http://i48.tinypic.com/907nld.jpg
Printable View
மக்கள் திலகத்தின் பல அரிய புகைப்படங்களை நமது திரியில் பதிவிட்டு வரும் அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கும் அவ்வரிய புகைப்படங்களை தந்து உதவும் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கும் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
me and my dad with puratchi thalaivar ... ...................regards
மக்கள் திலகத்தை நேரில் பார்த்த எனது வாழ்வில் மறக்க முடியாத இனிய அனுபவங்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கின்றேன்.
1984...பிப்ரவரி மாதம் .
கர்நாடக மாநில உள்ளாட்சி தேர்தலில் ஷிமோகா நகரில் கன்னடர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் எனது தந்தை திரு m.p .சம்பத் அவர்கள் அண்ணா திமுக சார்பில் போட்டியிட்டு நகரசபை உறுப்பினாராக மாபெரும் வெற்றி பெற்று அந்த வெற்றியினை புரட்சிதலைவர் பொற்பாதங்களில் சமர்பிக்க சுமார் 50 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஏழு வயது நிரம்பிய நானும் சென்னை ராமாவரம் தோட்டம் சென்று மக்கள் திலகம் அவர்களை நேரில் சந்திக்க தோட்டத்தில் காத்திருந்தோம் .
அவரை சந்திக்க பல்வேறு பகுதியிலிருந்து வந்த மக்கள் கூட்டம் அலை மோதியது .
திடீரென்று ஒரு மின்னல் போல் மக்கள் திலகம் நாங்கள் நிற்கும் பகுதிக்கு புன்சிரிப்புடன் வந்தவுடன் எங்களால் ஆச்சரியத்தையும் ,ஆனந்தத்தையும் கட்டு படுத்த முடியவிலை . எனது தந்தையோ என்னையும் தன்னையும் மறந்து மக்கள் திலகத்தையே பார்த்து கொண்டிருந்தார் . ஒரு ஓரமாக நிண்டிருந்த என்ன பார்த்து தன் வசம் என்னை இழுத்து யார் இந்த பையன் என்று வினவினார் மக்கள் திலகம் . பின்னர் மக்கள் திலகத்திடம் எனது தந்தை என்னை அறிமுகம் செய்து வைக்கிறார் அவர் படங்கள் மிகவும் விரும்பி பார்பதாகவும் கூற .மக்கள் திலகம் என்னை செல்லமாக முதலில், நன்கு படிக்க வேண்டும் பிறகு படங்கள் பார்க்கலாம் என்று அறிவுரை கூறி அனைத்து புகைப்படம் எடுத்து கொண்டார் .
அந்த அரச கட்டளைக்கேற்ப நானும் நன்கு படித்து இன்று பேராசிரியர் பணியில் செவ்வனே பனி புரிந்த வருகின்றேன் .
அவரின் காந்த சக்தி இன்றும் பல லட்சகணக்கான ரசிகர்களை ஈர்த்து வருவது உலக சாதனையாகும் .
உலகில் எந்த நாட்டிலும் நடைபெறாத வரலாற்று உண்மையாகும் .
மக்கள் திலகத்தின் கொள்கை - மனித நேயம் - கொடை
சேவை மனப்பான்மை இந்த ஈர்ப்புகளால் நான் மாநில அரசின் ஷிமோகா ஊர்காவல் படையின் தலைவராக சிறப்புடன் பணியாற்றி வருவது மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்ப்பது ஒரு சாதரான மக்கள் திலகத்தின் ரசிகனான எனக்கு கிடைத்த பெருமை - அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் மக்கள் திலகத்தையே சேரும் .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும்
அவரது புகழ் தினமும் வளர்வது கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் .
மக்கள் திலகம் திரியில் அவரது புகழ் பாடும் இந்த திரியில் எனது மக்கள் திலகம் சந்திப்பு அனுபவம் பகிர்ந்து கொள்வது எனக்கு மன நிறைவு தருகிறது .
மக்கள் திலகம் நினைவாக பலர் வாழ்ந்தனர்
மக்கள் திலகம் நினைவாக இன்றும் பலர் வாழ்ந்து கொண்டு வருகின்றனர் ..... வாழ்வோம் மக்கள் திலகம் நினைவாக .என்றும் ......என்றென்றும் ...
இனிய நினைவுடன்
welcum to thread jaishankar sir... lovely images... no words to explain the emotions... soon i ll be updating...... continue the great work..................regards.....shiv
punnagai mannan endrendrum... aangalaiyum mayakkum perazhagan