-
-
-
Dear Pammalar vasudevan raghavendra sir
hats off to you all great work
regards
kumareshan prabhu
-
அன்பு பம்மலார் சார்,
நமது நற்றமிழ் நாயகரின் "நவராத்திரி" தசாவதாரம் புகைப்படங்களுக்கு பிடியுங்கள் ஒரு கோடி சபாஷ். தெள்ளத் தெளிவான புகைப் படங்கள். நவரசங்களையும் பிழிந்து காட்டும் நமது நாயகரின் அற்புத முக பாவங்கள் அசரவைக்கின்றன. பதிவிட்டமைக்கு பல்லாயிரம் கோடி பாராட்டுக்கள். மனமுவந்த நன்றிகள்.
"நவராத்திரி"யின் சாதனைகளை சான்றுகளுடன் வெளியிட்டு கூக்குரலிட்ட கோட்டான்களின் வாய்களை அடைத்து விட்டீர்கள்.
நடிகர்திலகத்தின் அனைத்து சாதனைகளையும் உண்மையான ஆதாரங்கள் மூலம் ஊரறிய, உலகமறியச் செய்யும் அரும்பணியில் ஈடுபட்டு அதில் முழு வெற்றியும் பெற்று, எங்களையெல்லாம் தலைநிமிர்ந்து 'நாங்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்களாக்கும்' என்று பெருமிதத்துடன் உலா வரச் செய்கிறீர்களே....நாங்கள் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்?
நன்றிகளுடன்,
வாசுதேவன்.
-
டியர் சதீஷ் சார்,
தங்கள் மனமுவந்த அன்புக்கு நன்றி. தாங்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கைக்கும் நன்றி. தங்கள் எண்ணம் ஈடேற நிச்சயம் முயற்சி செய்கிறோம்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் குமரேசன் பிரபு சார்,
தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
'வசந்த மாளிகை' என்னவாயிற்று?
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
"வெள்ளை ரோஜா' பதிவுகள் தங்கள் வெள்ளை மனது போலவே எங்கள் உள்ளம் கொள்ளை கொண்டன. பதிவுகளுக்கு பாசமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
Dear sankara1970,
Thank you very much !
vasudevan.
-
சதீஷ் சார்,
நீங்கள் சொல்லியிருக்கும் விவரம் காலம் காலமாக நடந்து வரும் சதி வேலை. அந்த மாயவலையில் விழுந்த இன்றைய தலைமுறையினரும், தங்கள் வலைப்பூக்களிலும், மற்ற பிற இடங்கள் செய்யும் பதிவுகளிலும், ஏதோ ரொம்பத்தெரிந்தவர்கள் போல நடிகர்திலகத்தின் திரைப்பட வெற்றிகளைப் பற்றித்தெரியாமல், அவரை 'சிறந்த நடிகர், திறமையாளர்' என்பதோடு நிறுத்திக்கொண்டு, 'சாதனையாளர்' என்ற பட்டத்தை வேறொருவருக்குக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏன், இவையனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் திரையுலகினரும் அப்படித்தான் பேசுகின்றனர்.
இதில் நம்மவர்களின் மெத்தனமும் அதிகம் இருக்கிறது. இதுபோன்ற சாதனைகளைப் பற்றிய ஆதாரச்செப்பேடுகளை வெளியிட்டு, அவர்மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்டு வரும் களங்கத்தை துடைத்தெறிய வேண்டும் என்று நமது பம்மலார் அவர்களுக்கும், முரளி சார் அவர்களுக்கும், ராகவேந்தர் அவர்களுக்கும் ஏற்பட்ட ஆதங்கமும் அக்கறையும் தலைமை மன்றத்துக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா?. தலைமை மன்றம் எப்போதுமே காங்கிரஸ் கொடிபிடித்து, காங்கிரஸ்காரர்களை அரியணை ஏற்றுவதிலேயே குறியாக இருந்தது. ஒரு படத்தின் 100-வது நாள் விளம்பரத்தில், அப்படம் 100 நாட்கள் ஓடிய அனைத்து அரங்குகளின் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறதா என்பதைக்கூட பார்ப்பது கிடையாது. தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே ஒரு படம் 100 நாட்களைக்கடப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதை வெளியிடுவதில் தலைமை மன்றம் கவனமாக இருந்து வந்திருக்கிறதா?. இதுவே 'அந்தப்பக்கம்' என்றால் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் செத்தான். இதுதான் R.M.வீரப்பனுக்கும், V.C.சண்முகத்துக்கும் இருந்த வித்தியாசம். இதுதான் முசிறி புத்தனுக்கும், சின்ன அண்ணாமலைக்கும் இருந்த வித்தியாசம். ரசிகர்களின் மனநிலை அறிந்து செயல்பட்டவர்கள் அந்தப்பக்கம் இருந்தவர்கள்.
என்னவோ நாம் செய்த பெரும் அதிர்ஷடம், பம்மலார் என்ற மாமனிதர் நம்மிடையே கிடைத்துள்ளார். அவர் அள்ளித்தரும் ஆதாரங்கள் அனைத்தும் வெறுமனே பார்த்து ரசித்து விட்டுப்போவதற்கல்ல. நடிகர்திலகத்தின் ஒவ்வொரு ரசிகரும் தங்கள் கணிணியில் மட்டுமல்ல, தனிப்பட்ட பிளாஷ் மெமோரிகளிலும் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பம் இனியொருமுறை வாய்ப்பது மிக மிக அரிது.
நம்மவர்கள் தங்கள் இதைப்பட்ட வலைப்பூக்களிலும் இவற்றைக் குறிப்பிட வேண்டும். நமது கணினி வல்லுனர்கள் 'கூகிள் சர்ச்' பகுதியில் Shivaji Movie Ads என்ற பகுதியைத் துவக்கி இவற்றை அதில் இடம்பெறச்செய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
(வெற்றிக்கேடய்ங்களின் (ஷீல்டுகள்) வரிசையும் இடம்பெற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை நானும் வழிமொழிகிறேன். நம்மவர்கள் நிச்சயம் செய்வார்கள். போதிய அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டுவோம்).
-
அன்புள்ள பம்மலார் சார்,
நடிகர்திலகத்தின் 100-வது வெற்றிக்காவியம் 'நவராத்திரி' படத்தின் வெற்றிச்சான்றிதழ் வரிசை வெகு அற்புதம். ஆறு திரையரங்குகளில் 100 நாட்களைத்தாண்டி ஓடி பெரும் வெற்றிபெற்ற காவியத்தின் சாதனைகளை (இத்துடன் வெளியான முரடன் முத்துவும் 9 வாரங்களைக்கடந்தது) மறைக்க முயற்சித்ததோடல்லாமல், இதற்கு போட்டியாக வந்த வண்ண 'ஓடக்காரனை' ஒரு அரங்கிலாவது 100 நாட்கள் கரைசேர்க்க, படாத பாடுபட்டு, சென்னை அண்ணாசாலை அரங்கில் மட்டும் ஒரு வழியாக ஓட்டி, பட்டியலில் சேர்த்த கதையை ஏற்கெனவே முரளிசார் தெரிவித்துள்ளார். அந்த ஒரே தியேட்டர் பெயரோடு வந்த விளம்பரம் வேறொரு இடத்தில் பார்த்தேன். பிற்காலத்தில் அது வழக்கம்போல மாபெரும் வெற்றிப்படமாக கதை திரிக்கப்பட்டது.
நவராத்திரியின் ஆறு விளம்பரங்களும் அறுசுவை விருந்தாக அமைந்தது. தேடியெடுத்து, பத்திரப்படுத்தி, பறிமாறிய உங்களுக்கு அதிகமான பாராட்டுக்கள். அதைவிட அதிகமான நன்றிகள்.