-
புதிய மாணவ மாணவிகளுக்கு ஹாஸ்டல் விதிகளை விளக்கினார் Dean.
"Ladies ஹாஸ்டல்ல பசங்க யாரும் போகக்கூடாது.யாராவது அத்துமீறிப் போனா முதல் தடவை 100 ரூபா ஃபைன் கட்டணும்.
மறுபடியும் ரெண்டாவது தடவையா நுழைஞ்சா 200 ரூபாய் கட்டணும்.
மூணாவது தடவையா மாட்டினா 500 ரூபா கட்டணும்.ஜாக்கிரதை " என்றார் .
மாணவன் "சீசன் பாஸுக்கு எவ்வளவு ஆகும்
-Madurai Medicos.
-
பிச்சைக்காரன்: ஐயா பிச்சை போடுங்கய்யா.
வீட்டுக்காரர்: வந்திருவீங்களே. திருவோட எடுத்துக்கிட்டு!!!. காலம் மாறினாலும் நீங்க மாற மாட்டீங்களா?
பிச்சைக்காரன்: சரி. இந்தாங்கய்ய..
வீட்டுக்காரர்: என்ன? என்ன நம்பர் இது?
பிச்ச்சைக்காரர்: என் பேங்க் அக்கவுண்ட் நம்பர். ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன் பண்ணிடுங்க..
-
மேடம் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? வழி சொல்றீங்களா?
Timeline ல நேரா போயி அப்படியே "Right Click" பண்ணி அப்படியே "Like" பண்ணினா ஹாஸ்பிட்டல் வரும் சார்...
-Madurai Medicos
-
டாக்டர் ; உங்க புருஷனுக்கு எங்கெல்லாம் காயம் இருக்குங்கறதை எப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க?
மனைவி; கடிச்ச எனக்குத் தெரியாதா ?
-
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
-
வக்கீலும் டாக்டரும்
வக்கீல்: டாக்டர்! பிரேதப் பரிசோதனை செய்றதுக்கு முன்னாடி நாடித்துடிப்பை செக் பண்ணிப் பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதிச்சீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: மூச்சுக்காத்து வருதான்னு பார்த்தீங்களா?
டாக்டர்: இல்லை
வக்கீல்: அப்ப உயிர் இருந்திருக்கிற வாய்ப்பு இருக்குதானே!
டாக்டர்: இல்லை
வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
டாக்டர்: ஏன்னா அந்த பேஷண்டோட மூளை என் முன்னாடி ஒரு ஜார்லே இருந்தது.
வக்கீல்: மூளை இல்லாம கூட உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதல்லவா?
டாக்டர் (கிண்டலாக): இருக்கு. வக்கீலா பிராக்டிஸ் செய்யக்கூட வாய்ப்பிருக்கு.
-
டாக்டர்: இந்த நோய் குணமாகணும்னா தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!
Mr X: அது மட்டும் முடியாது டாக்டர்!
டாக்டர்: ஏன்?
Mr X: எங்க வீட்டுல 4 டம்ளர்தான் இருக்கு.
-
ஜிட்டு : எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?
பிட்டு : நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!
-
ஜிட்டு : எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?
பிட்டு : நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!
-
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..