நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏன் விழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
சூடாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகள
உள்ளாற பூட்டி வச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே...
https://www.youtube.com/watch?v=GcqO6GpmBok