https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d2&oe=5ED76CBAhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.n...5a&oe=5ED68970
Printable View
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e9&oe=5ED91F03
Thanks Sivaji Thirup payhi
மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே....மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே...ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.....
அறுபதை இருபது வெல்லுமா உலகிலே.....ஹே...... நீயும் நானுமா கண்ணா... நீயும் நானுமா..காலம் மாறினால் கௌரவம் மாறுமா...... காலம் மாறினால் கௌரவம் மாறுமா..... நெவர்....'
நாளை 07/05/2020 - காலை 10.00 a.m. மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில்..
நடிகர் திலகம் நடித்த - பாரிஸ்டர் பெரியப்பா, மகன் கண்ணனின் பாச போராட்ட காவியம் " கௌரவம் " - மெகா ஹிட் படத்தை காண தவறாதீர்கள். ¶
இரட்டை வேடத்தில் நடிகர்திலகம், பண்டரியாய், மேஜர், நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர் திலகத்தின் தாராளமான நன்கொடை உதவிகளும்
அன்றைய பத்திரிக்கைகளின் தாராள மூடி மறைத்த செய்திகளும் என்று தான் யோசிக்க வேண்டியதாகிறது,
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை செப்பனிட்டு குடமுழுக்கு விழா செய்யவேண்டும் என தீர்மானித்து அதற்கான நன்கொடை வசூலிப்பதென செயலில் இறங்கினார்,
அன்றைய தமிழகத்தின் உச்ச நட்சத்திர நடிகர்களான நடிகர் திலகம் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ஆகியோரிடம் முதலில் நன்கொடை பெறுவதேன முடிவெடுத்தவர் எம்ஜிஆர் திராவிட கொள்கை கொண்டவர் என்பதால் முதலில்.எம்ஜிஆர் ஐ சென்று பார்த்தார், எம்ஜிஆர் அவர்களும் உடனடியாக ரூ 10000 ஐ தாராளமாக நிதி கொடுத்தார், அடுத்து அன்னை இல்லம் சென்ற வாரியார் அவர்களை அன்னை இல்லம் பெரு மகிழ்வோடு வரவேற்று ஆசியை பெற்றுக் கொண்டனர்,
திருமுருக வாரியார் அவர்களும் கோவிலை செப்பனிட நிதி வசூல் பெற்று வருவதாகவும் இங்கு வருவதற்கு முன் எம்ஜிஆர் ஐ சந்தித்து அவரிடம் ரூ 10000 பெற்றுக் கொண்டதாகவும் கூறினார், மகிழ்ச்சி கொண்ட நடிகர் திலகம் சிவாஜி அவர்களும்.எப்போதுமே சிரிப்பூட்டும் விதமாக பேசும் வழக்கமென்பதால் " அண்ணன் பத்தாயிரம் கொடுத்திருக்கிறாரா? அப்படியா நான் பதினோராயிரம் கொடுக்கிறேன் என்று ரூ 11000 ஐ கொடுத்தனுப்பினாராம்,
மறுநாள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சீடர்கள் நமது திருப்பணிக்கு எம்ஜிஆர் கொடுத்த நிதி பற்றிய செய்தி மட்டுமே வந்திருக்கிறது சிவாஜி கொடுத்த நிதி பற்றிய செய்தியேதும் காணவில்லையே என்றார்களாம்,
வாரியாரோ ஒருவேளை சிவாஜி .நற்காரியங்களுக்கு. செய்யும் உதவியை தெரியப்படுத்தக் கூடாது என சொல்லியிருப்பாரோ என்னவோ என்றாராம்,
அவர் சொல்லவில்லை என்றாலும்.நமது வழக்கப்படி நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் தவறாமல் சிவாஜி அளித்து நன்கொடை இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றாராம்
(செய்தி ஆதாரம் நியூஸ் 7 சேனலில் இடம்பெற்ற கதைகளின் கதையிலிருந்து)
Thanks Sekar Parasuram
ஐனாதிபதி சங்கர்தயாள் சர்மாவிடம் 1996 ல் தாதா சாஹேப் பால்கெ விருது பெறும் சிவாஜி கணேசன். இந்த விருது பெற்ற முதல் தமிழர் சிவாஜி.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...2d&oe=5ED70999
Thanks Ithyakkani Vijayan
07-05-2020
இன்று தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
பதி பக்தி - காலை 9:30 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
கௌரவம் - காலை 10 மணிக்கு ஜெயா டிவியில்
குலமா குணமா - காலை 11 மணிக்கு கேபடன் டிவியில்,
நிறை குடம் - நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
அமர தீபம் - பிற்பகல் 1:30 க்கு வசந்த் டிவியில்,
நடிகர் திலகம் பற்றி கமல் விஜய் சேதுபதியிடம்...
நன்றி : இந்து தமிழ்..
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...73&oe=5EDAF777
Thanks Marimuththu Ramasamy
ஐயன் விருதுகளை பற்றி நாம் பெருமை கொண்டிருக்க அவரோ தான் எவர் முன் பெற்ற மூன்று அரிய விருது " என விவரிக்கிறார் பாருங்கள் ! இவர் அன்றோ வாழ்வியல் போற்றும் #மகத்தான_கலைஞன் !
************************
1️⃣
அது, சம்பூர்ண ராமாயணம் படம் வெளியான நேரம்... நடமாடும் தெய்வம் என வணங்கப்படும்
#காஞ்சி_பரமாச்சாரியார், நாடகத்தில், நான் பரதனாக நடித்திருக்கும் காட்சிகளை பார்த்து, என்னை சந்திக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.
அப்பா, அம்மா மற்றும் என் மனைவியுடன் காஞ்சிபுரம் சென்றேன். நாங்கள் வந்திருக்கும் செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அவர் அருகில் சென்றதும், நீண்ட நேரம் என்னையே உற்றுப் பார்த்தவர், என் அம்மாவிடம், 'இந்த குழந்தையை பெற்றதற்கு நீ ரொம்ப புண்ணியம் செய்திருக்கணும்; உனக்காக நான் பிரார்த்தனை செய்றேன்...' என்று சொல்லி ஆசிர்வாதம் செய்தார்.
பரமாச்சாரியர் முன், என்னால் எதுவும் பேச முடியவில்லை. என் அம்மாவின் முகத்தை பார்த்தேன். விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். பரமாச்சாரியர் கூறிய பாராட்டு வார்த்தைகள், #அம்மாவின் முன், எனக்கு கிடைத்த விருது.
️ 2️⃣
ராஜா அண்ணாமலை மன்றத்தில், வியட்நாம் வீடு நாடக அரங்கேற்றம். நாடகத்தில் எனக்கு அம்மாவாக எஸ்.எஸ்.வாசனுடைய அம்மாவின் புகைப்படத்தை மாட்டி வைத்தனர்.
ஒரு காட்சியில் நான் வசனம் பேசிக் கொண்டு வரும் போது, அப்புகைப்படத்தின் முன் நின்று, 'எங்க அம்மா வீடு வீடா மாவாட்டி என்னை படிக்க வைச்சா... பிரஸ்டீஜ் பத்மநாபன் அப்படி வளர்ந்தவன்...' என்று உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அரங்கமே அமைதியாக இருந்தது.
ஆனால், முதல் வரிசையிலிருந்து ஒரு விசும்பல் குரல் கேட்டது. நான் மேடையிலிருந்து கீழே பார்த்தேன். எஸ்.எஸ்.வாசன் அழுது கொண்டிருந்தார். அன்று என் அப்பாவும் நாடகத்திற்கு வந்திருந்து, மேடையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்.
நாடகம் முடிந்ததும் எஸ்.எஸ்.வாசன் நேராக மேடைக்கு வந்து அப்பாவை கட்டிக் கொண்டு, 'அடடா... இப்படி ஒரு புள்ளய பெத்திருக்கீங்களே...' என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது, என் #தந்தை முன், என் நடிப்பிற்கு, திரையுலக மேதையிடம் இருந்து கிடைத்த விருது.
3️⃣
எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில்; ஒரு பிராமண குடும்பம் இருந்தது; பனகல் குடும்பம் என்று பெயர்.
ஒருநாள் ஷூட்டிங்கிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்வீட்டில் இருந்த வயதான மாமி, என்னை வழியனுப்ப வந்த என் மனைவியிடம், 'கமலாம்மா... நேத்திக்கு உன் ஆம்படையான் நடிச்ச, வியட்நாம் வீடு நாடகம் பார்த்தேன்டீ; என்னம்மா நடிச்சிருக்காரு. பிராமணனா பொறந்திருக்க வேண்டியவன்.
நானும் ஒரு குழந்தைய சுவீகாரம் எடுத்திருக்கேன். அவனுக்கு கூட இவ்வளவு சரியா சந்தியா வந்தனம், அபிவாதயே செய்யத் தெரியல. உன் ஆம்படையான் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து காட்டீட்டார் போ...' என்று பாராட்டு மழை பொழிந்தார். நான் கமலாவை ஏறிட்டு பார்த்தேன். அவள் முகத்தில் என்றைக்கும் இல்லாத சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. இது, என் #மனைவி முன், எனக்கு கிடைத்த விருது.
️1️⃣2️⃣3️⃣
மகா கலைஞன் மட்டுமன்றி மகா மனித கலைஞன்
நன்றி: வாஹினி பப்ளிகேஷன்ஸ்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b6&oe=5ED8035B
Thanks Arumugam Six face
நான் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். அவருக்கு கிடைக்கின்ற புகழில் ஒரு துளி என் மீது விழுந்து என்னைப் பெருமைப் படுத்துகிறது.
நான் முதலில் "தூக்கு தூக்கி" என்ற படத்தில் சிவாஜிக்கு பின்னணி பாடினேன். நான் பாடிய முதல் பாடல் "ஏறாத மலைதனிலே" என்ற பாடல் தான்.
அந்த பாடலை நான் பாடிக் கொண்டிருக்கும் போது, ரிகார்டிங் தியேட்டருக்கு சிவாஜி வந்தார். எனது குரலை மெய் மறந்து கேட்டு விட்டு
"நன்றாக பாடுகிறீர்கள். இனிமேல் எனது படங்களுக்கு நீங்கள் தான் பாட வேண்டும் என்றும் சொன்னார்.அன்று முதல் இன்று வரை அவரது படங்களுக்கு நான் பாடி வருகிறேன்.
ஆனால் பின்னணியில் திரை மறைவில் நான் பாடுகிற பாடலுக்கு உயிர் கொடுப்பது சிவாஜி தான். எனது குரலுக்கு ஏற்ப வாயசைத்து மெருகேற்றுபவர் சிவாஜி தான்.
கலைத்துறையில் அவர் தங்கமான மனிதர். உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் நல்லவர்.
"ஞானஒளி" படத்தில் தேவனே என்னை பாருங்கள் பாடலை நான் பாடிக்கொண்டிருக்கும் போது, பாடலைக் கேட்பதற்கு சிவாஜி வந்தார். பாடலில் உள்ள சில அபிநயங்களையும், ஏற்ற..இறக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார். அவரது இசை ஞானத்தை கண்டு வியந்து போனேன்.
அதுமட்டுமல்ல;அந்த பாட்டின் இசையில் அவர் பேச வேண்டிய வசனங்களையும் நானே பேசும்படி சொன்னார். இதை போலவே "வசந்த மாளிகை" யாருக்காக என்று நான் பாடிய பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது.
அவருக்கு பாடிய எத்தனையோ பாடல்களிலும் என்னை கவர்ந்த பாடல் பாபு படத்தில் இதோ எந்தன் தெய்வம் பாடல்.அந்த பாடல் அந்த தெய்வமகனை மனதில் கொண்டு பாடியதால் உயிர்பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிவாஜி அவர்களை சகலகலாவல்லவர் என்றே கூற வேண்டும்.சிவாஜி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
நன்றி.
திரு.T.M.செளந்தரராஜன் அவர்கள் திலகத்தின் பிறந்தநாள் விழாவின் போது அளித்த பத்திரிகை பேட்டி ..
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d7&oe=5EDB8623
Thanks Ganesh Pandian
நாளை ( 08/05/2020 ) - காலை 07.00 A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " என் தம்பி "
படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், சரோஜாதேவி, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்
.................................................. ................................
அன்னை என்னும் கடல் தந்தது...தந்தை என்னும் நிழல் கொண்டது.... பிள்ளை செல்வம் என்னும் வண்ணம்
கண்ணன் பிறந்தான்...நன்றி என்னும் குணம் கொண்டது...நன்மை செய்யும் மனம் கொண்டது..எங்கள் இல்லம் என்னும் பேரை கண்ணன் வளர்ப்பான்..'
நாளை 08/05/2020 - காலை 10.00 a.m. மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில்..
நடிகர் திலகம் நடித்த - மகத்தான காவியம் " தங்கப்பதக்கம் " - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், கே.ஆர். விஜயா, ஸ்ரீகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்..அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்..பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்..
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்....'
நாளை 08/05/2020 - காலை 09.30 a.m. மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவி யில்,
ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பலை முதல் முதலாக ஓட்டிய வ.உ.சி. யாக நடிகர் திலகம் நடித்த படம் - " கப்பலோட்டிய தமிழன்"- தேசபக்தி படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்
இன்று - 08.05.2020 பகல் 01.30 p.m. மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த படம். !!!
" பந்தம் " படத்தை கண்டு களியுங்கள். !!!
நடிகர்திலகம், ஆனந்த் பாபு, மனோரமா மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.
இன்றைய தினமலர் நாளிதழில்....
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...04&oe=5ED98CDE
சிவாஜியின் பொற் காலம் என்றுகருதப்படுகின்ற முதல் 20 ஆண்டுகளில் தனக்கு சவால் விடக்கூடிய ஜாம்பவான்கலுடன்தான் மிக அதிகமாக நடித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நடிக்க வந்த இரண்டே ஆண்டுகளில் தமிழ் திரை உலகை தன்னை நோக்கித் திருப்பவைத்தவர் சிவாஜி.
1954ல் தமிழ் சினிமாவில் அவர் கோடிதான் உயரே பறந்து கொண்டிருந்தது.அவரது விஸ்வரூபத்தை கண்டு எம்ஜிஆர் வியந்து நின்றார்.எங்கு திரும்பினாலும் சிவாஜியின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள்.மந்திரி குமாரி மருதநாட்டு இளவரசி மர்மயோகி என்று தொடர வெற்றிகளை குவித்த எம்ஜிஆர் பராசக்தி வெற்றிக்கு பிறகு கானாமலே போய் விட்டார்.பாடத்தெறிந்தவர்களின் கொடி பறந்து கொண்டிருந்த போதுதான் திரை உலகில் எம்ஜிஆர் புகுந்தார்.சிவாஜி வந்த பிறகு வசன யுகம் வந்துவிட்டது.கத்தி வீசி குதிரைகளில் பறக்கிற வீரர்கள் நிறைந்த கதைகள் கேட்பாரற்றுப் போயின.சமகால சமூக கதைகள் முக்கியத்துவம் பெற்றதை அடுத்து குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டார்.வீரனாக உலா வந்த எம்ஜிஆர் மனோகரா படத்தை எதிர்பார்த்தார்.மனோகராவும் சிவாஜிக்கு போய் விட செய்வதறியாது இருந்தார்.
கோவை பட்சி ராஜா அதிபரும்
படத்தயாரிப்பாளர் எஸ்.எம் ஸ்ரீராமுலு நாயுடு அவர்கள் நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்காம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு செய்து சிவாஜியை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார்.ஆனால் சிவாஜி தவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் எம்ஜிராமச்சந்திரனை போட்டு எடுங்கள் என்று யோசனை கூறினார்.இதே கால கட்டத்தில்தான் சிவாஜி மறுத்த பல படங்களில் ஜெமினி கணேசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.சிவாஜி நடிக்க வேண்டிய படங்களில் எம்ஜிஆரும் ஜெமினியும் வாய்ப்பு பெற்று நடித்தார்கள்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...b8&oe=5EDC80B0
Thanks Vijaya Raj Kumar
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே...ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான்...நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்'.... ¶
நாளை 09/05/2020 காலை 11.00 a.m. மற்றும் இரவு 7.00 p.m. மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த -
" என் மகன் " படத்தை கண்டு களியுங்கள். ¶
இதில் நடிகர்திலகம், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to change.