https://youtu.be/75P26FYBmeo... Thanks...
Printable View
https://youtu.be/75P26FYBmeo... Thanks...
https://youtu.be/gmK9Gfap5Rw... Thanks...
https://youtu.be/XtkIpDkZVss... Thanks...
https://youtu.be/gEaMIW2g-y0.... Thanks...
https://youtu.be/YW0j9mSenP0... Thanks...
https://youtu.be/drmruFmbekc.... Thanks...
எம்.ஜி.ஆர்., அவர்கள் வித்தியாசமாக நன்றாக நடித்திருந்தார். மக்கள் திலகம் எம்ஜிஆர் சரோஜாதேவி நாகேஷ் அசோகன் நடித்த குடும்பச்சித்திரம் "பணக்கார குடும்பம்" 24-04-1964 வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
மெல்லிசை மன்னர்கள் இசையில் பாடல்களை புதுமையாக படமாக்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா........... Thanks...
"Panakkara Kudumbam" (Tamil: பணக்கார குடும்பம், English: Rich Family) is a Tamil language film starring M. G. Ramachandran in the lead role. The film was released in 1964 and was a commercial hit. It ran more than 100 days in all theatres in Chennai and other major cities. The climax features MGR and R. S. Manohar fighting in a moving jeep............ Thanks...
..
https://youtu.be/O98bLpYUOl4... Thanks...
https://youtu.be/vh56xKbN9Eo... Thanks...
https://youtu.be/G3tTtVnFD8E... Thanks...
https://youtu.be/DsyCv1RaTEc... Thanks...
https://youtu.be/jQLYeYqXP1E... Thanks...
https://youtu.be/u84XO7cwrnU... Thanks...
https://youtu.be/OVsncWv63FE... Thanks...
Athai Magal" Kannadasan P. Susheela 3.39
2. "Ithuvarai Neengal" Kannadasan T. M. Soundararajan 5.06
3. "Ondru Engal" Kannadasan T. M. Soundararajan, L. R. Eswari 4.26
4. "Pallakku Vanga" Kannadasan T. M. Soundararajan 4.31
5. "Parakkum Panthu" Kannadasan T. M. Soundararajan, P. Susheela 4.20
6. "Vaadiamma Vaadi" Kannadasan L. R. Eswari, P. Susheela, L. R. Anjali 5.05
7. "Athai Magal Rathinathai" Kannadasan T. M. Soundararajan *
8. "Unnai Nambinal" Kannadasan P. Susheela.... Thanks
The film was remade in Hindi in 1970 as Humjoli,[1] in Kannada in 1978 as Bhale Huduga,[2] and in Telugu in 1984 as Intiguttu. All versions except Intiguttu were directed by the same director, T. R. Ramanna.
The triple role played by Nagesh was essayed by Mehmood in the Hindi version and Dwarakish in the Kannada version. Later on, the dual roles played by Nagesh in Anubavi Raja Anubavi went on to be essayed by Mehmood in its Hindi version (Do Phool) and Dwarakish in its Kannada version (Kittu Puttu).... Thanks...
Directed by
T. R. Ramanna
Produced by
T. R. Ramanna
Written by
Sakthi T. K. Krishnasamy
Starring
M. G. Ramachandran
B. Saroja Devi
Music by
Viswanathan Ramamoorthy
Cinematography
M. A. Rahman
Edited by
M. S. Mani,
P. L. Mani
Production
company
RR Pictures
Release date
24 April 1964
Language
Tamil... Thanks......
நடிகர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் சாணக்கிய சபதம் சூரபத்மன் சிசுபாலன் இந்திரஜித் போன்ற இதிகாச வரலாற்று நாடகங்கள் பிரம்மாண்டமான முறையில் அரங்கேற்றிய போது தலைமை வகித்து நாடகக்காவலர் என்ற பட்டத்தை வழங்கினார் புரட்சித்தலைவர். மக்கள் திலகம் அவர்களுடன் பணக்கார குடும்பம் முதல் பல்லாண்டு வாழ்க வரை 23 படங்கள் நடித்தார். அதில் ஆயிரத்தில் ஒருவன் அரசகட்டளை அடிமைப்பெண் ,உலகம் சுற்றும் வாலிபன், ரிக்க்ஷாக்காரன் போன்ற படங்களில் தனி முத்திரை பதித்தார்!..... Thanks...
MGR Filmography Film 37 (1956) Poster
எம்ஜியாரின் திரைவாழ்க்கையில் பொன்னான ஆண்டாக மலர்ந்தது 1956ஆம் வருடம். அந்த வருடம் வெளியான அவரது மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாயின. அது மட்டுமல்ல, மூன்றும் மூன்று வெவ்வேறு களங்களைக் கொண்டிருந்தன. அலிபாபா அராபிய ஃபாண்டஸி கதையாக இந்தியிலிருந்து மறுவாக்கம் செய்யப்பட்டது. அடுத்து வந்த மதுரைவீரன் தமிழர்களின் காவல் தெய்வத்தின் கதையைச் சொன்னது; மூன்றாவதான தாய்க்குப்பின் தாரம் தமிழ்நாட்டு கிராமத்தின் இயல்பான தன்மையைச் சித்தரித்து எம்ஜியாருக்கு சமூகப்படங்கள் சரிப்பட்டு வராது என்ற தவறான கருத்தை முறியடித்து வெற்றிவாகை சூடியது.
எம்ஜியார் பானுமதி ஜோடி இதிலும் தொடர, இப்படம். முதல் முறை மட்டுமன்றி, ரீரிலீஸ்களின்போதும் வசூலை அள்ளிக்குவித்த வகையில் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் தேவர் ஃபிலிம்ஸ் கம்பெனிக்குப் அஷயபாத்திரமாகவே அமைந்தது. இதை அடுத்து எம்ஜியார் நாயகனாக நடிக்க கேவி மகாதேவன் இசையமைக்க, தேவரின் தம்பியும் எடிட்டருமான எம்ஏ திருமுகம் இயக்க தேவர் ஃபிலிம்ஸ்15 படங்களைத் தயாரித்தது; அவற்றில் பெரும்பாலும் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜியாருக்கும் தேவருக்கும் அவ்வப்போது சிறுசிறு பிணக்குகள் வந்ததுண்டு என்றாலும், இருவருடம் பரஸ்பரம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். இன்னொருவரை ஹீரோவாகப் போட்டு தேவர் ஃபிலிம்ஸ் படம் எடுக்காது என்று சின்னப்பா தேவர் எம்ஜியாரிடம் கூறியதாகச் சொல்வார்கள். வேறு நாயகர்கள் நடித்த தேவரின் தமிழ்ப்படங்கள் தேவர் ஃபிலிம்ஸ் அல்லாமல் தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் என்ற பேனரில் தயாரிக்கப்பட்டன.
எம்ஜியாரின் அம்மா செண்டிமெண்ட் ஏற்கனவே குலேபகாவலியில் இருந்தாலும், அழுத்தமாக எம்ஜியாரின் பிராண்டட் மார்க்கெட்டிங் டெக்னிக்காக அது மாறத்துவங்கியது இந்தப் படம் துவங்கித்தான். தாய் என்ற சொல்லை டைட்டிலாக வைத்தே வரிசையாகப் படங்கள் தயாராகத் துவங்கின.
எம்ஜியாரின் அரசியல் பிரசாரமும் இந்தப் படத்தில் தொடர்ந்தது. ஏற்கனவே மலைக்கள்ளனில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!' என்று பிரசாரித்ததைப்போல, இதிலும் அழுத்தமாக, 'மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே!' என்று சமூக, அரசியல் நிலைகளைச் சாடி ஒரு பாடல் அமைந்தது தற்செயல் அல்ல! இதற்குப்பின் அநேகமாக ஒவ்வொரு எம்ஜியார் படத்திலும் இதைப்போல ஒரு பாடல் இடம்பெறலானது...... Thanks...
நேற்று 23-04-2020 இரவு 11.06 க்கு பல வீடுகளில் அலறல் சத்தம். எம்.ஜி.ஆர்., நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்துக்கு பொழைப்பு குடுக்குரார். அதான் MGR the Great
இதை எம்.ஜி.ஆரின் புகைப்படத்துடன் முக நூலில் பதித்து இருப்பவர் நடிகர் எஸ்.வி.சேகர்1
இவரது எம்.ஜி.ஆர் பற்றை இதன் மூலம் அறியலாம்......... Thanks.........
ஆமாம் குருநாதாரே...
அன்புடன் காலை வணக்கம்...
"நான் ஆணையிட்டாள் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்" என்ற பாடல் வரிகளை உண்மையாக்கியவர்...
"எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்"
என்று தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றியதும்
முன்னரே தாம் அரசியலில் செய்யப்போவதை மக்களுக்கு தெரியபடுத்திய பாடல்
தலைவரின் அரசியல் வாழ்விற்கு அஸ்திவாரமிட்ட படம் தான்
"எங்க வீட்டு பிள்ளை"
கடந்த, 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தின் வசூலை, 1965ல் வெளியான, எங்க வீட்டுப் பிள்ளை தான் முறியடித்தது. ஒரே தோற்றமுடைய சகோதரர்கள், ஆள் மாறாட்டம் செய்யும், பழைய கதை தான்... ஆனால், அது எம்.ஜி.ஆருக்கு கன கச்சிதமாக பொருந்தியது.
ராமுவை கோழையாக வளர்த்து, அவரின் சொத்துக்களை, மைத்துனர் நம்பியார் அனுபவிப்பார். நம்பியாரின் கொடுமை தாங்காமல், ராமு வீட்டில் இருந்து வெளியேறுவார். மறுபுறம், இளங்கோ என்பவர், வீரனாக வளர்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால், இருவரும் இடம் மாறுகின்றனர். இதனால் நிகழும் மாற்றாங்களே கதைகளம்.
'ராமு, இளங்கோ' என, இரு கதாபாத்திரங்களிலும், எம்.ஜி.ஆர்., புகுந்து விளையாடி இருப்பார். அப்பாவி ராமுவாக, நம்பியாரிடம் அடி வாங்கும் போது, 'அட, எம்.ஜி.ஆரா இது' என விமர்சகர்களை ஆச்சரியப்பட வைப்பார். அதே நேரம், ஆள் மாறாட்டம் வழியாக வரும் இளங்கோ, நம்பியாரை சவுக்கால் அடிக்கும் போது, தன் ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
ஹிந்தியில், திலிப்குமார் நடிப்பில், ராம் அவுர் ஷ்யாம் என, வெளியானது.
எங்க வீட்டுப்பிள்ளை படப்பிடிப்பு, 45 நாட்களில் நிறைவடைந்தது. பட பூஜை போட்ட இரண்டே மாதத்தில் வெளியானது. மாடிப்படியில் ஏறியும், இறங்கியும் சவுக்கால் நம்பியாரை வெளுத்து வாங்கும் போது, 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...' என்ற பாடல் இடம் பெறும்; இதற்காகவே, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், எங்க வீட்டுப்பிள்ளை படத்தை!... Thanks...
அவர் பெயரை சொன்னவர்கள் எல்லோரும் வாழும்போது அவர் படத்தையே காட்டும்போது வாழ முடியாதா என்ன?!...... Thanks...
பொதுவாக வீர நடிப்பை அதிகம் விரும்புகின்ற நான், 'எங்க வீட்டுப்பிள்ளை'யில் எம்.ஜி.ஆரின் பயந்த சுபாவமுள்ள கோழைத்தனமான
நடிப்பை கண்டு ரசித்திருக்கிறேன்....
இப்போதும் ரசிக்கிறேன். அதில் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்தது எப்படி என்று இன்று வரை விடை தேடிக்கொண்டிருக்கிறேன்.
Ithayakkani S Vijayan...... Thanks...
சன் டீவியின்....வருமானம்...
நேற்று..விண்ணைதாண்டியது..
தலைவா....தலைவா...நீங்கள்.
.........வள்ளல்................. Thanks...
இன்று தொலைக்காட்சியில்
"எங்க வீட்டுப் பிள்ளை".
இதுவரை
எத்தனை முறை பார்த்தேன்
என்ற கணக்கே தெரியவில்லை!
எத்தனை முறை பார்த்தாலும்
ஒவ்வொரு முறையும்
அழகாக இருக்கிறது. புதுசாக தெரிகின்றார் நிருத்திய சக்கரவர்த்தி... Thanks...
எம்.ஜி.ஆர். பற்றி 100 சுவாரஸ்ய தகவல்கள் (நன்றி விகடன்) :
1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.
2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர்? எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.
3. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடித்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் துணைவியார் சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.
4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.
6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.
7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.
8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.
9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.
10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.
11. முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.
12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.
13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.
15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.
16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.
17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.
18. தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'
19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.
20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.
21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.
22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.
23. சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.
24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.
25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.
26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.
27. 1960-களில் எம்.ஜி.ஆர் மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.
28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.
29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.
30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.
31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.
32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.
33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.
34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.
35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.
36. எம்.ஜி.ஆருக்கு உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.
37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.
38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.
39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரசகியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.
40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார். தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா
எம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...
41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார். இந்த விவகாரம்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.
42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.
43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.
44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.
45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'
46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர், 3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.
48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.
49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.
50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.
51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.
52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.
53. எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.
54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.
55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.
56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.
57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.
58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.
59. எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.
60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...
61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறையில் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.
62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.
63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.
64. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.
65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.
66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்.
67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.
68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.
70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.
71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.
72. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.
73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.
74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.
75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.
76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.
77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.
78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.
79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.
80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.
81. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.
82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.
83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.
86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.
87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.
88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.
89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.
90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர் இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.
91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.
92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.
93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.
94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.
95. தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.
96. அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.
97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில் வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயாரித்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.
99. படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.
100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பினால் தனியே சாப்பிட விரும்பமாட்டார். தளத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து தருவார். ......(மீள்பதிவு)... Thanks...
"லலிதாங்கி" எம்ஜிஆர் பானுமதி நடிக்க டிஎன்ஆர் புரடொக்ஷன்ஸ் தயாரிக்கT R ரகுநாத் இயக்கத்தில் 1957 ல் உருவாக இருந்த படத்தில் திரைக்கதையில் இருந்த குழப்பத்தால் எம்ஜிஆர் நடிக்க மறுத்த படத்தை அதே கம்பெனி"ராணி லலிதாங்கி" என்ற பெயரில் எம்ஜிஆருக்கு பதில் சிவாஜியை நடிக்க வைத்து எடுத்தார்கள். மற்ற கலைஞர்கள் யாரையும் மாற்றாமல் எடுத்த படத்தின் திரைக்கதை குளறுபடியால் படம் வெளியான வேகத்தில் ஒரு சில வாரங்களில் "பூமாரங்" மாதிரி புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து விட்டது. ............ Thanks.........
படத்தில் தலைவருக்கு அடுத்து நிற்பவர் பெயர் கோலப்பன்.... இவர் தன் கடைசி காலம் வரை தலைவர் மெய்காப்பாளர்களில் ஒருவர் ஆக இருந்தவர்.
அடுத்த படத்தில் அம்மா அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் படத்தில் நடிகர் ராமராஜன் பக்கத்தில் நிற்பவர் மொகபேர் செழியன்..
கோலப்பன் அவர்களின் மருமகன் தான் இந்த செழியன்
செழியனின் தகப்பனார் சைக்கிள் வீரர் எம்.ஆர்.நடராஜன் என்று அழைக்க பட்டவர்....தலைவரின் அன்பை பெற்றவர்..அந்த காலத்தில் கவுன்சிலர் அந்த பகுதியில்.
செழியன் அவர்களை அம்மா அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்... பேர் சொல்லி என்ன முகப்பேர் என்று செல்லமாக அழைக்கும் அளவுக்கு இருந்தவர்.
பாடி படவட்டம்மன் கோவில் அறங்காவலர் ஆக அம்மா அவர்களால் நியமிக்க பட்டவர்.. நாகவேலு முருகேச முதலியார் அறக்கட்டளை தலைவர் ஆகவும் இருந்தவர்.
இப்போது கழகத்தில் முகப்பேர் பகுதி அம்மா பேரவை இணை செயலாளர்.
இவரை போல கட்சிக்கு உழைத்த குடும்பம் சார்ந்தோர் போயஸ் தோட்டத்தில் விழுந்த இரும்பு திரைக்கு பிறகு இன்றும் கழகத்தில் உண்மையாக உழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
வெல்க அதிமுக...நன்றி.
தலைவர் கோவில் படத்தில் அண்ணன் சைதையார் அருகில் இருப்பவர் தற்போதைய செழியன் ஆவார்.... Thanks.........
Cont-1
* தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான ‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.
‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார், எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை.
* அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன், -சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்.ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார், எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்.
* ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே...!’ என்றுதான் அழைப்பார் !
* அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே, அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.
* எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார், எம்.ஜி.ஆர்.
* முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம்.
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோவில் கட்டி வைத்திருந்தார்.
* ‘நான் ஏன் பிறந்தேன்?’ -ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவர் பெருமைகளும் முற்றுப் பெறவில்லை.சுவையான குறிப்புகள்...... Thanks...
சன் டிவி நேற்று" எங்க வீட்டு பிள்ளை", படத்தின் மூலமாக சன் டிவி மீண்டும் உயிர் பிழைக்க வைத்தது...
தலைவர் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் அந்த படம்..என் தங்கை.. பாசம் இறுதி காட்சி அந்த நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் புரட்சித் தலைவர் தலைசிறந்த நடிகர் உதாரணம் இந்தி நடிகர் ராஜ்கபூர் எம் ஜி ஆர் போல் நடிக்கவும் தெரியாது... அவர் மாதிரி படம் எடுக்க முடியாது ...அவர் ஒரு இயற்கை நடிப்பில் நான் ரசிகன் ... யாரையும் இப்படி புகழ்ந்தது கிடையாது... ராஜ்கபூர் அவர்கள்.......... Thanks... to BMV.,
நான்ராகவேந்திரா மணடபம் கட்டும் போது ஒரு பெரிய புள்ளி இடைஞ்சலாக தொல்லை கொடுக்க நான் எவரை எல்லாமோ பார்த்து டெல்லி வரை சென்றும் ஒருபலனில்லை கடைசியாக எம்ஜிஆரிடம் முறையிட்டேன் எம்ஜிஆர் நீ இப்போது வெளியூர் செல்லுகிறாய் சென்று வா எனகூறி அனுப்பி வைத்தார் பின் ஒருநாள் தோட்டத்திற்க்கு வர சொன்னார்எம்ஜிஆர் நான் சென்ற போது எனக்கு இடைஞ்சல் செய்த பெரும்புள்ளி வாய் பொத்தி கைகட்டி எம்ஜிஆர் முன் இருந்தார் பின் சுகமாக மண்டபம் கட்டி முடித்தேன் அது தான் எம்ஜிஆர்
எம்ஜிஆர் சிலை திறந்து ரஜினி காந்து உரையில்
நீ பழைய படங்களில் பீலா விட்டு பஞ்சு வசனம் கூறுவது போல அல்ல அல்ல எம்ஜிஆர்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடாத எம்ஜிஆர் டா
வாழ்க எம்ஜிஆர்புகழ்....... Thanks...
உழைத்து ஈட்டிய பணத்தில் வாழ்ந்தேன்
உழைத்து ஈட்டிய பணத்தை மற்றவர்க்கு கொடுத்து மகிழ்ந்தேன்
ஒன்றும் இல்லாமல் வந்தேன்
மக்கள் அன்பு மட்டும் எனக்கு என்று சேர்த்து வைததேன்்
அதுவே என் மூலதனம்
அன்பன் எம்ஜிஆர்
வாழ்க எம்ஜிஆர் புகழ்..... Thanks...
MGR Filmography Film 43 Poster
1958ஆம் வெளிவந்த எம்ஜியாரின் ஒரே படமான "நாடோடி மன்னன்" பெற்ற மாபெரும் வெற்றியைப் பார்த்தோம்.
எந்த ஒரு சாதனைக்குப் பிறகும் திருஷ்டி கழிப்பது அவசியம்தானே! சிகரத்தைத் தொட்ட பிறகு அடுத்த அடி இறக்கம்தானே! அதேதான் நிகழ்ந்தது 1959ஆம் ஆண்டு வெளிவந்த ஒரே எம்ஜியார் படமான "தாய் மகளுக்குக் கட்டிய தாலி"க்கு.
சி.என் அண்ணாதுரையின் கதைக்கு ராம அரங்கண்ணல் வசனம் எழுதி, முதல் மற்றும் இறுதி முறையாக ஜமுனா எம்ஜியாருடன் ஜோடி சேர்ந்து டி.ஆர்.பாப்பா இசையில் ஓரிரு இனிய பாடல்களையும் ('சின்னஞ்சிறு வயது முதல்) கொண்டிருந்த இந்தப்படம் யாருக்கும் பயனின்றி
பெரிய வெற்றி அடையவில்லை. தமிழ்த்திரை வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராண்டார் கையின் சொற்களில் சொல்வதானால்: 'இந்தப் படம் இன்றும் எவருக்கேனும் நினைவிருந்தால், அதன் விசித்திரமான தலைப்புக்காகத்தான்!'
எம்ஜியாரின் படங்கள் பலவற்றிலும் குணசித்திர பாத்திரங்களில் பங்களித்த அவரது மூத்த சகோதரர் எம்ஜி சக்ரபாணி இதில் வில்லன் வேடம் தாங்கி அருமையாக நடித்தாராம்! யாருக்குத் தெரியும்! .சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை படத்திற்கு சுமார் சறுக்கல் இராம அரங்கலுக்காக சம்பளம் வாங்கமல் நடித்த படம் என்று பேச்சு உறுதியாக தெரியவில்லை
வசூல் சக்ரவர்த்தியின் திரை வாழ்க்கையிலும் கடந்து போக வேண்டிய, மறந்து போக வேண்டிய படங்கள் இருந்தன; அவற்றுள் இதுவும் ஒன்று!...... Thanks...
MGR Filmography Film 44 (1960) Poster
1958ஆம் வருடம் உச்சத்துக்குச் சென்ற எம்ஜியாரின் திரைப்பயணம் அடுத்த வருடம் வெளியான ஒரே ஒரு படத்தின் மூலம் சறுக்கியது என்பதைப் பார்த்தோம்; அதற்கு அடுத்த வருடமான 1960 எம்ஜியாருக்கு ஆவரேஜாகவே அமைந்தது. அந்த வருடம் மொத்தம் 3 படங்கள் அவருக்கு வெளியாயின; அவற்றுள் முதலாவதாக வந்தது பாக்தாத் திருடன்.
இதற்கு முந்தைய தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ஜமுனா எம்ஜியாருடன் இணைந்த ஒரே படமாக அமைந்தைப் போல, பாக்தாத் திருடனும் வைஜயந்தி மாலா எம்ஜியாருடன் நடித்த ஒரே படமாக அமைந்தது.
அலிபாபாவைப் போல அராபியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அதைப் போல பெரிய வெற்றி அளவுக்கு இல்லாமல் வெற்றி பெற்றது. பொதுவாக எம்ஜியாரின் படப்பாடல்கள் பெரிதும் பாப்புலராகும்; ஆனால், கோவிந்தராஜுலு இசையமைத்த இந்தப் படப் பாடல்கள் அந்த அளவிற்குச் செல்லவில்லை. பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இப்படம் அதிகபட்சம் முதலுக்கு மோசமில்லை ,லாப நிலை அடைந்தது....... Thanks...
MGR Filmography Film 45 (1960) Poster
1960ஆம் ஆண்டில் வெளிவந்த இரண்டாவது எம்ஜியார் படம் ஆவரேஜாகத்தான் போனது.
18ஆம் நூற்றாண்டில் செஞ்சிக் கோட்டையை ஆண்டு தேசிங்கு என்று தமிழ் மண்ணில் அமரத்துவம் பெற்று நாட்டுப் பாடல்களிலும் இடம் பெற்ற தேஜ் சிங் என்னும் ராஜபுத்திர அரசன் வரலாற்றைச் சொல்வதாக அமைந்த இப்படத்தில் எம்ஜியாருடன் எஸ்எஸ்ஆர் பானுமதி பத்மினி ஆகியோர் இணைந்து நடித்தனர். தேசிங்கு ராஜாவாகவும், அவர் தகப்பனாருக்கு ஒரு இஸ்லாமியப் பெண்ணுடனான தொடர்பில் பிறந்த மற்றொரு மகனாகவும் இரு வேடங்களில் எம்ஜியார் நடித்தார். ஜி. ராமநாதனின் இசையில் வனமேவும் ராஜகுமாரி (சீர்காழி, ஜிக்கி) சரசராணி கல்யாணி (சிஎஸ் ஜெயராமன்/ பானுமதி) ஆகியவை இன்றும் ஒலிக்கக் கேட்கலாம். எம்ஜியாரின் வெற்றிப்படங்களான மதுரை வீரன், நாடோடி மன்னன், மகாதேவி ஆகியவற்றிற்கு வசனம் எழுதிய கண்ணதாசன்தான் இதிலும் பணியாற்றினார்.
ஒரு எம்ஜியார் படத்துக்குத் தேவையான படிமங்கள் எல்லாம் இருந்தும், படத்தின் இறுதியில் ஒரு எம்ஜியாரை இன்னொரு எம்ஜியாரே போரில் கொன்றுவிட்டுப் பிறகு அது தனது உடன் பிறந்த சகோதரன் என்று அறிந்து தானும் தன் மீதே வாளைப் பாய்ச்சிக் கொண்டு மடிந்து போகும் கிளைமாக்ஸ் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை
இதில் ஒரு சுவாரசியமான தகவல்: துவக்கத்தில் எம்ஜியாருக்கு ஜோடியாக பத்மினியும், பானுமதி எஸ்எஸ்ஆரின் காதலியாகவும் ஒப்பந்தமாகி, பத்மினிக்கு ஒரு பரதநாட்டியப் பாடல் காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது. பின்னர் பானுமதியின் பிடிவாதம் காரணமாக அவரை எம்ஜியாரின் ஜோடியாக்கி, பத்மினியை இஸ்லாமியப் பெண்ணாக மாற்றி அவரது நாட்டியக் காட்சியை வெட்டினார்கள். இப்படிக் கதையும் கதாபாத்திரங்களும் பல கட்டங்களில் மாற்றப்பட்டு நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததால், படம் எழுபது நாட்கள் ஓடின......... Thanks...
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது. அதுபற்றி லதா கூறியதாவது:-
நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன். இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.
மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது. நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார்.
கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும் என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன். நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும் என்று பாராட்டினார்.
இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது. இவ்வாறு லதா கூறினார். தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜு, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள். சிரித்து வாழவேண்டும் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார்.
(மும்மொழிப் படத்தில் கதாநாயகி)........ Thanks...
வீரப்பன் சொல்கிறார்...
*எம்.ஜி.ஆர்* *முதலமைச்சராக இருந்த பொது,* *ஒருநாள் நான் ராமாவரம்*
*தோட்டத்திற்கு* *போயிருந்தேன்*. *அப்போது*
*ஒரு பழைய நாடக நடிகர்* *அங்கு வந்திருந்தார்.*
*அவரிடம்,* *என்ன* *விஷயமாக வந்திருக்கிறீர்கள* ?' *என்று கேட்டேன்*
*அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே*
*பட்டினி..ஒன்றும் முடியவில்லை*. *நான்*
*சின்னவரோட நாடகத்தில* *நடிச்சிருக்கேன்*ஏதாவது* *உதவி* *கேட்கலாம்னு* *வந்திருக்கேன் என்றார்*
'*சரி உட்காருங்க* *எம்.ஜி.ஆர் வெளிய*
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்.
சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
" இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் " என்று சொல்லிவிட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.
அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
" இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன்.
"நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.
'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்.
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.
அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப
எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். சரி..என்றார்.
வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று
தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத் தான் அதிக சந்தோஷம்.
மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
கேட்டேன்..." கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க.அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு.
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க " என்று கேட்டேன்.
சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
" எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும் " என்றார்.
எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறு
கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.
*அதனால்* *தான்*அவர் இறந்தும்* *இன்னும்*
*வாழ்ந்து* *கொண்டிருக்கிறார்*.......... Thanks...
#வாழவைக்கும் #தெய்வம்
S.Ve.Shekar commented in Twitter...
நடிகர் எஸ்வீ.சேகரின் டிவிட்டர் பின்னூட்டம்
நேற்று இரவு 11.06 க்கு பல வீடுகளில் அலறல் சத்தம். எம்ஜிஆர் நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்துக்கு பொழைப்பு குடுக்குரார்.
#அதான் #MGR #the #Great........ Thanks...
சன் டிவியில் பழைய எம்ஜியார் படங்களை பகல் நேரத்தில் தான் போடுவார்கள். வேலைக்கு செல்பவர்கள் பார்க்க முடியாது. முதன் முறையாக இரவு 9.30 மணிக்கு ஒளி பரப்பினர். பெரு வாரியான மக்கள் கண்டி களிக்க டிஆர்பி எகிறியது. இனியாவது மாதம் ஒருமுறை மாலை 7 மணி அல்லது இரவு 9 மணிக்கு எம்ஜியார் படங்களை போடவும். இந்த திரைக்கு வந்து சில மாதங்களே ஆன பப்படங்கள் எல்லாம் வேண்டாம்........ Thanks...