'நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்'
'புன்னகை'
http://padamhosting.me/out.php/i27837_punnagai-10.pnghttp://padamhosting.me/out.php/i27845_punnagai-02.png
இது பட்டப்படிப்பு பெற்ற 5 நண்பர்கள் பட்டம் பெற்ற சந்தோஷத்தைக் கொண்டாடிக் குதூகலிக்கும் பாடல். காந்தி சிலைக்குமுன் 'உண்மை வழி நடப்போம்' என்று உறுதி எடுத்து 5 நண்பர்களும் உற்சாகமாக அந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
ஜெமினி, நாகேஷ், முத்துராமன், எம்.ஆர்.ஆர்.வாசு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இவர்கள்தான் அந்த 5 நண்பர்கள்.
அமுதம் பிக்சர்ஸ் 'புன்னகை' படத்திலிருந்து இந்தப் பாடல். திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பாலச்சந்தர்.
காரில் மதராஸை வலம் வந்தபடி, பீச்சில் ஜாலியாய் சுற்றியபடி, ஐவரும் செம கலாட்டா. ஜெமினியைப் பார்த்தால் படத்தில் நடிக்க வந்தவர் போலவே இல்லை. கூலிங் கிளாசெல்லாம் போட்டுக்கொண்டு நிஜமாகவே நண்பர்களுடன் ஊர் சுற்றுவதைப் போலவே அவ்வளவு இயல்பு. மற்ற எல்லோருமே பாடலுக்குத்தான் நடிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் நிஜ நண்பரகளாய் அரட்டை அடித்து என்ஜாய் செய்வது அமர்க்களம்.
ஜெமினி மெயின் என்பதால் அவருக்கு டி.எம்.எஸ்.அவர்களின் கணீர்க் குரல். மனிதர் என்னமாய் உணர்ந்து பாடுகிறார்! முத்துராமனுக்கு தொடரின் நாயகர் பாலாவின் குரல். நாகேஷுக்கு மிகப் பொருத்தமாக சாய்பாபாவின் குரல். கே.எஸ்.கோபாலகிருஷனுக்கு பாடல் இல்லை என்பதால் பின்னணி இல்லை. (கோரஸில் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்.) ஆக ஒவ்வொருத்தருக்கும் குரல் பொருத்த தேர்வு ஆஹா! ஓஹோ!
அதுவும் வாசுவிற்கு வீரமணியின் குரல் நன்றாகவே பொருந்துகிறது. அனுபவித்துப் பாடியிருக்கிறார். வீரமணி பாடிய சினிமாப் பாடல்கள் மிகக் குறைவு.
எதிர்கால இளைஞர்களின் கனவுகளை அதுவும் தனியாக வாசுவின் கனவை, அவருடைய கேரக்டருக்குத் தக்கபடி அவர் எதிர்பார்ப்பை பாடலில் உணர்த்தியிருப்பது சிறப்பு.
எம்.ஆர்.ஆர்.வாசு,
'மழையை வெயிலென்றும் மகனைத் தந்தை
என்றும் சொன்னாலென்ன?
மனது சொன்னபடி கால்கள் போனபடி
போனாலென்ன'?
என்று தன் இஷ்டத்திற்கு வாழ்க்கையை வளைக்க நினைத்து மாறுதல் வேண்டிப் பாடுவதும்,
அதற்கு ஜெமினி 'ஊரோடு ஒத்துப் போவதுதான் வாழக்கை...உன் இஷ்டத்திற்கு எதையும் மாற்றிக் கொள்ள முடியாது' என்று பொருள்பட,
'நீயும் ஊரோடு சேராமல் முடியாது
காலம் உனக்காகத் தானாக நடக்காது'
என்று உபதேசித்துப் பதில் சொல்லிப் பாடுவதும் டாப்.
பாடலின் முடிவில் நண்பர்கள் காரில் வேகமாக வளைவுகளைக் கடக்கும் போது காரின் பிரேக் சப்தம் ஒலிப்பதை பாடலில் காட்டியிருப்பது இன்னொரு புதுமை. அது பாடல் முடிந்தவுடன் நடக்கும் விபத்தை முன் கூட்டியே அறிவிப்பதாகவும் அமைந்து விடுகிறது.
படு கேஷுவலான நடிப்புடன் கூடிய கருத்துக்கள் மிகுந்த களை கட்டும் பாடல். கடல் அலைகளில் வாசுவுடன் ஜெமினி சில ஷாட்களில் அமர்க்களம் பண்ணுவார். குறிப்பாக சாய்பாபா பாடும்
'சோறு படைக்கும் சொர்க்கங்கள்
பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள்'
வரிகளில் நாகேஷுடன்.
முத்துராமனையும், கோபாலகிருஷ்ணனையும் தனியே காண்பிக்கும் போது 'நெஞ்சிருக்கும் வரை' ஞாபகத்திற்கு வராமல் போகாது. அந்த நாயகரும் நினைவுக்கு வாராமல் இருக்க மாட்டார்.
http://sim03.in.com/2/1d0c9b3254632f...8bc70_ls_t.jpg
'நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
என்று தொடங்கும் வரிகள்'.
நான்கு அருமையான பாடகர்கள் பாடுவதால் அனைவருக்கும் சம வாய்ப்பு. பாலாவும் தன் பங்கிற்கு மிக அழகாகப் பாடியிருப்பார். ஆனால் 'பாடகர் திலகம்' கம்பீரத்தாலும், பாவத்தாலும் வழக்கம் போல முன்னை இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்.
இசை 'மெல்லிசை மன்னர்'. கோவர்த்தன், ஜோசப் கிருஷ்ணா இருவரும் உதவியாளர்கள். இந்த மாதிரிப் பாடல்களென்றால் விச்சுவிடம் உற்சாகம் பீறிட்டு எழுமே! மனிதர் விளையாடி விடுவார். முதல் சரணத்திற்கு முன் ஒலிக்கும் அந்த சாக்ஸ் இசை பிரமாதம். பாடல் முழுவதுமே உற்சாக இசை கொப்பளிக்கும். புல்லாங்குழல்களின் சின்ன சின்ன பிட்கள் அம்சம். பாங்கோஸ் உருட்டல்களும், ஆர்கன் வித்தைகளும் அமர்க்களம். நண்பர்கள் கடற்கரையில் ஓடி வரும் போது பின்னிப் பெடலெடுக்கும் இசைக்கருவிகளின் ஆதிக்கங்களை உன்னிப்பாகக் கேட்க மறந்து விடாதீர்கள்.
1978-ல் வெளிவந்த அமிதாப் நடித்து சூப்பர் ஹிட்டான 'Muqaddar Ka Sikandar' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'Rote Hue Aate Hain Sab' பாடலில் வரும் இசையை இந்தப் 'புன்னகை' படப் பாடலில் 'மெல்லிசை மன்னர்' கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன்னமேயே அப்படியே தந்து அசத்தியிருப்பார். இந்தப் பாடலில் வரும் பல சங்கதிகளை கல்யாண்ஜி ஆனந்த்ஜி 'Rote Hue Aate Hain Sab' பாடலில் பயன்படுத்திக் கொண்டிருப்பது மிக நன்றாகத் தெரியும்.
மிக மிக அற்புதமான அனுபவித்துக் கேட்க வேண்டிய முத்தான பாடல். பலவகையிலும் சிறப்புப் பெற்றது.
டி.எம்.எஸ்
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
பாலா
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
கோரஸ்
காலம் உங்களின் கைகளின் மேலே
பாலா
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
சாய்பாபா
ராமன் ஆளட்டும்... சோமன் ஆளட்டும்
ஆண்டாலென்ன?
காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம்
வாழ்ந்தாலென்ன?
பாலா
அந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வதும் குலம் காக்க
டி.எம்.எஸ்
அந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க
நாம் அறிவோடு வாழ்வதும் குலம் காக்க
பாலா
தாமரை கொண்ட தண்ணீர்
டி.எம்.எஸ்
தன்னறிவற்ற உன் வாழ்(வு)
பாலா
நிம்மதி கொள்ள முடியாது
ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ
டி.எம்.எஸ்
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
கோரஸ்
காலம் உங்களின் கைகளின் மேலே
வீரமணி
மழையை வெயிலென்றும் மகனைத் தந்தை
என்றும் சொன்னாலென்ன?
மனது சொன்னபடி கால்கள் போனபடி
போனாலென்ன?
டி.எம்.எஸ்
நீயும் ஊரோடு சேராமல் முடியாது
காலம் உனக்காகத் தனியாக நடக்காது
சாய்பாபா
சோறு படைக்கும் சொர்க்கங்கள்
பூமியில் உள்ள இன்பங்கள்
தேடி நடந்து செல்லுங்கள்
ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ
பாலா
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
டி.எம்.எஸ்
மனிதன் பாவங்களை மனிதன் கேட்பதில்லை
ஆனாலென்ன
பொறுத்துப் பார்த்த பின்பு இறைவன்
கேட்பதுண்டு
கேட்டாலென்ன
வீரமணி
எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது
எந்தன் பாவங்கள் தேவனுக்குத் தெரியாது
பாலா
ஆடுவதென்று நீ ஆடு
பாடுவதேன்று நீ பாடு
ஓடுவதென்று நீ ஓடு
ஓஹோ ஹோஹோ ஹோஹோ...ஹோ
டி.எம்.எஸ்
நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை
காலம் உங்களின் கைகளின் மேலே
கோரஸ்
காலம் உங்களின் கைகளின் மேலே
நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே!
https://youtu.be/TwiWbFoDyEY