சிவா அவர்களே
இத்தனை நாள் உங்கள் பெயர் போடாமல் மாற்றுத் திரியில் மக்கள் திலகத்தைப் பத்தி தவறாக மோசமாக விமரிசித்து பதிவு போடுகின்றார்கள் என்றுதான் பொதுவாய் சொல்லிவந்தேன்.
நீங்களே எங்க திரிக்கி வந்து எங்கள் மீது குற்றம் சொல்வதால் இப்ப சொல்கிறேன். நேரிடையாக உங்க மேலே குற்றம் சாட்டுகின்றேன். இரண்டு திரிக்கும் நடுவிலே நடக்கும் இந்த கருத்து தகராலுக்கு மோதலுக்கு சிவா என்ற நீங்கள்தான் காரணம். மக்கள் திலகம் படங்களை கிண்டல் செஞ்சும் புரட்சித் தலைவரை இழிவு செஞ்சும் உங்கள் திரியில் சிவா என்ற நீங்கள் போடும் பதிவுகள்தான் காரணம். பேஸ்புக்கில் வந்ததைப் போட்டேன் என்று நீங்கள் சொன்னால், பேஸ்புக்கில் என்ன வந்தாலும் அதை எடுத்துப் போட்டுவிடுவீங்களா? அதை படிக்க மாட்டீர்களா.
நீங்கள் மவுனம் காப்பதில் என்ன அதிசியம் இருக்கின்றது. நாங்களாக ஒன்றும் உங்கள் விடயங்களை பற்றி பேசவில்லையே. நீங்கள் புரட்சித் தலலைவர இழிவு செய்து போடும் பதிவுக்கு நாங்கள் பதில் சொல்கின்றோம். நீங்கள் புரட்சித் தலவரை மோசமாக விமர்சித்தாலும் நாங்கள் மவ்னமாய் இருக்க வேண்டுமா?
நவரத்தினம் படம் தோல்வி அடைஞ்சு ஏ.பி.நாகராஜன் மனம் உடைஞ்சு செத்தார் என்று நீங்கள் (சிவா) உங்கள் திரியிலே நீங்கள் பதிவு போட்டீர்கள். இதுக்கு எங்களுக்கு சம்பந்தம் இல்லா விடயமா? இதுக்கு பிராப்தம் படம் எடுத்து சாவித்ரி பிச்சை எடுத்து செத்தார் என்று நாங்கள் பதில் சொல்லக் கூடாதா?
ரஜினியின் அரசியல் பற்றி வந்த கட்டுரையில் புரட்சித் தலைவர் பத்தியும் அவர் ஆட்சி பத்தியும் மோசமான பதிவு நீங்கள் (சிவா) போட்டீர்கள். அதுக்குத்தான் அதுவும் புரட்சித் தலைவரைப் பத்தி வந்த விமர்சனத்துக்கு மட்டும்தான் நான் பதில் சொன்னேன். புரட்சித் தலைவரின் கடைசி கால உடல் நிலையைச் சொல்லி அதுதான் ஆட்சியை காப்பாற்றியது என்று நீங்கள் (சிவா) இழிவுபடுத்தி பதிவு போட்டீர்கள்.
நன்றாய் கவனியுங்கள்..
புரட்சித் தலைவரின் கடைசி கால உடல் நிலையைச் சொல்லி அதுதான் ஆட்சியை காப்பாற்றியது என்று நீங்கள் (சிவா) இழிவுபடுத்தி பதிவு போட்டீர்கள்.
புரட்சித் தலைவரின் கடைசி கால உடல் நிலையைச் சொல்லி அதுதான் ஆட்சியை காப்பாற்றியது என்று நீங்கள் (சிவா) இழிவுபடுத்தி பதிவு போட்டீர்கள்.
புரட்சித் தலைவரின் கடைசி கால உடல் நிலையைச் சொல்லி அதுதான் ஆட்சியை காப்பாற்றியது என்று நீங்கள் (சிவா) இழிவுபடுத்தி பதிவு போட்டீர்கள்.
இப்ப சொல்லுங்கள். இதுக்கும் நாங்கள் மவுனமாக இருக்க வேண்டுமா? அதுக்குத்தான் பதில் சொன்னேன். புரட்சித் தலைவரையும் அவர் உடல் நிலையையும் ஆட்சியையும் நீங்கள் குறை சொல்ல உரிமை இருக்கும்போது எங்களுக்கு பதில் சொல்ல உரிமை கிடயாதா?
முதலில் நான் போட்ட பதில் பதிவை எங்கள் நெரியாளர் ரவிச்சந்திரன் நீக்கிவிட்டார். புரட்சித் தலைவர் கற்றுக் குடுத்த அமைதியான முறையில் செல்வோம் என்று அவர் எனக்கு வேண்டுகோள் விட்டார். இதோ ஆதாரம். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் திரியில் புரட்சித் தலைவரை பத்தின பதிவு இருக்கும்போது இதை நீக்காதீர்கள் என்று நான் ரவிச்சந்திரனை கேட்டுக் கொண்டேன். அப்பறம்தான் என் பதிவை அனுமதிச்சார். நீங்கள் தவறும் செய்துவிட்டு இங்கு வந்து எங்களையே குற்றம் சொல்லும் உங்கள் பதிவக் கூட எங்கள் நெரியாளர் ரவிச்சந்திரன் பெருந்தன்மையாக நீக்கவில்லை.
எங்கள் நெரியாளராவது இரண்டு திரிக்கும் மோதல் வேண்டாம் என்று என் பதிவ அப்பப்போது நீக்கிவிடுகிறார். உங்கள் திரி நெரியாளர் எதையும் கண்டுக்காமல் உங்களை மோசமான பதிவுகள் போடவிட்டு உங்களுக்கு அனுமதிக்கிறாரே. முதலில் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அப்பறம் இங்கே வந்து ரவிச்சந்தரனுக்கு நன்றி சொல்லுங்கள்.
நாடோடி மன்னன் பற்றி தவறான விபரம் 11 கோடி வசூல் என்று பத்திரிகை செய்தி எங்கள் திரியில் வந்தது. அதற்கு நீதி நேர்மை எங்கே என்று கேட்டேன் என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். நாடோடி மன்னன் செய்திக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். இருந்தாலும் உங்கள் கேள்விய குறிப்பிட்டுவிட்டு நான் நேர்மையாக நாடோடி மன்னன் படம் 11 கோடி வசூலிக்கவில்லை அது தப்பான செய்தி என்று நேர்மையாக பதிவு போட்டேனே. அதை பாராட்டினீங்களா?
சரி பாராட்டத்தான் வேண்டாம். மனசு வராது. ஆனால் நீங்கள் எங்கள் திரி செய்தி பத்தி கேட்கும்போது நாங்களும் அப்படி கேட்க உரிமை இருக்கின்றதல்லவா. அதனால்தான் இப்பவும் கேட்கிறேன்.
நாடோடி மன்னன் பட வசூல் பற்றி கேள்வி கேட்ட நீங்களே (சிவா), காத்தவாராயன், அன்னையின் ஆணை, சாரங்காதாரா ஆகிய 100 நாள் ஓடாத படங்களை 100 நாள் ஓடினதாக உங்கள் நெரியாளர் சொல்லி பத்திரிகையில் வெளியான பொய் செய்தியை உங்கள்திரியில் நீங்களே (சிவா) பதிவு போடுகின்றீர்களே. இந்த படங்கள் 100 நாள் ஓடவி்ல்லை என்ற உண்மை உங்களுக்கு தெரியும். இருந்தும் பொய் செய்தியை பதிவு போடுகிறீர்களே.
இப்ப உங்கள் (சிவா) நேர்மை எங்கு போனது? நாடோடி மன்னன் 11 கோடி வசூல் செய்யவில்லை என்று உண்மையை சொல்லி எங்கள் நேர்மயை நிரூபிச்சு விட்டோம். எங்களை கேள்வி கேட்கிற உங்களுக்கு கொஞ்சமாச்சும் நேர்மையாக இருக்க வேண்டாமா. கொஞ்சமாச்சும் நேர்மை இருந்தால் காத்தாவாராயன், சாராங்காதாரா, அன்னையின் ஆணை படங்கள் 100 நாள் ஓடவில்லை என் ற உண்மையை உங்கள் திரியில் நீங்கள் (சிவா) பதிவு போட்டுவி்ட்டு நேர்மையைப் பத்தி பேசுங்கள்.
உங்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாதது. மனோகரா படம் சென்னயில் ஒரு வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நாஞ்சில் இன்பா எழுதி தமிழக அரசியல் பத்திரிகயில் வந்த செய்தியை நீங்கள் (சிவா) போட்ட பதிவப்பத்தியும் அது பொய் தகவல் என்றும் சொன்னேன். அது கூட அதில் புரட்சித் தலைவரை குறை கூறியதால் சொன்னேன். இல்லாவிட்டால் சொல்லிருக்க மாட்டேன். நான் தவறை சொன்னதுக்கு எனக்கு எண்ணிக்கை தெரியவில்லையா, பள்ளிக்கே போகவில்லியா என்று கிண்டல் செஞ்ச நீங்கள், நான் ஆதாரத்தோடு வெளியிட்டதும் வாயே திறக்கவில்லை. தவற ஒப்புக்கும் நாணயம் உங்களிடம் (சிவா) இல்லை.
மோசமான பதிவுகள் போடுவது எல்லாம் நீங்கள் (சிவா). ஆனால் அதுக்கு நாங்கள் பதில் சொல்லக் கூடாதா?
போர் என்று எல்லாம் நாங்க சொல்லவில்லை. நீங்கதான் (சிவா) சொல்கிறீர்கள். நீங்க அப்பிடி முடிவு செய்துவிட்டால் நாங்களும் ரெடி. ஆனால், இதுக்கும் நீங்கள்தான் (சிவா) காரணம். மோசமான தரக்குறையான பதிவுகள் வந்தால் போர் என்று முழங்கும் சிவா என்ற நீங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அல்லாவுக்கு பயந்து கொஞ்சமாச்சும் மனச்சாட்சியோடு பதிவு போடுங்கள்.