Originally Posted by
kalaiventhan
திரு. ஆர்.கே.எஸ்.
சகோதரர் யுகேஷ் பாபு அவர்கள் போட்ட பதிவை எடுத்து கிண்டல் செய்கிறீர்களோ என்று நினைத்தேன். ஆனால், lighter side ஆகத்தான் போட்டேன் என்று நீங்கள் விளக்கம் அளித்திருப்பதை பார்த்த பின் உங்கள் நோக்கத்தில் தவறில்லை என்று புரிந்து கொண்டேன்.
சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களும் உள்நோக்கத்தோடோ, வம்புக்காகவோ உங்கள் பெயரை இழுத்ததாக நினைக்கவில்லை. முரளிக்கு அவர் அளித்த விளக்கமாகவே பார்த்தேன். இப்போது, உங்கள் விளக்கத்தை நான் ஏற்கவில்லையா?
திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலில் உங்கள் பெயரைப் பயன்படுத்தியது குறித்து நீங்கள் முதலில் ‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ’பதிவு போட்டபோதே விளக்கம் சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால், தேவையில்லாமல் பிரச்னை செய்கிறாரே என்று நினைத்து கோபம் வந்ததால் விளக்கத்தை தவிர்த்து, இது நியாயமா? என்று கேட்டிருந்தேன். உங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டதால் இப்போது விளக்கம் அளிக்கிறேன்.
‘தனக்குத் தானே.....’ சொற்றொடரைப் பொறுத்தவரை நீங்கள் அதை திறமையாக கையாண்டிருந்ததும் அதில் தொக்கியிருந்த நகைச்சுவையும் என்னைக் கவர்ந்ததால் அதை அப்படியே பயன்படுத்தினேன். காப்பி அடித்தது போலாகிவிடுமே என்பதால் உங்கள் பெயரை போட்டேன்.
ஐடி விவகாரத்தை பொறுத்தவரை உங்கள் திரியில்தான் அவ்வாறு உண்டு என்று பொதுவாகக் கூறினால், அப்படி எல்லாம் இல்லை என்று யாராவது கூறி, ஆதாரம் எங்கே? என்று கேட்டால் மீண்டும் நான் ஆதாரத்தை சொல்ல வேண்டியிருக்கும். சொல்லாமல் விட்டாலும் நான் பொய் கூறியது போல இருக்கும். விவாதத்தை மேற்கொண்டு தொடர விரும்பாமல் கேள்விக்கே வழி இல்லாத வகையில் ஆதாரத்தோடு சொல்ல நினைத்ததால் நீங்கள் ஏற்கனவே எழுப்பிய சந்தேகத்தை மேற்கோள் காட்ட வேண்டியதாகி விட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலைத் தொடர்ந்து விவாதத்தை விரும்பாதது போலவே இப்போதும் விவாதத்தை தொடர விரும்பவில்லை. என்றாலும், உங்கள் பெயரைப் பயன்படுத்தியதற்காக நீங்கள் வருந்தினால் அதற்காக நானும் வருந்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: பண்பாளர்கள், கண்ணியவான்கள் என்று கூறி திரு.ராகவேந்திரா, திரு.ஜி.கிருஷ்ணா, திரு. சிவாஜி செந்தில் ஆகியோர் பெயர்களையும் கூறியிருந்தேன். அதில் ஒரு பெயர் விட்டுப் போய் விட்டது. அவர்.. திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்கள்.(என்ன வாசு சார், எதிரணியில் நமக்கு நல்ல பெயர் உண்டு என்று இனி நீங்களாகவே நினைத்துக் கொள்ள வேண்டாம். நிஜமாகவே உங்களுக்கு இங்கு நல்ல பெயர் உண்டு. நீங்கள் மட்டுமல்ல, அடிப்படையில் எல்லாருமே நல்லவர்கள்தான், ராட்சச ரசிகர்கள் உட்பட) பண்பாளர்கள், கண்ணியவான்கள் பட்டியலில் உங்கள் பெயர்களை பயன்படுத்தியதற்காக எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவித்தால் அப்படி சொன்னதற்காக மன்னிப்பு கோர தயாராக இருக்கிறேன்..... என்று எச்சரிக்கிறேன்.