-
இன்றைய தினத்தந்தியில் வசனகர்த்தா ஆருர்தாஸ் -சினிமாவின் மறுபக்கம்
-செய்திகளுக்கு இடையே வெளியான புகைப்படங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://i59.tinypic.com/hurr0h.jpg
-
இன்று முதல் (19/04/2014) மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் தம் உன்னத நடிப்பில் உருவான "என் அண்ணன் " தினசரி
3 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெறுகிறது.
தகவல் உதவி: திரு.சரவணன், மதுரை.
http://i61.tinypic.com/35lgdxk.jpg
-
மதுரை அரவிந்தில் மக்கள் திலகம்/புரட்சி நடிகர் இரு வேடங்களில் கலக்கிய
"மாட்டுக்கார வேலன் " 06/03/2014 வெளியானபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
தகவல் உதவி: திரு.சரவணன், மதுரை.
http://i60.tinypic.com/ei84nq.jpg
-
.மதுரை அரவிந்தில் புரட்சி நடிகர், பாரத் எம்.ஜி.ஆர். வழங்கும், "இதய வீணை "
22/03/14ல் வெளியானபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
தகவல் உதவி: திரு.சரவணன், மதுரை
http://i59.tinypic.com/2gtcinn.jpg
-
http://i61.tinypic.com/14l0mrq.jpg
மதுரை மீனாட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரையிடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
திருவாளர்கள்:ராமச்சந்திரன், எஸ். குமார், பாலு, சின்னசாமி,சரவணன்,
சைக்கிள் வண்டியில் மாரியப்பன், மற்றும் பார்வையாளர்கள்
தகவல் உதவி: திரு.சரவணன், மதுரை
-
-
-
உலகம் சுற்றும் வாலிபன் (3)
http://i1170.photobucket.com/albums/...s1a226c29.jpeg
விமான நிலையத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நண்பர்களும், எங்களை வரவேற்று, மாலை அணிவித்தனர்.
இரவு நெடு நேரம் வரையில், எஸ்.எஸ்.ஆர்., என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.
விடியற்காலை, 5:30 மணிக்கு, விமானம் வெளிநாடு புறப்பட இருப்பதால், 3:30 மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும். அத்துடன் நண்பர்கள், மற்றும் அந்த மூன்று இளம் பெண்கள், இவர்களையெல்லாம், எழுந்திருக்கச் செய்ய வேண்டும்.
ஓட்டல் வந்ததும், இம்மூன்று பெண்களும், அங்குமிங்கும் ஓடுவதும், ஒருவர் பெட்டிகளை, இன்னொருவர் தூக்கி சென்று, எடுத்து வைத்து, சரி செய்வதுமாக பரபரப்பாக இருந்தனர்.
இந்த பரபரப்பில், காலையில் நன்றாக தூங்கி விட்டார்களானால், என்ன செய்வது? அவர்களை நேரத்திற்கு எழுப்ப வேண்டுமே!
பத்திரிகையாளர் சித்ரா கிருஷ்ண சாமிக்கு போன் செய்து, அவர்களை காலையில் எழுப்ப வேண்டிய தகவலைச் சொன்னேன்.
'அவங்கள ஓட்டல்காரர்களே எழுப்பிடுவாங்க; நானும் எழுப்பிடுவேன். நீங்க பயப்படாதீங்க. இன்னைக்கு அவங்க யாரும் தூங்கப் போறதா எனக்குத் தெரியலே... ஒரே அரட்டை! கல்லூரி லீவு விட்டு, ஜாலியா பிக்னிக் போறவங்க மாதிரி தான் இருக்காங்க...' என்றார்.
மறுநாள் காலையில், வெகு சீக்கிரமாகவே எழுந்து, விரைவிலேயே விமான நிலையத்துக்குச் சென்று விட்டோம். பெண்கள் மூவரும் கையில், சில அட்டைப் பெட்டிகளைத் தூக்கி கொண்டு வந்தனர். அவைகளில் ஒவ்வொன்றையும், ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டாலும், தங்கள் ஒவ்வொருவரிடம், ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளப் பிடிவாதம் பிடித்தனர்.
எஸ்.எஸ்.ஆர்., கமலநாதன், தட்சிணாமூர்த்தி போன்றவர்களும், தமிழக விடுதி அதிகாரிகளும் உதவி செய்து, வழி அனுப்பி வைத்தனர்.
நாங்கள் கொண்டு போயிருந்த சாமான்களின் குவியலைப் பார்த்து, அசந்து விட்டனர் அதிகாரிகள். உடைகள், விக்குகள், நகைகள், கேமராக்கள் முதலியவைகளைக் கொண்ட பல பெட்டிகள். அவசர அவசரமாகக் குறித்துக் கொண்டு, அனுமதித்தனர்.
ஐந்தரை மணிக்கெல்லாம், தமிழக மக்களின் ஆசியுடன், இந்திய மண்ணிலிருந்து வெளிநாடு புறப்பட்டோம்.
கொஞ்ச கொஞ்சமாக இந்தியா எங்கள் கண்ணிலிருந்து மறைந்து விட்டது. நாங்கள் கற்பனையில் கண்டு வந்த அழகுமிகு நாடுகளைக் பார்க்கப் போகும் ஆவல், எங்களைத் தொற்றிக் கொண்டது.
விமானத்தில், இளஞ் சிவப்பு நிறத்தில் உடை அணிந்த, 'ஏர் பிரான்ஸ்' விமானப் பணிப் பெண்களின் அக்கறையும், கடமையுணர்வும் கொண்ட உபசரணையை, எவ்வளவு போற்றினாலும் தகும்.
இயக்குனர் ப.நீலகண்டனும், வசனகர்த்தா சொர்ணமும் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்ப்பதும், என்னைப் பார்த்து சிரிப்பதும், பின், ஒருவரிடம் மற்றவர் ஏதோ சொல்வதையும், கேட்டவர் சிரிப்பை நிறுத்தி, சிந்தனையோடு தலையாட்டுவதையும் கவனித்தேன். முதலில் எனக்கு புரியாவிட்டாலும் பின்பு, புரிந்தது. இயக்குனருக்கு, எப்படியாவது கதையைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்... அதை, என் காதில் விழுமாறு வேண்டுமென்றே தான் பேசினார். ஆனால், எனக்கு கேட்காதவாறு பேசியதைப் போல் நடித்தார்.
நான், உடனே, 'கவலைப்படாதீங்க... ஜப்பான் போய் பேசிக்கலாம்...' என்றேன். சொர்ணம் உடனே ஜன்னல் வழியே, தெரிந்த காட்சிகளை ரசிக்கத் துவங்கி விட்டார். அவர் மட்டுமல்ல, டைரக்டரும் கூட!
விமானம் வங்கக்கடலை கடந்து, பாங்காக் நகரம் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
'கீழ்த்திசை நாடுகளின், வெனிஸ்...' என்று போற்றப்படும், பாங்காக் நகரின் குறுக்கே ஆறுகள், ஆற்றின் கரையில் வீடுகள், நீரில் சென்று கொண்டிருக்கும் படகுகள், அனைத்தையும் கண்டோம். இவைகளை ஆகாயத்திலிருந்து, அப்படியே படமாக்கினால், எவ்வளவு அழகாக இருக்கும் என்று தோன்றியது.
என் ஆசை, நியாயமான ஆசைதான்; ஆனால், விமானத்தை வாடகைக்கு எடுத்தால் அல்லவா படமாக்க முடியும். எங்களால் முடியுமா? ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் தானே, பணத்தைச் செலவு செய்ய இயலும்? இருப்பினும், சபலத்தோடு திட்டமிட்டேன்.
ஜப்பானுக்குச் சென்று திரும்பும் வழியில், பாங்காங்குக்கும் வர இருக்கிறோமல்லவா... அப்போது, ஏதாவது வகையில், 'ஹெலிகாப்டர்' கிடைத்தால் முயலுவோம் என்று நினைத்து, என் ஆர்வத்தை, நம்பிக்கையோடு அடக்கிக் கொண்டேன்.
விமானம் பாங்காங் விமான நிலையத்தில், காலை, 8:50 மணிக்கு இறங்கியது.
அந்த ஊர் நேரப்படி, கைக் கடிகாரத்தை, மணி,1:20 நிமிடங்கள், தள்ளி வைக்க வேண்டி இருந்தது.
ஐந்து மணி நேரத்தில், மாறுபட்ட பூமி, மாறுபட்ட உருவங்கள்... விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளை, சயாமிய நாட்டு அழகிய பணிப்பெண்கள், இன்முகத்துடன் வரவேற்றனர்.
நாங்கள் அனைவரும், விமான நிலைய, 'லாபி'க்கு போனோம்.
படப்பிடிப்பு குழுவினர், ஒரே மாதிரி துணியில், ஆங்கில நாகரிக பாணியில், உடை அணிந்து வந்திருந்தனர்.
ஒரே மாதிரியான உடைகளில், பலர் வருவதை அதிசயத்தோடு, விமான நிலையத்தில் இருந்தவர்கள் ரசித்துப் பார்த்தனர். நான் இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எப்போதும், அணியும் வேட்டி, ஜிப்பா, சால்வை, தலையில் குல்லாய் அணிந்திருந்தது, அம்மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
வியப்போடு பார்த்தவர்கள், வேறு எங்கோ பார்ப்பது போல், மிக அருகில் வந்து, உற்றுநோக்கி, திரும்பிப் போனார்கள். என்னைப் பார்த்தவாறே, சயாமியப் பெண்களும், என் அருகே சூழ்ந்து நின்று பார்த்தனர். 'என்னண்ணே... உங்களுக்கு இங்கும் ரசிகைகளா...' என்றார் நாகேஷ்.
'இல்லை, வேட்டியின் நுனியை எங்கே, எப்படி சொருகியிருக்கேன், என்று பார்ப்பார்களாக்கும்...' என்றேன்.
சிறிது நேர ஓய்வுக்கு பின், மீண்டும் விமானத்தில் ஏறினோம்.
விமானம் எங்களை சுமந்தபடி, மணி, ௯:௫௦க்கு புறப்பட்டது.
அலைகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து, ஒன்றை ஒன்று அழுத்துவதைப் போல் என் சிந்தனைகள், எங்கெங்கோ மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம், என் அறிவை மோத, அதன் விளைவாக ஏற்பட்டிருந்த மனச்சுமையினால், உடற்சுமை அதிகமானது போல் தோன்றியது.
அந்நாட்டிலிருந்த இயற்கைக் காட்சிகள், என்னை மேலும் மேலும் குழப்பிக் கொண்டிருந்தன.
இவைகளையெல்லாம், தமிழக மக்கள் நேரில் காண முடியாவிடினும், படங்களிலாவது, பார்க்கும் வாய்ப்பை தர வேண்டுமே... நான் காணும் இக்காட்சிகளை, என்னால் படமாக்க இயலுமா?
இப்படி ஒரு ஏக்கம், திட்டம், வசதியின்மையின் அச்சுறுத்தல், முயன்று பார்த்தால் என்ன என்ற கேள்வி எழும்போதே,
'முதலில், 'எக்ஸ்போ'வையாவது படமாக்க முடிகிறதா பார்...' என்று மனதுக்குள், ஒரு கேலி!
சினிமாவில் பல வேடங்களில், ஒருவரே தந்திரக் காட்சியில் நடிப்பது போல், என் மனம், என்னை பல்வேறு கேள்வி கேட்டு, குழப்பிக் கொண்டிருந்தன.
டில்லி மாநகரை விட்டுப் புறப்படும் போது, எனக்குள் இருந்த நம்பிக்கை, ஏறத்தாழ ஐந்தாறு மணி நேரத்திற்குள், சிதிலமாகிக் கொண்டிருக்கிற காட்சியையா நான் காண வேண்டும்!
மனிதன், தன் வலிமையை நன்கு புரிந்து திட்டம் போட்டாலும் கூட, அது முழு வெற்றி பெற்று விடும் என்று, உத்தரவாதம் தர முடியவில்லையே!
இப்படி பலவாறான எண்ணங்களுடன், அந்நாட்டின் இயற்கைக் காட்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன்.
விமானம், மணி, 10:40க்கு, கம்போடியா நாட்டின் தலைநகரான, 'பானம் பான்' விமான நிலையத்தில், இறங்கியது.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி: 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- எம்.ஜி.ஆர்.,
-
ஜுபிடர் சோமுவின் மறைவுக்குப் பிறகு, அவர் மகன் எம்.எஸ்.காசி, படத்தொழிலில் இறங்கினார். ஸ்ரீதர் டைரக்ஷனில் "நெஞ்சம் மறப்பதில்லை'' படத்தைத் தயாரித்தார்.
காசி, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் "பி.எஸ்.சி'' முதல் ஆண்டு படித்து வந்தபோது, தந்தை சோமுவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், தனக்கு உதவியாக மகன் காசியை படத்தொழிலில் இறக்கினார். 1959-ம் ஆண்டு "தங்கப்பதுமை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை காசி கவனித்தார்.
இதன்பின் எம்.ஜி.ஆர். நடித்த "அரசிளங்குமரி'' தயாரிக்கப்பட்டு வந்தபோது, சோமு மரணம் அடைந்தார். இதனால், அந்தப்படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பை காசி ஏற்றார்.
இந்த அனுபவம் பற்றி காசி கூறியதாவது:-
"மாணவ பருவத்திலேயே, ஜுபிடர் படங்களின் படப்பிடிப்பை பார்த்திருக்கிறேன். எனவே, சின்ன வயதிலேயே எனக்கு சினிமா பற்றி ஓரளவு தெரியும்.
என் தந்தை உடல் நலம் குன்றியதால், நான் படத்தொழிலுக்கு வந்தேன். படத்தயாரிப்பின் நுட்ங்கள் பற்றி, எனக்கு என் தந்தை பயிற்சி அளித்தார்.
"அரசிளங்குமரி'' தயாராகி வந்தபோது என் தந்தை காலமாகிவிட்டதால், அந்தப் படத்தை முடிக்க எம்.ஜி.ஆர். செய்த உதவி மறக்க முடியாதது. கிட்டத்தட்ட பாதி படத்தை அவர்தான் டைரக்ட் செய்தார் என்று கூறவேண்டும்.
ஒரு காரியத்தை எடுத்தால், அதை முடிக்கும் வரை சாப்பாடு, தூக்கம் எதைப்பற்றியும் எம்.ஜி.ஆர். நினைக்கமாட்டார். "எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்க வேண்டும்'' என்பதே அவர் கொள்கை. அவரிடமிருந்து நான் கற்ற முக்கிய பாடம் இது.''
இவ்வாறு காசி கூறினார்.
courtesy malaimalar
-
Sathyam complex AAyirathil oruvan Monday Ticket Status (21.04.14) Eve.show Status image uploaded by Chokalingam ( this is 39th day )
Thanks Chokalingam sir
http://i1170.photobucket.com/albums/...ps9e566669.jpg
-
Sathyam complex AAyirathil oruvan Monday Ticket Status (21.04.14) Eve.show Status image uploaded by Chokalingam
Thanks Chokalingam sir
http://i1170.photobucket.com/albums/...psff5a9908.jpg
-
Sathyam complex AAyirathil oruvan Monday Ticket Status (21.04.14) Eve.show Status image uploaded by Chokalingam ( this is 40th day )
Thanks Chokalingam sir
http://i1170.photobucket.com/albums/...psff5a9908.jpg
-
பிறந்ததே வெற்றியை தன் வசப்படுத்தி வாழ்வதற்காகத்தான்... இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்!!வெற்றி நாயகன் டாக்டர் எம்.ஜி.ஆர்!!
http://i1170.photobucket.com/albums/...ps9082e832.jpg
Quote:
Originally Posted by
Yukesh Babu
-
http://i1170.photobucket.com/albums/...ps78db516d.jpg
அந்த 1984 ஆம் ஆண்டு! சென்னை மீனம்பாக்கம் விமான நிலய எதிர்புறம்! தமிழக மக்களே இடம்பெயர்ந்து கூடியிருந்த காட்சி!
அடடா! வங்கக்கடல்தான் பொங்கி புகுந்ததோ! அப்படி ஒரு மக்கள் கூட்டம்!
ஏன் எதற்கு இப்படி? தமிழகத்தின் நாற்புறமுமிருந்து ஓடி வந்து அளவற்ற ஆவலோடு காத்து நிற்கிறதே! அதுவும் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்தபடியே தங்களுக்குள்ளாக பேசிக் கொள்கின்றனர். முன்போலவே இருப்பாரா! அந்த மல்லிகை மலர் சிரிப்பு அவர் ரோஜா இதழில் பூக்குமோ! சந்தனமேனி நிறமாறாமலே இருக்குமோ! அனைவரையுமே இனம் கண்டே களிப்படைந்த காட்சி கிடைக்குமோ!
இப்படி பாமரன் முதல் படித்தவர் வரை ஆச்சரிய, கேள்வி, ஆனந்த குறிகளோடு!
ஒரு அறிவிப்பு! பாம்பே ஏர் இந்தியா விமானம் இன்னும்
சற்று நேரத்தில் விமான நிலையத்தை
அடையும்! ஆ....அதென்ன இடியோசையோ! அடேங்கப்பா! லட்சகணக்கானரோரின் கரவொலிகளால் அந்த
இடமே...பூகம்ப ஓசையை எழுப்பி அடங்க நீண்ட நேரம் ஆனது! கொஞ்ச தூரத்தில் வானில்
அந்த விமானம் புள்ளியாய் தோன்றி நெருங்குகிறது!
தலைவர் வாழ்க!தலைவர் வாழ்க! வள்ளலே வாழ்க! வாழ்வே வருக! விண்ணதிர வாழ்த்து கோஷங்கள் அந்த விமானத்தை தாண்டியும் எதிரொலித்தது! இப்பொது அந்த விமானம் ஒரு அன்னப்பறவையாய் அரைவட்டமடித்து தரையில் கால்பதித்துதன் தடம் ஓடி நிற்கிறது!
மீண்டு வாழ்த்தொலிகள் வான்தாண்டியே! திக்திக்கிட்ட நெஞ்சங்களின் படபடப்பு! பல லட்சவிழிகள் அந்த விமானத்தின் வாசல் நோக்கியே ஆவலாய்!
மெல்லத்திறந்த கதவு வாழ்த்தி வழிய அனுப்பும் விமானப்பணிப்பெண்ணின் புன்னகைப் பணிவு!
ஒவ்வொருவராய் பயணிகள்! எங்கே எங்கே எம் தலைவர் ஆவல் உந்திய மக்கள் அலை!
அது சுனாமிக்கு கூட இல்லை அந்அந்த அதீத சீற்றம்! இங்குமங்குமாக மக்கள் கூட்டம் முண்டி மோதுகிறது! ஆனாலுமே அப்படியே கட்டுக்கோப்பாக!
எந்த அசம்பாவங்களுமின்றி! அதோ! அதோ! ஆம்!
ஆமாம் ஆமாம் அவரேதான்! வாயிலில் தன் மனைவி சகிதமாக! ஆஹா! ஆஹா! அந்த ராமச்சந்திர மூர்த்தியே ஜானகி தேவியோடு தரிசனம்! அதே வழக்கமான பாணியிலேயே தன்னைக் காணத்துடித்து நிற்கும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்தே கரம் சற்றே உயர்த்தி
அசைக்கிறார்! இதழோரம் அதே மலர் சிரிப்பு! அதே கம்பீரம்! சில நிமிடங்கள் வெடித்து சிதறும் வாழ்த்து கோஷங்கள்! கண்ணுற்ற விழிகளில் காட்டாற்று வெள்ளமென..கண்ணீர் பெருக்கு! கோடிகள் பரிசாக கிடைத்தாலுமே காணாத மகிழ்ச்சி மக்களின் மனங்களில்! இன்னமொரு பிறவி கண்ட அந்த தர்ம தேவனுக்குத்தான் எத்தனை எத்தனை வழிபாடுகள்,பிராத்தனைகள், வேண்டுதல்கள்!
அனைத்து மதங்களுமே ஒரணியிலே நின்று அவரவர்
முறையிலே வேண்டினரே! இதோ அந்த.....ஒன்றுபட்ட பலனை இன்று கண்ணெதிரே தந்துவிட்டரே ஆண்டவன், அல்லாஹ்,
ஏசுபிரான், இதயம் நிறைந்த நன்றிகளை அப்போதே அவரவர் வாய் முணுமுணுக்கிறது ..
நன்றி : ராம் மோகன்.
-
JAYA DISCUSSED WITH OUR GOD REGARDING PARLIMENT ELECTION CAMPAIGN
http://i1170.photobucket.com/albums/...pse2734527.jpg
-
-
மதங்களை கடந்து வாழும் உன்னத மகான்
Inauguration of Mother Theresa Women's University, Kodaikanal by Mother Theresa in 1984.
http://i1170.photobucket.com/albums/...ps5b530b4b.jpg
-
" யாரிவன் , எங்கிருந்து வந்தான் , என்ன இவன் பழைய கதை என்றெல்லாம் குழம்பும் உன் மனசாட்சி . தெள்ளிய நீருக்கும் , இல்லறத்துப் பெண்ணுக்கும் கள்ளம் புரியாது ; கபடம் தெரியாது .
கண்ணாடி உன்மனம் , அதிலே நீ காண்பது உன் கணவனின் முகம் .
அரண்மனை , அதிகாரம் ஆள் , அம்பு , சேனை இதுதான் நீ காணும்
உலகம் . இன்னொரு உலகம் உண்டு , நான் கண்டது , நீ காணாதது .
காடு சுற்றுவார்கள் , கலப்பை பிடிப்பார்கள் , உழுவார்கள் , விதைப்பார்கள் , அறுப்பார்கள் சுமப்பார்கள் ; ஆனால் உண்ண மட்டும்
உணவின்றித் தவிப்பார்கள் . அத்தகைய மாபெரும் கூட்டத்திலே நானும் ஒருவன் .
படையிலே சேர்ந்தேன் , மக்களுக்குப் பணி புரிய , நாட்டைக்
காக்க . சேர்ந்த பின்பே அறிந்தேன் , ஆற்ற வேண்டிய படை மக்களை அழ வைத்தது ; வாழ வைக்க வேண்டிய படை மக்களை மாள வைத்தது என்று . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் ,வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் . அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி , அணைக்கத் தாவும் என் மன சாட்சி .
ஏன் இப்படி ? எதற்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . கடைசியில் ஒரே ஒரு முடிவுக்கு
வந்தேன் . மக்களின் மதிப்பைப் பெற்ற ஒருவன் நாட்டில் தலைவன் ஆகும் வரை , உங்கள் சர்வாதிகார ஆட்சிக்கு எல்லையே இல்லை என்று உணர்ந்து , புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன் .
புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல . அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு , கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை , குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருட்களை . கத்தி எடுக்காத ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது .
பிடிபட்டேன் ஒருநாள் , சிறையில் வதை பட்டேன் . பாராளும் மன்னனாகப் பார்க்கிறாயே இப்போது , அவன் சிறையிலே சிறையிலே
இருந்தபோது , பாராளுவோர் தந்த பரிசுகள் , சவுக்கடி , சூடு !
செல்வந்தன் வீட்டு மாட்டுக்கும் வைத்திய வசதி உண்டு , ஏழை அதனினிலும் இழிந்தவனா உங்கள் நாட்டிலே ? என்று கேட்டதற்காகவா இந்த தண்டனை ? "
http://i58.tinypic.com/15zo6z7.jpg
-
-
-
-
-
-
-
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
Super, thanks for the info. Yukesh Babu Sir.
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
Thanks for the upload Yukesh Babu.
-
-
-
-
இந்த வார நக்கீரன் இதழில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளின் சர்வே வெளியிடப்பட்டுள்ளது. அதில் கரூர் தொகுதியில் எடுத்த சர்வே குறித்து வெளியிடப்பட்ட செய்தியில் இருந்து நமக்கு தெரிவது மக்கள் திலகத்தின் மேல் மக்கள் வைத்திருக்கும் அன்பு அளப்பரியது..
http://i59.tinypic.com/2dsi6pd.jpg
-
-
-
-
-
-
Quote:
Originally Posted by
boominathanandavar
இதுவரை பார்க்காத அபூர்வமான புகைப்படங்கள். நன்றி திரு. பூமிநாதன் ஆண்டவர்.
-
நீண்ட இடைவெளிக்குப் பின் நான் பதிவேற்றிய தகவல்களை உடனுக்குடன் பார்த்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வழங்கிய அருமை நண்பர்கள் வினோத், ரூப்குமார், திருப்பூர் ரவிச்சந்திரன், கலியபெருமாள் விநாயகம் , சைலேஷ்பாசு ஆகியோருக்கு நன்றிகள்.
-
இன்று கலைஞர் தொலைக்காட்சியில் தேர்தலை முன்னிட்டு கலைஞரது 45ஆவது பிறந்தநாளை ஒட்டி அறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய வாழ்த்துரையை பின்னணியில் ஒலிபரப்பி கலைஞர் முதல்வராக இருந்த சமயத்தில் எடுக்கப்பட்ட பல வீடியோ பதிவுகளை பளபளக்கும் பிரிண்ட்டில் வழங்கினார்கள். நமது ஜெயா டிவியிலோ மக்கள் திலகத்தின் பொது வாழ்க்கை சம்பந்தப்பட்ட எந்த விதமான வீடியோக்களும் ஒளிபரப்பப்படுவதில்லை. அப்படி ஒளிபரப்பப்பட்டாலும் மிகக்குறுகிய காலத்திற்கு மட்டும் மோசமான பிரிண்டில் ஒளிபரப்புகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் போது நமக்கு மட்டும் ஏன் கிடைப்பதில்லை. 1969ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாம் அவ்வளவு தெளிவாக இருக்கும் போது 1977 முதல் 1987 வரை எடுக்கப்பட்ட எந்த ஒரு வீடியோவும் நல்ல நிலையில் இல்லை. ஏன் மக்கள் திலகத்தின் கடைசி திரைப்படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் கூட மிக மிக மோசமான நிலையில் தான் டிவிடி வடிவில் கிடைக்கிறது. மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்தினுடைய நெகடிவ் கூட இல்லை. மிகவும் சேதமடைந்துவிட்டன என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காரணம் அன்பே வா திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் வரை மிக மிக மோசமான பிரிண்டில் தான் பார்க்க முடிந்தது. ஆனால் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்ற முன்னுரையுடன் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட போது மிக மிக அருமையான பிரிண்ட்டில் கிடைத்தது. அதே போல நினைத்ததை முடிப்பவன் படம் கொலம்பியா பிக்சர்ஸ் வெளியீட்டில் மிக சுமாரான படைப்பாகக் கிடைத்தது தற்போது மோசர் பியர் வெளியிட்ட டிவிடியில் மிகப் பிரமாதமாக உள்ளது. முயன்று தேடி இந்தப் பணியை செம்மையாகச் செய்ய ஆளில்லாததே காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நண்பர்க்ள் இது குறித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.
-
மேலே சொன்ன கருத்துக்கு வலு சேர்க்கும் மற்றொரு உதாரணம். ஜெயா டிவியில் ஏவிஎம் சரவணன் அவர்களது திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட மக்கள் திலகம் டாக்டர் பட்டம் பெற்றதை ஒட்டி திரையுலகம் நடத்திய பாராட்டு விழா காட்சிகள் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அளவுக்கு பிரமாதமான கலரில் சில நிமிடங்கள் ஒளிபரப்பப் பட்டது. அதன் முழு வடிவத்தையும் தொகுத்து வழங்க யாராவது முன்வருவார்களா?