ட் இல்,வெளியிட கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.மலைச்சாமி,தன மனிதில் இருப்பவள் குயில் ஒருவளே என்று மனம் திறக்கிறார்.
முதல் காட்சியின் ,தொடர்பாக, போலீஸ் காவலில் வரும் குயிலை கண்டதும், சிலிர்த்து மலைச்சாமி உயிர்துறக்க, குயிலும் செல்லும் வழியில் உயிர் துறக்கிறாள்.
பற்பல யூகங்களுக்கு இடமளித்து,பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்திற்கு தீனி போட்ட திரைக்கதைகள்,அகில இந்திய ரீதியில் அலசினாலும்,சொற்பமே மிஞ்சும்.அவற்றுள் ,முக்கியமான ஒன்று செல்வராஜும்,பாரதி ராஜாவும் இணைந்து
அளித்த இந்த அற்புதம்.ஆண் -பெண் உறவுகளின் எதிர்பார்ப்புகளை,ஆசைகளை,முரண்களை,நிராகரிப்புக ளை,சி தைவுகளை , இதை விட அழகாய் சொன்ன படங்கள் வெகு சிலவே.
Carl Jung psycho -analysis முறையில், உணர்வுகள்,எண்ண நீட்சிகள்,அனைத்திலும், தன்னுணர்வற்ற(sub conscious )உள் நினைவுகளிலும், தன நிலை,இருப்பு இவைகளில் பாதுகாப்பின்மை ,தாழ்மையுணர்வு,உளவழுத்த நெருக்கடி,அதனால் விளையும் உறவின் சீர்கேடு ,இவற்றை நன்கு உள்வாங்கி, பூடக (suggestive )முறையில் அமைந்த திரைகதை வசனம் , Film -institute இல் பாடமாகவே வைக்கலாம்.பெண்களுக்கு அவர்களின் பெண்மையை உதாசீனம் செய்து மதிக்காதோரிடம் ,எந்த நிலையிலும் காதல் உணர்வு வராது என்பது உண்மையோ,அதைப்போல,ஆண்களுக்கு,visual arousal and provider 's pride என்பது காதல் உணர்வுக்கு அவசியம்.
மலைசாமியோ, தன் நிலை பற்றிய தாழ்மையுர்வை சுமந்து திரிபவன் .தன் மாமன் சுய நலம் கருதி காலில் விழுந்ததற்கே ஆயுளுக்கும் செருப்பு போடாமல் திரிபவன்.தன் நிலைக்கு தான் என்றுமே அடைய முடியாத மாமன் மகளை, அவள் சமூக அறத்திற்கு புறம்பாக நடந்து பிடியும் பட்டதால்,அடைந்து விட்டாலும் ,அவளை ஆண்டு அனுபவிக்காமல்(சொத்து அந்தஸ்தை அனுபவிக்க தவறவில்லை)அதற்கு தன் தாழ்மையுணற்சியே காரணம் என்ற உண்மையை வசதியாக மறந்து(மறைத்து),மனைவியின் பழைய தவறை சொல்லாமல் சொல்லி தினமும் அவள் பெண்மையை அவமதித்து,செருப்புக்கு சமமாகவே நடத்துகிறார்.(செருப்பையும் அணியவில்லை.இந்த செருப்பையும் அணையவில்லை)
படம் முழுவதும் ,கணவன் என்ற உரிமையை நிலை நாட்டாமல் ,தானும் தன சொந்தங்களும்(தங்கை மகனையே இழி பட விடுபவன் என்ன தலைவன்?)இழிவு படுத்த படும் போது வாய் திறக்காமல் சகித்து,கெட்டு போன வரலாற்றை சொல்லி உதைக்கும் அளவு செல்வது,பல கோடி மௌன கதைகள் பேசவில்லையா?மனைவிடமும் இச்சையை தீர்த்து கொள்ளாமல்,தன் sexual frustration ஐ ,தன் நிலைக்கு தாழ்வான வறிய பெண்களிடம்வேவ்வேறு நிலைகளில் வெளி காண்பிக்கிறார்.(வார்த்தைகளில்,கிண்டலாய்,வம்பு க்கிழ த்து தொட கூடாத இடங்களில் தொடுவது உட்பட)அவருடைய interraction முழுக்கவே ,நிலை தாழ்ந்தவர்களிடன் மட்டுமே(திருமணத்திற்கு பின் இவர் நிலை உயர்ந்து விட்ட போதிலும்).பஞ்சாயத்து காட்சியில் அந்த நிலை தாழ்ந்தவர்களே ,இவர் அற வீழ்ச்சியால் உயர் நிலை அடையும் போது அவர்களை எதிர் கொள்ளவே துணிவில்லை இந்த தலைமை நாட்டாமைக்கு?தன் சொந்த மனைவியிடமும், மற்ற பெண்களிடமும் நிரூபிக்க இயலா ஆண்மையை, கல்லை தூக்கி குயிலிடம் பௌருஷத்தை காட்டும் பரிதாப பாத்திரம் இந்த மலைச்சாமி.
தன்னை சார்ந்தே இயங்கும்,தன்னையே உலகமாக்கி வாழும்(அப்பா கூட weak ஆன ஒப்புக்கு சப்பாணி)குயிலிடம் ஈர்க்க படுவதில் என்ன அதிசயம்?குயில் அவருடைய இடத்தை அவருக்கு அளிக்கிறாள். கேலி கிண்டலால் அவரின் தகைமையை ,இளமையை திருப்புகிறாள்.அவரை விட தாழ்ந்தவள் என்று ஒவ்வொரு கணமும் மலைசாமியின் weak ஆன ego விற்கு தீனி கொடுக்கிறாள். தன் சம்மதம் கேட்க கூட அவசியமின்றி வெச்சிருக்கேன் என்று சொல்லும் உரிமையை, dominance வழங்கும் இந்த உறவு மலைசாமிக்கு இனிக்காதா பின்னே?குயில் வாழ்க்கை நிலையாமையில் உழலுவதால் ,வலிமையான துணையின்றி (தகப்பனும் பலவீனன்) ஏற்படும் electra complex , மலைசாமியின் நிலையறிந்து ,அடைவதும் சாத்தியம் என்ற கைகெட்டும் தூரத்தில் பழுத்த காதலை,அதனால் ஏற்படும் குற்ற உணர்வை,தியாகத்தால் மெழுகுகிறாள் .
பொன்னாத்தா ,தன் தகுதிக்கு குறைந்த அத்தை மகனை மணந்தாலும்,அவன் உதாசீனத்தால்(பெண்மை, மனைவி என்ற ஸ்தானம் மதிப்பு) அவளின் அற வீழ்ச்சியை வைத்து நகையாடி கொண்டிருக்கும் கணவனை, தன் பண செருக்கையும்,provider role கூட செய்ய முடியாத கணவனை ,எதிர் கொண்டு ,மூர்க்கத்தால் தற்காலிக வெற்றிகளை சுவைத்து,பெரும்துக்கங்களை கரைக்கிறாள்.(பின் என்ன sexual frustration ஐ மலைச்சாமி போல் ,இந்த பெண் ஜன்மத்தால் demonstrate செய்ய முடியாதே?).தன்னை மதியாத கணவன் முன் அழகாகவும்,சுத்தமாகவும் இருந்துதான் என்ன பயன்?ஆனாலும்,கணவனின் அற செருக்கில் பெருமையும்(ஜனகராஜிடம் வெளியிடுவார்),அவன் வேறொரு பெண்ணிடம் காட்டும் ஈடுபாட்டை அறிந்ததும் சீறும் possessiveness உம் ,அவளுக்கு மலைசாமியுடன் உள்ள மிச்சமிருக்கும் காதலை உணர்த்துகிறதே?(மலைசாமியிடம் மருந்துக்கும் காண படுவதில்லை).உலகத்தின் பார்வையில் தன் ஒழுக்கங்கெட்ட முத்திரையை மறைக்க இந்த பத்ரகாளி வேஷம் அவசியமா?(மயில் வாகனன் விவரிக்கும் பொன்னாத்தாள் அவ்வளவு பிடாரியல்லவே!!)தன் கணவனின் குற்றத்தை பஞ்சாயத்திடமும்,உறவுகளிடமும் தம்பட்டம் அடிப்பதில்,தன் பழைய களங்கத்தை கரைக்கிறாளா?
இந்த முக்கோண ஆண் -பெண் விவரிப்பில்,அழகான திரைகதை,மௌன காட்சி(சாட்சி?),ஒன்றிரண்டு வசன குறிப்புகள்,பார்வையாளர்களின் இட்டு நிரப்பும் பயிற்சிக்கு சவால் விடுகிறது.
கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன? அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.
தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூட கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பறி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சா த்திய படாது)
வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.
இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.
வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.
பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)
கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜ னரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோக முள் கதை போல)
பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.
நெஞ்சம் மறப்பதில்லை 21:
அத்தனை நாயகிகளுக்கும் ஹீரோ!
பெரு துளசிபழனிவேல்
நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனை ஆரம்ப நாட்களில் சினிமாவுக்குப் பொருத்தமில்லாத நடிகராக பார்த்தார்கள். அவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கும், இயக்குவதற்கும் தயங்கினார்கள். அவருடன் இணைந்து நடிப்பதற்கும் யோசித்தார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் 'பராசக்தி' (1952) படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கதாநயாகனாக நடிக்க வைத்து ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படத்தைத் தயாரித்தார். கலைஞர் மு.கருணாநிதி பரபரப்பூட்டும் வகையில் வசனத்தை எழுதியிருந்தார். படம் சூப்பர் ஹிட்டாகி தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. நடிகர் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பு, அவர் ஏற்ற இறக்கத்துடன் வசனத்தை உச்சசரித்த அழகு படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது.படத்தின் இறுதி காட்சியில் அமைககப்பட்டருந்த கோர்ட் சீன், அதில் சிவாஜியால் பரபரப்புடன் பேசப்பட்ட வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதன்பிறகு சிவாஜியை நடிக்க வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் முன் வந்தார்கள். பராசக்திக்குப் பிறகு அவருடன் இணைந்து ஜோடியாக நடிப்பதற்கு பல கதாநாயகிகள் ஆசைப்பட்டடார்கள். அப்படி சிவாஜியுடன் இணைந்து நடித்த அத்தனை நடிகையர்களும் சிவாஜியின் திரையுலக வரலாற்றில் இடம் பெற்றவர்களாகவும், தமிழ் சினிமா வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் நாயகி பண்டரிபாய் நடிகர் திலகம் நடித்து அறிமுகமான முதல் படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் சிவாஜிக்கு முதல் ஜோடியாக இணைந்து நடித்தவர் பண்டரிபாய். இவர் ஏற்கனவே எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியவர். ஏவிஎம் நிறுவனம் அடுத்து தயாரித்த 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகம் செய்யும் தனது கணவன் சிவாஜியை சுட்டுத் தள்ளும் துணிச்சலான வேடத்தில் நடித்தார். 'அன்னையின் ஆணை', 'ராஜபக்தி'யிலும் ஜோடியாக நடித்தார். 'தெய்வமகன்' படத்தில் தாரமாகவும், தாயாகவும் நடித்தார். 'கௌரவம்' படத்தில் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாகவும், அவரது மகன் இளம் வழக்கறிஞராகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பண்டரிபாய் நடித்தார். இளம் வழக்கறிஞருக்கு ஜோடியாக உஷா நந்தினி நடித்தார்.
பத்மினி அடுத்து நாட்டியப் பேரொளி பத்மினி இவர் முதன் முதலாக கலைவாணர் என்.எஸ்.கே. தயாரித்து இயக்கிய 'பணம்' படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 'அன்பு', 'இல்லறஜோதி' யில் இணைந்து நடித்தார். 'கல்யாண பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் காமெடி கலந்த வேடம். 'எதிர்பாராதது' படத்தில் காதலியாகவும், சித்தியாகவும் இருமாறுபட்ட தோற்றங்கள். 'தூக்குதூக்கி', 'காவேரி', ' கோட்டீஸ்வரன்', 'ராஜாராணி' படங்களில் ஜோடியாக நடித்தவர் 'தானே உனக்காக' படத்தில் கௌரவ வேடத்தில் வந்தார். ஆனால் சிவாஜி ஜோடியாக. 'அமரதீபம்', 'புதையல்', 'பாக்கியவதி', 'உத்தபுத்திரன்', 'தங்கப்பதுமை' படங்களிலும் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். 'மரகதம்', 'தெய்வப் பிறவி', 'புனர் ஜென்மம்', 'ஸ்ரீவள்ளி', 'செந்தாமரை', 'நான் வணங்கும் தெய்வம்', 'பேசும் தெய்வம்', 'பாலாடை' போன்ற படங்களிலும் இணைந்து நடித்து தனது, நடிப்பாற்றைலை வெளிப்படுத்தினார். 'திருவருட்செல்வர், 'இருமலர்கள்', 'திருமால்பெருமை', 'விளையாட்டுப்பிள்ளை', 'இருதுருவம்', 'தேனும் பாலும்' போன்ற படங்களிலும் சிறப்பாக நடித்தார். 'தில்லானா மோகனாம்பாள்', 'வியட்நாம்வீடு', 'தாய்க்கு ஒரு தாலாட்டு', 'லட்சுமி வந்தாச்சு' போன்ற படங்களில் நடித்து சிவாஜிகணேசனுக்கு சிறப்பான ஜோடி எனப் பெயர் பெற்றார். இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் தாய்க்கு ஒரு தாலாட்டு.
சாவித்திரி அடுத்து நடிகர் திலகத்தின் ஜோடியாக வந்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. 'அமரதீபம்', 'வணங்காமூடி', 'அன்னையின் ஆணை', 'காத்தவராயன்', 'குறவஞ்சி', 'எல்லாம் உனக்காக', 'வடிவுக்கு வளைகாப்பு', 'இரத்தத் திலகம்', 'திருவிளையாடல்' போன்ற படங்களோடு 'பிராப்தம்' படத்தை இயக்கி நடித்து தயாரித்தார். அவர் நடித்த அத்தனை படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்ற நடிகையர் திலகம் சாவித்ரி. 'கை கொடுத்த தெய்வம்' படத்தில் வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் வெளுத்து வாங்கினார். 'நவராத்திரி'யில் ஒன்பது விதமான வேடத்தில் நடித்த சிவாஜிக்கே சவால் விடுகின்ற அளவிற்கு அவரது நடிப்பாற்றல் சிறந்து விளங்கிறது. 'நவராத்திரி' சிவாஜி நடித்த 100வது படம் என்றாலும் 'சாவித்திரியின் நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்திய முதன்மையான படமாகும். சிவாஜி - சாவித்திரிக்கு மகுடம் சூட்டிய படம் பாசமலர். இருவரும் இதில் ஜோடியல்ல. அண்ணன் - தங்கையாக வாழ்ந்திருந்தார்கள்.
அஞ்சலிதேவி அஞ்சலிதேவி 'முதல் தேதி', 'நான் சொல்லும் ரகசியம்' என்ற இரண்டே படங்களில் மட்டும் ஜோடியாகக நடித்தார். இவரது அஞ்சலி பிக்சர்ஸ் தயாரித்த 'பூங்கோதை' படத்தில் நடிகர் திலகம் நாயகனாக நடித்தார்.
எம்.என். ராஜம் சிவாஜியின் ஆரம்பகால படங்களான 'மங்கையர் திலகம்', 'நல்லவீடு', 'நானே ராஜா', 'பெண்ணின் பெருமை' 'ரங்கோன் ராதா', 'பதிபக்தி', 'பாசமலர்' போன்ற படங்களில் சிறப்பாக நடித்தவர் எம்என் ராஜம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளர் சிவாஜியை காதலிக்கும் ரசிகையாக அழுத்தமாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றார்.
பி பானுமதி நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவினால் போற்றப்பட்ட பி.பானுமதி நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தார். கல்கியின் நாவலான கள்வனின் காதலி பேரறிஞர் அண்ணாவின் நாவலான 'ரங்கோன் ராதா', வட்டார மொழியில் எடுக்கப்பட்ட 'மக்களைப் பெற்ற மகராசி', 'மணமகன் தேவை', 'அம்பிகாபதி', 'அறிவாளி' போன்ற அனைத்துப் படங்களிலும் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு இணையாகவே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்பதை அனைவருக்கும் உணர வைத்தார்.
கிரிஜா 'திரும்பிப்பார்', 'மனோகரா' இரண்டே படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை கிரிஜா. அதன் பிறகு அவர் சிவாஜியுடன் எந்தப் படத்தில் காணமுடியவில்லை.
சௌகார் ஜானகி நடிகர் திலகத்துடன் ஜோடியாக மட்டுமல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் சௌகார் ஜானகி. இவர் நடிகர் திலகத்துடன் 'படிக்காத மேதை', 'பாவை விளக்கு', 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'பச்சை விளக்கு', 'புதிய பறவை', 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'மகாகவி காளிதாஸ்', 'திருமால் பெருமை', 'எங்க ஊர் ராஜா', 'உயர்ந்த மனிதன்', 'மனிதனும் தெய்வமாகலாம்', 'பட்டாக்கத்தி பைரவன்' போன்ற பல படங்களிலும் காதலியாக மட்டும் வந்து போகாமல் சிவாஜியின் மனைவியாகவே நேரிடையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிவாஜியை மட்டுமல்லாமல் படம் பார்த்தவர்களையே வியக்க வைத்தவர் நடிகை சௌகார் ஜானகி. குறிப்பாக புதிய பறவை படத்தில் கலக்கினார்.
சரோஜா தேவி சிவாஜிக்கு பொருத்தமான ஜோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் அபிநய சரஸ்வதி எனப் புகழப்பட்ட சரோஜா தேவி. அஞ்சல் பெட்டி 520, அன்பளிப்பு, பாலும் பழமும், பாகப்பிரிவினை, இருவர் உள்ளம், புதிய பறவை, கடைசியாக ஒன்ஸ்மோர் என பல படங்களில் இந்த ஜோடி ரசிகர்களைக் கவர்ந்தது.
இவர்களைத் தவிர 'கண்கள்', 'குறவஞ்சி போன்ற படங்களில் மைனாவதி, 'பூங்கோதை' படத்தில் புதுமுகம் வசந்தா, 'மனிதனும் மிருகமும்' படத்தில் மாதுரி தேவி,
'திரும்பிபார்', 'துளிவிஷம்' படத்தில் கிருஷ்ணகுமாரி,
'இல்லற ஜோதி'யில் ஸ்ரீ ரஞ்சனி நடித்தார்,
'காவேரி', உலகம் பலவிதம்', 'தூக்கு துூக்கி' படங்களில் லலிதா,
'கூண்டுக்கிளி' படத்தில் சிவாஜி காதலித்த பெண்ணாகவும் பி.எஸ். சரோஜா,
'நான்பெற்ற செல்வம்', 'ஹரிச்சந்திரா', 'வாழ்விலே ஒருநாள்' போன்ற படங்களில் ஜி.வரலட்சுமி,
'தெனாலிராமன்', 'தங்கமலை ரகசியம்', 'பொம்மைக் கல்யாணம்', 'நிச்சயத்தாம்பூலம்', 'மருதநாட்டுவீரன்' போன்ற படங்களில் ஜமுனா,
'ராஜாராணி', 'ராணி லலிதாங்கி', 'சாரங்கதாரா', 'படித்தால் மட்டும் போதுமா' போன்ற படங்களில் ராஜ சுலோச்சனா,
'சபாஷ்மீனா' படத்தில் மாலினி போன்றோர் நடித்தனர்.
கலையுலகின் கனவுக் கன்னியாக விளங்கிய டி.ஆர். ராஜகுமாரி 'தங்கப்பதுமை' படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார்.
'வீரப்பாண்டிய கட்டபொம்மன்' படத்தில் எஸ்.வரலட்சுமியும்,
'இரும்புத்திரை', 'சித்தூர் ராணிபத்மினி' படங்களில் நடிகை வைஜயந்திமாலாவும்,
'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் குமாரி ருக்மணியும்,
'பாவைவிளக்கு' படத்தில் இன்னொரு நாயகியாக குமாரி கமலா,
'பலே பாண்டியா', ஆண்டவன் கட்டளை படங்களில் தேவிகா ஜோடியாக நடித்தனர்.
'பந்தபாசம்' படத்தில் சந்திரகாந்த்தா நடித்தார்.
'குங்குமம்' படத்தில் சாரதா, விஜயகுமாரி நடித்தார்கள்.
'சாந்தி' படத்தில் தேவிகா, விஜயகுமாரி நடித்தார்கள்.
'நீலவானம்' படத்தில் தேவிகா, ராஜஸ்ரீ நடித்தார்கள்.
'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் மற்றொரு ஜோடியாக மணிமாலா நடித்தார்.
'பாபு' படத்தில் விஜயஸ்ரீயும்,
'ஞானஒளி' படத்தில் விஜய நிர்மலாவும் நடித்தனர்.
'சிவந்தமண்', 'தங்கை' படங்களில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா.
சிவாஜியின் ஸ்பெஷல் ஜோடி உஷா நந்தினி. 'பெண்ணுஞ்சல்', 'கௌரவம்', ராஜபார்ட் ரங்கதுரை','மனிதனும் தெய்வமகலாம்', 'என்னைப்போல் ஒருவன்' போன்ற படங்களில் இவர் நடித்தார்.
'உனக்காக நான்', 'தியாகம்', ராஜரிஷி', 'ராஜராஜசோழன்', 'ஆனந்தகண்ணீர்', 'நெஞ்சங்கள்', 'குடும்பம் ஒரு கோயில்', 'படையப்பா' போன்ற படங்களில் லட்சுமி ஜோடியாக நடித்தார்.
வாணிஸ்ரீ வாணிஸ்ரீ - சிவாஜி ஜோடி எழுபதுகளில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி. வசந்த மாளிகையில் இருவரின் கெமிஸ்ட்ரியும் இப்போது நரை திரை கண்ட மூத்த இளைஞர்களாலும் மறக்க முடியாதது. 'சிவகாமியின் செல்வன்', 'வாணி ராணி', 'ரோஜாவின் ராஜா', ' இளைய தலைமுறை', 'புண்ணிய பூமி', 'நல்லதொரு குடும்பம்', 'நிறைகுடம்', 'உயர்ந்த மனிதன்' என அத்தனைப் படங்களில் முத்திரைப் பதித்த ஜோடி இது.
கேஆர் விஜயா புன்னகை அரசி கே ஆர் விஜயா, நடிகர் திலகத்துடன் முதன்முதலாக ஜோடியாக இணைந்து நடித்த படம் 'செல்வம்'. தொடர்ந்து 'நெஞ்சிருக்கும் வரை', 'தங்கை', 'பாலாடை', ' திருவருட்செல்வர்', 'இருமலர்கள்', 'ஊட்டிவரை உறவு', ' திருடன்', ' எதிரொலி', ' ராமன் எத்தனைராமனடி', ' சொர்க்கம்', ' தவப்புதல்வன்', 'பாரதவிலாஸ்' 'கிரகப்பிரவேசம்', 'நாம்பிறந்த மண்', 'ஜெனரல் சக்கரவர்த்தி', 'ஜஸ்டிஸ் கோபிநாத்', 'நான்வாழவைப்பேன்', ' ரிஷிமூலம்', 'தர்மராஜா', 'சத்தியசுந்தரம்', 'கல்தூண்', 'ஹிட்லர் உமாநாத்', ' ஊருக்கு ஒரு பிள்ளை', 'ஊரும் உறவும்', 'நீதிபதி', 'மிருதங்க சக்கரவர்த்தி', 'தராசு', 'சிம்ம சொப்பனம்', ' சாதனை', 'கிருஷ்ணன் வந்தான்', 'திரிசூலம்' போன்ற அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்து பத்மினிக்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பொருத்தமான ஜோடி என்று அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றவர் கே.ஆர். விஜயா.
ஜெயலலிதா சிவாஜி கணேசனின் பிரபல நாயகிகளுள் ஒருவர். கலாட்டா கல்யாணம் படத்தில்தான் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். தொடர்ந்து, குருதட்சணை, தெய்வமகன், ராஜா, தர்மம் எங்கே, நீதி, தாய், அன்பைத் தேடி, சித்ரா பௌர்ணமி, சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டிணமா, எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் சிவாஜின் ராசியான ஜோடியாக பேசப்பட்டார்.
மஞ்சுளா சிவாஜிக்கு ஏழெட்டு படங்களில் ஜோடி போட்டு சிறந்த நடிகையாகத் திகழ்ந்தார். 'எங்கள் தங்க ராஜா', 'என்மகன்', ' அவன்தான் மனிதன்', 'அன்பே ஆருயிரே', 'டாக்டர்சிவா', 'உத்தமன்', 'சத்தியம்' ஆகிய படங்களில் மஞ்சுளாவும் சிவாஜியும் ஜோடி சேர்ந்தனர்.
'சிவகாமியின் செல்வன்' படத்தில் இரண்டாவது சிவாஜிக்கு ஜோடியாக நடிகை லதா நடித்தார்.
கேஆர் விஜயாவுக்குப் பிறகு சிவாஜிக்கு பாந்தமான ஜோடியாகப் பேசப்பட்டவர் சுஜாதா. 'அண்ணன் ஒரு கோயில்', 'அந்தமான் காதலி', 'வா கண்ணா வா', 'கருடா சௌக்கியமா', 'தீர்ப்பு', பரீட்சைக்கு நேரமாச்சு', 'சந்திப்பு', 'சுமங்கலி', ' திருப்பம்', 'நேர்மை', ' மண்ணுக்குள் வைரம்' போன்ற படங்களில் ஜோடியாக நடித்து சிறப்புச் சேர்த்தார்.
'கவரிமான்' படத்தில் துரோகம் செய்யும் மனைவியாக நடிகை பிரமிளா துணிச்சலாக நடித்தார்.
'மோகனப் புன்னகை' படத்தில் ஜெயபாரதி, அனுராதா, பத்மப்பிரியா இணைந்து நடித்தார்கள்.
'வைரநெஞ்சம்' படத்தில் பத்மப்பிரியா ஜோடியாக நடித்தார்.
ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா அன்றைய நாட்களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி 'விஸ்வரூபம்', 'சந்திப்பு' படங்களிலும், ஸ்ரீப்ரியா த்ரிசூலம், வசந்தத்தில் ஓர் நாள், 'வெற்றிக்கு ஒருவன்', 'எமனுக்கு எமன்', 'ரத்தபாசம்', 'அமரகாவியம்', 'லாரி டிரைவர்', ராஜாக்கண்ணு', 'மாடிவீட்டு ஏழை', ஊருக்கு ஒரு பிள்ளை', 'சங்கிலி', நட்சத்திரம் போன்ற படங்களில் சிவாஜியின் ஜோடியாக நடித்தனர்.
அம்பிகா - ராதா எண்பதுகளில் வெற்றி நாயகிகளாகத் திகழ்ந்த அம்பிகாவும் ராதாவும் கூட சிவாஜியுடன் ஜோடி சேர்ந்து அவருக்கு இணையாக நடித்தனர். அம்பிகா வாழ்க்கை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். முதல் மரியாதை படத்தில் ராதாவின் நடிப்பைச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. தாம்பத்தியம்' படத்தில் அம்பிகா, ராதா இருவருமே சிவாஜியுடன் இணைந்து நடித்தார்கள்.
ராதிகா 'என் ஆசை ராசாவே' படத்தில் ராதிகாவும்,
'இருமேதைகள்' படத்தில் சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.
'பைலட் பிரேம்நாத்' படத்தில் இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஜோடியாக நடித்தார்.
வீரபாண்டியன்' படத்தில் சுமித்ராவும்,
'முதல் மரியாதை,' சின்னமருமகள்', 'படிக்காதவன்', 'என்தமிழ் என்மக்கள்' போன்ற படங்களில் வடிவுக்கரசியும் சிவாஜியின் மனைவி பாத்திரத்தில் நடித்தனர்.
எத்தனையோ சிவாஜி படங்களில் காமெடி வேடத்தில் நடித்த மனோரமா, 'ஞானப் பறவை' என்ற ஒரே படத்தில் சிவாஜியின் ஜோடியாக நடித்தார்.
'இமயம்', 'நாங்கள்' படத்தில் ஸ்ரீவித்யா ஜோடியாக நடித்தார்.
சிவாஜி கடைசியாக நடித்த படம் படையப்பா. அதில் அவரது ஜோடி லட்சுமி.
நூற்றாண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில், சிவாஜி களத்திலிருந்தபோது உச்சம் தொட்ட நடிகைகள் அனைவருமே அவருக்கு ஜோடியாக நடித்தவர்களே. அந்தளவிற்கு அனைவருடனும் இணைந்து நடித்து சாதனைப் படைத்தவர் நடிகர் திலகம்!
நடிகர் திலகத்தின் பல படங்கள் மறு வெளியீடுகளில்
அன்றுமுதல் இன்றுவரை சாதனைகள் பல படைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
என்னஒன்று எல்லா வெளியீடுகளும் சாதனைகளும் வெளியே தெரியவரவில்லை.
வெளியே தெரியவரவில்லை என்பதனால் நடிகர்திலகத்தின் படங்கள்
மறுவெளியீடு காண்பதில்லை என்றோ சாதனைகள் புரிவதில்லைஎன்றோ
கூறிவிட முடியாது.
மறுவெளியீடுகளில் மன்னன் சாதனை படைத்துக்ககொண்டுதான் இருக்கிறார்,
கண் செவி அறியாமல்.
1983ம் ஆண்டு மறு வெளியீடுபற்றிய நோட்டீஸ் அனைவரது பார்வைக்கும் இங்கே.
http://oi64.tinypic.com/fwm2w1.jpg
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட இலங்கை சாதனைகள்
http://oi63.tinypic.com/2nby82b.jpg